கண்ணன்மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் பாண்டவர்கள்; அவர்களை வழிநடத்தியவரே கண்ணன் என்பது உலகறிந்த விஷயம். கண்ணன்மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்சிட யாருமில்லை என்ற எண்ணம் திரௌபதைக்கு உண்டானது. பொதுவாக வெற்றிக்குத் தடையாக இருப்பது கர்வம். அது திரௌபதையிடம் அதிகமாக இருப்பதை அறிந்த கண்ணன் அதை அகற்ற முடிவு செய்தார்.
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது ஒரு நாள்- திடீரென்று கண்ணன் தனியா ளாக நடந்தே வந்து பாண்டவர் கள்முன் நின்றார்.
அப்போது திரௌ பதை கண்ணனி டம், ""அண்ணா, துவாரகையிலிருந்து எப்படி வந்தீர்கள்? தேர், குதிரை, பல்லக்கு என எந்த வாகனத்தையும் காணோமே'' என்று கேட்க, ""தங் கையே, உன்னைப் பார்க்கும் ஆவல் உந்தித் தள்ளியது. காட்டில் எப்படிப்பட்ட துன்பங்களையெல்லாம் படுகிறாயோ என்ற கவலையிலும், காட்டுக்குப்போன தங்கையை நீண்டநாட்க ளாக அண்ணன் வந்து பார்க்கவில்லையே என்று நீ குற்றம் சொல்வாயே என்ற சிந்தனையிலும் நடந்தே வந்தேன்'' என்றார்.
அதைக் கேட்ட திரௌபதைக்கு கண்ணீர் அரும்பியது. நடந்தே வந்த கால்கள் எந்த அளவுக்கு வலிக்கும் என வருந்திய திரௌபதை, ""நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். குளித்துவிட்டு வாருங்கள் அண்ணா. உடல்களைப்பு, கால்வலி நீங்கும்'' என்றாள் திரௌபதை.
உடனே பீமன் தன் பலத்தை யெல்லாம் திரட்டி ஒரு பெரிய கொப்பரையைத் தூக்கிப்போய் அதில் ஆற்று நீரை நிரப்பினான்.
மூன்று பாறைகளைப் பெயர்த் தெடுத்து அடுப்பாக்கினான். காட்டுமரத்தை அப்படியே முறித்து வந்து அடுப்பில் வைத்துத் தீமூட்டினான். அடுப்பு திகுதிகுவென எரிந்தது. ஆனால் நேரமானதே தவிர, தண்ணீர் சூடேறவே இல்லை. கண்ணன் தங்கையிடம், ""அம்மா தங்கையே...
வெந்நீர் என்னாயிற்று? குளித்துவிட்டு சாப்பிட வேண்டும். பசிக்கிறது'' என்று கேட்க, திரௌ பதையோ, ""அண்ணா, ஏனோ தெரியவில்லை.
அடுப்பு நீண்ட நேரம் எரிந்தும் தண்ணீர் கொதிக்க வில்லை; குளிர்ச்சியாகவே உள்ளது'' என்றாள்.
கண்ணன் பீமனிடம், ""அந்தத் தண்ணீர் முழுவதையும் கீழே கொட்டு'' என்றார். பீமனும் அவ்வாறே தண்ணீரைக் கவிழ்த்தான். அதன் உள்ளிருந்து ஒரு தவளை குதித்தோட

கண்ணன் பீமனிடம், ""அந்தத் தண்ணீர் முழுவதையும் கீழே கொட்டு'' என்றார். பீமனும் அவ்வாறே தண்ணீரைக் கவிழ்த்தான். அதன் உள்ளிருந்து ஒரு தவளை குதித்தோடியது. திரௌபதை, ""அண்ணா, என்ன இது மாயம்?'' என்று கேட்க, ""தங்கையே, தண்ணீரிலிருந்த தவளை சுடுநீரில் மாண்டுவிடாமல் தன்னைக் காப்பாற்றும்படி என்னை வேண்டிக் கொண்டே இருந்தது. அதைக் காப்பாற்றவே அப்படிச் செய்தேன். இந்த சாதாரண தவளையின் பக்தி எவ்வளவு பெரியதென்று இப்போது புரிகிறதா'' என கண்ணன் சொல்ல, திரௌபதைக்கு சுரீர் என்று உரைத்தது.
நம் பக்தியே பெரிதென்றும் உயர்ந்ததென் றும் கர்வத்தோடு இருந்தோமே. இந்த தவளையின் பக்தி மிக உயர்ந்ததாக உள்ளதே. அபயமென்று வேண்டுவோரைக் காப்பாற்றுவதில் கண்ணனின் கருணையே கருணை. பக்தியில் கர்வம் கூடாது என்பதை நமக்கு உணர்த்தவே இப்படி ஒரு செயலைச் செய்துகாட்டியுள்ளார் என்பதை அறிந்த திரௌபதையும் பாண்டவர்களும் மெய்சிலிர்த்தனர்.
அப்படிப்பட்ட கண்ணன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளாக தன்னை நாடிவரும் பக்தர்களின் துன்பங் களைப் போக்கி வருகிறார் வெங்கனூரில். பல சமூக மக்களும் ஒற்றுமையுடனும் பக்தியுடனும் வாழும் ஊர் வெங்கனூர். இங்கு விநாயகர், பசுபதீஸ்வரர், மாரியம்மன், அய்யனார், செல்லியம்மன், முருகன் என பல தெய்வ ஆலயங்கள் உள்ளன. அனைவருக்கும் விழா நடத்தி வழிபட்டு வருகிறார் கள். இவ்வாலயங்களுக்கு மத்தியிலுள்ள வரதராஜப்பெருமாள் பிரதானமாக இருந்து, உள்ளூர் மட்டுமல்ல; சென்னை, திருச்சிவரை பல மாவட்ட மக்களையும் காந்தம்போல கவர்ந்துள்ளார்.
சனிக்கிழமைதோறும் பேருந்துகளிலும் வாகனங்களிலும் பக்தர்கள் திரள்திரளாக வந்து வழிபட்டவண்ணம் உள்ளனர். இந்தப் பெருமாளை வாரிவழங்கும் வள்ளல் என்கி றார் ஏந்தல் தனலட்சுமி. எப்படி? ""எனது சித்தப்பா பிழைப்புக்காக வேலைதேடி அரபு நாட்டுக்குச் சென்றார். சரியான வேலை இல்லை; சம்பளம் இல்லை. அங்கே படாத கஷ்டம் அடைந்தார். அப்போது எனக்கு 13 வயது. சித்தப்பா பட்ட கஷ்டத் தைப் பார்த்து இந்த பெருமாளைத் தேடி ஓடிவந்தேன். மண்டியிட்டு மன்றாடி முறையிட்டேன். பெருமாளின் கருணையினால் அவருக்கு அங்கேயே நல்ல வேலை கிடைத் தது. கைநிறைய சம்பளம். வாழ்க்கையில் அவருக்கு பெரிய திருப்புமுனையை உண்டாக்கி னார் இந்தப் பெருமாள்.
அப்போதுமுதல் சுமார் இருபது வருடங்களாக சனிக்கிழமை தவறாமல் வந்து பெருமாளை வழிபட்டுச் செல்கிறேன். குறையேதும் இல்லாமல் எங்களை வாழவைத்து வருகிறார்'' என்றார் மெய்சிலிர்ப்போடு.
கூத்தக்குடி பழனிமுத்து, ""கைமேல் பலன் தரும் வரதன் இவர். தொழிலில் சிரமப்பட் டேன். இவரது கருணையைப் பற்றி கேள்விப்பட்டு ஓடிவந்து இருகரம் கூப்பி வேண்டினேன்.
சனிக்கிழமை தவறாமல் வந்து மனமுருக வணங்கினேன்.
அவரருளால் தொழிலில் நல்ல முன்னேற்றமடைந்தேன்.
அடுத்து மகன் படித்துவிட்டு வேலையில்லாமல் கஷ்டப்பட் டான். இவரிடம் வந்து முறை யிட்டேன்; வேலை கிடைத்தது. என் சொத்தை அபகரிக்க முயற்சித்தனர் சிலர். இவரிடம் ஓடிவந்தேன். சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். மூலவர் முன் புள்ள கம்பம் பெருமாளுக்கு நூறு ரூபாய் படிகட்டி வேண்டிக்கொண்டால் உடனுக்குடன் பலன் கிடைக்கும். இது எனது நேரடி அனுபவம்'' என்றார்.
""இதுமட்டுமல்ல; திருமணத்தடை, குழந்தைபாக்கியம் இன்மை, நியாயமான நீதிமன்ற வழக்குகள், நீண்டநாள் தீராத நோய் போன்றவற்றுக்கு நல்ல தீர்வு கிட்டுகிறது. திருட்டுபோன பொருட்கள், வாகனங்கள் மீண்டும் கிடைக்க- குடும்பத்திலிருந்து பிரிந்துபோனவர்கள் ஒன்றுசேர என பக்தர்களின் தீராத பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வருகிறார் பெருமாள்'' என்கிறார் கம்பம் பெருமாளுக்கு பூஜை செய்யும் தாசர் மாரிமுத்து.
""எங்கள் முன்னோர்கள்வழியில் கோவில் முன்புள்ள கம்பத்திலுள்ள பெருமாளுக்கு நாங்கள்தான் பூஜை செய்கிறோம். வேண்டுதல் முன்வைப்பவர்கள் கம்பம் முன்பு முழங்காலிட்டு அமர்ந்து பெருமாளை வேண்டிக்கொள்கி றார்கள். அவர்களுக்கு கயிறு கட்டுவோம். பூஜை செய்து துளசி, தேங்காய் நீர் கொடுப்போம். சில நாட்களில்- சில வாரங்க ளில்- சில மாதங்களில் என பெருமாள் அவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்து பக்தர்களை வாழவைக்கிறார். இதனால் சனிக்கிழமைதோறும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது'' என்கிறார்.
கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார், ""அரங்கூரைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்து மனிதர் ஒருவர் மிகுந்த வேதனையுடன் சில மாதங்களுக்குமுன்பு இங்குவந்தார். அவர் மனைவி காணாமல் போய்விட்டாராம். குடும்பத்தில் சின்ன பிரச்சினை காரணமாக கோபித்துக்கொண்டு போனவரை பல இடங்களில், பல மாதங்கள் தேடியும் கிடைக்கவில்லை. அவர் என்ன ஆனாரோ என்று கலங்கினார். பெருமாளை வேண்டிக்கொள்ளச் சொன்னோம். பூஜை முடித்து, "உங்கள் மனைவி தென்திசைப் பக்கம் சென்றுள்ளார். விரைவில் அவரே வீடுதேடி வருவார்' என்று பெருமாள் அருள்வாக்கு கொடுத்தார்.
என்னே அதிசயம்! சில நாட்களில் அவர் மனைவி வீடுதேடி தானே வந்துவிட்டார். அவரது கணவர், குடும்பத்தினர் அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. அப்போதுமுதல் சனிக் கிழமைதோறும் அந்த தம்பதிகள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
அதுமட்டுமா? அரங்கூரைச் சேர்ந்த ஒருவர் தன்வீட்டு முன்பு நிறுத்தியிருந்த டிப்பர் லாரியை யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்கள். பல இடங் களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில் இங்கு வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளின் அருள்வாக்கு உத்தரவுப்படி கிழக்குத்திசையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் போய்ப் பார்க்கச் சொன்னார். அப்படி தேடிப்போனபோது லாரி யைக் கண்டுபிடித்தனர்.
போலீஸ் உதவியுடன் லாரியை மீட்கவைத்தார் இந்த வரதராஜப் பெருமாள்.
கீர்த்தி மிக்க இக்கோவிலை சில ஆண்டுகளுக்கு முன்பு புனரமைப்பு செய்து கும்பா பிஷேகம் செய்தனர் ஊர் மக்கள். அதில் கலந்துகொள்ள என்னை அழைத்தனர். சிறப் பாக கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் கோவில் பூஜைகளை தினசரி வந்து செய்யுமாறு என்னிடம் கேட்ட னர். வேலைப்பளு காரணமாக மறந்துவிட்டேன். சில நாட்கள் சென்றன. ஒரு நாள் இரவில் ஒரு கனவு. அதில் கோவில் கம்பத்தை பூஜை செய்யும் மாரிமுத்துதாசர் என்னைத் தேடிவந்து, "கும்பாபிஷேகத் தோடு பெருமாளை அடியோடு மறந்துபோய்விட்டீர்களே.
அப்படி மறக்கலாமா? கோவி லுக்கு வந்து செல்லுங்கள்' என்றார். திடுக்கிட்டு விழித் தேன். மறுநாளே கோவிலுக்கு வந்து பூஜை செய்யத் துவங்கி னேன். அப்போதுமுதல் என் பணி தொடர்கிறது. பெருமாளின் கருணையே கருணை'' என்கிறார் பட்டாச் சாரியார் பாலாஜி.
""இக்கோவிலில் பூஜைகள், பிரசாதம், திருவிழா என எல்லாமே வித்தியாசமானவை'' என்கிறார்கள் அறங்காவலர் களான கந்தசாமி அய்யர், ரத்தின படையாச்சி, பாலகிருஷ்ணன், கலிய மூர்த்தி பெரியசாமி ஆகியோர். ""எங்கள் முன்னோர்கள் சிறிய கொட்டகையில் வைத்து முகப்பில் கம்பத்தையும் பெருமாளை யும் வைத்துதான் வழிபட்டனர். ஐந்து ஆண்டு களுக்கு முன்புதான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இங்குள்ள கம்பத்திற்குதான் முதல் பூஜை. இங்கு வேண்டுதல் வைப்பவர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதும் அதற்கு நேர்த்திக்கடனாகப் பணம், பொருள் என கோவிலுக்கு வழங்குகிறார் கள். அதைவிட வித்தியாசமான நேர்த்திக்கடனாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கோவில் முன்பு தெருக்கூத்து நடத்துகிறார்கள்.''
இந்தக் கூத்து நடத்த முன்பதிவு செய்ய வேண்டும். அந்த அளவுக்கு காத்திருக்கிறார்கள்.
கூத்துகளில் ராமர் பிறப்பு, பாண்டவர்களின் வனவாசக் கதைகள், 18 நாள் போர், கிருஷ்ணர் பிறப்பு என கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட கதை களையே பிரதானமாக வைத்து கூத்து நடத்தப் படுகிறது. இப்படி கூத்து நடத்த முன்வருபவர் கள் அந்தத் தகவலை முன்கூட்டியே ஊரி லுள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, வெற்றிலைப் பாக்கு வைத்து கூத்துப்பார்க்க அழைப்பு விடுக்கிறார்கள். இது காலங்காலமாக நடைமுறையில் உள்ளது.
மார்கழி, ஏகாதசி, ஆவணி மாத கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் என அனைத்து விழாக்களையும் இவ்வூர் மக்கள் சிறப்பாக நடத்திவருகிறார்கள். இக்கோவிலில் பிரசாதமாக பக்தர்களுக்கு தேங்காய் நீர் கலந்த துளசி நீரும், விபூதி, குங்குமமும் வழங்கப் படுகிறது. சனிக்கிழமைதோறும் இங்கு வழிபட வரும் பக்தர்கள் வரதராஜரைக் கும்பிட்டு சர்க்கரைப் பொங்கல், சுண்டல் என இங்குவரும் பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இவ்வளவு சிறப்புக்களோடு ""மக்களுக்கு அருளாசி வழங்கும் கம்பம் வரதராஜப் பெருமாள் குடி கொண்டுள்ளதால் எங்கள் ஊருக்கே பெருமை'' என்கிறார்கள் ஊர் மக்கள்.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (கடலூர் மாவட்ட எல்லையில்) தொழுதூருக்கு முன்பு ஐந்து கிலோமீட்டரில் உள்ளது வெங்கனூர். சாலையை ஒட்டியே ஊரும் ஆலயமும் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: அலைபேசி: 97869 59230