Advertisment

திருப்புகழ் பரப்பிய வள்ளிமலை சுவாமிகள்!

/idhalgal/om/vallimalai-swamis-who-spread-corruption

ருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழ் மனதை உருக்கும் கவிநயம் பொருந்தியது. சந்தத் தமிழில் பாடப் பெற்ற இந்நூலில் வடமொழிச் சொற்களும் கலந் திருக்கும். இது முருகனைத் துதிக்கும் நூலென்றாலும், ஆதிசங்கரரின் அறு சமயம்போல மற்ற தெய்வங்களின் புகழும் இடம்பெற்றிருக்கும். முருகப்பெருமானே திருவண்ணாமலையில் "முத்தைத் தரு பத்தித் திருநகை' என்று அடியெடுத்துக் கொடுக்க, அருணகிரியார் சுமார் இரு நூறுக்கும் மேற்பட்ட முருகன் தலங் களுக்குச் சென்று பாடிய பாடல்கள் 16,000 என்பர். தற்போது 1,325 பாடல்களே கிடைத்துள்ளன. ஈற்றடி "பெருமாளே' என்று முடியும்.

Advertisment

சுமார் 600 ஆண்டுகளுக்குமுன் இயற் றப்பட்ட திருப்புகழ் 120 ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருத்தணிகை வ.த. சுப்பிர மணியப்பிள்ளை, தணிகைமணி வ.சு. செங்கல்வராயப்பிள்ளை ஆகியோரால் வெளிக்கொணரப் பட்டது.

Advertisment

1871-ல் சுப்பிரமணியப்பிள்ளை, சிதம்பரம் தீட்சிதர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தீட்சிதர் "வேத நூன்முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில்புனை மூவாயிர மேன்மை வேதியர்' என்னும் திருப்புகழ் பாடலைப் பாடினார். அதனால் ஈர்க்கப்பட்ட சுப்பிரமணியப்பிள்ளை திருப்புகழ் ஓலைச்சுவடிகளைத் தேடினார். 1878-ல் காஞ்சியில் 750 பாடல்கள் கொண்ட சுவடிகளும், பின்னத்தூரில் முதலில் 400 பாடல்கள் கொண்ட சுவடிகளும் பின்னர் 900 பாடல்கள் கொண்ட சுவடிகளும் கிடைத்தன. 1895-ல் முதல் பாகமும் 1902-ல் இரண்டாவது பாகமும் நூலாக வெளியிடப்பட்டது. திருப்புகழ் பாடுபவர்கள் சுப்பிரமணியப்பிள்ளை அவர்களுக்கு முதலில் ஆழ்ந்த வணக்கத்தை செலுத்தவேண்டியது கடமை.

இதனைப் பரவச் செய்தவர்களில் முக்கியமானவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள். ஜனவரி முதல் நாளைப் புத்தாண்டாக ஆங்கிலேயர்கள் "ஹேப்பி நியூ இயர்' என்று கொண்டாட, அது நம்மவரிடையேயும் பரவியது. அதற்கு மாற்றாக டிசம்பர் 31-ஆம் தேதி இரவு திருத்தணிகை மலையில் 365 படிகளில் திருப்புகழ் பாடி, ஜனவரி 1-ஆம் தேதி முருகனை வழிபட்டு அருள்பெறுவோம் என்று திருப்படித் திருவிழாவை ஆரம்பித்து வைத்தவரும் வள்ளிமலை சுவாமிகள்தான்.

திருச்செங்கோடு தலம் கயிலைக்கு இணையானது என்பர். ஆலயக் கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவை இங்கு மட்டுமே காணமுடியும். செங்கோட்டு வேலவன் சேவற்கொடியைக் கையிலேந்தி உள்ளவன். அருணகிரியார் கந்தரலங்கா

ருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழ் மனதை உருக்கும் கவிநயம் பொருந்தியது. சந்தத் தமிழில் பாடப் பெற்ற இந்நூலில் வடமொழிச் சொற்களும் கலந் திருக்கும். இது முருகனைத் துதிக்கும் நூலென்றாலும், ஆதிசங்கரரின் அறு சமயம்போல மற்ற தெய்வங்களின் புகழும் இடம்பெற்றிருக்கும். முருகப்பெருமானே திருவண்ணாமலையில் "முத்தைத் தரு பத்தித் திருநகை' என்று அடியெடுத்துக் கொடுக்க, அருணகிரியார் சுமார் இரு நூறுக்கும் மேற்பட்ட முருகன் தலங் களுக்குச் சென்று பாடிய பாடல்கள் 16,000 என்பர். தற்போது 1,325 பாடல்களே கிடைத்துள்ளன. ஈற்றடி "பெருமாளே' என்று முடியும்.

Advertisment

சுமார் 600 ஆண்டுகளுக்குமுன் இயற் றப்பட்ட திருப்புகழ் 120 ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருத்தணிகை வ.த. சுப்பிர மணியப்பிள்ளை, தணிகைமணி வ.சு. செங்கல்வராயப்பிள்ளை ஆகியோரால் வெளிக்கொணரப் பட்டது.

Advertisment

1871-ல் சுப்பிரமணியப்பிள்ளை, சிதம்பரம் தீட்சிதர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தீட்சிதர் "வேத நூன்முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில்புனை மூவாயிர மேன்மை வேதியர்' என்னும் திருப்புகழ் பாடலைப் பாடினார். அதனால் ஈர்க்கப்பட்ட சுப்பிரமணியப்பிள்ளை திருப்புகழ் ஓலைச்சுவடிகளைத் தேடினார். 1878-ல் காஞ்சியில் 750 பாடல்கள் கொண்ட சுவடிகளும், பின்னத்தூரில் முதலில் 400 பாடல்கள் கொண்ட சுவடிகளும் பின்னர் 900 பாடல்கள் கொண்ட சுவடிகளும் கிடைத்தன. 1895-ல் முதல் பாகமும் 1902-ல் இரண்டாவது பாகமும் நூலாக வெளியிடப்பட்டது. திருப்புகழ் பாடுபவர்கள் சுப்பிரமணியப்பிள்ளை அவர்களுக்கு முதலில் ஆழ்ந்த வணக்கத்தை செலுத்தவேண்டியது கடமை.

இதனைப் பரவச் செய்தவர்களில் முக்கியமானவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள். ஜனவரி முதல் நாளைப் புத்தாண்டாக ஆங்கிலேயர்கள் "ஹேப்பி நியூ இயர்' என்று கொண்டாட, அது நம்மவரிடையேயும் பரவியது. அதற்கு மாற்றாக டிசம்பர் 31-ஆம் தேதி இரவு திருத்தணிகை மலையில் 365 படிகளில் திருப்புகழ் பாடி, ஜனவரி 1-ஆம் தேதி முருகனை வழிபட்டு அருள்பெறுவோம் என்று திருப்படித் திருவிழாவை ஆரம்பித்து வைத்தவரும் வள்ளிமலை சுவாமிகள்தான்.

திருச்செங்கோடு தலம் கயிலைக்கு இணையானது என்பர். ஆலயக் கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவை இங்கு மட்டுமே காணமுடியும். செங்கோட்டு வேலவன் சேவற்கொடியைக் கையிலேந்தி உள்ளவன். அருணகிரியார் கந்தரலங்காரத்தில், "நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே' என்று பாடியிருக்கிறார் என்றால், வேலவனின் ஈர்ப்பு மகிமை எத்தகையது!

இத்தலம் அருகேயுள்ள பூனச்சி கிராமத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிதம்பரம்- லட்சுமியம்மாள் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மகப்பேறு வேண்டி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வேண்ட, இறையருளால் 20-11-1870, கார்த்திகை மாத மூல நட்சத்திரத்தன்று ஆண்மகவு பிறந்தது. அதற்கு "அர்த்த நாரி' என்றே பெயரிட்டனர். பிள்ளை வளர்ந்தது. ஆனால் படிப்பு ஏறவில்லை. எனவே சமையல் தொழில் ஏற்றார்.

மைசூர் மகாராஜா அரண்மனையில் பணி கிடைத்தது. ஒருசமயம் கடும் வயிற்றுவலியால் அவஸ்தைப்பட்டார். அரண்மனைக் கொத்தனார் ஒருவர், "பழனிமலை சென்று முருகனை வணங்கி, அவரது அபிஷேக நீரைப்பருகினால் குணம்பெறலாம்'' என்று சொல்ல, அவ்வாறே பழனி வந்து குணமடைந்தார். ஆண்டவனுக்கு நீர்கொண்டு வருவது, மாலை கட்டுவது போன்ற பணிகளைச் செய்து, அங்கு கிடைக்கும் பிரசாதத்தை உண்டு அங்கேயே வாழ்ந்து வரலானார்.

vv

தைப்பூசத் திருவிழா பழனியில் அற்புதமாக நடக்கும். ஒருநாள் நடன நிகழ்ச்சி நடந்தது. அதில்-

"சிங்கார ரூப மயில்வாஹன நமோநம

கந்தா குமரா சிவதேசிக நமோநம

சிந்தூர பார்வதி சுதாகர நமோநம'

என்னும் திருப்புகழ் பாடப்பட்டது. அதில் மிகவும் மனம் நெகிழ்ந்தார் அர்த்தநாரி. அப்போது திருப்புகழ் நூலொன்று அவருக்குக் கிடைத்தது. முருகன் என்ற சிறுவனே அவருக்குப் பாடல் கற்றுத்தந்தான். அப்போது அவருக்கு 42 வயது.

ஒருநாள் பழனி முருகன் அவரை திருவண்ணாமலை செல்லுமாறு உணர்த்த, இறைவன் கட்டளையேற்று அருணாச்சலம் வந்தார். அருணாச்ச லேஸ்வரர், அம்பிகை, அருணகிரியாரை ஆட்கொண்ட முருகப்பெருமானை கண்குளிர தரிசித்தார். பின்னர் ரமண மகரிஷியை தரிசிக்கச் சென்றவர் பழனியாண்டியாகவே அவரைக் கண்டு, தனக்குத் தெரிந்த திருப்புகழைப் பாடினார். ரமணர் பதம் பிரித்தல், பொருள், உட்கருத்து ஆகியவற்றை விளக்கினார்.

ஒருநாள் ரமண மகரிஷி அர்த்தநாரியை "கீழே போகவும்' என்றார். அவரைப் பிரிய மனமில்லாவிட்டாலும், குரு ஆக்ஞை என்பதால் இறங்கி வந்தார். அப்போது சேஷாத்ரி சுவாமிகள் எதிரே வந்தார். (அர்த்தநாரி பிறந்த வருடமே, 22-1-1870, தை மாத ஹஸ்த நட்சத்திரத் தில் இவரும் பிறந்தவர்.) அவர் ஆதிசங்கரரின் சிவ மானசீக பூஜை நான்காவது துதியைக் கூறி, அதன் கடைசி அடியான "யத்யத் கரோமி தத்தத் அகிலம் சம்போ தவ ஆராதனா. (நான் எனக்கு என்ன செய்தாலும் அதுவே உமக்கு ஆராதனையாக அமையட்டும்) என்பதற்கு உகந்த திருப்புகழ் உண்டோ?'' என்று கேட்டார். அதற்கு அர்த்தநாரி, "சோஹம் அது தந்து எனை ஆள்வாய்; எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவானதீதம் அருள் வாயே' எனும் பாடல்களைப் பாடினார். அதற்கு சேஷாத்ரி சுவாமிகள், "உனக்கு திருப் புகழே மகாமந்திரம். வள்ளிமலைக்குப் போ'' என்றார்.

அன்றைய தினம் 13-5-1916.

7-6-1916-ல் வள்ளிமலைக்குச் சென்று, ராஜன்குன்றுக்கும் கண்ணகி குன்றுக்கும் இடைப்பட்ட மலைக்குகையில் தனது இருப் பிடத்தை அமைத்துக் கொண்டார். அங்கிருந்த படி பல இடங்களுக்கும் சென்று திருப்புகழைப் பாடிப் பரப்பினார். (வள்ளிமலை- வள்ளி பிறந்த தலம்; முருகனை மணந்த தலம். மலையின் கீழேயும் மேலேயும் கோவில்கள் உள்ளன.)

4-1-1929 அன்று சேஷாத்ரி சுவாமிகள் சமாதி அடைய, திருவண்ணாமலை சென்ற அர்த்தநாரி ஆராதனைகளில் கலந்துகொண்டு, பின் மீண்டும் வள்ளிமலை வந்தார். 12 ஆண்டு கள் எங்கும் செல்லாம-ருந்து யோகியானார்.

திருப்புகழை மக்களிடம் பரப்ப வள்ளி திருமணக் கதைகளைக்கூறி, திருப்புகழ் தத்துவங்களையும் விளக்கினார். திருப்புகழ் புத்தகத்தை வெளியிட்ட சுப்பிரமணியப் பிள்ளையின் மகன் ராவ்பகதூர் செங்கல் வராயப்பிள்ளை அறிமுகமாக, சென்னையில் அவர் வீட்டில் தங்கி, பஜனைகளில் கலந்துகொண்டு திருப்புகழைப் பரப்பினார்.

அர்த்தநாரி வள்ளிமலையில் இருந்த போதெல்லாம், வள்ளியின் தோழியான பொங்கி என்னும் பெண் அவருக்கு திருப் புகழ் கற்றுக்கொடுப்பாளாம். அவர் பெயரும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என வழங்கலாயிற்று.

பல முருகன் தலங்களுக்கும் சென்று வணங்கியுள்ளார். வடநாட்டுத் தலங்கள் பலவற்றையும் தரிசித்து புனித நீராடியுள்ளார். வைஷ்ணவி தேவியையும் தரிசித்துள்ளார். வட திருமுல்லைவாயிலில் சாது பார்த்த சாரதி கட்டிய கோவிலிலுள்ள தேவிக்கு பொங்கி வைஷ்ணவி என திருநாமம் சூட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.

ஏப்ரல் 1950-ல் திருவண்ணாமலை வந்துசேர்ந்தார். 14-4-1950-ல் ரமணர் சமாதி அடைய, அந்த ஆராதனைகளில் கலந்துகொண்டார். சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி சமாதி அடைந்துவிட்டது அவர் மனதை மிகவும் பாதித்தது. 10-11-1950 முதல் 15-11-1950 வரை கந்த சஷ்டி உபன்யாசம் செய்தார். பின்னர் அவர் உடல்நலம் குன்ற மருத்துவமனையில் சேர்த்தனர். 22-11-1950 அன்று காலை 8.50 மணிக்கு முருகன் திருவடி சேர்ந்தார். அவரது உடல் வள்ளிமலையில் அவர் இருந்த ஆசிரமத்திலேயே சமாதி வைக்கப் பட்டு ஆராதனைகள் நடந்தேறின.

சுவாமிகளின் அற்புதங்கள் சிலவற்றை சிந்திப்போமா...

=திருத்தணி திருப்படித் திருவிழா பற்றி முன்பே சிந்தித்தோம். அதனையொட்டி திருப்புகழ் படிவிழாக்கள் பல தலங்களிலும் நடக்கின்றன. அவற்றுள் சில...

ஏப்ரல், 14 (சித்திரை புது வருடப்பிறப்பு)- குரோம்பேட்டை குமரன்குன்றம்.

ஜனவரி முதல் ஞாயிறு- புதுடெல்லி ராமகிருஷ்ணாபுரம் உத்தர ஸ்வாமி மலை.

டிசம்பர், 25- புனே டெஹூரோட் முருகன் கோவில்.

ஜனவரி, 26- மும்பை செம்பூர் முருகன் கோவில்.

=திருவண்ணாமலையில் மழையே இல்லாமல் தண்ணீர்ப் பஞ்சம். ஆகஸ்ட் 15-ஆம் தேதி சில பக்தர்களை அழைத்துக்கொண்டு கிரிவலம் சென்றார் சுவாமிகள். வலம்வந்து முடித்தபோது பலத்த மழைபெய்தது. ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் இந்த விழா திருவண்ணாமலையிலும் மற்றும் பல தலங்களிலும் அருணகிரிநாதர் நினைவு விழாவாக நடக்கிறது.

= அருணகிரிநாதர் பிறந்த நாள் எதுவென்பதில் குழப்பம் இருந்தது. சிலர் ஆனி மூலம் என்பர். வள்ளிமலை சுவாமிகள் சுவாமிமலை சென்றிருந்தபோது அந்த சுவாமிநாதனிடமே இக்கேள்வியைக் கேட்டார். அப்போது "கார்த்திகை மூலம்' என்று

கருவறைக்குள்ளிருந்து ஒலி வந்ததாம். அதன்பின்னர் 1924 முதல் அதையே அருணகிரியார் அவதார நாளென்று திருப்புகழ் பாடி மகிழ்கிறார்கள். வள்ளிமலை சுவாமிகள் பிறந்ததும் கார்த்திகை மூலமே. முருகனின் வாக்குப்படி பார்த்தால் இவர் அருண கிரியாரின் மறுபிறவியோ?

= திருமணமாக, குழந்தைப்பேறு கிட்ட, நோய்கள் தீர, வீடு வாங்க, கல்வி நாட்டம் பெருக, ஞான யோகம் பெருக என, திருப்புகழிலிருந்து பாடல்களைத் தொகுத்துத் தந்தார்.

= நாசிக் சென்று ராமரை தரிசித்தார். நல்ல வெயில். பசி. உணவேதுமில்லை. "கருவடைந்து' என்று ஆரம்பிக்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழைப் பாடினார். (இப்பாடலில் அனுமனின் தீரச்செயல்கள் இடம்பெற்றிருக்கும்.) சில குரங்குகள் மற்றவர்கள் சாப்பிட வைத்திருந்த சப்பாத்தியைக் கொணர்ந்து அவர்முன் இட்டனவாம்.

அதைப் பார்த்தவர்கள் சுவாமிகளை வணங்கி சப்பாத்திகளை இட்டனராம்.

= "வள்ளிமலைக்குப் போ' என்று சுவாமிகளிடம் சொன்ன சேஷாத்ரி சுவாமிகள், "அங்கு என் தரிசனம் கிட்டும்' என்றாராம். ஆனால் தரிசனம் கிட்டாமல் மனதுக்குள் வணங்கி வந்தாரம். தினமும் பூஜை முடிந்ததும் சிறிது அன்னத்தை வைக்க, ஒரு கீரிப் பிள்ளை வந்து உண்டுவிட்டுச் செல்லுமாம். இந்நிலையில் ஒருநாள் வள்ளிமலைக்கு காஞ்சிபுர சுடுகாட்டுக் காப்பாளன் வந்தான். கீரிப்பிள்ளையைப் பார்த்ததும் வணங்கினான்.

சுவாமிகள் காரணம் கேட்க, "என்னை சேஷாத்ரி சுவாமிகள் "வள்ளிமலைக்குப் போ; என் தரிசனம் கிடைக்கும்' என்றார். இந்தக் கீரிப்பிள்ளையே எனக்கு சுவாமிகளாகக் காட்சியளித்தது'' என்றான். சித்தர் லீலைகள்!

= 1923-ஆம் ஆண்டு, ஜஸ்டிஸ் டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் வீட்டில் சுவாமிகளின் திருப்புகழ் பஐனை விழா நடந்தது.

அப்போது ஸ்வாமிகள் கைத்தாளத்தை ஐயரிடம் கொடுத்து, "பாடு' என்றார். பாடவே தெரியாத அவர் பாட ஆரம்பித்தார். பிறகு காஞ்சி மகாபெரியவரிடம் "திருப்புகழ் மணி' என்னும் பட்டமும் பெற்றார்.

= செங்கல்வராயப் பிள்ளையின் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை. எனவே அலுவலகத்தில் அவர் மனம் அமைதியின்றி இருந்தது. மாலை வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி, "சுவாமிகள் மதியம் இரண்டு மணிக்கு இங்கு வந்து குழந்தைக்குத் திருநீறு பூசினார். உடல் நலமாகிக்கொண்டு வருகிறது'' என்றார். ஆனால் பிறகுதான் தெரிந்தது-

அந்த நாளில் சுவாமிகள் வள்ளிமலையில்தான் இருந்துள்ளார் என்பது.

=ஒருமுறை சுவாமிகள் சென்னை தங்கசாலையில் நடந்துகொண்டிருந்தார்.

அப்போது ஒரு சிறு பெண் வந்து, "தாத்தா, நீங்கள் திருப்புகழ் பாடுவீர்களல்லவா? ஒரு பாடல் பாருங்களேன்'' என்றது. அதற்கிசைந்த சுவாமிகள் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாடினார். அவர் பாடி முடித்ததும், "நானும் ஒரு பாடல் பாடுகிறேன்'' என்று "விரகற நோக்கியும்' என்னும் பாடலைப் பாடியது. அப்பாடலில் மெய்சிலிர்க்கும் சில அடிகள்...

"முருகா ஷடாக்ஷரா சரவணா கார்த்திகை

முலைநுகர் பார்த்திபா என்று பாடி

மொழி குழறாத் தொழுது அழுது அழுதாட்பட

முழுதும் அலாப்பொருள் தந்திடாயோ.'

(ஜீவன் முக்தியைக் கேட்கிறார்).

பாடல் முடிந்ததும் அந்தச் சிறுமி, "தாத்தா, உங்கள் வெற்றிலைப்பாக்குப் பையைத் தாருங்களேன்'' என்று கேட்க, அவரும் கொடுக்க, அந்தப் பெண் மறைந்துபோனாள்.

பிறகு அவர் வள்ளிமலைக்குப் போக, அவர் இருக்கும் இடத்தில் அந்தப்பையும் அதிலிருந்த ஐந்து ரூபாயும் இருந்தது. "இப்படிக்கு பொங்கி' என்று எழுதப்பட்ட சீட்டும்!

குருவடி பணிவோம்.

om010723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe