நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் பெற்று வாழவேண்டும் என்பதே மனிதர்களாய்ப் பிறந்த அனைவரின் விருப்பம். பாக்கியப் பலன்களை அதிகரித்துப் பதினாறு வகை செல்வங்களையும் அடையும் முயற்சியில் மக்கள் தங்கள் வாழ்வில் பெரும்பகுதியைச் செலவிடுகிறார்கள்.
எல்லா பாக்கியங்களும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. பூமியில் பிறந்த அனைவரும் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வதில்லை. நூற்றுக்கு பதினைந்து சதவிகிதம் பேர்தான் எல்லா வளங்களையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள். பெரும் பாலானோருக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையே ஏற்படுகிறது.
சிலர் கடுமையாக உழைக்கிறார்கள்; திட்டமிட்டு வாழ்கிறார்கள். ஆனாலும் வாழ்க்கையில் ஏற்றமில்லை. ஆனால் சிலருக்கோ எந்தவித முயற்சியும் இல்லா மலே நினைத்ததெல்லாம் கிடைக்கிறது. இதற்குக் காரணமென்ன? பாக்கியப் பலன்களை அடையும் நெறிமுறைகளை முழுமையாக அறிந்து செயல்படாததே காரணம்.
ஒருவர் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ, ஜாதகத்தில் அதிக முக்கியத் துவம் பெற்ற இடங்களான லக்னம், கேந்திரம் மற்றும் திரிகோணம் வலிமை பெற வேண்டும். ஒரு ஜாதகத்திலுள்ள யோகங்கள் இரண்டுவிதமாக மட்டுமே செயல்படும். ஒன்று நேர்வழி, மற்றொன்று குறுக்குவழி. ஜாதகத்தில் சுபகிரக ஸ்தானங் கள்மூலம் நமக்குக் கிடைக்கும் தனம், செல்வம் நேர்வழி. அதேபோல் 6, 8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்கள்மூலம் கிடைக்கும் செல்வம் குறுக்குவழி.
நேர்வழியில் பணம் சம்பாதிப்பது கடினம். ஆனால் நேர்வழியில் வரும் செல்வம் பல தலைமுறைக்கும் நீடித்து, நிலைத்து நிற்கும். நேர்வழி என்பது ஜாதகத்தின் கேந்திரம் எனும் 1, 4, 7, 10 ஆகிய விஷ்ணு ஸ்தானங்கள் மூலமாகவும்; திரிகோணம் எனும் 1, 5, 9 ஆகிய லட்சுமி ஸ்தானங்கள் வழியாகவும்; பணபர ஸ்தானம் எனும் 2, 11-ஆம் அதிபதிகளின் தசா, புக்தி, அந்தர காலங்கள் சம்பந்தம் பெறும்போதும் ஏற்படும் பணவரவு.
குறுக்குவழி என்பது 6, 8, 12 எனும் மறைவு ஸ்தானாதிபதிகளின் தசா, புக்தி, அந்தர காலங்கள் சம்பந்தம் பெறும்போது வரும் பணமாகும். வரும் வழியும் தெரியாது; போகும் வழியும் தெரியாது.
நேர்வழியில் வரும் செல்வமே பல தலைமுறைக்கும் நீடித்து நிலைத்து நிற்கும் என்பதால், நிலையான செல்வத்தை மட்டுமே அனைவரும் விரும்புவார்கள். நிலைத்த செல்வம் பெறவேண்டுமென்றால் ஜனனகால ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9-ன் வலிமை மிக அவசியம்.
லக்னம் எனப்படும் ஒன்றாமி டம் சுபவலிமை பெற்றவர்களுக்கு அழகிய முகத்தோற்றம், உடல் தோற்றம், அறிவுப் பூர

லக்னம் எனப்படும் ஒன்றாமி டம் சுபவலிமை பெற்றவர்களுக்கு அழகிய முகத்தோற்றம், உடல் தோற்றம், அறிவுப் பூர்வமான சிந்தனை, தூய நேர்மறை எண்ணங்கள் மிகையாக இருக்கும். அத்துடன் கௌவரமான குடும்பத்தில் பிறந்தவர்கள். புகழ், அந்தஸ்து, மரியாதை, நல்ல ஜீவனம், முயற்சியில் வெற்றி ஆகியவை வாழ்நாள் முழுவதும் வழிநடத்தும்.
ஐந்தாமிடம் எனும் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெற்றவர்களுக்கு அதிர்ஷ்டம், முன்னோர்களின் நல்லாசி, குலதெய்வ அனுக்கிரகம், சாஸ்திர ஞானம், நிறைந்த கல்வி, குழந்தைகளால் இன்பம், உள்ளுணர்வு, இரக்க குணம் போன்றவை மிகுந்து காணப்படும்.
ஒன்பதாமிடம் எனும் பாக்கிய ஸ்தானம்
வலிமை பெற்றவர்களுக்கு பிறவியிலே அதிர்ஷ்டம், நிறைந்த செல்வம், தானம், தருமம் செய்யும் நற்பண்புகள், புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, கோவில்கட்டி கும்பாபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது, நல்ல தாய்- தந்தை, நல்ல மனைவி, நல்ல நண்பர்கள், விசுவாசமான வேலைக்காரர்கள், உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள், முன்னோர்களின் நல்லாசி, நல்ல குரு, புனித யாத்திரை, தந்தைவழி சொத்து, பங்காளி வகையான சொத்துகளை அனுபவிப்பது, யானை, குதிரை, உயர் ரக சொகுசு வாகனம், சாஸ்திர சடங்குகளைக் கடைப்பிடிப்பது, உடனிருப்பவர்களை சுகமாக வைத்துக்கொள்வது, பரம்பரை கௌரவத் தொழில், கூட்டுத் தொழில், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றம், முக்தி போன்ற புண்ணியப் பலன்கள் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும்.
இதைத்தான் நமது முன்னோர்கள் பேச்சுவழக்கில் "விதியை மதியால் வென்று நற்கதியடைய வேண்டும்' என்று கூறினார் கள். இதை ஜோதிடரீதி யாகச் சொன்னால் லக்னம் என்பது விதியாக, தலையெழுத்தாக அமைகிறது. மதி என்பது நமது புத்தியாக, ஐந்தாமிடமாக உள்ளது. கதி என்பது அவற்றால் நாம் அடையும் பலனாக, ஒன்பதாமிடமாக உள்ளது.
வாழ்வில் விதி, மதி, கதி நன்கு அமைந்தவர் களுக்குதான் சகல செல்வங்களும் வெற்றிகளும் தேடிவரும். சாதாரணமாக இருப்பவர்கள்கூட மிகப்பெரிய சாதனை மனிதராக மாறுவது இத்தகைய அமைப்பினால் தான். திரிகோணம் என்னும் இந்த மூன்று இடங்கள் வலிமை பெறாதவர்களின் வாழ்க்கை நித்திய கண்டம் பூரண ஆயுளாகவே இருக்கிறது. இந்த நிலையை சரிசெய்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடையவேண்டுமென்பதே பலரது ஆதங்கமாக இருந்துவருகிறது.
இயந்திரத்தனமான உலகில் மனிதனை இயக்கும் சக்தியான நிலையான செல்வத்தை அடையும் மார்கத்தை நமது முன்னோர்கள் சில குறிப்பிட்ட வழிபாடு, விரதமுறையால் உபதேசித்துள்ளார்கள். அத்தகைய விரதங்களில் ஒன்றுதான் ஏகாதசி விரதம்.
ஏகாதசி விரதம்
"திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம்' என்பது பெரியோர் வாக்கு. திதிகளில் மிகவும் உன்னதமானதாகவும், உயர்வானதாகவும் கருதப்படுவது ஏகாதசி திதி. ஏகாதசி என்ற சொல்லுக்கு பதினொன்றாம் நாள் என்று பொருள். ஏகம்+தசம். (1+10).
ஏகாதசித் திதியின் அதிபதி மகாவிஷ்ணு என்பதால், இந்தநாளில் அவரை வழிபடுவதால் மிகச்சிறந்த பலன்களைப் பெறமுடியுமென்று நம்பப்படுகிறது.
மகாவிஷ்ணுவை நினைத்து வழிபடும் விரதங்களில் முதன்மையானதாகவும் சக்தி மிகுந்ததாகவும் இருப்பது ஏகாதசி விரதம். மனிதப் பிறவியில் அறிந்தும், அறியாமலும் செய்த அனைத்துவிதமான பாவங்களையும் நீக்கி, நிறைந்த செல்வம், பாக்கியப் பலன் மற்றும் முக்தியைத் தரும் விரதமாகும்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்க விரும்பும் அனைத்து புண்ணியத்தையும் கொடுக்கும் விரதம். புண்ணியம் கிடைக்கவேண்டுமென்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள்.
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். காயத்ரிக்கு ஈடான மந்திர மில்லை; தாய்க்குச் சமமான தெய்வ மில்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தமில்லை; ஏகாதசிக்கு நிகரான விரதமில்லை என்று புராணங்கள் கூறுகின்றன.
வைகுண்ட ஏகாதசி
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசி திதிகள் வருகின்றன. வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள். இவற்றுள் மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி திதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தநாளில் அசுரர்களை சம்ஹாரம் செய்ய மகாவிஷ்ணு மூன்றுகோடி தேவர்களுடன் பூலோகத்தில் எழுந்தருளினாராம். எனவே, வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
.தேவலோகத்தில் வாழும் தேவர் களுக்கு தைமாதம் முதல் ஆனிமாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடியிலிருந்து மார்கழிவரை இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்ராயனம் என்றும், இரவை தட்சிணாயனம் என்றும் அழைப்பார்கள். இதன்படி மார்கழி மாதம் தேவலோகத்தில் விடியற்காலையாகும்.
அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம், உஷத் காலம் என்கிறோம்.
இந்த நேரத்தில் வைகுண்ட வாசல் கள் திறந்தே இருப்பதால், பகவான் அதன்வழியாக வெளியே வந்து காட்சிதருவார். வைகுண்ட ஏகாதசி யன்று விஷ்ணு ஆலயங்கள் அனைத் திலும் சொர்க்கவாசல் திறப்புவிழா நடத்தப்படும். இறைவனைத் தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசல் வழியாகப் பரமாத்மாவைச் சேர்கிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்புவிழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பார்கள்.
இத்தகைய சிறப்புமிகுந்த வைகுண்ட ஏகாதசி திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சார்வரி வருடம், மார்கழி மாதம் 10-ஆம் நாள் (25-12-2020) அன்று, பரணி நட்சத்திரத்தில், வெள்ளிக்கிழமையில் வருகிறது.
விரதமிருக்கும் முறை
ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று வீட்டைத் தூய்மை செய்யவேண்டும். அன்று ஒருவேளை உணவு மட்டுமே உண்ணவேண்டும். மறுநாள் ஏகாதசியன்று அதிகாலையில் நீராடியபின் பெருமாள் கோவிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் வழியாக வந்து இறைவனை வணங்கவேண்டும். நாள் முழுவதும் உபவாசமிருந்து மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும். விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்ஹரநாம ஸ்தோத்திரங்கள், பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனைத் துதி செய்யவேண்டும்.பெருமாள் கோவில்களில் நடைபெறும் சிறப் புப் பூஜைகளில் கலந்துகொண்டு இறைவனை வழிபடலாம். அல்லது வீட்டில் இருந்தபடியே இறைவனின் திருவுருவப் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம். அல்லது மிக எளிமையாக "ஓம் நமோ நாராயணாய' என்று கூறிக்கொண்டே இருந்தால்கூட போதுமானது.
மறுநாள் துவாதசியன்று கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி பகவானின் நாமத்தைச் சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி, உபவாசத்தை முடித்துக்கொள்ளலாம். இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றைப் படைத்து, இயன்ற அன்னதானம் செய்தபிறகு சாப்பிடவேண்டும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் நெல்லிக் காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதமிருப்பவர்களின் சிந்தையில், இறைவனின் நினைவு மட்டுமே இருக்கவேண்டும். வயோதிகர்கள், உடல்நலம் குறைந்தவர்கள் உப்பு, சர்க்கரை சேர்க்காத திரவ உணவு மற்றும் இறைவனுக்கு சமர்ப்பித்த பழங் களை உண்ணலாம்.
இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும். சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்களாவார்கள். பித்ரு தோஷம் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் அகலும். உடலும் ஆன்மாவும் தூய்மையடையும். முக்தி கிடைக்கும். இவை பொதுவான பலன்கள்.
24-12-2020, வியாழக்கிழமை, தசமி திதி இந்தநாளில் அஸ்வினி (கேது) நட்சத்திரமும் இணைந்துவருகிறது. குருவின் ஆதிக்கமும் (வியாழக்கிழமை) கேதுவின் நட்சத்திரமும் சம்பந்தம் பெறுவதால், ஜனனகால ஜாதகத்தில் குரு சாபம் இருப்பவர்கள் தசமி திதியன்று அந்தணர்கள், சாதுக்கள் மற்றும் முனிவர்களுக்கு வஸ்திர தானம் வழங்கி, கால்களில் விழுந்து ஆசிபெற சாபநிவர்த்தி கிடைக்கும்.
ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாமிடத்திற்கு குரு, கேது சம்பந்தத்தால் குழந்தை பாக்கியத்தில் தடை, தாமதம் இருப்பவர்கள் அவல் பாயசம் படைத்து குழந்தை வடிவக் கண்ணணை வழிபட குழந்தைப்பேறு கிடைக்கும்.
குரு, கேது சம்பந்தம் கோடீஸ்வர யோகமாகும். பொருளாதாரத்தடை இருப்பவர்கள், தொழிலில் ஏற்ற- இறக்கம் மிகுதியாக இருப்பவர்கள், கொடுத்த பணம் வராதவர்கள் சத்திய நாராயணர் படத்திற்கு துளசிமாலை அணிவித்து, லட்டு வைத்து வழிபட பொருளாதாரம் தொடர்பான அனைத்துக் குறைகளும் சீராகும்.
25-12-2020, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி
வைகுண்ட ஏகாதசி திதி சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் வருகிறது. ஜனனகால ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழில் சுக்கிரன் இருக்கும் ஆண்கள், சுக்கிரன், ராகு- கேது சம்பந்தம் இருப்பவர்கள், சுக்கிர தோஷத்தால் திருமணத் தடையைச் சந்திப்பவர்கள் மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமி படத்திற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட திருமணத்தடை அகலும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்துவாழ்வார்கள்.
மேலும் 25 (2+5 =7) என்ற எண் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த நாள். மார்கழி 10-ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக் கும் நேரத்தில் கேதுவின் அஸ்வினி நட்சத்திரம் இருப்பதால், பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.30 முதல் 6.00 மணிக்குள் மகாவிஷ்ணுவை வழிபட நிச்சயம் முக்தி கிட்டும்.
26-12-2020, சனிக்கிழமை, துவாதசி திதி
சனிக்கிழமையானது சனியின் ஆதிக்கம் நிறைந்த நாள். துவாதசி திதியும் இணைந்த நாள். தேதியின் கூட்டு எண்ணும் சனியின் 8. ஜனனகால ஜாதகத்தில் எட்டாமிட வலிமைக் குறைவால் அடிக்கடி ஆயுள் கண்டத்தைச் சந்திப்பவர்கள் அல்லது ஆயுள் பயத்தை அதிகரிக்கச் செய்யும் நோய்த் தாக்கம் உள்ளவர்கள், மூட்டு மற்றும் எலும்புத் தொடர்பான பிரச்சினை அதிகமிருப்பவர்கள் சுண்டைக்காயை தானம் தர நல்ல மாற்றம் கிடைக்கும்.
பெண்களுக்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானம். எட்டாமிடத்திற்கு அசுப கிரக சம்பந்தத்தால் திருமணத் தடையைச் சந்திக்கும் பெண்கள் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களும் முறைப் படி உபவாசமிருந்து மகாவிஷ்ணுவை வழிபட திருமணத்தடை அகலும். திருமண மான பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.
பித்ரு தோஷம் மற்றும் பிரம்மஹத்தி தோஷத்தால் குடும்பத்தில் முன்னேற்றக் குறைவிருப்பவர்கள் துவாதசி திதியன்று இயன்ற உணவு தானம் தண்ணீருடன் சேர்த்து வழங்க நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.