உத்தவ கீதை! கண்ணன் திருவமுது! -லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/om/uthava-gita-kannan-thiruvamuthu-lalgudi-gopalakrishnan

தத்துவத்தின் பெருக்கு!

சும்பொன் கம்பங்களின்மீது பறக்கும் துவாரகையின் கருடக்கொடிகள் வந்தாரை வரவேற்க, தவழும் கடலலைகள் கண்ணனைக் காணவந்தோரின் பாதங்களைக்கழுவிப் புனித மாக்கின. கந்தர்வர்களின் கானமா? பாஞ்சஜன் யத்தை நினைவுகூரும் துந்துபியின் நாதமா? எது சிறந்ததென்று சீர்தூக்கி அறியமுடியாதபடி நாதப்பிரளயம் எங்கும் நிரம்பிவழிந்தது. ஆர்த்த பேரிகையால் நிலம் அதிர்ந்தது. இளங்காற்றில் மரக்கிளைகள் அசைந்து ஒன்றோடொன்று மோதியபோது உதிர்ந்த மலர்கள் புஷ்பக்கம்பளம் விரித்தன. துவாரகை விழாக்கோலம் பூண்டது.

யமுனை நதிக்கரையில் முரளிதரனின் வேணுகானத்தைக்கேட்டு மதிமயங்கிய கோபியர் கள் கழுத்தில் ஒட்டியாணத்தையும், இடையில் ஹாரத்தையும் அணிந்துவந்ததுபோல், படைப்புத் தொழிலை மறந்த பிரம்மனும், ஐராவதத்தைத் துறந்த இந்திரனும் பரம்பொருளை தரிசிக்க பூவுலகம் வந்தனர். சூடிய மலர்கள் வாடாது, கண்ணி மைக்காது, மனம் தடுமாறாத தேவர்களுக்குள் குழப்பம் நிலவியது. உலகளந்த பெருமாளை வைகுந்தம் அழைத்துச் செல்லவல்லவா நாமெல் லாம் துவாரகைக்கு விரைந்தோம். அவ்வாறிருக்க, இப்போது நாமிருக்குமிடம் துவாரகையா? வைகுந்தமா? மாயப் பிறப்பறுக்கும் மாயவனின் நயனமொழியால் கருத்துத் தெளிந்தனர்.

bb

கண்ணன் இருக்குமிடமெல்லாம் வைகுந் தமே. தேவர்கள் சொல்லும் செயலும் மறந்து, பகவானின் திவ்ய ஸ்வரூபத்தையே கண்களால் அள்ளிப்பருகியபின், ஒருவாறு ஞானத்துயில் கலைந்து தன்னிலை பெற்றனர். மதுசூதனனின் கமலப்பாதங்களைத் தொழுத தேவர்கள், ""ஆயிரம் நாவினைக்கொண்ட ஆதிசேஷனா லும் விளக்கியருள இயலாத, சகல கல்யாண குணங்களையும் கொண்ட வைகுந்தவாசரே! தேவரீர்! தீயோரால் பூவுல கின் பாரம் மிகுந்து, நல்லோர் சொல்லவொண்ணா துய ருற்றபோது, எங்களின் வேண்டுதலுக்கிணங்கி கிருஷ்ணாவதாரம் எடுத் தீர்கள். கம்சன்முதலான அசுரர்களை வதைத்து, சாதுக் களை இரட்சித்தீர்கள். பாண்டவர்களுக்குத் தூதராகச் சென்று தர்மத்தை நிலைநாட்டினீர்கள். நீவி

தத்துவத்தின் பெருக்கு!

சும்பொன் கம்பங்களின்மீது பறக்கும் துவாரகையின் கருடக்கொடிகள் வந்தாரை வரவேற்க, தவழும் கடலலைகள் கண்ணனைக் காணவந்தோரின் பாதங்களைக்கழுவிப் புனித மாக்கின. கந்தர்வர்களின் கானமா? பாஞ்சஜன் யத்தை நினைவுகூரும் துந்துபியின் நாதமா? எது சிறந்ததென்று சீர்தூக்கி அறியமுடியாதபடி நாதப்பிரளயம் எங்கும் நிரம்பிவழிந்தது. ஆர்த்த பேரிகையால் நிலம் அதிர்ந்தது. இளங்காற்றில் மரக்கிளைகள் அசைந்து ஒன்றோடொன்று மோதியபோது உதிர்ந்த மலர்கள் புஷ்பக்கம்பளம் விரித்தன. துவாரகை விழாக்கோலம் பூண்டது.

யமுனை நதிக்கரையில் முரளிதரனின் வேணுகானத்தைக்கேட்டு மதிமயங்கிய கோபியர் கள் கழுத்தில் ஒட்டியாணத்தையும், இடையில் ஹாரத்தையும் அணிந்துவந்ததுபோல், படைப்புத் தொழிலை மறந்த பிரம்மனும், ஐராவதத்தைத் துறந்த இந்திரனும் பரம்பொருளை தரிசிக்க பூவுலகம் வந்தனர். சூடிய மலர்கள் வாடாது, கண்ணி மைக்காது, மனம் தடுமாறாத தேவர்களுக்குள் குழப்பம் நிலவியது. உலகளந்த பெருமாளை வைகுந்தம் அழைத்துச் செல்லவல்லவா நாமெல் லாம் துவாரகைக்கு விரைந்தோம். அவ்வாறிருக்க, இப்போது நாமிருக்குமிடம் துவாரகையா? வைகுந்தமா? மாயப் பிறப்பறுக்கும் மாயவனின் நயனமொழியால் கருத்துத் தெளிந்தனர்.

bb

கண்ணன் இருக்குமிடமெல்லாம் வைகுந் தமே. தேவர்கள் சொல்லும் செயலும் மறந்து, பகவானின் திவ்ய ஸ்வரூபத்தையே கண்களால் அள்ளிப்பருகியபின், ஒருவாறு ஞானத்துயில் கலைந்து தன்னிலை பெற்றனர். மதுசூதனனின் கமலப்பாதங்களைத் தொழுத தேவர்கள், ""ஆயிரம் நாவினைக்கொண்ட ஆதிசேஷனா லும் விளக்கியருள இயலாத, சகல கல்யாண குணங்களையும் கொண்ட வைகுந்தவாசரே! தேவரீர்! தீயோரால் பூவுல கின் பாரம் மிகுந்து, நல்லோர் சொல்லவொண்ணா துய ருற்றபோது, எங்களின் வேண்டுதலுக்கிணங்கி கிருஷ்ணாவதாரம் எடுத் தீர்கள். கம்சன்முதலான அசுரர்களை வதைத்து, சாதுக் களை இரட்சித்தீர்கள். பாண்டவர்களுக்குத் தூதராகச் சென்று தர்மத்தை நிலைநாட்டினீர்கள். நீவிர் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் இம்மண்ணுலகிலிருந்தாலும், பூமாதேவி மகிழ்ச்சியே அடைவாள் என்பதில் ஐயமில்லை. அதேபோல், இவ்வுலகில் தர்மம் தழைத்தோங்கும் என்பதும் சத்தியமே. தாயிடம் பாலருந்தும் ஒரு கன்றைப் பிரித்தல் பாவமென்றாலும், பிரிக்காமல்போனால் மற்ற கன்று பசியாறாமல்போகும். ஜகத் இரட்சகனாகிய நீரே தேவருக்கும், நரர்களுக்கும் ஞானப்பாலினை ஈந்திடும் காமதேனுவன்றோ? தங்கள் அவதாரத்தின் தத்துவமும், நோக்கமும் நிறைவுபெற்றதால், தாங்கள் ஸ்ரீதேவித் தாயாருடன் வைகுந்தம் ஏகி, தேவர்களைக் கடாட்சித்து அருளுமாறு மனம், புத்தி, கரணங்களால் நமஸ்கரித்து வேண்டுகிறோம்'' என்றனர்.

புருஷோத்தமன் புன்னகைத்தார். ""தேவர்களே! நீங்கள் பிரார்த்தனை செய்த படி நான் இவ்வுலகில் அவதரித்து, தீமையை ஒழித்து, தர்மத்தை நிலைநாட்டினேன். தர்மத்தை சூது கவ்வி, தர்மத்தின் வலிமை குறைந்து, அதர்மம் மேலோங்கும்போது உலகம் சமநிலையை இழக்கும். அப்போதெல்லாம் என்னை நானே பிறப் பித்துக்கொள்கிறேன். இனி எத்தனை யுகங்கள் சிருஷ்டி நடந்தாலும், தர்மத்தைக் காப்பாற்ற மறுபடி மறுபடி அவதரிப்பேன். யதுகுலத்தவர்கள் என்னைத் தலைவனாகக் கொண்டதால், வீண் குலப் பெருமை மேலோங்கி, குணம் கெட்டு அலைகிறார் கள். யாதவர்கள் மமதையால் மதிமயங்கி, கொடுக்கு முளைத்த குளவிகளாக, கொள்ளிக் கட்டைகளை ஏந்திய குரங்குகளாகப் பிறருக்குத் தீங்கிழைக்கிறார்கள். போர் முடிந்தபின் போர்க் களம் எரிக்கப்பட்டுத் தூய்மையாக்கப்படுவது போல், கன்னல் வயல் அறுவடைக்குப்பின் தீக்கிரை யாவதுபோல், யாதவரால் மாசுபட்ட துவாரகையும் புனராவர்த்தனம் செய்யப் படவேண்டும். பறவை தன் உடல் சிலிர்த்து, பழைய இறகினை உதிர்த்து புதிய சிறகி னைப் பெறுவதாய் துவாரகாபுரியும் புது வடிவம் பெறும். துவாரகை கடலில்மூழ்கி நீராடி தூய்மைபெற விரும்புகிறாள். யாதவர் களின் அகங்காரத்தை அழித்தபின், நான் வைகுண்டம் திரும்புவேன். கலியுகமும் துவங் கும். மக்கள் நிலையில்லாத செல்வத்தின்மீது மோகம்கொண்டு அறவழி மறந்து, கொலை, கொள்ளை போன்ற தீச்செயல்களில் ஈடுபடு வார்கள். கலிபுருஷனால் ஆட்கொள்ளப் படுவார்கள்.''

தானே, தன் யதுகுலத்தைக் கொல்வது உலகியலுக்கு ஒவ்வாது என்றெண்ணிய மதியூகி மாதவர், வேறோர் உபாயம் கண்டார். யாதவர்களின் செருக்கு அழிந்திடும் காட்சிக்கு சாட்சியாய் நின்றிடும் எண்ணம் கொண்டார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர்- விசுவாமித்திரர், கண்வர், துர்வாசர், பிருகு, ஆங்கீரசர், காசிபர், வாமதேவர், அத்ரி முதலிய முனிவர் களை கடற்கரை நகரான பிண்டாரகம் என்ற பிரபாச நகருக்குச் செல்லும்படி பணித் தார். பரந்தாமன் ஆணையை சிரம் மேலேற்று, திருவருளும் குருவருளும் கலந்த மெய்த்தவ யோகிகள் பிரபாச நகரை அடைந்தனர்.

"கேடு வரும் பின்னே, மதி கெட்டு விடும் முன்னே' என்ற வாக்கினை மெய்ப்பிக்க வேண்டி, பிரபாச நகரிலிருந்த யாதவ குல இளைஞர்கள் சிலர், ஸ்ரீகிருஷ்ணர்- ஜாம்பவதிக்குப் பிறந்த சாம்பனுக்குப் கர்ப்பம் தரித்த பெண் வேட மிட்டு, முனிவர்களிடம் அழைத்துச்சென்று, ""தவமே உருவான முனிவர்காள்! இந்தப் பெண் னுக்கு என்ன குழந்தை பிறக்கும்?'' என்று வேடிக்கையாகக் கேட்டனர். முக்காலமும் உணர்ந்த யோகியர், இளைஞர்களின் கபட நாடகத்தை இமைப்பொழுதில் அறிந்தனர்.

முனிவர்கள் சினந்து, நாகமது நாகமுற நாகமென நின்றனர். விழிகள் கனலைக்கக்க, வார்த்தைகள் சாபத்தை உமிழ்ந்தன. ""மூடர்களே, பொறுப்பற்றவர்களாக நெருப்புடன் விளையாடத் துணிந்துவிட்டீர்கள். தன் வாயால் தானே கெட்டு, பாம்பின் வாயில் அகப்படும் தேரையைப்போல், உங்கள் வாழ்வின் இறுதியை நீங்களே உறுதிசெய்து கொண்டுவிட்டீர்கள். இனி உங்கள் அழிவை எவராலும் நிறுத்தமுடியாது. இவள் உங்கள் யாதவ குலத்தையே அழிக்கப்போகும் உலக்கையைப் பெற்றெடுக்கப் போகிறாள்'' என்று சபித்தனர். சாபம் பலித்தது.

சாம்பன் உலக்கைக்குத் தாயானான். இதையறிந்த யாதவர்களின் தலைவர் உக்ரசேனர், யதுகுலத்திற்கு வந்த ஆபத்தினை உணர்ந்தார். பாம்புப் புற்றில் கைவைத்தவர்போல் பதை பதைத்துப்போனார். அந்த உலக்கையைத் தூளாக்கி கடலில் வீசியெறியுமாறு உத்தர விட்டார். யாதவ இளைஞர்கள் அந்த உலக்கை யைத் தூளாக்கி கடலில் வீசியெறிந்தனர். அழியாத வினைப்பயன் தொடர்வதுபோல், சில நாட்களுக்குப்பின் உலக்கையின் இரும் புத்துகள்கள் கடற்கரையை அடைந்து, நீண்ட- மிக உறுதியான கோரைப்புற்களாக வளர்ந் தன. அவையே யாதவர்களை அழிக்கும் ஆயுதங் களாக மாறின. வசுதேவரின் சகோதரராகிய தேவ பகாரின் மகனும், ஸ்ரீகிருஷ்ணரின் இளம் பிராயத்துத் தோழருமான உத்தவர் இதையறிந் தார். பகவான் கண்ணனைக் காண விரைந்தார்.

கார்முகில் வண்ணனைக் கண்ட உத்தவர், தன் வருகையின் குறிப்பை உணர்த்தினார்.

""ஆத்மதோழரே! யாதவர்களின் நிலையைக் கண்டு பெரும் விசனத்திலிருக்கிறேன். யது குலத்தவர் பெற்ற சாபத்தைத் தங்களால் மட்டுமே நீக்கமுடியும். அவ்வாறிருக்க, தாங்கள் அதைப் பாராமுகமாய் இருப்பதன் காரணத்தையறிய விழைகிறேன். அவதாரத்தின் நிறைவில், தங்களு டன் நானும் வைகுண்டத்தை அடையவேண்டு மென்ற என் விருப்பத்தையும் விண்ணப்பிக் கிறேன்'' என்றார்.

பவளவாய்க் கமலச்செங்கண் அச்சுதன் அருள்பொழிந்தான்: ""அவரவர் வினைகளுக் கேற்பவே வாழ்க்கை அமைகிறது. நான் அதை இயக்குவதுமில்லை. தலையிடுவதுமில்லை. மனதுக்குள்ளே இருந்து, நடப்பதையெல்லாம் நெருக்கமாகப் பார்த்துவரும் சாட்சியாக மட்டுமே இருக்கிறேன். நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதைப் பலரும் உணருவதில்லை. அவ்வாறு உணர்ந்தவர் பாவங்களைச் செய்வதில்லை. எனக் குத் தெரியாமல் நடந்துகொள்வதாக நினைத்து தவறு செய்பவர்களின் பாவங்களுக்கு அவரவர் தான் பொறுப்பேற்கவேண்டும். யாதவர்கள் அறிவையழிக்கும், போதையைத் தரும் மைரேயம் என்ற மதுவை அளவுக்குமீறிப் பருகுகிறார்கள். மதுவே அவர்களை பஞ்சமா பாதகங்களையும் செய்யத்தூண்டும். அதன் விளைவால் மதிமயங்கி, கர்வம் மேலோங்கி தங்களுக்கிடையே இருந்த உறவை மறந்து, ஒருவரையொருவர் இரும்புத்தடி போன்று வளர்ந்திருக்கும் வச்சிராயுதத்திற்கு நிகரான கோரைப்புற்களால் தாக்கிக்கொண்டு முற்றிலும் அழிந்துபோவார்கள். பாகனின் கட்டுப்பாட்டைமீறிய மதயானை, தன் கண்ணில் பட்டதையெல்லாம் பாழாக்கி, முடிவில் தானும் பயம்பில் விழுந்து துன்புறும். யதுகுலத்தவர்களின் அழிவு முனிவர்களின் சாபத்தால் இன்னும் ஏழுநாட்களில் நிகழும். விதிக்கப்பட்டதே வாய்க்கும். உத்தவரே, நீங்கள் சிலகாலம் பத்ரிகாஸ்ரமத்தில் தவமியற்றியபின் பரமபதத்தை அடைவீர்கள்.''

ஞானமழையில் நனைந்த உத்தவர், ""பாண்டு ரங்கா! நீவிர் வைகுண்டம் சென்றபின் இவ்வுல கில் தர்மம் வறண்டுபோகும். பாலையில் பயணிப் பவன் அமுதநீர் கொண்டுசெல்வதுபோல், நான் இவ்வுலகில் வாழும் நாள்வரை உபயமாய், உண்ணும் நீர்போன்ற உபதேசத்தைத் தந்தருளவேண்டும். அதிக முயற்சியில்லாமல் பரமபதத்தை அடையும் எளியவழியைக் கூறுங்கள்'' என்று ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டார்.

அதற்கு வேணுகோபாலன், ""எந்த செயல் செய்தாலும் அதை என்னுடைய பிரீதிக்காகவே செய்யவேண்டும். மனதை என்னிடமே செலுத்தி, என் தர்மத்திலே லயித்து, என்னிடம் *அனன்ய பக்தி செலுத்தவேண்டும். எல்லா ஜீவராசிகளிடத்தில் நானே இருப்பதாக பாவனை செய்துகொண்டிருப்பவனுக்கு விரோதம், பொறாமை, பொருட்படுத்தாமை, அகங்காரம் முதலியன விலகிப்போகின்றன. எல்லாவற்றையும் ஈசுவர வடிவாகப் பார்ப்பவனுக்கு, அனைத்தும் பிரம்மஞானம் ஏற்பட்டவுடன், எல்லா அறியாமைகளிலிருந்தும் விலகி, என்னை சாட்சாத்தாகப் பார்த்து, பிரபஞ்சப் பார்வையை நீக்கி, மேலான அமைதியை அடைகிறான். மனம்- மொழி- மெய்யால் என்னைப் பார்ப்பதே என்னை அடைவதற்கான சாதனங்களுள் மேலானது.

மனிதன் எல்லாக் கர்மங்களையும் எனக்கே அர்ப்பணம் செய்துவிட்டு, என்னையே சரண டைந்து, எல்லா செயல்களையும் என்பொருட்டாக எவன் செய்கிறானோ, அவன் அமரத் தன்மை அடைந்து, என் வடிவமாகவே ஆகி விடுகிறான் என்று உபதேசித்தார்.

அமுதம் பெருகும்...

om010120
இதையும் படியுங்கள்
Subscribe