உலகம் போற்றும் சூரியன்!

/idhalgal/om/ulakama-paorarauma-cauraiyana

லகத்தை வாழச் செய்யும் சூரியனின்அவதாரம் குறித்துப் புராணங்கள் பலவாறு கூறுகின்றன. அந்தவகையில் கச்யப மகரிஷி- அதிதி தம்பதியருக்குப் பிறந்தவர் சூரியன் என்கிறது புராணம்.

பிரம்மாவால் உருவாக்கப்பட்ட பிரஜாபதிகளில் கச்யப மகரிஷி முக்கியமானவர். இவர் பிரம்மாவின் மானச புத்திரர் என்றும் போற்றப்படுகிறார். இவருக்கு 21 மனைவிகள் இருந்ததாகவும், அவர்கள்மூலம் எல்லா ஜீவராசிகளையும் படைத்ததாகவும் புராணம் வர்ணிக்கிறது. ஒரு பிரபவ ஆண்டு, மகாசுக்ல சப்தமியில் கச்யபரின் முதல் மனைவியான அதிதியின் வயிற்றிலிருந்து ஒரு அண்டம் வெளிப்பட்டது. அதிலிருந்து ஒரு ஒளி தோன்றி பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். அந்தப் பன்னிருவரையும் ஒன்றுசேர்த்தார் மகரிஷி. சூரியன் என்ற பெயரில்ஆயிரம் கிரணங்களுடன் உலகை வலம்வரும்படி ஆசிர்வதித்தார். சூரியனிடம் ஐக்கியமானவர்கள் 12 மாதங்களின் ஆதித்யர்கள் ஆனார்கள் என்கிறது சாம்ப புராணம்.

சிவபக்தரான மகரிஷி, யாருக்காவது சாபம் இட்டால் அது பலித்துவிடும். அவ்வளவுமகத்தான சக்தி பெற்றவர். உலகிற்கு ஒளிதரும்ஆதித்யனான சூரியன், தினமும் கயிலை நாதனை வழிபட்டு தன் பணியைச் செய்து வந்தார்.

நவகிரகங்களுக்குத் தலைவனான சூரியனுக்கு, "எம்மால்தான் இந்த உலகம் வளமாக இருக்கிறது. பூவுலகிலுள்ள ஜீவராசிகளுக்கும், மரங்கள், செடிகள், பயிர்கள் அனைத்திற்கும், மானிடர்களுக்கும் வாழ்வளிப்பதுடன் சக்தியையும் அளிப்பவன் நான்' என்ற கர்வம் ஏற்பட்டது. அதன்விளைவால் தினமும் தன் ஒளிக்கதிர்களால் சிவபெருமானை முதலில் வழிபடும் சூரியன், அவரை உதாசீனப்படுத்தினான். சூரியனின் மனப்போக்கை அறிந்த சிவபெருமான்,அவன் பயணித்துக்கொண்டிருக்கும் பாதையில் குறுக்கிட்டார். அப்பொழுதும், அவருக்குரிய மரியாதை தராமல் நகர்ந்தான் சூரியன். அதனால் கோபம்கொண்ட சிவபெருமான், தன் திரிசூலத்தால் அவனைத் தாக்க, சூரியன் அடிபட்டு வீழ்ந்தான். உலகம் இருளில் மூழ்கியது. திடீர

லகத்தை வாழச் செய்யும் சூரியனின்அவதாரம் குறித்துப் புராணங்கள் பலவாறு கூறுகின்றன. அந்தவகையில் கச்யப மகரிஷி- அதிதி தம்பதியருக்குப் பிறந்தவர் சூரியன் என்கிறது புராணம்.

பிரம்மாவால் உருவாக்கப்பட்ட பிரஜாபதிகளில் கச்யப மகரிஷி முக்கியமானவர். இவர் பிரம்மாவின் மானச புத்திரர் என்றும் போற்றப்படுகிறார். இவருக்கு 21 மனைவிகள் இருந்ததாகவும், அவர்கள்மூலம் எல்லா ஜீவராசிகளையும் படைத்ததாகவும் புராணம் வர்ணிக்கிறது. ஒரு பிரபவ ஆண்டு, மகாசுக்ல சப்தமியில் கச்யபரின் முதல் மனைவியான அதிதியின் வயிற்றிலிருந்து ஒரு அண்டம் வெளிப்பட்டது. அதிலிருந்து ஒரு ஒளி தோன்றி பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். அந்தப் பன்னிருவரையும் ஒன்றுசேர்த்தார் மகரிஷி. சூரியன் என்ற பெயரில்ஆயிரம் கிரணங்களுடன் உலகை வலம்வரும்படி ஆசிர்வதித்தார். சூரியனிடம் ஐக்கியமானவர்கள் 12 மாதங்களின் ஆதித்யர்கள் ஆனார்கள் என்கிறது சாம்ப புராணம்.

சிவபக்தரான மகரிஷி, யாருக்காவது சாபம் இட்டால் அது பலித்துவிடும். அவ்வளவுமகத்தான சக்தி பெற்றவர். உலகிற்கு ஒளிதரும்ஆதித்யனான சூரியன், தினமும் கயிலை நாதனை வழிபட்டு தன் பணியைச் செய்து வந்தார்.

நவகிரகங்களுக்குத் தலைவனான சூரியனுக்கு, "எம்மால்தான் இந்த உலகம் வளமாக இருக்கிறது. பூவுலகிலுள்ள ஜீவராசிகளுக்கும், மரங்கள், செடிகள், பயிர்கள் அனைத்திற்கும், மானிடர்களுக்கும் வாழ்வளிப்பதுடன் சக்தியையும் அளிப்பவன் நான்' என்ற கர்வம் ஏற்பட்டது. அதன்விளைவால் தினமும் தன் ஒளிக்கதிர்களால் சிவபெருமானை முதலில் வழிபடும் சூரியன், அவரை உதாசீனப்படுத்தினான். சூரியனின் மனப்போக்கை அறிந்த சிவபெருமான்,அவன் பயணித்துக்கொண்டிருக்கும் பாதையில் குறுக்கிட்டார். அப்பொழுதும், அவருக்குரிய மரியாதை தராமல் நகர்ந்தான் சூரியன். அதனால் கோபம்கொண்ட சிவபெருமான், தன் திரிசூலத்தால் அவனைத் தாக்க, சூரியன் அடிபட்டு வீழ்ந்தான். உலகம் இருளில் மூழ்கியது. திடீரென்று சூரியனின் ஒளி மறைந்ததற்குக் காரணமென்ன என்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் திக்பிரமை அடைந்தனர்.

உண்மையை அறிந்த சூரியனின் தந்தையான கச்யபர் சூரியன் வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். தன் மகன் இறந்துவிட்டான் என்று கருதிய மகரிஷி, கயிலைநாதனை உடனே சந்தித்தார்.

""மகாதேவா, என் மகன் உம்மை வணங்கவில்லை என்பதற்காக அவனை வீழ்த்தியது நியாயமா? என் மகன் வீழ்ந்துவிட்டான். இந்த நிலை உமக்கும் வரும். உன் மகனை நீயே திரிசூலத்தால் வீழ்த்தும் நிலை ஏற்படும்'' என்று சபித்த மகரிஷி அங்கிருந்து அகன்றார். சிவபெருமான் வீழ்ந்து கிடக்கும் சூரியனைப் பார்த்தார். சூரியன் எழுந்து நடந்தான். இருள் சூழ்ந்த உலகத்தில் ஒளி பரவியது.

இதைக்கண்ட கச்யபர், ""மகனே'' ஆதித்யா, நீ உயிரோடுதான் இருக்கிறாயா? சிவபெருமான் உன்னைத் தாக்கியதால் நீ இறந்துவிட்டாய் என்று நிலைகுலைந்தேன். அதன் காரணமாக அவரை சபித்துவிட்டேன்'' என்று வருந்தினார்.

""தந்தையே, வருந்தாதீர்கள். நீங்கள் யார்? பிரம்மதேவரின் மானச புத்திரர். உங்களால் அவதரித்த எனது சக்தி உங்களுக்குத் தெரியாதா? என்னை யாராலும் அழிக்க முடியாது. வேண்டுமானால் சிறிது நேரம் மறைக்கலாம். பிறகு மீண்டும் என் ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கும் என்று வரம் பெற்றவன் அல்லவா நான்?'' என்றான்.

""மகனே, நான் பெரும் பாவம் செய்து விட்டேன். இதுவரை சிவபெருமானுக்கு ஒரு மகன்கூட அவதரிக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு சாபம் கொடுத்துவிட்டேனே...''

""வருந்தாதீர்கள் தந்தையே. எல்லாம் என் கர்வத்தால்- "நான்' எனும் ஆணவத்தால் வந்தது.

அந்தப் பழிபாவம் எல்லாம் என்னைச்சார்ந்தது. இதனை நான் நிவர்த்தி செய்து விடுகிறேன்.''

""எப்படி ஆதித்யா?''

""நான் ஒருநாள் மகேசனை வழிபடாத தால்தானே இவ்வாறு நிகழ்ந்தது. ஒளி வீசும் தலமான காசிக்குச் சென்று, தங்கள்தோஷத்தையும் என் தோஷத் தையும் போக்க தவம் மேற் கொள்ளப்போகிறேன். மேலும், நான் பூலோகத்தில் பவனிவரும்போது, எந்தத் திருத்தலங்களிலெல்லாம் ஈசன் எழுந்தருளியிருக்கிறாறோ, அங்கெல்லாம்ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட நாட்களில் என் ஒளிக்கதிர்களால் வழிபடுவேன். சில தலங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடுவேன்'' என்று தன் தந்தையிடம் உறுதியளித்த சூரியன் ஒளிவீசும் நகரான காசிக்குச் சென்றான்.

அங்கு கங்கை நதியில் நீராடி, கங்கைக் கரையோரத்தில் ஈசனையும் உமையவளையும் ஸ்ரீகபஸ்தீஸ்வரர்- ஸ்ரீமங்களகௌரி என்ற திருப்பெயருடன்- பிரதிஷ்டைசெய்து, சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் கடுமையாகத் தவம்புரிந்தான்.

(சிவபெருமான், தனது வலக்கண்ணில் சூரியனையும் இடக் கண்ணில் சந்திரனின் ஒளிக்கதிர்களையும் பெற்றிருப்பதால், சூரியன் தவமிருந்த காலத்தில் சிவ பெருமானின் வலக்கண் சூரியனின் பணியை மேற்கொண்டது என்கிறது புராணம்.)

சூரியனின் தவத்தைப் போற்றிய சிவபெருமான் அவனுக்கு மயூகன் என்று பெயர் சூட்டி, அவன் கேட்ட வரத்தைஅருளினார். ஈசனிடம் வரம்பெற்ற சூரியன் மயூகாதித்யன் என்று போற்றப்பட்டான்.

அந்த ஆலயம் இன்று கங்கைக்கரையோரம் "பஞ்சகாட்' அருகில் உள்ளது.

சூரியன் தேவ வடிவம்கொண்டு வழிபட்ட தலங்கள் தமிழகத்தில் பலவுண்டு. அவற்றில் சில:

காஞ்சிபுரத்தில் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயத்தில், முருங்கை மர நிழலில் ஜோதி லிங்க மாகக் காட்சிதரும் ஈஸ்வரனை சூரியன் தேவவடிவில் வழிபட்டுப் பேறு பெற்றதாக புராணம் கூறுகிறது. இதேபோல், தற்போது பருதியப்பர் ஆலயம் எனப்படும் பிரதிநியமம் தலத்திலும் சூரியன் தேவவடிவில் வழி பட்டுள்ளான். இத்திருத்தலம் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும்வழியில் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது.

தஞ்சைக்கு அருகிலுள்ள கண்டியூர் தலத்தின் இறைவன்வீரட்டேஸ்வரர்; இறைவி மங்களநாயகி. இங்கு அருள்புரியும் இறைவன்மீது மாசிமாதம் 13, 14, 15 தேதிகளில் மாலை 4.45 மணிமுதல் 6.10 மணிவரை சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் படரவிட்டு வழிபடுகிறான்.

திருவாரூருக்கு தெற்கேயுள்ள நெல்லிக்கா என்னும் தலத்தில் ஆண்டுக்கு இரண்டுமுறை தன் ஒளிக்கதிர்களால் வழிபடுகிறான். இத்திருக்கோவில் மேற்கு திசை நோக்கியிருப்பதால் மாலை ஐந்து மணிக்குமேல் சூரிய பூஜை நடைபெறுகிறது. மாசிமாதம் 18-ஆம் தேதி முதல் ஏழு நாட்களும், ஐப்பசி மாதம் தேய்ப்பிறை சதுர்த்தசி முதல் ஏழு நாட்களும் மாலை வேளையில் வழிபடுகிறான்.

கும்பகோணம் அருகிலுள்ள திரு நாகேஸ்வரம் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன்- ஸ்ரீபார்வதீஸ்வரர்; இறைவி- சக்தியம்மை. இங்கு பங்குனி மாதம் 13-ஆம் தேதிமுதல் பத்து நாட்கள் இறைவனின் லிங்கத்திருமேனியில் காலை வேளையில் தன்ஒளிக்கதிர்களை படரவிட்டு வழிபடுகிறான்.

மயிலாடுதுறையில் எழுந்தருளியிருக்கும் இறைவன்- ஆபத்சகாயேஸ்வரர்; இறைவி- பெரியநாயகி. இங்கு பங்குனி மாதம் 24-ஆம் தேதிமுதல் 28-ஆம் தேதிவரை ஐந்து நாட்கள் சூரிய பூஜை நிகழ்கிறது.

திருவாரூரை அடுத்த பேரளத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர் தலத்தின் இறைவன்- ஸ்ரீமேகநாதர்; இறைவி- சௌந்தர நாயகி. இங்கு சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் சிவலிங்கத்தின்மீது காலை ஆறுமணியளவில் சூரிய ஒளி படர்கிறது. இதனை சூரிய பூஜை என்று போற்றுவர்.

தஞ்சை மாவட்டம், சாலியமங்கலத்தில் கோவில்கொண்டுள்ள இறைவன்- மருந்தீஸ்வரர்; இறைவி- ஸ்ரீபுறவம்மை. இங்கு சித்திரை முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதிவரை ஆறு மணியளவில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் வழிபடுகிறான்.

குடந்தை நாகேஸ்வர சுவாமியை ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 10, 11, 12 தேதிகளில் காலை ஆறுமணியளவில்சூரியனது கதிர்கள் தொழும் காட்சியை தரிசிக்கலாம்.

மயிலாடுதுறைக்குஅருகேயுள்ள திருச்செம்பொன் கோவிலின் இறைவன்- சொர்ணபுரீஸ்வரர்; இறைவி- மருவார்குழலி. இத்திருக்கோவில் ஈசனை ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 7-ஆம் தேதிமுதல் 18-ஆம் தேதிவரை பன்னிரண்டு நாட்கள் காலை 6.00 மணியளவில் சூரியன் தன் பொன்கிரணங்களால் வழிபடுகிறான்.

சீர்காழிக்கு அருகேயுள்ள மகேந்திரப் பள்ளி, இன்னாம்பூர், திருப்புறம் பியம், அகரம், பறங்கிப்பேட்டை ஆகிய திருத்தலங்களிலும் சூரியன் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்திருமேனி

யில் படரவிட்டு வழிபாடு செய்து, தன் தந்தைக்கும், தனக்கும் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொண்டான் என்று புராணம் கூறுகிறது.

இந்த வழிபாட்டை ஒவ்வொரு வருடமும் மேற்கொள்வதால் ஈசன் மகிழ்ச்சிஅடைந்து அவர்களது தோஷத்தைப் போக்கி வாழ்த்துகிறார் என்று புராணம் கூறினாலும், கச்யப மகரிஷியின்சாபம் இறைவனை பாதித்தது. அது தனிக்கதை.

சிவபெருமானிடம் வரங்கள் பெற்ற சூரியனுக்கு ஆயிரக்கணக்கான பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்கள் அனைத்தும் காரணப்பெயர்களாகத் திகழ்கின்றன.

கச்யப மகரிஷியின் மனைவி அதிதியின் கர்ப்பத்தில் முழுமையாக வாசம் செய்யாமல், அண்டத்திலிருந்து பிளந்து அவதரித்ததால் மார்த்தாண்டன், அஜன் என்றும்; முப்பத்து முக்கோடி தேவர்களுக்கெல்லாம் தலை வனாக விளங்குவதால் ஆதித்யன் என்றும் போற்றப்படும் சூரியன், உயிரினங்கள் வாழ்வதற்குக் காரணமாகத் திகழ்வதால் பவன் என்று பெயர்பெற்றான்.

எங்கும் பிரகாசமாய் விளங்குவதால் சவிதா என்றும்; என்றும் வழிபடப்படுவதால் பாஸ்கரன், விவஸ்வான் என்றும்; பக்தர்களைக் காப்பதால் மித்திரன் என்றும்; மேகத்தின் மூலமாக இடிமுழக்கம் செய்வதால் மர்ஜன்யன் என்றும்; எல்லா உலகங்களையும் காப்பதால் பூஷ்வா என்றும் போற்றப்படுகிறான்.

தமிழகத்தில் தை மாத முதல்நாளன்று கரும்பினால் பந்தலிட்டு (சமர்ப்பணம் செய்து) சர்க்கரைப்பொங்கல், மஞ்சள் கொத்து மற்றும் பழங்கள் படைத்து, கண்கண்ட தெய்வமான சூரியதேவனுக்கு ஆராதனை செய்கிறோம். இந்த உலகம் இயங்க முழுசக்திபடைத்த சூரியனை தைப்பொங்கல் அன்று மட்டும் வழிபடாமல் தினமும் காலை வேளையில் வழிபட்டால் உடல்வளம் பெறும்; கண்ணொளி பிரகாசிக்கும். வாழ்வில் சுகம் காணலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

Magazine Om
இதையும் படியுங்கள்
Subscribe