ராமானுஜ ஜெயந்தி 28-4-2020
"புரட்சித்துறவி' என்று போற்றப்படும் ராமானுஜர், கி.பி. 1017-ல், சக ஆண்டு 939, கலியாண்டு 4,118, சித்திரை மாதம் 12-ஆம் தேதி வியாழக்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில், அசூரி கேசவ சோமயாஜுலு- காந்திமதி தம்பதிக்கு திருப்பெரும்புதூரில் பிறந்தார்.
குழந்தையைக் காணவந்த தாய்மாமன் திருமலை நம்பி, குழந்தை லட்சுமணனின் அம்சம்போல இருந்ததால் இளைய பெருமாள் என்று பெயர் சூட்டினார்.
காரணம், குழந்தை, ஆதிசேஷன் அவதாரத்தை நினைவூட்டியதாம்.
இளையபெருமாளுக்கு எட்டு வயதானபோது, உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வி கற்பித்தார். பெரிய நம்பிகளால், சதுர்த்தாஸ்ரம ஸ்வீகாரத்தின்போது சூட்டப்பட்ட பெயர் "யதிராஜா.'
ஸ்ரீரங்கத்தில் உபயவிபூதிப் பட்டம் அருளிய திருநாமம் "உடையவர்'.
திருவரங்கப்பெருமாள் அரையர் பெரியமொழி, திருவாய்மொழி (மூலம்) சந்தை செய்தருளி, மஞ்சள் காப்பு கைங்கர்யத்திற்கு உள்ளம் மகிழ்ந்து வைத்த பெயர் "லக்ஷ்மணபதி.'
திருக்கோட்டியூர் நம்பியால், ராமானுஜரின் பெருங்கருணை உள்ளத்தைக் கண்டு உகந்திட்ட திருநாமம் "எம்பெருமானார்'.
திருமலையாண்டான் பெரிய திருமொழி, திருவாய்மொழி முதலியவற்றுக்கு அர்த்தங்களை கற்றுத்தந்த பின்னளித்த திருநாமம் "சடகோபன் பொன்னடி.'
சிறந்த பாஷ்யம் அருளியதைக

சிறந்த பாஷ்யம் அருளியதைக் கண்டு காஷ்மீரம் சாரதா பீடத்திலுள்ள சரஸ்வதி தேவியால் உகந்து சூட்டப்பட்ட திருநாமம் "பாஷ்யக்காரர்.'
ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் சாற்றியது "பூதபுரீஸ்வரர்.'
திருவேங்கடமுடையான் சாற்றியது "தேசிகேந்த்ரர்.'
ஆண்டாள் விருப்பப்படி, திருமாலிருஞ்சோலை அழகர் உக்கும்படி, நூறு தடாவில் வெண்ணெயும், நூறு தடாவில் அக்காரவடிசலும் சமர்ப்பித்து ஸ்ரீஆண்டாளால் அருளப்பட்ட திருநாமம் "கோயிலண்ணன்.'
இவ்வளவு சிறப்புப் பெயர்கள் பெற்ற ஸ்ரீராமானுஜர், "தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதமில்லை. அனைவரும் தெய்வக்குழந்தைகள்' என்றார்.
தாழ்ந்த குலம் என்று சொல்லப்பட்ட வர்கள் தோள்மீது கைபோட்டு அனைவரும் காணும்படி ஸ்ரீரங்கத்தில் நடந்துசெல்வதைக் கண்ட அவ்வூர் பெரியவர்கள் அவரை "புரட்சித்துறவி' என்று போற்றினார்கள்.
மேலும், தன் குருநாதர் உபதேசித்த அற்புதமான எட்டெழுத்து மந்திரத்தை, திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோவில் கோபுரத்தின்மீதேறி, தன் குருவுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி, அனைவரும் சுவர்க்கம் செல்ல வேண்டுமென்னும் உயர்ந்த நோக்கில் "ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை மும்முறை உரக்கக் கூறியருளினார்.
வைணவத்தில் பல புரட்சி செயல்களை ஏற்படுத்தியவர் ஸ்ரீராமானுஜர்.
ஒரு நாள் ஸ்ரீராமானுஜரைத் தேடி அவருக்குத் தெரிந்த ஒருவர் வந்தார். ""ராமானுஜரே, காயம்பட்ட ஒருவனைக் கண்டால் நீர் வருந்துவீரா?'' என்று கேட்டார்.
""காயம்பட்ட ஒருவனைக்கண்டால் நான் வருந்தமாட்டேன்'' என்றார் ராமானுஜர்.
""அவனைக் கண்டு நீர் வேதனைப் படமாட்டீரா?''
""படமாட்டேன்.''
""இரக்கப்படவும் மாட்டீரா?''
""படமாட்டேன்.''
அந்த நபர் கோபம்கொண்டு, ""ஓய் ராமானுஜரே, நீரா பெரிய வைணவர்? நீரா பெரிய இரக்கத்தின் இருப்பிடம்?'' என்றார்.
அதற்கு ராமானுஜர், ""காயம்பட்ட ஒருவனைக்கண்டால் நான் வருத்தப் படமாட்டேன்; வேதனைப்படமாட்டேன்; இரக்கப்படவும் மாட்டேன். ஆனால், அந்த காயம்பட்டவனாகவே ஆகி விடுவேன்'' என்றார் அமைதியாக.
இந்தச் சொற்களைக்கேட்ட அந்த நபர், ராமானுஜர் கால்களில் விழுந்து மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், தன்னை வாழ்த்துமாறும் வேண்டினாராம்.
இப்படி, பல நிகழ்வுகள், சோதனைகள் அவர் வாழ்வில் அடிக்கடி நடந்ததுண்டு.
அடியார் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்பதை அறிந்த ராமானுஜரின் மனைவி, அவருக்கு அன்னமளிக்காமல் அவமானப் படுத்தியதால், தன் மனைவியை விட்டு, சந்நியாசம் பெற்று வாழ்ந்தவர் ஸ்ரீராமானுஜர்.
"திருப்பதி ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரமளித்த பெருமான்' என்று ராமானுஜர் பெயர் பெற்றிருந்த சமயத்தில், சில ஆண்டுகள் கர்நாடக மாநிலத்தில் வசித்தார். அங்கிருந்து புறப்படும்போது, அவரது அடியார்கள் அவரைப்போல் ஒரு விக்கிரகத்தை உருவாக்க அனுமதி கேட்டார்கள்.
அவர்கள் உள்ளப்போக்கை அறிந்த ராமானுஜர் அனுமதி தந்தார்.
கைகூப்பி விடைபெறும் கோலத்தில் சிலை உருவானது. அந்தச் சிலையைக் கட்டித்தழுவி தன் ஆற்றலைச் செலுத்திய ராமானுஜர், ""நான், இந்த விக்கிரக உருவில் உங்களுடன் இருப்பேன்'' என்று அருளாசி வழங்கினார். இத்திருமேனியை "தாம் உகந்த திருமேனி' என்று போற்றுவார்கள்.
இதேபோல் அவர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில், அந்த ஊர்மக்கள் ஸ்ரீராமானுஜருக்கு சிலை வைக்க விரும்பினார் கள். அந்தச் சிலையை அரவணைத்து தன் தெய்வீக ஆற்றலை சிலைக்குள் செலுத்தினார்.
அந்தத் திருவிக்கிரகத்தை "தமர் உகந்த திருமேனி' என்று போற்றுவர்.
வைணவத் திருத்தலங்களில் கோவில் வழிபாட்டுமுறைகளை ஒழுங்குபடுத்திய ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்கத்திலேயே தங்கி யிருந்து தொண்டுகள் புரிந்தார். அப்போது அவரது சீடர்களும், தொண்டர்களும் அவரது உருவச்சிலை இருந்தால் வழிபட லாமே என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி கேட்டனர். அச்சமயம், அவர் நூற்றிருபது வயதை எட்டியிருந்தார்.
சிலை வடிக்குமளவு அவகாசமில்லாததால், சுண்ணாம்பு மற்றும் அரிய மூலிகைச்சாறுகள் கலந்த சுதை உருவம் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டது.
பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் அமைந்த சிலைமீது அவரது காவி உடையைப் போர்த்தினார்கள். அவர், உயிருடன் அமர்ந்திருப்பதுபோல் காட்சி தந்தது.
ஸ்ரீராமானுஜர், பிரம்ம மந்திரத்தின் வாயிலாக மூச்சைப்பிடித்துக் கொண்டு, தமது சக்திகளை அந்தச் சிலையில் நிலைநிறுத்தினார்.
அருகிலிருந்த எம்பார் மடியில் தம் திருமுடியையும், வடுக நம்பியின் மடியில் தம் இரண்டு திருவடிகளையும் வைத்துக்கொண்டு, எதிரிலிருந்த தம் பரமாச்சார்யரான ஆளவந்தாரின் இரண்டு பாதுகளையும் தியானித்துக் கொண்டு பரமபதத்திற்குச் சென்றார். (முக்தியடைந்தார்).
அன்று சனிக்கிழமை, சக ஆண்டு 1,058, கி.பி. 1,137, மாசி மாதம், வளர்பிறை தசமி என்று வரலாறு கூறுகிறது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வசந்த மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில், அமர்ந்த நிலையில் அவரது திருமேனியைப் பதப்படுத்தி தனிச்சந்நிதியில் எழுந்தருளச் செய்தார்கள். இத்திருமேனியை "தாமான திருமேனி' என்று போற்றுவர்.
அத்திருமேனி அவர் உயிருடன் அமர்ந்தி ருப்பதுபோல் காட்சிதருவதை இன்றும் தரிசிக்கலாம்.
வருடத்திற்கு இரண்டுமுறை பச்சைக் கற்பூரம், குங்குமம் மற்றும் அரிய மூலிகைச் சாறினால் அவரது திருமேனி பதப்படுத்தப் படுவதால், இன்றும் அவர் உயிருடன் அமர்ந்திருப்பதுபோல் காட்சிதருகிறார்.
ஸ்ரீராமானுஜர், பக்தர்களுக்கருளிய எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்தால் எல்லா காலங்களிலும் சுகம் காணலாம். இறுதிக்காலத்தில் வைகுண்டத்தில் ஓரிடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.