டேக்ரி மாதா மந்திர்...

இந்த ஆலயம் மத்தியப் பிரதேசத்திலிருக்கும் தேவாஸ் என்னும் இடத்தில் இருக்கிறது. இது இந்தியாவின் மத்திய பகுதியில், இந்தோரிலிருந்து 35 கிலோமீட்டர் துரத்திலும், போபாலிலிருந்து 153 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. மலையின்மீது 300 அடி உயரத்திலுள்ள இந்த கோவில் இருக்கும் பகுதிக்கு மால்வா என்று பெயர்.

madha

தேவாஸில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியப் பணம் அச்சடிக்கப்படும் இடங்களில் தேவாஸும் ஒன்று.

Advertisment

இந்த டேக்ரி மாதா மந்திர் 52 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சதிதேவியின் குருதி சிந்திய இடம் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் மா துளஜா பவானி, மா சாமுண்டாதேவி ஆகிய இரு தேவிகள் உள்ளனர்.

சரித்திரப் புகழ்பெற்ற இந்த ஆலயத்துக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

இந்த கோவிலில் 410 படிக்கட்டுகள் இருக்கின்றன. மேலே செல்வதற்கு சாலை வசதியும் உண்டு. வாகனங் களில் பயணிக்கலாம்.

Advertisment

தேவாஸின் பழைய பெயர் தேவாஸினி. அதற்குப் பொருள்- தேவர்கள் வசித்த இடம் என்பது. இந்த ஆலயத்திலிருக்கும் அன்னையர் இருவரும் உயிருடன் இருப்பதைப்போலவே காட்சி யளிக்கிறார்கள்.

இங்கு பைரவர் ஆலயமும் இருக்கிறது. அன்னை துளஜா பவானியை "படிமா' என்றும், சாமுண்டா தேவியை "சோட்டிமா' என்றும் மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள். இவர்களிருவரும் சகோதரிகள் என்பது வரலாறு.

madha

ஒரு காலத்தில் இந்த சகோதரிகள் இங்கு வசிக்கும்போது இருவரும் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொண்டு மலையைவிட்டுப் புறப்படத் தீர்மானித்திருக்கிறார்கள். அப்போது படிமா பூமியை நோக்கி இறங்கியிருக்கிறாள். சோட்டிமா தான் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கும்போது அங்கு அனு மனும் பைரவரும் வந்திருக்கிறார்கள். தேவிகளை வணங்கிய இருவரும் "நீங்கள் எங்கும் செல்லக்கூடாது. இங்கேயே இருந்து அருளவேண்டும்' என்று விண்ணப்பித்தனர்.

அவர்கள் கூறும் நேரத்தில் படிமா என்ற துளஜா பவானியின் உடலின் பாதிப்பகுதி மண்ணுக்குள் சென்றுவிட்டது. எனவே இந்த ஆலயத்தில் அதே தோற்றத்தில் காட்சி யளிக்கிறாள் துளஜா பவானி.

இங்கு வருபவர்கள் இந்த இரு சகோதரிகளையும் பக்திப் பரவசத்துடன் வணங்கி, பைரவரையும் வழிபடுகிறார் கள். நவராத்திரிக் காலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இங்கு வருகிறார் கள். அப்போது விசேஷ பூஜைகள் நடக் கின்றன.

சக்தியின் கோபத்தைத் தணிப்பதற்கு சிவன் முயற்சித்த கதை நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், இந்த இடத்தில் தேவியின் கோபத்தைப் பார்த்து ஆஞ்சனேயர் பயந்திருக்கிறார். அந்த பயத்துடன், அவர் தேவியை பக்திப் பெருக்கெடுக்க வணங்கிய கதையை இந்த ஊர் மக்கள் இப்போதும் பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர்.

விக்ரமாதித்த மன்னரின் தம்பி பரத்ஹரி இங்கு தவம் செய்தாராம். இந்த ஆலயம் எப்போது கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்று இல்லை. துளஜா பவானியை மராட்டிய மன்னர் கள் உண்டாக்கினார்

கள் என்று கூறப்படு கிறது. அவர்கள் அவளைத் தங்களின் குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.

இந்த தேவியரின் சிலைகள் ஒன்பது அடி உயரம் கொண்டவை. 1876-ஆம் ஆண்டில் "வார்த்தா லஹரி' என்னும் பத்திரிகையில் இந்த ஆலயத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இங்கு ஆஞ்சனேயருக்கும் ஒரு சந்நிதி உண்டு.

இந்த கோவில் தாரா ராஜே என்ற குவாலியர் மன்னரின் சகோதரியால் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. அவள் தேவாஸின் அரசரான இரண்டாம் கிருஷ்ணாஜி புவார் என்பவரின் மனைவி.

"டேக்ரி' என்றால் மலையின் உச்சி என்று பொருள். இந்த ஆலயத்திற்குச் செல்பவர்கள் இந்தோர் ரயில் நிலையத்தில் இறங்கலாம். உஜ்ஜயினியிலிருந்து 34 கிலோமீட்டர் தூரத்தில் தேவாஸ் இருக்கிறது.

சென்னையிலிருந்து போபாலுக்கு தினமும் ரயில் இருக்கிறது. இந்தோருக்கு வாரத்திற்கு இரு நாட்கள் ரயில் உள்ளது. பயண தூரம் 1,743 கிலோமீட்டர். பயண நேரம் 30 மணி. அகல்யா நகரி எக்ஸ்பிரஸில் சென்றால் தேவாஸிலேயே இறங்கிக்கொள்ளலாம்.

போபாலிருந்து சுல்ஜாபூர், உஜ்ஜயினி வழியாக தேவாஸுக்குச் செல்லலாம். ராமேஸ் வரத்திலிருந்து அஜ்மீர் செல்லும் அஜ்மீர் ஹம்ஸஃபர் துரித ரயிலும் தேவாஸ் செல்லும்.

முழுமையான பக்தி உணர்வுடன் தங்களை நாடிவரும் பக்தர்களின் குறைகளையும், கஷ்டங் களையும் மா துளஜா பவானியும், மா சாமுண்டா தேவியும் நிச்சயம் நீக்கி, அனைவருக்கும் சந்தோஷத்தையும் மலர்ச்சியையும் அளிக்கிறார் கள் என்பது மக்களின் நம்பிக்கை