Advertisment

ஆமைகள் புகாத வீடு! -யோகி சிவானந்தம்

/idhalgal/om/turtle-proof-house-yogi-sivananda

லி முற்றிவிட்டது என்பதற்கான பல்வேறு விஷயங்கள். பூமிப் பந்தில் மனித இனத்தால் அரங்கேறிக்கொண்டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பூகம்பம் எனும் பிரளயம் ஏன் வனங்களிலோ, மலைப் பகுதியிலோ, குமுறிக்கொண்டிருக்கும் எரிமலையுள்ள பகுதிகளிலோ நிகழவில்லை? இப்படி ஒரு கேள்வியை நமக்குள்ளே கேட்டுப் பார்க்கவேண்டும்.

Advertisment

வளங்களிலுள்ள ஐந்தறிவும், அதற்குக் குறைவான உயிரினங்களும் பூகம்பத்தி னால் பாதிக்கப்பட்டதா? ஏன் ஆறறிவென்று சொல்லிக்கொள்ளும் மனித இனத்திற்கு இத்தகைய அழிவு ஏற்படுகிறது? தவறை நாம் செய்துவிட்டு பழியை மட்டும் ஏன் கடவுள்மீது போடுகிறோம்? வானளாவிய கட்டடங்களையும், தரமில்லாத கட்டடங் களையும், தகுதியற்ற இடங்களில் கட்டப் படும் கட்டடங்களையும் கடவுள் கட்டச் சொன்னாரா?

நம் தமிழ்நாட்டில் முறையான, சரியான பரமாரிப்பில்லாமல் இருக்கும், சுமார் 1,000 ஆண்டுகளுக்குமுன்பு கட்டமைக்கப் பட்ட நமது மிகப்பழமையான கோவில்கள் எப்படி இன்னமும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது? இதை மனித இனம் யோசிக்கவேண்டாமா? இங்கே வியாபாரிகள் கொஞ்சமும் மனிதாபிமானமற்ற முறையில் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட்டில் கஞ்சாவைக் கலந்து விற்பனை செய்வதாக செய்தியைப் பார்க்கும்போது மனம் மிகுந்த வேதனையடைகிறது. வெளிநாட்டில் விந்துதானம் என்று இப்போது புது வியாபாரம் தொடங்கி யிருக்கிறது. இதற்குக் கூலியாக 85 ஆயிரம் ரூபாய் இளைஞர் களுக்கு வழங்குவதாக அண்மைச் செய்தியைப் பார்த்து மிகவும் மனம் உடைந்தேவிட்டேன். நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்.

துருக்கியில் சுமார் 30 வணிக வளாக கட்டடங்கள் 17 நொடியில் தரைமட்டமானது.

இந்தக் கட்டடங்களுக்குச் சொந்தக்காரர் இன்று ஒரு ரொட்டித் துண்டுக்கு கையேந்தி நின்றுகொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு நமக்கு எதை உணர்த்துகிறது? எதுவும் நிரந்தரமில்லை... எதுவும் நமக்கு சொந்தமானதுமில்லை. நாம் எல்லாரும் பிரபஞ்ச பேராற்றலான சிவப்பரம்பொருளுக்கு சொந்தமானவர்கள். இதை நாம் உணரவேண்டும். நமது எண்ண

லி முற்றிவிட்டது என்பதற்கான பல்வேறு விஷயங்கள். பூமிப் பந்தில் மனித இனத்தால் அரங்கேறிக்கொண்டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பூகம்பம் எனும் பிரளயம் ஏன் வனங்களிலோ, மலைப் பகுதியிலோ, குமுறிக்கொண்டிருக்கும் எரிமலையுள்ள பகுதிகளிலோ நிகழவில்லை? இப்படி ஒரு கேள்வியை நமக்குள்ளே கேட்டுப் பார்க்கவேண்டும்.

Advertisment

வளங்களிலுள்ள ஐந்தறிவும், அதற்குக் குறைவான உயிரினங்களும் பூகம்பத்தி னால் பாதிக்கப்பட்டதா? ஏன் ஆறறிவென்று சொல்லிக்கொள்ளும் மனித இனத்திற்கு இத்தகைய அழிவு ஏற்படுகிறது? தவறை நாம் செய்துவிட்டு பழியை மட்டும் ஏன் கடவுள்மீது போடுகிறோம்? வானளாவிய கட்டடங்களையும், தரமில்லாத கட்டடங் களையும், தகுதியற்ற இடங்களில் கட்டப் படும் கட்டடங்களையும் கடவுள் கட்டச் சொன்னாரா?

நம் தமிழ்நாட்டில் முறையான, சரியான பரமாரிப்பில்லாமல் இருக்கும், சுமார் 1,000 ஆண்டுகளுக்குமுன்பு கட்டமைக்கப் பட்ட நமது மிகப்பழமையான கோவில்கள் எப்படி இன்னமும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது? இதை மனித இனம் யோசிக்கவேண்டாமா? இங்கே வியாபாரிகள் கொஞ்சமும் மனிதாபிமானமற்ற முறையில் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட்டில் கஞ்சாவைக் கலந்து விற்பனை செய்வதாக செய்தியைப் பார்க்கும்போது மனம் மிகுந்த வேதனையடைகிறது. வெளிநாட்டில் விந்துதானம் என்று இப்போது புது வியாபாரம் தொடங்கி யிருக்கிறது. இதற்குக் கூலியாக 85 ஆயிரம் ரூபாய் இளைஞர் களுக்கு வழங்குவதாக அண்மைச் செய்தியைப் பார்த்து மிகவும் மனம் உடைந்தேவிட்டேன். நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்.

துருக்கியில் சுமார் 30 வணிக வளாக கட்டடங்கள் 17 நொடியில் தரைமட்டமானது.

இந்தக் கட்டடங்களுக்குச் சொந்தக்காரர் இன்று ஒரு ரொட்டித் துண்டுக்கு கையேந்தி நின்றுகொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு நமக்கு எதை உணர்த்துகிறது? எதுவும் நிரந்தரமில்லை... எதுவும் நமக்கு சொந்தமானதுமில்லை. நாம் எல்லாரும் பிரபஞ்ச பேராற்றலான சிவப்பரம்பொருளுக்கு சொந்தமானவர்கள். இதை நாம் உணரவேண்டும். நமது எண்ணங்களை மேம்படுத்தவேண்டும்.

Advertisment

இது ஒருபுறம் இருக்க, நவீன விஞ்ஞானம் புதிய வகை ரோபோ ஒன்றை கண்டு பிடித்துள்ளது. "ஆழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹப் தர்க்ஷர்ற் 65' எனும் புதிய ரோபோ வீடுகளிலும், அலுவலங் களிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது எவ்வளவு மோசமான விளைவு களை மனித சமுதாயத்திற்கு ஏற்படுத்தப் போகிறது என்பதை இப்போது யாரும் சொல்லமுடியாது. மனிதவளம் மிகமோசமாக பாதிக்கப்படும். கேட்டால் வீட்டு வேலைக்கு ரோபோக்களைப் பயன்படுத்த என்று பதில் வருகிறது. எது வீடு என்ற புரிதல் நமக்கு இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி...!

அத்தகைய தன்மை எந்த வீட்டில் இருக்கிறது என்பதைப் பற்றி சங்ககாலப் புலவர் ஔவையார் கூறுவதைப் பார்க்கலாம்.

"மனத்தோடு உறுபுத்தி ஆங்காரம் சித்தம்

அனைத்திலும் இல்லை அது.'

முக்தி என்பது என்ன? மோட்ச வீடாகிய பேரின்பமே அது. அதையடைய எண்ணம், சொல், செயல், அறிவு மட்டும் போதாது. உள்ளன்புடன்கூடிய பக்தியே பேரின்ப வீட்டை அடையக்கூடிய கருவியாகும்.

நாம் குடியிருக்கும் வீட்டிற்குள் ஆமை புகுந்துவிட்டால் அதனை மிகப்பெரிய சாபக் கேடாகவும், அத்தகைய வீடு உருப் புடாது என்றும் மூடநம்பிக்கை விதைக்கப் பட்டிருக்கிறது. இப்போது வீட்டிற்குள் ரோபோ வந்துவிட்டது. வீட்டிற்குள்- அதாவது உடம்பெனும் வீட்டிற்குள் உள்ளத்தில் எந்தவகையான ஆமையெல்லாம் குடியிருக்கக்கூடாது என்பதைப் பற்றியும், உடலும் மனமும் உள்ள வீட்டில் புகக் கூடாத ஆமைகள் பற்றியும் திருவள்ளுவர் கூறியுள்ளதைப் பார்க்கலாம்.

திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள் 133 அதிகாரங்களைக் கொண்டது. அதில் 16 அதிகாரங்களில் வீட்டினுள் புகக் கூடாத ஆமைகளைப் பற்றி பட்டியலிட்டுள்ளார்.

tt

1. அழுக்காறாமை- பொறாமை.

2. வெஃகாமை- பிறர் பொருள்மீது ஆசைப்படாதிருத்தல்.

3. புறங்கூறாமை- பிறரைப் பற்றி தீயன பேசாதிருத்தல்.

4. பயனில் சொல்லாமை- வீண் சொற்களை சொல்லாதிருத்தல்.

5. கள்ளாமை- பிறர் பொருளை வஞ்சகமாகக் கவர நினைத்தல்.

6. வெகுளாமை- சினம் (கோபம்) கொள்ளாதிருத்தல்.

7. இன்னா செய்யாமை- பிறருக்குத் தீங்கு செய்யாதிருத்தல்.

8. கொல்லாமை- எந்த உயிரையும் கொலை செய்யாதிருத்தல்.

9. கல்லாமை- கல்வி இன்மையின் தீமை.

10. வெருவந்த செய்யாமை- குடிமக்கள் அஞ்சி நடுங்கும் செயல்களை செய்யாமை.

11. கள் உண்ணாமை- உணர்வைக் கெடுக்கும் மது அருந்தாமை.

12. பெரியாரைப் பிழையாமை- பெரியாரை இகழ்ந்து தவறு செய்யாமை.

13. பிறனில் விழையாமை- பிறன் மனைவியை விரும்பாமை.

14. பொச்சாவாமை- கடமைகளை மறத்தல்.

15. இடுக்கண் அழியாமை- துன்பம் நேர்ந்தபோது மனம் கலங்காமை.

16. அவை அஞ்சாமை- அச்சம் இல்லாமை.

இத்தகைய ஆமைகள் நமது உடலெனும் வீட்டிலுள்ள உள்ளத்தினுள் குடியிருந்தால் அந்த வீடு உருப்புடாது என்பதே இந்த குறள்கள் உணர்த்துவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதைவிடுந்து ஆமை புகுந்தால் வீடு விளங்காது என்பது மிக மோசமான மூடநம்பிக்கையாகும். சத்திய யுகத்தில் மகாவிஷ்ணு எடுத்தது ஆமை அவதாரம் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

இனிவரும் சந்ததிகளுக்கு மேற்சொன்ன 16 வகை ஆமைகள் தேவையில்லை. "ஆழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹப் தர்க்ஷர்ற் 65' எனும் நவீன ரோபோ வீட்டிற்குள் புகுந்தாலே போதும். நமது மானிட உடலெனும் விலைமதிப்பில்லாத, விலைமதிக்க முடியாத மானுடவீடு நோய்வாய்ப்பட்டு கெட்டு அழிந்துவிடும். நமது சித்தர் பெருமக்கள்தான் முதன் முதலில் அணுவைக் கண்டு உலகுக்கு உணர்த்தியவர்கள். அப்படிப்பட்ட நமக்கு அணுகுண்டு கண்டுபிடிக்கத் தெரியாதா? அழிவைத் தரும் எதையும் நமது முன்னோர் கள் நமக்கு சொல்லித் தரவில்லை. ஏனென் றால் நமக்கு ஜீவகாருண்யத்தைப் பரிசாக வழங்கியுள்ளனர். பத்தாயிரம் ஆண்டு களுக்குமுன்பே கொல்லாமை பற்றி திருமூலரும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலால் மறுத்தலைப் பற்றி, திருவள்ளுவரும், 200 ஆண்டுகளுக்குமுன்பு உயிர்வதைப் பற்றி திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலாரும் அருளிச் சென்றுள்ளதைப் படித்து நம் மனித இனம் நமது மனித வளத்தைப் பண்படுத்திக் கொள்ளவேண்டும்.

உள்ளத்தை தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே உடலை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ளும். உடம்பினுள்ளே பரம்பொருள் இருப்பதைப் பற்றி ஔவைக் குறள் கூறுவதைப் பார்க்கலாம்.

"உள்ளமே பீடம் உணர்வே சிவலிங்கம்

தெள்ளியர் அர்ச்சிக்கு மாறு.'

சிந்தையில் தெளிந்தவர்களுக்கு, அவர்கள் அர்ச்சிக்க அவர்களது உள்ளமே சிவலிங்கம் இருக்கும் இடமாகும். உள்ளுணர்வே சிவலிங்கமாகும்.

மேலும் ஔவைக் குறள் கூறுவதைப் பார்க்கலாம்.

"விண்ணிறைந்து நின்ற பொருளே உடம்பதன்

உண்ணிறைந்து நின்ற ஒளி.'

வானமெங்கும் நிறைந்திருக்கும் சிவப் பரம்பொருள் ஈசனே. அவனே உடலின் உள்ளே பரவியிருக்கும் ஒளியாகவும் இருக்கின்றான். இந்த தத்துவத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பக்தி சரியாக இருக்கும்பட்சத்தில் துன்பம் எல்லாம் தொலைந்து போகும். அறச் செயல்களில் ஈடுபடுபவர்களின் உள்ளத்தில் இறைவன் எப்போதும் குடிகொண்டிருப்பான். துன்பங்கள் நெருங்காது. சிவப் பரம்பொருளை நெஞ்சார நினைப்பவனை நொடியில் உலகே வியக்கும்வண்ணம் உயர்த்திப் பிடித்துக் காட்டிடுவான். அதற்கு ஒவ்வொரு மனிதனுக் குள்ளேயும் அன்பு, கருணை, இரக்கம், பரிவு, அறம் எனும் ஏதேனும் ஒன்றாவது இருக்கவேண்டும்.

மனிதனின் உள்ளமெனும் வீட்டில், திருவள்ளுவர் குறிப்பிட்ட ஆமைகளுக்கு இடம்கொடுக்கக் கூடாது. அப்படி ஒருவன் இருந்துவிட்டால், அவனுக்கு அத்தனை ஐஸ்வர்யங்களையும் ஈசன் அருளாசியாக வழங்கிவிடுவான். திருமந்திரம் கூறுவதைப் பார்க்கலாம்.

"அதிபதி செய்து அளகை வேந்தனை

நிதிபதி செய்த நிறைதவ நோக்கி

அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்

இதுபதி கொள்என்ற எம்பெரு மானே...'

காம்பி- நாட்டு அரசன் வேள்வி தத்தனுக்கு மகனாகப் பிறந்து, வறுமையுற்ற குணநிதி. சிவனருளால் குபேரனாகிச் செல்வச் சிறப் படைந்து, அளகாபுரிக்கு அரசனாக குபேர பட்டணத்தையே அவனுக்குரியதாக்கினான். வறியவனை வானவர் செல்வன் ஆக்கியவன், மூவுலகச் செல்வ வளத்துக்கெல்லாம் உரியவனாக்கியவன் சிவப்பரம்பொருளே! எனவே அவனைப் பணிவோர், அவன் அருளைப் பெறுவோர் அமராபதி அரசர் ஆவர் என்பதுதான் இதன் உட்பொருளாகும்.

எனவே மனித சமுதாயத்தில் இருக்கும் துவேஷ மனப்பான்மை, விரோத எண்ணம், இரக்கமற்ற சிந்தனை- இது போன்ற எண்ணங்கள் முற்றிலுமாக களைந் தெறியப்பட வேண்டும். திருவள்ளுவர் குறிப்பிடும் ஆமைகளை வீட்டிற்குள்- அதாவது உள்ளமெனும் வீட்டிற்குள் விடாமல் விரட்டி யடிக்க வேண்டும். உண்மையான தவத்தினை நாம் உணர்ந்து அறிந்துகொண்டால் சிவப் பரம் பொருளை கண்டுவிடமுடியும். அவர்கள் மனதில் அறச்செயல்கள் மேலோங்கி நிற்கும்போது எல்லாம் சிவமயமாகும். சர்வம் சக்திமயமாகும். திருமந்திரச் சிற்பி அருளியுள்ளதைப் பார்க்கலாம்...

"விளைவுஅறிவார் பண்டை மெய்த்தவம் செய்வார்

விளைவுஅறிவார் பண்டை மெய்உரை செய்வார்v விளைவுஅறிவார் பண்டை மெய்அறம் செய்வார்

விளைவுஅறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே.'

மேலான தவத்தின் பயனை உணர்ந்த வர்கள் உண்மையான தவம்செய்ய முயல் வார்கள். உண்மையான தவப்பயனை அறிந்தவர்கள் தொன்றுதொட்டு வரும் அறிவுரைகளின் பொருளுணர்ந்து அதன்படி நடந்தொழுகுவர். உண்மைத் தவத்தின் மேலான பயனை உணர்ந்தவர்கள் நலம் பயக்கக்கூடிய நல்லதான அறச்செயல் களையே மேற்கொள்வார்கள். இப்படிப்பட்ட தவத்தின் சிறப்பை உணர்ந்தறிந்தவர்கள், இப்பூவுலகிலும் வானுலகிலும் மேலானவர்களாவர்.

தொன்றுதொட்டுவரும் அறிவுரைகள் என்று திருமூலர் குறிப்பிகின்றார். அதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை மருத்துவஞானி திருவள்ளுவர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

"அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன்அறிந்து தேர்ந்து கொளல்.'v அறத்தின் இயல்பையறிந்து, தன்னைவிட மூத்த அறிவுடையவரது நட்பை, அதன் அருமையை உணர்ந்து, பெற்றுக்கொள்ளும் வகையறிந்து, தழுவிக் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறு நம் முன்னோர்கள் காட்டிய நன்னெறிகளைப் பின்பற்றி நல்வழி நடப் போமானால் துன்பங்கள் நம்மை நெருங்க விடாமல் சிவப் பரம்பொருள் நம்மைக் காத்துக் கொள்ளும். ஆமைகள் நுழையாத நல் எண்ணங் களோடு உண்மையான பக்தியில் திளைப் போம். அன்பே உருவான அரனைத் தொழுவோம். பரசிவத்தின் அருட்கடாட்சத் தைப் பெறுவோம்.

om010423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe