Advertisment

மகத்தானதெல்லாம் அருளும் திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமாள்! - எஸ்.பி. சேகர்

/idhalgal/om/tiruvidaimarudur-mahalinga-perumal-great-all-grace-sb-shekhar

யிர்க் கொலையில் விளையும் பாவங்கள் பல. வாயில்லா ஜீவன்களைக் கொல்வது பாவம். அதிலும் மனிதக் கொலை செய்யப்படும்போது மனிதன் அனுபவிக்கும் வேதனையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதனால்தான் மனிதனை மனிதன் கொலைசெய்வது மிகக்கொடியது என்கிறார்கள். தெரிந்தோ-தெரியாமலோ இப்படிப்பட்ட மனித கொலை, பசுவதை, மிருகவதை போன்ற அனைத்து பிராணிகளின் வதையும் செய்தால் பிரம்மஹத்திதோஷ பாவத்திற்கு ஆளாகிறார்கள்.

Advertisment

இந்த தோஷத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல இவர்களின் வாரிசுகள், வழித்தோன்றல்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் கணவன்- மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியம் இல்லாமை, புத்திர சோகம் இப்படி பலவித சோதனைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

Advertisment

பல தலைமுறைகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் யாராவது இதுபோன்று உயிர்வதை செய்த பாவம் நம் சந்ததிகளைத் தொடரும். முன்னோர்கள் செய்த பாவத்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரம்மஹத்தி தோஷமே அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத் திற்கு பெரும் தடையாக உள்ளது. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடப்பதைத் தடுக்கிறது.

ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் கோவில்கொண்டுள்ள எம்பெருமான் மகாலிங்கேஸ்வரரை வழி பட்டால், அதிலிருந்து விடுபட்டு நல்ல வாழ்க்கையை அடைவார்கள்.

பாண்டிய வம்சா வழியில் வந்தவர் வரகுண பாண்டியன். இவர் ஒருமுறை காட்டிற்கு வேட்டைக்குச் சென்றார். சென்று திரும்பும்போது இரவு நேரம் ஆகிவிட்டது. அரசன் தனது குதிரைமீது ஏறி அரண்மனை

நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கும்போது வழியில் ஓர் அந்தணர் படுத்துத் தூங்கிக்கொண்டி ருந்தார். அவர் படுத்திருப்பது தெரியாது அரசனின் குதிரை அவரை மிதித்ததால் அந்தணர் இறந்து போனார். அரசருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. வரகுணபாண்டியன், மதுரை இறைவன் சோமநாதரை தினசரி வணங்கி தமக்கு ஒரு வழிகாட்டுமாறு தொடர்ந்து வேண்டிவந்தார்.

ஒருநாள் இரவு மன்னருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் தோன்றிய சோமசுந்தரக் கடவுள், "மன்னா உமக்கு பிரம்மஹத்திதோஷம் பற்றிக் கொண்டது. இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டுமானால் திருவிடைமருதூர் சென்று அங்கே மகாலிங் கேஸ்வரராக கோவில் கொ

யிர்க் கொலையில் விளையும் பாவங்கள் பல. வாயில்லா ஜீவன்களைக் கொல்வது பாவம். அதிலும் மனிதக் கொலை செய்யப்படும்போது மனிதன் அனுபவிக்கும் வேதனையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதனால்தான் மனிதனை மனிதன் கொலைசெய்வது மிகக்கொடியது என்கிறார்கள். தெரிந்தோ-தெரியாமலோ இப்படிப்பட்ட மனித கொலை, பசுவதை, மிருகவதை போன்ற அனைத்து பிராணிகளின் வதையும் செய்தால் பிரம்மஹத்திதோஷ பாவத்திற்கு ஆளாகிறார்கள்.

Advertisment

இந்த தோஷத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல இவர்களின் வாரிசுகள், வழித்தோன்றல்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் கணவன்- மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியம் இல்லாமை, புத்திர சோகம் இப்படி பலவித சோதனைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

Advertisment

பல தலைமுறைகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் யாராவது இதுபோன்று உயிர்வதை செய்த பாவம் நம் சந்ததிகளைத் தொடரும். முன்னோர்கள் செய்த பாவத்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரம்மஹத்தி தோஷமே அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத் திற்கு பெரும் தடையாக உள்ளது. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடப்பதைத் தடுக்கிறது.

ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் கோவில்கொண்டுள்ள எம்பெருமான் மகாலிங்கேஸ்வரரை வழி பட்டால், அதிலிருந்து விடுபட்டு நல்ல வாழ்க்கையை அடைவார்கள்.

பாண்டிய வம்சா வழியில் வந்தவர் வரகுண பாண்டியன். இவர் ஒருமுறை காட்டிற்கு வேட்டைக்குச் சென்றார். சென்று திரும்பும்போது இரவு நேரம் ஆகிவிட்டது. அரசன் தனது குதிரைமீது ஏறி அரண்மனை

நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கும்போது வழியில் ஓர் அந்தணர் படுத்துத் தூங்கிக்கொண்டி ருந்தார். அவர் படுத்திருப்பது தெரியாது அரசனின் குதிரை அவரை மிதித்ததால் அந்தணர் இறந்து போனார். அரசருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. வரகுணபாண்டியன், மதுரை இறைவன் சோமநாதரை தினசரி வணங்கி தமக்கு ஒரு வழிகாட்டுமாறு தொடர்ந்து வேண்டிவந்தார்.

ஒருநாள் இரவு மன்னருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் தோன்றிய சோமசுந்தரக் கடவுள், "மன்னா உமக்கு பிரம்மஹத்திதோஷம் பற்றிக் கொண்டது. இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டுமானால் திருவிடைமருதூர் சென்று அங்கே மகாலிங் கேஸ்வரராக கோவில் கொண்டுள்ள என்னை நீ வணங்கவேண்டும்.

அப்போதுதான் உன்னைப் பிடித்துள்ள பிரம்மஹத்தி தோஷம் விலகும்' என்று கூறினார்.

ff

அந்த நேரத்தில் சோழ அரசர் பாண்டிநாட்டுமீது படையெடுத்துச் வந்தார். இந்தத் தகவலறிந்த வரகுணபாண்டியன், சோழ மன்னனை எதிர்கொண்டு படையெடுத்துச்சென்று சண்டையிட்டு சோழநாட்டைப் பிடித்தார். சோழதேசம் தன் கைக்கு வந்ததும் வரகுண பாண்டியன் உடனடியாகப் புறப்பட்டு திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தார். ஆலயத்திற்குள் நான்கு வாயில்களில் கிழக்கு வாயில் வழியாக அரசன் கோவிலுக்கு உள்ளே சென்றார். அப்போது அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்திதோஷம் விலகியது. இறைவனின் குரல் அசரீரியாக ஒலித்தது. "மன்னா என்னை வழிபட்டு தோஷநிவர்த்தி அடைந்துவிட்டாய். நீ வந்த வழியாக மீண்டும் செல்லவேண்டாம், மேற்கு வாசல் வழியே வெளியே சென்றுவிடு' என்று ஆணையிட்டார். அதன்படி தோஷ நிவர்த்தி பெற்ற வரகுணபாண்டியன் மேற்கு வாசல் வழியாக புறப்பட்டு தனது பாண்டி நாட்டுக்குச் சென்றுவிட்டார்.

அதன் அடிப்படையில் தற்போதும் பிரம்மஹத்தி தோஷநிவர்த்திக்காக கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் வரும் பக்தர்கள் தோஷநிவர்த்தி முடிந்ததும் இறைவனையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு மேற்கு, வடக்கு, தெற்கு, இப்படி மூன்று வாசல் வழியாக வெளியே செல்கிறார்கள்.

இவ்வாலயம் சுமார் 1,200 ஆண்டு களுக்குமுன்பு உருவான பழமையான ஆலயம். வரகுணபாண்டியன் மட்டுமல்ல, வீரசேனன் என்ற மன்னனும் இவ்வாலயம் வந்து இறைவனை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றுள்ளார். இவ்வாலய இறைவனை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கரூர்தேவர், பட்டினத்தார், அருணகிரியார், காளமேகப் புலவர் இப்படி பல்வேறு புலவர்கள், ஞானிகள் பாடி யுள்ளனர். பத்ரகிரியார் முக்தி யடைந்த தலம் இது. இவ் வாலய கருவறையின் பின்புறம் இறைவனும் இறைவியும் கைலாய காட்சி தருகிறார்கள். இதனைத் தரிசிப்பவர்கள் கைலாய மலையை வலம் வந்த பலனை அடை கின்றனர்.

ஒருமுறை அகத்திய முனிவர் உட்பட பல முனிவர்கள் திருவிடைமருதூர் வந்தடைந்து உமாதேவியின் நேரடி தரிசனம் பெறவேண்டும் என்று முடிவுசெய்து தவம்செய்தனர். உமா தேவி காட்சி கொடுக்கவில்லை. அப்போது கைலாயத்திலிருந்த பார்வதி, சிவனிடம் "ஐயனே, முனிவர்கள், ரிஷிகள் எம்மைநோக்கி தவமிருக்கிறார்கள். அவர்களுக்குக் காட்சி கொடுப்பது வழக்கம். இப்போது அங்கே சென்று அவர்களுக்கு காட்சி கொடுக்க முடியாமல் எனக்குள் ஒரு தடை ஏற்படுகிறது. அதற்கு என்ன காரணம்? நான் என்ன குற்றம் செய்தேன்?' என்று சிவனிடம் கேட்டார்.

இதைக் கேட்ட சிவபெருமான், "கவலை வேண்டாம். நீ எனக்கு முன்னால் அங்கு செல்.

நான் அடுத்து உன்னைத் தொடர்ந்து வருகிறேன்' என்று விடைகொடுத்து அனுப்பி னார். அம்பிகை, திருவிடைமருதூர் சென்று சேர்வதற்கு முன்பு சிவபெருமான் திருவிடை மருதூர் வந்து தங்கியிருந்தார். இங்கே சிவ பெருமான் முதலில் ஜோதி வடிவமாகக் காட்சியளித்தார். அப்போது முனிவர் கள் உமாதேவியுடன் இணைந்து காட்சியளிக்கு மாறு வேண்டினர். அதன்படியே உமையும் உமையொருபாகனும் காட்சியளித்தனர். பிறகு லிங்க வடிவமாக மாறி காட்சிதந்தார். எனவே இங்குள்ள மூலவர் சிவலிங்கத்தை ஒருநாள் பூஜை செய்தாலும் கல்வி, செல்வம் முதலிய பெரும் செல்வங்கள் பக்தர்களுக்கு வழங்குவோம் என்று வரமளித்தனர் அம்மையும் அப்பனும். அப்படி காட்சி கொடுத்த அந்த இடத்தில்தான் மகாலிங்கேஸ் வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இத்தலம் சந்திர நட்சத்திரத்திற்கு உரிய தலமாகும். 27 நட்சத்திரங்களும் இவ்வாலய இறைவனை வழிபட்டு அருள்பெற்றதால் நட்சத்திர தோஷநிவர்த்தி தலமாகவும் விளங்கு கிறது. 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங் களாக ஆடவல்லான் மண்டபத்தில் பக்தர் களுக்காக காட்சியளிக்கின்றனர். காசிக்கு நிகரான இவ்வாலயத்துக்கு சோழ, பாண்டியர் கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என பல மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். இவ்வாலயம் வடமொழியில் மத்திய அர்ச்சனம் என்று பெயர் வழங்கப் படுகிறது. காரணம் வடக்கே மல்லிகார்ஜுனம் (ஸ்ரீசைலம்), தெற்கே ஸ்புடார்ச்சுனம் (திருப்புடைமருதூர்) இவ்வாலயங்களுக்கு மத்தியில் இடையில் அமைந்துள்ளதால் மத்திய அர்ச்சனம் என்று வழங்கப்படுகிறது. இரண்டு மருதூர்களுக்கும் இடையில் அமைந் துள்ளதால் இந்த ஊருக்கு இடைமருதூர் என்று பெயர் விளங்கி பிறகு திருவிடை மருதூர் என அழைக்கப்படுகிறது. இவ் வாலயத்தில் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் தவநிலையில் காட்சி தருகின்றார். இந்த அன்னையை யோகிருந்த பரமேஸ்வரி என்றும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர். ஒருமுறை மார்க்கண்டேய முனிவர் ஆலய தரிசனத்துக் குக் கிளம்பியவர் இங்கும் வந்தார். இவ்வாலய இறைவனை வழிபடும்போது அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கும்படி மார்க் கண்டேயர் வேண்டினார். அவரது விருப்பத்தின்படி இறைவனும் இறைவி யும் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்துள்ளனர்.

அதேபோல் பாண்டிய நாட்டு அரசனான சித்திர கீர்த்தி, சுகுணை என்பவளை மணந்து தன் நாட்டை ஆட்சி செய்துவந்தார். ஆனால் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லை. அந்த மன்னன் சாபாலி முனிவரை தரிசித்து தங்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்க வழிகேட்டார். அந்த முனிவர் இவ்வாலயம் சென்று தீர்த்தத்தில் நீராடி மருதவாணப்பெருமானை வழிபடுங்கள். உங்களுக்கு மகப்பேறு கிட்டும் என்று வழிகூறினார். அதன்படி சித்திரகீர்த்தி, சுகுணை தம்பதி இவ்வாலயம் வந்து இறைவனை வழிபட்டனர். அவர் களுக்கு விரைவிலேயே குழந்தைப்பேறு கிடைத்தது. சந்தோஷத்தில் சித்திரகீர்த்தி மன்னன் பங்குனித் திருநாளில் மகாலிங்கப் பெருமானுக்கு திருவிழா நடத்த ஏற்பாடு செய்தார்.

கோவில் அமைப்பு, வழிபாட்டு முறைகளைப் பார்ப்போம்.

மகாலிங்கப் பெருமான் திருக்கோவில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது. கோவிலரு கில் காருண்ய தீர்த்தம் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்துள்ளது. ஏழு கோபுரம், ஏழு பிரகாரங்கள் கொண்டு விளங்குகின்றது. கோவிலின் கிழக்கு வாசல்வழியாக உள்ளே செல்லும்போது கோபுர வாசலின் தென்புறம் விநாயகர், வடபுறம் வள்ளி- தெய்வானை முருகன், அதற்கு அருகில் பட்டினத்தார் சன்னதியும் உள்ளன. இவர்களை தரிசித்து மேலே நடந்தால் படித் துறை விநாயகர். விநாய கரை வணங்கிச் செல்ல பலிபீடம், கொடிமரம், அடுத்து சுதையாலான மிகப்பெரிய நந்தியை கண்டு தரிசிக்காமல் நம்மால் நகரமுடியாது.

அடுத்து நேரே ஸ்ரீ மகாலிங்கப் பெருமானை வணங்கலாம். பக்தர்கள் நேரேசென்று இறைவன் மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்து பிறகு வடபகுதியில் உள்ள 27 நட்சத்திரங்களையும் (லிங்கங்களாக உள்ளன) வழிபட்டு நவகிரக சன்னதி வணங்கிச் செல்லவேண்டும். மூன்றாம் கோபுரம் அமைந்துள்ள பாண்டியன் கோபுரவாயிலில் சுதையால் செய்யப்பட்ட துவாரபாலகர்கள் வரவேற்கிறார்கள்.

அடுத்து வாயிலின் தென்புறத்தில் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற வரகுண பாண்டியனின் திருவுருவச் சிலை அமைந் துள்ளது. அதையடுத்து அதிகார நந்தி, விநாயகர், அதனைக் கடந்து படிவழியாக கிழக்கு தென்புற மேடையில் பாவை விளக்கு.

எதிர்ப்புறத்தில் சந்திரன், சூரியன், உஷைதேவியுடன் காட்சியளிக்கின்றனர். அடுத்து 63 நாயன்மார்கள் திருமேனிகளை தரிசிக்கலாம். மகாமண்டபத்தில் 12 தூண்கள் உள்ளன. அவை 12-ம் ராசிகளைக் குறிக்கும்வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்து அகஸ்தியர் சிலை. தென்புறத்தில் சப்த கன்னியர்கள் காட்சி தருகின்றனர். தென்மேற்கு மூலையில் சோமாஸ்கந்தர் கருவறை. சன்னதியைச் சுற்றிவரும்போது மருதமரம் கல் சிற்பமாக உள்ளது. அதனருகில் அம்பாளுடன் மருதவாணர் கைலாய காட்சிதருகிறார்.

இதை முடித்து அம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் சட்டநாதர்.

அவரை வணங்கி அம்மன் சன்னதியை அடையவேண்டும். அங்கே பெருநலமா முலையம்மை நின்றகோலத்தில் பக்தர்களுக்கு ஆசிவழங்குகிறார். அம்பிகையின் உருவம் பார்ப்போரை மெய்யுருகச் செய்வதாகும்.

அம்பிகை சன்னதிக்கு அடுத்து மூகாம்பிகை அம்மன் தனிச் சன்னதியில் காட்சிதருகிறார். இவர்களை எல்லாம் வணங்கிமுடித்து தெற்கு அல்லது வடக்கு அல்லது மேற்கு கோபுர வழியாக பக்தர்கள் வெளியே செல்ல வேண்டும்.

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம் திருவாவடுதுறை ஆதீனம் பொறுப்பில் மிகச்சிறப்பாக திகழ்கிறது. மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு, பரிகாரம் செய்ய தனது உறவினருடன் வருகைதந்த கொரக்கை கிராமத்தைச் சேர்ந்த சிவனடியார் சாந்தப்பன், "இப்பிறவியில் செய்த பாவம் அல்லது நமது முன்னோர் கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் தோஷங்களாக மாறி ஒவ்வொரு மனிதரையும் ஆட்டிப்படைக்கிறது. பிரம்மஹத்தி தோஷத்திற்கு மிகச்சிறந்த பரிகாரம் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ் வரர் ஆலய வழிபாடு' என்கிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் சிறப்புபெற்றது திருவிடைமருதூர் மகாலிங் கேஸ்வரர் ஆலயம்.

அமைவிடம்: கும்பகோணம் மயிலாடு துறை சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணம்- மயிலாடுதுறை இரு ஊர்களிலிருந்தும் அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.

வழிபடும் நேரம்: அதிகாலை 5:30 மணி முதல் நண்பகல் 12:30 மணிவரை. மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை. ஆலய தொடர்புக்கு: 9894587616, 9443864352.

om011223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe