Advertisment

பூமணமும் பால்மணமும் அருளும் திருக்கருகாவூர்! - எம். அசோக்ராஜா

/idhalgal/om/tirukarugavur-full-blessings-and-blessings-m-ashokaraja

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் உடனுறை மாதவிவனேஸ்வரர் திருக்கோயில், "கருவாய் உலகுக்கு முன்னே தோன்றிய திருத்தலம்' என்கிறார் திருநாவுக்கரசர்.

Advertisment

திருக்கருகாவூர்- அதாவது கரு, கருகாத ஊர். இத்தல அன்னையை வணங்கினால் சுகப்பிரசவம் கண்டிப்பாக நடக்கும். வயிற்றில் இருக்கும் கருவுக்கும் காப்பாக இருந்து, கருச் சிதைவு ஏற்படாமல் காத்திடுவாள் அம்பிகை.

அதுமட்டுமல்ல; பல வருடம் குழந்தைச் செல்வம் இல்லாத, மருத்துவர்கள் கைவிரித்த தம்பதிகளுக்கும் குழந்தைச் செல்வம் அருள் பவள் இத்தல அம்பிகை. எனவே இந்த அம்பிகைக்கு கரு காத்தநாயகி என்று பெயர். வடமொழியில் கர்ப்பரட்சாம்பிகை.

இத்தலம் அமைந்துள்ள இடம்

அக்காலத்தில் மாதவி வனமாக இருந்தது. மாதவி என்றால் முல்லைக்கொடி. வெட்டாற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. முல்லைக்கொடிகள் நிறைந்த வனமான இப்பகுதியில் ஈசன் சுயம்புவாக அருள்பாலித்ததால் இத்தல ஈசன் முல்லைவனநாதர் எனப்பட்டார். வடமொழியில் மாதவிவனேஸ்வரர்.

Advertisment

திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்ற தலம். இங்கு சுவாமி, நந்தி, கற்பக விநாயகர் யாவரும் சுயம்பு மூர்த்திகளே. சுவாமி முல்லைவனநாதர் புற்றுமண்ணால் ஆனவர். எனவே இங்கு அபிஷேகம் இல்லை. மாறாக வளர்பிறை பிரதோஷ நாட்களின் மாலைப்பொழுதில் ஈச

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் உடனுறை மாதவிவனேஸ்வரர் திருக்கோயில், "கருவாய் உலகுக்கு முன்னே தோன்றிய திருத்தலம்' என்கிறார் திருநாவுக்கரசர்.

Advertisment

திருக்கருகாவூர்- அதாவது கரு, கருகாத ஊர். இத்தல அன்னையை வணங்கினால் சுகப்பிரசவம் கண்டிப்பாக நடக்கும். வயிற்றில் இருக்கும் கருவுக்கும் காப்பாக இருந்து, கருச் சிதைவு ஏற்படாமல் காத்திடுவாள் அம்பிகை.

அதுமட்டுமல்ல; பல வருடம் குழந்தைச் செல்வம் இல்லாத, மருத்துவர்கள் கைவிரித்த தம்பதிகளுக்கும் குழந்தைச் செல்வம் அருள் பவள் இத்தல அம்பிகை. எனவே இந்த அம்பிகைக்கு கரு காத்தநாயகி என்று பெயர். வடமொழியில் கர்ப்பரட்சாம்பிகை.

இத்தலம் அமைந்துள்ள இடம்

அக்காலத்தில் மாதவி வனமாக இருந்தது. மாதவி என்றால் முல்லைக்கொடி. வெட்டாற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. முல்லைக்கொடிகள் நிறைந்த வனமான இப்பகுதியில் ஈசன் சுயம்புவாக அருள்பாலித்ததால் இத்தல ஈசன் முல்லைவனநாதர் எனப்பட்டார். வடமொழியில் மாதவிவனேஸ்வரர்.

Advertisment

திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்ற தலம். இங்கு சுவாமி, நந்தி, கற்பக விநாயகர் யாவரும் சுயம்பு மூர்த்திகளே. சுவாமி முல்லைவனநாதர் புற்றுமண்ணால் ஆனவர். எனவே இங்கு அபிஷேகம் இல்லை. மாறாக வளர்பிறை பிரதோஷ நாட்களின் மாலைப்பொழுதில் ஈசனுக்கு புனுகு சட்டம் மட்டும் சாற்றுகிறார்கள். சுவாமியை வழிபட குழந்தை பாக்கியம் கிட்டும். கூடவே உடல் நோய்கள், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

இங்குள்ள நிருதி விநாயகர் சந்நிதியின் ஓரத்தில், மேலே பூரணை, புஷ்கலையுடன் அய்யனார் சாஸ்தா அருள்வது வெகுசிறப்பு.

இங்கு புதன், சனிக்கிழமைகளில் நிருதி விநாயகர், அய்யனாரரை வழிபட சகல செல்வங்களும் கிட்டும். இங்குள்ள சங்குகர்ணர் சிவலிங்கத்திடம் (சங்குகர்ணர் சந்நிதி மூலவரின் எதிரில், வெளிப் பிராகாரத்தில் கொடிமரம் அருகில் உள்ளது) வேண்டிக்கொண்டு, 27 தீபங்கள் ஏற்றி வழிபட, நாம் செய்த பாவ வினைகள் அகலுமாம். அருகிலேயே சற்று உயரமான இடத்தில் பைரவர் சந்நிதி உள்ளது. நம் சகல பாவங்களையும், தோஷங்களையும் களையும் வல்லமையுள்ளது.

எனவே இங்கு கண்டிப்பாக 8 தேய்பிறை அஷ்டமிகள் வழிபட சகல மேன்மைகளும் கிட்டும். சுவாமி சந்நிதி அருகில் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது.

வெளிப் பிராகாரத்தில் நால்வர், அறுபத்து மூவர் சந்நிதி, வள்ளி, தேவசேனா வுடன் முருகர், மகாலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. அடுத்து தனிச் சந்நிதியில் இத்தல பெரும்புகழுக்குக் காரணமான அன்னை கர்ப்பரட்சாம்பிகை அருளும் சந்நிதி.

அன்னையின் எதிரில் ஈசன் அருள் பாலிக்கிறார். இவரை கௌதம முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். எனவே ஈசன் கௌதமேஸ்வரர் என அழைக்கப் படுகிறார்.

tt

பத்மபீடத்தில், அமைதியே உருவாக அன்னை கர்ப்பரட்சாம்பிகை எழுந்தருளியிருக்கிறாள். அன்னையின் நான்கு கரங்களுள் ஒன்று அவளது வயிற்றின் கீழே தொடுவதுபோல் உள்ளது. அதாவது கர்ப்பத்தைத் தந்து அந்த கர்ப்பத்தை ரட்சிக்கும் திருக்கோலம்.

திருமணம் கூடிவராத பெண்கள், இங்கு அன்னையின் சந்நிதியில் நெய்யினால் படி மெழுகிக் கோலமிட்டால், திருமணம் கூடிவரும். மகப்பேறு இல்லாதவர்கள், 48 நாட்கள் இங்கு தரப்படும் அன்னையின் பிரசாத நெய்யை உண்டால் மகப்பேறு உண்டாகும். சுகப்பிரசவமாக, பெண்கள் இங்கு தரப்படும் அன்னையின் பிரசாதமான விளக்கெண்ணெயைத் தடவிவந்தாலே போதும். சிலர் 48 நாட்கள் சாப்பிடுவதில்லை. கண்டிப்பாக அம்மன், ஈசனை தியானித்து இங்கு தரப்படும் நெய்யை கணவன்- மனைவி இருவரும் 48 நாட்கள் கண்டிப்பாக உண்டுவர, குழந்தைச் செல்வம் நிச்சயம்.

பெண்கள் மாதவிலக்கு வரும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கண்டிப்பாக உண்டு வரவேண்டும். மாதவிலக்கு இருக்கும்போது, கண்டிப்பாக கணவன் சாப்பிட்டு வரவேண்டும். புத்திர சயன தோஷங்களை அடியோடு களையும் திருக்கருகாவூர்.

வெகுநாட்கள் குழந்தையில்லாத தம்பதிகளான நித்துருவர்- வேதிகை தம்பதிகள் தங்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கவேண்டுமென்று இத்தல முல்லைவன நாதரை வழிபட, கருத்தரித்து சில மாதங்களில் வேதிகையின் கரு கலைந்தது.

உடனே அவள் மீண்டும் ஆலயம் வந்து முல்லைவனர் கோவிலுக்குச் சென்று அம்பிகை முன்பு மனமுடைந்து கதறியழு தாள். மனமிரங்கிய அன்னை வேதிகையின் கருவைக் காக்க அவள்முன்பு தோன்றினாள்.

"வேதிகை! வருந்தவேண்டாம். உன் கருவைக் காப்பது இனி என் பணி'' என்று அன்னை அருள் செய்தாள். அதன் படி வேதிகையின் கலைந்த கருவை குடமொன்றில் வைத்துப் பாதுகாத்த அன்னை, உரிய காலத்தில் கரு குழந்தையானதும் வேதிகையிடம் அளித்து, அவளை ஆனந் தப் பரவசமடையச் செய்தாள்.

உடனே வேதிகை, "தேவி! என் கருவைக் காத்து குழந்தையாக்கிக் கொடுத்ததுபோல, உன்னை நம்பிவரும் குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வம் கொடுத்தும், கருவுற்ற எல்லாப் பெண்களது குழந்தையையும் காக்க வேண்டுமம்மா!'' என்று வேண்ட, தேவியும் "அவ்வாறே ஆகுக' என்று அபயகரம் காட்டினாள்.

அன்றுமுதல் அந்த முல்லைவனம் திருக்கருகாவூர் என்றும், அன்னையின் திருநாமம் கர்ப்பரட்சாம்பிகை என்றும் ஆனது. பெண்களுக்கு மாதவிலக்கு, வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள் சம்பந்தமான அனைத்து நோய்களையும் களைந்து, பெண்களை அன்பால் அம்பிகை அணைக்கும் திருத்தலமிது. மணவாழ்வின் தலையாய நோக்கமே நல்ல குழந்தைகளைப் பெறுவது என்பதே. குலம் தழைக்கும் குழந்தைகளைப் பெற்று, நல்வாழ்வு வாழவேண்டுமென்பதே! அதனை இக்கலிகாலத்தில் உறுதிசெய்யும் திருத்தலம் திருக்கருகாவூர்'. நம்பிவாருங்கள். இங்குவந்த யாரையும் அன்னை வெறுங்கையுடன் அனுப்ப மாட்டாள். உங்கள் மணிவயிற்றில் கருவைத் தந்து, அந்த கருவைக் காத்து வையத்துள் வாழ்வாங்கு வாழச் செய்திடுவாள் இத்தல கர்ப்பரட்சாம்பிகை.

கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.

கோவிலுக்கு எதிரில் காமதேனுவின் பாலால் ஏற்பட்ட பால் குளத்தில் சிவராத்திரி யன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஐந்து ஆரண்யங்களாகத் திருக்கருகாவூர், அவனிவநல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி மற்றும் திருக்கொள்ளம்பூதூர் ஆகியவற்றைக் குறிப்பர். இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது வழக்கம். அதாவது, உஷத் காலத்தில் (காலை 6.00 மணியளவில்) திருக்கருகாவூரையும், காலசந்தி நேரமான 8.00 மணியளவில் அவனிவ நல்லூரையும், உச்சிக்காலத்தில் (சுமார் 12.00 மணிக்கு) அரித்துவாரமங்கலத்தையும், சாயரக்ஷை நேரத்தில் (மாலை 6.00 மணிக்கு) ஆலங்குடியையும், அர்த்தஜாம நேரத்தில் (இரவு 8.00 மணியளவில்) திருக் கொள்ளம்பூதூரையும் தரிசிப்பர்.

இங்குவந்து வழிபட திருமணமாகாத பெண்களுக்கு பூமணமாகிய திருமணம் கைகூடி வரும். மகப்பேறு கிட்டாத பெண்களுக்கு பால்மணமாகிய தாய்மை தேடிவந்து, வெகுவிரைவில் அன்னையின் அருளால் சேயுடன் நிற்பார்கள்.

om011222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe