திருவோணம் திருமாலின் நட்சத்திரம். பெரியாழ்வார் "திருவோணத்தான் உலகாளும் என்பார்களே' என திருவோணத்தில் பிறந்தோரின் பெருமையைப் பாடுகிறார்.
மேலும், பெரியாழ்வார், கண்ணனின் பிறப்பைக் குறிக்கும்போது "அத்தத்தின் பத்தானால்' எனச் சொல்கிறார். ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து பத்தாவது நட்சத்திரமாக வருவது திருவோணம். கண்ணன் பிறந்த ரோகிணி இந்த ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து பின்னோக்கி எண்ணினால் பத்தாவதாக வருவது. கம்சன் கண்ணனுடைய நட்சத்திரத்தை அறியகூடாதென புதிர்போடுகிறார் ஆழ்வார்.
மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான். பிராட்டியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்டதும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான்.
எனவே, திருவிண்ணகர் (திருநாகேஸ்வரம்) ஸ்ரீ ஒப்பிலியப்பர் கோவிலிலும் இந்த திருவோண விழா மாதந்தோறும் சிறப் பாக நடைபெறுகிறது. திருவோண தினத் தில் விரதம் மேற்கொள்பவர்கள் எல்லா வளங்களும் பெற்று, பிறப்பிலா பேறுடன் வைகுந்தப் பதவியை அடைவார்கள்.
பாண்டிய மன்னனாக இருந்த ஒருவன் முனிவரின் சாபம் பெற்று யானையாக மாறி னான். எனினும், அவன்செய்த புண்ணியப் பலனால் யானைக் கூட்டத்தின் தலைவ னாக வாழ்ந்தான். அந்த யானை பூர்வ ஜென்ம வாசனையால், ஒருசமயம் பொய்கையில் தாமரை மலர் பற
திருவோணம் திருமாலின் நட்சத்திரம். பெரியாழ்வார் "திருவோணத்தான் உலகாளும் என்பார்களே' என திருவோணத்தில் பிறந்தோரின் பெருமையைப் பாடுகிறார்.
மேலும், பெரியாழ்வார், கண்ணனின் பிறப்பைக் குறிக்கும்போது "அத்தத்தின் பத்தானால்' எனச் சொல்கிறார். ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து பத்தாவது நட்சத்திரமாக வருவது திருவோணம். கண்ணன் பிறந்த ரோகிணி இந்த ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து பின்னோக்கி எண்ணினால் பத்தாவதாக வருவது. கம்சன் கண்ணனுடைய நட்சத்திரத்தை அறியகூடாதென புதிர்போடுகிறார் ஆழ்வார்.
மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான். பிராட்டியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்டதும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான்.
எனவே, திருவிண்ணகர் (திருநாகேஸ்வரம்) ஸ்ரீ ஒப்பிலியப்பர் கோவிலிலும் இந்த திருவோண விழா மாதந்தோறும் சிறப் பாக நடைபெறுகிறது. திருவோண தினத் தில் விரதம் மேற்கொள்பவர்கள் எல்லா வளங்களும் பெற்று, பிறப்பிலா பேறுடன் வைகுந்தப் பதவியை அடைவார்கள்.
பாண்டிய மன்னனாக இருந்த ஒருவன் முனிவரின் சாபம் பெற்று யானையாக மாறி னான். எனினும், அவன்செய்த புண்ணியப் பலனால் யானைக் கூட்டத்தின் தலைவ னாக வாழ்ந்தான். அந்த யானை பூர்வ ஜென்ம வாசனையால், ஒருசமயம் பொய்கையில் தாமரை மலர் பறித்து பெருமாளுக்கு அர்ப்பணிக்க எண்ணியது. அப்பொழுது அந்த தடாகத்திலே வாழ்ந்த முதலை ஒன்று யானையின் காலைப் பிடித்து நீரிலே ஆழ்த்தியது. யானை தன்னால் முடிந்தவரை வெளியேவர முயற்சிசெய்தது. மற்ற யானைகளும் உதவ முயன்று, முடியவில்லை என விட்டுச்சென்றன.
கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள்ளே மூழ்கத்தொடங்கியது யானை. தன்னால் காரியம் ஒன்றும் ஆகாதென்று அறிந்து ஆண்டவனை சரண்புகுந்தது. "ஆதிமூலமே' என ஓலமிட்டலறியது. பார்த்தான் பரந்தாமன்- தன் இருப்பிடத்திலிருந்து கருடன் மேலேறி பறந்துவந்து, வந்தவேகத்திலே சக்ராயுதத்தாலே முதலையின் தலையைத் துண்டித்தான். யானைக்கு சாபவிமோசனம் அருளினார் .
அந்த நாள் திருவோண நன்னாள். திருவோண நாளில் பரந்தாமனுக்கு மலர் அர்ப்பணிக்க எண்ணியதாலேயே கஜேந்திரனுக்கு சாபவிமோசனம் கிடைத்தது. மீண்டும், தான் இழந்த ராஜ்ஜியத்தை அடைந்து பன்னெடுங்காலம் அரசனாக வாழ்ந்தான். முன்னொரு காலத்தில், மாவலி என்ற மன்னன் பரசுராம க்ஷேத்திரமாகிய மலையாள நாட்டை ஆட்சிசெய்து வந்தார்.
அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். தனது ஆற்றலாலும், தவ வலிமையாலும் மாவலி மன்னர், தேவர்களைத் தோற்கடித்தார். மூவுலங்களையும் ஆளும் ஆதிக்கம் பெற்று மகாபலி சக்கரவர்த்தியானார். மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி வந்தார்.
இந்நிலையில், இந்திரன் மகாபலியிடம் தன் செல்வத்தை இழந்தான். மேலும், இருக்க இடமில்லாமல் நாடோடிபோலானான். நாரதரின் யோசனைப்படி பரந்தமானிடம் திருவோண நட்சத்திர நாளிலே தன் நிலையை எடுத்துரைத்தான். பகவானும் இந்திரனின் துயர்துடைக்க வாமன வடிவம்கொண்டு மகாபலியின் இடத்திற்கு அந்தணர் சிறுவனாகச் சென்று யாசகம் கேட்டு நின்றார்.
தன் காலால் மூன்றடி நிலம் போதும் என்றார்.
மகாபலியோ ஏன் மூன்றடி நிலம்- வேண்டுமென்றால் ஒரு கிராமமே தருவதாகக் கூறினான். அந்தண சிறுவனாக வந்த பகவானோ ஒருவருக்கு மூன்றடி நிலத்திலே திருப்தி வரவில்லையென்றால் மூன்று உலகங்களைக் கொடுத்தாலும் திருப்தி வராதென்று வேதாந்தம் பேசினார். அதனை நம்பிய மகாபலி சக்கரவர்த்தி கமண்டல நீரால் தாரைவார்த்து நிலத்தை தருகிறேன் என்று சத்தியம் செய்தார். மறுகணமே தன் நிஜரூபத்துடன் விண்ணையும் மண்ணையும் அளந்து, இந்திரனுக்கு விண்ணுலகை மீட்டுக்கொடுத்தார். மகாபலியைப் பாதாள உலகம் சென்று ஆட்சிசெய்யுமாறு கூறினார்.
அதேசமயம் மகாபலி வேண்டுகோளுக்கிணங்க, வருடம் ஒருமுறை தான் ஆட்சிசெய்த மக்களைப் பார்க்க அனுமதி தந்தார். அந்த நாள்தான் திருவோணம். இன்றும் கேரள மக்கள் பூக்கோலமிட்டுத் தங்கள் அரசன் வரக்காத்திருக்கும் நாளே ஓணம் பண்டிகை. இப்படி திருவோண நாளிலே பரந்தாமனின் பாதம் பணிந்து, பல நன்மைகளை நாமும் பெறலாம். திருவோண நாளில் நாம் கேட்கும் வரத்தினை உடனே தருவார் அந்த பரந்தாமன்.
திருவோண விரதம்
திருவோண நட்சத்திரத்தின் முதல்நாள் மாலை தனியாக பால் வாங்கி, தனியாகக் காய்ச்சி தயிர் உறையிடவும். முதல் நாள் இரவு உணவு உட்கொள்ளக் கூடாது. திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் நீராடி, பெருமாள் ஆலயத்துக்குச் சென்று துளசி மாலை சாற்றவேண்டும். காலையில் துளசித் தீர்த்தம் மட்டுமே எடுத்துக்கொண்டு, பெருமாளைக் குறித்த பாடல்களைப் பாராயணம் செய்தல் வேண்டும். பூஜையறையிலும், கஜேந்திர மோட்சப் பெருமாளின் படம் வைக்குமிடத்திலும் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி, வாமனனாக வந்த பரந்தாமனை மனமார வணங்கவேண்டும். அந்தத் திருவிளக்கிலே பெருமாளின் பன்னிரு நாமங்களைச் சொல்லி துளசியிலைகளால் அர்ச்சனை செய்யவும்.
வடித்துவைத்த பச்சரிசி சாதத்தில் முதல்நாள் தனியாக தோய்த்த தயிரைக் கலந்து வாமனப் பெருமாளுக்கு அமுது செய்யவும். மனக்குறைகளை மாயவனிடம் சொல்லி மனமுருகப் பிரார்த்தனைசெய்து, சிறு குழந்தைகளுக்கு அந்த தயிர் சாதத்தை சாப்பிடக்கொடுத்து, மீதமுள்ளதை தானும் சாப்பிட்டு பூஜையை முடிக்கவும். மதிய உணவில் உப்பைச் சேர்க்காமல் சாப்பிடவேண்டும். மாலையில் சந்திர தரிசனம் காணவேண்டும். இதனால், சந்திரதோஷம் இருந்தால் விலகிவிடும்.
ஒருமுறை திருவோண விரதம் இருந்தால்கூட போதும்- சந்திரனின் அருள்பெற்று, அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும். திருப்பங்களை நல்கும் திருவோண விரதத்தை மேற்கொண்டு, எல்லா வளங்களையும் பெறமுடியும். பெரிய திருவோணமாகிய ஓணம் பண்டிகை தொடங்கி, எல்லா திருவோண நட்சத்திர நாட்களிலும் தொடர்ந்து ஒரு வருடம் செய்துவர, வாழ்வில் தொலைத்த செல்வத்தை மீண்டும் பெறலாம். குறிப்பாக, வேலை வாய்ப்பு, கைவிட்டுப் போன சொத்து முதலியவை கண்டிப்பாகக் கிடைக்கும்.
குழந்தை வரம்வேண்டுவோர் தயிர் சாதத்துக்குப் பதிலாக ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் வெண்ணையை சமர்ப்பித்துவர, மழலைச்செல்வம் சீக்கிரமே கிடைக்கும். வாமன அவதாரப் பெருமாளைப் பூஜைசெய்தால் சீக்கிரமே குருபலம் கிடைத்து மணமும் நிச்சயமாகும்.
குருப்ரீத்திக்காக வாமனப் பூஜையையே பராசர மகரிஷி தன் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லியுள்ளார். எண்ணிய காரியம் முடிந்தவுடனே, அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் சர்க்கரைப் பொங்கல் செய்து பகவானுக்கு நெய்வேத்தியம் செய்து, கோவிலுக்கு வருபவருக்கு வழங்கி, பெருமாளுக்கு நன்றி சொல்லவேண்டும். நம்பிக்கையுடன் பூஜைசெய்வோரை எந்தக் கஷ்டத்திலிருந்தும் பகவான் நிச்சயமாகக் காப்பான். இந்த திருவோண பூஜையினால் குறைதீர்ந்த பலரில் நீங்களும் ஒருவராகுங்கள்.