உயிரை உருக்கும் திருவாசகம்! - முனைவர் இரா. இராஜேஸ்வரன்

/idhalgal/om/thiruvasakam-melts-life-dr-ira-rajeswaran

ரு பக்தர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செவ்வனே செய்திருப்பார். ஆனால் அவரால் நினைத்த வண்ணம் திருப்பதிக்குச் செல்லமுடியாமல் இருக்கும். மற்றொரு பக்தருக்கு திருப்பதிற்குச் செல்லும் எண்ணம் திடீரென வரும். உடனே சென்று தரிசனம் செய்துவிட்டு வந்துவிடுவார். இரு பக்தர்களுக்கும் பக்தி மார்க்கத்தில் இறைவனை தரிசிக்க நினைத்தாலும் ஒருவருக்குக் கைகூடவில்லை. மற்றவருக்குக் கைகூடுகிறது.

இந்த நிகழ்வைத்தான் மாணிக்கவாசகர் சிவபுராணத்தில், "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என கூறினார்.

rhrh

அதாவது இறைவனின் திருவடியை வணங்குவதற்கு நமக்கு அவனது அருள் இருந்தால் தான் முடியும் என்பதை ஆணித்தரமா கக் கூறுகிறார். இவர்தான் திருவாசகம் எனும் சிவநெறிச் செழுமை வாய்ந்த புனிதநூலை இயற்றினார். இந்த நூலைதான் "திருவாசகத் துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்றும், ஆங்கிலேயே அறிஞர் டாக்டர் ஜி.யு. போப் "எலும்பை உருக்கும் பாட்டு' என பாராட்டும் வண்ணமும் சுவைபட உருக்கமாக இயற்றினார்.

திருவாசகம் 656 பாடல்களையும், 51 பிரிவுகளையும் கொண்டது. இந்த நூலை எட்டாம் திருமுறையாக சைவர்கள் போற்றுவார்கள். இவர் எழுதிய மற்றொரு நூல் "திருக்கோவையார்.' பேரின்ப மெய்ஞ்ஞான தத்துவங்களை உள்ளடக்கிய நூலென்று இதனைக் கூறுவர். 25 அதிகாரங்களையும், 400 பாடல்களையும் கொண்ட அற்புத மான நூலை மாணிக்கவாசகர் இயற்றினார்.

மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படும் "திருவெம்பாவை' 20 பாடல்களை திருவண்ணாமலையில் எழுதினார்.

"வான் கலந்த மாணிக்கவாசக!

நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால்

நற்கருப்பஞ்சற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து

செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்

ஊன் கலந்

ரு பக்தர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செவ்வனே செய்திருப்பார். ஆனால் அவரால் நினைத்த வண்ணம் திருப்பதிக்குச் செல்லமுடியாமல் இருக்கும். மற்றொரு பக்தருக்கு திருப்பதிற்குச் செல்லும் எண்ணம் திடீரென வரும். உடனே சென்று தரிசனம் செய்துவிட்டு வந்துவிடுவார். இரு பக்தர்களுக்கும் பக்தி மார்க்கத்தில் இறைவனை தரிசிக்க நினைத்தாலும் ஒருவருக்குக் கைகூடவில்லை. மற்றவருக்குக் கைகூடுகிறது.

இந்த நிகழ்வைத்தான் மாணிக்கவாசகர் சிவபுராணத்தில், "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என கூறினார்.

rhrh

அதாவது இறைவனின் திருவடியை வணங்குவதற்கு நமக்கு அவனது அருள் இருந்தால் தான் முடியும் என்பதை ஆணித்தரமா கக் கூறுகிறார். இவர்தான் திருவாசகம் எனும் சிவநெறிச் செழுமை வாய்ந்த புனிதநூலை இயற்றினார். இந்த நூலைதான் "திருவாசகத் துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்றும், ஆங்கிலேயே அறிஞர் டாக்டர் ஜி.யு. போப் "எலும்பை உருக்கும் பாட்டு' என பாராட்டும் வண்ணமும் சுவைபட உருக்கமாக இயற்றினார்.

திருவாசகம் 656 பாடல்களையும், 51 பிரிவுகளையும் கொண்டது. இந்த நூலை எட்டாம் திருமுறையாக சைவர்கள் போற்றுவார்கள். இவர் எழுதிய மற்றொரு நூல் "திருக்கோவையார்.' பேரின்ப மெய்ஞ்ஞான தத்துவங்களை உள்ளடக்கிய நூலென்று இதனைக் கூறுவர். 25 அதிகாரங்களையும், 400 பாடல்களையும் கொண்ட அற்புத மான நூலை மாணிக்கவாசகர் இயற்றினார்.

மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படும் "திருவெம்பாவை' 20 பாடல்களை திருவண்ணாமலையில் எழுதினார்.

"வான் கலந்த மாணிக்கவாசக!

நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால்

நற்கருப்பஞ்சற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து

செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்

ஊன் கலந்து உயிர் கலந்து

உவட்டாமல் இனிப்பதுவே'

என "ஆளுடையவடிகள் அருள்மாலை'யில் வள்ளலார் பெரிதும் பாராட்டி, உயர்த்திப் பாடிய மகான்தான் மாணிக்க வாசகர்.

இம் மகான் வைகை ஆறு பாயும் மதுரை மாநகரை அடுத்த திருவாதவூரில் வாழ்ந்த சம்புபாத இருதயர், சிவஞானவதி தம்பதியினருக்கு, அவ்வூரில் குடி கொண்ட இறைவன் வாதபுரீஸ்வரர் திருவரு ளால் ஒரு ஆண் மகன் பிறந்தான். அக் குழந்தைக்கு அவ்வூர் இறைவனின் திருநாமமான திருவாதவூரர் என்னும் பெயரையே தம்பதியினர் சூட்டி நன்றாக வளர்ந்து வந்தனர். இறைவனின் பெயரைச் சூட்டியதால் சிவபெருமான் அருளால் அந்த பாலகன் சிறுவயதிலேயே எல்லா கலைகளையும், சாஸ்திரங்களையும், தமிழ் இலக்கணத்தையும் சரிவரக் கற்றுத் தேர்ந்தான்.

கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கிய அந்த பாலகனின் பெருமை பற்றிய செய்தி அவ்வூரை ஆண்ட அரிமர்த்தன பாண்டிய மன்னனுக்கு எட்டவே, அரசவைக்கு அடிக்கடி திருவாதவூரரை அழைத்துவந்து பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து பேசி மகிழ்வார். ஒரு கட்டத்தில் திருவாதவூரரை தனது அமைச்சரவையில் இடம்கொடுத்து பெருமைப் படுத்தியது மட்டுமின்றி "தென்னவன் பிரம்மராயன்' எனும் சிறப் புப் பட்டத்தையும் வழங்கி கௌரவித்தார்.

சிறுவயதிலேயே அமைச்சர் பதவியை ஏற்றாலும் திருவாத வூரருக்கு அதில் முழு நாட்டமும் இல்லாமல், இறை சிந்தனைதான் மேலோங்கியிருந்தது. இறைவனையடைய தகுந்த ஞான குருவைத் தேட ஆரம்பித்தார்.

பாண்டிய மன்னன் தனது குதிரைப்படையை வலுப்படுத்த தரமான வெளிநாட்டு குதிரைகளை வாங்க ஆசைப்பட்டார். இதற்கான வேலைகளையும், குதிரை வாங்குவதற்கான பணத்தையும் அமைச்சரான திருவாதவூரரிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்கு உதவ சில குதிரைப்படை வீரர்களையும் உடன் அனுப்பிவைத்தார். மன்னனின் உத்தரவுப்படி திருவாதவூரர் கீழைக்கடற்கரைக்கு குதிரை வாங்கப் புறப் பட்டார். போகும்வழியில் திருப் பெருந்துறையில் சிவ பெருமானே குருந்த மரத்தடியில் அடியார் புடை சூழ வீற்றிருந்து உபதேசம் செய்வதைக்கண்டு மகிழ்ந்து வணங்கினார்.

thh

தாயைக்கண்ட பசுங்கன்று எப்படி மகிழ்ந்து செல்லுமோ அப்படி மகிழ்ந்து தன்னுடைய ஞானகுருவை சரணடைந்தார். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட திருவாதவூரர் திருப்பெருந்துறையிலேயே தங்கி இறைப் பணியாற்றவும், குதிரைவாங்க கொண்டுவந்த பணத்தை கோவில் கட்டும் திருப்பணிக்கு செலவு செய்யவும் தொடங்கினார்.

குதிரைகளை வாங்கச்சென்ற திருவாதவூரரை நீண்டநாட்களாகக் காணவில்லை; குதிரைகளும் வரவில்லை என்பதால், நடந்த சம்பவத்தை அறிந்துவர ஒற்றர்களை மன்னர் அனுப்பினார். நடந்த சம்பவங்களை ஒற்றர்கள் மன்னரிடம் தெரிவிக்க, குதிரைகளை கட்டாயம் வாங்கி வரவேண்டுமென உத்தரவு பிறப்பித்து ஒற்றர் களிடம் செய்தியனுப்ப, அதனைக் கண்டு திருவாதவூரர் மிகவும் கவலையடைந்தார். தன் குருநாதரிடம் சென்று உபாயம் செய்யுமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

குருநாதராக விளங்கிய சிவபெருமான், "ஆவணி மாதம் குதிரைகள் வரும்' என எழுதியனுப்புமாறு கூற, அப்படியே திருவாதவூரர் எழுதியனுப்பினார்.

ஆவணி மாதம் சிவபெருமான் காட்டிலிருந்த நரிகளைப் பரிகளாக்கி (குதிரை), தானே குதிரைப் பாகனாக மாறுவேடத்தில் வந்து அவற்றை அரண்மனைக்கு ஒட்டிச் சென்றார். நல்ல குதிரைகள் தன் அரண்மனைக்கு வந்ததைப் பார்த்து மன்னரும் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

அன்றிரவு குதிரைகள் யாவும் மீண்டும் நரிகளாகி ஊளையிட்டுக்கொண்டு காட்டுக்கே ஓடிவிட்டன. இதனையறிந்த மன்னர் திருவாதவூரர்மீது மிகுந்த கோபம்கொண்டு, வைகையாற்றின் சுடு மணலில் நிறுத்தி தண்டனை தருமாறு ஆணையிட்டார். சுடுமணலால் அவஸ்தைப்படும் தன் பக்தனுக்கு உதவ வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு வரும்வண்ணம் சிவபெருமான் லீலை செய்யவே, வைகைக்கரை முழுவதும் நீரால் சூழப்பட்டது. மக்கள் யாவரும் தவித்தனர்.

வெள்ளப் பெருக்கெடுத்த வைகையாற்றின் இருபுறக்கரைகளை உயர்த்த முடிவுசெய்த மன்னர், அதற்கான பணியில் ஈடுபடுமாறு மக்களுக்கு ஆணையிட்டார். ஊர்மக்கள் அனைவரும் கரையை உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர். மதுரையில் பிட்டு (புட்டு) வியாபாரம் செய்துவந்த வயதான கிழவியான வந்தி என்பவள், இப்பணியில் ஈடுபட தன்னிடம் யாருமில்லையே என வருந்தினாள். சிவபெருமானை வேண்டினாள். கிழவிக்கு உதவ சிவபெருமான் ஒரு கூலித்தொழிலாளி வேடத்தில் வந்து, "உன் சார்பாக நான் பணி செய்கிறேன். எனக்கு என்ன கூலி கிடைக்கும்' எனக் கேட்டார். தருவதற்குப் பணமில்லாத ஏழைக்கிழவி, "மண் சுமக்கக் கூலியாக பிட்டைத் தருகிறேன்' என கூறினாள். அதன்படி கூலித்தொழிலாளியாக வந்த சிவபெருமான் மண் சுமக்கும் வேலை செய்யத் தொடங்கினார்.

கிழவி கொடுத்த பிட்டை உண்ட களைப்பில் மதிய வேளையில் வேலை செய்யாமல், ஆற்றங்கரையில் கூலித்தொழிலாளியான சிவபெருமான் உறங்கவே, பணிகளைப் பார்வையிட வந்த மன்னர் வேலையாள் தூங்குவதைப் பார்த்து கோபப்பட்டு, பிரம்படி தருமாறு உத்தரவிட்டார். வேலையாளை வீரர்கள் பிரம்மால் அடிக்க, அந்த அடியின் வலியானது மன்னர் உட்பட அரண்மனையில் இருப்பவர் களுக்கும் ஏற்பட்டது.

இதைக்கண்டு வியந்த மன்னர் திருவாதவூரரின் மகிமைதான் என உணர்ந்து, அவரிடம் நடத்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். மேலும் திருப்பெருந்துறையில் நடக்கும் திருப்பணிகளை இனி எந்தவித தடையுமின்றி சிறப்பாகச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அமைச்சர் பதவியைத் துறந்து சிவனடியராக மாறிய திருவாதவூரர் சிவபெருமானைத் தொழ திருவண்ணாமலை, உத்தரகோச மங்கை, திருக்கழுக்குன்றம் உட்பட பல சிவாலயங்களுக்குச் சென்று பதிகங்களைப் பாடினார். இவரது மகிமையை உணர்ந்து திருவாதவூரரை மாணிக்கவாசகர் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டு அழைத்தனர். பின்னாளில் இந்தப் பெயரே அவருக்கு நிலைத்தது. எனவேதான் இராமலிங்க வள்ளலார் "வாட்டமிலா மாணிக்க வாசக' என புகழ்ந்து பாடுகிறார்.

இந்த நிகழ்வைப்பற்றி மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில், "பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே' என சிவபெருமானை வியந்து பாடியுள்ளார்.

திருப்பெருந்துறையில் (ஆவுடையர் கோவில்) தற்சமயம் உள்ள ஆத்மநாத சுவாமி திருக்கோவிலை மாணிக்கவாசகர்தான் கட்டினார் என்று சொல்வதுண்டு. இக்கோவிலை குரு ஸ்தலமாகக் கருதி பக்தர்கள் வழிபடுவதுண்டு. பண்டைய இலக்கியங்களில் இந்தக் கோவில் ஆதிகயிலாயம், குருந்தவனம் என்னும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழநாட்டில் தேவாரப் பாடல் பெற்ற புனிதத்தலமாக இக்கோவில் விளங்குகிறது.

பல சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்ற மாணிக்கவாசகர் தம்முடைய கடைசிக் காலத்தில் சிதம்பரத்தில் தங்கி இறைத்தொண்டு புரிந்தார். இவருடைய பாடல்களை இறைவன் சிவபெருமான் ஒரு வயதான கிழவர் வேடத்தில் வந்து கேட்டு, அதை ஓலைச்சுவடியில் அப்படியே எழுதியது மட்டுமின்றி, கடைசியில் "திருச்சிற்றம் பலம் உடையான்' என கைச்சாத்து (கையொப்பம்) இட்டு சிதம்பர நடராஜனின் பொன்னம்பலத்தில் வைத்துவிட்டு மறைந் தார். மாணிக்கவாசகரின் திருவாசகத்தை சிவபெருமான் இதன்மூலம் அங்கீகரித்தார் என்றே சொல்லலாம். அப்பேற்பட்ட திருவாசகத்தை நித்தம்பாடி இறைவனின் அருளைப் பெறுவோம்!

om010922
இதையும் படியுங்கள்
Subscribe