Advertisment

எல்லையில்லா ஆற்றல் தரும் திருமுல்லைவாசல் ஈசன்!- கோவை ஆறுமுகம்

/idhalgal/om/thirumullaivasal-eesan-gives-boundless-energy-coimbatore-arumugam

"சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.'

-திருவள்ளுவர்

தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக்கொண்டு, எதனையும் கண்டறிந்துகூறும் அறிஞர் பெருமக்களை சூழ வைத்துக்கொண்டிருப்பதே ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும் என்பதாம்.

Advertisment

இராமபிரான் அரசு செய்த காலம். மக்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று, மனதளவில்கூட எந்த தீய எண்ணமும் இல்லாமல் வளமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்துவந்தனர்.

ஒருநாள் விவசாயி ஒருவரின் மனைவி வீட்டின் பின்புறத்தில் தன் குழந்தைக்குத் தங்கக் கிண்ணத்தில் உணவூட்டிக் கொண்டிருந்தாள்.

esan

Advertisment

அப்போது குழந்தை குடிக்க நீர் கேட்டது. உடனே அந்தத் தாய் தங்கக் கிண்ணத்தைக் கீழே வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தாள். குழந்தை அழுது கொண்டிருந்தது. பார்த்தால் தங்கக் கிண்ணத்தைக் காணவில்லை. கணவரிடம் இந்த விவரத்தைச் சொல்-ப் புலம்பினாள் அவள்.

"அழாதே... இராமபிரான் ஆளும் போது இப்படி திருட்டெல்லாம் நடக்காது. எதற்கும் நாளை போய் அரசவையில் இராமரிடம் முறையிடுவோம்'' என்றார் விவசாயி.

மறுநாள் விவசாயியும் அவர் மனைவியும் அரசவைக்குச் சென்று இராமபிரானிடம் தங்கக் கிண்ணம் காணாமல் போன விவரத்தைக் கூறினர்.

"அமைச்சரே, வீரர்களை அனுப்பி தங்கக் கிண்ணத்தைத் தேடுங்கள். நாளைக்குள் அது கிடைக்காவிட்டால் அதற்குண்டான தங்கக் காசுகளை இந்த விவசாயிடம் வழங்குங்கள்'' என உத்தரவிட்டார் இராமபிரான்.

விவசாயியும் அவர் மனைவியும் மகிழ்வுடன் இராமரை வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது துறவி ஒருவர் அரசவைக்குள் நுழைந்தார். அவர் இராமரிடம், "நேற்று மாலை நான் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தேன். மரத்தின்மே-ருந்த குரங்கொன்று உணவைத் தின்றுவிட்டு தங்கக் கிண்ணத்தை என்மேல் போட்டுவிட்டுப் போய்விட்டது. துறவியான நான் பொன்னாசை கொள்ளக்கூடாது. எனவே அந்த தங்கக் கிண்ணத்தைத் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன்'' என்று சொல்- இராமர்முன் வைத்துவிட்டு வெளியேறினார்.

புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த விவசாய தம்பதியரை அழைத்த இராமர், "இந்த தங்கக் கிண்ணம் உங்களுடையதுதானா, பாருங்கள்'' என்றார்.

esan

"பிரபுவே, இது எங்களுடையதான்'' என்றனர். அவர்களிடம் கிண்ணத்தை ஒப்படைத்து அனுப்பிவைத்தார் இராமர். இராம ராஜ்ஜியம் என்பது இதுதான்.

"குற்றம் சாட்டுவதையும் பொல்லாங்கு பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்த வருக்கு உன்னையே கையளித்து வறியோரின் தேவையைப் பூர்த்தி செய்தால், இருள் நடுவே உன

"சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.'

-திருவள்ளுவர்

தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக்கொண்டு, எதனையும் கண்டறிந்துகூறும் அறிஞர் பெருமக்களை சூழ வைத்துக்கொண்டிருப்பதே ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும் என்பதாம்.

Advertisment

இராமபிரான் அரசு செய்த காலம். மக்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று, மனதளவில்கூட எந்த தீய எண்ணமும் இல்லாமல் வளமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்துவந்தனர்.

ஒருநாள் விவசாயி ஒருவரின் மனைவி வீட்டின் பின்புறத்தில் தன் குழந்தைக்குத் தங்கக் கிண்ணத்தில் உணவூட்டிக் கொண்டிருந்தாள்.

esan

Advertisment

அப்போது குழந்தை குடிக்க நீர் கேட்டது. உடனே அந்தத் தாய் தங்கக் கிண்ணத்தைக் கீழே வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தாள். குழந்தை அழுது கொண்டிருந்தது. பார்த்தால் தங்கக் கிண்ணத்தைக் காணவில்லை. கணவரிடம் இந்த விவரத்தைச் சொல்-ப் புலம்பினாள் அவள்.

"அழாதே... இராமபிரான் ஆளும் போது இப்படி திருட்டெல்லாம் நடக்காது. எதற்கும் நாளை போய் அரசவையில் இராமரிடம் முறையிடுவோம்'' என்றார் விவசாயி.

மறுநாள் விவசாயியும் அவர் மனைவியும் அரசவைக்குச் சென்று இராமபிரானிடம் தங்கக் கிண்ணம் காணாமல் போன விவரத்தைக் கூறினர்.

"அமைச்சரே, வீரர்களை அனுப்பி தங்கக் கிண்ணத்தைத் தேடுங்கள். நாளைக்குள் அது கிடைக்காவிட்டால் அதற்குண்டான தங்கக் காசுகளை இந்த விவசாயிடம் வழங்குங்கள்'' என உத்தரவிட்டார் இராமபிரான்.

விவசாயியும் அவர் மனைவியும் மகிழ்வுடன் இராமரை வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது துறவி ஒருவர் அரசவைக்குள் நுழைந்தார். அவர் இராமரிடம், "நேற்று மாலை நான் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தேன். மரத்தின்மே-ருந்த குரங்கொன்று உணவைத் தின்றுவிட்டு தங்கக் கிண்ணத்தை என்மேல் போட்டுவிட்டுப் போய்விட்டது. துறவியான நான் பொன்னாசை கொள்ளக்கூடாது. எனவே அந்த தங்கக் கிண்ணத்தைத் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன்'' என்று சொல்- இராமர்முன் வைத்துவிட்டு வெளியேறினார்.

புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த விவசாய தம்பதியரை அழைத்த இராமர், "இந்த தங்கக் கிண்ணம் உங்களுடையதுதானா, பாருங்கள்'' என்றார்.

esan

"பிரபுவே, இது எங்களுடையதான்'' என்றனர். அவர்களிடம் கிண்ணத்தை ஒப்படைத்து அனுப்பிவைத்தார் இராமர். இராம ராஜ்ஜியம் என்பது இதுதான்.

"குற்றம் சாட்டுவதையும் பொல்லாங்கு பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்த வருக்கு உன்னையே கையளித்து வறியோரின் தேவையைப் பூர்த்தி செய்தால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்' என்னும் ஆன்றோரின் கருத்துப்படி, கர்ண பரம்பரைக் கதை கூறுவதுபோல துறவிகள் நல்ல ஆட்சியாளர்களை அமைத்து, நாட்டுமக்கள் வாழ்வு செழிப்படையச் செய்யும் உன்னதமானதொரு திருத்தலம்தான் திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் திருக்கோவில்.

இறைவன்: முல்லைவனநாதர், மாசிலாமணீஸ்வரர் (யூதிகா பரமேஸ்வரர்).

இறைவி: அணிகொண்ட கோதை யம்மை, சத்யானந்த சௌந்தரி.v புராணப் பெயர்: தென் திருமுல்லைவாயில்.

ஊர்: திருமுல்லைவாசல்.

மாவட்டம்: மயிலாடுதுறை.

தலவிருட்சம்: முல்லை.

தீர்த்தம்: பிரம்ம- சந்திர தீர்த்தங்கள்.

தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமானதும், சீர்காழி சட்டநாதர் கோவில் தேவஸ்தான நிர்வாகத்தில் இயங்குவதுமான இவ்வாலயம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புகளோடு இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்ற திருத்தலம்தான் திருமுல்லைவாசல்.

esan

"வாராத நாடன் வருவார்தம் வில்-ன்

உருமெல்கி நாளும் உருகில்

ஆராத இன்பன் அகலாத அன்பன்

அருள் மேவிநின்ற அரன் ஊர்

பேராத சோதி பிரியாத மார்பின்

அலர்மேவு பேதை பிரியாள்

தீராத காதல் நெதிநேர நீடு

திருமுல்லை வாயில் இதுவே.'

-திருஞானசம்பந்தர்

திருமுல்லைவாயில் எனும் பெயரில், பாடல் பெற்ற இரண்டு தலங்கள் உள்ளன. இவற்றை வேறுபடுத்திக்காட்ட தொண்டை நாட்டிலுள்ள தலத்தை வட திருமுல்லைவாயில் என்றும், காவிரிக்கரையில் சீர்காழிக்கு அருகிலுள்ள தலத்தை தென் திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடுகின்றனர்.

தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில், காவிரி வடகரைத் தலங்களில் ஏழாவது தலமாகத் திகழ்கின்றது தென் திருமுல்லைவாயில். இவ்வாலயம் கிள்ளிவளவனால் கட்டப்பட்டது என்பர். திருஞான சம்பந்தரால் பதிகம் பாடப்பெற்ற பெருமை வாய்ந்த தலமாகும்.

தல வரலாறு

கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளிவளவன் சரும நோயால் மிகவும் வேதனைப் பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றிலுள்ள தீர்த்தத்தில் நீராடவேண்டுமென அரண்மனை மருத்துவர்கள் கூறினர்.

அவன் தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகிலுள்ள கட-ல் நீராட வந்தான். அப்போது அந்தப் பகுதி முழுவதும் முல்லைக் கொடிகளாக இருந்தது. இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லைக் கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்குமேல் நகர முடியவில்லை. கிள்ளிவளவன் முல்லைக் கொடிகளை வாளால் வெட்டும்போது, அதன்கீழிருந்த சுயம்பு மூர்த்தியின்மீது பட்டு ரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த மன்னன், "ஏதோ ஒரு உயிரை வெட்டிவிட்டோமே' என பார்க்க, அங்கே சிவ-ங்கம் ரத்தம் வழியக் காட்சியளித்தது. "மாபெரும் தவறு செய்துவிட்டோமே' என வருந்திய வளவன் தன்னைத்தானே வெட்டிக்கொள்ள முற்பட்டான். அப்போது சிவபெருமான் பார்வதியுடன் ரிஷபாரூடராகக் காட்சிதந்து வளவனைக் காப்பாற்றினார்.

esan

எனவேதான் இத்தலத்திற்கு திருமுல்லைவாசல் என்று பெயர் வந்தது. சிவ-ங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட தழும்பை இன்றும் காணலாம்.

சிறப்பம்சங்கள்

* மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்புமூர்த்தியாக முல்லைவனநாதர் அருள்பா-க் கிறார்.

* பொதுவாக அனைத்து பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலையிலும் இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால் பள்ளியறையே இல்லாத சிவாலயமென்றால் அது திருமுல்லைவாசல் தலம்தான். பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்துகொள்ள இங்குள்ள முல்லைவனநாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவபெருமான் குருவாக வீற்றிருக்கிறார். அத னால் இங்கு பள்ளியறையும் பூஜையும் கிடையாது.

* கசாவி என்பவரின் மூத்தமகன் வாமதேவர். தந்தை இறந்ததும் அவரது எலும்பை புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் போட்டுவந்தார். அவ்வாறு வரும்போது இத்தலத்து தீர்த்தத்தில் போடும்போது அந்த எலும்பு ரத்தினக் கல்லாக மாறியது. உடனே தனது தந்தைக்கு இத்தலத்தில் பிதுர்க்கடன் ஆற்றினார். தந்தைக்கு முக்தியளித்த தனயரானார்.

* இத்தலத்திலுள்ள கிணற்றில் கங்கை நித்திய வாசம் செய்கிறாள். இந்தக் கிணற்றில் நீராடி சந்திரன் தனக்கிருந்த நோயி-ருந்து விடுதலை பெற்றான்.

* இத்தலத்து இறைவனின் பக்தையாக ஒரு பரத்தை இருந்தாள். அவள் தன்னைத் தீண்டும் அனைவரையுமே கணவனாகக் கருதி ஒழுகியதால், இறைவன் அந்த பரத்தைக்கு சிவலோகப் பதவியளித்தார்.

*இங்கு மகோதயம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம், அமாவாசை போன்ற நாட்களில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதுவோருக்கு சகல நன்மைகளும் கிட்டும். மேலும் மறுபிறப் பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* சிவாலய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. குறிப்பாக மாசி மாத தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடக்கும்.

* வெள்ளி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அஷ்ட புஜ துர்க்கைக்கு அபிஷேக அர்ச்சனை நடைபெறுவது சிறப்பு.

* திருக்கயிலாயத்தில் அம்பிகை ஈசனிடம் பஞ்சாட்சர உபதேசம் பெற்று, இத்தலத்திற்கு வந்து முல்லைவனநாதரை முறைப்படித் தொழுது ஐந்தெழுத்து மந்திரம் ஓதி சிவஞானம் கைவரப் பெற்றாள்.

esan

இதனை "அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்செய்த எந்தை' என ஞானசம்பந்தர் போற்றிப் பாடியுள்ளார்.

"மகாவிஷ்ணு அலங் காரப்பிரியர்; சிவ பெருமானை அபிஷேகப் பிரியர் என்பார்கள். பழமையான கோவில் களில் மூன்று காலம், ஆறு காலம் என அவருக்கு விதவிதமான பொருட் களால் அபிஷேகம் செய்வார்கள். சிறப்பு அபிஷேகங்களும் அவ்வப்போது நடைபெறு வதுண்டு. இத்தல மூலவர் முல்லைவனநாத சுவாமிக்குரிய அபிஷேகப் பொருட்கள் பல கூறப்பட்டுள்ளன.

அவற்றையெல்லாம் வாங்கி சுவாமிக்கு அபிஷேகம் செய்யு மளவுக்கு அனைவ ரிடமும் செல்வ வளம் இருக்காது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பயன் உண்டு. பக்தர்கள் தாங்கள் விரும்பும் பொருளை வாங்கி அபிஷேகம் தொடங்கும் முன்னர் தரலாம். பக்தர்கள் தங்கள் சக்திக்கேற்ப அபிஷேகப் பொருளை அளிப்பதன்மூலம், அனைத்து நாளும் சுவாமிக்கு நடக்கும் அபிஷேகம் மகா அபிஷேகமாக மாறும் என்பதில் ஐயமில்லை'' என்கிறார் ஆலய அர்ச்சகர் துரை குருக்கள்.

அபிஷேகப் பொருட்களும் பயன்களும் ஸ்கந்த தைலம்- இன்பம் தரும்.

பச்சரிசிமாவுப் பொடி- கடன் தீரும்.

மஞ்சள் பொடி- அரச வசியம்.

காட்டுநெல்-ப் பொடி- பிணி தீரும்.

திருமஞ்சன திரவியம் (களபம்)- பிணி நீக்கம்.

பஞ்சகவ்யம் (பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம்)- சகல பாவமும் தீரும்.

பஞ்சாமிர்தம்- முத்தி தரும்.

ரச பழச்சாறு (பல பழச்சாறுகள்)- முக்தி தரும்.

பால்- ஆயுள்விருத்தி.

தயிர்- குழந்தைப் பேறு கிட்டும்.

நெய்- முக்தி தரும்.

வெந்நீர்- முக்தி தரும்.

தேன்- குர-னிமை தருவதோடு சுகம் கூடும்.

இளநீர்- ராஜயோகம் கிட்டும்.

சர்க்கரை கலந்த நீர்- பகைவரை அழிக்கும்.

கரும்புச்சாறு- ஆரோக்கியம் தரும்.

எலுமிச்சைப் பழச்சாறு- எமபயம் போக்கும்.

நார்த்தம் பழச்சாறு- மந்திர சக்தி தரும்.

கொழிஞ்சிப் பழச்சாறு- சோகம் போக்கும்.

மாதுளம் பழம்- பகையை அகற்றும்.

அன்னாபிஷேகம்- விளைச்சல் பெருகும்.

வில்வம் கலந்த நீர் (வில்வோதகம்)- மகப்பேறு தரும். தர்ப்பை கலந்த நீர்- ஞானம் தரும்.

பன்னீர்- குளிர்ச்சி தரும்.

விபூதி- சகல ஐஸ்வர்யங்களும் தரும்.

தங்கம் கலந்த நீர் (ஸ்வர்ணோதகம்)- சகல சௌபாக்கியம் கிட்டும்.

நவரத்தினம் கலந்த நீர் (ரத்னோதகம்)- சகல பாக்கியம் தரும்.

சந்தனம்- அரசாட்சி பெருகும்.

கோரோசனை, ஜவ்வாது, புனுகு- சகல ஆரோக்கியம் தரும்.

பச்சைக் கற்பூரம் மற்றும் குங்குமப்பூ- புகழ் கிட்டும்.

ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்று காலையில், தல தீர்த்தமான பிரம்ம தீர்த்த நீரை தல விருட்சத்திற்கு ஊற்றி, ஐந்தெழுத்து மந்திரம் ஓதி ஐந்து முறை வலம் வந்து முல்லைவனநாதரை வணங்கினால் சிந்தை தெளிவுபெற்று சிறப்புடன் வாழ்வர் என்று ஓலைச்சுவடி ரகசியம் சொல்கிறது.

கவலைகளைப் போக்கி தலையெழுத்தை மாற்றுபவர்தான் இத்தல பைரவர். சொத்துகளை ஏமாற்றி அபகரிப்பவர்களை அழிப்பவர் பைரவர். நம்பிக்கை துரோகிகளிடமிருந்து காப்பவர். உடல் ஆரோக்கியத்தைத் தருபவர். சொல்லால் காயப்படுத்தியவர்களையும், வாக்குறுதி கொடுத்து காயப்படுத்தியவர்களை யும், அவச்சொல் கூறி வ- ஏற்படுத்தியவர் களையும், வீடு வாசல், சொத்துகளை ஏமாற்றி அபகரித்தவர்களையும் பைரவர் அழிப்பார் என்பது ஐதீகம். பக்தர்களின் அச்சத்தைப் போக்குபவர். தோல்வி, அவமானத்தி-ருந்து காத்தருள்பவர். திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பதுபோல, வாழ்வை மாற்றித்தரும் வள்ளலாக விளங்குகிறார் இத்தல பைரவர். தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபடுவோர்க்கு பேரருள் புரியும் தெய்வமாகத் திகழ்கிறார் திருமுல்லைவாசல் உறையும் காலபைரவர்.

உப்பனாற்றின் வடகரையில், கிழக்கு நோக்கி மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது ஆலயம். நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பட்டுத் திகழ்கிறது. ஒரு பிராகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்தின் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பா-க்கிறார்.

அர்த்தமண்டபத்தில் தருமை ஆதீன குரு முதல்வர், 26, 27-ஆவது மடாதிபதிகளின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. கோஷ்ட தெய்வங்கள் சந்நிதிகள் முறைப்படி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அணிகொண்ட கோதையம்மன் தனிச்சந்நிதியில் அருட் காட்சி தருகிறாள். காலபைரவர் மேற்கு நோக்கி அருள்புரிகிறார்.

பிலவ வருடம் தை மாதம் 14-ஆம் நாள் (27-1-2022) வியாழக்கிழமையன்று, திருமுல்லைவாசல் ஊர்மக்கள் ஒத்துழைப்பு டன், தருமை ஆதீன இருபத்தேழாவது மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் திருவுளப்படி நன்முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. குடமுழுக்கு கண்டு பொ-வுடன் திகழும் ஆலயமாம் திருமுல்லைவாசலுக்குச் செல்வோம். செல்வச்செழிப்புடன் முன்னேற்றம் கண்டு வாழ்வோம்.

காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: மேலாளர், சட்டைநாத சுவாமி தேவஸ்தானம், சீர்காழி.

பூஜை விவரங்களுக்கு: துரை ஆத்மநாத குருக்கள், அலைபேசி: 98430 48780. முல்லை வனநாத சுவாமி திருக்கோவில், திருமுல்லை வாசல் அஞ்சல், சீர்காழி வட்டம், மயிலாடு துறை மாவட்டம்- 609 113.

ஆனந்த குருக்கள், அலைபேசி: 96293 77582.

அமைவிடம்: சீர்காழியிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமுல்லைவாசல். பேருந்து வசதிகள் உண்டு.

om010622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe