Advertisment

கர்மவினைகள் களைந்து களிப்பான வாழ்வு தரும் திருக்களாச்சேரி நாகநாத சுவாமி!

/idhalgal/om/thirukkalacheri-naganath-swami-gives-happy-life-by-getting-rid-karma

"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்யதறிவு.'

-திருக்குறள்

எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன் னாலும், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உண்மை எதுவென்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

Advertisment

ஒரு அரசன் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்தான். அப்போது வானத் தில் கழுகொன்று தனக்கு இரையாகப் பாம்பொன் றைத் தன்னுடைய கால்களில் பற்றிக்கொண்டு பறந்து சென்றது. அந்தக் கழுகின் இறுக்கமான பிடியிலிருந்த பாம்பு, தன் வாயிலிருந்து சில துளி விஷத்தைக் கக்கியது. அந்த விஷமானது அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்திற்குள் விழுந்தது. விஷம் விழுந்த உணவை, அறியாது ஒரு அந்தணருக்கு அளித்தான் அரசன்.

Advertisment

அந்த உணவை உண்ட அந்தணர் மறுகணமே இறந்து போனார். இதைக்கண்ட அரசன் மிகத் துயரமடைந் தான்.

nn

கர்ம வினைகளுக்கான பலன்களை எழுதும் சித்ர குப்தனுக்கு இந்த கர்மத்தின் வினையை யாருக்குக் கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் கர்மவினையை கழுகுக்கு அளிப்பதா அல்லது பாம்பிற்கு அளிப்பதா, அரசனுக்கு அளிப்பதா என்று பரிதவித்தார்.

கழுகு அதற்கான இரையைத் தூக்கிச் சென்றது. அது அந்தக் கழுகின் தவறல்ல.

பாம்பின் வாயிலிருந்து விஷம் வழிந்தது, சாவின் பிடியிலிருந்தபோது எதேச்சை யாக நடந்த நிகழ்வு. எனவே பாம்பின் தவறுமல்ல. அரசனுக்கு உணவில் விஷம் கலந்திருப்பது தெரியாது. அவன் அறியாமல் நடந்த நிகழ்வு அவன்மீதும் குற்றம் சுமத்துவது சரியல்ல. எனவே இந்த பிரச்சினையில் தீர்வுகாண முடியாமல் சித்ரகுப்தன் குழம்பினார்.

இதுபற்றி எமதர்மனிடம் சென்று கேட்டார். சற்றுநேரம் யோசித்த எமதர்மர். "சித்ரகுப்தா, இதற்கான பதில் விரைவில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இரு'' என்று அறிவுறுத் தினார்.

சில நாட்கள் கழித்து அரச னின் உதவியைப் பெறுவதற்காக சில அந்தணர்கள், அரண் மனைக்குச் செல்ல வழிதெரியாததால் சாலை யோரம் வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணியிடம் வழிகேட்டனர்.

அப்போது அந்தப் பெண்மணி சரியான பாதையைக் கூறியதோடு, "இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன்; சற்று எச்சரிக் கையாக இருங்கள்'' என்றும் கூறினாள்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் சித்ரகுப்தன், அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணியையே சேரும் என்று முடிவுசெய்து, அதையே பாவ- புண்ணியப் புத்தகத்தில் எழுதவும் செய்தார்.

ஆம்; மற்றவர்கள்மீது பழிசுமத்தும்போது, அதில் உண்மை இருந்தாலும், அவர்கள் செய்த கர்மவினையில் பாதிப் பழி சுமத்து பவருக்கு வந்துவிடும். அதேநேரம் உண்மையை உணராமல் அபாண்டமாகப் பழி சுமத்து வோருக்கு அந்த கர்மவினை முழுவதுமே வந்தடையும். ஆகையால் மற்றவர்களைப் பற்றிப் பேசும்போது மெய்ப்பொருளை உணர்ந்து எச்சரிக்கையுடன் பேசவேண்டும்.

ஒரு ஊரில் தர்மராட்சகன் என்ற அரசர் இருந்தார். அவர் வீரத்திலும் புகழிலும் சிறந்து விளங்கினார். மாதம் ஒருமுறையாவது வேட்டையாடச் செல்வது அவரது வழக்கம்.

அப்படி ஒருநாள் வேட்டைக் குச் செல்ல குதிரைகளைத் தயார் செய்யுமாறு கூறினார்.

வேட்டைக்குச் சென்றவர் அரண்மனைக்கு பரபரப்பாகத் திரும்பி வந்தார். பின் அமைச் சரை அழைத்து, "நமது அரண் மனை குதிரைகளுக்குப் பயிற்சியளிக்க நம் நாட்டின் சிறந்த பயிற்சியாளரைக் கண்டுபிடியுங்கள்'' என்றார் அரசர்.

இதைக்கேட்ட அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர், "அரசே, நமது அரண்மனை யில் இருக்கும் அனைத்து குதிரைகளும் சிறந் தவை. அவை போருக்குச்

இதைக்கேட்ட அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர், "அரசே, நமது அரண்மனை யில் இருக்கும் அனைத்து குதிரைகளும் சிறந் தவை. அவை போருக்குச் சென்று வெற்றியும் கண்டுள்ளன. பின் ஏன் அவற்றுக்கு மேலும் பயிற்சியளிக்கவேண்டும்?'' என்றார்.

"வேட்டைக்குச் சென்றால் குதிரைகள் காலையும், தலையையும் அசைத்துக்கொண்டே இருக்கின்றன. அதனால் அவற்றுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும்'' என்றார் அரசர். இதைக் கேட்ட அமைச்சருக்கு வியப்பாக இருந்தது. குதிரை என்றால் பூச்சி, இலை, தழை என்று ஏதாவது உடலில் படும்போது அது அசையத் தான் செய்யும். அரசர் சொல்லியபடியே குதிரை களுக்குப் பயிற்சி தரவேண்டுமென்றால் சில வருடங்கள் ஆகும். ஏன் அரசர் இப்படி கூறுகிறார் என்று யோசித்துக்கொண்டே, "அரசே, காட்டில் என்ன நடந்தது?'' என்று கேட்டார்.

அரசர், "காட்டில் ஒரு சிங்கம் தனியாக இருப் பதைக் கண்டேன். அதனை வேட்டையாட அம்பினை குறிவைத்தபோது, ஒரு குதிரை தலையை அசைத்த தால் அதன் கழுத்திலிருந்த மணிச்சத்தம் கேட்டு சிங்கம் சுதாகரித்துக்கொண்டு எங்களைத் தாக்க வந்தது. பின் சிங்கத்திடமிருந்து நானும் நம் காவலர்களும் தப்பி அரண் மனைக்கு வந்தோம்'' என்றார்.

அமைச்சருக்கு இப்பொழுது புரிந்தது. அவர் புன்னகையுடன், "அரசே, குதிரைக்குப் பயிற்சி அவசியம்தான். ஆனால் போருக் குப் போகின்ற குதிரைக்கு ஏன் கழுத்தில் மணி கட்ட வேண்டும்?'' என்றார். இப்பொழுது அரசருக் குப் புரியவந்தது. கழுத்தில் மணி கட்டியதால்தான் சத்தம் வந்தது. எனவே "குதிரையின் கழுத்தில் மணியைக் கட்டியது யார்'' என்று கூறிவிட்டு, அவர் அந்தப்புரம் சென்றுவிட்டார்.

கதையின் நீதி என்னவென்றால், எப்படி ஒரு குதிரைக்கு மணி கட்டி விட்டு வேட்டைக்குச் செல்லக்கூடாதோ, அதேபோல் நாம் ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்லும்போது நம் கவனத்தை திசை திருப்பும் காரணிகளை அருகில் வைத்திருக்கக்கூடாது.

மெய்ப்பொருளை உணராமல் செய்யும் செயல்களில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கி, எத்தகைய கர்மவினைகளையும் களைந்து, கலக்கமில்லாமல் வாழ்வில் களிப்பை வரவழைத் தருளும் உன்னதமான திருத் தலம்தான் திருக் களாச்சேரி நாகநாத சுவாமி திருக்கோவில்.

இறைவன்: நாகநாத சுவாமி.

இறைவி: சிவகாம சுந்தரியம்மை.

விசேஷ மூர்த்தி: ஆதிநாகநாதர்.

புராணப் பெயர்: திருக்குராச்சேரி.

ஊர்: திருக்களாச் சேரி.

தலவிருட்சம்: குரா மரம்.

தீர்த்தம்: சந்திர புஷ்கரணி தீர்த்தம், ஞான தீர்த்தம்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற இவ்வாலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. காவிரி தென்கரைத் தலங்களில் தேவார வைப்புத் தலமாகவும்; ராகு- கேது தோஷநிவர்த்தித் தலமாகவும்; மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன், எல்லா ஜீவராசிகளுக்கும் அருள்பாலித்து மோட்சம்பெற வழிவகை செய்யும் தலமாகவும் சிறந்து விளங்குகின்றது.

"வந்தே வாச்சித லோகஸ்ய வர்ணானம்

சோபிதம், சர்வ விக்னானம், வாசுதேவ

ருஜசுதம், சந்திர சூரிய பூஜாக்யாம்

தீர்த்த சகிதா விர்ஷ நாயகம்

சர்வரூபதரும் விஷ்ணும் துறந்தாரம்

சிவபக்தாம் ஜனராக்கியம் சர்வபிஷ்ட பலபிரதாரம்

ஸ்ரீ நாகநாதாக்கியாம்; சிவகாமேஸ்வரி... சுபம்.'

(சிவஸ்துதி நூலில் சொல்லப்பட்டது)

aa

தல வரலாறு

நந்திகேஸ்வரருக்கும், கோமாதாவுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான திருமண அழைப்பிதழை நாரதர் மூலமாக சிவகாமசுந்தரியும் மகாவிஷ்ணுவும் பெற்றுக்கொண்டு அதனை சமர்ப்பிக்க இருவரும் திருக்கயிலாயம் சென்றனர்.

அப்பொழுது கயிலாயத்தில் வசந்த மண்டபத்தில் அமர்ந்திருந்த சிவபெருமானு டைய கழுத்திலிருக்கும் ஆபரணத்தைப் பார்த்து, "ருத்ராட்சமாலை மரத்தால் செய்யப்பட்டது' என்று சுட்டிக்காட்டி தனது சகோதரர் மகாவிஷ்ணுவிடம் அம்பிகை பேசியதாலும்; மகாவிஷ்ணு சிவபெருமானின் கழுத்திலிருக்கும் நாகத்தை "நாகப்பாம்பு' என சுட்டி காட்டிப் பேசியதாலும் அக்கணமே "அம்பிகை குரா மரமாகவும், மகாவிஷ்ணு நாகமாகவும் மாறட்டும்' என சாபமிட்டார் சிவபெருமான்.

அந்த சாபத்திலிருந்து நிவர்த்திபெற திருக் களாச்சேரி சென்று அம்பிகை திருக்குரா மர உருவத்திலும், மகாவிஷ்ணு நாக உருவத்திலும் பலகாலம் தவமிருந்தனர். இதன் பயனாக கார்த்திகை, ஞாயிற்றுக்கிழமை தினங்களில் அம்பிகை சந்திர புஷ்கரணியில் தீர்த்தமாடியும், திருமால் பங்குனி உத்திரத்தன்று ஞான புஷ்கரணியில் தீர்த்தமாடியும் சுயஉருவம் பெற்றனர் என்று தலபுராணம் சொல்கிறது.

அம்பிகை திருக்குரா மரமாக இருந்து வழிபட்டதால் திருக்குராச்சேரி எனப்பட்டது. விஷ்ணு நாக வடிவில் வழிபட்டதால் சுவாமி நாகநாதசுவாமி எனப்பட்டார். திருக்குராச்சேரி நாளடைவில் திருக்களாச்சேரி என்றானது. இதற்கு வன்மீகநாதபுரம், ஞானபுரம் என்ற புராணச் சிறப்புடைய பெயர்களும் உண்டு.

சிறப்பம்சங்கள்

ப் இறைவன் நாகநாத சுவாமி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இறைவி சிவகாமசுந்தரி அழகுற காட்சியளிக்கிறாள்.

ப் சிவபெருமானும் பிரம்மதேவனும் சொக்கட்டான் ஆடியபோது, யார் வென்றதென்னும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது பிரம்மன் சிரித்தார். அதனால் சிவனின் கோபப்பார்வைக்கு ஆளான பிரம்மன், விஷவாயு தாக்கினால் எப்படி சித்தம் தெளிவில் லாமல் போகுமோ, அதுபோன்ற நிலைக்கு ஆளானார். அதிலிருந்து தெளிவுபெற திருக்களாச் சேரிக்கு வந்து அம்மையப்பன், ஆதி நாகநாதரை வழிபட்டு, ஒரு நாக சதுர்த்தி யன்று தெளிவு பெற்றதாக தலக் குறிப்பு சொல்கிறது.

ப் பரத்வாஜ மகரிஷி பிரம்ம பக்தர்.

பிரம்மனை மட்டுமே வழிபடக் கூடியவர். பிரம் மனே இத்தலத்திற்கு வந்து வழிபட்டிருக்கி றாரே என்றெண்ணி, அவர்தம் குழந்தைப் பிணி நீங்க இத்தலத்திற்கு வந்து வழிபட்டு நிவர்த்தி பெற்றார்.

ப் ஆகமங்களுக்கு ரிஷியாக இருந்த ஆபஸ்தம் பர் என்ற மகரிஷி தன் மகன் நைத்ரூவன் திருமணத்திற்காக இத்தலத்திற்கு வந்து வழிபட்டுப் பலன் பெற்றார்.

ப் அகத்தியர், போகர், பாம்பாட்டிச் சித்தர், அருணகிரிநாதர் போன்றோர் வழிபட்ட திருக்குராச்சேரியில், கௌசிகன் என்ற ரிஷியின் குருசாபம் நிவர்த்தியானதாக தலக்குறிப்பு சொல்கிறது.

ப் போதாயனம் என்னும் சூத்திரத்திலுள்ள சிவாச்சாரியார்கள் பூஜித்துப் பலன் பெற்ற இத்தலத்தில், மன்னர்களில் குலசேகர பாண்டி யன், கரிகாற்சோழன், ராஜராஜசோழன் போன்றோர் வழிபட்டுள்ளனர். மேலும் மிகவும் கொடிய நோயிலிருந்து விடுபட புலிகேசி மன்னனும் வழிபட்டுப் பலன் பெற்றதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

ப் கேதுவின் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர ஸ்தானத்தில் மூலவர் சிவன் இருப்ப தாலும், ராகுவிற்காக புற்றுக்கோவில் இத்தலத் தினுள் இருப்பதாலும் ராகு- கேது தோஷமீட்சிக்கு வலிமை சேர்க்கிறது.

ப் பெண்கள் மாப்பிள்ளை விநாயகருக்கு தீபமேற்றி, ஆதி நாகநாதரை தரிசித்து, தல விருட்சத்திற்கு மஞ்சள் நூல் சுற்றி பிரார்த்தனைகளை நிறைவேற்றி பலனடைவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

ப் சில சாபங்களே தீராத நோய், நாட்பட்ட நோய்க்கும் காரணம். அப்படிப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு நோயிலிருந்து விடுதலை பெறுவதோடு, முப்பத்து முக்கோடி தேவர்களும் சேர்ந்துவந்து வாழ்த்துகின்ற சந்திரா பலன்கிட்டும் என்று செயல் அலுவ லர் கூறுகிறார்.

ப் இறைவி சிவகாமசுந்தரிக்கு மாவிளக் கேற்றி வழிபட்டுவரும் பெண்கள் மழலை பாக்கியம் பெறுவதோடு மட்டற்ற மகிழ்ச்சியையும் அடைகிறார்கள்.

ப் இத்திருத்தலத்தின் சிறப்பு களில் ஒன்றாக, நாகலிங்க மர மொன்று மிக பிரம்மாண்டமாக கோவிலின் கிழக்குப் புறத் திலுள்ளது. நாகலிங்கமலரின் மேற்கூரையில் சின்னச்சின்ன மொட்டுகள் இருக்கும். அந்த தும்பி தளத்திலிருந்து 24 வினாடிக்கு ஒருமுறை பனித்துளி அளவு தண்ணீர் லிங்கத்தில் விழும் அதிசயம் நடைபெறும்.

நாகம் குடைபிடிக்க, உள்ளே லிங்கம் இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்க மலர் பூக்கும் பூவுலகில், மகத்தான நாகலிங்க மரம் நாம் வாழும் காலத்திலேயே இன்றும் தென்படுவது நாம் பெற்ற புண்ணியப் பேறே, நாகலிங்க மர தரிசனம் நமக்குள் கால சக்தியை யும் கால உணர்வையும் இயங்க வைப்பதாகும். நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது. நாகலிங்கப் பூவை மரத்திலிருந்து பறிக்கும்போது கைக்கு இதமான உஷ்ணம் இருப்பதை உணர்ந்திடலாம். இதுவே யோகபுஷ்ப தவச் சூடாகும். இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது.

ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் சூரிய- சந்திர கிரணங்களின் யோக சக்தியைக் கொண்டு மட்டுமே மலர்கின்றதென்ற விஷயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் உணர்த்தினார்கள். நாகலிங்க மரம் இருந்தால் அந்த ஊர் செழிப்புற்று இருக்குமென்றும் கூறியுள்ளார்கள்.

நாகலிங்கப் பூவால் ஆற்றும் பூசனை மரணபயத்தைப் போக்குவதோடு பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தரவல்லது. ஆதிநாகநாதர் இருக்குமிடத்தில் ஒரு ராஜநாகம் இப்பொழுதும் இருக்கிறது. பேச்சு ஒன்றைத் தவிர மற்ற அனைத்து சக்திகளும் அந்த பாம்பிற்கு இருப்பதாய் சொல்லப்படுகிறது. அந்த நாகம் நள்ளிரவில் சுவாமியை தரிசிக்கும் வகையில் படமெடுத்தாடி, சுவாமியின் காதில் "உஷ்' என்ற சத்தத்துடன் சங்கீத பாஷையில் ஓதுவதைப் பலரும் கண்டிருக்கிறார்கள். இதை மாசி மாதத்தில் போதாயன சிவராத்திரியன்று பக்தர்கள் கண்டு பிரம்மித்ததுண்டு. நாகம் புற்றில் இருக்கும்போது பலவித வாசனைகளை வெளிப்படுத்துவதைக் கொண்டு, இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்கிறார்கள்.

இந்த ராஜநாகம் தண்டுலிங்கம் என்று சொல்லும் ஆதி நாகநாதருக்கு நாகலிங்கப்பூவை எடுத்து வந்து சாற்றி வணங்குவது ஓர் ஆச்சரியமான செய்தி என்கிறார் கோவில் பணியாளர் தீனதயாளன்.

பலராலும் விரும்பப்படுகின்ற இந்த நாக லிங்கமரத்தின் கனி ஆண் மலட்டுத்தன்மையை நீக்குகிறதென்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார் கள். அதைச் சார்ந்துள்ள வேப்பமரம் நாக மரத்தோடு இருப்பது ஆண்- பெண் திருமண வைபவத்திற்கான தலம் இதுவென்பதற்கு சாட்சியாய் அமைந்துள்ளது.

ப் கீரியும் பாம்பும் இந்த தலத்தின் தான் சண்டையில்லாமல் மூலவருக் கருகே இருந்ததை சிவாச்சாரியார்கள் கண்டிருக்கிறார்கள். பகைகூட பாசமாய் மாறிவிடும் என்கிறார் ஆலய அர்ச்சகர்.

ப் துர்க்கை வடக்கு நோக்கி சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அமைப்பு வேறேங்கும் காணவில்லாத மிக அபூர்வ மான அமைப்பாகும். இந்த துர்க்கையை செவ்வாய், வெள்ளி ராகு காலத்தில் வழிபட்டால் துன்பங்கள், துயரங்களிலிருந்து மீள்வதோடு ராகுவின் எதிர்மறை தாக்கத்தைக் குறைக்கும்; கூடுதல் வலிமை சேர்க்கும்.

ப் மூலவருக்கும், ஆதிநாதருக்கும் சாம்பிராணி தைலம் மூலமாக வாரம் ஒருநாள் விசேஷக்காப்பு பூசப்படுகிறது. விசேஷ சக்தி எப்போதும் நிலைகொண்டிருக்க இந்தக் காப்பு பூசப்படுகிறதாம்.

திருக்கோவில் அமைப்பு திருக்களாச்சேரி ஊர்ப் பேருந்து நிலையத் தின் அருகில் ஞான தீர்த்தக் குளம் உள்ளது.

மேற்கே ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவிலும், கிழக்கே தேரடி விநாயகர் கோவிலும், வடக்கே சீதள மாரியம்மன் ஆலயமும், ஐயனார் கோவிலும், தெற்கே பெட்டி காளியம்மன் கோவிலும் சூழ, நடுவே பெரிய அளவு நிலப்பரப்பில் இரண்டு பிராகாரங் களுடன் இத்திருத்தலம் கிழக்கு நோக்கி அமைந் துள்ளது.

முகப்பு வாயிலைக் கடந்தவுடன் வலப்புறம் நாகலிங்கமரம் வேப்பமரம், வில்வமரங்கள் உள்ளன. உள் நுழைவாயிலைக் கடந்தவுடன் தெற்குநோக்கி சிவகாமசுந்தரி தனிச்சந்நிதி கொண்டு அருள்கிறாள். கருவறை மண்டபத் தில் மூலவர் நாகநாதர் சுயம்பு மூர்த்தியாய் அருள்கிறார். உட்பிராகாரத்தில் க்ஷேத்திர விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகன், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. வாயு மூலையில் திருக்குரா மரம், பாம்புப் புற்றுடன்கூடிய நாகநாதர் சந்நிதி உள்ளது. நாகவிநாயகர், மாப்பிள்ளை விநாயகர் அருள்கிறார்.

சிவாலயத்திற்குரிய காலபூஜைகள், விழாக்கள் முறையாக நடக்கின்றன. குறிப்பாக பங்குனி உத்திரத் திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும் இவ்வாலயம், கடைசியாக 23-4-2007-ல் குடமுழுக்கு கண்டு 17 ஆண்டு கள் பூர்த்தியடைந்த நிலையில், அடுத்த கும்பா பிஷேகத்தை எதிர்நோக்கி உள்ளது. விரைவில் கும்பாபிஷேகத் திருப்பணி தொடங்க உள்ளது.

அடிக்கடி பாம்பு கனவில் வருகிறதா? தங்கள் குடும்ப நபர்கள் எவரேனும் பாம்பைக் கொல்லவேண்டிய நிலை ஏற்பட்டு அதன் மூலம் மனஅமைதி கெடுகிறதா? நாகதோஷம் உள்ளதா? "ஜாதகத்தில் 2, 8-ஆமிடத்தில் ராகு- கேது உள்ளவர்கள் இரண்டு திருமணங்கள் செய்கின்ற சூழல் வரும்' என்று ஜோதிடம் சொல்கிறதே- அதுபோன்ற அமைப்புள்ளதா? ஜாதகத்தில் 5-ஆமிடத்தில் ராகு- கேது அமர்ந்து, அதனால் புத்திர பாக்கியம் கிட்டவில்லையா? ஜாதகத்தில் 1, 7-ல் சர்ப்பகிரகங்கள் அமைந்து, கணவன்- மனைவி புரிந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதா? சர்ப்பத்திடம் சாபம் வாங்கிய குடும்பத்தில் வழிவழியாக வந்து, காலசர்ப்ப தோஷத்தில் பிறந்தவரா? இதுபோன்று எத்தகைய தோஷங் களாகட்டும்; எத்தகைய கர்மவினைகளை அனுபவித்தவர்களாகட்டும்; எதுவாகட்டும்- கவலையை திருக்களாச்சேரியில் இறக்கி வையுங்கள். அங்கே வீற்றிருக்கும் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநாகநாதர், ஆதி நாகநாதர் தங்கள் மனச்சுமையை இறக்கி காலசர்ப்ப தோஷத்தை மாற்றி, கர்மவினைகளை, மனக்கஷ்டங்களைக் களைந்து, களிப்பான வாழ்வைத் தந்தருள்வார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலயப் பிரதான அர்ச்சகர் வெங்கட்ரமணி சிவாச் சாரியார்.

நாகதோஷங்களைக் களைந்து நல்லன எல்லாம் தந்தருள்கின்ற நாகநாதசுவாமி அடி பணிவோம். அகம் மலர வாழ்வோம்.

காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத்தொடர்புக்கு:

செயல் அலுவலர், ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோவில், (ராகு- கேது பரிகாரத்தலம்) திருக்களாச்சேரி (அஞ்சல்) தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்- 609 312.

பூஜை விவரங்களுக்கு: வி. வெங்கட்ரமணி சிவாச்சாரியார், அலைபேசி: 93619 06745, 75989 04484. திருக்கோவில் பணியாளர் தீனதயாளன், அலைபேசி: 77087 16122.

அமைவிடம்: மயிலாடுத்துறையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கடை யூரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும், பொறையாருக்கு மேற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் ஆலயம் அமைந்துள் ளது. திருக்கடையூர், தில்லையாடி, காட்சேரி வழியாகவும் செல்லலாம், பேருந்து, சிற்றுந்து வசதி உள்ளது.

படங்கள்: போட்டோ கருணா

om010924
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe