தண்ணீருக்குள் இருந்தும் தாகம்! -யோகி சிவானந்தம்

/idhalgal/om/thirst-water-yogi-sivanandam

"ஓம் சரவணபவ' வாசக அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

"நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடி மரத்தை வெட்டுகிறான்' என்றொரு பழமொழி யுண்டு. விளைவு, மரம் அழிவது மட்டுமல் லாமல் மனிதனும் அழிந்துவிடுவான் என்பதே உண்மை. "மனிதன் என்பவன் தெய்வமாக லாம்; வாரிவாரி வழங்கும்போது வள்ளலாக லாம்' என்றொரு பாடல் உண்டு. எவ்வாறு? மனிதன் தேவரூபம் என்கிறார்கள். தேவன் என்றால் மகாதேவன் சிவபெருமான் என்று பொருள். கடவுளால் உருவாக்கப்பட்டவன் ஏன் கடவுளின் குணங்களோடில்லை? மனிதன் இங்கு பிறந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளாததே காரணமாகும்.

ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை மும்மலங்கள் என்று சித்தர்களும் ஞானிகளும் கூறுகின்றனர். இவை உடலி−ன் 96 தத்துவங்களில் ஒன்றாகும். இவை மூன்றும் ஒரு மனிதனிடம் இருக்கக் கூடாததாகும். "நீ எதைக் கொண்டுவந்தாய்- அதை நீ இழப் பதற்கு?' என்னும் கீதையின் கருத்தை எண்ணிப் பார்க்கவேண்டும். பிறப்பும் நிர்வாணம்; இறப் பும் நிர்வாணம்.

ஒரு மனிதனுக்கு மும்மலங்கள் அழியவில்லையெனில், அவனுக்கு வீடுபேறு நிச்சயம் கிடையாது. வீடுபேறென்பது இறப்ப தல்ல; எம்பெருமான் ஈஸ்வரனின் திருவடியை அடைவதாகும். உயிரே சொந்தமில்லை எனும்போது உடைமைகள் எதுவும் நமக்குச் சொந்தமாகாது.

"மெர்சிடிஸ் பென்ஸ்' கார் வைத்திருப்ப வரும

"மெர்சிடிஸ் பென்ஸ்' கார் வைத்திருப்ப வரும் மண்ணுக்குள் போகவேண்டும். மிதிவண்டி வைத்திருப்பவரும் மண்ணுக் குள்ளேதான் செல்லவேண்டும். இதுதான் இயற்கையின் விதி. சரி; வீடுபேறடைய என்ன செய்யவேண்டும்? முதலி−ல் எதுவும் தன்னுடையதல்ல என்னும் எண்ணம் உருவாகவேண்டும். "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்னும் சிந்தனை வளரவேண்டும். அப்போதுதான் இந்த மானிடப் பிறப்பின் மகத்துவம் முழுமையடைய முடியும். இதற்கு ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டிய, காக்க வேண்டிய கடமைகள் பற்றி சங்க நூல்களில் ஒன்றான "ஆசாரக்கோவை' கூறுவதைப் பார்ப்போம்.

"தக்கிணை, வேள்வி, தவம், கல்வி இந்நான்கும்

முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க- உய்யாக்கால்

எப்பாலும் ஆகாக் கெடும்.'

அதாவது, கற்பித்த ஆசிரியருக்கு காணிக்கை தருதல், வேள்விசெய்தல், தவம் மேற்கொள்ளுதல், கற்றறிதல் ஆகிய நான்கினையும் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், அறம், பொருள், இன்பம் என வகுத்த முப்பால் கூறும் வழியில் நின்று காத்து வளர்க்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இவ்வழிகளை மேற் கொள்ளாவிட்டால், எந்த இடத்திலும் இவற்றால் உண்டாகும் பயன் கிடைக்காமல் பாழ்படும்.

புதிய கண்டிப்புகள் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நம் மனதை சரி செய்யுமா என்று யோசிக்கவேண்டும். மேற்கண்ட நற்பண்புகளை ஒருமனிதன் கடைப்பிடிக்கும்போது அவனுக்கு வீடுபேறு (மோட்சம்) என்பது எளிதாகிவிடும். எங்குமுள்ள ஈசனின் திருவடியில் உறைவதே வீடுபேறு.

ater

இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை சங்க காலத்தில் வாழ்ந்த அவ்வையார் எவ்வளவு அழகாக- எளிமையாகக் கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம்.

"பாலின்கண் நெய்போல் பரந்தெங்கு நிற்குமே

நூலி−ன்கண் ஈசன் நுழைந்து.'

பாலானது தயிராகிறது. தயி ரைக் கடைந்தெடுக் கும் போது வெண்ணெய்யாக உருமாறுகி றது. அந்த வெண் ணெய்யை உருக் கும்போது நெய்யாக மாறுகிறது. எனவே பாலில் தான் நெய் இருக்கிறது. ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது. பாலில் நெய் மறைந்திருப்பதுபோலவே, ஒரு மனிதன் சுவாசிக்கும் மூச்சின்கண் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்கிறார்.

இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது தொலைக்காட்சியில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது. "சுமார் 25 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தைக் கொள்ளையடித்துவிட்டனர்' என்பதே அந்த செய்தியாகும். நாடு எங்கு போய்க்கொண்டிருக்கிறது? வெங்காயம் திருட்டுபோன இடத்திலிருந்த நகையோ, பணமோ களவாடப்படவில்லை. வெங்காயம் மட்டும் திருடப்பட்டிருக்கிறது. இதுதான் ஆரம்பம். நாம் சந்திரனுக்கு சந்திராயனையும், செவ்வாய்க்கு மங்கள்யானையும் அனுப்பினோம். மனித இனம் வாழ புதிய கிரகம் கண்டுபிடித்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை.

இப்படிச் சொல்லி−ச் சொல்−யே, இருந்த நல் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம். இனிவரும் காலங்களில் வைரம் திருட்டுப்போகாது; தங்கம் திருட்டுப்போகாது; பிளாட்டினம் திருட்டுப்போகாது; கோவில்களில் உள்ள புரதானச் சிலைகள் திருட்டுப் போகாது. இனிவருங்காலங்களில் சமைத்துவைத்த உணவுப்பொருள் திருடப்படும் நிலை வரலாம். உணவு சமைக்க எரிபொருளாக விறகைப் பயன் படுத்தியபோதுகூட வனங்களும், மரங்களும் அழிய வில்லை; சுற்றுச்சூழல் கெடவில்லை. இப்போது விவசாயமே சீர்குலைந்துவிட்டது. தண்ணீர்ப் பஞ்சமோ தலைவிரித்தாடுகிறது. சுற்றுச்சூழலை சீர்குலைத்துவிட்டோம். ஆரோக்கியமும் வெகு வேகமாக அழிந்துவருகிறது. இறைபயம் போய் விட்டது. ஒழுக்கக்கேடு அதிகரித்துவிட்டது.

"படினும் பயனிலவும் பட்டி உரையும்

வசையும் புறனும் உரையாரே என்றும்

அசையாத உள்ளத்தவர்.'

நல்ல மனிதர்கள் பொய் பேசமாட்டார்கள். பயனற்ற, வீணான சொல்லைக் கூறமாட்டார் கள். வீண்வார்த்தைகளை விரும்பவும் மாட்டார்கள். வைய (திட்டுவது) மாட்டார்கள். புறங்கூற மாட்டார்கள். நடுநிலைமையை என்றும் தவறமாட்டார்கள். இத்தகைய குணங்களை ஒருங்கே பெற்ற நல்ல உள்ளம் படைத்தவர்களாக இருப்பார்கள். இந்த ஆசாரக் கோவைப் பாடலிலிருந்து நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது "நல்ல உள்ளம்' என்பதாகும்.

நல்ல உள்ளத்தில்தான் நல்ல எண்ணமும், நல்ல சிந்தனையும் உருவாகும். அதுவே குடும்பத்திலும், சமுதாயத்திலும் நல்ல செயல்கள் உருவாகக் காரணமாக அமையும்.

நல்ல செயல்களின்மூலம் நல்ல விளைவுகள் ஏற்படும். அது மிக உயரிய பலன்களைக் கொடுக்குமென்பதே உண்மையாகும். உள்ளம் தூய்மையாகும்போது வீடு தூய்மையாகும்; வீடு தூய்மையாகும்போது வீதி தூய்மை யாகும்; கிராமமே தூய்மையாகும். பின்னர் நாடே தூய்மையாகும். நாடும் வீடும் தூய்மை யாகும்போது, இறைவன் குடிகொண்டிருக்கும் இவ்வுடலெனும் வீடானது பேரின்ப வீடுபேற்றினையடையும்.

வீடுபேற்றினையடைய மாணிக்கவாசகர் எம்பெருமானிடம் வேண்டுவதைப் பார்ப் போம்.

"வெள்ளத்துள் நாவற்றியாங்கு உன்

அருள்பெற்றுத் துன்பத்து இன்றும்

விள்ளக்கிலேனே விடுதி கண்டாய்

விரும்பும் அடியார்

உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தர

கோச மங்கைக்கு அசே

கள்ளத்து உளேற்கு அருளாய்

களியாத களி எனக்கு.'

தண்ணீருக்குள் இருந்தும் தாகத்தால் நாவறண்டு தவிக்கும் ஒரு மூடனைப் போல, நான் உன் திருவருளை அடையப்பெற்றிருந்தும் துன்பத்தி−ருந்து விடுபட இயலாது தவிக்கிறேன். விரும்பித் தொழுவாரது மனத் தகத்து இடம்கொண்டிருக்கும் உத்தரகோச மங்கைக்கு இறைவா! கள்ளமனம் கொண்ட என்னைக் கைவிட்டுவிடாமல் காத்தருள் செய்க. நின் பேரின்பப் பெருவாழ்வாகிய பேற்றினை எனக்கு அருளிச் செய்வாயாக!

நம் ஒவ்வொருவரின் உள்ளம் தூய்மை யாகும்போது இவ்வுலகே தூய்மையாகும். உமையொருபாகனாம் சிவபெருமானின் உள்ளத்திலும் நமக்குமொரு இடம் கிடைக்கு மென்பது நிச்சயம்.

om010120
இதையும் படியுங்கள்
Subscribe