தவறாமல் செய்யுங்கள் தர்ப்பணம்! - ஸ்ரீ ஞானரமணன்

/idhalgal/om/tharpanam-do-it-regularly-sri-gnanaramanan

ற்போது, வடபாரதத்தில் பீகார் மாநிலத்திலுள்ள கயை புண்ணிய பூமியிலும், பத்ரிநாத்தில் அமைந்துள்ள பிரம்ம கபாலம் என்னும் பாறையிலும் ஆத்ம தர்ப்பணம், பிண்டம் அளிக்கும் வழக்கம் உள்ளது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள்கூட இவ்விடங்களில் ஆத்ம தர்ப்பணம் அளிக்கின்றனர்.

கயை புண்ணிய பூமியானது கயாசுர மகரிஷியின் திருவுடலாகும். கயையில் ஓடும் பல்குனி நதி பித்ருகளுக்கு சாந்தியளிக்கும் தெய்வீகத் தன்மையைத் தன்னகத்தே உடையது.

எனவே பல்குனி ஆற்றில் அளிக்கப்படும் தர்ப்பணங்களும் பிண்டங்களும் மிகவும் சக்திவாய்ந்தவையாகின்றன. இங்கு தர்ப்பணம் அளிப்போர் இடைத்தரகர்களை நாடாது, தனக்குத் தெரிந்த எளிய முறையில் பல்குனி நதியில் தர்ப்பணம் அளிப்பது மிக்க மகிழ்ச்சியையும் சாந்தியையும் அளிக்கக்கூடியதாகும். கயாசுர மகரிஷியே ஜீவன்களின் கர்ம வினைகளைத் தம்முள் ஏற்பதால், இங்கு தர்ப்பணமிடுவது சிறப்பு டையதாகிறது.

th

பிண்டம் என்னும் தேவ உருண்டை சாந்தமான மனத்துடன், உள்ளன்புடன் அரிசியைச் சமைத்து உணவாக்கி, சாதத்தை உருண்டை வடிவில் நம் மூதாதையர்களுக்கு அளிப்பதையே பிண்டம் அளித்தல், பிண்ட தர்ப்பணம் என்று அழைக்கிறோம்.

தேவர்கள் யாகம் நடத்த தன் உடல் அவயங்கள் அனைத்தையும் தியாகம் செய்த கயாசுர மகரிஷியின் தவத்தை மெச்சிய மகாவிஷ்ணு, தன் திருப்பாதத்தை அவர் உடல்மேல் வைத்த இடமே கயை பூம

ற்போது, வடபாரதத்தில் பீகார் மாநிலத்திலுள்ள கயை புண்ணிய பூமியிலும், பத்ரிநாத்தில் அமைந்துள்ள பிரம்ம கபாலம் என்னும் பாறையிலும் ஆத்ம தர்ப்பணம், பிண்டம் அளிக்கும் வழக்கம் உள்ளது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள்கூட இவ்விடங்களில் ஆத்ம தர்ப்பணம் அளிக்கின்றனர்.

கயை புண்ணிய பூமியானது கயாசுர மகரிஷியின் திருவுடலாகும். கயையில் ஓடும் பல்குனி நதி பித்ருகளுக்கு சாந்தியளிக்கும் தெய்வீகத் தன்மையைத் தன்னகத்தே உடையது.

எனவே பல்குனி ஆற்றில் அளிக்கப்படும் தர்ப்பணங்களும் பிண்டங்களும் மிகவும் சக்திவாய்ந்தவையாகின்றன. இங்கு தர்ப்பணம் அளிப்போர் இடைத்தரகர்களை நாடாது, தனக்குத் தெரிந்த எளிய முறையில் பல்குனி நதியில் தர்ப்பணம் அளிப்பது மிக்க மகிழ்ச்சியையும் சாந்தியையும் அளிக்கக்கூடியதாகும். கயாசுர மகரிஷியே ஜீவன்களின் கர்ம வினைகளைத் தம்முள் ஏற்பதால், இங்கு தர்ப்பணமிடுவது சிறப்பு டையதாகிறது.

th

பிண்டம் என்னும் தேவ உருண்டை சாந்தமான மனத்துடன், உள்ளன்புடன் அரிசியைச் சமைத்து உணவாக்கி, சாதத்தை உருண்டை வடிவில் நம் மூதாதையர்களுக்கு அளிப்பதையே பிண்டம் அளித்தல், பிண்ட தர்ப்பணம் என்று அழைக்கிறோம்.

தேவர்கள் யாகம் நடத்த தன் உடல் அவயங்கள் அனைத்தையும் தியாகம் செய்த கயாசுர மகரிஷியின் தவத்தை மெச்சிய மகாவிஷ்ணு, தன் திருப்பாதத்தை அவர் உடல்மேல் வைத்த இடமே கயை பூமியாகும். பித்ருகளுக்கு அதிபதியாக விளங்கும் மகாவிஷ்ணுவின் திருப்பாதங்கள் பதிந்த கயை பூமி பித்ரு தர்ப்பணத்திற்கு உகந்த இடமாக விளங்குகிறது.

பிண்டமாக மாறும் தேவ கனிகள் அரிசி சாதமே தூய பிண்டமாக இருப்பினும், மா, பலா, வாழை, கிருணிப்பழம் போன்ற சில குறிப்பிட்ட பழவகைகளைப் பிண்டமாக அளிப்பதும் உண்டு.

இவ்வாறு அளிக்கப்படும் அரிசி, பழ உணவு வகைகளை பூமாதேவியே ஏற்று பித்ருகளுக்கு அளிக்கிறாள். கயாசுர மகரிஷியானவர், "தன் உடலைத் தொடுபவர் எவராயினும் புனிதம் பெறவேண்டும்;

அவர்களுடைய கர்மவினைகள் கழிந்திடத் தம் தபோபலம் பயன்படவேண்டும்' என்று வேண்டி வரம் பெற்று, அன்றும் இன்றும் என்றும் புனிதத்தின் சிகரமாய் விளங்குபவர்.

கயாசுர மகரிஷியின் திருமேனியின்மேல் கயா நகரம் அமைந்துள்ளதாலும், தெய்வீகப் பல்குனி நதி கயாசுர மகரிஷியின்மேல் ஓடுவதாலும் அதன் மகத்துவம் பன்மடங்காய்ப் பிரகாசிக்கிறது. பொறுமையின் சிகரமாய் விளங்கும் பூமாதேவி பூமியில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களையும் அதர்மங்களையும் அநீதிகளையும் வேதனையுடன் பொறுத்து நமக்கு அருள்பா−க்கிறாள். இருப்பினும் பூலோகத்தின் சில இடங்களில் மட்டும் பூமாதேவி ஆனந்தத்துடன் திகழ்கிறாள்.

ஸ்ரீராமர் தன் திருமேனியுடன் நீரில் இறங்கி ஜோதியாய் ஐக்கியமான (அயோத்தியா) சரயு நதிக்கரை, கயா, கங்கை சமவெளியில் பாயும் ஹரித்வார், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த மதுரா, ஸ்வயம்பு மூர்த்திகளின் பிறப்பிடமான திருவண்ணாமலை, பூமியினடியிற் சிவ−ங் கங்கள் நிறைந்திருக்கும் சிவபுரம், சிவபெருமான் பூமியில் மறைந்த கேதார்நாத்- இவ்வாறாக பூமிதேவி பேரானந்தத்தில் திளைத்திருக்கும் தலங்களில் பூமிபூஜை, ஹோமம், தர்ப்பணம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும்.

தேவர்களின் யாககுண்டமே கயா!

பொதுவாக புனிதநீர்மூலமாகவே தர்ப்பணத்தைப் பெறும் பித்ருகள், இத்தகைய விசேஷமான பிண்ட தர்ப்பணத் தலங்களில் அன்ன சாரத்தையும், பழசாரத்தையும் ஏற்கின்றனர். மேலும் கயா பூமியில்தான் பிரபஞ்சத்தின் மிகப்பெரும் யாகங்களுள் ஒன்று நிகழ்ந்தது. அதாவது கயாவில் பிண்ட தர்ப்பணம் செய்யப்படும் இடமானது, தேவர்களின் யாகசாலை யாகவும் அமைந்திருக்கிறது.

ஷண்ணாவதி தர்ப்பணம்

அறுபதினாறு (6 ஷ் 16) விளக்கம்:

12 மாத அமாவாசைகள், 12 தமிழ்மாதப் பிறப்புகள், 12 மாதாந்திர வியதீபாத யோக நாட்கள், 12 மாதாந்திர வைதிருதி யோக நாட்கள், மார்கழிமுதல் பங்குனிவரை மும்மூன்று நான்கு மாதங்களிலும் வரும் பன்னிரண்டு அஷ்டகச் சிரார்த்த நாட்கள், புரட்டாசி மாதத்தின் பதினான்கு மகாளயபட்ச திதி நாட்கள், கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலி−யுகம் ஆகிய நான்கு யுகத்தோற்ற தினங்கள், நம்மைத் தோற்றுவித்த பதினான்கு மனு தேவ ஜெயந்தி நாட்கள் போன்றவை இந்த தொன்னூற்றாறில் வரும். இந்த நாட்களில் மானிடப் பிறவிக்குக் காரணமான நம் முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டியது நமது தலையாய கடமையாகும். இந்த எள் நீருக்காக அவர்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் இன்று வாழும் இந்த வாழ்க்கை, அனுபவிக்கும் மூதாதையர் சொத்துகள் யாவும் அவர்கள் தியாகமயமாக நமக்கு அளித்ததே. ஒவ்வொரு நொடியும் அந்தப் புண்ணிய சக்தியால்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

அங்குபோய் அவர்களால் ஒரு விநாடிகூட சும்மா இருக்கமுடியாது. அவரவருக்கு விதிக்கப்பட்ட இலக்கை எட்டவேண்டும்.

வருகிற மகாளய அமாவாசை (28-9-2019) அன்று, அருகி−ருக்கும் புனிதத்தலங்களில் முன்னோர்களுக்கான திதி வழிபாட்டினைச் செய்யலாம்.

எடுத்துக்காட்டாக, சென்னை அருகே உள்ள திருவள்ளூர் திருக்குளத்தில் புனித நீராடி இந்த கிரியை செய்யலாம். அவர் களே நேரில்வந்து பெறுவதுபோலாகும். எப்படியென்றால் இது பித்ரு மோட்சத் தலமாகும். நிறைவாக, குறைந்தது மூன்று நபர்கள், அதிகபட்சம் 12 நபர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

காக்கைக்கு அன்னம், நாய்களுக்கு பொறை, பிஸ்கட்டுகள், பசுமாட்டிற்கு 12 வாழைப்பழங்கள், அகத்திக்கீரை கொடுத்தல் போன்று எல்லாமே அன்னதான வகையைச் சார்ந்ததாகும். அவரவர் நிலையுணர்ந்து செயல்படலாம். மனநிறைவு, பொறுமை, முழு ஈடுபாடு முக்கியம்.

மூதாதையர்களின் திருவுருவப் படங் களுக்கு சந்தனம், குங்குமமிட்டு வந்தனம் செய்வோம். கடைகளில் விற்கும் பவுடரை விட, சந்தனக்கட்டை கொண்டு அரைத்து இடுவதே கரபூஷண சேவையாகும். பின்னர் இறைவனின் படங்களுக்கும் இடலாம்.

நம் மூதாதையர்களின் படத்தை சுவாமி படங்களுடன் சேர்த்து மாட்டாமல், தென்புலத்தார் என்பதால் தென்திசை நோக்கி மாட்டலாம். மின்விளக்கு அலங்காரம் வேண்டாம். அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் அளிக்கும் அரிசி, வாழைக்காய், படையல், அன்னதானம் எல்லாம் அக்னி பகவானின் மனைவியால் (ஸ்வதா தேவி) கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களுக்குப் போய்ச் சேருகிறது. செய்யவேண்டியது நம் கடமை; பலனைத் தருவது இறைவன்.

சில முக்கியத் பித்ரு தலங்கள்

கும்பகோணம்- திப்பிராஜபுரம்- ஆலங்குடி வழியில் திப்பிராஜபுரத்தில் விசாரித்து சேஷம்பாடிக்குச் செல்லலாம். திருச்சி- லால்குடி அருகில் பூவானூர், சென்னை அருகே திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், மயிலாடுதுறை- கூத்தனூர் பூந்தோட்டம் அருகில் தில தர்ப்பணப்புரி (செதலபதி), ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருவாரூர் அருகே குருவிக்கு முக்கியளித்த குருவித்துறை, திருராமேஸ்வரம், கேக்கரை (கயாக்கரை), திருவண்ணாமலை, புதுக்கோட்டை அருகில் பாம்பாறு பாயும் நெடுங்குடி உள்ளிட்ட தலங்களில் தர்ப்பண மளிக்கலாம்.

om010919
இதையும் படியுங்கள்
Subscribe