தரணி போற்றும் தமிழர் திருநாள்! -பொற்குன்றம் சுகந்தன்

/idhalgal/om/thanks-tamil-day-guest-sukandan

தொன்றுதொட்டு தமிழர்கள் கொண்டாடிவரும் தலைசிறந்த விழாவாக பொங்கல் விழா விளங்குகிறது. இயற்கை யோடு இயைந்ததாகவும், அனைவராலும் கொண்டாடப்படும் சமூகவிழாவாகத் திகழ்வ துமே இதன் தனிச்சிறப்பாகும். இவ்விழாவில் சூரியனே முதன்மை நாயகன்!

"கண்கண்ட தெய்வம்' என்று போற்றப் படுபவர் சூரியன். சூரியனின் தோற்றம் குறித்துப் புராணங்கள் பலவாறு பேசுகின்றன. "வைவஸ்த மன்' என்னும் மந்திர நூல், "ஸ்வேத வராக கல்பத் தின் தொடக்கத்தில் விராட் புருஷனுடைய கண்களிலிருந்து சூரியன் அவதரித்தான் என்கிறது. உலகம் தோன்றியதும் "ஓம்' என்னும் ஒலி எழுந்தது. அந்த ஓசையிலிருந்து சூரியன் தோன்றினான் என்கிறது சூரிய புராணம்.

கச்யபர்- அதிதி தம்பதியருக்குப் பிறந்தவன் சூரியன். பிரபவ ஆண்டு, மகாசுக்ல சப்தமியில், விசாக நட்சத்திரத் தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத் திலிருந்து ஒளி தோன்றியது. அதிலிருந்து பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித் தார்கள். அந்தப் பன்னிரண்டு பிள்ளை கள் ஒன்றுசேர்க்கப்பட்டு, சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களுடன் உலா வருகிறான் என்கிறது சாம்ப புராணம்.

சூரியனுக்கு ஆயிரக்கணக்கான பெயர்களுண்டு. அவையெல்லாம் காரணப் பெயர்கள்.

தமிழ்நாட்டில், குடந்தைக்கு அருகி லுள்ள சூரியனார் கோவில் மிகவும் புகழ் பெற்றது. தஞ்சைக்கு அருகிலுள்ள திருக்கண்டியூரில் கல்பசூரியன் அருள் புரிகிறார். மற்றும் வீரட்டம், திருப்புறவார், பனங்காட்டூர் ஆகிய ஊர்களிலும் சூரியனுக் குக் கோவில்கள் உள்ளன. இதேபோல் வட நாட்டில் துவாரகா, கோனார்க், பூரி, கயா ஆகிய நகரங்களில் சூரியனுக்கென்றே புகழ் பெற்ற கோவில்கள் உள்ளன. காசியில் (வாரணாசி) மட்டும் சூர

தொன்றுதொட்டு தமிழர்கள் கொண்டாடிவரும் தலைசிறந்த விழாவாக பொங்கல் விழா விளங்குகிறது. இயற்கை யோடு இயைந்ததாகவும், அனைவராலும் கொண்டாடப்படும் சமூகவிழாவாகத் திகழ்வ துமே இதன் தனிச்சிறப்பாகும். இவ்விழாவில் சூரியனே முதன்மை நாயகன்!

"கண்கண்ட தெய்வம்' என்று போற்றப் படுபவர் சூரியன். சூரியனின் தோற்றம் குறித்துப் புராணங்கள் பலவாறு பேசுகின்றன. "வைவஸ்த மன்' என்னும் மந்திர நூல், "ஸ்வேத வராக கல்பத் தின் தொடக்கத்தில் விராட் புருஷனுடைய கண்களிலிருந்து சூரியன் அவதரித்தான் என்கிறது. உலகம் தோன்றியதும் "ஓம்' என்னும் ஒலி எழுந்தது. அந்த ஓசையிலிருந்து சூரியன் தோன்றினான் என்கிறது சூரிய புராணம்.

கச்யபர்- அதிதி தம்பதியருக்குப் பிறந்தவன் சூரியன். பிரபவ ஆண்டு, மகாசுக்ல சப்தமியில், விசாக நட்சத்திரத் தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத் திலிருந்து ஒளி தோன்றியது. அதிலிருந்து பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித் தார்கள். அந்தப் பன்னிரண்டு பிள்ளை கள் ஒன்றுசேர்க்கப்பட்டு, சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களுடன் உலா வருகிறான் என்கிறது சாம்ப புராணம்.

சூரியனுக்கு ஆயிரக்கணக்கான பெயர்களுண்டு. அவையெல்லாம் காரணப் பெயர்கள்.

தமிழ்நாட்டில், குடந்தைக்கு அருகி லுள்ள சூரியனார் கோவில் மிகவும் புகழ் பெற்றது. தஞ்சைக்கு அருகிலுள்ள திருக்கண்டியூரில் கல்பசூரியன் அருள் புரிகிறார். மற்றும் வீரட்டம், திருப்புறவார், பனங்காட்டூர் ஆகிய ஊர்களிலும் சூரியனுக் குக் கோவில்கள் உள்ளன. இதேபோல் வட நாட்டில் துவாரகா, கோனார்க், பூரி, கயா ஆகிய நகரங்களில் சூரியனுக்கென்றே புகழ் பெற்ற கோவில்கள் உள்ளன. காசியில் (வாரணாசி) மட்டும் சூரியனுக்கு 12 கோவில்கள் உள்ளன.

சூரியனுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயருண்டு. தை மாதத்தில் விஷ்ணு, மாசி மாதத்தில் வருணன், பங்குனியில் பூஜா, சித்திரையில் அம்சுமான், வைகாசியில் தாதா, ஆனியில் சவிதா, ஆடியில் அரியமான், ஆவணியில் விஸ்வான், புரட்டாசியில் பகன், ஐப்பசியில் பர்ஜன்யன், கார்த்திகையில் துவஷ்டா, மார்கழியில் மித்திரன் என்றும் பெயர் பெறுகிறார்.

சூரிய மண்டலத்தில் முக்கியமான ஆயிரம் கதிர்களைக் கண்டறிந்திருக்கிறார்கள் ரிஷிகளும் ஞானிகளும். இவற்றில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் 300 கதிர்கள் "சுக்ரம்' என்ற பெயரில் வெம்மை யூட்டும். அடுத்து ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் 400 கதிர்கள் "அம்ருதம்' என்று பெயர் ù0காண்டு மழையைப் பொழியவைக்கும். அடுத்து மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் 300 கதிர்கள் பனியைக் கொடுத்து குளிர்ச்சிலை தரும்.

pongal

சூரிய ஒளியானது ஏழு வண்ணங்களைக் கொண்டது. இதைத்தான், "சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய ரதத்தில் பயணம் செய்கிறான்' என்று வேதங்கள் குறிப்பிடு கின்றன.

"சூரியன் காலையில் ரிக்வேத சொரூபியாகவும்; மதியத்தில் யஜுர்வேத சொரூபி யாகவும்; மாலை வேளையில் சாமவேத சொரூபியாகவும் திகழ்கிறான்' என்று மந்திர சாஸ்திரம் சொல்கிறது.

சூரியன், தனுர் ராசியைவிட்டு மகர ராசிக்குச் செல்லும் நாளை மகர சங்கராந்தி என்கிறோம். இந்தப் புனிதநாள் தானம், தர்மம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்ய உகந்த காலம் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலம் மகரமாதம் என்று போற்றப்படுகிறது. இதுவே தை மாதமாகும். மகர சங்கராந்தியான தை மாத முதல் தேதியில்தான் பொங்கல் விழா கொண்டாடப்டுகிறது.

அந்தக் காலத்தில் இருபத்தெட்டு நாட்கள் பொங்கல் விழா கொண்டாடினார் களாம். அப்போது இந்த விழாவிற்கு இந்திர விழா என்று பெயர். மழைக்குரிய தெய்வம் இந்திரன் என்பதால், இந்திரனை வழிபட் டால் மாதம் மும்மாரி பெய்யும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தில் சூரியனின் அருமை பெருமைகளை அறிந்த மக்கள், சூரியனே வானிலையை நிர்ணயிக்கிறார் என்ற நம்பிக்கை வந்து, தங்கள்முன் காட்சிதரும் சூரியனை தெய்வமாக வழிபட்டார்கள். தங்கள் விளைச்சலுக்கு சூரியனே காரணம் என்பதால், தைமாதம் முதல் தேதி பொங்க லிட்டு சூரியனை வழிபட்டார்கள்.

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகிப் பண்டிகையாகும். "பழையன கழிதலும் புதியன புகுதலும்' போகிப் பண்டிகையின் தத்துவமாகும். இந்தப் பண்டிகை துயரங் களைப் போக்குவதால் "போக்கி' என்றும் சொல்வார்கள். போகியைத் தொடர்ந்து தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்றெல்லாம் கொண்டாடப் படுகிறது. இதில் காணும் பொங்கலுக்கு கன்னிப் பொங்கல், கன்றுப் பொங்கல், காளையர் பொங்கல் என்று வேறு பெயர்களும் உண்டு. இவையெல்லாம் காரணப் பெயர்கள்.

சூரிய பகவானுக்கு ஆயிரத்தெட்டு பெயர்கள் உண்டு. அதில் இருபத்தோரு பெயர்கள் மிகவும் சிறப்பானவை என்று சூரிய புராணம் கூறுகிறது. அவை: விகர் தனன், விஸ்வான், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், ஸ்ரீமான், கிரிகேஸ்வரன், லோகரட்சகன், திரிலோகன், கர்த்தா, அர்த்தா, தமிஸரகன், தாபனஸ், சசி, சப்தஸ்வரவாகனன், கபஸ்தி ஹஸ்தன், பிரம்மா, சர்வதேவன், சித்ரபானு, லோக சாட்சிகன்.

நாடெங்கும் பொங்கல் விழா!

தமிழகத்தில் தை மாதம் முதல் தேதியில் சூரியனைப் போற்றும் பொங்கல்விழா கொண்டாடுவதுபோல, மற்ற மாநிலங் களிலும் சூரியனைப் போற்றி விழா கொண்டாடுவதைக் காணலாம். அந்த வகையில் கேரள மாநிலத்தில் மார்கழி மாதம் திருவாதிரைக்களி எனும் நடன விழாவினைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் (தை மாதம்) மகாசக்தியின் அருள்பெறுவதற்காக பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வயல், பயிர், சூரியன் மற்றும் மழை பொழிய வைக்கும் வருண பகவானை வழிபடும் விழாவாகப் பொங்கல் படைத்துக் கொண்டாடுகிறார்கள். தை மாதம் இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெறும்.

கர்நாடக மாநிலத்தில், தமிழகத்தைப் போலவே புதுப்பானையில் பாலி−ல் அரிசியிட்டு, பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். மேலும், சிக்மகளூர் அருகே உள்ள தர்மஸ்தலா, மஞ்சுநாதேஸ்வரர் கோவி−ல் வருடத்திற்கொருமுறை பொங்க லன்று மட்டும் வழிபாடுகள் நடைபெறும். மற்ற நாட்களில் கோவில் மூடப்பட்டிருக்கும்.

பஞ்சாபில் பொங்கல் பண்டிகையை லோரித் திருநாள் என்பர். குளிருக்கு விடை கொடுக்கும்விதமாக, பெரிய அக்னி குண்டங்கள் மூட்டி, வேதவிற்பன்னர்கள் மூலம் யாகம் வளர்த்து உறவினர்கள், நண்பர்கள் சூழ பொங்கல் கொண்டாடுவர். அன்று யாகத்தில் கலந்துகொள்பவர்களுக்கு பொங்கல் பிரசாதத்துடன் பரிசுப் பொருட் கள் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

அஸ்ஸாமில் பொங்கல் பண்டிகையை போக− பிஹீ என்ற பெயரில் கொண்டாடுகி றார்கள். அன்று பாரம்பரிய உடையணிந்து உறவினர்கள், நண்பர்களுடன் ஆடிப்பாடி மகிழ்வர். விடியும் வேளையில் பொங்கல் பிரசாதம் அளித்து கௌரவிப்பார்கள்.

மகாராஷ்டிராவில் பொங்கல் தயாரிக்கும் போது பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க் கடலை முதலி−யவற்றைச் சேர்த்து, சர்க்கரைப் பாகுகலந்து சூரிய பகவானுக்குப் படைத்து, சூரிய மந்திரம் ஜெபித்து வழிபாடு செய்வார் கள். மேலும், மகாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகளில் மழைக்கடவுளான இந்திரனுக்குப் பொங்கல் படைத்து பூஜை செய்வர். ஹாடாகா என்னும் பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல; உலகெங்கும் சூரிய வழிபாடு உள்ளது. எகிப்தியர்கள் சூரியனை ஆரோக்கியம் தருபவனாகவும், அறிவை வளர்ப்பவனாகவும் வழிபடு கிறார்கள்.

நைல் நதிக்கரையில் வாழ்பவர்கள் தினமும் சூரிய வழிபாடு செய்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவர். கிரேக் கர்கள் "ஹீலி−யோஸ்' என்னும் பெயரில் வழிபடு கிறார்கள். மெக்ஸிகோ, பெரு நாட்டினர் சூரியனை வீரமிக்க தேவன் என்று போற்று கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள், மார்கழி மாதம் முழுவதும் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பது வழக்கம். அந்த சாணப் பிள்ளை யார்களை சேகரித்துவைத்து, பொங்க லுக்கு மறுநாள் "பிள்ளையார் பொங்கல்" கொண்டாடுகிறார்கள். அந்தப் பிள்ளையார் களுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டு, இறுதியில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

ஜப்பான் நாட்டில் போகி தினத்தன்று பழையனவற்றைக் கழித்து, ஓரிடத்தில் குவித் துத் தீமூட்டி எரித்தபின்னர், மறுநாள் தை முதல் தேதியன்று பொங்கல் திருநாளை அறுவடை விழாவென்று கொண்டாடுகிறார்கள்.

கண்கண்ட தெய்வமான சூரியனை பொங்கல் திருநாளில் மட்டுமின்றி, எல்லா நாட்களிலும் முறைப்படி வழிபட்டால் வாழ்வில் வசந்தம் காணலாம். சூரிய வழிபாட்டினை தினமும் கடைப்பிடித்து நலம்பெற்று வாழ்வோமாக!

om010120
இதையும் படியுங்கள்
Subscribe