தைப்பூச தத்துவம்! - மும்பை ராமகிருஷ்ணன்

/idhalgal/om/thaipusam-philosophy-mumbai-ramakrishnan

தைப்பூசம் 11-2-2025

"மார்கழி சூன்ய மாதம்- கல்யாணம், புது வீடு புகுதல், வீடு கட்ட ஆரம்பித்தல் போன்ற சுபமங்களகர காரியங்கள் செய்யக் கூடாது என்பர். தையில்- சுபமங்களகர காரியங்கள் செய்யலாம். "தை பிறந்தால் வழிபிறக்கும்' என்பது பழமொழி. தத்துவம் என்ன?

கண்ணன் பகவத்கீதையில் "மாஸானாம் மார்கசீர்ஹேரியும்'- மாதங்களில் நான் மார்கழி- என்பாரே, அது சூன்ய மாதமா- அல்ல? பின்- மார்கழி தேவர்களின் விடியற்காலை. அவ்வேளையில் நாம் எந்தக் கடவுளை வழிபாடு செய்தாலும், பலன் அதிகம் கிடைக்கும்.

தை மாத வெள்ளி, பௌர்ணமி அம்பாள் வழிபாட்டுக்கு மிக உன்னத நாட்கள்.

தை மாத சுக்ல சதுர்த்தியை வினாயக ஜெயந்தி என்று மகாராஷ்டிரத்தில் கொண்டாடு வர்.

தை மாத சுக்ல பஞ்சமி வஸந்த பஞ்சமி, சரஸ்வதி ஜெயந்தி என்று வங்காளத்தில் கொண்டாடுவர்.

தை கிருஷ்ண பஞ்சமி ஸங்கீத த்யாகய்யர் ஆராதனை. தை ஹஸ்தம் காமாட்சியம்மனுக்கு களஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி.

ve

தை சுக்ல ஷஷ்டி, கிருத்திகை முருகனை வழிபட உன்னத நாட்கள்.

தைப்பூசம் முருகனை வழிபட வெகு உன்னத தினம்! ஏன்? அன்றுதான் பராசக்தியானவள் சக்தி வேலாக மாறி கந்தனிடம் சூர பத்மாதியரை வென்றிட ஈந்தாளாம்!

மேலும் அன்றுதான் முருகன் இச்சக்தி யான வள்ளி அவதரித்தாள்- மகாவிஷ்ணு/ முனி, மகாலட்சுமி மான்/ நோக்கில் அவதரித்தாள்!

வள்ளி திருமணமும் தைப்பூசமே என்பர்!

ஆக முருகன் கோவில்களில் அன்று சிறந்த வழிபாடே. முக்கியமாக பழனியில் காவடிகள் ஆயிரக்கணக்கில் எடுப்பர்!

மலேசியா முகம்மதியர்கள் நாடு. "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது பழமொழி. தமிழர்கள் வியாபாரத்திற்காக குடியேறினர். 1873-ல் சில அம்பாள் பக்தர்கள் கோலாலம்பூரில் மாரியம்மன் கோவில் எழுப்பினர். அதை நிர்வாகித்தவர் காயா ரோகணம் தம்புஸ்வாமி பிள்ளை. அவர் கனவில் அம்பாள், பத்து மலையில் முருகன் கோவில் கட்டி வழிபடு என்றுசொல்ல, 272 படிகள் கொண்ட மலையில் 1891-ல் முருகனுக்கு கோவில் கட்டினார். இங்கு தைப்பூசம் பெரிய விழாவே! முகம்மதிய நாட்டில் மூன்று நாட்கள் விடுமுறை பெரிய விழா. தமிழர்கள் மட்டுமல்லாது, சீன, மலேசியர்களும் காவடி எடுத்து வழிபடுகின்றனர்! அங்கு 140 அடி உயர 30 லிட்டர் தங்கப் பூச்சு பூசிய முருகனைக் காணலாம்! இப்போது மலேசியாவில் 110-க்கும்மேல் முருகன் கோவில்கள்.

சிதம்பரம் அருகே மருதூரில் காருணிகா குலத்தில் ராமையா பிள்ளைக்கும்- சின்னம்மைக்கும் (ஆறாவது மனைவி) ஒரு சிவயோகியின் அருளால் 5-10-2023 உதித்தவர் ராமலிங்கம். படிப்பு யாதும் சரியாக ஏறவில்லை. பள்ளிக்கு அனுப்பினால் அவர் சைனாபஜார் கந்தஸ்வாமி கோவிலில் முருகன்மீது "ஒருமையுடன் திருவடி நினைக் கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்' என 31, 16 அடி பாடல்கள் பாடினார். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பர். எந்த மஹானின் புனரவதாரமோ! ராமலிங்க ஸ்வாமிகள் எனப்பெயர் பெற்றார்.

30-1-1874 தைப்பூசத்தன்று மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ஜோதி விளக்கு முன் அமர்ந்தார். அந்த ஜோதியிலேயே சிவ ஜோதி முருகனாக சரவணத்தில் உதித்தது போல் மறைந்தார். பூத உடல் காணவில்லை. இன்றும் அங்கு அந்த அணையா ஜோதி விளக்கு காணலாம்! அன்னதானத்திற்கு குறைவில்லை.

ஆக தைப்பூசத்தில் முருக- வள்ளியைய

ஆக தைப்பூசத்தில் முருக- வள்ளியையும், ராமலிங்க ஸ்வாமிகள் பற்றியும் சிறிது சிந்தித்து நாம் கந்தன் அருள் ஞானம் பெறுவோமா!

முருகன்

கண்ணன் பகவத் கீதையில் கூறுவார்.

யதாயதா ஷி தர்மஸ்ய க்லானி; பகவதி பாரத அல்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் விஸ்ருஜாம்ஹம்.

தர்மத்திற்கு இடர் வரும் சமயம் நான் அவதரித்து, தர்மத்தை நிலைநாட்டுவேன் என்பது பொருள்.

ப்ரம்ஹம் பல உருவங்களில் கொடுத்த வரத்திற்கேற்ப உதித்துள்ளது.

vel

சூரபத்ம, சிம்மமுக, தாரக, க்ரௌஞ்ச அசுரர்கள் கடும் தவம் புரிந்து சிவ வரம் பலபெற்றனர். சிவனின் மறு உருவம் அல்லாது மரணம் கிடையாது என சுகமாக வாழ்ந்திருக்க லாம். அஹங்காரம், பேராசை அதிகமாக, எல்லா யோகமும் கைவசம் பெற்றனர். சிறையில் அடைத்தனர். யாவரும் சிவனிடமே வேண்ட, சிவனின் மரு உருவமாக கந்தன் தோன்றினான்! எவ்வாறு?!

சிவனது ஐந்து முகங்களான, ஈசானம், தத்புருஷம் அகோரம், வாமதேவம், ஸத்யோ நாதம், மேலும் கீழ்நோக்கிய அதோ முகத்திலிருந்து "ஜோதியைக் கிளப்பி, (சிவன் அருணாசல ஜோதிரூபனாயிற்றே) வாயு, அக்னியை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை சரவணதடாகத்தில் ஆறு தாமரைகளில் இட்டாள். அங்கு ஜோதி குழந்தையாக மாறியது.

அத்தினமே வைகாசி விசாகம். ஆறு கார்த்திகேயன் மாந்தர்கள் வந்தனர்.

குழந்தைக்கு பாலூட்டினர்.

சிவன் பார்வதியுடன் வர, பார்வதி குழந்தைகளை வாவென்று அழைக்க, அவை வர, பார்வதி அதுவரையும் தன் இருகை களால் அணைக்க, ஓருடல், இரு கால்கள், 12 கைககள், 6 முகங்களுடையவனான்.

ஆகவே அவன் பெயர்- ஆறுமுகன், கார்த்தி கேயன், விசாகன், சரவணபவன், காங்கேயன், வாயுகுமாரன், அக்னிபூ என ஆயிற்று. அவன் அழகன், ஆக முருகன். மேலும் சிவகுமாரன், பார்வதி பாலனாயிற்று. ஆறு ஒன்றானதால் ஸ்கந்தன், கந்தனாயிற்று என்றும் இளைய வயதினன் ஆக குமரன்.

கச்சியப்பரின் கந்த புராணம் கந்த அவதாரத்தில் ஒரு துதி-

அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்

பிரம்மமாய் நின்ற (சோதிப்பிழம்பு ஓது ஓர் மேனியாகி

கருணை கூர் முகங்களானும் கரமது பன்னிரண்டும் கொண்டே

ஒரு திருமுருகனாய் உதித்தனன் உலகம் உய்ய!

பிரம்மன் சிவனை தரிசிக்க கயிலை

சென்றான். அங்கிருந்த கந்தனை போகும்

போதோ, திரும்பும்போதோ கண்டுகொள்ள

வில்லை. ஆக திரும்பும்போது, கந்தனே

அழைத்து, "நீவீர் யார்? என்ன செய்கிறீர்' என்று வினவினான். பவ்யமாக பதிலளித்திருக்க லாம். "நானா, பிரம்ம, வேதத்தை ஆதாரமாக் கொண்டு படைக்கிறேன்' என்றான். வெறுப் பாகலி கந்தன், வேதத்தைக்கூறும் என, பிரமன் "ஓம்' என்று கூற, அதன் பொருள் என்ன, என்று கேட்க, கூற இயலவில்லை. ஆக பிரமனைச் சிறையிலிட்டு, கந்தனே படைக்க ஆரம்பித் தான். சிவன் நீ ஓம் (ப்ரணவ) பொருள் அறிவாயோ என... கேட்க வேண்டிய முறைப் படி கேட்டால் சொல்வேன் என சிவன் கையிலேந்த, சிவன் காதில் கந்தன் ப்ரணவப் பொருள் உரைத்தான்! ஆகவே அவன் பெயர் ஸ்வாமிநாதன், சிவகுருநாதன், தகப்பன் ஸ்வாமி ஆயிற்று. அந்ததலம் ஸ்வாமி மலையே. கும்பகோணம் அருகே உள்ளது!

கந்தன் வேல் பெறுதல்

சூரபத்மாதியரை அழிக்க, பரா சக்தியே வேலாக மாறினாள்.

அத்தினம் தைப்பூசம் என்பர். இன்றும் சிக்கலில் (நாகை அருகே) உள்ள முருகன் அம்பாளிடமிருந்து பஞ்சமியன்று வேல் பெற, பஞ்சலோக முருக விக்ரஹம் வியர்வை விடும். இந்திரனே மயில் வாகனமானான்.

அக்னியே சேவல் கொடி யானான்.

தாரகாசுர ஸம்ஹாரம்

தாரகாசுரனை க்ரௌஞ்சாசுரன் மாய மலையாக மறைத்து நின்றான். க்ரௌஞ்சனையும் தாரகனையும் வேல் ஒன்றாலே அழிக்க முடிந்தது. ராமாயணம் ராம- ராவண யுத்தத்திற்கு ஈடில்லை என்கும். ஸ்காந்தம் கந்த- தாரக யுத்தத்திற்கு ஈடில்லை என்கும். மேலும் தாரகன் மார்பில் ஐந்து ஆத்மலிங்கங்களாம்! அவைகள் உடைந்து உன்னத ஆந்திர சிவத்தலமாக ஆகினலி வினோதம்!

அமராராமம்லி அதோமுகம்

த்ராஹாராமம்லி தத்புருஷமுகம்

குமாரா ராமம்லி வாமதேவ முகம்

ஸோமா ராமம்லி ஸத்யோராத முகம்

க்ஷீராராமம்லி ஈசான்யமுகம்

சூரஸம்ஹாரம்

குருவும், நாரதரும் கூற கந்தன் திருச் செந்தூர் ஏகினான். வீரபாகுவைத் தூது அனுப்பியபின் மல்யுத்தம், முதலில் சிங்க முகன் அழிந்தவுடன் பின்பு சூரபத்மனோடு செந்தில் கடலில் போர். வேலால் சூரபத்மனும் அழிந்தான். அத்தினமே- ஸ்கந்தர்ஷஷ்டி!

ராமரும் க்ருஷ்ணரும் பல அசுரர்களை அழித்தனர். வதம் அவர்கள் எவருக்கும் வாகனம் ஆகவில்லை. கந்தன் செய்தது ஸம்ஹாரம். அதாவது தீயகுணம், உடல் அழிந்தது.

தாரகாசுரன்- யானையாக- ஐயப்பனுக்கு வாகனம்

சிங்கமுகாசுரன்- சிங்கமாக- அம்பாளுக்கு வாகனம்

சூரபத்மன்- மயிலாக- முருகனுக்கு வாகனம்

சேவலாக ஜயக் கொடி.

தேவஸேனை மணம்

மகாவிஷ்ணுவின் நடராஜ தரிசன ஆனந் தக் கண்ணீரிலிருந்து உதித்தவர்கள். அம்ருத வள்ளி, சுந்தரவல்லி, விஷ்ணு அவர்களை கந்தனைப் பணியச் சொன்னார். கந்தன், ஷடாக்ஷர உபதேசம் செய்ய ஜெபித்தனர். பின்பு, கந்தனையே மணம்புரிய வேண்டி னர். கந்தனோ, நான் இப்போது உங்கள் தீட்சா குரு. உங்கள் விருப்பம் பின்பு நிறை வேறும் என்றான். சூரபத்மாதியர் கூண்டோடு அழிய, அம்ருத வல்லி தேவேந்திரன் மகளாக வர, திருப்பரங்குன்றத்தில் கந்தனுடன் திருமணம் நடந்தது. கர்ப்பக் கிரகத்தில் கந்தனுடன் தேவயானையை மட்டுமே காணலாம்!

வள்ளி ஜனனம் திருமணம்

பகவானே பக்தனை நாடி, சாடி, போரும் புரிந்து மணம்செய்து கொண்டது ஒரு அதிசய செயலே! கருணைக்கடல் கந்தன்!

கந்தப்பரின் தணிகாசல புராணம் ஒரே துதியில் வள்ளி, லீலை திருமணம் கூறும்.

"மாதவன் ஓர் மாதவனாய் மாதவம் செய்திடலும்

வனமானாய் வந்தெதிர்ந்த மலர்மானைப் புணர

பூதல மங்கையர் உருவாய் அவதரித்த வள்ளி

பொப்புறையும் யொருப்பர்மனை விருப்பமுடன் வளர்ந்து

தீதகலும் தினை காத்து வேங்கை உருவெடுத்து

செவ்வேளை அவ்வேளை சார்ந்திருக்க நகர் கோளும்

காதலுடன் புரிந்து இறைவன் வலப்பாகத்தமருமே

கன்னியென்றும் வள்ளி கழல் உன்னி வழுத்திடுவாம்'

மகாவிஷ்ணு ஒரு முனியாகத் தவம் செய்ய,

மகாலட்சுமி மான்வடிவில் அவ்விடம் வந்தாள். இருவரின் நோக்கில் மான் ஒரு பெண்ணை ஈந்தது. வள்ளிக்கிழங்கு செடி அருகே இட்டுச் சென்றுவிட்டது. இது எந்த காரணத்தால் என்று தெரியவில்லை. வேடுவராஜா நம்பி அவ்விடத்திற்கு உரியவன். முருகனே குலதெய்வம். தன் மனைவியும் வர, எங்கோ குழந்தை அழுகுரல் கேட்டுவர, பார்த்து, "வள்ளி' என்றே பெயரிட்டு வளர்த்தனர். இவ்விடம் திருத்தணி அருகே "வள்ளிமலை'யா, தூத்துக்குடி அருகே வள்ளியூரா, திருச்செந்தூர் தல கடல் அருகே கந்தமாதன குகையா ஸ்ரீலங்கை கதிர்காமத்தலமா என பலவாகக் கூறுவர்! (கன்னியாகுமாரி அருகே வேளிமலைத் தலமா) வயது ஏற, நம்பி வள்ளியை, தினைக் கொல்லை காக்கச் செய்தான். குருநாதர் ஜீவனைப் பரமனுடன் சேர உதவுவார். நாரதர் கந்தனிடம் சுந்தரவல்லி, வள்ளியாக நம்பிராஜனால் வளருகிறாள். அவளை மணக்க வேண்டியது உனது கடமை என்றார்.

பகவான் பக்தனை நாடி, சாடி, விளை யாடி, மணம்புரிவது என்பது வள்ளி- கந்தன் திருமணத்தில்தான்.

கந்தன் வேடனாக வள்ளியை நாடி பேசினான். வள்ளி எவனோ பேசுகிறானே என வியந்தாள். பயந்தாள்; ஆயின் இதயம் புல்லரித்தது. திடீரென நம்பிராஜன்வர, வேடன் வேங்கை மரமானான்! வள்ளி திடுக்கிட்டாள். நம்பி, (இது என்ன புதுமரம்- வெட்டி விடட்டுமா என, வள்ளி, நிழலுக்கு உதவும் என்றாள். நம்பிராஜன் நகர, வேலன் கிழவனாக வந்தான். பேசி, பசிக்கிறது என வள்ளி, தினை ஈந்தாள் உண்டவன், விக்குகிறது. குடிநீர் தேவை என, கைப்பிடித்துச் சென்று, குளத்தில் நீர் குடிக்க வைத்தாள். வயிற்றுப் பசி நீங்கியது, "காமப்பசி' அதிகம் ஆக எனைச் சேர் என்றான்.

வள்ளியோ பயந்தாள், வியந்தாள். கந்தன், தன் அண்ணா கணபதியை நினைக்க, யானைவந்து பிளிர, வள்ளி பயந்து, கிழவனை அணைந்தாள். ஆயின் குமர கந்த தரிசனம்! இந்த விவரங் கள் வள்ளி ஸகி நம்பிக்கும் கூற, அவள் பயந்து, அவனை வீட்டினி லேயே சிறையிலடைத்தான். இரவு கந்தன் அங்குவந்தான், ஸகியுடன் இனிமையாகப் பேசி, வள்ளியை வெளி யேற்றினான். நம்பிக்குத் தெரிய தனது படைகளுடன் சண்டை செய்தான். கந்தனோ, தனது சேவல் கொடியைக்கூற, நம்பி சேனையினர் மாண்டனர். வள்ளி கந்தனை வேண்ட, கந்தன் நீயே அவர்களைப் பார் என, அவள் பயந்து நொந்து பார்க்க, அனை வரும் உயிர் பெற்றனர். நம்பிராஜன், தன்குல தெய்வ கந்தனையே காண மெய் கூச்சலிட் டான். நம்பிராஜன் வேண்ட, யாவர் முன்னிலையிலும் கந்தனுடன் வள்ளி திருமணம் நடந்தது.

வள்ளி பிறந்தது, திருமணம் நடந்தது தைப்பூசம் என்பர். ஆக எல்லா கந்தன் கோவில்களில் இது ஒரு பெரிய விழாவே! இதற்கு வள்ளி சன்மார்க்கம் என்றே பெயர். அருணகிரியார் திருப்புகழில் வள்ளியை மிக அதிகமாகவே நினைப்பார்!

வள்ளி மணவனானுக்கு அரோஹரா!

ஜோதி ராமலிங்க ஸ்வாமிகள்

குழந்தை ராமலிங்கத்தை, தகப்பனார் சிதம்பர நடராஜரைத் தரிசிக்க எடுத்துச் சென்றார். ரஹஸ்யம் திறந்து, தீக்ஷிதர் ஆரத்தி காட்ட, குழந்தை சிரித்தது. தீக்ஷிதரோ சிவனருள் பெற்ற குழந்தை என்றார்.

தாய்- தந்தையர் இறக்க, அண்ணன் தன் மனைவி ராமலிங்கத்துடன், சென்னை ஏழுகிணறு வீட்டில் ஸ்டான்- ஆஸ்பத்திரி அருகே) குடியேறினார். இன்றும் காணலாம்! படிப்பதில் மனம் செல்லவில்லை. ஆயன் நளின தமிழில் சதிகள், பாக்கள் புனைந்தான்!

அண்ணா பெரிய புராண கதை சொல்பவன். ஒருநாள் உடல் நலம் குறைய, ராமலிங்கத்தை அனுப்பினான். அவனது உபன்யாசம் கேட்டவர்கள், வியந்து, மகிழ்ந்து, அவனே செய்யட்டுமே என வேண்டினர்!

வீட்டில் கண்ணாடியில் தன் உருவம் காணாது, திருத்தணிகேசனைக்காண, உதித்த துதி!

"சீர்கொண்ட தெய்வ தனங்கள் ஆறும், திகழ் கடப்பம்

தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத்தாள்களும் ஓர்

கூர் கொண்ட வேலும் மயிலும் நிற்கோழிக்கொடியும் அருள்

கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும் என் கண்ணுற்றதே!'

ஏழுகிணற்றில் 25 வயது வரை இருக்க அடிக்கடி, திருவொற்றியூர் நடந்து சென்று தரிசிப்பார். சில நாட்கள் அங்கே தங்கி விடுவார். ஒரு சமயம் கோவில்மூலையில் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். கோவில் கதவு மூடியாகிவிட்டது. நடுநிசி, அர்ச்சகர் ராமலிங்கா, எழு, இந்தா சாப்பாடு என்று பிரஸாதம் ஈந்தார். காலை கோவில் திறக்க, அர்ச்சகர், உன்னைக் காணவில்லையே என்று, பிரஸாதம் வீடு எடுத்து சென்றேன் என்றார். ராமலிங்கமா, இல்லையே, நீங்கள் என்னை எழுப்பி பிரஸாதம் ஈந்தீரே என்றார்!

ஆயின் பிரஸாதம் ஈந்தது யார்?

ஒரு சமயம் ராமலிங்கம் திருவொற்றியூரிலிருந்து வீடுவர, நடு இரவு ஆகிவிட்டது. வாசலிலேயே தூங்கிவிட்டார். நடு இரவு அவரது அண்ணி எழுப்பி, உணவு ஈய, உண்டார். விடியலில், அண்ணி வீடு வாசலில் ராமலிங்கம் தூங்கக்காண, பசியுடன் உறங்கிவிட்டாயா, உணவு வைத்திருந்தேனே என்றார். ராமலிங்கமோ, இல்லையே என்னை எழுப்பி உணவு ஈந்திரே என, உண்ட உணவு விவரம் ஈந்தார். அண்ணியோ, இல்லையே, நான் வெளியே வரவில்லையே என்றாள். ஆயின் உணவு ஈந்தது யார்? கண்ணன் கீதையில் கூறுவார். நமே பக்த; ப்ரணஸ்யதி!

திருவொற்றியூரில் ராமலிங்க மடம் காணலாமே! ஆதிசங்கரர் வந்துள்ளாரே! தனது 21 வயது வயதில் தமக்கை பெண்ணை கட்டாயத்தின் பேரில் மணந்தார். ஆயின் முதல் இரவு அன்று திருவாசகம் வாசித்தார். ராமகிருஷ்ண பரமஹம்ஸர்போல் மனைவியும் உடல் சுகம் பெறவில்லை!

35 வயதுக்குமேல், சிதம்பரம் அருகே கருங்குழியில் 10 வருடங்கள் வாழ்ந்துள்ளார். இரவு பூராவும் த்யானம் அல்லது பக்தி துதிகள் எழுதுவது வீட்டில், அருகே, எண்ணெய் வைத்திருந்தனரா அவர் அறியார்? வைத்த குடிநீரையே விளக்கில் இட்டாராம்!

பசிப்பிணியை உணர்ந்த அவர், அன்னதானமே சிறந்ததானம் என்று செயல்பட்டார். சமரச சன்மார்க்க சங்கம் நிறுவினார்.

வடலூரில் 1867-ல் ஸதய தர்மச்சாலை நிறுவினார். தினமும் அன்னதானம். 157 வருடங்களாக சமையல் செய்ய ஏற்றிய அடுப்பு அணையவில்லை! ஒரு தடவை இரவு அன்னம் அளிப்பு முடிந்தது, தீர்ந்தது. திடீரென 2 பஸ்ஸில் 100 பேர் வந்தனர். கையிருப்பு 4 பேர்களுக்கே காணும். ராமலிங்கரோ, கவலை வேண்டாம், நானே பரிமாறுவேன் என்றார். செய்தார் இருந்ததை வைத்து 100 பேரும் வயிறார உண்டனராம்!

ஒரு சமயம் சமையல் சாமான்கள் தீர்ந்து விட்டன. கவலையுடன் ஸ்வாமிகளிடம் சொல்ல, 2 நிமிடம் தியானித்து, கவலை வேண்டாம் என்றார். விடியல் 4.00 மணிக்கு ஒரு லாரி வந்தது. சமையல் மளிகை சாமான்கள் கறிகாய்களே. அவர்கள் நாங்கள் திருத்துறையிலிருந்து வருகிறோம். ஸ்வாமிகள் கனவில் கூறியபடி, கொணர்ந்துள்ளோம் என்றனர்.

மனிதனை அறிய திருமூலரையும், இறைவனை உணர மாணிக்கவாசகரையும் வாழ்க்கையை உணர தாயுமானவரையும் சிந்தித்துச் செயல்படவேண்டும் என்பார். மூவர் தத்துவங்களும் அவர் வாக்குகளில் காணலாம். ஸ்வாமிகள் உடலோடு தன்னை கற்கும் ஞானதேகம் பற்றியும் தமது பாடல் களில் இசைத்துள்ளார். மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் தனி அறையில் புகுந்து தாளிட்டுக்கொண்டார்.

ஜோதி விளக்கில் ஜோதிமயமாக ஜோதி ராமலிங்கம் என்று பெயர் பெற்று ஜ்யோதிர்மயமானார். அத்தினம் 30-1-1874 தைப்பூசம். அச்சமயம் பாடின பாடல்.

பிச்சுலகர் மெச்ச பிதற்றி நின்ற பேதை யனேன்

இச்சையெல்லாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே

அச்சமெலாம் தீர்ந்தேன் அருள முதம் உண்கின்றேன்

நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே!

-அருட்பெருஞ்சோதி- தனிப்பெருங் கருணை.

om010225
இதையும் படியுங்கள்
Subscribe