1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் பிரகாசமான சூரியன் ஆவார். இந்த மாதம் முழுவதும், உங்களுக்கு அதிக வேலை இருந்துகொண்டே இருக்கும். வேலைகள் பலவிதம். சிலர் மிகுந்த ப்ராயாசைக்குப்பின் அரசு வேலை பெறுவர். உங்களில் சிலர் வழக்கறிஞர் பணியில் சேர்வீர்கள். சிலர் மருத்துவ சம்பந்தமான வேலையின் பொருட்டு, அதிக பணிச்சுமை காண்பீர்கள். பெற்றோர் சம்பந்தமான உழைப்பை அதிகம் தரவேண்டியிருக்கும். சிலர் வீடுகளில் பேரன்- பேத்தி பிறப்பதால், உழைப்பு அதிகரிக்கும். இதன் கூடவே சற்று அலைச்சலும் அதிகமாகும். அது உங்கள் தாயார் சார்ந்த அலைச்சலாக இருக்கும். சிலரின் வேலையே, அலைச்சல் உடையதாக அமைந்துவிடும். இதுவரையில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தவர்கள், இந்த மாதம் அலைந்து திரியும் வேலைக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். சில அரசு ஊழியர்கள் இடமாற்றம் பெறுவர். சிலருக்கு வீடு வாங்கும் விஷயமாக கடன்பெற வேண்டிய சூழ்நிலை வரும். அல்லது வேறு சிலர் வெளிநாடு செல்வதற்கோ அல்லது வெளிநாட்டில் மேல்கல்வி கற்பதோற்கோ கடன் வாங்க வேண்டியிருக்கும். சிலர் வெளிநாட்டில் வேலை கிடைத்து, அதன் பயணச் செலவுக்கு கடன் வாங்குவீர்கள். ஆக, இந்த மாதம் அலைச்சலும், பணிச்சுமையும், கடன் வாங்குவதலுமாகவே அமையும். எனினும் அத்தனையும் மனசந்தோஷம் தருமென்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

Advertisment

பரிகாரம்: எப்படியும் இந்த மாதம் குலதெய்வ தரிசனம் உண்டு. அருகில் உள்ள கோவி-ல், ஞாயிற்றுக்கிழமைகளில், சூரியனுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். பிற மத சமையல் செய்யும் மனிதர்களுக்கு தேவையறிந்து உதவுங்கள்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சாந்தமான சந்திரன் ஆவார். இந்த மாதம் திருமணமாக காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு கல்யாண யோகம் கூடிவரும். உங்கள் இளைய சகோதரனுக்கு வேலை கிடைக்கும் பொருட்டு, நீங்கள் கடன் வாங்க நேரிடும். கைபேசி பழுதாகி சரியாகும். ஒப்பந்தம், குத்தகை சார்ந்த முதலீடுண்டு. தாயின் நலம் காக்கப்படவேண்டும். வீட்டு ரிப்பேர் செலவுண்டு. வாகனம் பழுது பார்க்கும் நிலை வரும். உங்கள் வாரிசுகள் வேலை பெறுவர். அல்லது உங்களுடன் சண்டையிடுவர். காதல் விஷயம் சண்டையில் முடியும். குலதெய்வ வழிபாட்டின்போது குடும்பம் கும்மியடிக்கும். உங்கள் வாரிசும், உங்கள் இளைய சகோதரனும் கருத்து வேறுபாடு கொள்வர். பணிமாறுதல் சிலருக்கு கிடைக்கும். அது பதவி உயர்வுடன் வரும். தொழில் நடத்துவோர், நல்ல பணி விரிவாக்கமும், அதனால் லாப விருத்தியும் காண்பர். உங்களில் சிலர், தாங்கள் பணி சார்ந்த, சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். தம்பதிகள் இடையே சண்டை வரக்கூடும். கவனம் தேவை. இந்த மாதம், இந்த எண்ணில் பிறந்தவர்கள், வழக்கு, சட்டம், காவல் துறை பக்கம் செல்லாமல் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பவேண்டாம். தர்மம், கோவில், உதவி என நல்ல விஷயம் செய்யும்போது விழிப்பாக இருக்கவும்; கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: உங்களின் இஷ்டதெய்வ அம்பாளுக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். இந்த மாதம் மட்டும், சனிக்கிழமைகளில் பைரவருக்கு, நல்லெண்ணெய் தீபமேற்றவும். இளவயது ஊனமுற்ற இளைஞரின் தேவை கேட்டறிந்து உதவுங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் தர்மமிகு குரு ஆவார். இந்த மாதம் அரசுவகையில் பணவரவு வரும். இதுவரையில் வாரிசுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள், இந்த மாதம் மழலை பற்றிய நற்செய்தி பெறுவர். உங்களில் சிலருக்கு, வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசுமூலம் வரவேண்டிய பணத்துக்கான, தகவல் கைபேசி வழியாக கிடைக்கும். தந்தை, பணஉதவி செய்வார். உங்கள் இளைய சகோதரன் பூர்வீக சொத்து சம்பந்தமான மனக்கசப்பு கொள்வார். நீங்கள் மிகவும் பழமையை நாடுவீர்கள். அந்த காலத்து சமைய--ருந்து, பழையதான சாரயம் வரை பாராட்டி பேசுவீர்கள். அதற்காக செலவழித்து, அனுபவித்து மகிழ்வீர்கள். திருமணமாகி இடமாற்றம் ஆகும். வெளிநாட்டு சம்பந்தமான தொழில்களில், சிறிது தடுமாற்றம் ஏற்படும். மருமகள் வருவாள். அரசியல்வாதிகள் எப்படியாவது மந்திரியாகிவிட வேண்டு மென அனைத்துவழிகளையும் அலைந்து திரிந்து தேடுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடவும். அருகில் உள்ள முருகர் கோவில்சென்று வஸ்திரம் சாற்றி, தீபமேற்றி வழிபடவும். விளையாட்டுத்துறை இளைஞர்களுக்கு தேவை கேட்டறிந்து உதவவும்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் பெருக்கத்துக் குரிய ராகு ஆவார். எப்போதுமே சற்று வில்லத் தனமாக, குசும்பாக பேசும் உங்களுக்கு, உங்கள் வார்த்தைகள் மரியாதையாக வெளிப்படும். இது உங்களை அறியாமல், கிரகம் செய்யும் மாயமாகும். கள்ள கணக்கும், கணக்கில் வராத பணமும் கணக்கிலடங்காமல் இருக்கும். இளைய சகோதரிக்கு வேலை கிடைக்கும். நல்ல பெண் பணியாளர்கள், உங்கள் வியாபாரத்திற்கு அமைவர். உங்கள் வாழ்க்கைத்துணை, புது தொழில் ஆரம்பித்துவிடுவார். தொழில் ஆரம்பிக்க, அரசு வங்கிமூலம், குறைந்த வட்டியில், நிறைந்த கடன் பெறுவீர்கள். சொந்தத்தில் இதுவரையில் சண்டை போட்டுகொண்டிருந்த வீட்டில் வரன் அமைந்து, திருமணம் நடக்கும். ஏற்கெனவே சொந்தத் தொழில் நடத்திக்கொண்டிருந்தால், அதுவும் குறிப்பாக மகளிர் குழுக்களாக செயல்பட்டுக்கொண்டிருந்தால், ஒரு இளம் பெண் சற்று கலகம் இழுத்து விடுவாள்; கவனம் தேவை. தந்தையின் நல்ல வசதிக்காக, ஆவன செய்வீர்கள். இஷ்டதெய்வ வழிபாட்டிற்கு, குடும்பத்தோடு செல்வீர்கள். அரசுப்பணியில் சேர வாய்ப்புள்ளது. இதன்பொருட்டு, இடமாற்றமும் ஏற்படும். உங்களுக்கும் வாழ்க்கைத்துணைக்கும் இடையே உங்கள் தாயார் பொருட்டு மனக் கசப்பு உண்டாகும். இந்த மாதம் கொஞ்சம் அலைச்சலால் அவதியும், செலவுகளால் எரிச்சலும் உண்டாகக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 27, 30.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: சயனத்தில் இருக்கும் ஸ்ரீரங்க நாதர் போன்ற பெருமாளை வழிபடலாம். அருகிலுள்ள ராகுவுக்கு தீபமேற்றி வழிபடவும். பிற இன, பிற மத பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு முடிந்த உதவி செய்யுங்கள்.

thai

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் புத்திசா- புதன் ஆவார். எனினும் இந்த மாதம், உங்கள் தொழில் விஷயத்தில், உங்கள் அறிவு மேன்மை சற்றே உரசி பார்க்கப்பட்டு, டேமேஜ் ஆகிவிடும். இதற்கு காரணம் உங்களுக்கு கிடைக்கு தவறான தகவல்களே ஆகும். நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராக இருப்பின், பணி செய்யும் தொழிலாளர்களால் ரொம்ப இம்சைப்பட நேரிடும். மாணவர்கள், சரியான விடைதான் எழுதியிருக்கிறோம் என்று எண்ணி, தப்பு தப்பாக தேர்வு எழுதுவர். தாயாரின் உடல்நிலை கவனிக்கப்படவேண்டும். உங்கள் தாயாருக்கு, வேலை செய்பவர்களால் இடையூறு நேர வாய்ப்பு உள்ளது. வீடு, வாகனம், வயல் இவை வரவையும், செலவையும் சேர்த்துத் தரும். கலைஞர்கள் பயணம் அதிகரிக்க காண்பர். வாரிசுகள் வெளியூர், வெளிநாடு செல்லலாம். பங்குபத்திர முதலீடு உண்டு. அதில் சில குளறுபடிகள் செய்வீர்கள். திருமணம் ஆகும். திருமண வீட்டில் கலகம் வரும். தம்பதிகள் சற்று கை கலப்பில் ஈடுபடுவர். உங்கள் மாமனாரும், மாமியாரும் வீடு விஷயமாக கருத்து வேற்றுமை கொள்வர்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: மலைமீதுள்ள சிவனை வணங்குவது சிறப்பு. அருகிலுள்ள சிவனுக்கு தீபமேற்றுவது பிரதோஷகால வழிபாடும் நன்மை தரும். அந்தண தம்பதிகளின் தேவைக்கு உதவவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் அழகியல் சார்ந்த சுக்கிரன் ஆவார். திருமணம் சம்பந்த தகவல் தேடிவரும். அரசுசார்ந்த வாகனம் கிடைக்கும் யோகமுண்டு. இதி-ருந்து உங்களில் சிலர் அரசு பதவி அல்லது அரசியல் பதவி இவை கிடைக்கும் எனத் தெரிகிறது. எழுத்து துறை சார்ந்த கலைஞர்கள் புகழ் பெறுவர். அதன்மூலம் நல்ல பண ஆதாயமும் பெறுவர். எப்போதும்போல் தம்பதிகளின் சண்டை தவிர்க்கமுடியாது. இதற்கு ஒரு பெண்ணின் அண்டர் கிரவுண்ட் வேலை காரணமாக அமையும். இளைய சகோதரி எங்காவது அடிபட்டுக்கொள்வாள். உங்கள் தந்தைக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மன வேற்றுமை ஏற்படும். மூத்த சகோதரன் வாகனம் வாங்குவார். அது சற்று பழைய மாடலாக இருக்கும். இந்த மாதம் வியாபார விஷயமாக அலைச்சல் அதிகமாக இருக்கும். சிலர் திருமண விஷயமாக சஞ்சரிப்பர்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: நரசிம்மரை பானகம்கொண்டு வணங்கவும். மகாலட்சுமி தாயார் வழிபாடு நன்று. வயதான கிறிஸ்துவ பெண்ணிற்கு, பயண சீசன் டிக்கெட் வாங்கிக்கொடுக்கவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் ஆன்மிக கேது ஆவார். எப்போதுமே அமைதியாக பேசும் நீங்கள், இப்போது ஆழ்ந்த அர்த்தத் தோடு பேசுவீர்கள். இந்த காலக்கட்டத்தில், உங்களுக்கும், உங்கள் தாயாருக்குமிடையே கருத்து வேறுபாடு உருவாகும். அது பணம் அல்லது மனைவி சம்பந்தமாக இருக்கலாம். சிலருக்கு திருமணம் கூடிவரும். திருமணத்தின்போது, உங்கள் தாய்மாமன் சற்று முரண்டுபிடிப்பார். பணவரவு செழுமையாக அமையும். உங்கள் இளைய சகோதரன், காதல் திருமணம் செய்துவிட்டு, புது மனைவியோடு வந்து நிற்க கூடும். மனை, வீடு, விஷயங்கள் எந்த அளவிற்கு நன்மையும், வருமானமும் தருகிறதோ, அந்த அளவிற்கு இம்சையும் தரும். அரசுசார்ந்த கலை நிகழ்ச்சியில் பங்குபெறுவீர்கள். அல்லது அரசாங்கம் நடத்தும் விளையாட்டு, சாகஸ போட்டியில் கலந்துகொள்வீர்கள்! கடன்கள் அடைபடும். எதிரிகள் உங்களுக்கு சமமாக நிற்பர். சுக சம்பந்தமாக மருந்து எடுத்துக்கொள்வீர்கள். தந்தைவழி சொத்து கிடைக்க வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: நீர் நிலைகள் அருகிலுள்ள விநாயகரை வணங்கவும். அருகிலுள்ள பிள்ளையாரின் அபிஷேகத்திற்கு, பொருள் வாங்கிக்கொடுக்கவும். லட்சுமி நரசிம்மரை வணங்கி, அந்த அர்ச்சகருக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்கவும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பணவரவு என்பது அமோகமாக இருக்கும். ஆனால் செலவுகள் அதைவிட பிரம்மாண்டமானதாக இருக்கும். அதனால் கடைசியில் உங்களுக்கு, பணம் நிறைய வந்ததே, ஆனா ஒன்னையும் காணுமே என தலையைச் சொறிந்து கொண்டிருப்பீர்கள். செலவு என்பது பலவகையில் ஏற்படும். வீடு வாங்க முதலீடு செய்வதால் இருக்கலாம். உங்கள் பணியாளர்களின் தேவைக்கு உதவுவதாக அமையலாம். இளைய சகோதர திருமணச் செலவாக திரும்பலாம். வெளிநாட்டு பயணமாக அமையலாம். உங்கள் தாயார் வெளிநாட்டுக்கு கூட்டிப் போய்விட்டு, பின் தாய்நாடு திரும்பும்வகையில் செலவு அமையலாம். வாரிசின் வேலை விஷயமாக இருக்கலாம். கலையுலக சேவைபுரிய, சில பல அன்பளிப்பாக அமையலாம். தாய்மாமன் வீட்டு விசேஷமாக விருந்தளிக்கலாம். தொழில் விரிவுபடுத்தும் விதமாக செலவு இருக்கலாம். மூத்த சகோதரன் விஷயமாக முயலலாம். அரசியல்வாதிகள் தங்களின் பேர், புகழின் முதலீடாக பணம் செலவழிக்கலாம். அட, இந்த மாதம் இப்படி மானாவாரியாக பணம் சம்பாதித்தாலும், எல்லாவற்றையும்விட ஹைலைட்டாக ஒரு விஷயம் நடக்கும். உங்களுக்கும் உங்கள் தந்தைக்குமிடையே சண்டை வரலாம். எனவே இந்த 8-ஆமிடத்தை அடிப்படையாகக்கொண்டு பிறந்தவர்களுக்கு, இந்த மாதம் சற்று களேபரம்தான்.

அதிர்ஷ்ட எண்கள்: அனைத்தும் அதிர்ஷ்ட எண்தான்.

எச்சரிக்கை எண்கள்: அனைத்தும் கவன எண்தான்.

பரிகாரம்: பைரவரை வணங்குவது நல்லது. சனீஸ்வரருக்கு விளக்கேற்றி வணங்கவும். சமையல் வேலை செய்வோரின், வாகனங்கள் பழுது பார்க்கும் செலவை ஏற்றுக்கொள்ளவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் நாயகன் வீரமும் தைரியமும் நிறைந்த செவ்வாய் ஆவார். இந்த மாதம் முழுவதும், நல்லதில் கெடுதல், கெட்டத்தில் நல்லது என கலந்து கட்டி பலன்கள் கிடைக்கும். இளைய சகோதரனின் திருமணம் நடக்கும். வேலைக்கான ஆர்டர் கிடைக்கப்பெற்று, சேர்வதற்கான கையெழுத்து போடுவீர்கள். மேஜைக்கு அடியே பணம் கொடுக்கல்- வாங்கல் அமோகமாக நடக்கும். உங்களின் திருமண நிகழ்வில் உங்கள் உடன்பிறந்த வர் சின்ன கலகம் உண்டாக்குவார். உங்கள் தாய்மாமனும், உங்களோடு கருத்து வேற்றுமை கொள்வார். வெளிநாட்டு பயணம் உண்டு. வீடு விற்கும்போது, கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும். இந்த மாதம் பயணங்களில், நீங்களும், உங்கள் தந்தையும் சேர்ந்து சென்றால் ஏற்படும் விபத்து, உங்களுக்கு சிறு சிராய்ப்பையும், உங்கள் தந்தைக்கு நல்ல அடியையும் காயத்தை யும் தரும். எனவே இந்த மாதம் மட்டும், தந்தையுடன் எங்காவது செல்வதைத் தவிருங் கள். அரசியல்வாதிகள், தனது பயனற்ற பதவியைவிட்டு, பசையுள்ள பதவியை பிடித்து விடுவர். கலைஞர்கள் சிறு இடையூறுடன் வாய்ப்பு பெறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வணங்கவும். அருகிலுள்ள முருகருக்கு மஞ்சள் வஸ்திரமும், சிவப்பு அரளியும்கொண்டு வழிபடவும். சனிக்கிழமை, பைரவரை வணங்கி, அங்குள்ள அர்ச்சகருக்கு, துவரம் பருப்பு முடிந்தளவு வாங்கிக்கொடுங்கள்.

செல்: 94449 61845