1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சூரியனை எண்ணின் நாயகனாகக்கொண்ட நீங்கள் எக்காரணம் கொண்டும் முதலிடத்தை விட்டுக்கொடுக்காத மனப்பிடிவாதம் கொண்டவர்கள். இந்த தை மாதம் உங்களில் அனேகர் அரசுப் பதவி கிடைக்கப் பெறுவீர்கள். அது சீருடைப் பணியாக இருக்கலாம். மருத்துவராக அரசு மருத்துவமனையில் சேரலாம். உயர் கல்விக்காக அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும். விவசாய, மருத்துவம், கடல் சம்பந்தம் இவைசார்ந்த இனங் கள் அரசு ஆதரவுடன் செழுமை பெறும். ரொம்ப நாளாக, அரசு தர வேண்டிய பணம் இப்போது கைக்கு கிடைக்கும். சிலரின் வாரிசுகள் நல்ல பணப் புழக்கம் பெறுவர். பங்கு வர்த்தகம், கலைஞர்கள் விளை யாட்டு வீரர்கள் இவர்கள் நல்ல பணப்புழக்கம் பெறுவர். வாக்குமூலம் பணியாற்றுவோறும், காசு வரவு அதிகரிக்க காண்பர். உங்கள் இளைய சகோதரி, உங்களின் வணிக மேன்மைக்கு உதவுவார். பணியாட்கள், வியாபாரத்தில் ரொம்ப உதவியாக இருப்பர். வியாபாரம் சார்ந்த ஒரு ஒப்பந்த விஷயத்தில் வெற்றி கிடைக்கும். உங்கள் தொழிலில், ஒரு பெண் பங்குதாரர் கிடைத்து, அவரால் நல்ல பேர், புகழ், கௌரவம் அடைவீர்கள். சில கிளைகள் ஆரம்பிக்க முனைவீர்கள். இந்த மாதம் உங்கள் பெற்றோரின் அழும்பும், பிடிவாதமும், கோபமும் மிக அதிகமாக இருக்கும். இதன்காரணமாக அவர்கள் வேறிடம் நகர்வர். அது அனேகமாக பூர்வீக இடமாகவும் இருக்கலாம். உங்களின் வாரிசுகள், தங்கள் வாழ்க்கைத் துணைவரின் சொற்பேச்சு கேட்டு, மாறுபாடாக நடந்து, உங்களுக்கு மன வருத்தம் தருவர். தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை வரும். உங்கள் சிலரின் திருமணம், திருமண அமைப்புமூலம் உறுதிபெறும். இந்த மாதம் நீங்கள் சந்திக்கும் மனிதர்களிடம் சற்று கவனமாக, விலகி நின்று பழகவும். எதிர்மறை வேலைகளை உங்கள்மீது ஏவிவிடலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: தைப் பொங்கலின்போது, நிறைய காய்கறிகள் கொண்டு வணங்குவதோடு, விவசாயப் பெருமக்களுக்கு ஆடை வாங்கிக்கொடுங்கள். வீரபத்திரருக்கு விளக்கேற்றி வணங்குவது நல்லது.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சந்திரனை எண்ணின் நாயகனாகக்கொண்ட நீங்கள், எவ்விஷயத்திலும், பொறுமையைக் நிதானத்தைக் கடைபிடித்து, விட்டுக்கொடுத்து வாழ்வீர்கள். இவ்வளவு நாளும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தவர், இப்போது ஏனோ வெகுண்டு எழுந்து, கோபக்கனலை வீசுவீர்கள். உங்களை அறிந்த வர்கள், "அடடா ஸார் ரொம்ப நல்லவர் ஆயிற்றே இப்போ ஏன் இப்படி மாறிவிட்டார்' என முழிப்பர். வேலையில் பதவி உயர்வும், இடமாற்றமும் உண்டு. இந்த பதவி உயர்வு நாலு பேரிடம் பழகவைத்து நாப்பதுவிதமான பண வரவைத்தரும். உங்கள் இளைய சகோதரன், வேலை கிடைத்து வேறிடம் நகர்வார். வணிக சம்பந்த கடன் பத்திரங்களில் கையெழுத்து இடுவீர்கள். உங்களின் அதிரி புதிரி யான ஆட்டத்தைப் பார்த்து, பயல் நாலுவகையிலும் சம்பாதிப்பான் என அனுமானித்து, சொந்த பந்தம் பெண் கொடுக்க போட்டி போடுவர். இதனை உங்கள் தாயாரும் மூத்த சகோதரி யும் எதிர்ப்பர். தந்தையின் ஆதரவுடன் திருமணத்தை முடித்துவிடுவீர்கள். திருமணமானவர்கள், வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் கொள்வது அவசியம். சிலரின் வாழ்க்கைத் துணையின் வேலையில் இடையூறு தடங்கள், வருத்தம், நஷ்டம் ஏற்படும். வாரிசு வேண்டுவோர், வாரிசு கிடைக்கப்பெறுவர். பங்கு வர்த்தகம், நல்ல மேன்மை தரும். சினிமா கலைஞர் களில் சிலர் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வர். வேறு சிலர் பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்வர். சிலரின் மருமகள் வில்லங்கம் கொணவர். சிலர் கடனை அடைக்க இயலும். தொழில்புரிவோர், அரசு அதிகாரி, அரசியல்வாதி களுக்கு மறைமுக பணம் கொடுக்க வேண்டிவரும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. வெளிநாட்டு சம்பந்தம் ஒரு இம்சை, இன்னலுடன் லாபம் தரும். புது தொழில் தொடங்க நினைப்பவர்கள், இந்த தை மாதம் ஆரம்பிக்கலாம். தொழில் அதிர்ஷ்டம் மற்றும் நல்ல லாபம் தரும். லாபம் சற்று ரகசியம் விஷயம் கொண்டிருக்கும். உங்கள் மாமியாரின் ஆட்டம் அதிகரிக்கும். உங்களுக்கு எதிர்மறை வினைகள் புரிந்தவர்கள், சற்று மறைவு நிலைக்குச் செல்வர்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.
பரிகாரம்: தைப் பொங்கலின்போது மண் பாத்திரங் களை அதிகமாக பயன்படுத்துங்கள். மண்பாண்டம் செய்பவர், விற்பவருக்கு ஆடை வாங்கிக் கொடுங்கள். வீரபத்திரரின் அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், பன்னீர் வாங்கிக் கொடுத்து வணங்கவும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
குருவை உங்கள் எண்ணின் நாயகனாகக் கொண்டவர்கள், எல்லா விஷயத்திலும் நேர்மையான அணுகுமுறையைக் கடைபிடிப்பீர்கள். இந்த மாதம், இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு, எப்படியாவது ஒரு வேலை கிடைத்துவிடும். சிலரின் கைபேசியில், அதற்கான தரவுகள் பதவிறக்கம் ஆகும். ரொம்ப நாளாக, ஒரு வியாபாரம் செய்யவேண்டும் என்றோ, சொந்தமாகத் தொழில் ஆரம்பிக்கவேண்டும் என்றோ கனவு கண்டவர்கள், இம்மாதம் அவை நிஜமாக காண்பர். அரசுமூலம் வரவேண்டிய பாக்கி பணம் திரும்பக் கிடைக்கும். தந்தையின் அனுசரணை உண்டு. சிலர் தகவல் தொடர்பு துறை சார்ந்த வேலையில் சேர்வர். சிலருக்கு பதவி உயர்வு சம்பந்த விஷயம் காதில் விழும். உங்கள் பணியாளரால், உங்கள் வீடும், உங்கள் தாயாரும் எரிச்சல் அடைவர். வீட்டுக்கடன் பற்றிய விஷயம் சற்று குழப்பம் தரும். உங்களில் சிலர் செமத்தி யாக குடித்துவிட்டு, மட்டையாகி காவல்துறையின் நண்பராகிவிடுவீர்கள். உங்கள் மூத்த சகோதரியின், வேலை அல்லது நோய் அல்லது வீடு மாற்றம் சம்பந்தமாக சிறு அலைச்சல் வரும். திருமண ஏற்படுகள் விரைவு பெறும். சினிமா கலைஞர்களின் திறமையும், உழைப்பும் மிக அதிகமாக இருப்பினும், அதனை யாரும் அங்கீ கரிக்காமலும், கண்டுகொள்ளாமல் இருப்பதாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். பங்கு வர்த்தகத்துறை சிறப்பாக இருப்பினும், உங்களுக்கு யாதொரு பலனுமில்லாமல் போய்விடும். உங்களின் சில வாரிசுகள் கோபித்து, வீட்டைவிட்டு ஓடிவிடக்கூடும். அரசியல்வாதிகளுக்கு, தங்களின் வேலை சார்ந்து, அலைச்சல் இருந்துகொண்டே இருக்கும். கைபேசியில் உங்கள் சமையல் திறமை பளிச்சிடும். மனை சார்ந்த செலவுண்டு. உங்கள் மாமனார் வீடு, வாகனம் மாற்றும் விஷயமாக ரொம்ப குழம்பிக்கொள்வார். உங்கள் வாழ்க்கைத் துணையின் வேலை சிறிது மாறுதல் பெறும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: தைப் பொங்கலின்போது மஞ்சள் கொத்து பயன்பாடு அதிகமிருக்கட்டும். கோவிலில் பூஜை செய்யும் அந்தணர், ஓதுவார்களுக்கு புது ஆடை கொடுப்பது விசேஷம். வீரபத்திரருக்கு, மஞ்சள் படைத்து வழிபடவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ராகு பகவானே உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். புதுமையான முறையில், மிக வேறுபாடாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் நீங்கள். இந்த மாதம் பணவரவிற்கு குறைவிருக்காது. சில ஒப்பந்தங்கள், மறுபடியும் புதுப்பிக்கப்படுவதால் பண செழிப்பு பெறுவீர்கள். வாக்கு, அவ்வப்போது கோபம் கொள்ளும். சில பணியாளர்களை, நீங்களே வேலை நீக்கம் செய்துவிடுவீர்கள். உங்கள் இளைய சகோதரி, எத்தனை சொல்லியும் கேளாமல், அரசியலில் பங்கெடுக்க, வேறிடம் செல்வாள். உங்கள் வாழ்க்கைத் துணை தொழில் அல்லது வேலை கிடைக்கப்பெறுவார். இந்த மாதம் சற்று கடன் பெருக்கம் வரும். எதிரிகள் பெருகுவர். கால் வலி பின்னியெடுக்கும். உங்களில் அரசுப் பணி செய்வோர், பதவி உயர்வு கிடைக்கப்பெறுவர். சிலர் சீருடை பணியில் சேர்வர். திருமணம் கௌரவம், வீடு, தொழில் இவை கொண்டு வந்துசேர்க்கும். உங்கள் கைபேசிமூலம் வந்த சிக்கல் சரியாகும். உங்கள் பூர்வீகம் மூலம் ஒரு அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்புண்டு. உங்களில் சிலர் கைபேசி சம்பந்தமான வியாபாரம் தொடங்குவீர்கள். சிலர் ஆரோக்கியம் அல்லது பழமையான உணவு வகைகள் சார்ந்து தொழில் ஆரம்பிக்க முனைவீர்கள். அரசியல்வாதிகள், தங்களின் சேவைகள்மூலம், அரசியலில் ஸ்திரம் பெறுவர். இவர்களின் யோசனையின் குறுக்குத்தனம் இதனை அமைத்துத் தரும். கலைஞர் களுக்கு ஏற்படும் பெரிய சறுக்கல், அவர்களை மேன்மை நிலைக்கு கொண்டுசேர்க்கும். உங்கள் மாமனாரும், மாமியாரும் சில பல குசும்புத்தனம் செய்து நல்ல பெயர் எடுத்துவிடுவர். பங்குவர்த்தகம் மேன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: தைப் பொங்கலன்று, முடிந்தமட்டும் உளுந்து வடை செய்து, படைத்து வணங்கவும். உங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்கவும். வீரபத்திரருக்கு எலுமிச்சை காணிக்கை ஆக்கி வணங்கவும்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
புதன் உங்களின் எண்ணின் நாயகன் ஆவார். வேறுபாடான, குயுக்தியான நக்கலான புத்திசாலித்தனம் கொண்டவர் நீங்கள். இந்த மாதம் வங்கியில் கடன் கேட்டிருந்தால், அது உடனே கிடைக்கும். அதுபோல் அடுக்குமாடி வீடு வாங்கும் சூழ்நிலை இயைந்து வரும். தனியார் துறையில் வேலை கிடைக்கும். உங்களில் சிலரின் வாரிசுகள், நல்ல வேலை அல்லது உயர்கல்வி யோகம் பெறுவர். பங்கு வர்த்தகம் மேன்மை தரும். இந்த மாதம் சில ஒப்பந்தங்கள், உங்களுக்கு நல்ல ஆளப்பரிய லாபம் தரும். சிலருக்கு போனஸ் அல்லது எதிர்பாராத இலவச தொகை கிடைக்கும். சிலருக்கு மனை, வீடு இவற்றின்மூலம் ஏற்பட்ட இன்னலுக்கு பெரிய தொகை இழப்பீடாக கிடைக்கும். ரியல் எஸ்டேட் சம்பந்தம் கொண்டோர் நல்ல லாபம் பெறுவர். உங்களில் நிறைய பேர் வீடு வாங்க அட்வான்ஸ் கொடுப்பீர்கள். சினிமா கலைஞர்கள், வேலை பொருட்டு வெளிநாட்டு பயணம் மேற்கொள்வர். அரசு சம்பந்தமான கட்டண செலவு வரும். உங்கள் தந்தையின் உடல்நிலை சார்ந்து அலைச்சல் இருக்கும். உங்கள் வேலை சம்பந்தமாக, வெளிநாட்டு நபரை சந்திக்கக்கூடும். மூன்றாம் மனிதர் களால், தம்பதிகளுக்குள் மனப்பிணக்கு உண்டாகும். உங்களின் சில வழக்குகள், சமதான முறையில் தீர்க்கப் படும். சிலர் கல்வி சம்பந்தமான ட்யூசன் சென்டர்கள் ஆரம்பிக்கக்கூடும். கட்டட சம்பந்த பொருட்களின் வணிகத்தை விரிவுபடுத்துவீர்கள். மனை விற்பது தாமதம் ஏற்பட்டவர்களுக்கு, இந்த மாதம் நல்ல லாபத்துடன் மனை விற்பனை நடக்கும். அரசியல்வாதிகளில் சிலரின் திடீர் விலகல் இடமாற்றம், கட்சி மாற்றம், அவர்களுக்கு பெரிய லாபத்தையும், பெத்த பேரையும் தரும். உங்கள் மாமனார் ஒரு அளப்பரிய செயலை செய்து நல்ல அதிர்ஷ்டம் அடைவார்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: பொங்கலுக்கு, பச்சை வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, துளசி இவைகொண்டு வணங்கவும். சிறுவர்களுக்கு புது ஆடைகள் வாங்கிக்கொடுக்கவும். வீரபத்திரருக்கு பச்சை வாழைப்பழம், தாம்பூலம் கொண்டு, கற்பூரம் காட்டி வழிபடவும்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சுக்கிரன் உங்கள் எண்ணின் நாயகர் ஆவார். எந்த விஷயத்தையும் மிக அழகியலோடு பார்க்க வசீகரமாக செய்துமுடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இந்த மாதம் புது புது யோசனைகள் தோன்றும். இந்த யோசனைகள், பலமான சிந்தனைகளாக உருப்பெறும். இந்த மேன்மையான சிந்தனைகள், உங்களுக்கு வந்த, ஒரு ஏமாற்றத்தை, லாபமாக மாற்றிவிடும். இதனால் உங்கள் தொழில் மிகப்பெரிய ஏற்றம் பெறுவதோடு நல்ல பணவரவைத்தரும். இந்த பணவரவுடன், நிறைய மனிதர்களின் அறிமுகமும் கிடைக்கும். உங்கள் இளைய சகோதரன் கடன் விஷயமாக, சற்று அவமானம் கொண்டுவருவார். தயவுசெய்து, கைபேசிமூலம் வரும் கடன், வேலை வாய்ப்பு தரவுகளை நம்பவேண்டாம். பெரும் இழப்பு ஏற்பட்டுவிடும். சினிமா கலைஞர்கள், அவமானத்தையும், சரிவையும் சந்திப்பர். அதே அவமானத்தை தடலடியாக செயல்பட்டு, பெரிய மேன்மைக் குரிய செயலாக மாற்றிவிடுவர். பங்குவர்த்தகத்தில் கவனமாக இருக்கவும். வாரிசுகளின் ஒழுங்கு நடவடிக்கை யில் சற்று கவனம் தேவை. இந்த மாதம் உங்கள் எதிரிகள் உடல்நலம் குன்றுவதால் அமைதியாகிவிடுவர். பணவரவு அதிகரிப்பால், கடன்களை அடைத்துவிடுவீர் கள். கொழுப்பு சார்ந்த வியாதிகளுக்கு நல்ல மருந்து கிடைக்கும். திருமணம் பெரிய பெத்த அளவில் நடப்பதால், அது சார்ந்த தரவுகள் வெளிவந்து, உங்களுக்கு இம்சையைக் கூட்டிக் கொணரும். உங்கள் இளைய சகோதரனின் நடவடிக்கையால், அவரது மனைவி வேறிடம் செல்வார். அரசியல்வாதிகள் பிறந்த ஊரில் பெரும் பெருமை கொள்வர். பணியாளர்களால் செலவுண்டு. உங்கள் மாமியார் சற்று அதகளம் செய்வார்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: தைப் பொங்கலின்போது சர்க்கரைப் பொங்கல் தயாரித்து வழிபடவும். இளம் பெண்கள் அல்லது சிறுமிகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுங்கள். வீரபத்திரருக்கு சர்க்கரை அல்லது சர்க்கரைப் பொங்கலுடன் வழிபடவும்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
கேது பகவான் உங்கள் எண்ணின் நாயகன். ஆழ்ந்த ஞானமும், தீவிர சிந்தனையும், அபிரிமிதமான அடக்க குணமும் கொண்டவர்கள் நீங்கள். இந்த மாதம் உங்கள் யோசனைகள் கட்டுக்கோப்பாக இருக்கும். இந்த யோசனைகள் வாழ்வின் முன்னேற்றுத்துக்கு வழி வகுக்கும். வீடு கட்ட கடன் கிடைக்கும் அல்லது மனை வாங்க இயலும். விவசாயம் சார்ந்தவர்கள், அரசின் நிதியுதவி பெறுவர். தகவல் தொடர்பு சார்ந்த பணியில் இருப்போர், எதிர்பாராத பதவி உயர்வும், இடமாற்றமும் பெறுவர். சீருடை பணியாளர்கள் அரசின் மாறுதல் உத்தரவு கிடைக்கப்பெறுவர். அரசு அதிகாரிகளில் சிலர் அரசியல்வாதிகளால் அவமானப்படுத்தப்படுவர்; கவனம் தேவை. கொஞ்சம் சண்டை, சச்சரவுடன் கலப்புத் திருமணம் நடக்கும். கல்வி சம்பந்தமான மேன்மைகள் உண்டு. அரசு திட்டங்களால் அனுகூலம். பெறுவீர்கள். அரசு கட்டுமானத்துறை சார்ந்த வீடு கிடைக்கும். தம்பதிகளுக்குள் நீர் சார்ந்த நோயினால் சற்று வருத்தம் உண்டாகும். பணவரவில் தாமதம் ஏற்படும். உங்கள் யோசனைகளால் தெளிவுபெற்று, மேன்மை பெற்று விடுவீர்கள். அரசியல்வாதிகள், தங்கள் வாரிசு மூலம் பெருமை அடைவர். கலைஞர்கள் சற்று சுணக்கம் காண்பர்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: தைப் பொங்கலின்போது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வணங்கவும். கோவில் அர்ச்சகருக்கு புது வஸ்திரம் வாங்கிக் கொடுக்கவும். வீரபத்திரருக்கு விளக்கேற்றி வணங்கவும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சனி பகவானின் எண்ணின் நாயகர் ஆவார். கடுமையான உழைப்பும், எந்த கஷ்டத்தையும் மனதளவில், உடலளவில் தாங்கிக் கொள்ளும் பக்குவம்மிக்கவர்கள் நீங்கள். இந்த மாதம் புத்திபூர்வமாக இனங்கள் உங்கள் பணவரவை கொண்டுவரும். உங்கள் சிந்தனை கள் உங்கள் தொழிலை விருத்தியாக்கும். கலைத் தொழிலில் உள்ளோர், முக்கியமாக நடிப்பு மட்டுமல்லாது, சினிமா தயாரிப்பு, டைரக்ஷன், எடிட்டிங் என இவ்வித பின்னிருந்து பணியாற்றுவோர் மிக நல்ல பலன் காண்பர். பங்குவர்த்தகம் அதிகப் பலன் தரும். பொழுதுபோக்கு துறை சார்ந்தோர். அடுக்குமாடி வீடு கட்டுவோர், அழகுக் கலை சார்ந்தோர் விறுவிறுப்பு பெறுவர். உங்கள் வாழ்க்கைத்துணை அரசியலில் இருந்தால், மிக உன்னதம் பெறுவர். மனையால் நல்ல லாபம் வரும். விவசாயிகள், உங்கள் விளைப்பொருளால் நல்ல செழிப்பு காண்பர். உங்கள் தாயாரும், மூத்த சகோதரியும் நல்ல தகவல் கிடைக்கப்பெறுவர். உங்கள் வாரிசுகள் அதிலும் பெண் குழந்தைகள், உங்களுக்கு நிறைய பணவசதி செய்துகொடுப்பர். வாரிசுகளால், உங்கள் கடன் அடையும். இப்போது நடக்கும் திருமணத்தில் அரசியல் கலந்திருக்கும். சிலரின் மறுமணம் கூடிவரும். இந்த மாதம் அரசுவகையில் சிரமம் ஏற்பட்டாலும் பின் அதுவே ஒரு நன்மைக்கு வழிவகுக்கும். உங்கள் தந்தை தெய்வ வழிபாட்டை முன்னிட்டு பயணம் மேற்கொள்வார். உங்கள் வாரிசுகள், உங்கள் குடும்பப் பெருமை, கௌரவத்தை மிளிரச் செய்வர். தொழில் ஆரம்பிக்க எண்ணம் உள்ளவர்கள், உங்கள் வாரிசு அல்லது பூர்வீகம் சார்ந்து தொடங்கிவிடுங்கள். ஒரு அரசியல் வாதி, தடலடியாய் திருமணம் செய்வார். உங்கள் மாமியாரின் உதவி ஒத்தாசை கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: தைப் பொங்கல் வழிபாடு பூர்த்தியானவுடன், காகத்திற்கு பொங்கல் வைக்க மறக்காதீர்கள். இஸ்லாமிய பெரியவருக்கு லுங்கி எடுத்துக்கொடுங்கள். வீரபத்திரருக்கு எள் சாதம் வைத்து வணங்கவும்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
செவ்வாய் உங்கள் எண்ணின் நாயகர் ஆவார். வீரமும் கோபமும், மற்றவர்களை பாதுகாப்பதில் முன்னிலை வகிப்பவர்கள் நீங்கள். இந்த மாதம் உங்கள் வீடு, வாகனம், வயல், தோட்டம் இவை ரொம்ப டேமேஜ் ஆகியும்கூட நீங்கள், அதற்கு நிறைய செலவு செய்து, முன்னிலும் அதிகமாக பிரமாதப்படுத்திவிடுவீர்கள். சில துன்பங்கள் தவிர்க்கப்படும். பணவரவு மிக செழிப்பாக இருக்கும். இந்த அபிரிமிதமான பண பெருக்கத்தால், உங்களுக்கு ஏற்படும் இன்னல்களை, துடைத்து எறிந்து விடுவீர்கள். இளைய சகோதரன் திருமணம் நடக்கும். உங்கள் தொழில் மேன்மை அடைய அரசு புத்தி சார்ந்த உதவிகளை அளிக்கும். பங்கு வர்த்தகம் சுமாராக இருக்கும். கலைஞர்கள் வருமான வரி சோதனைக்கு உள்ளாவார்கள். அரசியல் வாதிகள், சிலபல சந்திப்பு களால் நல்ல லாபமும், பதவி உயர்வும், சிலருக்கு சில பதவிகளும் கிடைக்கும். இந்த சந்திப்புக்காக, அரசியல்வாதிகள், வெளி நாட்டு பயணம் மேற் கொண்டு, நினைத்தை சாதிப்பர். வேலை சார்ந்து அதிர்ஷ்ட தகவல்கள் கிடைக்கும். கடன்கள் தீரும். திருமண வெகு மேன்மை கொண்டுவரும். உயர்கல்வியின் பொருட்டு வெளிநாடு செல்வர். தொழில் அமைப்பிற்கு, அரசு சார்ந்த மனை கிடைக்கும். இந்த மாதம் தொழிலில் நல்ல பணவரவு, மிகுந்த லாபமும் கிடைக்கும். தொழிலின் மேன்மைக்காக, சந்திப்புக் களை அமைத்துக்கொள் ளுங்கள். இது அழகாக சரிப் பட்டு வரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: தைப் பொங்கலுக்கு கூடியமட்டும் மண் அடுப்பு, மண்பானை பயன்படுத்துங்கள். நிறைய கிழங்குகளை, பூமிக்கு அடியில் விளைந்ததை பயன் படுத்துவது நல்லது. விவசாய பெருமக்களுக்கு புது துணி வாங்கிக்கொடுங்கள். வீர பத்திரருக்கு குங்குமம் காணிக்கையும், பருப்பு சாதமும் காணிக்கை நன்று.
செல்: 94449 61845