நாம் பொதுவாக சிவபெருமான், திருமால், விநாயகர், முருகன் ஆகிய தெய்வங் களை வழிபட்டுவருகிறோம். மேலும் குல தெய்வம், அம்மன் வழிபாடுகள் நடைமுறை யில் உள்ளன. அதுபோன்று நட்சத்திர வழிபாடும் முக்கியமானது.
நம் திருமணநாள், பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் திருக்கோவிலுக்குச் சென்று நம் பெயர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்கிறோம். அவ்வாறு செய்யும்போது அர்ச்சகர் நம்முடைய கோத்திரம், நட்சத்தி ரம், ராசி உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு இறைவனிடத்தில் அர்ச்சனை செய்து நமக்குப் பிரசாதம் வழங்குவார். இதில் நம் ஜென்ம நட்சத்திரத்திற்கு முக்கிய பங்குள்ளது. நாம் இவ்வுலகில் பிறந்ததுமுதல் இவ்வுலகைவிட்டுப் பிரிவதுவரையில் நம்மை இயக்குவது நம் ஜென்ம நட்சத்திரமே. அதேபோன்று ஒவ்வொரு இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம் உள்ளது.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு திருக்கோவில் உள்ளது. அந்நட்சத் திரக்காரர்கள் அங்குசென்று இறைவனை வழிபட்டால் அவர்களுக்கு தீமைகள் விலகி நன்மை உண்டாகும். அதுபோல ஜென்ம நட்சத்திரத்திற்குரிய அதிதேவதை களை வணங்கினால் நாம் வேண்டியது அனைத்தும் கிட்டும். அத்தகைய கோவில் எங்குள்ளது?
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில், காஞ்சிபுரம்- வந்தவாசி நெடுஞ்சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உக்கம்பெரும் பாக்கம் கிராமத்தின் தெற்குப் பகுதியில், கூழமந்தல் கிராமத்தின் ஏரிக்கரை ஓரத்தில் 27 நட்சத்திர அதிதேவதைகளின் திருக் கோவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பேசும்பெருமாள் கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் ஆகியவை சிறப்புப் பெற்று விளங்கும் நிலையில், மேலும் இவ்வூரை அலங்கரிக்கும் கோவிலாக 27 நட்சத்திர அதிதேவதைகளின் கோவில் விளங்குகிறது.
திருக்கோவிலின் அமைப்பு
கோவிலின் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம், திருக்கோவில் வளாகத்தின் உள்ளே 27 நட்சத்திரத்திற்குரிய அதிதேவதைகள், ராகு- கேது, சனீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து தேவர்களுக்கும் நடுநாயகமாக நட்சத்திர விருட்ச விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.
இவரே முதன்மையானவராக இருந்து அருள் பாலிக்கிறார்.
அஸ்வினிமுதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரத்திற்குரிய விருட்சங்கள் (மரங்கள்) திருக்கோவிலின் வெளியே இடப்புறத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அபிஜித் அதிதேவதை நாம் அனைவரும் அறிந்திருப்பது 27 நட்சத்திரங்களை மட்டுமே. ஆனால் 28-ஆவது நட்சத்திரமான அபிஜித் என்ற நட்சத்திர அதிதேவதையும் இத்திருக்கோவிலில் அமைக் கப்பட்டுள்ளது சிறப்பு. இந்நட்சத்திரம் யாருக்கும் ஜென்ம நட்சத்திரமாக வருவதில்லை.
பலன்கள்
27 நாட்களுக்கு ஒருமுறை, அவரவருக்குரிய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் நட்சத்திர அதிதேவதைகளை வழிபடுவது சிறந்த பலனைக் கொடுக்கும். இவ்வாறு அதிதேவதை களை வழிபடுவதனால் நீண்டநாட்கள் வாழ்க்கையில் நிலவிவரும் சகலவித துன்பங் களும் நீங்கி நிம்மதி உண்டாகும்.
இத்திருக்கோவில் தமிழ்ப்புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, கஜமுகாசுரன் வதம் நிகழ்ச்சி, விநாயகர் சதுர்த்தி, தை மாதம் காணும் பொங்கலன்று காலையில் 108 கோபூஜை, ஆங்கிலப்புத்தாண்டு, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி ஆகிய கிரகப்பெயர்ச்சி விழாக்கள் சிறப் பாக நடைபெற்றுவருகின்றன. இதைத்தவிர வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் சிறப் புப் பூஜைகளும், பிரதி மாதம் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் மாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் 1,008 சகஸ்கர நாமாவளி அர்ச்சனைகளும் நடைபெறுகின்றன.
ஆலயம் காலை 8.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும் திறக்கப்படுகிறது.
வேறெங்கும் காணக்கிடைக்காததும், அதிக சக்தி கொண்டதுமான இத்திருக் கோவிலுக்குச் சென்று அவரவருக்குரிய நட்சத்திர அதிதேவதை மற்றும் விருட்சத்தை வணங்கி, வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து சங்கடங்களிலிருந்தும் விடுபட்டு நற்பலன் களைப் பெறுவோமாக!
ஆலய அர்ச்சகர்கள்
வைத்தீஸ்வரன்,
கைப்பேசி: 99435 00878;
கோபிகிருஷ்ணன்,
கைப்பேசி: 63831 71284.