ஞ்சபூதத் திருத்தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில், மனித உடலின் தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு அமைந்துள்ளது.

மனிதன், நாள் ஒன்றுக்கு 21,600 முறை மூச்சுவிடுகிறான். அந்த அடிப்படையில் சிதம்பரம் கோவிலிலுள்ள கனகசபையின்மேல் 21,600 தங்க ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றைப் பொருத்த 72,000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காரணம், மனித உடலில் 72,000 நாடிகள் உள்ளன. அதைக் குறிப்பதே இந்த ஆணிகள் என்று கூறப் படுகிறது.

மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை முறை சுவாசிக்கிறான் என்பதை அந்தக் காலத்திலே கணித்திருக்கிறார்கள் சித்தர் பெருமக்கள். அதனை இன்றைய அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.

Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவிலிலுள்ள ஐந்து சபைகளும் மனித உடலுடன் ஒப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளன. அவை சித்சபை, கனக சபை, தேவ சபை, நிருத்த சபை, ராஜ சபை. இந்த அமைப்பினை திருமூலர் வழிவந்த கருவூரார் என்ற சித்தர் அமைத்தார் என்பது வரலாறு.

இங்கு சிற்சபையும் கனக சபை யும் பொன்னம்பலத்தால் இணைக்கப் பட்டுள்ளன. இந்தப் பொன்னம்பலத்தை சிற்றம்பலம், ஞானசபை என்றும் போற்றுவர்.

மனித உடலில் இதயம் இடப்பக்கம் சற்று தள்ளியிருப்பதுபோல நடராஜர் சந்நிதி சற்று இடப்புறமாக அமைந்துள் ளது. இதயம் துடித்துக்கொண்டே இருப்பதுபோல நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டே இருக்கிறார்.

Advertisment

மேலும், இக்கோவிலிலுள்ள ஐந்து சபைகளும் மனித உடலுடன் ஒத்துப் போகின்றன.

அன்னமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம் என்று பஞ்ச கோசங்களாகவே வர்ணிக்கப்படுகின்றன.

kovil

மனிதனின் ஒரு நாள் சுவாச எண்ணிக்கை யைத் துல்லியமாகக் கணித்து, அந்த அடிப்படையில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலை நிர்மாணித்ததுபோல, யுகங் களின் காலக்கணக்கையும் சித்தர்கள் கணித் திருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்கு.

கிருதயுகத்தில் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். சராசரியாக 1,00,000 வருடங்கள் வாழ்வார்கள். இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.

திரேதாயுகத்தில் நான்கில் மூன்று பகுதி மக்கள் அறநெறியுடனும், ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். குறைந்தது 10,000 வருடங்கள் வாழ்வார்கள். இந்த யுகமானது 12,96,000 வருடங்கள் கொண்டது.

துவாபரயுகத்தில் சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபாதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள். இது 8,64,000 வருடங்கள் கொண்டது. 1,000 வருடங்கள் வாழ்வார்கள்.

கலியுகத்தில் நான்கில் ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும், மூன்று பகுதி மக்கள் அறமில்லாமலும் சுயநலத்துடனும் வாழ்வார்கள். இந்தக் கலியுகத்தில் குறைந்தபட்சம் 100 வருடங்கள் வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000 வருடங்கள் கொண்டது.

சித்தர்கள் மேற்படி யுகங்களை 60 நெடி- ஒரு விநாடி; 60 விநாடி- ஒரு நாழிகை; 60 நாழிகை- ஒரு நாள்; 360 நாள்- ஒரு வருடம் என்ற கணக்கில் யுகங்களைக் கணித்திருக் கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.

மேலும், யுகங்களின் கணக்குப்படி, நாள் ஒன்றுக்கு நம் சுவாசம் 21,600.

ஒரு வருடத்தின் நாழிகை 21,600.

வருடங்கள் 21,600ஷ்80=17,28,000 கிருதயுகம்.

21,600ஷ்60=12,96,000 திரேதாயுகம்

21,600ஷ்40=8,64,000 துவாபரயுகம்v 21,600ஷ்20=4,32,000 கலியுகம் என்று ஒவ்வொரு யுகத்திற்கும் வருடங்களை சித்தர்கள் கணக்கிட்டு அறிவித்திருக் கிறார்கள்.

யுகங்களின் கணக்கின்படி, தற்பொழுது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த யுகத்தில் கடவுளிடம் பக்தி அதிகமாகும்; வேண்டுதல்களும் அதிகமாகும்; நீதி நேர்மையுடன் நடந்தால் இறையருளால் சுகமுடன் வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.