தர்ம பூமியில் தாய்க்கொரு கோவில்! -முனைவர் இரா.இராஜேஸ்வரன்

/idhalgal/om/tarama-paumaiyaila-taayakakaorau-kaovaila-maunaaivara-iraairaajaesavarana

ஸ்தாம் தாவதியம் ப்ரஸூதி

ஸமயே துர்வார சூலவ்யதா

நைருச்யே தநுசோஷணம் மலமயீ

சய்யா ச ஸாம்வத்ஸரீ

ஏகஸ்யாபி ந கர்ப பார பரண

க்லேசஸ்ய யஸ்யா க்ஷம

தாதும் நிஷ்க்ருதிம் உன்னதோ

பி தநய தஸ்யை ஜநன்யை நம:

ஆதிசங்கரர் அருளிய "மாத்ருகா பஞ்சகம்' எனும் ஞானநூலின் முதல் பாடலிலிலில் மேற்கண்ட வரிகள் உள்ளன. தாயின் பெருமையையும், கருவில் வளரும் தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காக தாய் படும் துயரத்தை யும், வலி வேதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு குழந்தைக்காக தாய் செய்யும் தியாகத்தையும் மிக அழகாக, உருக்கமாக விவரித்துள்ளார் ஆதிசங்கரர். "மாத்ருகா பஞ்சக'த்திலுள்ள ஐந்து பாடல்களைப் (சுலோகம்) பொருளுணர்ந்து படிக்கும்போது கண்களில் கண்ணீர் வருவது நிச்சயம்.

"நண்டு, சிப்பி, வேய், கதலீ நாசமுறும்

காலம் கொண்ட கருவளிக்கும்'

என்னும் தமிழ்ப்பாடலிலில் வரியின் பொருள்- நண்டு, தேள், சிப்பி, மூங்கில், வாழை போன்ற ஜீவராசிகள், தாவரங்கள் தன்னுயிரைக் கொடுத்துதான் தன் இனத்தைப் (குழந்தை) பிறக்க வைக்கின்றன. இதுதான் தாய்மையின் பெருமையும் அடையாளமும்!


தாய்மையையும், பெண்மையையும், தாய் வழிபாட்டையும் போற்றும்வண்ணம் தர்மபுரி நகரின் மையப்பகுதியில் கோட்டைக் கோவிலிலிலிலில் அன்னை கல்யாண காமாட்சியம்மன் கொலுவீற்றிருக்கிறாள்.

நாம் வாழும் இவ்வுலகில் நமக்கு உயிர் கொடுத்து, கருவறையில் காத்து, தோற்றுவித்து வளர்த்து ஆளாக்கி, ஒரு நல்ல குடிமகனாக உருப் பெறச் செய்வது ஒரு தாயின் மகத்தான தொண்டு. மனிதன் மட்டுமின்றி எல்லா உயிரினங் களுக்கும் இது பொருந்தும். உதாரணமாக, பறவைகள் தங்கள் இனத்தைப் பெருக்க கூடுகட்டி, முட்டையிட்டு, அதை அடைகாத்து குஞ்சைத் தோற்றுவித்து, எதிரிகளிடமிருந்து பாதுகாத்து, குஞ்சுகளுக்குத் தேவையான உணவைத்

ஸ்தாம் தாவதியம் ப்ரஸூதி

ஸமயே துர்வார சூலவ்யதா

நைருச்யே தநுசோஷணம் மலமயீ

சய்யா ச ஸாம்வத்ஸரீ

ஏகஸ்யாபி ந கர்ப பார பரண

க்லேசஸ்ய யஸ்யா க்ஷம

தாதும் நிஷ்க்ருதிம் உன்னதோ

பி தநய தஸ்யை ஜநன்யை நம:

ஆதிசங்கரர் அருளிய "மாத்ருகா பஞ்சகம்' எனும் ஞானநூலின் முதல் பாடலிலிலில் மேற்கண்ட வரிகள் உள்ளன. தாயின் பெருமையையும், கருவில் வளரும் தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காக தாய் படும் துயரத்தை யும், வலி வேதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு குழந்தைக்காக தாய் செய்யும் தியாகத்தையும் மிக அழகாக, உருக்கமாக விவரித்துள்ளார் ஆதிசங்கரர். "மாத்ருகா பஞ்சக'த்திலுள்ள ஐந்து பாடல்களைப் (சுலோகம்) பொருளுணர்ந்து படிக்கும்போது கண்களில் கண்ணீர் வருவது நிச்சயம்.

"நண்டு, சிப்பி, வேய், கதலீ நாசமுறும்

காலம் கொண்ட கருவளிக்கும்'

என்னும் தமிழ்ப்பாடலிலில் வரியின் பொருள்- நண்டு, தேள், சிப்பி, மூங்கில், வாழை போன்ற ஜீவராசிகள், தாவரங்கள் தன்னுயிரைக் கொடுத்துதான் தன் இனத்தைப் (குழந்தை) பிறக்க வைக்கின்றன. இதுதான் தாய்மையின் பெருமையும் அடையாளமும்!


தாய்மையையும், பெண்மையையும், தாய் வழிபாட்டையும் போற்றும்வண்ணம் தர்மபுரி நகரின் மையப்பகுதியில் கோட்டைக் கோவிலிலிலிலில் அன்னை கல்யாண காமாட்சியம்மன் கொலுவீற்றிருக்கிறாள்.

நாம் வாழும் இவ்வுலகில் நமக்கு உயிர் கொடுத்து, கருவறையில் காத்து, தோற்றுவித்து வளர்த்து ஆளாக்கி, ஒரு நல்ல குடிமகனாக உருப் பெறச் செய்வது ஒரு தாயின் மகத்தான தொண்டு. மனிதன் மட்டுமின்றி எல்லா உயிரினங் களுக்கும் இது பொருந்தும். உதாரணமாக, பறவைகள் தங்கள் இனத்தைப் பெருக்க கூடுகட்டி, முட்டையிட்டு, அதை அடைகாத்து குஞ்சைத் தோற்றுவித்து, எதிரிகளிடமிருந்து பாதுகாத்து, குஞ்சுகளுக்குத் தேவையான உணவைத் தன் அலகுமூலம் ஊட்டி, அவற்றுக்கு பறக்கப் பயிற்சி கொடுத்து, அதை ஒரு முழுப் பறவையாக மாற்ற தாய்ப்பறவை அதிக கவனம் செலுத்துகிறது. உலகிலுள்ள உயிரினங்களுக் குள் தாய்க்கும் சேய்க்குமுள்ள இணக்கமும் பாசமும் தெய்வத்திற்கு நிகர் என்றே சொல்லலாம். ஆதலால்தான் மனிதன் முதலில் தாயை தெய்வமாக மதிக்கத் தொடங்கினான். இதுவே பிற்காலத்தில் அம்மன் வழிபாடாகவும் மாறத் தொடங்கியது.

அம்பிகையை "மகமாயி' என்று அழைப்ப துண்டு. மகமாயி என்பதற்கு மகத்தான தாய், மகிமை பொருந்திய தாய் அல்லது தாய்க் கெல்லாம் தாய் என பொருள்படும். ஸ்ரீ லலிலிலிலிதா சகஸ்ரநாமத்தில் தியான சுலோகத்திற்கு அடுத்துவரும் முதல் நாமமே "ஸ்ரீமாதா' என்பதாகும். அம்பிகையை சிறப்புடைய, மங்களகரமான தாய் என்கிற பொருளில் சொல்லப்பட்டுள்ளது. இவளே அகில உலகங்களையும், அதில் வாழும் உயிரினங் களையும் ஈன்ற தாயாவாள். (ஜகன்மாதா). செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிக்கும், கல்விக் கடவுளான சரஸ்வதிக்கும் "ஸ்ரீ' என்கிற ஓரெழுத்தை பெயருக்கு முன்பு போட்டு ஸ்ரீலட்சுமிதேவி, ஸ்ரீசரஸ்வதிதேவி என அழைக் கிறோம். இவ்விரு தேவியரும் வேதமயமான அம்பிகைக்குள் அடக்கம். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கிற மூம்மூர்த்திகளுக்கும் ஆற்றலைக் கொடுப்பவள் பராசக்தி என்னும் அம்பிகையே. நம் தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வத்தைப் போற்றி எழுதியுள்ளனர். கம்பர், ஔவையார், பாரதியார் என பலரைச் சொல்லலாம்.

d

"தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும்- இவள்

என்று பிறந்தனன் என்றுண ராத

இயல்பினளாம் எங்கள் தாய்'

என அம்பிகையைத் தாயுடன் ஒப்பிட்டுப் புகழ்கிறார் பாரதியார்.

பண்டைத் தமிழர்கள் "கொற்றவை' எனும் பெண் தெய்வத்தை வழிபட்டனர். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றில் தாய்த்தெய்வமான கொற்றவை பற்றி கூறப்பட்டுள்ளன. கொற்றம் + அவ்வை என்பதே கொற் றவையாயிற்று. (கொற்றம் என்றால் வெற்றி; அவ்வை என்றால் தாய்). பண்டைய மன்னர்கள் போருக்குச் செல்லும்முன் கொற்றவையை வணங்கிவிட்டே செல்வார்களாம்.

தர்மபுரியிலுள்ள கல்யாண காமாட்சி சமேத மல்லிலிகார்ஜுனேஸ்வர் கோவிலிலில் கொற்றவையான துர்க்கை, சூலிலிலிலினி ராஜதுர்கை என்னும் பெயரில் உள்ளாள். வேறெங் கும் இல்லாத புதிய கோணத்தில் இங்கு பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். பொதுவாக எல்லா கோவில்களிலும் துர்க்கை சிலையானது எருமைத் தலைமீது நின்று அருள்பாலிக்கும் வண்ணம் அமைந்திருக்கும். ஆனால் இங்கு மட்டும் வதம் (போர்) செய்யும் கோலத்தில் அமைந்துள்ளது. சூலிலிலிலினிதேவி துர்க்கையின் அம்சமானவள். துன்பங்கள், தடைகள், எதிரிகளிடமிருந்து பாதுகாத்தல் போன்றவற்றுக்கு சூலிலிலிலினியின் அருள் வேண்டும்.

இன்றைக்கு தர்மபுரி என்று அழைக்கப்படும் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் மன்னன், அபூர்வமான நெல்லிலிலிலிக்கனியை ஒரு தாயான ஔவையாருக்கு அளித்ததால் தர்மநெறியும் வள்ளல் குணமும் இவ்வூர் மண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்தது.

"சகல உலகத்துக்கும் தாய்- தந்தையாக விளங்கும் பார்வதி- பரமேஸ்வரன்' என சைவபூஷணம் எனும் பண்டைய சைவ சிந்தாந்த நூல் சொல்லிலிலிலியிருப்பது போன்று, உலக உயிரினங்களுக்குத் தந்தையான சிவனின் கோவில் கருவறையை விட, தாயான கல்யாண காமாட்சியம்ம னின் கருவறை உயரத்தில் அமைந்துள்ளது. சக்தி தத்துவத்திற்குப் பின்னர் சதாசிவ தத்துவம் தோன்றுவதால், சதாசிவத்துக்கு மூத்தவள் சக்தி என்பதால், "கறைக் கண்டனுக்கு மூத்தவளே' என அம்பிகையைப் புகழ்வதுண்டு.


அம்மையப்ப ராகிய சிவபெரு மானை விட்டு என்றும் பிரியா மல் இணைந்திருக் கும் சக்தியை வழிபட்டால் இருவரின் அருளும் கிட்டும்.

எல்லா கோவில்களிலும் சிவன் சந்நிதியும், அம்பிகை சந்நிதியும் ஒரே உயரத்தில் ஏற்றத் தாழ்வின்றி அமைந்திருக்கும். இங்கு அம்பிகைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காக 18 படிகள் உயரத்தில் அம்மன் சந்நிதி ஏறத்தாழ 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த அம்பிகை கோவிலை 18 யானைகள் அஷ்டாதச கோணத்தில் தாங்கிப் பிடிக்க, கோவில் அடிப்பாகத்தில் இராமாயண நிகழ்வுகள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. சிவன் கோவிலிலிலிலின் மகாமண்டபத்தின் மேலே ஒன்றரை அடி சதுர வடிவில் அஷ்டதிக் பாலகர் களின் சிற்பமும், தொங்கும் தூணும் அன்றைய தமிழர்களின் சிற்பத் தொழில்நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாகும். இதுபோன்று தொங்கும் தூண் ஒன்று ஆந்திர மாநிலக் கோவிலிலிலிலில் இருக்கிறது.

பெண்மை என்பது அன்பு, அடக்கம், அறிவு போன்ற பண்புகளை உடையது என்பதால் தொல்காப்பியர்- "செறியும் நிறைவும் செம்மையுஞ் செய்யும்

அறிவும் அருமையும் பெண்பாலான'

எனப்பாடினார். பெண்மையே ஒரு காலகட்டத்தில் தாய்மை நிலையை அடைகிறது. பெண்களுக்குரிய முக்கியத் துவமும் சமத்துவமும் அளிக்கவேண்டும் என்பதால், அன்னை கல்யாண காமாட்சியின் 18 படிகளுக்கு அமாவாசையன்று பெண்களே படிபூஜை செய்துவருகிறார்கள். அன்று உற்சவமூர்த்தி அம்பிகையை அவர்களே சுமந்து கோவிலினுள்ளே திருவுலா வருதல், பூஜைகள் செய்தல் போன்றவற்றை நடத்திவருகிறார்கள். இப்படி பெண்மை யை யும் தாய்மையையும் போற்றும் வண்ணம் இக்கோவில் அமைந் துள்ளது. எனவேதான் இது தாய்வழி பாட்டிற்கும், தாய்மைக்கும் உரிய கோவில் என சொல்லப்படுகிறது.

அம்பிகையின் பெருமைகளைப் பற்றி அம்மன் கோவில் அர்ச்சகரான செல்வ முத்துக்குமாரசுவாமி சிவாச்சாரியார் தெரிவிக்கையில், ""அம்பிகையை "ஹ்ரீம், க்லீம், ச்ரீம்' போன்ற பீஜமந்திரங்களால் வழிபடுவதுண்டு. பராசக்தியை "பஞ்சதசீ, பாலை, ஷோடசீ' போன்ற மந்திரங்களாலும்; துர்க்கை, சண்டி தேவிகளை "நவாக்ஷர' மந்திரங்களாலும் வழிபடுவார்கள். பதினெட் டுப் புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் பராசக்தியின் பெருமைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பராசக்தியான சண்டி பற்றிய நூல்களில் "துர்கா சப்தசதி' (அ) "தேவி மஹாத்மியம்' மந்திர சக்தி வாய்ந்த நூலாகும். எங்கும் நீக்கமற நிறைந்து, எதற்கும் வலிமையான சக்தியைக் கொடுக்கும் பராசக்தியே பரப்ரம்ம ஸ்வரூபிணி. அந்த பராசக்தி இக்கோவிலிலிலில் கல்யாண காமாட்சி என்கிற மங்களப் பெயரில் வீற்றிருக்கிறாள். ராமபிராமன் வழிபட்ட கோவிலாகும்.

உலகில் தாய் வழிபாட்டின் பெருமையை விளக்கும் இந்தக் கோவிலில் பிரதோஷ காலத்தில் உற்சவரான சிவபெருமான் காமாட்சியம்மனை மும்முறை வலம் வருவார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 படிக்கும் பூஜை செய்வதுபோன்று, இங்கும் காமாட்சியம்மன் சந்நிதியின் 18 படிகளுக் கும் பூஜை செய்வர். காமாட்சியம்மன் சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாக இருந்து அருள் பாலிலிலிலிக்கிறாள். இக்கோவிலிலிலிலிலுள்ள பொருள் தரும் பைரவர் யந்திர வடிவில் உள்ளார்.

அன்றைக்கு இப்பகுதியை ஆண்ட மன்னர் களுக்கு காவல்தெய்வமாக இந்த பைரவர் இருந்துள்ளார்'' என தர்மம் வளர்த்த தர்மபுரி கோட்டைக் கோவிலிலிலின் பெருமைகளை வரிசைப்படுத்தினார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை "உலக அன்னையர் தின'மாகக் கொண்டாடுவது வழக்கம். நம் தமிழ் மூதாதையர்கள் அன்னைக்காகவும், தாய் வழிபாட்டிற்காகவும் ஒரு கோவிலை தர்மபுரியில் உருவாக்கி வழிபட்டு வந்துள்ளனர். தாய் வழிபாட்டிற்கு முன்னோடி யாக நம் தமிழகம் இருந்துள்ளது என்பது நமக்குப் பெருமைதரும் செய்தியாகும்.

om010519
இதையும் படியுங்கள்
Subscribe