கோட்டைக் கதவுகள் திறக்கப்படும் போது, இளவலின் குருநாதன் அமர்ந்திருக் கும் பட்டத்து யானை யின்முன் தீபதூப வழிபாடுகள் செய்து, வாசனைப்பூக்கள் நிறைந்த மலர்க்கூடைகள் வைத்திருக்கும் அலங் காரப் பண்டாரங்கள் இளவலின் பல்லக்கைச் சுற்றிலும் பாதை முன்பு தூவிக்கொண்டே செல்லத் தயார் நிலையில் இருப்பர். குரு செல்லும் பட்டத்து யானையின் பின்னே நூறடி தூரத்திலிருந்து பல்லக்கு புறப்படும்.

அப்போது, சென்ற இதழில் குறிப்பிட்டபடி மங்கள வாத்தியங்கள் முழங்கியபடி முன் செல்ல, மெல்ல நகர்ந்து வரும் அழகிய பூ வேலைப்பாடுகள் நிறைந்த மிகப்பெரிய பல்லக்கில் நடுநாயகமாக வீற்றிருக்கும் இளவரசன், பூக்களை விலக்கியபடி சூரியனாரை இருகரம் கூப்பி வணங்கியவுடன், பல்லக்கின்முன் நீண்ட வரிசையாகக் காத்திருக் கும் புலவர் பெருமக்கள் இளவரசனின் முன்னோர் களின் மெய்க்கீர்த்திகளை இனிய வாத்தியங்களின் இசையோடு பாடுவர்.

இவ்வாறு இளவலின் முன்னோர்களின் புகழ் மெய்க்கீர்த்திகளைப் பண்ணோடு பாடும் முறைமைக்கு "பிருது கூறல்' என்று பெயர்.

பிருது கூறல் முடிந்தவுடன் மருதநிலக் குடிப்படைகள், மன்னராகப்போகும் இளவல் அமர்ந்துள்ள ராஜபல்லக்கு வரக்கூடிய ராஜபாட்டை எனும் அகன்ற வீதியின் இருபுறமும் நின்று குலவையிட்டு வரவேற்பார்கள்.

Advertisment

Advertisment


பல்லக்கு செல்லும் வீதிகளிலெல்லாம், தென்னங்கீற்றுகள் மிக நேர்த்தியாகப் பின்னப் பட்டு, குளிர்ந்த நிழல் தருமாறு இறுக்கமாக வேயப்பட்டு, அதன்கீழ் புதிய நீண்ட வெண் பருத்தி நூலாடைகள் பொருத்தி, அதில் பல நிறப் பூத்தோரணங்கள் தைக்கப்பட்டு, பந்தல் கால்கள் தெரியாத வண்ணம் மலர்க்கொடி கள் சுற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

அவ்வீதியின் இருபுறமும் இருக்கும் வீட்டு வாயில்களின் முன்பு இளவலை வரவேற்கும் வகையில் திருவிளக்குகள் ஏற்றப்பட்டு, தம் வயலில் விளைவித்த சாலிநெல், இந்திர போகம், கமுகு, தேங்காய், வெற்றிலை, கற்பூரவெள்ளம், பாக்குப்பழம், மஞ்சள், உப்பு, மிளகு, இஞ்சி, கரும்பு, மா, பலா, வாழை, கொய்யாக் கனிகள், பட்டாடை, ஆவினம் போன்றவற்றை- நானிலத்து ஐந்திணைகளிலும் தலைமைப் பண்பு பூண்டிருக்கும் தம் மருதத் தலைவனுக்குப் பாதகாணிக்கையாக்கக் காத்திருப்பார்கள்.

இதுபோன்று இளவரசனின் அருளாட்சிக் குட்பட்ட கிராமம், பட்டி, ஊர், பதி, நாடு, வட்டகை, குந்தகை, பேரூர், பட்டினம் போன்ற குடிமைப் பகுதிகளிலிருந்து வந்திருக்கும் குடிமக்கள் சிறுசிறு குழுக்களாக வழிநெடுக அமர்ந்து, தங்களுடைய அன்னதாரிகளால் உருவாக்கித் தந்த "பள்ளயங்கள்' எனப் படும் உணவு வகைகளோடு சேர்ந்த பரிசுப்பொருட் களை, புத்தாடைகள் விரித்த சிற்றாசனங்களில் பரப்பி, அதில் விளக்கேற்றி இளவலை வரவேற்கும் "பள்ளேசல்' என்ற தங்கள் நாட்டுப்புற சிறு வாத்தியங்களோடு பண்களைப் பாடுவார்கள்.

அவர்களையடுத்து பாண்டிய ராஜ்ஜியத்தின் தலைநகரமாகத் திகழும் இப்பேரூர் பட்டின அரண்மனைப் பெருவழுதி வரும் இந்த ராஜவீதிகளில் மயிலாட்டம், குதிரைத் துள்ளல், வெறியாட்டம், சிறு, பெரு கோலாட்டம், வாள், சிலம்பாட்டம், தெவ்வராட்டம் போன்ற கலையாடும் புளத்தியர், விரலியர் கள் குழுக்குழுவாய்க் காத்திருப்பர்.

ஏர்க்களத்திலும் போர்க்களத்திலும் இணையற்ற ஈரநெஞ்சனாகத் திகழும் தங்கள் மருதநாயகனின் குரலுக்குப் பணிசெய்யக் காத்திருக்கும், ஆற்றங்கரை நாகரிகத்தின் பெருராஜ்ஜியம் செழித்து வளர ஆணிவேர்களாகத் திகழ்ந்த ஆற்றுக்காலாட்டியர், ஏரிக்காலாட்டியர், மூப்பர், ஏரிவெட்டும் பள்ளர், பலகன், மடையன், நீர்கட்டும் நீராணிக்கம், வயல்வள மள்ளர், தானியப் பண்டாரப் பணிக்கர் போன்றோர் தங்களுக்கு முறைப்படுத்தப்பட்ட சீருடையுடன் குழுக்களாக, மிகப்பெரிய பொன் னேர்தனை சுமந்துகொண்டு இளவல் செல்லும் பல்லக்கிற்குப் பின்னால் வாலை குருநாதன் கோவில்வரை சென்று, அப் பொன்னேரை தங்கள் நாயகனுக்குப் பரிசளிக்கக் காத்து நிற்பர்.

இளவரசன் வணங்கச் செல்லும் வாலை குருநாதன், அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் கருவறை, அதற்குமுன் மூன்று ssநிலைகளில் அகன்ற முன் மண்டபங்களைக் கொண்ட பெருங்கோவிலாக இருக்கும். இதன் முதல்நிலை மண்டபத்தின் முன்புறக் காவல் தெய்வமாக கருப்பண்ணசாமி இருப்பார். இவர் ஆதியில் இளவரசனின் முன்னோராகத் திகழ்ந்த வாலை குருநாதரின் மெய்க்காப்பாளராக இருந்த முல்லைநில மாவீரர் ஆவர்.

இதையடுத்து முதல்நிலை மண்டபத்தில் அழுக்காறு கொண்ட வேதியர்களின் செருக்கழித்த மருதநில வீரசைவ வீரபுத்திரனும், வாலை குருநாதரை முதன்முதலில் பூஜித்த மருதநில ஆதிசைவ பூசகரும் சுதை சிலை வடிவில் இருப்பார்கள். இதனை அடுத்துள்ள இரண்டாம் நிலை மண்டபத்தில், இம் மருதநில ராஜ்ஜியம் உருவாவதற்கு 21 துறைகளைச் சார்ந்த மகா வல்லுநர்களின் கற்சிலைகள் காணப்படும். இவற்றிற்குப் போடப்படும் பள்ளயங்களைத்தான் 21 பந்திகள் என அழைப்பர். இதுகுறித்து முந்தைய அத்தியாயத்திலும் விரிவாகக் கூறப்பட்டது. இதை அடுத்துள்ள மூன்றாவது நிலை மண்டபத்தில்தான் ஏரிகளையும், கண்மாய்களையும், மடைகளையும், கால்வாய்களையும் உருவாக்கி, மருதநில வளமைக்குக் காரணமானவரான காராள வெள்ளாளரின் குறியீடாக ஐயனார் சிலையும், அவருக்கு யானைவாகனச் சிலையும் அமைத்து, ஐயனார் சந்நிதியின் நிலையில் மூன்று மாம்பழங்களின் வடிவத்தைப் பொறித்திருப்பர்.

இம்மூன்று மாம்பழங்கள் என்பது-

ஏரி, குளம் உருவாக்கிய காராளர்;

ரஹற்ங்ழ் ம்ஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்- நீர் மேலாண்மைக்கு உதவிய மடையன்;

நஹம்ங் ஜ்ஹற்ங்ழ் ஸ்ரீன்ழ்ழ்ங்ய்ற்- நீண்டதூர நிலையான நீரோட்டத்தை வாய்க்கால் வழியே ஓடும்முறை அறிந்து கால்வாய் அமைத்துத்தந்த காலாடி.

(இவர்கள் குறித்து முந்தைய அத்தியாயங்களில் விளக்கப்பட்டது. யானை வாகனம் குறித்து அடுத்த அத்தியாயத்தில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.)



அதை அடுத்துதான் இன்றைய சைவமதத் தோற்றத் திற்கு ஆதாரமாகத் திகழ்ந்த வாலை குருநாதர், அங்காள பரமேஸ்வரி தெய்வங்கள் வீற்றிருக்கும் கருவறை.

"திருவுருவொன்று ஈருருவாய் நின்றது

ஒன்றே உடம்பங்கு இரண்டே யிடும் பங்கு'

என குருநாதன்- அங்காள ஈஸ்வரி என ஈருருவாயிருந்த வர்கள், பின் வலப்பக்கம் பாதி குரு, இடப்பக்கம் பாதி அங்காள ஈஸ்வரி என அர்த்தநாரியாக இவ்வுலகப் பேருண்மை ரகசியத்தைச் சமைத்த முன்னோர்கள்.

அதன் பின்,

"அந்தமும் முதலும் இல்லா

அகண்ட பூரணமாய் யார்க்கும்

பந்தமும் வீடும் நல்கும் பராபரச் சோதிதானே

வந்தனை புரிவோர்க்கு இம்மை மறுமை வீடளிப்பான் இந்தச்

சுந்தர லிங்கத்து என்றும் விளங்குவான் கருதி ஏத்த'

என ஆதியோகிகள் சொன்னதன் பொருள் என்னவென்றால்- ஆதியில் வாலை குருநாதன், அங்காள பரமேஸ்வரி என மருத நிலத்து மக்களால் வழிபடப்பட்ட தெய்வங்கள் பின் இருவரும் ஒரே சிலையில் அர்த்தநாரி என வலதுபாதி ஆண் உருவம், இடதுபாதி பெண் உருவமாக செதுக் கப்பட்டு, இவ்வுலகில் ஆணும் பெண்ணும் சம பாகமாக, பிரிக்க முடியாத சக்திகளாக வழிபடப்பட்டனர்.

அதன்பின் அதுவே லிங்க வடிவமாக உருவாக்கப்பட்டு, அதில் பாணம்- ஆணுக்கும், ஆவுடை- பெண்ணுக்குமாக உருவகமாக்கினர்.

"அருவாகி உருவாகி அருவுருவம்

கடந்து உண்மை அறிவு ஆனந்த

உருவான சிவலிங்கமாகி'

கருவறையில் மருதநில மக்களால் வழிபடப்பட்டது.

பின் அதுவே தமிழர் சமயமாய் உலகெங்கும் பரவலாயிற்று.

இதற்கான சிறந்த உதாரணம், பாண்டியர்களின் தொன்மைத் தலை நகரமாகத் திகழும் மதுரையில், இம்மையில் நன்மை தருவார் எனும் கோவில் கருவறை மூலஸ்தான அறையில்-

குருநாதனும் அங்காள பரமேஸ்வரியும்

அமர்ந்த நிலையில் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு, அந்த சிலைக்குமுன் பெரிய அளவில் சிவலிங்கமும் வடிக்கப்பட்டுள்ளது. ஆதியிலிருந்து இந்த பரிணாம முறையிலே தான் சைவ சமயம் வளர்ந்து வந்துள்ளது என்பதை குறிப்பதற்காகவே இவ்வாறு அமைத்துள்ளார்கள்.

வரும் அத்தியாயத்தில், ஒரு மன்னனாக முடிசூட்டிக்கொள்பவன் எதற்காக குருநாதன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப் படுகிறான்? அவனுக்கு அங்கு எந்தவிதத்தில் ரகசிய உபதேசம் நடக்க இருக்கிறது?

மன்னனுக்கு அது அவசியம்தானா என்பதற்கான ரகசியம் வெளிப்படும்.

தொடரும்