சித்தர் கால சிறந்த நாகரிகம்!

அடிகளார் மு.அருளானந்தம்

14

அ, உ என்ற எட்டெழுத்துச் சக்கரம் என்றால் என்ன? சற்று விரிவாகவே பார்ப்போம்! தமிழில் ‘"அ'’ என்றால் 8 என்ற எண்ணைக் குறிக்கும். "உ’' என்றால் 2 என்ற எண்ணைக் குறிக்கும். இதில் ‘"அ'’ என்று குறிப்பிடப்படும் சிதம்பரச் சக்கரம் என்னவெனில்-

Advertisment

m

என்பதாகும். இது ஆக்கும் தொழிலைச் செய்யும் அட்சரம். இந்த அட்சரத்திற்குரிய மந்திரம் "ஓம் ஐயும் க்லியும்' ஆகும்.

இப்பிரபஞ்சத்தில் தொடர்ச்சியாக எங்காவது ஓரிடத்தில் பெருவெடிப்பு என்ற நிகழ்வு நடந்துகொண்டே இருக்கும். அவ்வாறு நடக்கும்போது, புதிய புதிய சூரியன்களும், அவற்றை மையமாக வைத்து சுற்றிச் சுழன்றுவருகின்ற புதிய கோள்களும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறு நிகழும்போதெல்லாம், பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள "ஈதர்' ஊடகத்தில் "ஓம் ஐயும் க்லியும்' என்ற வித்தொலிகளின் அதிர்வுகள் தொடர்ந்து பரவுகின்றன. இந்த வித்தொலிகளின் அதிர்வுகளை நந்தீசரின் இடது காது உள்வாங்கிக்கொண்டே இருக்கிறது.

Advertisment

எட்டிரண்டு மந்திரங்கள்!

மேற்சொன்ன அட்சரத்திலுள்ள ந, ம, சி, வ, ய என்ற ஐந்து எழுத்துகளுக்கும் சித்தர்கள் ஐந்துவிதமான எண்களைப் பொருத்தி அவ்வட்சரத்தில் எழுதியுள்ளனர். பண்டைய காலங்களில் தற்போதுள்ள எண்களின் வடிவம் போலல்லாமல் தமிழ் எழுத்துகளின் வடிவில் 1 முதல் 9 வரையிலான எண்களுக்கு வடிவம் தந்துள்ளனர்.

அதன்படி, மேற்சொன்ன அட்சரத்தில் பொருத்தும்போது, அதன் நடுப்பகுதியிலுள்ள ‘"ம'’ என்ற எழுத்து இருக்கின்ற இடத்தில் ‘"அ' என்ற எண் வரும். அதாவது ‘"8'’ வரும். இதேபோல் பிரபஞ்சத்தில் தொடர்ச்சியாக பல இடங்களில் அனைத்து விண்பொருட்களையும் தனக் குள்ளே விழுங்கக்கூடிய கருந்துளைகள் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்வுகளின்போது அவ் விடங்களிலிருந்து "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்' என்ற வித்தொலிகள் "ஈதர்' ஊடகத்தில் பரவிக்கொண்டே இருக் கின்றன. இதனைச் சித்தர்கள்-

nn

என்ற அட்சரத்திற்குரிய வித்தொலி மந்திரமாக "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்' என ஜெபிக்கச் சொல்கிறார்கள். இந்த அட் சரத்தில் ந, ம, சி, வ, ய என்ற ஐந்து எழுத்துகள் இருக்கும் இடங்களில் சித்தர்கள் சொன்ன தமிழ் எண்களை எழுதினால், இவ்வட்சரத்திலுள்ள நடுமத்திய எழுத்தான "ய'’ என்ற எழுத்துள்ள இடத்தில் ‘"உ' என்ற எண் இருக்கும். இதற்குரிய மந்திரமாக "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்' என்ற வித்தொலிகளை ஜெபிக்கச் சொல்கின்றனர். இது, பிரபஞ்சத்திலிருந்து "ஈதர்' ஊடகத்தில் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்குமாம்.

nn

இவ்வொலியலை அதிர்வுகளை நந்தீஸ்வர ரின் வலது காது உள் வாங்கிக்கொண்டே இருக்கி றது. இந்த இரண்டு நிகழ்வு களில் பெருவெடிப்பின் பொழுது சிவத்திற்குள் சக்தி பரிணமித்து பல பரிணாம மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். கருந்துளை உள்வாங்குதலின்போது சிவத்திற்குள் சக்தி ஸ்தம்பனம் ஆகிக்கொண்டே இருக்கும். இந்த இருவகை வித்தொலி மந்திரங்களைத்தான் சித்தர் கள் எட்டிரண்டு மந்திரங்கள் என்கிறார்கள். இந்த இரண்டு விண்பெரு நிகழ்வுகளை நந்தீஸ்வரரின் இடது மற்றும் வலது கண்களாகக் காட்டுகின்றனர்.

கண்களால் தரிசிக்கலாம்!

ஒரு வட்டத்தின் மையத்தை நடுவாக வைத்து எண்ணற்ற கோணங்களை உருவாக்கினால் கிடைப்பது நாதம். இந்தக் குறியீடு பேரொளி பெருவெடிப்பைக் குறிக்கும். ஒரு வட்டத்தின் மையத் தின்வழியே கோடிட்டு 360 கோணத்தை எண்ணின் அடங்கலாகப் பிரித்தால் கிடைப்பது விந்து.

இக்குறியீடு பேரண்டத் தையே உள்வாங்கும் கருந் துளையைக் குறிக்கிறது.

சித்தர்கள் நந்தி சிலையை ஒரு கோவிலில் பிரதிஷ்டை செய்யும்போது, முக்கோணத்தை மையமா கக் கொண்ட திரிபுர அட்ச ரத்தை அச்சிலைக்குக் கீழே, அதன் நாபிக்கமலத்திற்கு நேராக வைத்துப் பிரதிஷ்டை செய்வார்கள். (அதுசம்பந்தமான ரகசியங் களை வரும் இதழில் பார்ப்போம்.) அந்தத் திரிபுர அட்சரத்தை புலித்தோல்மீது அல்லது தர்ப்பைப்பாய்மீது 4 ஷ் 4 அங்குலமுள்ள செப்புத்தகட்டில் கீறி வைத்து, அதன்மீது வடக்கு நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு, நமக்கெதிரே வைத்து அதன்மீது கோரோசனைத் தடவி, மேற்சொன்ன நாத விந்து வடிவத்தை முறையே இட, வலக்கண்களுக்குள் தியானித்தபடி, மேற்சொன்ன இரண்டு "அ, உ'-க்குரிய வித்தொலி மந்திரங்களை மாறிமாறி ஜெபித்துக்கொண்டே ஒரு லட்சம் முறை உருவேற்றினால், நமக்கு அபரிமிதமான இயற்கையின் பேருண்மை புலனாகத் தொடங்கும். இந்த ஒரு லட்சம் முறை சொல்வதை 48 நாட்களுக்குள் செய்து முடித்தால் அளப்பரிய பிரபஞ்ச நிகழ்வு களை நம் கண்களால் தரிசிக்கலாம் என்று சித்தர்கள் விவரிக்கின்ற னர். இவ்வுபதேசம் வாலை குருநாதன் சந்நிதியில் குருநாதரால் மருதநாயகனுக்கு உணர்த்தப்படும். இதனைத் தொடர்ந்து கீழ்க்கண்ட மந்திர தந்திர உபதேசங்களும் செய்யப்படும். அவை யாவன:

1. உயிர்ப்பு மந்திரம் அல்லது அஸபா மந்திரம்

nn

ஒரு தலைவன் மரணத்தின் விளிம்பிலிருந்து உயிர்த்தெழ குருவினால் உபதேசிக் கப்படும் மிக ரகசியமான முறை. இம் முறையை சரயோக முறை என்பார்கள். சரம் என்றால் மூச்சு. நாம் மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும்போதும், வெளிவிடும்போதும் அதை நாசித்துவாரத்தில் மனதை வைத்து கவனித்துக்கொண்டு, மூச்சுக்காற்று உள்ளே செல்கிறதென்றால் அப்போது மனதுக்குள் "ஸோ' என்ற வித்தொலியைச் சொல்லவேண்டும். மூச்சுக்காற்று நாசித்துவாரத்திலிருந்து வெளிச்செல்கிறதென்றால் அப்போது ‘"ஹம்'’ என்ற வித் தொலியை மனதிற்குள் சொல்லவேண்டும். இவ்வாறு தொடந்து செய்துவந்தால் சிவத் தைத் தொட்டுவிட்டதாக அர்த்தமாகிறது. மூச்சுக்காற்றை "சிவ ஓட்டம்' எனச் சொல்லும் சித்தர்கள், மனித உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தைச் "சக்தி ஓட்டம்' என்கிறார்கள். இதனை அறிவதற்கு நாம் இரு கால்களையும் சமநிலையில் ஊன்றி நின்றுகொண்டு, இரண்டு கைகளையும் இடுப்பிலிருந்து 36 டிகிரி கோண இடைவெளி இருக்குமாறு விரித்து மேலே சற்று தூக்கி நின்றால், இருபது நிமிட நேரத்தில் தரையை நோக்கியிருக்கும் கைகளின் விரல் நுனிப் பகுதிகளில் இரத்தம் விட்டுவிட்டு இதயத்தின் துடிப்பிற்கு ஏற்றவாறு பாய்வதை உணரலாம். அவ்வாறு ரத்தத் துடிப்பை உணரும்போது ‘"ஹம்' என்னும் இரு துடிப்புகளுக்கிடையே உள்ள நேரத்தில் "ஸம்' எனவும் மனதில் நினைக்கவேண்டும். இவ்வாறிருந்தால் சக்தி நிலையைத் தொட்டுவிட்டதாக அர்த்தம்.

இவ்வாறு காலையில் எழுந்தவுடன் ‘"ஹம்- ஸம்', இரவில் உறங்கும்முன் "ஸோம்-ஹம்' பயிற்சி முறையைச் செய்து வருவது, அஸபா பயிற்சியின் முதல்நிலை என்றும், இதனைத் தொடர்ந்து 12 நிலைகள் உள்ளனவென்றும் சித்தர் குருகுல குருமார்கள் கூறியுள்ளனர்.

இதன்பலன், மருதநாயகனுக்கு வந்து விட்டதா என்று குருவானவர் வாலை குருநாதன் கோவிலில் வைத்துச் சோதித் தறிவார். சிறுவயதுமுதல் தன்னால் மருத நாயகனுக்குக் கற்றுத்தந்த "அஸபா' பயிற்சி யின் முழுப்பலனையும் மருதநாயகன் அடைந்துவிட்டால் மட்டுமே, அவன் நீண்ட ஆயுளோடு மன்னராக ஆட்சிபுரியத் தகுதியுடையவன் ஆகிறான். எனவே, இச்சோதனை மிக ரகசியமாக நடத்தப்படும். முழுத்தகுதியுடன் அவன் இருக்கிறான் என்பதை குருநாதர் உணர்ந்தபின், அடுத்த சோதனைக்கு அவனை உட்படுத்த குருநாதர் ஆயத்தமாவார்.

2. கட்டாலிங்கத்தில் அல்லது ஐந்தாம் யோனியில் எதிரியைக் கட்டுதல்

கட்டாலிங்கம் அல்லது ஐந்தாம் யோனி என்ற சொல், மனிதனின் வலது கண்ணைக் குறிக்கும் சித்தர்களின் ரகசியக் குறியீடாகும். இது ஏனென்று அவர்கள் விளக்கியுள்ளனர்.

ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை நிர்ணயிப்பது அவனது பிராணன் என்னும் இதயத்துடிப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கும் ஆற்றல் பெட்டக மாகும். இது மண்ணீரலின் ஆற்றலிலும், ஒருவனது வலது கண்ணிலிருந்து மூளைக் குச் செல்லும் உணர்வு நரம்பில் இரண்டா கப் பிரியும் இடத்திலும் பொதிந்து வைக்கப் பட்டுள்ளது. அது மூச்சுக்காற்றின்வழியே சிறிதுசிறிதாகக் கரைந்து, வெளியே காற்றின் வடிவத்தில் வெளியேறிக்கொண்டிருக்கும். அது, முழுமையாகக் குறைந்துவிட்டால், ஒருவனது வலது கண் பார்வை மூடிவிடும்.

அவ்வாறு மூடிவிட்டால் ஒருவனது பிராணன் முழுவதும் போய்விட்டது என்றும், அதன்பிறகு அவனை எந்தப் பயிற்சிக்கும் ஆளாக்கி உயிர்ப்பிக்க முடியாது என்றும் சித்தர்கள் விவரித்துள்ளனர்.

இதே வலது கண்ணுக்குள் மனதை வைத்துக்கொண்டு ஒருவன் எந்தச் செயலைச் செய்தாலும், அவனுக்கு அச்செயலால் எந்த ஒரு பாவ- புண்ணியமும் ஏற்படாது. எனவே, அவனது ஆன்மாவிற்கு எந்தவொரு கர்மாவும் ஏற்படாது. ஒருவன் கர்மா இல்லாது இப்பூவுலகில் வாழ்ந்துவந்தால் அவனது மறுபிறவி இப்பூமியில் இல்லாமல், இதைவிட பரிணாம வளர்ச்சியுற்ற நான்கு பரிணாம உலகில் பிறப்பான். இவ்வாறு மூன்று பரிணாமமுள்ள இப்புவி வாழ்விலிருந்து மீண்டு, நான்கு பரிணாம உலகிற்குச் செல்வதைத்தான் சித்தர்கள் "வீடுபேறடைதல்' என்று குறிப்பிட்டனர். இவ்வாறு வீடுபேறடையச் செய்யும் வழி வலது கண்ணாக இருப்பதால், இதற்கு ஐந்தாம் யோனி என்று சித்தர்கள் பெயரிட்டனர்.

அப்படியென்றால், முதல் யோனி என்பது சூழ்நிலையையும் வெப்பத்தையும் பயன்படுத்தி உருவாகக்கூடிய பாக்டீரியா முதல் புழுபூச்சி வரையுள்ள உருவாக்கம். இரண்டாம் யோனி, ஆண்- பெண் பேதமற்று உருவாகக்கூடிய தாவர விதை உருவாக்கம். மூன்றாம் யோனி, ஆண்- பெண் பேதமிருந்து கரு வயிற்றின் வெளியே வளரும் முட்டையின் உருவாக்கம். நான்காம் யோனி என்பது ஆண்- பெண் பேதமிருந்து கரு வயிற்றினுள்ளே வளரும் உருவாக்கம். இவ்வாறு இவ்வுலகத்திலிருந்தே விடுபட்டுப் பேருலகம் செல்லும் உருவாக்க வழியாகத் திகழும் வலது கண்ணிற்கு ஐந்தாம் யோனி என காரணப் பெயரிட்டு அழைத்தனர்.

இந்த ஐந்தாம் யோனியானது, வலது கண்ணிற்குள் மனிதன் தன் மனதை வைத்திருக்கும் நேரம் முழுவதும் அவனது பிராணன் கட்டப்பட்டு மூச்சுக்காற்றின் வழியே வெளியேறாதவாறு தடுக்கப்படும். ஆதலால், ஒரு மனிதனின் ஆயுள் பாகம் மிக நீண்ட நாட்களுக்குத் தள்ளிப்போகும். இதே வலது கண்ணைப் பயன்படுத்தி ஒரு எதிராளியையும் அவனது செயல்பாடுகள் நடக்காத அளவிற்குக் கட்டலாம். அதே சமயம், வலது கண்ணைப் பயன்படுத்தி நம் ஆன்மாவை நிலைநிறுத்தப் பழகிவிட்டால் எந்த ஒருவராலும் நம்மைக் கட்ட இயலாது. ஏன்- இந்த உலகத்திலுள்ள மாயசக்தியாலும் நம்மைக் கட்ட இயலாது. nnமாயசக்தியைத்தான் சிவலிங்கத்திலுள்ள யோனியாகிய ஆவுடையெனக் குறிப் பிடுகின்றனர். அந்த சக்தியாலும் கட்டுப் பாட்டுக்குள் வைக்கமுடியாத ஆன்மாவாக மாறுவதற்குரிய இடம் வலது கண் என்பதால், அதை மாயசக்தியால் "கட்டாலிங்கம்'’ என்றழைத்தனர்.

மருதநாயகன் தன் எதிரியைத் தன் வலது கண்ணான ஐந்தாம் யோனியைக் கொண்டு ‘பேதனம்’ செய்யும் முறையை குருநாதர் உணர்த்துவார். பேதனம் என்றால் ஒருவன் எதனை நோக்கி பேதனம் செய்கிறானோ, அந்தப் பொருளின் இயற்பியல் இயல்பு நிலையை மாற்றிவிடுதல் என்று பெயர். எதிரி ஒரு மாவீரனாக இருந்தால் அவனைக் கோழையாக மாற்றிவிடுவது. அதாவது, அவனது சித்தம் அல்லது மனம் பேதலுறச் செய்வது. அதற்குத் தமிழ் எழுத்துகளே மந்திர உருவாக உள்ளன.

3. துருவ எழுத்து, அத்துருவ எழுத்து, வன்னி எழுத்தைப் பயன்படுத்தி பேதலிக்கச் செய்வது (மிக ரகசியமாக இதுவரை சித்த குருகுலத்தோரால் பாதுகாக்கப்பட்ட கலை)

nnதமிழ்ச் சான்றோர்கள், தமிழ் உயிர்மெய் எழுத்துகளைக் கொண்டு ஒரு ஆன்மாவையே பேதலிக்கச் செய்யும் அளவிற்குத் தமிழ் மந்திரமாக தம் மொழி எழுத்துகளை உருவாக்கியுள்ளனர். இவ்வாறு உலகத்தில் எந்தவொரு மொழியிலும் இல்லை. எனவே, தமிழ் மிக உயர்ந்த சக்திபடைத்த தனிச்சிறப்பு மிக்க ஒலியலைகளை உருவாக்கக்கூடிய மொழி என்பதை அனைவரும் உணர வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், சித்தர்கள் ரகசியமாக வைத்திருந்த கட்ட மைப்பை உங்களுக்காகவும், வருங்கால சமுதாயத்தினருக்காகவும் தைரியமாக முன்வந்து விளக்கவுள்ளேன்.

தமிழில் துருவ எழுத்துகள் என்பவற்றை சிவத்திற்குரிய ஆற்றலாகவும், அத்துருவ எழுத்துகள் சக்திக்குரிய ஆற்றல் பெற்றவை என்றும், வன்னி எழுத்துகள் இவையிரண்டு தன்மைகளையும் தன்னிடத்தே பெற்றுள்ள அலி எழுத்து அல்லது சுழுமுனைப் பேரொளி எழுத்துகளென்றும் அழைக்கப்பட்டன. சிவ- சக்தி- வன்னி எழுத்துகளுக்குச் சித்தர்கள், அதற்குரிய விளக்கத்தையும், வித்தொலி அதிர்வுகளையும் தாம் இயற்றியுள்ள நூல்களில் சங்கேத ரகசிய வார்த்தைகளில் தந்துள்ளனர்.

இலக்கம் என்றால் எண்கள். எழுத்து, இலக்கம், வித்தொலி இம்மூன்றையும் சேர்த்தால், இவ்வுலகின் இயக்கப் பேராற்றலிலேயே விளைவுகளை ஏற்படுத்தும் 323 வகை சித்து விளையாட்டுகளை ஒரு மனிதன் உருவாக்கலாம். அவற்றில் எதிரியை பேதனமாக்கும் வித்தை மட்டுமே மருதநாயகனுக்கு அவனது குருவால் உபதேசிக்கப்பட்டது

அந்த மர்மம் வரும் இதழில்..

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்