சிவபெருமான்- பார்வதிதேவி திருக்கல்யாணத்தை தரிசிக்க தேவர்களும், ரிஷிகளும் முனிவர்களும் கயிலையில் கூடியபோது, உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதனை சமன் செய்வதற்காக சிவபெருமான் அகத்தியரை அழைத்து, தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்து, தன் திருமணக்கோலத்தை அங்கு காட்டியருள்வதாகக் கூறினார்.
அதன்படி தென்னகம் புறப்படத் தயாரான அகத்தியரிடம், பார்வதிதேவி ஒரு செந்தாமரை மலர் மாலையைக் கொடுத்தாள். அந்த மாலையை கமண்டலத்தில் வைத்துக்கொண்டு பொதிகைமலைக்குப் புறப்பட்டார் அகத்தியர்.
(இதுகுறித்து இன்னொரு தகவலும் உள்ளது. சிவ- பார்வதி திருமணத்திற்குமுன், தென்னகம் புறப்பட ஆயத்தமான அகத்தியரிடம் பார்வதிதேவி தான் அணிந்திருந்த முத்துமாலையைக் கொடுத்தாள். தாமிர நிறம் கொண்ட அந்த முத்துமாலையை கமண்டலத்தில் வைத்துக்கொண்டு பொதிகைமலைக்கு வந்தார் அகத்தியர் என்றும் கூறுகிறது புராணம்.)
அகத்தியர் பொதிகைமலை சேர்ந்ததும் பார்வதி கொடுத்த அந்த செந்தாமரை மலர்மாலையை (முத்துமாலை) ஓரிடத்தில் வைத்தார். அந்த மாலை ஒரு பெண்ணாக மாறி அகத்தியரை வணங்கியது. அகத்தியர் அவளை வாழ்த்தினார். அடுத்த வினாடி, அவள் ஆறாக மாறிப் பெருக்கெடுத்தாள்.
அவளே தாமிரபரணி நதி என்று புராணங்கள் கூறுகின்றன.
மேலும் இன்னொரு தகவல்-தாமிரபரணி நதி குறித்து எல்லா நூல்களும் நிறம் காரணமாக இப்பெயர் பெற்றதாகக் குறிப்பிடுகின்றன. இதில் திருப்புடை மருதூர் புராணம் மட்டும் வேறொரு காரணத்தைச் சொல்கிறது. அதாவது சிவபெருமானே தாமிரபரணி குறித்து விளக்குவதாக ஒரு பாடல் உள்ளது.
"இம்பருள் அதிகம் பொருநையே எமது வேணியில் இழிந்தவை அதனால்
தம்பிரான் வேணித்தீர்த்தமே தாம்பிர
வேணியாய்ச் சாற்றுவர்'
என்பது பாடல் பகுதி.
அதாவ

அதாவது, மேகமான நம் திருமுடிநீரைக் காட்டிலும், பகீரதனுக்குத் தந்த கங்கையைக் காட்டிலும் அகத்தியரின் கமண்டலத்துக்கு அளித்து அதிலிருந்து அதிகமாக அளிக்கப் பட்ட நீர் பொருநை நதி நீரேயாகும். எனவே, இது எல்லாத் தீர்த்தங்களிலும் சிறந்தது. ஆகையால்தான் அதனைத் தம்பிரான் (சிவன்) வேணி(தலைத்) தீர்த்தம் என்பர். அந்தப் பெயரே "தாமிரவேணி' என்று போற்றப்படுகிறது. தென்னாட்டில் பல தலங்களுக்குச் செல்லும் இந்த நதி செம்பு என்னும் உலோகத்தை ஒத்திருப்பதாலும் தாமிரபரணி என்று சொல்கிறார்கள்.
"தம்பிரான் வேணித்தீர்த்தம்' என்பதே தாமிரபரவேணி ஆயிற்று. இதுவே தாமிரபரணி என்று மருவியது என்பது ஆய்வாளர்களின் கருத்து.
தாமிரபரணி நதி சங்க இலக்கியங்களில் "தன்பொருநை' என்று போற்றப்பட்டிருக்கிறது. இந்த நதியில் தாமிரச்சத்து கலந்திருப்பதால் இந்தப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவதுண்டு.
புராண இதிகாசங்களிலும், இலக்கியங் களிலும், வரலாற்றி லும் பெரிதும் போற்றப்படும் தாமிரபரணி நதியானது மாமுனிவர் அகத்தியர் திருவுளப்படி வெளிப்பட்டது. இந்தப் புனித நதி பொதிகைமலையில் அவதரித்த திருநாள் வைகாசி மாத விசாக நட்சத்திர நன்னாள் என்கிறது புராணம். திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் ஓடும் இந்த நதி என்றும் வற்றுவதில்லை. இதற்கு அகத்தியர் இந்நதியை உண்டாக்கியது ஒரு காரணம். நதி என்றும் செழிப்புடன் இருப்பதற்கு திருநெல்வேலியில் அருள்புரியும் சுவாமி நெல்லையப்பரே மூலகாரணம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
இறைவன் நெல்லையப்பர் எழுந்தருளி யிருக்கும் கோவிலின் அமைப்பு சற்று வித்தியாசமானது. பொதுவாக கோவில்களில் சுவாமியின் அபிஷேக தீர்த்தம் வடபகுதியில் விழும்படியாக "கோமுகி' அமைத்திருப்பார்கள். ஆனால் இங்கு வருணனின் மேற்கு திசையில் அமைந்துள்ளது. சுவாமிக்கு அபிஷேகிக்கும் புனித நீர் தன் திசையில் விழுவதால் மகிழும் வருண பகவான், எப்போதும் இப்பகுதியில் மழைபொழிந்து தண்ணீர்ப் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.
காசியில் கங்கை நதி புனித நதியாய்ப் போற்றப்படுவதற்குக் காரணம், கங்கை உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பாய்ந்து செல்கிறாள். ஆனால், தாமிரபரணியோ கிழக்கு நோக்கிப் பயணித்து, பிறகு உத்தரவாகினியாக (வடக்கு நோக்கி) பாய்ந்து செல்கிறாள். தாமிரபரணி செல்லும் வழியெங்கும் கரையோரங்களில் ஏராளமான நீராடும் புனிதத்துறைகளும் சைவ- வைணவக் கோவில்களும் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் தனி வரலாறு உண்டு. அனைத்தும் புராணத் தொடர்புடையவை. நவகயிலாயம் என்னும் ஒன்பது சிவாலயங்களும், நவதிருப்பதி என்னும் ஒன்பது வைணவத் திருத்தலங்களும் உள்ளன.
149 தீர்த்தக் கட்டங்கள் கொண்ட தாமிரபரணி நதிக்கு சிறப்பு சேர்ப்பிக்கும் புஷ்கரவிழா இந்த ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதிமுதல் 22-ஆம் தேதிவரை நடைபெறஉள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவது புஷ்கரம். இப்போது கொண்டாடப்படவுள்ள புஷ்கரம் 144 ஆண்டுகளுக்குப் பிறகு வருவதால், தாமிரபரணி மகாபுஷ்கரமாகப் போற்றப் படுகிறது.
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நதி உள்ளது. இதில் எந்த ராசியில் குரு சஞ்சரிக்கிறாரோ அந்த நதிக்கு புஷ்கரம் நடைபெறுவது வழக்கம்.
புனிதநதிகளான கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்ரா, பிரம்மபுத்திரா, பிரநீதா நதி ஆகியவற்றில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை "புஷ்கர மேளா' என்னும் விழா நடைபெறுகிறது.
குரு மேஷ ராசியில் இருக்கும்போது சித்திரை மாதத்தில் கங்கையிலும், குரு ரிஷப ராசியில் இருக்கும்போது வைகாசி மாதத்தில் நர்மதையிலும், குரு மிதுன ராசியில் இருக்கும்போது ஆனி மாதத்தில் சரஸ்வதியிலும், குரு கடக ராசியில் இருக்கும்போது ஆடி மாதத்தில் யமுனையிலும், குரு சிம்ம ராசியில் இருக்கும்போது ஆவணி மாதத்தில் கோதாவரியிலும், குரு கன்னி ராசியில் இருக்கும்போது புரட்டாசியில் கிருஷ்ணாவிலும், குரு துலா ராசியில் இருக்கும்போது ஐப்பசியில் காவேரியிலும், குரு விருச்சிக ராசியில் இருக்கும்போது கார்த்திகையில் தாமிரபரணியிலும், குரு தனுசு ராசியில் இருக்கும்போது மார்கழியில் சிந்துவிலும், குரு மகர ராசியில் இருக்கும்போது தை மாதத்தில் துங்கபத்ராவிலும், குரு கும்ப ராசியில் இருக்கும்போது மாசி மாதத்தில் பிரம்மபுத்திராவிலும், குரு மீன ராசியில் இருக்கும்போது பங்குனி மாதம் பிரநீதா நதியிலும் புஷ்கரமேளா நடைபெறுவது வழக்கம்.
இந்த காலகட்டத் தில் பிரம்மா, மகாவிஷ்ணு, சிவபெருமான் ஆகிய மூம்மூர்த்திகளும், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கே தோன்றி நீராடவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதாக ஐதீகம்.
அந்தவகையில் குரு விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் கார்த்திகையில் தாமிரபரணி புஷ்கர விழா நடைபெறுகிறது.
இந்த விழாக் காலத்தில் தாமிரபரணி நதியில் மூழ்கியெழுந்தால் தேவர்கள், பித்ருக்கள், தேவதைகள் ஆகியோரின் முழுமையான ஆசி கிட்டும். அனைத்து செல்வ வளங்கள் கிட்டுவதுடன், நவகிரக தோஷங்கள் இருந்தாலும் விலகும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
வற்றாத தாமிரபரணி நதிக்கு தட்சிண கங்கை என்ற பெயரும் உண்டு. இந்த நதியில் ஒவ்வொரு அமாவாசை நாளிலும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதி தேவதைகள் நீராடி, தங்களிடம் மக்கள் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கின்றன.
அந்தப் பாவக்கறைகளெல்லாம் தாமிரச்சத்து கொண்ட நீரான தாமிரபரணியில் தூய்மைப்படுத்தப்படுகிறது. இதனால் தாமிரபரணிக்கு எந்த தோஷமும் இல்லை என்று சாஸ்திரம் கூறுகிறது.
புஷ்கர மேளா நாட்களிலும் மற்ற நாட்களிலும் தாமிரபரணிக்குரிய சுலோகத்தைச்சொல்லி நீராடுவது மேலும் புனிதம் தரும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.
சுலோகம்
புண்யாயை புண்ய பூதாயை
புத்ர்யை மலய பூப்ருத:
ஸர்வதீர்த்த ஸ்வரூபாயை
தாம்ரபர்ணயை நமோ நம:
இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் வியதீபாத தினத்தில் நீராடி தங்களுடைய பாவங்களை கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிதேவதைகள் போக்கிக்கொள்கின்றன என்று தாமிரபரணி மகாத்மியம் கூறுகிறது.
இந்தப் புனிதமான நதியில் ஹயக்ரீவர், அத்திரி மகரிஷி, மாண்டவ்யர், கௌதமர், வசிஷ்டர், ஆங்கீரஸர், சோமர், துர்வாசர், கபிலர் மற்றும் மாமுனிவர் அகத்தியர் போன்றவர்கள் நீராடிப் பலன் பெற்றதாக ஞானநூல்கள் கூறுகின்றன.
தாமிரபரணி புஷ்கரம் தொடங்கி முதல் பன்னிரண்டு நாட்களும், அதற்குப் பிறகு ஓராண்டு முடிவடைந்து, அதன்பின்னர் வரும் பன்னிரண்டு நாட்களும் நீராடுவது மிகச்சிறப்பு. இடையே உள்ள ஓராண்டில் நீராடுவதும் சிறப்பு தரும். நீராடலுக்குப் பின், தானதர்மங்கள் செய்வது கூடுதல் பலன்களை அளிக்கும்.
தானங்கள் பதினெட்டு என்கின்றன வேதநூல்கள். அவை: கோதானம், ரிஷப தானம், குதிரை தானம், அன்னதானம், உப்பு தானம், தென்னைமர தானம், பூ தானம், சுவர்ண தானம், கன்னிகா தானம், யக்ஞோபவீத தானம், தேன் தானம், எள் தானம், சந்தான தானம், மாதுளம் தானம், நவரத்தின தானம், நல்முத்து தானம், தானிய தானம், பாயச தானம். இவற்றில் முடிந்த அளவு வசதிக்கு ஏற்ப தானம் செய்து வளமுடனும் நலமுடனும் வாழலாம்.