கவலை, பயம், பதட்டம் என்று பல சிந்தனைகள் இன்று நம்மில் பலரையும் பிடித்து ஆட்டுவிக்கிறது. இதனை நவீன மருத்துவம், "ஹய்ஷ்ண்ங்ற்ஹ்' (பதட்டம்) என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி−விடுகிறது. அதன்காரணமாக தூக்கமின்மை, உடல் சோர்வு, இதயப் படபடப்பு எனும் பல பிரச்சினைகள் வருமென்று கோடிட்டுக் காட்டுகின்றனர்.
பெரும்பாலும் பதட்டமில்லாத மனிதனை இவ்வுலகத்தில் காணமுடியாது. அதிகபட்சம் 99 சதவிதத்தினர் இந்த சிக்க−ல் உள்ளனர்.
இந்த உலகத்திலுள்ள 84 லட்சம் உயிரினங் களில், மனித இனத்தைத் தவிர மற்ற 83 லட்சத்து 99 ஆயிரத்து 999 உயிரினங்கள் எந்தவிதப் பதட்டமுமின்றி, சுதந்திர மாக ஆடிப்பாடி, கூடிக்குலவி மகிழ்ந்து ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அந்த ஆறறிவுக்கும் குறைவான உயிரினங்கள் எப்போதும் தன்னைப் பற்றியோ தனக்கான உணவைப் பற்றியோ கவலைப்படுவதுமில்லை- வருந்துவதுமில்லை. மேலும், ஒரு பறவை இன்னொரு பறவை தன்னை ஏளனமாகப் பார்க்கிறதென்று வருந்துவ தில்லை. ஒரு கோழி பறக்கின்ற ஒரு பருந்தைப் பார்த்தோ வேறு ஒரு பறவையைப்போல தன்னால் பறக்க முடியவில்லை என்றோ ஒரு நாளும் யோசிப்ப தில்லை. இதைப் போன்றுதான் ஒவ்வொரு செடியும், கொடியும், மரமும் எதையாவது யோசித்துக் கவலைப்படுவதில்லை. பறவைகளும் விலங்குகளும் அதனதன் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன.
பறப்பன, நீந்துவன, ஊர்வன என பல இனங்கள் இருந்தாலும் இவற்றுக்கிடையே மதம் எனும் பாகுபாடில்லை. அனைத்தும் உயிரினம் எனும் ஒரே மதத்தைச் சார்ந்தவையாக இருக்கின்றன.
ஆனால் ஆறறிவு படைத்த மனித இனத் தில் மட்டுமே பல மதங்கள் என்ற பாகுபாடு உள்ளது. உயர்ந்தவன்- தாழ்ந்தவன், கருப்பன்- சிவப்பன், மொழி, நாடு, கலாச்சாரம், பண்பாடு, வேறு மாநிலம் என்று பலதரப் பட்ட பாகுபாடுகள் நிறைந்துள்ளன. இத்தனைக்கும் மனித மூளையின் எடை 1,360 கிராம் என்பது மட்டும் ஒரேமாதிரி உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறிது வித்தியாசம். ஆனால் அந்த மூளை எண்ணம், சிந்தனை, சொல், செயல் என எல்லாவற்றிலும் வித்தியாசப்பட்டு- வேறுபட்டு நிற்கிறது. இதில் இந்தியா உயர்ந்து நிற்கிறது; அதில் தமிழ்நாடு விதிவிலக்காக இருக்கிறது. ஏனெனில் உலக சமாதானத்தையும், உலக ஒற்றுமையையும், கருணையையும், அன்பையும், தன்னலமற்ற தன்மையையும் இந்த மண்ணின் மாண்பாகப் பதியச் செய்தனர் நமது முன்னோர்கள். இதில் 18 சித்தர்களின் பங்களிப்பு மகோன்னதமாகும்.
ஆனால், காலச்சுழற்சியும், காலத்தின் வேகமும், நம்மவர்களின் பொறுப்பின்மையும் நமது பண் பாட்டையும், ஒழுக்கக் கல்வியையும், கலாச்சாரத்தையும் சீரழித்துவிட்டது. அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாம் சுதந்திரம் பெற்றோம் என்று பெருமைப்பட முடியவில்லை. ஏனென் றால், சுதந்திர இந்தியாவில் இப்போது நமது குழந்தைகள் அந்நிய மோகத்திற்கு அடிமையாகி, உண்மையான சுதந்திரத்தை இழந்துவிட்டனர்.
இதற்கெல்லாம் காரணம் அலை பாய்ந்துகொண்டிருக்கும் மனமே.
மனம் நிலைகொள்ளாமல் இருக்கும் போது பதட்டம் உண்டாகிறது.
இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. நம் தமிழ்நாட்டிற் கென்று தனிப்பெருமை உண்டு. "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்- ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்' என்னும் பாடல் வரிகள் நமக்கு எதை உணர்த்து கின்றன? ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய நேரமிது. ஏனென்றால் உலகத்திலுள்ள அத்தனைப் பேருக்கும் வேலையும் கொடுத்து, உடுக்க உடையும் உண்ண உணவும் கொடுத்து, அனைத் துத் தரப்பினரையும் ஆனந்தமாக வாழவைக்கும் தகுதி நமக்கிருக்கிறது. எப்படி? இந்த உலகில் எது இல்லாமலும் வாழ்ந்திடலாம். ஆனால் உணவில்லாமல் வாழமுடியாது. ஆனால், நாம் அதைச் செய்தோமா? நாம் இதே நிலையில் வாழ்ந்துகொண்டிருந்தோமானால் வரும் தலைமுறையினர் அடிமைப்பட்டு, பிச்சையெடுக்கும் நிலை உருவாகிவிடும். இதற்குக் காரணமாக இருக்கும் யாரும் கர்மாவி−ருந்து தப்பமுடியாது. இதனை சரிசெய்ய நமது மனம் ஒழுங்கான நிலையில் செயல்படவேண்டும். அதற்கு நாம் இயற்கையோடு பயணிக்கவேண்டும். விவசாயம் என்பது நமது நாட்டின் முதுகெலும்பா கும். ஆக, விவசாயத்தில் முன்னேற விவசாயக் கல்வியைக் கையிலெடுக்க வேண்டும். வாழ்வியல் சித்தர் திருவள்ளுவர்-
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva_39.jpg)
"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.' (திருக்குறள்: 1031)
என்கிறார்.
உழவுத் தொழில் செய்வதால் உடல்வருத்தம் ஏற்படும் என்பதைக் காரணமாக்கி, ஒருவன் வேறு தொழில் செய்து திரிந்தாலும், உலகத்தாரின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவின் பொருட்டு அனைவரும் உழவரிடமே செல்ல வேண்டும். எனவே எவ்வளவு துன்பப்பட்டாலும் உழவுத் தொழிலே உலகத்தில் தலைசிறந்தது; தலையாயதாகிறது.
அதாவது என்ஜினீயரிங், அதன்பிரிவுகளாக எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் என்று பல பிரிவுகள் இருக்கின்றன. இப்பிரிவுகள் அனைத்தையும் முழுமையாக உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்த முடியும். எப்படி? யாருக்கும் தெரியாததை நாம் சொல்ல முற்படவில்லை. இருப்பினும் நினைவூட்டல் என்பது அவசியமான ஒன்றாகும். நவீன விவசாயத்திற்குத் தேவையான கருவிகளை மெக்கானிக்கல் பிரிவும், அதற்குத் தேவையான மின்சாரத்தை எலக்ட்ரிக்கல் பிரிவும், அதற்குத் தேவைப்படும் தொடர்புகளை எலக்ட்ரானிக் பிரிவும் செய்து தரலாம்.
இயற்கை விவசாயத்திற்குத் தேவையான உயிரியல், விலங்கியல், தாவரவியல், மண்வளம் சார்ந்த அக்ரோலாஜி (ஆஞ்ழ்ர்ப்ர்ஞ்ஹ்), வேளாண் மண்ணியல் என்று அத்தனைக் கல்வியையும் நாம் விரிவாகவும், விவரமாகவும் கொடுக்கமுடியும். அதனால் ஏற்படக்கூடிய விளைவை இந்த உலகமே அனுபவிக்கும். எந்த பொருளாதாரத் தாக்கமோ, வீழ்ச்சியோ ஏற்படாது. இவையனைத்தும் இயற்கையையும், இறைவனையும் சார்ந்ததாகும்.
இதுபோன்ற கல்விகளில் நமது குழந்தைகளை ஈடுபடுத்தியும், கற்பித்தும் இருந்தோமென்றால், இன்று படித்துவிட்டு பல லட்சம் இளைய சமுதாயத்தினர் வேலையில்லாமலும், வேலையை இழந்தும், நிம்மதியிழந்தும், அதன்காரணமாக ஹய்ஷ்ண்ங்ற்ஹ்-ல் (பதட்டம்) ஆரம்பித்து நற்ழ்ங்ள்ள்-ல் (மன அழுத்தம்) விழுந்து வேதனையை அனுபவித்து வாழ்க்கையைத் தொலைத்திருக்க மாட்டார்கள். இதற்கு காரணம் மனம் தாறுமாறாக ஓடுவதே.
மனம் ஒழுங்காக இருந்தால் புத்தி தெளிவாக இருக்கும். மாணிக்கவாசகர் திருவாசகத்தில்-
"என்னை அப்பா அஞ்சல் என்பவரின்றி
நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய்
உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தர
கோச மங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய்
என் அரும் பொருளே'
என்கிறார்.
"அப்பனே, எதற்கும் நீ அஞ்சாதே' என்று ஆறுதல்கூறி என்னைத் தேற்றுவார் எவருமில்லாமல் கவலையால் அலைந்து திரிகிறேன். மின்னல் போலும் ஒளிவடிவத் திருமேனி உடையவனே! என்னைக் கைவிட்டு விடுவாயோ? கைவிட்டு விடாதே பெருமானே. உனக்கு உவமை நீயே! வேறெவரும் நினக்கு ஒப்பாகமாட்டார். திருஉத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் கோவில்கொண்டிருக்கும் பெருமானே! எனக்குத் தாய் போன்றவனே! தந்தைக்கு நிகரானவனே! அடைதற்குரிய பெரும் நிதியமே! என்னைக் கைவிட்டு விடாதே.
இந்த இடத்தில் மாணிக்கவாசகர், பயம், கவலை எனும் வார்த்தைகளைக் கையாண்டி ருக்கிறார். என்னைக் கைவிட்டுவிடாதே என்று இறைஞ்சுகிறார். எது எப்படியிருந்தாலும் நம் சிந்தனையும் செயலும் ஈஸ்வர நம்பிக்கையோடு இருந்தால் எதுவும் நம் வசமாகும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. இங்கே பாரதியாரின் முக்கிய கவிதை ஒன்றை நினைவுகூர்வோம்.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.'
மனநோய் மட்டுமல்ல; எந்த நோயும் நம்மை நெருங்காமலி−ருக்கவும்- குறிப்பாக பதட்டம் நம்மைப் பற்றாமல் இருக்கவும் புலன்கள் செம்மையாக இருக்கவேண்டும். இதை திருமந்திரச் சிற்பி திருமூலர்-
"மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற ஈர்த்துப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை ஆறொளி தன்னொளி ஆமே'
என்று தெளிவுபடுத்துகிறார்.
மனம் என்ற உறைக்குள், அறிவாகிய வாள் உறங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அறிவாகி வாள் கொண்டு, ஆசை, பாசம், அச்சம், வெகுளி, ஆணவம் எனும் (குணங்கள் கொண்ட) கூட்டத்தி−ருந்து துண்டித்துக்கொண்டு, உலக வாழ்வாகிய காட்டில் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களும் தன்னிச்சைப்படி மேய்ந்து திரியாமல் தடுத்து நிறுத்தி னால், மூலாதாரமான ஆறு ஆதாரங்களில் தோன்றும் தவ ஒளி தன்னொளியாகும்- உள்ளொளியாக விளங்கும் சிவஒளியைக் காணலாம் என்பது பொருளாகும்.
ஈசனை அறிய, உணர நம் மனதினுள் உறங்கிக்கொண்டுள்ள அறிவெனும் வாளை எடுப்போம்; நம்மை வீழ்த்த நினைக்கும் நம்முள் இருக்கும் பதட்டத்தை வீழ்த்தி பரம் பொருளை அடைவோம்; பரமனைத் தொழுவோம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-12/siva-t.jpg)