ராஜஸ்தான் மாநிலத்தில், லோஹர் கல் என்னுமிடத்தில் சூரிய நாராயண் மந்திர் அமைந் துள்ளது. "லோஹர் கல்' என்றால் "இரும்பு உருகும் இடம்' என்று பொருள். சேக்காவாட்டி என்ற பகுதியில், "ஜுன் ஜு' என்ற நகரத்திலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் அடாவல் மலைத்தொடரிலுள்ள உதய்பூர்வாட்டி என்ற சிறிய நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் "லோஹர் கல்' இருக்கிறது. நவல்கர் தாலுகாவிலுள்ள இந்த ஊரை "லோஹா கல்ஜி' என்றும் அழைக்கிறார்கள். இந்த மலைத்தொடரின் உயரம் 1,050 மீட்டர்.
பாண்டவர்கள் மகாபாரதப் போர் முடிந்தபிறகு, தங்களுடைய உறவினர்களைக் கொன்றதால் தீராத மனக் கவலையில் இருந்தனர். அப்போது அவர்கள் கிருஷ்ணரிடம் தங்கள் பாவம் நீங்க வழ
ராஜஸ்தான் மாநிலத்தில், லோஹர் கல் என்னுமிடத்தில் சூரிய நாராயண் மந்திர் அமைந் துள்ளது. "லோஹர் கல்' என்றால் "இரும்பு உருகும் இடம்' என்று பொருள். சேக்காவாட்டி என்ற பகுதியில், "ஜுன் ஜு' என்ற நகரத்திலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் அடாவல் மலைத்தொடரிலுள்ள உதய்பூர்வாட்டி என்ற சிறிய நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் "லோஹர் கல்' இருக்கிறது. நவல்கர் தாலுகாவிலுள்ள இந்த ஊரை "லோஹா கல்ஜி' என்றும் அழைக்கிறார்கள். இந்த மலைத்தொடரின் உயரம் 1,050 மீட்டர்.
பாண்டவர்கள் மகாபாரதப் போர் முடிந்தபிறகு, தங்களுடைய உறவினர்களைக் கொன்றதால் தீராத மனக் கவலையில் இருந்தனர். அப்போது அவர்கள் கிருஷ்ணரிடம் தங்கள் பாவம் நீங்க வழியென்னவென்று கேட்க, ""பல ஆலயங்களுக்குச் சென்று வணங்குங்கள். உங்களின் ஆயுதங்கள் எந்த இடத்தில் உருகு கிறதோ, அங்கு உங்களுக்கு பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும்'' என்று கூறினார்.
அதன்படி அவர் கள் பல்வேறு கோவில் களுக்குச் சென்றுவிட்டு, இறுதியாக லோஹர் கல்லுக்கு வந்து, அங்கிருக்கும் சூரிய குண்டத்தில் குளித்து விட்டு வெளியே வரும்போது, அவர்கள் வைத்திருந்த அனைத்து ஆயுதங் களும் உருகிவிட்டன. அந்த இடம்தான் கிருஷ்ணர் கூறிய இட மென்பதைப் புரிந்து கொண்டு அந்த தீர்த் தத்திற்கு "தீர்த்த ராஜ்' என்று பெயர் சூட்டினர்.
பரசுராமர் பல ஷத்தி ரிய மன்னர்களைக் கொன்ற பாவம் நீங்க இங்கு யாகம் செய்து, அதிலிருந்து விடுபட்டாராம்.
அங்கிருக்கும் குளத்திற்குள் இறங்கிச் சென்றால், வேறொரு குளம் உள்ளே இருப்பதைப் பார்க்கலாம். அதை "பாவாடி' என்கிறார்கள். மகாத்மா சேந்தன்தாஸ் என்பவர் அக்குளத்தை வெட்டியிருக்கிறார்.
அருகில் மலையுச்சியில் சூரிய பகவானுக்குக் கோவில் இருக்கிறது. சிவன், ஆஞ்சனேயர் ஆலயங் களும் இருக்கின்றன. பாண்டவரின் குகையும் உள்ளது. அங்கிருந்து 400 படிகளில் ஏறினால், மால்கேது என்ற கடவுளை தரிசிக்கலாம்.
இந்த சூரிய நாராயண் ஆலயம் அமைந்ததற்கு ஒரு கதையுண்டு.
பண்டைக் காலத்தில் காசியில் சூரிய பான் என்ற மன்னன் இருந் தான். வயதான காலத்தில் அவனுக் கொரு பெண் குழந்தை பிறந்தது. அது ஊனமாகப் பிறந்துவிட்டது. ஜோதிடர்களை அழைத்துக்கேட்க, அந்தக் குழந்தை முற்பிறவியில் குரங்காக இருந்ததாகக் கூறினார்கள். ""வேடனொருவன் ஏதோ விலங்கென்று அதைக் கொன்றுவிட்டான். அருகே சென்று பார்த்தபோது அது குரங்கென்று தெரிந்து, அதை உண்ணக்கூடாதென்று அருகிலிருந்த ஆலமரத்தில் தொங்க விட்டுச் சென்றுவிட்டான். நாளடைவில் அந்த குரங்கின் உடல் சூரிய வெப்பத்தில் காய்ந்து அருகிலிருந்த குளத்தில் விழுந்துவிட்டது. ஆனால் அந்தக் குரங்கின் கைப்பகுதி மட்டும் இன்னும் மரத்திலேயே இருக்கிறது. அதை எடுத்து குளத்தில் போட்டால் இந்தக் குழந்தையின் ஊனம் மறைந்து விடும்'' என்று கூறினார்கள்.
அப்போது சூரிய பான் லோஹர் கல்லுக்குச் சென்று, அந்த ஆலமரத் தில் தொங்கிக்கொண்டிருந்த கையை எடுத்து குளத்திற்குள் போட்டான். அந்தக் கணத்திலேயே பெண் குழந்தையின் ஊனம் சரியாகிவிட்டது.
அதைத் தொடர்ந்து மன்னன் சூரிய பகவானுக்காக அங்கு ஆலயத்தைக் கட்டி குளத்தை சீரமைத்தான்.
மலையுச்சியில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது. அதில் ஏராளமான பக்தர்கள் வருடம் முழுவதும் வந்து நீராடுகின்றனர். கிரகணம் வரும் காலத்திலும், திங்கட்கிழமை அமாவாசை வரும்போதும் அங்கு திருவிழா நடைபெறும்.
கிருஷ்ண ஜெயந்தியிலிருந்து அமாவாசைவரை தொடர்ந்து அங்கு திருவிழா நடைபெறும். "சூரிய சப்தமி' விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது சூரிய பகவானை ஊர்வலமாக எடுத்துச்சென்று, 24 மைல்கள் மலையைச் சுற்றி வலம்வருவார்கள்.
சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் சென்று, அங்கிருந்து 140 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லோஹர் கல்லை அடையலாம்.