Advertisment

சரணாகதி தத்துவமே வைணவம்! - எஸ்.விஜயநரசிம்மன்

/idhalgal/om/surrender-philosophy-vaishnavism-s-vijayanarasimhan

ழகிய மணிகள் கயிற்றில் கோக்கப்படும்போது, அக்கயிறு கண்ணுக்குத் தெரியாமலிருப்பதுபோலவும், சுவையான பாலினுள் முழுவதுமாக நெய் இருப்பினும் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாததுபோலவும், என்றுமழியாத தன்மையதாய், எங்கும் நிறைந்ததாய், சர்வ சாட்சியாய் இருந்தபோதிலும் "பரம் பொருள்', கண்ணுக்குப் புலப்படாத கருத்துக்கு மட்டுமே புலப்படக்கூடியதாக இருக்கிறது.

"ஆத்மானம் அரணிம் ப்ரணவம் சோத்பராரணிம்

தியான நிர்மதநாப்யாஸாத் பாசம் தகதி பண்டித.'

Advertisment

சுயமுயற்சியால் வைராக்கியத்

ழகிய மணிகள் கயிற்றில் கோக்கப்படும்போது, அக்கயிறு கண்ணுக்குத் தெரியாமலிருப்பதுபோலவும், சுவையான பாலினுள் முழுவதுமாக நெய் இருப்பினும் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாததுபோலவும், என்றுமழியாத தன்மையதாய், எங்கும் நிறைந்ததாய், சர்வ சாட்சியாய் இருந்தபோதிலும் "பரம் பொருள்', கண்ணுக்குப் புலப்படாத கருத்துக்கு மட்டுமே புலப்படக்கூடியதாக இருக்கிறது.

"ஆத்மானம் அரணிம் ப்ரணவம் சோத்பராரணிம்

தியான நிர்மதநாப்யாஸாத் பாசம் தகதி பண்டித.'

Advertisment

சுயமுயற்சியால் வைராக்கியத்துடன்கூடிய மனத் துடன் தியானம்செய்து ஆத்மஞான அக்னியில் தங்களின் அன்பு, பாசம் அனைத்தையும் எரிக்கின்றனர்.

இது நொடிக்கு நொடி கட்டுக்கடங்காமல் ஓடுகின்ற மனதையடக்கும் கடுமையான யோக சாதனையன்றோ? இதையே ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார்-

"இறையாய் நிலனாகி எண்திசையும் தானாய்

மறையாய் மறைபொருளாய் வானாய்- பிறைவாய்ந்த

வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்

உள்ளத் தினுள்ளே உளன்'

என்கிறார். இந்து சமுதாயம் தொன்றுதொட்டு புத்தியை வளர்க்கும் பணியைப் பலகாலமாகச் செய்துவந்துள்ளது. "இந்து', "மதி' என்னும் சொற்கள் சந்திரனைக் குறிக்கின்றன. அதனால்தான் இந்த புத்திக்கு அதிபதியாக, நவகோள்களில் சந்திரனையே வைத்துள்ளனர். இவ்வாறாக மதியை ஒருமுகப்படுத்தி, சிதறியோடும் பஞ்ச இந்திரியங்களைத் தன்வசப்படுத்தி மூலாதாரக் கனலை எழுப்பி, அமைதியின் எல்லையில்லா பெருநிலையாம் ஆனந்த சாகரத்தை அடைவதே பரம் பொருளை அடைவதென்று பூடமாகக் கூறிச் சென்றனர். அதனால்தான் இந்துவைப் பூஜிப்பதால் நாம் இந்துக்கள் ஆகிறோம்.

Advertisment

vv

எக்காலத்தும், எங்கும் நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளை யோகத்தின்மூலம் அடையும் வழி மிகவும் கடினமானது. அந்த யோகம், ஒரு முரட்டுத்தனம்மிக்க மாட்டினைத் தாம்புக் கயிற்றால் கட்டி, அடித்து அடக்கு வது போன்றதாகும். ஆனால் அதையே பக்தி என்ற எளியவழியில் அடைவது மிகச் சுலப மான வழியாகும். அந்த மாட்டுக்கு புல், கழனி காட்டி தடவிக்கொடுத்து தன்வசப்படுத்துவது போன்றது பக்தி மார்க்கம். அதனால்தான் விஷ்ணு ஆராதனையில் சரணாகதி தத்துவமே முதன்மையான இடத்தைப் பெறுகிறது.

இதையே கீதையில்-

"ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம்

சரணம் வ்ரஜ'-

"எல்லா தர்மா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணடைக' என்று கூறி பகவான் எளிய வழியைக் காட்டினான்.

அதனாலேயே ஆண்டவன் சுலபமாக அடையக்கூடியவன் என்று பொருள் தரும் "ஸௌலப்ய மூர்த்தி' என்னும் பெயரையும் அவன் பெற்றான்.

பரம கருணையினால் முனிவர்கள் சங்கேத மாகவும், சிற்ப வடிவங்களாகவும் யோக தத்துவத்தைப் பிரகடனப்படுத்தி வந்துள்ளதை அனுசரித்து காணாபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம் போன்ற தீவிர வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்த அத்வைத சிற்பியான ஸ்ரீ ஆதிசங்கரர் சமுதாயத்தின் மீதான பரம கருணையினால் பக்தியோகம் என்ற இந்த எளிய முறையை ஆலம் வித்தாக விதைத்துச் சென்றதுதான் வைணவமாகும்.

om010722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe