ஞாயிறு போற்றதும் ஞாயிறு போற்றதும் - முனைவர் இரா. இராஜேஸ்வரன்

/idhalgal/om/sunday-night-and-enjoying-sunday

ராமாயணத்தில், சூர்ப்பனகையின் தூண்டுதலின்பேரில் இராவணன் சீதையை அபகரித்துச் சென்றான் செய்தி வரும். இராவணணின் அசோகவனத் தில் சிறைப்பட்டிருந்த சீதையை மீட்க இராமபிரான் இராவண ணின் அரக்க சேனையுடன் பெரும் போர் புரிந்தார். ஒருகட்டத்தில் இராவணனை எப்படி வெல்வதென்று தீர்மானிக்கமுடியாமல் மனச் சோர்வுடன் இருந்த இராமனுக்கு அகத்திய மகரிஷி சூரியனைத் துதிக்கும் "ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் ஸ்தோத்திரத்தை உபதேசித்தார். இதன்மூலம் புதிய பலம்பெற்ற இராமன் இராவணனை வென்றார்.

இந்தத் தகவலை யுத்த காண்டம் மூலம் வால்மீகி மகரிஷி உலகிற்கு அறிவித்தார். இதன்மூலம் சூரியனைத் துதிக்கும் மந்திரத்திற்கும், சூரியனுக்கும் எவ்வளவு மகிமை உண்டு என்பதை அறியலாம். காரணம் இறைவனின் அவதாரமான இராமபிரானுக்கே உதவியவர் சூரியன் என்றால், சூரியனின் சக்தியை எப்படி அள விடுவது? உலகில் வாழும் மனிதர்கள், பிராணிகள், புழு பூச்சிகள், தாவரங்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி தம்முடைய கதிர்களால் தினமும் காத்துவரும் சூரியனை வழிபட்டால் எல்லாவிதமான துயரங்களிலிலிருந்தும் விடுபட்டு மகிழலாம்.

நவீன அறிவியலிலின் விண்வெளி ஆய்வுப் படி, சூரியன் என்பது ஒளியும் வெப்பமும் மிக்க ஒரு விண்மீன் என்றும், கோள் என்றும் சொல்லாம். பல விண்மீன்கள் அடங்கியது ஓர் அண்டம். இதுபோன்ற பல அண்டங்களின் தொகுப்பே பேரண்டம் எனப்படும் பிரபஞ்சம். நம்முடைய பூமியை விட ஏறத்தாழ 13 லட்சம் மடங்கு பெரியது சூரியன். இதன் வயது ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த சூரிய குடும்பத்தில் புதன் (merury), வெள்ளி(Venus), பூமி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன்(Neptune) என எட்டுக் கோள்கள் உள்ளன. இந்த எட்டுக் கோள்களும் தனித்தனிப் பண்புகளைக் கொண்டவை.

பூமியிலிலிருந்து ஏறத்தாழ 14 கோடியே 96 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் அமைந் துள்ள சூரியனில் 70 சதவிகிதம் ‘ஹைட்ரஜன் வாயுவும், 2

பூமியிலிலிருந்து ஏறத்தாழ 14 கோடியே 96 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் அமைந் துள்ள சூரியனில் 70 சதவிகிதம் ‘ஹைட்ரஜன் வாயுவும், 28 சதவிகிதம் ஹீலியம் வாயுவும், 1.5 சதவிகிதம் கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற வாயுக்களும், 0.5 சதவிகிதம் பிற வாயுக்களும் அடங்கியுள்ளன.

sun

இந்தியாவில் ஏறத்தாழ கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இயற்கணிதவியல், வானவியல் சாஸ்திரத்தில் பண்டிதரான ஆரியபட்டா சூரியமண்டலத்தைப் பற்றி முதலிலில் ஆராய்ந்தார். அதன்பின்னர் பல நாட்டு அறிவியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்தா லும், இத்தாலிலி நாட்டைச் சார்ந்த கலிலீலியோ கலிலி (1564- 1642) சூரிய மையக் கோட்பாட்டை பல எதிர்ப்புகளுக்கிடையே அறிவித்தார். சங்க கால தமிழ் இலக்கியம்-

"வாள்நிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த

இளங்கதிர் ஞாயிறு...'

(சிறுபாண் 242)

எனும் பாடல் வரிகளில், சூரியனைச் சுற்றி கோள்கள் சூழ்ந்துள்ளன என கூறுகிறது. அதேபோல் சூரியன் மூலம் வெப்பமும் ஒளியும் கிடைக்கிறது என்பதை-

"வான மூழ்கிய வயங்கொளி நெஞ்சுடர்க்

கதிர் காய்ந் தெழுந்தகங் கனலிலி ஞாயிறு'

(நற்றிணை 163-9)

என்னும் அடிகள் விளக்குகின்றன.

அதிதியின் மகனான சூரிய பகவானை வேத காலத்துக்கு முன்பே மக்கள் இயற்கை தெய்வமாக வழிபடத் தொடங்கினார்கள். நெருப்புக்கு அக்னி தேவனையும், இடி, மின்னலுக்கு இந்திரனையும், மழைக்கு வருணனையும் வழிபட்டனர்.

"ஆதித்தியம் அம்பிகாம் விஷ்ணும்

கணநாதம் மஹேச்வரம்

ஸுப்ரஹ்மண்யம் ஸதா பக்த்யா

நமா மோபீஷ்ட ஸித்தயே'

என்னும் ஒரு சுலோகத்தின் அடிப்படை யில், பரமசிவனை வழிபடுவோர் (சைவம்), மகாவிஷ்ணுவை வழிபடுவோர் (வைணவம்), கணபதியை வழிபடுவோர் (காணாபத்யம்), சக்தியை வழிபடுவோர் (சாக்தம்), முருகனை வழிபடுவோர் (கௌமாரம்), சூரியனை வழிபடுவோர் (சௌரம்) என ஆறுவகையான சமயப் பிரிவை ஆதிசங்கரர் ஏற்படுத்தினார். இதில் சௌரம் பிரிவுக்கு அதிபதி தேவதை சூரிய பகவான். இவரே வானில் சுடர்விட்டு ஒளிர்பவர். ஏனைய ஐந்து பிரிவுகளில் இவர் மட்டும்தான் நம்முடைய கண்ணுக்குத் தெரிகின்ற ப்ரத்யக்ஷமான அதிதேவதை ஆவார்.

ஒரு சக்கரமும், ஏழு குதிரைகளும் கொண்ட ரதத்தில், அருணன் என்னும் சாரதி ரதத்தை ஓட்ட, அதில் தன் இரு மனைவிகளுடன் அனைத்து லோகத்திலும் வலம்வருபவர்தான் சூரியபகவான். இவரே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கிற மும்மூர்த்திகளின் அம்சமாகவும்; ரிக், யஜுர், சாம வேதத்தின் ஸ்வரூபமாகவும் திகழ்கிறார்.

"இருளிலிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக' என பிருஹதாரண்யக உபநிஷத்து மந்திரம் கூறுகிறது. இறைவழிபாட்டில் மந்திரங்களில் முதன்மையான காயத்ரி மந்திரமான,

"ஓம் பூர் புவஸ்ஸுவ

தத் ஸவிதுர் வரேணியம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந: ப்ரசோதயாத்'

(யார் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ,

அனைத்தையும் படைப்பவரான அந்த தெய்வத்தின் சிறந்த ஒளி வடிவை தியானிப் போம்) என்பது சூரியனைப் போற்றும் மந்திரமாக அமைந்துள்ளது.

planets

அதேபோன்று, ரிக் வேதத்தில் வரும் ஸாவித்ரி மந்திரமான (அனுஷ்டுப் சந்தம்)

"தத் ஸவிதுர் வ்ருணீமஹே

வயம் தேவஸ்ய போஜனம்

ச்ரேஷ்டம் ஸர்வதாதமம்

துரம் பகஸ்ய தீமஹி'

என்னும் மந்திரத்தின் பொதுவான பொருள் என்னவென்றால், "உணவுக்காக நாம் ஒளிக் கடவுளைப் பிரார்த்திப்போம். அவரே முதன்மையானவர். அவரே அனைத் தையும் தாங்குபவர். அந்த சூரிய பகவானை தியானிப்போம்' என்பதாகும்.

இறையம்சம் நிறைந்த சூரிய பகவானுக்கு ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பு தனிக் கோவில் மூலதான்- முல்டான் (Multan) நகரில் கட்டப்பட்டது. அந்த இடம் இந்திய சுதந்திரத்திற்குப்பிறகு பாகிஸ்தான் நாட்டின் வசம் சென்றுவிட்டது. கிருஷ்ண பகவானின் மகனான சாம்பா (ஜாம்பவதிக்குப் பிறந்தவன்) கோவில் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. கிரேக்க நாட்டையாண்ட பேரரசன் மாவீரன் அலெக்சாண்டர் (கி.மு. 356- 323) இந்த கோவிலிலில் குடிகொண்ட சூரியபகவான் சிலையின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டதாக சில வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஏழாம் நூற்றாண் டில் இந்தியாவிற்கு வந்த சீன யாத்ரிகரும், பௌத்தத் துறவியுமான யுவான் சுவாங் (கி.பி. 629- 645) இந்த கோவிலைப் பற்றி தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் 10-ஆம் நூற்றாண்டுக் காலத்தில் மொகலாய மன்னர்களால் இந்த கோவில் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டு, சூரிய பக வானின் சிலையும் சிதைக்கப்பட்டது.

இந்தியாவில் பழமை வாய்ந்த சூரிய பகவானின் கோவில்கள் லலிலிதாத்தியன் (கி.பி. 693- 729) என்னும் மன்னரால் காஷ்மீர் மாநிலத்தில் மார்த்தாண்ட் (Martand) எனும் இடத்திலும், முதலாம் பீமதேவன் என்னும் மன்னரால் கி.பி. 1026-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மதெரா (Madhera) எனும் இடத்திலும் கட்டப்பட்டன. இவை காலப்போக்கில் சிதைந்துவிட்டன. 13-ஆம் நூற்றாண்டில் ஒடிஸா மாநிலத்தில் கொனார்க் எனும் இடத்தில் முதலாம் நரசிம்ம தேவன் என்னும் மன்னரால் தேர் வடிவில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் சூரியனுக்கு கோவில் கட்டப்பட்டது.

தமிழகத்தைப் பொருத்தவரை பழமையான சூரிய பகவான் கோவில் தஞ்சை மாவட்டத்திலுள்ள சூரியனார்கோவில்தான். இந்த கோவில் முதலாம் குலோத்துங்க சோழ மன்னரால் (கி.பி. 1060- 1118) கட்டப்பட்டது. சூரிய பகவான் நின்ற கோலத்தில், தம் இரு கரங்களிலும் செந்தாமரை மலருடன் இரு மனைவிமார்களான உஷா தேவி, சாயா தேவி (பிரத்யுஷா தேவி) காட்சியளிக்கிறார்.

அதேபோன்று சென்னையை அடுத்த செங்குன்றம் அருகேயுள்ள ஞாயிறு கிராமத்திலுள்ள புஷ்பரதேஸ்வரர் சிவன் கோவில் சூரிய பரிகார ஸ்தலமாகும். இக்கோவிலிலில் குடிகொண்ட சிவபெருமானை சூரிய பகவான் வழிபட்டு நற்கதி பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் 1-ஆம் தேதியிலிலிருந்து 5-ஆம் தேதிவரை சூரிய உதய காலத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிலிங்கத்தின் திருமேனியில் படர்கின்றன.

நல்ல உடல் ஆரோக்கியத்தையும், அறிவையும் பெற நம் முன்னோர்கள் தினமும் சூரிய உதய காலத்தில் உதயசூரியனை வழிபடுவதுண்டு. சிலர் சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்வதுண்டு. இதன்மூலம் உடலுக்கு புதிய சக்தியும், சிறந்த கண் பார்வையும் கிட்டும். அந்தணர்கள் சூரிய பகவானை வழிபடும் விதமாக தங்களின் நித்ய கர்மாவான த்ரிகால சந்தியா வந்தனத் தையும் இன்றும் செய்துவருகின்றனர்.

சூரிய பகவான் வடதிசையில் பயணம் செய்யும் உத்தராயன புண்ணிய காலத்தில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் (மகர சங்கராந்தி) அன்று சூரிய, சுக்கிர ஹோரை யில் சூரிய பகவானுக்கு (சூரிய நாராயணன்) பூஜை, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ர பாராயணம், அர்ச்சனை முதலிலியவற்றைச் செய்து, சூரிய ஆராதனைக்குப்பின்பு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுவது தொன்றுதொட்டு வரும் கலாச்சார வழக்கம்.

அதேபோன்று தைமாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியான "ரத சப்தமி' அன்று சூரியபகவானை விசேஷமாக வழிபடுவார்கள். அன்றைய தினம் வீட்டு வாசலில் ரதசப்தமிக்குரிய ரத வடிவ (தேர்வடிவம்) கோலத்தைப் போடுவார்கள். சூரிய உதயத்தின் முன்பு அட்சதை, பசுஞ்சாணம், அறுகம்புல் போன்றவற்றை ஏழு எண்ணிக்கை எருக்க இலையின்மீது வைத்து, நீர்நிலைகளில் சூரியனை தியானித்த வண்ணம் குளிப்பது வழக்கம். பின்னர் சூரிய பகவானை முறைப்படி வழிபடுவதுண்டு.

சூரிய பகவானை நாம் வழிபடவேண்டும் என்னும் முறையை நம் முன்னோர்கள் வைத்திருந்ததற்கு ஒரு மருத்துவக் காரணமும் உண்டு. சூரிய சக்தியால் நம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் டி என்னும் ஊட்டச்சத்து இயற்கையாகவே கிடைக்கிறது. வைட்டமின் டி-3 குறைபாட்டால் எலும்பு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா பிரச்சினை போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக ஒரு மனிதனுக்கு உடலிலில் இருக்கவேண்டிய வைட்டமின் டி-3 அளவு 30 முதல் 100 ய்ஞ்/ம்ப் என்பது ரத்தப் பரிசோதனை மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் குறைபாட்டைப் போக்க ஒரு நாளைக்கு குறைந்தது 15 நிமிடங்கள் சூரிய ஒளிபடும் வண்ணம் இருந்தால், நமக்குத் தேவையான வைட்டமின் டி சத்தை உடல் தானாகவே சூரியனின் புற ஊதாக் கதிர்கள்மூலம் பெற்றுக்கொள்ளும். அதற்காகத்தான் சூரியனை தினமும் வழிபட வேண்டும் என்னும் சம்பிரதாயம் வகுக்கப்பட்டது.

எனவேதான் இளங்கோவடிகள், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றும் என மங்கல வாழ்த்துப் பாடலிலில் சூரியனைப் போற்றிப் பாடியுள்ளார்.

om010219
இதையும் படியுங்கள்
Subscribe