இயற்கையெழில் சூழ்ந்த கொடைக்கான−ல் அமைந் துள்ளது குறிஞ்சியாண்டவர் திருக்கோவில். இக் கோவிலைச் சுற்றி குறிஞ்சிமலர்ச் செடிகள் புதர்போல் மண்டிக் கிடக்கின்றன.
சர்வதேச சுற்றுலாத்தலமான இம்மலைப் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, ஆறாண்டுகளுக்கு ஒருமுறை, பன்னிரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிச் செடிவகைகள் உள்ளன.
இக்கோவிலைச் சுற்றிக் குறிஞ்சிமலர்கள் பூப்பதால், இங்குள்ள முருகப்பெருமானை குறிஞ்சியாண்டவர் என்று போற்றுகின்றனர்.
இக்கோவில் தலவிருட்சமான குறிஞ்சிச் செடி ஐந்தடி உயரத்தில் சிறிய மரம்போல் காட்சி தருகிறது. மேற்கு திசை நோக்கியுள்ள இவ்வாலயம் அமைவதற்குக் காரணமானவர் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவப் பெண் என்று வரலாறு கூறுகிறது.
1935-ஆம் ஆண்டு கொடைக்கானலி−ல் அந்தப் பெண் தங்கியிருந்தபோது இந்து மதத்திற்கு மாறி, ராமநாதன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, "லீலாவதி' என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். இவர் முருகன்மேல் பற்று கொண்டவர். கொடைக்கானலி−ல் இருந்தபடியே பழனிமலையின் உச்சியைக்கண்டு முருகப் பெருமானை வணங்கிவந்தார். அடிக்கடி மேகமூட்டம் ஏற்பட்டதால் கொடைக்கானலிருந்து பழனிமுருகன் கோவில் தெரியாமல் போக, மனம் வருந்தினார்.
அதன்காரணமாக 1936-ஆம் ஆண்டு கொடைக்கானலி−ல் ஒரு முருகன் கோவிலைக் கட்டினார். மேகமூட்டம் இல்லாத சமயங்களில் இத்திருக்கோவிலிருந்து பழனிமலையை இன்றும் தரிசிக்கலாம்.
முருகப்பெருமான் மேற்கு திசை நோக்கி கையில் வேலுடன் நின்ற கோலத்தில் தனிமையில் அருள்புரியும் இத்திருக்கோவில் வளாகத்தில் பெருமாளுக்கும் தனியாக சந்நிதி உள்ளது. அவருக்கு எதிரில் கருட பகவான் முழங்காலி−ட்டு அஞ்சலிலி− செய்து கொண்டிருப்பது தனிச்சிறப்பு.
கோடைக்காலமான சித்திரை, வைகாசி மாதங்களில் கொடைக்கானல் மலைக்கு உல்லாசப் பயணம் வருபவர்கள் இத்திருக்கோவிலுக்கு வந்து குறிஞ்சி யாண்டவரையும், பெருமாளையும் வணங்காமல் போவதில்லை. இத்திருக் கோவிலி−ல் முருகப்பெருமானுக்குரிய சிறப்பு நாட்களில் அபிஷேக ஆராதனைகள் நடந்தாலும், ஆனிமாத உத்திர நட்சத்திரத் தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இது கோடை விடுமுறை விழா என்று போற்றப்படுகிறது.
இங்கு எப்பொழுதும் மிகக்குளிர்ச்சியாக இருந்தாலும், கோடைக்கால வெய்யிலி−ன் தாக்கமானது ஆனி மாதத்தில் குறைந்து வழக்கமான குளிர்ச்சி ஏற்படுவதால், கொடைக்கானல் பகுதியில் பூத்துக்குலுங்கும் பல வண்ணமலர்களைக் கொண்டு வந்து முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது வழக்கம். இதற்காக மூட்டைமூட்டையாக நறுமண மலர்களைக் கொண்டு வந்து கொட்டுவார்கள். அந்த மலர்க் குவியல் களுக்கு ஊடே தங்கக் கவசமிட்டு, ராஜ அலங்காரத்தில் குறிஞ்சியாண்டவர் காட்சியளிப்பார். இந்த வைபவத்தினை ஆனி உத்திரத்தில் காணலாம்.
மேலும், இத்திருக்கோவில் வளாகத்தில் அருள்புரியும் வரதராஜப் பெருமாளுக்கும் ஆனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஒரே கோவிலி−ல் முருகப் பெருமானுக்கும், அவரது மாமனாகக் கருதப்படும் பெருமாளுக்கும் நடைபெறும் வைபவத்தில் அந்தப் பகுதிவாழ் மக்களும், சுற்றுலாப்பயணிகளும் கலந்துகொண்டு இறையருள் பெறுகிறார்கள்.
இந்த வைபவம் நடைபெற்றதும் அந்தக் கோவில் பகுதியில் சாரல் மழைத்துளிகள் விழும் அதிசயத்தையும் காணலாம் என்கிறார் கள் அங்கு வாழும் மக்கள்.
குறிஞ்சியாண்டவர் கோவிலில் முருகப் பெருமானுக்கு தைப்பூச விழா, சஷ்டி, ஆடிக் கிருத்திகை, விசாகத் திருவிழா என்று அனைத்து விழாக்களும் முறைப்படி கொண் டாடப் படுகின்றன. அதேபோல் பெருமாளுக் கும் சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுகின்றன.
குறிஞ்சி யாண்டவரை தரிசித்தால் மங்கள கரமான வாழ்வு அமைவதுடன், மன அழுத்தம் போன்ற நோய்கள் நீங்குவதாகக் கூறப்படுகிறது.
கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் திருக் கோவில் திண்டுக்கலில்−லி −ருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வாகன வசதி கள் உள்ளன. தரிசன நேரம் காலை 6.00 மணியிலிலி−ருந்து இரவு 8.00 மணிவரை.
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிலிலி−ருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இக்கோவில் உள்ளது.