நேர்வழி தரும் வெற்றி - சுகந்தரன்

/idhalgal/om/success-leads-right-path-sukandaran

ராமபிரான்- சீதை, லட்சுமண னுடன் வனவாசம் மேற்கொண்ட போது இலங்கை வேந்தன் இராவணன் சீதையை வஞ்சக மாகக் கடத்திச்சென்றான்.

சீதையைத் தேடி லட்சுமணனுடன் வனத்தில் அலைந்த ராம பிரான், சர்வமுக்தி விநாயகரை வழிபட்டு "தான் மேற்கொள்ளும் காரியம் வெற்றியடைய வேண்டும்' என்று வேண்டிக்கொண்டார்.

அந்த விநாயகர் தற்போது தஞ்சை மாவட்டத்தில் முடிகொண்டான் கிராமத்தில் அருள்புரிகிறார்.

அதற்குப்பின் சீதையைத் தேடி அலைந்த ராமனுக்கு வனத்தில் அனுமனின் நட்பு கிடைத்தது. கடல் கடந்து இலங்கை சென்ற அனுமன் அங்கு அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிந்துவந்து செய்தி சொன் னான்.

இலங்கைமீது போர்தொடுக்க முடிவு செய்த ராமபிரான் முதலில் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு வந்தார்.

அங்கு எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானை வழிபட்டு ஆசிபெற் றார். இதனால், அந்த விநாயகருக்கு "இலக்கு அறிவித்த விநாயகர்' என்று பெயர். கோடியக்கரையிலிருந்து இலங்கை செல்வது எளிது என்பதால் அப்பகுதியைத் தேர்ந் தெடுத்தார்.

வங்கக்கடலை எப்படிக் கடக்கலாம் என்று திட்டமிடுவதற்காக அங்கிருந்த உயர்ந்த மணல்மேட்டின்மீது ஏறிநின்று பார்த்தார். அப்போது, இராவணனது அரண்மனையின் பின்புறம் அவர் கண்களுக்குத் தென்பட்டது. "பின்புற வாயிலை நோக்கிச் செல்வது வீரனுக்கு அழகல்ல; எதிரியை முதுகில் குத்துவதற்குச் சமமானது' என்றெண்ணிய ராமபிரான் அரண்மனையின் முன்பக்கமாகவே செல்ல விரும்பினார். அதன்பின்னரே ஆதிசேதுவை ராமர் (ராமேஸ்வரம் பகுதி) தேர்ந்தெடுத்தார் என்று ராமாய

ராமபிரான்- சீதை, லட்சுமண னுடன் வனவாசம் மேற்கொண்ட போது இலங்கை வேந்தன் இராவணன் சீதையை வஞ்சக மாகக் கடத்திச்சென்றான்.

சீதையைத் தேடி லட்சுமணனுடன் வனத்தில் அலைந்த ராம பிரான், சர்வமுக்தி விநாயகரை வழிபட்டு "தான் மேற்கொள்ளும் காரியம் வெற்றியடைய வேண்டும்' என்று வேண்டிக்கொண்டார்.

அந்த விநாயகர் தற்போது தஞ்சை மாவட்டத்தில் முடிகொண்டான் கிராமத்தில் அருள்புரிகிறார்.

அதற்குப்பின் சீதையைத் தேடி அலைந்த ராமனுக்கு வனத்தில் அனுமனின் நட்பு கிடைத்தது. கடல் கடந்து இலங்கை சென்ற அனுமன் அங்கு அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிந்துவந்து செய்தி சொன் னான்.

இலங்கைமீது போர்தொடுக்க முடிவு செய்த ராமபிரான் முதலில் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு வந்தார்.

அங்கு எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானை வழிபட்டு ஆசிபெற் றார். இதனால், அந்த விநாயகருக்கு "இலக்கு அறிவித்த விநாயகர்' என்று பெயர். கோடியக்கரையிலிருந்து இலங்கை செல்வது எளிது என்பதால் அப்பகுதியைத் தேர்ந் தெடுத்தார்.

வங்கக்கடலை எப்படிக் கடக்கலாம் என்று திட்டமிடுவதற்காக அங்கிருந்த உயர்ந்த மணல்மேட்டின்மீது ஏறிநின்று பார்த்தார். அப்போது, இராவணனது அரண்மனையின் பின்புறம் அவர் கண்களுக்குத் தென்பட்டது. "பின்புற வாயிலை நோக்கிச் செல்வது வீரனுக்கு அழகல்ல; எதிரியை முதுகில் குத்துவதற்குச் சமமானது' என்றெண்ணிய ராமபிரான் அரண்மனையின் முன்பக்கமாகவே செல்ல விரும்பினார். அதன்பின்னரே ஆதிசேதுவை ராமர் (ராமேஸ்வரம் பகுதி) தேர்ந்தெடுத்தார் என்று ராமாயணம் கூறுகிறது.

ss

கோடியக்கரையில் ராமர் நின்று இலங்கையைப் பார்த்த இடத்தில், அந்தச் சம்பவத்தின் நினைவாக அழகிய மண்டபம் ஒன்றைக் கட்டி, அதில் ராமர் பாதத்தையும் நிறுவியிருக்கிறார்கள். இங்கு வருபவர்கள் இதை தரிசிக்கத் தவறுவதில்லை. தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசை நாட்களில் கடலில் நீராட வரும் பக்தர்கள் ராமர் பாதத்தைத் தரிசிப்பது வழக்கம்.

ராமபிரான் கடலில் பாலம் அமைக்க கந்தமாதன பர்வதம் (ராமேஸ்வரம்) என்ற இடத்திற்கு வரும்போது, வழியில் அங்கு எழுந்தருளியுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகரை தரிசித்து, தான் மேற்கொண்ட காரியம் வெற்றியடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்தார். அதன்பின் தேவிப் பட்டினம் கடலில் நீராடிய ராமபிரான், அருகிலிருந்த அரசமரத்தடியில் எழுந்தருளி யுள்ள துர்க்கையை வழிபட்டு, "தான் மேற்கொள்ளும் செயல்கள் வெற்றியடைய வேண்டும்' என்று வேண்டினார்.

அப்போது, "ராமா! நீ தெய்வீகப்பிறவியாக இருந்தாலும், பூலோகத்தில் மானிடராக அவதரித்ததால், பூலோகவாசிகள் அனுபவிக் கும் நவகிரக தோஷங்கள் உன்னைச் சூழ்ந் துள்ளன. அதன்விளைவால் உனக்கு பல வழி களில் தடைகளும் இழப்பும் ஏற்பட்டிருக் கிறது. இதனை நிவர்த்திசெய்ய அருகிலுள்ள கடலில் நீராடி, அங்கு நவகிரகங்களை நிறுவி வழிபட்டால் உன் கிரகதோஷங்கள் நீங்கும். நீ எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்' என்று துர்க்கை அசரீரியாக அருளினாள். ராமபிரான் மீண்டும் கடலில் நீராடி நவபாஷாண கற்களைக்கொண்டு, கடலில் நவகிரகங்களை நிறுவி வழிபட்டார். பின் கந்தமாதன பர்வதம் சென்றார் என்று வரலாறு கூறுகிறது.

தேவிபட்டினம் திருத்தலம் தோன்றியது குறித்துப் புராண வரலாறு உண்டு.

மகிஷாசுரன் என்ற அரக்கன், தான்பெற்ற வரத்தைப் பயன்படுத்தி தேவர்களையும் மற்றவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க பராசக்தி புறப்பட்டாள். பராசக்தி வருவதைக் கண்ட மகிஷாசுரன் ஓடிவந்து சக்கர தீர்த்தத்தில் ஒளிந்துகொண்டான். இதனையறிந்த பராசக்தி சக்கர தீர்த்தத் திலுள்ள நீரினை வற்றச்செய்து, மகிஷா சுரனை சம்ஹாரம் செய்து, அவனுக்கு சாப விமோசனம் தந்தாள். இதனைக்கண்டு தேவர்கள் மகிழ்ந்து, அன்னை பராசக்தியைப் போற்றி வழிபட்டனர். பின்னர், பராசக்தி- மகிஷாசுரனை அழித்த இடத்தில் தன் பெயரிலேயே நகரை உருவாக்கி, உலக நாயகி யம்மனாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறாள். அன்றுமுதல் அந்த நகரம் தேவிநகர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கி மருவி "தேவிபட்டினம்' என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. இத்திருத்தலம் ராமநாதபுரத்திலிருந்து வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆரவாரமில்லாத கடலின் நடுவே ராமபிரான் நவபாஷாணக் கற்களால் அமைத்த நவநாயகர்கள் அருளாசி புரிகிறார் கள். வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள இந்தப்பகுதி சக்கர தீர்த்தம் என்று போற்றப் படுகிறது. இங்குள்ள நவபாஷாண நவ கிரகங்களை பக்தர்கள் தங்கள் கையாலேயே அபிஷேகித்து வழிபடலாம்.

இந்தச் சக்கர தீர்த்தம் குறித்து இன்னொரு தகவலும் உண்டு.

முன்னொரு சமயம் காலவ ரிஷி தன் சரீரத்தை அடக்கி பல்லாயிரம் வருடங்கள் மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார்.

அந்தச் சமயத்தில் துர்தமன் என்ற அசுரன் பசியால் உணவுதேடி அலைந்துகொண்டி ருந்தான். அப்போது, கடும்தவத்தில் ஆழ்ந் திருந்த காலவ ரிஷியைக்கண்டு அவரை விழுங்கிட நெருங்கிவந்து பலமாக உறுமி னான். அந்த ஒலியைக் கேட்டு விழித்த காலவரிஷி திடுக்கிட்டு, மீண்டும் கண்களை மூடி விஷ்ணுவை வணங்கி தவத்தில் ஆழ்ந்தார். இதனைக்கண்ட மகாவிஷ்ணு முனிவரைக் காப்பாற்ற தன் சக்கரத்தை அனுப்பி துர்தமனை வதம் செய்தார். மேலும், அசுரனை அழித்த சக்கரத்தை எப்போதும் அங்கேயே இருக்கும்படி செய்தார். அந்த இடமே இப்போது மக்கள் நீராடும் புண்ணிய சக்கர தீர்த்தமாக இருந்து வருகிறது. இதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து தேவலோகத்திலிருந்து அமிர்தத்தைப் பொழிந்தனர். இங்கு தர்மதேவனும் தவம் செய்து ஈஸ்வரனுக்கு வாகனமான ரிஷபமாகியதால், இதில் தர்ம தீர்த்தமும் கலந்துள்ளது. அதேபோல் காலவ ரிஷியும் இங்கு தவமிருந்ததால், காலவ தீர்த்தமும் கலந்துள்ளது. இவ்வாறு அமிர்த தீர்த்தமும், தர்ம தீர்த்தமும் சக்கர தீர்த்தத்தில் கலந்துள்ளதால் இங்கு நீராடினால் புனிதம் பெறலாம். நவபாஷாண நவகிரகங்களும் அமைந்துள்ளதால் தோஷங்கள் நீங்கி சுகம்பெறலாம் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

நவபாஷாண நவகிரகங்களை நிறுவி வழிபட்ட ராமபிரான், அங்கு கடற்கரைக்கு அருகில் தர்ப்பையில் அமர்ந்து தவம் மேற்கொண்டு சமுத்திரராஜனிடம் கடலில் வழிவிடும்படி பிரார்த்தனை செய்து அனுமதி பெற்றபின், பாலம் கட்டுவதற்குத் தகுந்த இடம்தேடி தன் இளவலுடன் தென்திசை நோக்கிச் சென்றவர், "கந்தமாதன பர்வதம்' என்ற சிறிய மலைப்பகுதிக்கு வந்தார். அந்த மலைமீது ஏறிப்பார்த்தார்.

அப்போது இராவணனது அரண்மனை யின் முன்புறவாயில் தென்பட்டது. எனவே அந்த வழியாக இலங்கை செல்வதென்று தீர்மானித்தார். இந்த மலைமீது ஏறி ராமர் பார்த்ததாலும், இலங்கைமீது போர் செய்யும் முடிவை அவர் இங்கு எடுத்தாலும் இந்த மலைமீது ராமர்பாதம் வைத்துக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ராமர்பாதமுள்ள பகுதியிலிருந்து பார்த்தால் ராமேஸ்வரமும் சுற்றியுள்ள கடல் பகுதியும் நன்கு தெரியும். கந்தம் என்ற சொல்லுக்கு சந்தனம் என்று பொருள். பர்வதம் என்றால் மலை. இந்த மலை சந்தன நிறத்தில் காட்சி தருவதால், கந்தமான பர்வதம் என்று பெயர் பெற்றது. இங்கு செல்வதற்கு மலை அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனுமன் கடலைக்கடந்து இலங்கைக்குத் தாவிச்சென்றதும் இங்கிருந்துதான் என்று புராணம் கூறுகிறது.

இறுதியாக வானரப்படைகள் உதவியுடன் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்ற ராமபிரான், இராவணனுடன் போரிட்டு அவனை வதம் செய்து வெற்றி வாகைசூடி சீதையை மீட்டுவந்தார் என்பது இராமாயண நிகழ்வு.

ஸ்ரீராமர் இலங்கை செல்ல திட்டமிட்ட போது வழியில் தென்பட்ட விநாயகர் தலங்களையும் சிவத்தலங்களையும் வழிபட்டு வெற்றிபெற்றார் என்பது புராணச் செய்தி.

நீதி தவறாமல் நேர்மையுடன் ராமபிரான் சென்றதால் வெற்றி கிட்டியது என்றும் புராணம் கூறுகிறது. நேர்வழியில் சென்றால் நாம் எடுக்கும் சுபகாரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும் என்பது ராமகாவியம் கூறும் கருத்துகளில் ஒன்று.

om011122
இதையும் படியுங்கள்
Subscribe