ஸ்ரீராகவேந்திர விஜயம்! 23

/idhalgal/om/sriravendra-visit-23

மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!

இரண்டாம் பாகம்

அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்

தான் அங்கு ஜீவனுடன் பிருந்தா வனம் அடையப்போவதை ஸ்ரீராகவேந்திரர் தன் வதனத்தில் எவ்வித சலனமுமின்றிக் கூறினார். ஆனால் அதைக்கேட்ட அனைவருமே பெருத்த அதிர்ச்சிக் குள்ளானார்கள். லக்ஷ்மி நாராயணன் நொறுங்கிப்போனான். கால்களின் கீழிருந்து பூமி இடம் நகர்ந்ததாய்ப் போனது அவனுக்கு. அடிவயிற்றில் ஏதோவொன்று கிளம்பி நெஞ்சேறித் தொண்டை அடைத் தது. கண்கள் இருள, மயங்கிப்போனான்.

வெங்கண்ணர் அவனைத் தாங்கிப் பிடித்தார். "தப்'பென்ற சப்தம் கேட்டுத் திரும்பிபார்க்க, அங்கு ஏற்கெனவே அப்பண்ணா மூர்ச்சையாகி விழுந்துவிட்டிருந்தார். சூழ்நிலை மாறிப்போனது. ஒவ்வொருவரும் தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள அதிகம் சிரமப்பட்டனர்.

மௌனமாக- அதேசமயம் கலவரமாய் சில நிமிடங்கள் கடந்துசென்றன.

"ராம... ராம... ராம... ராம' என்ற ரீங்காரம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்க, அனைவரும் அத்திசை நோக்க, ஸ்ரீராகவேந்திரரின் அதரங்களிலிருந்து ராம மந்திரம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அவரது நயனங்கள் மூடியிருந்தன. ஸ்ரீராகவேந்திர ரின் தோளில் பலாசதண்டம் சாய்ந்திருக்க, காவி போர்த்திய காவியமாய் நின்றிருந்த அந்தத் தோற்றம் மகோன்னதமாயிருந்தது. அவரைச்சுற்றி ஒரு வெளிச்சவீச்சு இருந்துகொண்டேயிருந்தது. மெல்ல கண்திறந்தவர் வெங்கண்ணரைப் பார்த்து, ""என்ன வெங்கண்ணா... கிளம்புவோமா?'' என்றார்.

""ஸ்வாமி... எங்களால் இந்த நிகழ்வின் தாக்கத்தி லிருந்து மீளவே இயலவில்லை ஸ்வாமி. அதனால்...''

""ம்... அதனால்?''

""அதனால்... தாங்கள் தங்களின்...'' என்று முடிக்காது, தயக்கத்தை மரியாதை நிமித்தம் நீடித்து மௌனமானார்.

""நீ என்னதான் சொல்லவருகிறாய்?''

இடைபுகுந்த அப்பண்ணா, ""ஸ்வாமிகள் என்னை மன்னிக்கவேண்டும். திவான் அவர்கள் மட்டுமல்ல; நாங்கள் அனைவருமே தங்களை வேண்டுவது என்னவெனில், தங்களின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யலாகாதா என்றுதான்...''

""நீங்கள் அனைவரும் சிறுபிள்ளைகளல்ல. எனது சீடர்கள். ஒரு குருவின் மனப்போக்கையும் முடிவினையும் சீடர்களான நீங்கள் மாற்றக் கூறுவதென்பது...'' அப்பண்ணா பதறிப்போனார்.

""மன்னிக்கவேண்டும்... மன்னிக்கவேண்டும் ஸ்வாமி. மறுபடி மறுபடி தங்கள் உறுதிக்கு நாங்கள் குறுக்கீடு செய்வதாக எண்ண வேண்டாம் என்பதே பணிவான வேண்டுகோள். எங்களால் நீங்கள் இல்லாத வெற்றிடத்தை கற்பனைக் கும்கூட நினைத்துப்பார்க்க இயல வில்லை'' என்று கூறியவரின் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கிக் கொண்டேயிருந்தது. ""எங்களுக்கு இனி யாரிருப்பார்கள் ஸ்வாமி'' என்றவர் விம்மத் தொடங்கினார்.

ஸ்ரீராகவேந்திரர் சட்டென்று நின்று, ""ஒவ்வொரு பொழுதும் நான் இதுபற்றிச் சொல்வதும், நீங்கள் திரும்பத்திரும்ப மறுதலிப்பதும் வாடிக்கையாகி விட்டது- வேடிக்கையாகிவிட்டது அல்லவா?'' என்றார்.

""இல்லையில்லை. உங்கள் மனதை வேதனைப் படுத்தும் எண்ணத்தில் இல்லை ஐயனே'' என்றார் அப்பண்ணா. கண்களில் கண்ணீருடன் கைகூப்பி நடுங்கினார்.

""பிறகு... "நான் இல்லாத வெற்றிடத்தை' என்ற வார்த்தையிலுள்ள அவநம்பிக்கையினை நீங்கள் அனைவரும் உணர்ந்துதான் பேசுகிறீர்களா? என் நாமம் உச்சரித்த திவான் வெங்கண்ணர் லிகிதம் படித்ததெப்படி என்ற நிகழ்வை உணர்ச்சிப்பூர்வ மாகப் பெருமிதப்பட்டதெல்லாம் தற்காலிக நம்பிக் கையோ?

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியான அந்த மூலராமனை வணங்கும் நான், அவர் வாழ்ந்துகாட்டிய சத்தியத்தையும் தர்மத்தையும் பின்பற்றுவதுதானே வழிபாட்டின் உத்தமம். இதுதானே வாழ்வியலில் நேர்மையான தர்மம்? அந்த ராமனே விதியை யும் தன் வாழ்நாளினையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டவர்தானே. தான் ஸ்ரீஹரியின் அவதார மென்பதைக் காட்டிக்கொள்ளாது வாழ்ந்து, தனது திருஅவதாரத்தை முடித்துக்கொண்டவர்தானே. அவருக்கே இப்படியெனில் நாம் எம்மாத்திரம்?

நான் உங்களைவிட்டு நிரந்தரமாய்ப் பிரியப் போவதில்லை என்ற நம்பிக்கையினை உள்ளுள் நிரந்தரமாக்குங்கள். பிருந்தாவனம் எ

நான் உங்களைவிட்டு நிரந்தரமாய்ப் பிரியப் போவதில்லை என்ற நம்பிக்கையினை உள்ளுள் நிரந்தரமாக்குங்கள். பிருந்தாவனம் என்பது உங்களுக்கும் எனக்குமிடையிலான ஒரு கல்திரை. வெறும் சுவர்தான் நடுவில். சுவருக்கு அருகே, அப்பால் மட்டுமே நீங்கள் இருக்கிறீர்கள். ம்... இருக்கப்போகிறீர்கள். நான் மற்றொரு பக்கம் இருக்கப்போகிறேன். அவ்வளவே. நெடுங்காலம் நான் உள்ளிருந்து தவமியற்றிவருவேன். உங்கள் சாயலில் வரும் அனைவரும் என்னிடம் வைக்கும் கோரிக்கைகளை- நியாயமான வேண்டுதல்களை- அது எவ்வளவு பெரிதாய் இருப்பினும் என் மூலராமன் திருவருளால் தீர்த்துவைப்பேன். நான் எவரையும் வருத்தப்படவும் வறுத்தியும் இந்த பிருந்தாவனம் எய்த விரும்பவில்லை. பரிபூரண, நிர்மலமான, தடையில்லாத, எவ்வித எதிர்ப்புமில்லாத நிலையே நியாயமென்ற என் ராமனின் எண்ணத்தின் போக்கிலேயே என் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் எனது பூர்வாஸ்ரமத் தொடர்பினையும், பூர்வாஸ்ரம பந்துக்களின் எண்ண ஓட்டத்தினையும் கருத்திற்கொண்டே, அனைவரின் நிலைப்பாட்டினையும் நடுநிலைத் தன்மையோடு, எனது முடிவின் நியாயத்தன்மையினை அவர்கள் முன்னும் வைத்துள்ளேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.''

லக்ஷ்மி நாராயணனையும், அப்பண்ணா வையும் தவிர்த்து மற்றவர்கள் ஓரளவு ஸ்வாமிகளின் விளக்கத்திற்குப்பிறகு மீண்டனர்.

சில நிமிடமே இடைவெளி மௌனம் நிலவியது.

ஸ்வாமிகள் உடன் தொடர்ந்து பேசலானார்.

""வெங்கண்ணரே... நான் எனது குல தெய்வமான வேங்கடேசப் பெருமாளுக்குக் கோவில் எழுப்ப வேண்டியுள்ளது. சற்றே உயரமான இடம்தேடி நிர்மாணம் செய்ய எண்ணம் கொண்டுள்ளேன். நதியின் வலப்பக்கம் இங்கிருந்து பார்க்கையிலேயே நல்ல உயரமாக இருக்கிறது. பல ஆண்டுகளானா லும், குடில்கள் நிறைய தோன்றினா லும் உயரே இருக்கும் திருக்கோவி லுக்கு நெருக்கடி இருக்காது. மேலும் ஏழுமலையெனும் உயரத்தில் இருக்கும் எம்பெருமானுக்கு சிறிது உயரத்திலேனும் கோவில் எழுப்புவதுதானே முறை?''

""ஆம் சுவாமி. உங்கள் தொலைநோக்குப் பார்வை பிரம்மிப்பூட்டுகிறது ஸ்வாமி. மிகப் பெரிய கற்றளியாய் உருவாக்கலாமல்லவா?''

""முடிந்தவரை, மூலவரைச் சுற்றிலும் முயற்சிக்கலாமென்று எண்ணம் கொண்டா லும் காலநேர அவகாசத்தைக் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. எனவே நல்ல சுற்றுச் சுவருடன் ஆலயம் எழுப்பினால் போதுமானது.''

""அப்படியே செய்கிறேன் ஸ்வாமி'' என்றார் வெங்கண்ணர்.

ஸ்வாமிகள் அடிக்கடி தன்னுள் ஆழ்ந்து போகலானார். இருப்பினும் அவரது தினசரிப் பணிகள் ஏதும் மாற்றமேயில்லாது, தொய்வில் லாது நடைபெறலாயிற்று. பாடம் எடுப்பதும், அருளுரை கூறுவதும் மிகமிகச் சிறப்பாக நடைபெறலாயிற்று.

ஒருமுறை நதி கடந்து அக்கரைப் பயணம் மேற்கொண்டார். மணல்வெளி தகிக்கத் தொடங்கியது. ஸ்வாமிகள் அந்த தகிப்பை ஏற்றுக்கொண்டார். அவரது பாதச்சூட்டில், அந்த உஷ்ணம் அவர் உள்ளங்காலின் அடியில் ஏறத்துவங்க, ஸ்வாமிகள் தனது உடன் வந்த சீடர்கள் வெறுங்காலுடன் இருப்பதை யுணர்ந்து கவலையானார். நதியின் ஈரப்பகுதி ஓரமாக நடந்து, அங்கிருந்த ஒற்றையடிப் பாதையினைத் தேர்ந்தெடுத்து நடக்கலானார்.

rr

அருகிலிருந்த பெரிய மரநிழலில் தன்னுடன் சேர்ந்து அவர்களையும் ஓய்வெடுக்கப் பணித்தார். அனைவரும் தாகம் தணித்துக் கொண்டனர். அப்பண்ணா மெல்ல ஸ்வாமி களை அணுகினார்.

""ஸ்வாமி, தாங்கள் இப்போது எங்குசெல்ல திருவுளம் கொண்டீர்கள் என அடியேன் அறியலாமா?''

""ஏன் அப்பண்ணா? தெரிந்து கொண்டால்தான் வருவாயா?'' என்றவர் மனம்கனிந்து சிரித்தார்.

""ஆஹா! மன்னிக்கவேண்டும் ஸ்வாமி. தூரம் அதிகமானால் காலம் கருதி தங்கள் உணவுக்கான ஏற்பாட் டிற்கு என்ன செய்வதென்ற பதட்டத்தில்...''

""இல்லை அப்பண்ணா. உனது பதட்டம் என் பொருட்டென்று எனக்குப் புரியாமலில்லை. நான், பதட்டமான உன் அன்பை ரசிக்கவே செய்கிறேன்.''

அப்பண்ணா சங்கோஜமானார். அவரது அந்த முகத்தோற்றம் கண்டு மற்றவர்களுக்கும் மன இறுக்கம் குறைய, அனைவர் முகத்திலும் புன்னகை பூத்தது.

""அஞ்சனைமைந்தன் குரல் இங்கு வெகு அருகில் கேட்பதாகத் தோன்றுகிறது. அந்த குரலை நோக்கிதான் நமது பயணம்.''

""நிச்சயமாக எனக்குப் புரியவில்லை.''

""எனக்கு உள்ளுள் ராமநாம ஜெபம் கேட்கிறது. இந்த கலியுகத்தில் அனுமனைத் தவிர ஸ்ரீராமநாமத்தை எப்பொழுதும் உச்சரிக்கக் கூடியவர் யாராக இருக்கமுடியும்? சமீபத்தில் தான் என் செவிக்கு அந்த குரலின் வாசனையை உணரமுடிந்தது. உங்கள் யாருக்கும் கேட்க வில்லையா?''

""இல்லை ஸ்வாமிகளே!'' என்றனர் அனைவரும்.

ஸ்வாமிகள் சில நொடி கண்மூடித் திறந்தார்.

அவரின் நடை வடக்கு நோக்கிச் செல்ல, மற்றவர் களும் தொடர்ந்தனர். வெகுநேரத்திற்குப்பிறகு ஸ்வாமிகள் ஒரு பெரும் மரக்கூட்டம் சூழ்ந்த பிரதேசம் அருகே நின்றார். உடன் பரவசமானார்.

"ஆஹா... ஆஹா...' என்று பரவசப்பட் டார். அங்கு மரங்கள் முழுக்க நிறைய குரங்குகள் கூட்டங்கூட்டமாக கிளைகளில் உட்கார்ந்திருந்தன. ஸ்வாமிகள் மெல்ல முன்னேறத் தொடங்கினார். அடர்ந்திருந்த மரங்களுக்குக்கீழே பெரும் இருள் இருந்ததனால், அவசர அவசரமாய் தீவட்டி ஏற்ற ஒரு சீடர் முனைந் தார். ஸ்ரீராகவேந்திரர் அவரை உடனடியாகத் தடுத்தார்.

""வேண்டாமப்பா... மந்திகள் தீகண்டு கலவரமாகும்'' என்றார்.

அந்த சிறுவிளக்கொளியில் இருளில் நடக்க நடக்க முன்பக்கம் மெல்ல மெல்ல புலனாயிற்று. அது அழகிய பெருங்குகை. ஒன்றையொன்று தாங்கிக்கொண்டும் முட்டுக்கொடுத்தும் இயற்கை பெரும்பாறைகளைக் கொண்டு அந்தக் குகையினை உருவாக்கியிருந்தது. நீண்ட மேடை இருந்தது. அந்த கல்மேடையில்- இயற்கை யாகவே படுக்கை தோற்றத்திலிருந்த அதில், முன் பகுதியும் இறுதிப்பகுதியும் சற்றே தேய்ந்திருந் தது. ஸ்ரீராகவேந்திரர் அந்த கல்படுக்கையைத் தொடலானார். அதை ஸ்பரிசித்வுடனேயே சட்டென்று பரவசமானர். "ராமா... ராமா... ஸ்ரீராமா' என்று பரவசத்துடன் உச்சரிக்க, அவரின் கருணா நயனத்தில் சிறுதுளி கண்ணீர் புரண்டெழுந்தது.

""சீடர்களே... நீங்கள் அனைவருமே பெரும் பாக்கியசாலிகள். இங்கு கலியுக சிரஞ்ஜீவியான ஸ்ரீஆஞ்சனேயப் பிரபு ஸ்ரீராமஜெபத்தில் தன்னைமறந்து தவமிருக்கிறார். இங்கு அவர் உலவிக்கொண்டிருக்கிறார். எப்பேற்பட்ட திருவிடத்தில் நாமிருக்கிறோம் என்று நினைக் கையில் மனம் பேருவகையில் நிரம்புகிறது. நான் அடிக்கடி இனி இவ்விடம் வந்து ஐயனு டன் நானும் தவம் மேற்கொள்ள எண்ணம் வந்துள்ளது. நிறைய பழங்கள் கொண்டுவாருங் கள். முதலில் இவ்விடத்தைத் தூய்மைசெய்து தூபதீபம் காட்டி, ராமதூதனுக்குப் பழங்களைப் படைப்போம்.''

ஸ்ரீராயரின் ஆணையை சிரமேற்கொண்டு அனைவரும் குகையின் உட்புறமும், குகையின் உட்புற மேற்கூரையையும் சுத்தம் செய்யலானார்கள்.

ஸ்ரீராகவேந்திரர் கணதாளம் வந்திருப்பது அங்கு வசிப்போருக்குத் தெரிந்தவுடன், பெருத்த ஆவலுடன் அங்கே கூடத்தொடங்கி னர். குகையில் ஸ்ரீஆஞ்சனேயரின் வாசமிருப்பதை ஸ்ரீராயர் உணர்த்தி யதைக் கேள்வியுற்று பெருத்த சந்தோஷப்பட்டனர். குகைக்கு வெளிப்புறம் அவர்களும் வழியை சீர்செய்யலாயினர். குகை வாயிலை மறைத்துக்கொண்டிருந்த கொடி களையும், துருத்திக்கொண்டிருந்த கிளைகளையும் அகற்றினர். அதற் குள் ஒருசிலர் எங்கிருந்தோ தோரணங்களை உருவாக்கி அழகுற ஆங்காங்கே தொங்கச் செய்தனர். குகையின் பின்பக்கம் துங்கையின் நீர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்ணுற்று, குடங்களிலும் பானைகளிலும் முகர்ந்துவந்து பாதை முழுக்கத் தெளித்துப் பெருக்கி, பிறகு அழகிய கோலங்களை வரைந்தனர். சிலமணி நேரங்களிலேயே அவ்விடத்தின் தோற்றம் மாறி, அங்கு பொலிவு கூடியது. தெருக்கூத்துக் கலைஞர்களும் தாசர்களும் வந்துவிட்டனர்.

அனுமன் சாலீஸா மிக இனிமையாகப் பாடப்பட்டது. ராமநாமம் மிகமிக ரம்மியமாக ஜெபிக்கப்பட்டது. ஏதோ மகோன்னதமான ஒரு சூழல் அங்கு சட்டென்று வந்துசேர்ந்தது. அனைவருமே அந்த சூழலில் மெய்ம்மறந்து தங்களை இழந்திருந்தனர். தம்பூரா தந்தியின் ரீங்காரம் காற்றுடன் கைகோர்த்து சுருதி கூட்டி அனைவரையும் மெய்ம்மறக்கச் செய்தது.

குகையினுள் தனலில் சந்தனப்பொடி தூவப் பட்டு வாசனை கூட்டப்பட்டது. சிறுசிறு தீவட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வெளிச் சம் கூட்டப்பட்டது. ஸ்ரீராகவேந்திரர் அந்த நீண்ட பாறையினைத் தொட்டு வணங்கித் திரும்பினார்.

""ஸ்வாமி... தாங்கள் வணங்கிய இப்பாறை யின் அகண்ட வெளி...''

""இந்த கல்மேடைதான் ராமதூதன் உறங்கித் துயிலெழுமிடம் அப்பண்ணா. எங்கெங்கு ராம வாசம் இருக்கிறதோ, எங்கெங்கு ராமசாயல் இருக்கிறதோ அங்கெல்லாம் சாட்சாத் அனுமன் குடிகொள்வார். இந்த மந்த்ராலயத்தின் சிறப்பே, இத்திருவிடத்திற்கு இதிகாசத் தொடர்புள்ளது தான் என்பதைப் புரிந்துகெள்ளவேண்டும். முன்பு நான் காட்டிய இடத்தில்- நான் ஜீவனுடன் பிரவேசம் செய்யும் அந்த இடம் மகாபாரதத்துடன் சம்பந்தப்பட்டது. இதோ இந்த இடம்... அருகில் ஸ்ரீராமபிரானே வந்துசென்றிருப்பதனால், ஐயன் அனுமன் நித்யவாசம் செய்யத் தேர்ந்தெடுத்துத் தவவாசம் செய்கிறார்.

ராமாயணம், மகாபாரதம் என்று இரு இதிகாச சம்பவங்கள் இந்த பூமியில் நடந் தேறி இருப்பதனாலேயே, ஸ்ரீமன் நாராயண மூர்த்தியான என் மூலராமன், தமிழக கும்ப கோணத்திலிருந்து மந்த்ராலயத்தில் என்னைக் கல்லுக்குள் கண்மூடி அமரச்செய்ய திருவுளம் கொண்டுள்ளார் போலுள்ளது அப்பண்ணா'' என்றார்.

""ஸ்வாமிகள் என்னை மன்னிக்கவேண்டும். குருவான தங்களிடம் நான் என் மனதில் எழும் ஒருசில கேள்விகளை நேர்மையுடன் கேட்டுத் தெளிவது எனது கடமையல்லவா ஸ்வாமி?''

""நிச்சயமாக. அதில் மாற்றுக்கருத்தில் லையே.''

""அறம் என்கிற இடத்தில் முரண்களும் இருக்கின்றன.''

""நீ எதைச் சொல்லவருகிறாய்?''

""ராமாயணத்தில் ஸ்ரீராமன் செய்த அறனுக் கெதிரான...''

""ஓ... நீ வாலி வதம் மற்றும் அன்னை சீதா பிராட்டியை நெருப்பிலிறங்கச் சொன்னதைக் கூறவருகிறாயா?''

""இல்லை ஸ்வாமி. ராம பட்டாபிஷேகத்திற்கு முன் ராமர் அளித்த எள் தானம் பற்றி.''

ஸ்ரீராயர் சற்று கண்மூடி யோசித்தவர், ""ஆஹா... நல்லது. நுட்பம்தான் அப்பண்ணா நீ கேட்கவந்தது. வெகு அருமை. எனது சீடன் நீ என்பதில் எனக்கு வெகு பெருமையாய் இருக்கிறது.''

இடைபுகுந்த லக்ஷ்மி நாராயணன், ""ஸ்வாமி கள் கூறுவது ஏதோ மிக அரியதோர் நிகழ்வென் பது மட்டும் விளங்குகிறது. என்னவென்று விளக்கமாய் நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?'' என்றான் பணிவுடன்.

ஸ்வாமிகள் கனிவுடன் அவனை நோக்கினார். அவர் பார்வை முழுவதுமாக மேவியது.

""நல்லது. இருப்பினும் அப்பண்ணா கூறட்டும் அந்த நிகழ்வை. முடிவில் அது முரணல்ல எனவும், அதன் காரணத்தையும் கூறுகிறேன். சொல் அப்பண்ணா'' என்றார் ஸ்ரீராயர்.

""தங்கள் அனுமதியுடன்'' என்று ஆரம்பித்த வர், ""ஸ்ரீராமர் வனவாசம் முடிந்து அயோத்தி வந்ததும், பட்டாபிஷேகத்திற்குமுன் குலகுரு வசிஷ்டர், "ராமா, நீ போர் தர்மத்தை மீறாது போரிட்டாலும், அந்த ராட்சஷ குலத்தினை அழித்து வென்றாலும், இராவணன் பிறப் பால் பிராமணன் என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் உனக்குள்ளது. அதை நீ தீர்த்தாலன்றி முடிசூட்டலாகாது' என்றார்.

"அதற்கு என்ன வழி' என்று வினவ, "நீ எள் தானமளிக்க வேண்டும். நீ தரும் பொன்னையும் பொருளையும் ஏற்று, எள் தானமும் பெற்றுத் தனது புண்ணியங்களை உனக்களிக்க முன்வரும் பிராமணன்மூலமாக உன் பிரம்மஹத்தி விலகும்' என்றார். அப்படி யாரும் தானம் ஏற்க முன்வரவில்லை- ஒருவரைத் தவிர. காரணம் அவரது வறுமை. பேராசைகொண்ட அவரது மனைவி அவரை வற்புறுத்தி அனுப்ப முயற்சித் தாள்.

"பெண்ணே, தானம் பெறும்போது எனது புண்ணியம் ராமனுக்குச் சென்றுவிடும். அதன் பின் தானம்பெற்று என்ன பயன்?' என்றார்.

"நீங்கள் தானம் பெறுகையில் ஸ்ரீராமனது கருணை சொட்டும் விழிகளைக் கண்டவுட னேயே புண்ணியங்கள் உங்களை வந்தடைந்து விடுமே? எனவே எள் தானம் பெறும்போது மறவாது ராமனின் கண்களையே பார்த்துக் கொண்டிருங்கள்' என்றாள்.

தானம் பெற அந்த பிராமணர் முன்வந்தது அரண்மனைக்குத் தெரிவிக்கப்பட்து. எவரும் வராதபோது இவர் முன்வந்தது வசிஷ்டரை யோசிக்கவைத்தது. விஷயம் என்வென்ப தைத் தனது ஞானதிருஷ்டியில் உணர்ந்து கொண்டார். அபரிதமான சொர்ணங்களையும் பொருளையும் அவருக்கு தானமாகக் கொடுக் கும்போது ஸ்ரீராமனது கண்களை துணி கொண்டு கட்டிவிட்டார். எள் தானம் பெற்ற பிராமணர் ஸ்ரீராமனின் விழி தரிசனம் கிடைக் காது ஏமாந்து திரும்பினார்'' என்று கூறிமுடித்த அப்பண்ணா...

""ஸ்வாமி, இதிகாச புருஷனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஸ்ரீமன் நாராயணனது அவதாரம். ஆண்டவனேயானாலும் அவர் செய்த தந்திரம் தவறல்லவா? தர்மத்தின் மொத்த உருவமான அவர் செய்த இந்த தந்திரம் பெரும் முரணல்லவா. அந்த ஏழை பிராமணர் ஏமாற்றப்பட்டது அதர்மமல்லவா. இந்த நிகழ்வு என் மனதை விட்டகலாத பெரிய துயரம் ஸ்வாமி. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் நான் எதிர்பாராத ஒன்று. கொடுத்த வாக்கை மீறாது, தர்மம் தவறாது வாழ்ந்துகாட்டிய இஷ்வாகு குலதிலகனின் கரும்புள்ளியல்லவா இது என எண்ணத் தோன்றுகிறது ஸ்வாமி'' என்று முடித்தார்.

கூடியிருந்த சீடர்கள் மட்டு மல்லாது, ஊர் முக்கியஸ்தர்களும் இப்போது அங்கிருந்தனர். "ராம் ராம்' என்ற இனிய நாமம் காற்றில் பரவியிருந்தது. ஸ்வாமிகள் என்ன கூறப்போகிறார் என்பதனையும், இதுவரை ராமாயணத்தில் நாம் கேட்டறியா அரிய நிகழ்வையல்லவா நாம் கேட்டிருக்கி றோம். இதில் ஸ்ரீராகவேந்திரர் என்ன நியாயம் எடுத்துவைக்கப்போகிறார் என்பதையும் கேட்கக் கூடியிருந்தோர் மூச்சுவிடவும் மறந்து அமைதிகாத்தனர். மரத்தின் இலைகள் உரசும் சத்தமும், மந்திகள் மரத்தில் அமர்ந்துகொண்டு எழுப்பிய சத்தமும் தவிர, அங்கு ஆழ்ந்த அமைதி நிலவியது.

""உனது மென்மையான மனது அந்த பிராமணருக்கு நீதி கிடைக்காது போனதே என பரிதவிக்கிறது. உனது வெகுகால விசனம் இதென்று எனக்குப் புரிகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் ஒளிவுமறைவென்பதே இல்லை. அதேபோன்று வேதங்களில் இல்லாத விளக்கமேயில்லை. அது தன்னைத்தானே கேள்வி கேட்பதாய், வாதத்தின் சார்பாக கேள்விகள் அனைத் தையும் எழுப்பி, துல்லியமான அனைத்து பதில்களையும் நமக்குக் கொடுத்திருக்கிறது. புரிந்துகொள்ளும் பக்குவத்தில் மனதை என்றும் தயாராய் வைத்திருந்தால் பதிலும் பதிந்துவிடும்.

சகல கல்யாண குணங்களையும் நிறைந்து பெற்றவர் ஸ்ரீராமன். அவர் புன்னகைத்தால் போதும்; புரண்ட பூமியும் நிமிர்ந்துவிடும். ஸ்ரீராமனின் கால்பட்ட கல்லானது அகலிகையானபோது. அவர் கைப்பட்ட தானம் அந்த பிராமணருக்கு சொர்க்கத்தையே அல்லவா கொடுத்திருக்கும்? ஏன்- அதற்கும் மேலாக பிறப்பற்ற புண்ணியத்தையல்லவா அவர் பெற்று உயர்நிலை அடைந்திருப்பார் என்பதனை நீ ஏன் புரிந்துகொள்ளவில்லை அப்பண்ணா?' 'என்றார்.

""ஆஹா! ஸ்வாமி! எவ்வளவு ஸ்பஸ்டமான விளக்கம். தூய ராம பக்தியினால் தாங்களளித்த சத்திய விளக்கம், இத்தனை ஆண்டுகள் எப்படி எனக்குப் புரியாமல்போனது!

முரணாய்த் தெரிந்ததை அறண் என்று காண்பித்த எம் குருவே... இந்த சூட்சும விளக்கத்தை உங்களைத் தவிர வேறுயாராலும் விளக்கிட இயலாது. நன்றி ஸ்வாமிகளே. ஓம் ஸ்ரீராகவேந்தி ராய நமஹ... ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ...'' என்றுகூறி சாஷ்டாங்கமாக ஸ்ரீராகவேந்திரர் பாதம் பணிந்தார்.

"ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ...' என்ற கோஷம் குகை முழுக்க ஒலித்ததை, வெளியில் திரண்டிருந்த ஜனங்களும் கேட்டு உற்சாகமா னார்கள். அதனூடே ஒரு தீர்க்கமான உச்சபட்ச உறுமல் குரலை ஸ்ரீராகவேந்திரர் உணர்ந்தார். குகைக்குள் அண்ணாந்து பார்த்து, அவருக்கு மட்டுமே கேட்ட அந்த உறுமல் சாட்சாத் அந்த அனுமனுக்குச் சொந்தமானது என்பதை யுணர்ந்து கை உயர்த்தி வணங்கினார். மெல்ல கண்மூடி ஸ்ரீராமநாமத்தை ஜெபிக்கத் தொடங்கி னார்.

தனது பூர்வாஸ்ரம தந்தை தன் கண்முன்பாக அமர்ந்து இதிகாசம் போதிப்பதும், தவறாகப் புரிந்துகொண்டவற்றை நீக்கி விளக்கியதை மக்கள் ஆமோதிப்பதும், ஆரவாரம் செய்வதும், அதைத் தான் அருகிலிருந்து காண்பதும் எப்பேற்பட்ட கொடுப்பினை! ஆனால் அது இன்னும் சொற்ப காலம் என்ற நிதர்சனம் உணர்ந்தபோது, தாளாத துயரமும் துக்கமும் மேலோங்க, லக்ஷ்மி நாராயணன் குகையின் ஓரமாக இருளில் நின்றிருந்து கண்ணீர் பொங்க ஸ்ரீராகவேந்திரரைக் கையெடுத்துத் தொழுதான்.

"என் தெய்வமே... என் தந்தையே...' என்று துயர் தாங்காது விம்மி அழலானான்.

(தொடரும்)

om010120
இதையும் படியுங்கள்
Subscribe