ஸ்ரீராகவேந்திர விஜயம் 26 - அரக்கோணம் கோ.வீ.சுரேஷ்

/idhalgal/om/sriragavendra-visit-26-arakkonam-gv-suresh

ஸ்ரீமடத்தில் மூலராமர் பூஜையைக் காண திரளாய்க் கூட்டம் ததும்பியிருந்தது. இன்னும் எத்தனை நாள்வரை நமது ராகவேந்திரரை நிஜரூபமாய் தரிசிக்கமுடியுமென்ற ஆதங்கத்தால் பலர் தினம் தினம் அவரை மறுபடிமறுபடி கண்ணாரக் காணவந்தனர்.

அவரது மதுரமான குரலில் "ராமா' என்ற உச்சரிப்பையும், அர்ச்சனைகளையும், அறிவுரை களையும், உபன்யாசங்களையும் இன்னும் எத்தனை நாட்கள் கேட்கப்போகிறோமோ என்னும் பெருங்கவலை அனைவரிடமும் இருந்தது. "அவருக்குப்பின்' என்ற வார்த்தையைக்கூட யோசித்து நடுநடுங்கி நிலைகுலைந்தவர் அநேகம்...

அந்த பீடத்தில் அவரைத்தவிர வேறெவரையும் கற்பனை செய்யக்கூட யாரும் நினைக்கவில்லை. அன்று ஸ்ரீமூலராமர் பூஜையில் லக்ஷ்மி நாராயணனும் தனது பங்களிப்பை செலுத்தவேண்டிய சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. மிகமிக முனைப்புடனும் பெரும் ஆத்ம திருப்தியுடனும் ஸ்ரீராமனுக்கு மனதுள் நன்றி கூறிக்கொண்டவன், தனது பூஸ்வாஸ்ரம தந்தையின் அண்மையை அன்று பக்தியாய் ஏற்று, அவரையே ஆராதித்துப் பூஜித்துக்கொண்டிருந்தான். ஸ்ரீராயரின் திருக்கரங்களின் தேவையை நன்கறிந்து, அபிஷேக நீர் நிரம்பிய செம்புகளை அவரிடம் கொடுத்தான். ஸ்ரீராமனையும், பத்தினி சீதா பிராட்டியினையும் இளவல் லட்சுமணனையும், ஜெயராமனையும் நீரால் அபிஷேகித்து, அந்த செம்புகள் வெற்றாய் ராயரின் திருக்கரத்திலிருந்து லக்ஷ்மிநாராயணன் கை களுக்கு வந்தவுடனேயே, மறுபடி பெரும் பாத்திரங்களிலிருந்து நீர் முகந்து இடையறாது கொடுத்துக் கொண்டேயிருந்தான். அபிஷேகங் கள் முடிந்து, பல வண்ண வாசமலர் களாலாலும் துளசி தளங்கள் கொண்டும் அலங்கரிக்கப்பட்டு, தூப தீபம் காட்டப்பட்டு நேர்த்தி யாய் பூஜை முடிந்தது.

ஸ்ரீராகவேந்திரரின் திருக்கரம், அகன்ற செப்புப் பாத்திரம் முழுக்க நிரப்பிவைக்கப்பட்டிருந்த மந்த்ராட்சதையினை எடுத்தெடுத்து பக்தர்களுக்கு ஆசிர்வதித்துக் கொடுத்துக்கொண்டேயிருந்தது. "ஸ்ரீராமா ஸ்ரீராமா' என்று அந்த புராண புருஷனின் நாமத்தை, இந்த கலியுக புருஷரான ஸ்ரீராயர் உச்சரித்துக்கொண்டேயிருந்தார். அட்சதை பெற்றுக்கொண்டவர்கள் அனைவரும் தத்தமது சிரஸில் தரித்துக்கொண்டு, சிறிது இடைவெளிவிட்டு ஸ்ரீராகவேந்திர ரின் முன்பாக வரிசையாக அமர்ந்து கொண்டனர். சமீபநாட்களில் ஸ்ரீராகவேந்திரர் நல்லுபதேசங் களை போதிப்பதை வழக்கமாக்கி கொண்டார். ஸ்ரீராமனையே பிரதானப்படுத்தி, அவரின் அத்தனை கல்யாண குணங்களையும் கூறி, அவர் யுகத்திற்கு போதித்த நீதியையும் தர்மத்தையும் மானுடர்கள் எவ்வாறெல்லாம் வாழ்வினில் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், அதனால் எவ்வாறெல்லாம் அவர் கள் நலன்பெறுவார்கள் எனவும் போதிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.

அன்று லக்ஷ்மிநாராயணன் ஸ்வாமிகளின் முன்பாக விழுந்து நமஸ்கரித்துக் கொண்டவன், பணிந்து நின்றான். பிறகு, ""ஸ்வாமி! இந்த சிறுவனுக்கு ராமம் பற்றி சிறு தெளிவுவேண்டும் ஐயனே!'' என்றான். கேள்வி என்பது பிரதானமாயிருப்பினும், தனது கேள்வியி னால் ஸ்ரீராயரின் பிரியமான அருளுரையை அருகிலிருந்து கேட்கும் ஆவலே அதில் அதிகமிருந் தது. அதில் மறைந்திருக்கும் சுயநலம் பவித்ரமான ஒன்று. ஸ்வாமிகள் மெலிதாய்ப் புன்னகைத்தார்.

""நல்லது குழந்தாய். ராமம் என்பது ஒரு பெரும் சாகரம். அதில் மூழ்கி முத்தெடுப்பது சுவாரசியம். அதுவொரு சுகந்தம். நுகரநுகர சுவாசம் முழுக்க வெவ்வேறான வாசனை வந்து பிரம்மிப்பூட்டும். அதுவொரு வேதம். படிக்கப் படிக்க முடிவேயில்லாத நூல். அது கடல்வெளி மணல் போன்றது.

எண்ணிக்கொண்டே இருக்க வேண்டிய முடிவில்லாத கணிதம். அது பெரிய பர்வதம். வெட்டிக் கரைக்கவியலாத வளர்ந்துகொண்டேயிருக்கும் பர்வதம். இப்படி சிலாகித்துக்கொண்டே இருக்கலாம். அண்டம் கடந்துபோகும் விஸ்வரூபம். கடவுளான அந்த அவதாரம் மனிதப் பிறப்பெடுத்ததனால் இப்பூவுலக நியதிக்குக் கட்டுப்பட்டு, சத்தியத்தையும் நேர்மையையும் நிலைநாட்டி, தான் கடவுள் என எங்கும் காட்டாது அமைதியாய் வாழ்ந்துகாட்டிய விஸ்வம்.''

ஸ்ரீராகவேந்திரர் க

ஸ்ரீராகவேந்திரர் கண்கள் யோகநிலையில் மெல்ல மூடின. அவரது திருவாய் மட்டும் அவரின் இதயத்தில் வீற்றிருக்கும் அந்த ப்ரியராமனைப் பற்றிய பெருமைகளை உச்சரித்துக்கொண்டேயிருந்தன- தன்னிச்சை யாக. அன்று மதியம் நெருங்கும் வேளையில் ஸ்ரீராமரின் அருமை பெருமைகளைக் கேட்கும் ஆவலில் ஸ்ரீமடம் இறங்கிய சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால், காவியச் சூரியனை பற்றி விவரிக்கும் ஒரு காவிச்சூரியனாக, ஸ்ரீராகவேந்திரர் அங்கு சூழ்ந்திருக்கும் மக்களின் கண்களுக்குத் தகதகத்து ஒளிர்ந்தார். அங்கு பக்திகொண்டோர் அனைவரும் அவரைக் கைகூப்பி வணங்கிய வண்ணம் அவரிடம் ஒன்றிவிட்டனர். தனது உபாசனா மூர்த்தியிடம் ஒன்றிவிட்ட ஸ்ரீராயரும், தன்னுள் விரியும் அந்த காவியக் காட்சிகளை மக்களின் மனக் கண்ணுள் கொண்டுவந்தார்.

அப்பண்ணா மிகவும் களைத்திருந்தார்; இளைத்திருந்தார். தூக்கமிழந்த கண்கள் சிவந்திருந்தன. நீண்ட பயணத்தால் தேகம் பலவீனமடைந்திருந்தது. உடலும் உடையும் அழுக்கேறியிருந்தன. கண்கள் லேசாய் வீக்கம் கண்டிருந்தன. அதோ, அந்த பிரதான ரஸ்தா ஓரம் கல்லால் சமைந்த சிறு தங்குமிடம் வழிப்போக்கர்களுக்காகவே அரசின் கருணை யால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அப்பண்ணா வால் மேற்கொண்டு நடக்கவியலாது போயிற்று. மெல்ல முன்னேறி அங்கு நுழைவாசல் அருகேயே இருந்த கல்திண்ணையில் மயங்கிச் சரிந்தார். நா வறண்டிருந்தது. தாகத்திற்கு அருந்த குவளை நீர் கிடைத்தால் சற்று இளைப்பாற ஏதுவாக இருக்குமென மெல்ல புரண்டு படுத்தவர், உள்ளேயிருந்து தடியூன்றியபடி இறங்கிய அந்தப் பெண்மணியைக் கண்டதும், "ஆ... சீதையம்மை... அவர் எப்படி இங்கே...' என நினைத்துக்கொண்டிருக்கையிலேயே நினைவு தப்பியது அப்பண்ணாவுக்கு...

முகத்தில் சில்லென்ற காற்று இதமாய்ப்படர அப்பண்ணாவுக்கு விழிப்பு வந்தது. எதிரில் கண்கலங்கி கைகூப்பியபடி நின்றிருந்த சீதையம்மையை ஆச்சரியமாகப் பார்த்தவர் எழுந்தமர சிரமப்பட, அங்கிருந்த வேலையாள் முதுகினில் கைதாங்கி உதவினார்.

""நான் மறுபடி உன்னைத் திரும்ப வெகு சிக்கிரம் பார்ப்பது ஆச்சரியமாயிருக்கின்றது சீதம்மை'' என்றார் மெல்லிய புன்னகையோடு. அதில் மிகுந்த பலவீனம் இருந்தது.

""ராயர் காரியமாய் நீங்கள் செல்கின்ற- செய்கின்ற பணிக்கு நாங்கள் எம்மாத்திரம் ஸ்வாமி.''

""கல்லூர் வந்த காரணம்?''

""தாங்கள் மறந்துவிட்டீர்கள் போலுள் ளது. எனது உறவினர்கள் சித்தூர் தாண்டி யும் இருப்பதை நான் தங்களுக்கு தெரிவித்திருந் தேனே. எனது அத்தனை உடன்பிறப்பு களையும்- எனது மகன்கள் உட்பட அனை வரையும் வெவ்வேறு திசைகளுக்கும் ராயரின் பிருந்தாவனப் பிரவேச நிகழ்வுபற்றி எடுத்துக் கூற அனுப்பிவைத்துள்ளேன். கல்லூர் முழுக்க எனது கணவரின் உறவினர்களும் எனது சிநேகிதிகளும் அநேகம் பேர் உள்ளனர்.

நானே நேரில் சென்று பலருக்கும் செய்தி சொல்லவேண்டியுள்ளது. அடுத்து மான்விக் குச் செல்லவும் யோசித்திருக்கிறேன். சற்று முன்னர்தான் நீர் அருந்தி ஓய்வுபெற சத்திரம் வந்தது நல்லதாகப்போயிற்று அப்பண்ணா அவர்களே.''

""நல்லதம்மா. எனது பணியை எளிதாக்கியதற்கு நன்றி. எல்லாம்வல்ல ஜகத்குரு ஸ்ரீராகவேந்திரரின் திருப்பணிக்கு வாய்ப்பென்பது அவர் மனது வைத்தாலன்றி நடவாது. நீங்கள் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம்தான் உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.''

""அது தங்களைப் போன்ற புண்ணிய ஆத்மாவின் ஆசிகள் சுவாமி. எனக்கு கண்கண்ட தெய்வம் நீங்கள்தான் என்பது...''

rra

""தவறு தாயே. எல்லாம்வல்ல மகா மகிமைவாய்ந்த எனது குரு ஸ்ரீராகவேந்திரர் ஒருவரே நமக்கெல்லாம் தெய்வமம்மா. பூவுலகில் சத்தியங்களுக்குக் கீர்த்தி குறைந்து, நியாய தர்மங்கள் சாய்க்கப்பட்டு, நீதி மறைக் கப்பட்டு, அநியாயங்கள் தலைதூக்கும் பொழுதில், அட்டூழியங்கள் பெருகும்போதில் ஆண்டவன் அவதாரம் எடுக்காதபோது, இப்படிப்பட்ட மகான்களை அந்த ஸ்ரீமன் நாராயணனே அவதரிக்கச் செய்கிறான். அப் பேற்பட்ட அற்புத மகான் நமது ராகவேந்திரர் தாயே. அவர்பொருட்டு இந்த முனைப்பு, அவர் பொருட்டு இந்த பிரயாசை. அதற்கு நமக்கு பாக்கியம் இருக்கின்றதென்பதே அற்புத வரம்.''

""நல்லது ஐயா. தாங்கள் இங்கு நன்கு ஓய்வெடுத்துக்கொண்டு பிறகு செல்லுங்கள். நான்வந்த மாட்டுவண்டியில் பூட்டிய மாடுகளுக்கும் நீரும் பசும் புல்லும் கிடைத் திருக்கும். இந்நேரம் வண்டி தயாராகியிருக்கும். நான் விடைபெறுகிறேன்.''

""நல்லதம்மா. நான் இனி வேறு திசையைத் தேர்ந்தெடுக்கிறேன். நான் திரும்பிவரும்போது ஸ்ரீமடத்தில் உங்களை சந்திப்பேன் என்று நினைக்கிறேன். சென்று வா தாயே. எனது குரு ராகவேந்திரர் என்றும் உங்களுக்குத் துணை நிற்பார்'' என்று அப்பண்ணா சீதம்மையை வாழ்த்தி அனுப்பிவைத்தார்.

""விரதத்திலும் யக்ஞங்களிலும் ஆராதிக்கப்படுபவன் ஆண்டவன். தெய்வம் ஒவ்வொரு அவதாரத்தையும் இவ்வுலகைக் காக்கும் பொருட்டு அதை விரதமாய் ஏற்கின் றது. அப்படி அனுஷ்டித்ததில் பவித்ரமானது அதிதி காலத்தில் வாமனனாக ஏற்ற உயர்ந்த விரதம். தன்னைச் சுமந்த கருவை மறவாதவன் அந்த மாதவன். எனவே அதிதியை தேவகியாகப் பிறக்கவைத்து அவள் கர்ப்பத்தில் கிருஷ்ணனா னான். எவ்வளவு காருண்யம் மிகுந்தவன் அந்த ஸ்ரீமன் நாராயணன் பாருங்கள். அவனே கௌசல்யாவின் ராமனானான். வாமனம், கிருஷ்ணம், ராமம் என்று அவனது ஒவ்வொரு திருநாமமும் ஒவ்வொரு வேதம். அவனே வேதம். அவனே பரம்பொருள். மிகமிகப் பவித்திரம் அந்த வேதமென்று, வேதத்தைத் தூக்கிப் பிடித்தது அவன் கூர்மத்தில். இப்படி பகவான் தான் வேறு; வேதம் வேறல்ல என்று வேதத்தை நமக்கெல்லாம் முக்கியமென்று காட்டினான். பரமகாருண்யம் நிறைந்தவன் பகவான். அவன் சர்வதரக்ஷகன். சர்வாத்ர ரக்ஷகன். எங்கும் ரட்சிப்பவன்; எப்போதும் ரட்சிப்பவன். சகலரும் பின்பற்றும்படியான நிறைவான விரதம் ராமம்.''

ராகவேந்திரரின் ராம போதனை தொடர்ந்து கொண்டிருக்க, மறுபடி குறுக்கிட்டான் லக்ஷ்மிநாராயணன்.

""எனின், ராமத்தால் எங்களுக்கும் நன்மையுண்டோ ஸ்வாமி?''

ஸ்வாமிகள் மறுபடி புன்னகைத்தார். அதில் சிநேகம் மட்டுமின்றி, எதிரில் கேள்வியிட்டவனின் சாமர்த்தியத்தையும் எண்ணி மகிழ்ந்தார்.

""நிறையவே உண்டு. கற்றலைவிட கேட்டல் நன்று. அப்போதெல்லாம் தமிழகக் குடந்தையில் (கும்பகோணம்) ஸ்ரீராமநவமி உற்சவம் கோலாகலமாய் பத்து நாட்கள் கொண்டாடப்படும். தினம்தினம் உற்சவத் திற்குப்பிறகு இரவு முடிய ராமாயண உபன்யாசம் உண்டு. கணபாடிகள் உருக உருக சொல்லும் உபன்யாசம் பாலகாண்டம் முதற்கொண்டு ஆரம்பித்து, அகலிகை, விஸ்வாமித்திரர் யாகம், சிவதனுசு முறித்து சீதா கல்யாணம், பரசுராம கர்வபங்கம், ஆரண்ய காண்டம் என்று படிப்படியாகச் சென்று, ராமபட்டாபிஷேகம் நிறைவுற்று, விடையார்த்தி உற்சவத்தில் உபன்யாசம் நிறைவு செய்வார்.

ஒரு படிப்பறிவற்ற நல்ல பிராம்மணன் வீட்டில் இருக்க, அவன் மனைவி அவரை வற்புறுத்தி ராம கதை கேட்க அனுப்பி வைத்தார். தினம் உபன்யாசம் கேட்டுத் திரும்பு பவரை "ஏதேனும் விளங்கிற்றா?' என்று கேட்க, "விளங்கவில்லை' என்றாராம். இப்படியே முடிவுவரை கேட்டு கடைசி நாளில் திரும்பியவரை அன்றும் அவர் மனைவி, கேட்க, அவரும் உதடு பிதுக்க, கோபப்பட்ட அவர் மனைவி "அதோ, அந்த சாணமள்ளும் கூடையை எடுத்து, அது நிறைய நீரைக் கொண்டு தோட்டத்தில் இறையுங்கள்' என்றார். கணவரும் அப்படியே நீர் முகந்து தூக்கிவர முயற்சித்து முயற்சித்து தோல்வியுற்று நின்றார்.

"அந்த அழுக்கான சாணக்கூடை போன்றவர்தான் நீங்கள்' என்றார் அவர் மனைவி. "ஆமாம். ஆனால் கூடை இப்போது படு சுத்தமாகிவிட்டதே. நானும் அப்படி ஆகிவிட்ட தாக உணர்கிறேன்' என்றாராம் கணவர்.

ராமாயணம் அவ்வளவு தூயதானது.

காதாரக் கேட்கும் அனைவரையும் தூயதாக்கி விடும் உயர்ந்த தத்துவம்.''

""அப்படியெனில் விதி மாறுமா? வாழ்நாள் நீடிக்குமோ? நான் குறும்புத்தனமாகக் கேட்கவில்லை. இன்று தங்களது போதனைகளில் ஸ்ரீராமரை மையமாக வைத்தே உரை அழகாய் நீண்டிருக்கிறது. ஸ்ரீராமனின் கல்யாண குணங்களையும், பிறர் மனை நோக்கா பெருமாண்பையும் தாங்கள் முன்பே வகுப்பினில் விளக்கியிருக்கிறீர்கள்.

அவரது பராக்கிரமத்தையும் வீரத்தையும் தங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். தவறிருந்தால் மன்னிக்கவேண்டும் ஐயனே.''

""நல்லதப்பா. ஆனால் இயற்கையின் விதிமீறல் கள் என்பது இயலாத ஒன்று. இதற்கு அவதாரம் எடுத்த ஆண்டவன்கூட விதிவிலக்கல்ல.

அவ்வளவு ஏன்? முனிவர்களுக்கும் சித்தர்களுக் கும்கூட வாழும் காலங்களுக்கு சற்றுமுன் நீட்டிப்பு இருக்கலாம். அவரவர் பெற்ற புண்ணியப் பலாபலன்களுக்கேற்ப பலநூறு ஆண்டுகள்கூட வாழலாம் என்றாலும், முடிவென்பது நிச்சயமாய் உண்டு. வீரப் பராக்கிரமென்று வருகையில், இருபத்து மூன்று க்ஷத்ரிய வம்சங்களை அழித்து, க்ஷத்ரிய ரத்தத்தினால் தர்ப்பணம் செய்த பரசுராமரின் பராக்கிரமம் முரட்டு வீரம். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பிறப்பும் அற்புதம்... பால்யம் முதற்கொண்டு வாலிபமும், அதுவும் கடந்த வீரப் பராக்கிரமம் சொல்ல மகாபாரதம் ஒன்றே போதுமானது. ஆனால் என் ராமன் தனிப்பட்ட சிறப்பானவன். அந்த இதிகாச புருஷனது வீரம் விஸ்தாரமானது. முக்கியமானதைப் பகர்கிறேன்; கேட்பீராக.

மனிதனின் நிகழ்காலத்தைக் கவலை யின்றி மாற்றும் நிகழ்வே மரணம். கண்ணிமைக்கும் நேரத்தில்கூட யாராவது ஒருவரோ, பலரோ இவ்வுலகிலிருந்து மரணித்துக்கொண்டே இருக்கின்றார்கள். நீங்கள் ஏதேனுமொரு இடத்தில் ஏதேனும் வேலை செய்துகொண்டிருந்தாலும், பல இடங்களில் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். விபத்து, துர்மரணம், தள்ளாமை எனும் முதுமை என்று காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மரணமென்ற ஒரே பெயரில்தான் உனது இல்லாமை இங்கு காட்டப்பட்டுவிடுகிறது. ஜனித்த ஒவ்வொருவரும் அவர்களையே அறியாது இந்தவரிசையில் நின்று கொண்டுதான் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்காக நிச்சயிக்கப்பட்ட இடம் என்னவோ மாறப் போவதேயில்லை. நமக்கு முன்பும் பின்பும் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது நமக்குத் தெரியப்போவதில்லை. வரிசையைத் தவிர்த்து வெளியேறவும் முடியாது. வரிசைக்குப்பின் பதுங்கவும் இயலாது. உனக்கான தருணம் வரும்வரை- உனக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, நீ காத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். காத்துக்கொண்டிருக்கும் அந்த நேரத்தைப் போற்றுவதும் வெறுப்பதும் அவரவர் மனோநிலையின் உன்னதத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்த உன்னதத்தைத் தருவது கலியுகத்தில் நாம சங்கீர்த்த னமே. அதிலும் ஸ்ரீராம நாமம் பரமசிரேஷ்டம். பரமபவித்ரம். மகா திவ்யம். ராம நாமமே உன்னதமானது. அது பாவம் போக்கும். மரணம் தள்ளிப்போகும். பயம் விலகும். வீரம் ஜனிக்கும். தோல்வியென்ற பதம் மறைந்தே போகும். தைரியமும் வீரமும் பொருந்திய அவதார ரூபி ராமம். "ராமா' என்றால் தோல்வி ஓடிப்போகும். "ராமா' என்றால் வெற்றி வந்து குடைபிடிக்கும். ராமனது வீரம் திரிவிக்ரமத்தைவிட மகாவிஸ்வரூபம். ஸ்ரீராமனது வீரத்தை கம்பர் நமக்கு கண்முன்பு விரித்திருக்கிறார்.

"ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம்

அடல்பரி ஒரு கோடி

சேனைக் காவலர் ஆயிரம் பேர் படின்

கவந்தம் ஒன்று எழுந்தாடும்

கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின்

கவின் மணி கணில் என்னும்

ஏனை அம் மணி ஏழரை நாழிகை

ஆடியது இனிதன்றே'

என கம்பர் உயர்த்திப்பிடிக்கிறார். யானைப்படை 1,000, தேர்ப்படை 16,000, குதிரைப்படை 1,00,000, சேனைத்தலைவர் 100- இத்தகைய எண்ணிக்கையில் இவையெல்லாம் மடிந்து விழுந்தால் ஒரு தலையற்ற உடல் எழுந்து ஆடுமாம். இப்படி ஆயிரம் முறை எழுந்து ஆட, ராமனது வில்லிலிருந்து கணீர் என்று மணி ஒலிக்குமாம். ஆம்! ஆக, யுத்தத்தில் ராமனது மணி தொடர்ந்து மூன்று மணி நேரம் ஒலித்துக்கொண்டேயிருந்தது.

அப்படியானால் யுத்தத்தில் எத்தனை உடல்கள் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும்! ஆஹா! எப்பேற்பட்ட வீரமிது. சாமான்யன் சாதிக்க இயலுமா? வால்மீகியைவிட கம்பனின் கள வர்ணனை அதியற்புதம். ஆணித்தரம்.''

""ஸ்வாமி. வால்மீகியை அறிந்திருக்கிறேன். தாங்கள் கம்பன் என்று சிலாகிக்கும் அவர்?''

""ராமாயணத்தை... அந்த இனிய இதிகாசத்தைத் தமிழில் இயற்றியவர். ஸ்ரீரங்கத்து நரசிம்மரே எழுந்து நின்று கம்பராமாயணத்தை அங்கீகரித்த தெய்வீக நூல். எனது ராமனை நான் ரசித்துப் புசித்தேன் கம்பனில். ராமம் ஒரு மூச்சு. ராமம் ஒரு சத்தியம். ராமம் ஒரு நித்தியம். ராமம் ஒரு உன்னதம். ராமம் ஒரு பலம். ராமம் ஒரு உச்சருசி. ராமம் ஒரு ஆன்மா. ராமமே உயிர். ராமம் ஒரு பார்வை. ராமம் ஒரு செவிப்புலன். ராமம் ஒரு தாகம். ராமம் ஒரு பசி. ராமம் ஒரு உணவு. ராமம் ஒரு துயில். ராமம் ஒரு எழுச்சி. இப்படி எங்கும் ராமம் எதிலும் ராமம் ராமம் என்று ராம பாவத்தில் நமது வாழ்க்கை அமைந்துவிட்டதென்றால், எல்லாம் ராமமயம் என்று பொருந்திவிட்டதென்றால் நீங்கள் அனைவருமே ராமம். அந்த ராம வாழ்க்கை பரம உயர்வு. அந்த உச்சம் போக முயலுங்கள்.'' ராகவேந்திரரின் உணர்ச்சிகரமான பேச்சு மெல்ல முடிவுக்குவர, மறுபடி விழி மூடி அவர் ராமத்தில் ஒன்றிப்போனார்.

அப்பண்ணா நடையில் தளர்விருந்தாலும், உள்ளத்தின் உறுதி இன்னும் ஸ்திரமாயிருந்தது. தாம் வழியில் சந்தித்த சங்கரன், பசவப்பா, சீதம்மை மற்றும் ஆதம்பாய் போன்றோர் முறையாக சீராய் ராயர் பணியைத் தொடர்ந்திருப்பார்கள் என்று மனம் முழுக்க நம்பிக்கையோடு நடந்துகொண்டிருந்தார். தன் தோளில் சாய்த்து சுமந்துவந்த உலர்பழங்கள் இருந்த சிறு மூட்டையை எங்கோ கவனக் குறைவாய் தொலைத்துவிட்டிருந்தார். பசி பற்றிய நினைப்பு இருந்தாலல்லவா அந்த மூட்டைமீது அவருக்கு கவனம் இருந்திருக்கும். ஆனால் ஏனோ இப்போது வயிறு பொருமல் சத்தத்துடன் பசிதனை அவருக்கு ஞாபகப்படுத்தியது. நா வறண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஊரேதும் தென்படவில்லை. சமாளித்துக்கொண்டும் சமாதானித்துக்கொண்டும் நடக்கத் துவங்க, அவருக்கு பின்னே "ஜல்... ஜல்... ஜல்...' என்று ஒரு கூரை வேய்ந்த மாட்டுவண்டி வந்து கொண்டிருந்தது. பின் அவரை சற்றுக்கடந்து சட்டென்று நின்றது. முன்பக்கம் அமர்ந்து செலுத்திக்கொண்டிருந்தவர் குதித்து இறங்கிவந்தார்.

""வணக்கம் ஸ்வாமி. தாங்கள் மிகவும் களைத்து நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். வண்டியில் இடம் இருக்கிறது. எங்கு செல்ல வேண்டுமென கூறினீர்கள் என்றால் நான் அங்கு தங்களை இறக்கிவிடுகிறேன்.''

""ஆஹா. குருவுக்கு நன்றி. உமது பெருந்தன்மையான விசாரிப்புக்கு நன்றி. தம்பி, நான் தங்களை யாரென்று அறியலாமா?''

""எனது பெயர் ரங்கநாதன். எனது குடும்பத் துடனும் எனது தம்பி குடும்பத்துடனும் நான் தமிழகத்திலிருந்து திருத்தல தரிசனம் காண வந்துகொண்டிருக்கிறேன். வாருங்கள். வண்டி யில் பயணித்துக்கொண்டே பேசுவோம்.''

""ஆஹா... ராகவேந்திரர் கருணையே கருணை! வாழ்க நீவிர்.''

""என்ன கூறினீர்கள்? ராகவேந்திர ஸ்வாமிகளையா... அந்த மகானைப் பற்றியா கூறினீர்கள்? பெயரைக் கேட்டதே பாக்கியம். நாங்கள் பயணத்தை மந்த்ராயலத்தில் நிறைவு செய்ய நினைத்தோம். ஐயா... தாங்கள்...''

""தம்பி. நான் ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரரின் சீடன். எனது பெயர் அப்பண்ணாச்சார்யார் என்பர்.'' அவர் குரலில் பலம் குறைந்திருந்தா லும் ஸ்வாமிகளின் பெயரை உச்சரிக்கும் பொழுதெழும் கம்பீரமும் இருந்தது.

""ஆஹா... அடடா! டேய் ராமமூர்த்தி. சட்டென்று இறங்கி வாப்பா. எல்லாருமே இறங்கிவாருங்கள். வாழ்நாளில் நாம் யாரைப் பார்க்கவேண்டுமென்று வேண்டுதலோடு இருந்தோமோ, அவரின் பவித்ரமான சீடரையல்லவா கண்டுவிட்டோம். வாருங்கள் வணங்குங்கள்'' என்றவர், சட்டென்று அவரின் பாதம்பணிய, வண்டியிலிந்த குழந்தை உட்பட இறங்கிய ஐவரும் அப்பண்ணாவின் பாதம் பணிந்தனர்.

(தொடரும்)

----------------

ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனப் பிரவேச நிகழ்வுபற்றித் தெரிவிக்க அப்பண்ணாச் சாரியார் பயணித்தபோது அவர் சந்தித்த நபர்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. அது முன்னர் "குருவே சரணம்' என்னும் பெரியல் "ஓம்' இதழில் தொடராக வெளியாகி, தற்போது புத்தக வடிவிலும் கிடைக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அந்த நூலை வாசித்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

நூல் வேண்டுவோர் 044-4399 3029 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

om010820
இதையும் படியுங்கள்
Subscribe