தோன்றாத் துணையாய் வரும் தர்மம்! -ஸ்ரீ.ஞானரமணன்

/idhalgal/om/srinanaramanan

"கிருஹண காலத்திலும், அட்சய திரிதியை தினத்திலும் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி நம்பிக்கையுடனும், பக்தியுடனும், சிரத்தையுடனும் ஒவ்வொருவரும் தானம் செய்யவேண்டும். அந்த தானத்தின் புண்ணியப் பலன் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும்' என்பது யாக்ஞவல்கிய மகரிஷியின் வாக்கு.

"அட்சய திரிதியை தினத்திற்கு ஈடான புண்ணிய தினம் இல்லை' என்கிறது ஸ்ரீமத்பாகவதம்.

அட்சய திரிதியை தினத்திற்கு அத்தகைய உயர்வு ஏன்?

மற்ற தினங்களில் நாம் புண்ணியத்தைத் தேடிச்செல்கிறோம்.

ஆனால், அன்றைய தினத்தில் புண்ணியம் நம்மைத் தேடிவருகிறது.

"அட்சயம்' என்னும் சொல்லுக்கு "குறையாதது, வளர்வது', "எடுக்கக் குறையாது கொடுப்பது' என்பது பொருள். இதற்கு உதாரணமாக, பாண்டவர்களுக்கு சூரிய பகவான் அளித்த அட்சய பாத்திரத்தைக் குறிப்பிடலாம். வற்றாத ஜீவநதி போன்றதாகும். மேலும், வைதீக காரியங்களில் செய்யப்பெறும் சங்கல்பத்தை நன்கு கவனித்து நோக்கினால் அது நன்கு புரியவரும். அதாவது, பித்ருக்களின் கிரியைகளில் "அக்ஷ்ய த்ருப்தியாநாததம்' என்று வரும்.

இம்மானிடப் பிறவிக்குக் காரணமான அவர்கள் (தேவர்கள்- தெய்வீக நிலை) நாமளிக்கும் எள் கலந்த நீரானது அக்னி பகவானின் மனைவியாகிய "ஸ்வதா' தேவியால் கொண்டுபோய் சேர்க்கப்படுவதால்- அதில் எவ்விதக் குற்றமும் இல்லாததால் அவர்கள் அதைப்பருகி ஆனந்தமடைகிறார்கள். அதே நிலையில் நித்ய திருப்தி ஏற்பட்டு, அவர்களுடைய சந்த

"கிருஹண காலத்திலும், அட்சய திரிதியை தினத்திலும் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி நம்பிக்கையுடனும், பக்தியுடனும், சிரத்தையுடனும் ஒவ்வொருவரும் தானம் செய்யவேண்டும். அந்த தானத்தின் புண்ணியப் பலன் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும்' என்பது யாக்ஞவல்கிய மகரிஷியின் வாக்கு.

"அட்சய திரிதியை தினத்திற்கு ஈடான புண்ணிய தினம் இல்லை' என்கிறது ஸ்ரீமத்பாகவதம்.

அட்சய திரிதியை தினத்திற்கு அத்தகைய உயர்வு ஏன்?

மற்ற தினங்களில் நாம் புண்ணியத்தைத் தேடிச்செல்கிறோம்.

ஆனால், அன்றைய தினத்தில் புண்ணியம் நம்மைத் தேடிவருகிறது.

"அட்சயம்' என்னும் சொல்லுக்கு "குறையாதது, வளர்வது', "எடுக்கக் குறையாது கொடுப்பது' என்பது பொருள். இதற்கு உதாரணமாக, பாண்டவர்களுக்கு சூரிய பகவான் அளித்த அட்சய பாத்திரத்தைக் குறிப்பிடலாம். வற்றாத ஜீவநதி போன்றதாகும். மேலும், வைதீக காரியங்களில் செய்யப்பெறும் சங்கல்பத்தை நன்கு கவனித்து நோக்கினால் அது நன்கு புரியவரும். அதாவது, பித்ருக்களின் கிரியைகளில் "அக்ஷ்ய த்ருப்தியாநாததம்' என்று வரும்.

இம்மானிடப் பிறவிக்குக் காரணமான அவர்கள் (தேவர்கள்- தெய்வீக நிலை) நாமளிக்கும் எள் கலந்த நீரானது அக்னி பகவானின் மனைவியாகிய "ஸ்வதா' தேவியால் கொண்டுபோய் சேர்க்கப்படுவதால்- அதில் எவ்விதக் குற்றமும் இல்லாததால் அவர்கள் அதைப்பருகி ஆனந்தமடைகிறார்கள். அதே நிலையில் நித்ய திருப்தி ஏற்பட்டு, அவர்களுடைய சந்ததிகளை ஆசிர்வதிக்கட்டும் என்பது பொருள்.

அவர்களுக்கு சரீரம் இல்லை. ஒளிமயமான உடல். தர்ப்பை, மரப்பலகை, தீபம் ஆகியவற்றில் எழுந்தருள்வார்கள். இந்த தர்ப்பைப்புல்லின் மகிமையால் அந்த நீரானது அவர்களுக்குப் போய்ச் சேரும். மேலும், நீர் மூலமாகத்தான் அவர்கள் பெறவேண்டுமென்பது விதி. பித்ருலோகம் சூரிய லோகத்திற்கு அப்பால் சுமார் ஏழரை கோடி மைல் தொலைவில் உள்ளது. நாமளிக்கும் யாவும் அவர்களுக்கு நிச்சயமாக கண்ணிமைக்கும் நேரத்தில் போய்ச்சேருகிறது. இந்த பித்ருபூஜையை சரிவரச் செய்யாவிடில் நமக்கு விக்கல் ஏற்படுவதுபோல அவர்களுக்கு "பரிவிக்கல்' ஏற்பட்டு, அவர்களால் பூஜையை மேற்கொள்ள முடியாத நிலையில், இதுவே ஒரு கர்மாவாக இறைவனிடம் பதிவாகி, இயற்கை நியதியாக "பித்ருசாபம்' ஏற்படுகிறது.

உண்மையில் அவர்கள் இறைவனைப் போல் மிகவும் மென்மையானவர்கள்; கருணை உள்ளம் கொண்டவர்கள்.

அவர்கள் நிச்சயமாக சபிக்கமாட்டார்கள். நாம் ஒரு நால்ளில் எத்தனை முறை நீர் அருந்துகிறோம்; பிற பானங்கள் குடிக்கி றோம்- அதுபோலதான் தர்ப்பண நீரும் அவர்களுக்கு. இதற்காகத்தான் அவர்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

a

எனவே, பித்ரு கைங்கர்யமாக அன்றைய தினத்தில் நாம் செய்யும் தர்ப்பணம் நம் பித்ருக்களின் திருவுள்ளத்திற்கு மிகமிக உகந்ததாகும்.

புனித நீராடல், தேவ பூஜை வசதியுள்ளோர் கங்கை, யமுனை, காவேரி ஆகிய நதிகளிலும்; பித்ரு மோட்சத் தலங்களான திருவள்ளூர், மயிலாடுதுறை, கும்பகோணம் மகாமகக்குளம் உள்ளிட்ட இடங்களிலும் நீராடலாம். இத்தகைய தலங்களில் பித்ரு தேவர்களே நேரில்வந்து பெற்றுக்கொள்வது போலாகும். எப்படியெனில், காயத்ரி தேவிக்கு அர்க்கியம் அளிக்கும்போது சற்றே குதிங்கால்களை உயர்த்தி, இரு கரங்களில் அளிக்கும் அர்க் கிய நீரானது, பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள சூரிய மண்டலத்திற்குப் போய்ச்சேர்வதுபோலாகும்.

மேற்கண்டவை செய்ய இயலாதவர்கள், வீட்டில் ஒரு செம்பில் நீர் எடுத்து, அந்த செம்பிற்கு நான்கு பக்கமும் சந்தனம், குங்குமமிட்டு அலங்கரித்து, அந்த நீரில் வில்வம், துளசி, வாசனைப் புஷ்பங்களைப் போட்டு வலது கையால் மூடி, "கங்கேச...' என்று தொடங்கும் மந்திரத்தை ஜெபித்தால் நீர்தேவதைகள் அங்கு எழுந்தருள வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்டதாகும். அந்த நீரை தான் மூன்றுமுறை உட் கொண்டு (ஆசமனப் புனல்), பிறகு தலையில் தெளித்துக்கொண்டு பூஜையறை படங்கள்மீதும் தெளிக்கலாம். பூஜைக்கான பொருட்கள்மீதும் தெளிக்கலாம்.

அவரவர் மரபுப்படி தேவபூஜை, நாம சங்கீர்த்தனம், பஜனை, தமிழ் மாமறைகள் பாராயணம் செய்தல் போன்றவையும் சிறப் பானதே.

அட்சய திரிதியையில் அன்னதானத்தின் சிறப்பு ஏனைய தினங்களில் நாம் செய்யும் "நைவேத்தியம்' என்பதற்கு "அளிக்கிறேன் என்று பொருள். ஆனால், அட்சய திரிதியை எனும் புண்ணிய தினம்தான் அன்னை பராசக்தி தேவி, பரமனுக்கே படியளந்த நாள். அதனால் அன்றைக்கு நாம் படைக்கும் எல்லாமே இறைவனுக்கே படைத்ததாகும். ஒரு பழத்தைப் படைத்தால்கூட அது அன்ன லோகத்திற்குச் சென்று, அந்த சக்தியானது கருவிலிலிருக்கும் சிசுவிற்கும், கல்லின் அடியில் மறைந்து கிடக்கும் தேரைக்கும் உணவாகும் படி பரமன் தவறாது படியளிக்கிறான். எனவே, குறைந்தது மூன்று நபர்கள் முதல் 12 நபர்களுக்காவது தயிர் சாதம், ஊறுகாய் சேர்த்து அன்னதானம் செய்யலாம். அல்லது பசுவுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், நாய் களுக்கு பிஸ்கட், பொரை (வர்கி) வாங்கிப் போடுவதும் அன்னதான வகையைச் சார்ந் ததே. திருமூலர் கூறும் "யாவர்க்குமாம்' என்பது போல் செய்யமுடியா விட்டாலும், "இன்னுரை' யாக சொல்வதும் ஒரு தர்மமே.

சந்தனம் அரைத்து வந்தனம் செய்வோம் கடைகளில் விற்கும் சந்தனப்பெட்டி அல்லாது, சந்தனக்கட்டை கொண்டு சந்தனக்கல்லில் இரு கரங்களால் வல- இட முறையில் ஆறுமுறை அரைத்து வேறு தட்டில் எடுத்துவைத்துக் கொண்டு, வலக்கை மோதிர விரலால் சந்தனம், குங்குமத்தைத் தொட்டு, முதலிலில் பித்ரு தேவர்களுக்கும், பிறகு தெய்வப் படங்களுக்கும் சமர்ப்பணம் செய்யவேண்டும். சந்தனம் அரைக்கும்போது மந்திரம் தெரிந்தோர், "அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காசியப, ஆஸ்கீரஸ ரிஷய' என்றோ, "ஏழு முனிகள் திருவடிகள் போற்றி போற்றி!' என்று கூறிக்கொண்டோ அரைப்பது சிறப்பானது. ஏழு முனிகளின் நல்லாசியைப் பெற்றுத்தரும் இந்தப் பரவெளி அசுத்தமாக இருப்பதால், மிகவும் ஒளிபொருந்திய பித்ரு தேவர்கள், தெய்வ சக்திகளால் அதைக் கடந்து வர முடிவதில்லை. அதை சுத்தப்படுத்தவே சந்தனம், குங்குமம் அணிவித்தல், ஊதுபத்தி, சாம்பிராணி, மணி, தீபம் போன்ற கைங்கர்யங்கள் செய்யப்படுகின்றன. இதற்கு "கரபூஷண சேவை' என்று பெயர்.

அட்சய திரிதியை நாளில்தான் எம் பெருமானின் வாமன அவதாரமும், பரசுராம அவதாரமும் நிகழ்ந்தன.

இந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்குவது அவரவர் வசதி, விருப்பம். அவ்வாறு வாங்கினால் முறையே ஐஸ்வர்யம் கிட்டும்; நோய்கள் விலகும் என்பர். கல் உப்பு வாங்குவதும் போதுமானது.

இந்த மகாபுண்ணிய தினத்தில் சக்திக்கேற்றவாறு தானதர்மம் செய்து இப்பிறவிக்கு மட்டுமல்ல; இனி வரப்போகும் பிறவிகளுக்கும் புண்ணி யம் என்ற நிரந்தரமான சொத்தைச் சேர்த்து வைத்துக் கொள்வோம். நம் சந்ததியி னரை இது முன்னின்று காக்கும். தர்மம் செய்பவர்களை அது எப்போதும் காத்து நிற்கும். இறைவனைப்போல தோன்றாத் துணை அது! தோன்றும் துணை யெல்லாம் நிலையற்றவை. அவனே இகமும் பரமும் இடைவிடாது காப்பவன்.

சிறப்புத் தலம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், படிஅக்ரஹாரம் கிராமத்தில் ஸ்ரீராம மந்திரம் சார்பில் கடந்த 77 ஆண்டுகளாக அட்சய திரிதியை நாளில் ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம், வேதபாராயணம், திவ்ய நாம பஜனை, ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டும் மிகச்சிறப்பாக நடைபெறும். இயன்றவர்கள் பங்கேற்று இறையருளைப் பெறலாம்.

om010519
இதையும் படியுங்கள்
Subscribe