Advertisment

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயண உத்தரகாண்டம்! தொகுப்பு: மலரோன் 33

/idhalgal/om/srimad-ramayana-uttarakhandam-by-valmiki-maharishi-collection-malarone

84-ஆவது சர்க்கம் விருத்திரனின் தவத்தை வர்ணித்தல்

ராமனும் பரதனும் இவ்வாறு பேசி முடித்ததும், ரகுநந்தனரைப் பார்த்து, இனிய மொழிகளை இலக்குவன் கூறினான்-

Advertisment

ரகுநந்தனரே! அசுவமேதம் என்ற மகாவேள்வி எல்லாப் பாவங்களையும் போக்கக் கூடியது; மிகவும் புனிதமானது; செய்வதற்கு அரியது. அதனால், இந்தப் பெரும் வேள்வியைச் செய்ய, தாங்கள் மனம் கொள்ளலாமே? முன்னொரு காலத்தில், இந்திரன், பிரம்மஹத்தி தோஷத்தினால் பாதிக்கப்பட்டபோது, அசுவமேத யாகம் செய்து, அந்தப் பாவத்திலிருந்து விடுதலை அடைந்தான் என்ற வரலாற்றைக் கேட்கிறோம்.

Advertisment

முன்னர், தேவர்களும் அசுரர்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தபோது, விருத்திரன் என்ற பெயர் கொண்ட அசுரன் எல்லாராலும் போற்றப் படுபவனாக இருந்தான்.

அவன் நூறு யோஜனை அகலமும். முந்நூறு யோஜனை உயரமும் உடையவனாக இருந்தான். மூன்று உலக மக்களையும் மிகவும் பாசத்துடன் நேசித்து வந்தான்.

அவன் அரச தர்மம் அறிந்தவன், செய்ந்நன்றி மறவாதவன். நல்லறிவில் நிலை பெற்றவன். தன-தானியச் செழிப்புடன் விளங்கிய உலகத்தை சஞ்சலமில்லாத மனத்துடன் ஆண்டு வந்தான். மக்கள் விரும்பும் எல்லாப் பொருள்களையும் குறைவின்றி வழங்கக்கூடிய வையகம், அவனுடைய ஆட்சிக் காலத்தில் சுவையும் சாறுமுடைய கிழங்குகளையும் பழங்களையும் கொடுத்தது.

விருத்திரனின் ஆட்சிக்காலத்தில், நிலத்தை உழுது விதை விதைக்காமலே பயிர்கள் தோன்றி வளர்ந்து நல்ல மகசூலை அளித்தன. இவ்வாறாக, அந்த அசுரன். செல்வச் செழுமையும் பொருள் வளமும் கொண்ட அரசை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

"நான் மிகவும் உத்தமமான தவத்தைச் செய்யவேண்டும்; ஏனென்றால், மிக உயர்ந்த ஆன்ம நிலையை அடைவதற்கு அது ஒன்றுதான் சிறந்த வழி. மற்ற எல்லா சுகங்களும் வெறும் மன மயக்கங்களே' என்ற எண்ணம், ஒருசமயம் அவனுக்கு உண்டாயிற்று.

அவன், தன் மூத்த புதல்வன் மதுரன் என்பவனை நாட்டின் மன்னனாக்கிவிட்டு. எல்லா தேவதைகளையும் தவிக்கச்செய்யும் மிகக்கடுமையான தவம் செய்வதில் ஈடுபட்டான்.

விருத்திரன் தவம் செய்யத் தொடங்கியதும், இந்திரன் மிகவும் மனங்கலங்கி, மகாவிஷ்ணுவிடம் சென்று, "பெருந்தோளரே! விருத்திரன், தவத்தினால் எல்லா உலகங்களையும் வென்றுவிட்டான். தர்மாத்மா வான அவன் மிகவும் ஆற்றல் பெற்றவனாகிவிட்டான். இனி. என்னால் அவனை அடக்கியாள முடியாது.

ss

அவன் இவ்வாறு தவம் செய்துக்கொண்டே இருப்பானேயானால், மூன்று உலகங்களும் நிலைபெற்றிருக்கும் காலம்வரை, எல்லா தேவதைகளும் அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டே இருக்கவேண்டியிருக்கும். மகாபலம் பொருந்தியவரே! விசாலமனம் படைத்த அவனை. தாங்கள் பொருட் படுத்தாதிருக்கிறீர்களே? தேவர் தலைவரே! தாங்கள் கோபம் கொண்டால், ஒரு விநாடிகூட அவனால் உயிருடன் இருக்கமுடியாது.

மகாவிஷ்ணுவே! (அவனுடைய தவத்தினால் மகிழ்ந்து, எது முதற்கொண்டு, தாங்கள் அவனிடம் அன்புகொள்ளத் தொடங்கினீர்களோ. அது முதற் கொண்டு அவன் எல்லா உலகங்களுக்கும் தலைவனாகி விட்டான்.

எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் மனத்தைச் செலுத்தி, தேவர்களுக்கு நன்மையைச் செய்ய திருவுள்ளம் கொள்ளவேண்டும். தங்கள் கருணையால் தான் இவ்வுலகம் நோயற்றதாகவும் அமைதியுடனும் இருக்கமுடியும்.

மகாவிஷ்ணுவே! வானுலகத்தவர் அனைவரும் தங்களையே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். விருத்திர வதம் என்னும் மாபெரும் செயலைச் செய்து, அவர்களை உய்விக்க வேண்டும்.

மகா உத்தமர்களான தேவர்களுக்குத் தாங்கள் எப்போதும் உதவிசெய்து வந்திருக்கிறீர்கள். அசுரனின் தவத்தால் ஏற்பட்டுள்ள துன்பங்கள், பிறரால் பொறுக்க முடியாதவை. வேறு புகலிடம் இல்லாத அமரர்களுக்குத் தாங்கள்தான் புகலிடம்'' என்றான்.

85-ஆவது சர்க்கம் விருத்திரன் வதம்

இலக்குவனுடைய உரையைக் கேட்டு எதிரிகளை மாய்ப்பவரும் நல் விரதங்களைக் கடைப் பிடிப்பவருமான இராமன், "விருத்திராசுரன் வதம் பற்றிய முழு வரலாற்றையும் சொல்'' என்று கூறினார். இராமபிரான் இவ்வாறு கூறியதும், சுமித்திரையின் புதல்வனும் நல் விரதங்களைக் கடைப் பிடிப்பவனுமான லட்

இலக்குவனுடைய உரையைக் கேட்டு எதிரிகளை மாய்ப்பவரும் நல் விரதங்களைக் கடைப் பிடிப்பவருமான இராமன், "விருத்திராசுரன் வதம் பற்றிய முழு வரலாற்றையும் சொல்'' என்று கூறினார். இராமபிரான் இவ்வாறு கூறியதும், சுமித்திரையின் புதல்வனும் நல் விரதங்களைக் கடைப் பிடிப்பவனுமான லட்சுமணன் புனிதமான அந்தக் கதையைத் தொடர்ந்து சொல்லத்தொடங்கி னான்-

இந்திரன் மற்றும் வானுலகத்தார் அனைவருடைய சொற்களையும் கேட்ட மகாவிஷ்ணு.

இந்திரன் முதலான அவர்கள் அனைவரையும் பார்த்துப் பின்வருமாறு கூறினார்-

"தேவதைகளே! பேருள்ளம் கொண்ட விருத்திராசுர

னுடன், பழங்காலத்திலிருந்தே எனக்கு சிநேகப் பிணைப்பு

உள்ளது. அதனால், உங்கள் திருப்திக்காக, நான் அந்த

மகாசுரனைக் கொல்லமாட்டேன். அதேசமயம் உங்களுக்கு

நிச்சயமாக நன்மை செய்யவேண்டும். அதனால், விருத்திரன் மாய்வதற்கான ஓர் உபாயத்தைக் கூறுகிறேன்.

தேவர்களே! நான், என்னை மூன்று பகுதிகளாகச் செய்துகொள்கிறேன். (என்னுடைய பேராற்றலை மூவகையாகக் கூறு செய்துகொள்கிறேன்.) அவற்றில் ஒன்றின்மூலம் இந்திரன், விருந்திரனைக் கொல்வான்.

என்னுடைய அளவு கடந்த ஆற்றலில் ஓர் அம்சம் இந்திரனைச் சென்றடையட்டும்; மற்றொன்று, வஜ்ராயுதத்தில் இடம் கொள்ளட்டும்; மூன்றாவது அம்சம், பூமியை அடையட்டும். பின்னர் இந்திரன், விருத்திரனைக் கொல்வான்.'' (சிந்தனைக்கெட்டாத விருத்திரனின் பேருடல் தரையில் சாயும்போது.

அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பூமிக்கு இருக்காது. ஆகவே, விஷ்ணுவின் தெய்விக ஆற்றல் பூமிக்குள் மறைந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.)'

இவ்வாறு, தேவதைகளின் தேவரான மகாவிஷ்ணு கூறியவுடன், "அசுரர்களை மாய்ப்பவரே! தாங்கள் சொன்னபடியே ஆகட்டும்'' என்று இசைந்தார்கள்.

"விருத்திரனின் அழிவை விரும்பும் நாங்கள், "அது நிறைவேறும்' என்ற நம்பிக்கையுடன் செல்கிறோம். கருணை மிக்கவரே! தாங்கள், தங்கள் பேராற்றலின் ஓர் அம்சத்தை இந்திரனுக்குக் கொடுங்கள்.''

பின்னர், இந்திரன் முதலான எல்லா தேவர்களும், விருத்திரன் இருந்த காட்டை அடைந்தார்கள். அசுரோத்த மனான விருத்திரன், தன் தவ ஒளியால் எல்லா பக்கங் களிலும் வியாபித்திருப்பதையும், மூன்று உலகங்களையும் குடித்துவிடுபவன் போலும், ஆகாயத்தையே எரித்துவிடுபவன் போலும் கற்பனைக்கெட்டாத ஆற்றலுடன் விளங்குவதைக் கண்டார்கள்.

அந்த மகாசுரனைப் பார்த்தமாத்திரத்திலேயே தேவர்கள் பேரச்சம் அடைந்தார்கள். "இவனை நாம் எப்படிக் கொல்வது? நமக்குத் தோல்வி ஏற்படாமலிருக்க என்ன செய்வது?' என்று ஆலோசிக்கத் தொடங்கினார்கள். இவ்வாறு, அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே. கைகளால் வஜ்ரத்தைப் பற்றிக் கொண்ட இந்திரன், விருத்திரனின் தலையைக் குறிவைத்து, அதைச் செலுத்தினான்.

ஊழிக்கால அக்னியைப்போல் மிகவும் பயங்கரமாக வும், கொழுந்துவிட்டு எரியும் பெரிய நெருப்புப்போல் ஒளிவீசிக் கொண்டும் சென்ற வஜ்ரத்தினால் வெட்டப்பட்டுக் கீழே விழுந்த விருத்திரனின் தலையைக் கண்டு உலகமே பயத்தில் தவித்தது.

பெரும் புகழுக்குரிய இந்திரன், 'குற்றமேதும் செய்யாத விருத்திரனைக் கொலைச்செய்தது சரியானது அல்ல' என்பதை உணர்ந்துகொண்டு, அனைத்துலகங் களுக்கும் கடைசியாக உள்ள லோகாலோக மலைக்கு அப்பாலிருந்த இருள் சூழ்ந்த பிரதேசத்திற்குச் சென்றுவிட்டான்.

அவ்விடத்திற்குச் சென்று கொண்டிருந்த இந்திரனை, பிரம்மஹத்தி (பாவம்) துரத்திச்சென்று உடனே பற்றிக் கொண்டது. அது, அவன் உடலைப் பற்றிக்கொண்டதும், அவனுக்கு மிகவும் துக்கம் ஏற்பட்டது.

தேவர்களின் எதிரிகள் அழிந்துபோய்விட்டார்கள். ஆனால், இந்திரன் காணப்படவில்லையே? அதனால், தேவர்கள் அக்னியை முன்னிலைப்படுத்தி. மூன்று உலகங்களுக்கும் தலைவரான மகாவிஷ்ணுவைத் தொடர்ந்து வழிபட்டார்கள்.

"பெருந்தெய்வமே! தாங்களே எங்களுக்குப் புகலிடம்; எல்லாவற்றுக்கும் முன்னால் தோன்றியவர்; உலகத்தின் தந்தை: எல்லா உயிர்களையும் பாதுகாப்பதற்காக விஷ்ணு என்ற பதவியை மேற்கொண்டீர்கள். தங்களால் விருத்திரன் கொல்லப்பட்டான். பிரம்மஹத்தி பாவம். இந்திரனைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. தேவர் தலைவரே! இந்திரன் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைக்கூறி அருள்புரியுங்கள்.'

தேவர்களின் வேண்டுகோளைக் கேட்ட விஷ்ணு, "இந்திரன், என்னைக் குறித்து வேள்வி செய்யட்டும். வஜ்ர தாரியான அவனை, நான் புனிதமடையச் செய்கிறேன்.

மிகவும் புண்ணியத்தைக் கொடுக்கும் அசுவமேத யாகம் செய்து, வேள்வித் தலைவனான என்னை ஆராதித் தால், இந்திரன் பாவம் நீங்கியவனாகி, மீண்டும் இந்திரப் பதவியை அடைவான். பின்னர். எவரைக் கண்டும் அஞ்சவேண்டிய நிலை ஏற்படாது' என்றார்.

இவ்வாறு, அவர்கள் உய்வடைவதற்கான வழியை அமுதம் போன்ற மொழிகளால் கூறிவிட்டு, அவர் களால் தோத்தரிக்கப்பட்ட அமரர்கோன் விஷ்ணு வைகுண்டத்திற்குச் சென்றார்.

86-ஆவது சர்க்கம் இந்திரன் புனிதமடைந்தான்!

விருத்திராசுரனின் வீழ்ச்சி பற்றிய விவரங்களைச் சொல்லிய லட்சுமணன் கதையைத் தொடர்ந்து கூறத் தொடங்கினான்-

"தேவர்களுக்கெல்லாம் பேரச்சத்தைக் கொடுத்துக்

கொண்டிருந்த மாவீரனான விருத்திரன் மாய்க்கப்

பட்டதும், பிரம்மஹத்தியினால் சூழப்பட்ட இந்திரன் வெகுநேரம் வரை சுய உணர்வைப் பெறவில்லை. உலகங்களின் எல்லைக்கு அப்பால் சென்றடைந்த இந்திரன். நினைவும் உணர்ச்சியும் இல்லாதவனாக. சிறிது காலம் பாம்பைப்போல் சுருண்டு கிடந்தான்.

இந்திரன், எவர் கண்ணிலும் படாமல் இருள் பகுதியில் மறைந்துகொண்டதும், உலகம் கலங்கித் தத்தளித்துப் போயிற்று; பூமியின் தோற்றம் குலைந்தது; நீர்மை குறைந் தது; காடுகள் பட்டுப்போயின. எல்லா மடுக்களிலும் நீரோடைகளிலும் நீர் வற்றிப்போயிற்று; மழை பெய்யாத தால் எல்லா உயிர்களுக்கும் தவிப்பு உண்டாயிற்று.

உலகம் நசித்துப் போகத் தொடங்கியது. அதனால், தேவர்களுடைய இதயத்தில் கலக்கம் ஏற்பட்டது. அப்போது, முன்னர் விஷ்ணு கூறிய வேள்வி பற்றிய நினைவு வந்தது.

உடனே, ஆசார்யர்களும் முனிவர்களும் உடன்வர, தேவர்கள் எல்லாரும். இந்திரன் பயத்தினால் மயங்கிக் கிடந்த இடத்தைச் சென்றடைந்தார்கள். பிரம்மஹத்தி பாவத்தினால் இந்திரன் ஆட்கொள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். என்றாலும், அவனை முன்னிலைப்படுத்தி அசுவமேத யாகத்தைச் செய்யத்தொடங்கினார்கள்.

பேருள்ளம் கொண்ட இந்திரனால் ஆரம்பிக்கப்பட்ட அந்த மகாவேள்வி- இந்திரனைப் பிரம்மஹத்தி பாவத்திலிருந்து விடுவித்துப் புனிதப்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட வேள்வி சரியாக நடந்தது.

வேள்வி நிறைவேறியதும் இந்திரனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தி விலகி, தேவர்களிடம் வந்து, "எனக்கு எங்கே இடம் வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டது.

இதைக் கேட்டதும் தேவர்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தார்கள். "எவராலும் வெல்லமுடியாத ஆற்றல் கொண்ட பிரம்மஹத்தியே! நீ, உன்னை நான்கு பாகங் களாகச் செய்து கொள்' என்றார்கள்.

தேவர்கள் கூறியதைக்கேட்டு. இந்திரனின் உடலில் மிகவும் வேதனையுடன் இருந்துகொண்டிருந்த பிரம்ம ஹத்தி, தன்னை நான்கு பாகங்களாகச் செய்துகொண்டு, "எனக்கு வேறு இடத்தைக் கொடுங்கள். நான், என்னுடைய ஒரு பகுதியினால், மாரிக்காலமான நான்கு மாதங்கள். நீர் புரண்டோடும் ஆறுகளில் வசிப்பேன்.

அப்போது, நான் என் இஷ்டம்போல் எந்தப் பக்கத்திலும் பெருகிச் செல்வேன்; பிறருடைய கொட்டத்தை அடக்கு வேன்.

என்னுடைய இரண்டாவது பகுதியினால், நான் எப்போதும் பூமியில் வசித்துக் கொண்டிருப்பேன்; சந்தேகப் பட வேண்டாம். இதை நான் சத்தியமாகக் கூறுகிறேன்.

என்னுடைய மூன்றாவது பாகத்தினால், செருக்குற்று விளங்கும் இளம்பெண்களிடம், ஒவ்வொரு மாதமும் மூன்று இரவுகள் தங்கி, அவர்கள் கர்வத்தை அடக்குவேன்.

தேவர்களே! ஒரு பொய்யைச் சொல்லி, எவரையும் நிந்திக்காத வேதவித்தகரைக் கொலை செய்பவர்களை, என்னுடைய நான்காவது பாகத்தினால் பற்றிக் கொள்வேன்' என்றது.

தேவர்கள் பதில் சொன்னார்கள்- "பிரம்மஹத்தியே! நீ சொன்னபடியே எல்லாம் ஆகட்டும். உன் விருப்பத்தை நடத்திக்காட்டு.'

பின்னர். மனத்திருப்தியடைந்த தேவர்கள் ஆயிரங் கண்ணனான இந்திரனை வணங்கினார்கள். இந்திரன் புனிதமடைந்து கவலையற்றவனான்.

இந்திரன். தன் பதவியில் அமர்ந்தவுடன் உலகம் முழுவதும் அமைதி அடைந்தது. அற்புதமான பலனை வழங்கும் ஆற்றல்கொண்ட அந்த மகாவேள்வியை இந்திரனும் புகழ்ந்துரைத்தான்.

ரகுநந்தனா அசுவமேத யாகத்தின் சக்தி இவ்வளவு மகத்தானது. மன்னரே! மிகவும் பேறு பெற்றவரே! தாங்கள் அசுவமேத யாகத்தைச் செய்யவேண்டும்.''

இவ்வாறு. உயர்ந்ததும் மனத்திற்கு உவப்பளிப்ப துமான சொற்களை, லட்சுமணன் கூறியதைக்கேட்டு, பெருந்தகை இராமபிரான், உள்ளத்தில் உவகை பொங்க பெருமகிழ்ச்சி அடைந்தார்.

87-ஆவது சர்க்கம் இளன் மன்னரின் வரலாறு

பேச்சில் வல்லவனான லட்சுமணன் கூறியதைக் கேட்ட மகாதேஜஸ்வியான இராமன், சற்றே புன்னகைத்து பதில் கூறினார்-

"லட்சுமணா! மானுடத்திலகமே! விருத்திரனின் வதம் மற்றும் அசுவமேத யாகத்தின் பலன் பற்றி, நீ கூறியதெல்லாம் உண்மையே. செல்வனே! முன்னர். கர்தமப் பிரஜாபதியின் புதல்வரும் பாஹ்லீக தேசத்தின் வேந்தருமான இளன் குறித்தும், இப்படி ஒரு வரலாறு கூறப்படுகிறது.

மனிதப் புலியே! அவர் (இளன்), இந்த உலகம் முழுவதையும் தன்வசத்திற்குக் கொண்டு வந்து, அறம் தவறாமல், நாட்டு மக்களைத் தன் மைந்தர்கள் போலவே கருதிப் பேணிப் பாதுகாத்தார்.

பேருள்ளம் கொண்ட தேவர்கள், செல்வந்தர்களான அசுரர்கள், நாகலி ராக்ஷஸ- கந்தர்வர்கள் மற்றும் மகாத்மாக்களான யக்ஷர்கள் ஆகியோர், அவரிடம் கொண்ட அச்சத்தினால், நாள்தோறும் அவரைப் பூசித்து வந்தார்கள். மாட்சிமைமிக்க அவருக்குக் கோபம் வந்தால், மூன்று உலகங்களும் நடுங்கிப் போகும்.

அந்த மன்னர், அந்த அளவுக்கு அறநெறியிலும் வீரத்திலும் ஒப்புயர்வற்று விளங்கினார். பெரும் புகழ்கொண்ட பாஹ்லீக மன்னர். தன் அறிவுத்திறனா லும் கொடைத்திறனாலும் பெருமையோடு வாழ்ந்தார். மாவீரரான அவர், மனங்கவரும் எழிலுடன் விளங்கும் ஒரு சித்திரை மாதத்தில். ஏவலர்- படை- வாகனங் களுடன் ஓர் அழகிய காட்டுக்குச் சென்று வேட்டையில் ஈடுபட்டார்.

காட்டில் நூற்றுக்கணக்காகவும் ஆயிரக்கணக் காகவும் விலங்குகளைக் கொன்ற பின்னரும், பெருவீரரான அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. பல்வகைப்பட்ட, பல்லாயிரக்கணக்கான விலங்குகளை வேட்டையாடிய இளன் என்ற அந்த வீரர், மகாசேனர் (முருகப்பெருமான்) அவதரித்த இடத்திற்குச் சென்றார்.

அந்த இடத்தில், தேவதேவரான பரமேசுவரன், எவராலும் வெல்லமுடியாத தன் பணியாளர் களோடு இருந்துகொண்டு, மலையர சன் மகளுடன் (பார்வதியுடன்) இன்பமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.

காளைக் கொடியுடைய உமாகாந்தன், பார்வதிக்கு பிரியம் செய்யும் எண்ணத்துடன், தன்னைப் பெண் உருவமாக மாற்றிக்கொண்டு, நீர்வீழ்ச்சியின் அருகில் அவருடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, காட்டின் அந்தப் பகுதியிலிருந்த, ஆண்பால் பெயரைக்கொண்ட உயிர்கள், மரங்கள் எல்லாம் பெண்பாலாக மாறின. அங்கிருந்தனவெல்லாம் பெண் அடையாளத்தைப் பெற்றன.

இதனிடையில், கர்தமரின் புதல்வரான மன்னர் இளன். ஆயிரக்கணக்கான விலங்குகளைக் கொன்றபின், அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

உடனே, ஆசார்யர்களும் முனிவர்களும் உடன்வர, தேவர்கள் எல்லாரும். இந்திரன் பயத்தினால் மயங்கிக் கிடந்த இடத்தைச் சென்றடைந்தார்கள். பிரம்மஹத்தி பாவத்தினால் இந்திரன் ஆட்கொள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். என்றாலும், அவனை முன்னிலைப்படுத்தி அசுவமேத யாகத்தைச் செய்யத்தொடங்கினார்கள்.

பேருள்ளம் கொண்ட இந்திரனால் ஆரம்பிக்கப்பட்ட அந்த மகாவேள்வி- இந்திரனைப் பிரம்மஹத்தி பாவத்திலிருந்து விடுவித்துப் புனிதப்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட வேள்வி சரியாக நடந்தது.

வேள்வி நிறைவேறியதும் இந்திரனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தி விலகி, தேவர்களிடம் வந்து, "எனக்கு எங்கே இடம் வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டது.

இதைக் கேட்டதும் தேவர்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தார்கள். "எவராலும் வெல்லமுடியாத ஆற்றல்கொண்ட பிரம்மஹத்தியே! நீ, உன்னை நான்கு பாகங்களாகச் செய்து கொள்' என்றார்கள்.

தேவர்கள் கூறியதைக்கேட்டு. இந்திரனின் உடலில் மிகவும் வேதனையுடன் இருந்துகொண்டிருந்த பிரம்மஹத்தி, தன்னை நான்கு பாகங்களாகச் செய்து கொண்டு, "எனக்கு வேறு இடத்தைக் கொடுங்கள். நான், என்னுடைய ஒரு பகுதியினால், மாரிக்காலமான நான்கு மாதங்கள். நீர் புரண்டோடும் ஆறுகளில் வசிப்பேன்.

அப்போது, நான் என் இஷ்டம்போல் எந்தப் பக்கத்திலும் பெருகிச் செல்வேன்; பிறருடைய கொட்டத்தை அடக்குவேன்.

என்னுடைய இரண்டாவது பகுதி யினால், நான் எப்போதும் பூமியில் வசித்துக் கொண்டிருப்பேன்; சந்தேகப்பட வேண்டாம். இதை நான் சத்தியமாகக் கூறுகிறேன்.

என்னுடைய மூன்றாவது பாகத்தினால், செருக்குற்று விளங்கும் இளம்பெண்களிடம், ஒவ்வொரு மாதமும் மூன்று இரவுகள் தங்கி, அவர்கள் கர்வத்தை அடக்குவேன்.

தேவர்களே! ஒரு பொய்யைச் சொல்லி, எவரையும் நிந்திக்காத வேதவித்தகரைக் கொலை செய்பவர்களை, என்னுடைய நான்காவது பாகத்தினால் பற்றிக் கொள்வேன்' என்றது.

தேவர்கள் பதில் சொன்னார்கள்- "பிரம்மஹத்தியே! நீ சொன்னபடியே எல்லாம் ஆகட்டும். உன் விருப்பத்தை நடத்திக்காட்டு.'

பின்னர். மனத் திருப்தியடைந்த தேவர்கள் ஆயிரங் கண்ணனான இந்திரனை வணங்கினார்கள். இந்திரன் புனிதமடைந்து கவலையற்றவனான்.

இந்திரன். தன் பதவியில் அமர்ந்தவுடன் உலகம் முழுவதும் அமைதி அடைந்தது. அற்புதமான பலனை வழங்கும் ஆற்றல்கொண்ட அந்த மகாவேள்வியை இந்திரனும் புகழ்ந்துரைத்தான்.

ரகுநந்தனா அசுவமேத யாகத்தின் சக்தி இவ்வளவு மகத்தானது. மன்னரே! மிகவும் பேறு பெற்றவரே! தாங்கள் அசுவமேத யாகத்தைச் செய்யவேண்டும்.''

இவ்வாறு. உயர்ந்ததும் மனத்திற்கு உவப்பளிப்பது மான சொற்களை, லட்சுமணன் கூறியதைக்கேட்டு, பெருந்தகை இராமபிரான், உள்ளத்தில் உவகை பொங்க பெருமகிழ்ச்சி அடைந்தார்.

"லட்சுமணா! அவ்விடத்தில் சர்ப்பம்- விலங்குகள்-

பறவைகள் எல்லாம் பெண்பாலாக மாறியிருப்பதைக் கண்ட இளன், தன்னுடன் வந்தவர்களும் தானும் பெண்ணாக மாறிவிட்டிருப்பதைக் கண்டார்.

அவருக்கு, மிகவும் துக்கம் உண்டாயிற்று. இந்த மாற்றம். பரமேசுவரனின் செயல் என்றறிந்து அச்சமடைந்தார்.

உடனே, நீலகண்டரும் சடாமுடி தரித்தவருமான கைலாயபதியை, ஏவலர்- படைகள்- வாகனங்களோடு சென்று அடைக்கலம் அடைந்தார்.

அப்போது, பார்வதிதேவியுடன் இருந்தவரும். அடியார் வேண்டும் வரம் அளிப்பவருமான மகேசுவரன். மெல்ல நகைத்து. பிரஜாபதியின் மைந்தரான இளனை நோக்கிக் கூறினார்- "ராஜரிஷியே! எழுந்திராய்! கர்தமரின் புதல்வனே! மகாபலம் கொண்டவனே! எழுந்திராய். செல்வனே! ஆணாக மாற்றுவது என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள்.'

பெண்ணாக மாறிவிட்டதால் மிகவும் துக்கத்திலிருந்த மன்னன், பரமேசுவரன் இவ்வாறு பதில் கூறியதும், அவரிடமிருந்து வேறு எந்த வரத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.

மிகவும் சோகத்திலிருந்த மன்னன், மலையரசன் மகளான உமாதேவியை மனதாரப்பணிந்து. "தாங்கள்தான் எல்லா உலகங்களுக்கும் தலைவி; எல்லாருக்கும் வரம் அளிப்பவர்; தேவி! தங்கள் தரிசனம், பயனைக் கொடுக்காமல் இருக்காது. கருணை நிறைந்த பார்வையால் என்னைப் பாருங்கள்' என்று வேண்டினார்.

ராஜரிஷியின் அந்தரங்கத்தைத் தெரிந்து கொண்ட பார்வதிதேவி, ருத்ரபகவான் அருகில் இருக்கும்போதே மனதிற்கினிய பதிலைக் கூறினார்-

"நீ எதிர்பார்க்கும் வரத்தில், ஒரு பாதியை மகாதேவரும், மறுபாதியை நானும் கொடுப்பதாக ஆகும். (ஆண் பாதியும் பெண் பாதியும் சேர்ந்து ஓர் உருக்கொண்ட அர்த்தநாரீஸ்வரர் ஆயிற்றே?)

அதனால், என்னால் கொடுக்கக்கூடிய பாதி வரத்தைப் பெற்றுக்கொள். ஆண்- பெண் என்ற இரண்டில் எவ்வாறு, எவ்வளவு காலம் இருக்க விரும்புகிறாயோ, அதைக் கூறு.'

தேவியினுடைய மிக ஆச்சரியமான உத்தமமான அந்த வரத்தைக்கேட்டு, மனமகிழ்ந்த மன்னர் பின்வருமாறு கூறினார்-

"அன்னையே! தாங்கள் என்னிடம் கருணை காட்ட விரும்பினால், ஒப்புவமையில்லாத பேரழகு கொண்ட பெண்ணாக ஒரு மாத காலமும், பின்னர்.

ஒரு மாத காலம் ஆணாகவும் இருக்கும் வரத்தை அருளுங்கள்.'

எழில்மிக்க முகமுடைய அன்னை பார்வதி, அவர் கருத்தை அறிந்துகொண்டு. "அவ்வாறே ஆகுக' என்ற இனிய மொழிகளைக் கூறினார்.

"மன்னனே! நீ பெண்ணாக இருக்கும் காலத்தில் ஆணாக இருந்தபோது நடந்த செயல்களை நினைவு கொள்ளமாட்டாய்; ஆணாக மாறியவுடன், பெண் காலச் செயல்களை நினைவில் வைத்திருக்கமாட்டாய்.'

இவ்வாறு, கர்தமரின் புதல்வரான இளன் ஒரு மாத காலம் ஆணாக இருந்துவிட்டு. அடுத்த ஒருமாதம் மூவுலகப் பேரழகியான இளா என்ற மங்கையாக மாறி வந்தார்.''

om011123
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe