Advertisment

பயம் நீக்கி, பலம் கூட்டும் ஸ்ரீ சொர்ண காலபைரவர்! -பழங்காமூர் மோ.கணேஷ்

/idhalgal/om/sri-sorna-kalabhairava-who-removes-fear-and-increases-strength-palangamoor-moganesh

ழிவிடைதாங்கி ஸ்ரீ சொர்ண காலபைரவர் எழுந்தருள்புரியும் அற்புதமான திருத் தலம். போர்க்காலத்தில் ஐந்துபடைகள் இங்கு தங்கியிருந்ததால் ஐபடைத்தாங்கி என்றழைக்கப்பட்ட இவ்வூர் மருவி அழிவிடைதாங்கி என்றானது. இங்கே தனியே கோவில்கொண்டு, பக்தர்களின் பயங்களை நீக்கி, வரங்களை தந்தருள்கின்றார் ஸ்ரீ பைரவமூர்த்தி. சிவனின் அம்சமாக, ரௌத்ர மூர்த்தியாகத் திகழும் இந்த பைரவர் இத்தலத்தி னில் நெற்றிக்கண்ணுடன் காட்சி தந்து நம்மையெல்லாம் பரவசப்படுத்து கின்றார்.

சனிக்கும், வாஸ்துவுக்கும் குருவாக, எமனின் அதிகாரம்பெற்ற இந்த பைரவர்... ஜ்வாலை முடியுடன், சூலம்- கபாலம்- பாசம்- உடுக்கை ஆகிய ஆயுதங்களை ஏந்தி, பாம

ழிவிடைதாங்கி ஸ்ரீ சொர்ண காலபைரவர் எழுந்தருள்புரியும் அற்புதமான திருத் தலம். போர்க்காலத்தில் ஐந்துபடைகள் இங்கு தங்கியிருந்ததால் ஐபடைத்தாங்கி என்றழைக்கப்பட்ட இவ்வூர் மருவி அழிவிடைதாங்கி என்றானது. இங்கே தனியே கோவில்கொண்டு, பக்தர்களின் பயங்களை நீக்கி, வரங்களை தந்தருள்கின்றார் ஸ்ரீ பைரவமூர்த்தி. சிவனின் அம்சமாக, ரௌத்ர மூர்த்தியாகத் திகழும் இந்த பைரவர் இத்தலத்தி னில் நெற்றிக்கண்ணுடன் காட்சி தந்து நம்மையெல்லாம் பரவசப்படுத்து கின்றார்.

சனிக்கும், வாஸ்துவுக்கும் குருவாக, எமனின் அதிகாரம்பெற்ற இந்த பைரவர்... ஜ்வாலை முடியுடன், சூலம்- கபாலம்- பாசம்- உடுக்கை ஆகிய ஆயுதங்களை ஏந்தி, பாம்பைப் பூணூலாகவும், அரை ஞான் கயிறாகவும் அணிந்து, இரு தொடைகளிலும் மண்டையோட்டு மாலையினைச் சாற்றிக்கொண்டு, தெற்கே முகம் காட்டி ஸ்ரீ சொர்ண காலபைரவர் என்கிற பெயர் தாங்கி அதியபூர்வ கோலத்தில் இங்கே காட்சிக்கின்றார். இவரது வாகனமான நாய் கிழக்கே முகம் காட்டி நிற்கிறது.

இந்த பைரவர் சுற்றியுள்ள எட்டு ஊர்களுக்கும் காவல் தெய்வமாக விளங்கி நல்லருள் புரிகின்றார்.

வருடத்தில் எட்டு விசேஷ தினங்களில் இந்த எட்டு ஊர்களுக்கும் திருவீதியுலா சென்று, அவ்வூர் மக்களின் தீவினைகளைப் போக்குவது இப்பெருமானது வழக்கமாகும்.

தைப்பூசத்தன்று மோட்டூருக் கும், தை கிருத்திகையில் பெருமாள் பேட்டைக்கும், காணும் பொங்கலன்று அழிவிடைதாங்கியிலும், மயிலாரில் கோணன் மேடைக்கும் எழுந்தருள்புரி கின்றார். பிறகு மாசிமகத்தன்று ஜம் போடைக்கும், சிவராத்திரியில் தக்காம்பாளையத்திற்கும் எழுந்தரு ளும் இப்பைரவேஸ்வரர்... பங்குனி உத்திரத்திற்கு எடையார் பாளையத் திலும், ஆரூத்ராவிற்கு வயலூரிலும் எழுந்தருளி காட்சி கொடுக்கின்றார்.

இத்தல உற்சவத் திருமேனியரின் கலைநயத்தை வர்ணிக்க முடியாது. இவரது பழமையினை கணிக்க இயலாது. அவ்வளவு பிரகாசமாகத் திகழ்கின்றார்.

Advertisment

ss

காஞ்சி மாமுனிவர் மகாபெரிய வாளால் இந்த ஆலயம் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. அன்றுமுதல் இங்கு சிறப்பு வழிபாடுகள் நாள்தோறும் நடைபெற்றுவருகின்றன.

இங்கு தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலம் மற்றும் எமகண்ட வேளையில் சிறப்பு அபிஷேக- அலங்கார, ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத்தில் வரும் காலபைரவாஷ்டமி இங்கு வெகுசிறப் பாகக் கொண்டாடப்படுகின்றது.

Advertisment

இந்த பைரவருக்கு பச்சரிசிமாவு மற்றும் குங்குமத்தால் அபிஷேகம் செய்து, நல்லெண்ணெய் தீபத்தினை கிழக்கு முகமாக 1, 5, 9 என்கிற எண்ணிக்கையில் திரியிட்டு ஏற்றி, மிளகினால் செய்த வடைமாலையினைச் சாற்றி, தயிர்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டு கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, எதிரி நாசம், உத்தியோகம், குழந்தை பாக்கியம் மற்றும் சூனியம் கண்டறிதல் போன்ற நற்பலன்களைப் பெற்றுச் செல்கின்றனர் பக்தர்கள் பலர்.

செல்வவளம் குன்றியவர்கள் நஷ்டத்தாலும், பணக் கஷ்டத்தாலும் தவிப்பவர்கள், கடன் சுமையால் வாடுபவர்கள் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ சொர்ண காலபைரவருக்கு தேனா பிஷேகம் செய்து, மிளகு முடிச்சிட்ட நல்லெண்ணெய் தீபமேற்றி, மிளகு சாதம் படைத்து, வழிபட சிறந்த பலன் உண்டு.

திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் வட்டத்தில், வெண்பாக்கத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அழிவிடைத்தாங்கி. காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஆற்காட்டில் இருந்து இங்குவர வழிப்பேருந்துகள் உள்ளன. வெண்பாக்கத்தில் இருந்து ஆட்டோ வசதியுள்ளது.

ஆலயத் தொடர்புக்கு: ஆ.ஃ. கார்த்திகேய சர்மா: 97861 34367.

bala160525
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe