ஸ்ரீ சேவுகப் பெருமாள்
பொதுவாகப் பெருமாள் ஆலயங்கüல் வழிபாடு செய்யும் போது முதலில் இறைவனின் பாதத்தை பார்த்துத் தான் வழிபட வேண்டும். எப்போதும் இறைவனின் பாதத்தில் இருந்து தொடங்கி, படிப் படியாக மேல் நோக்கிச் சென்று முடியில் முடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இலக்கியத்தில் அப்படி அடி முதல் முடிவரை வர்ணித் துப் பாடும் இலக்கிய வகையை பாதாதி கேசம் என்று பொருள் கொள்கிறார்கள்.
அதாவது இறை சக்தியே இந்த உலகத்தைத் தாங்குகிறது என அர்த்தம். இறைவனே இந்த உலகத்தைத் தாங்குகிறார் எனும்போது, அந்த இறைவ னையே தாங்குவது அவருடைய பாதங்கள்தான். அதனால் அவருடைய பாதத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு பற்றிக் கொள்ளும்போது இறைவன் அனைத்து துன்பங்கüல் இருந்தும் நம்மை விடுவித்துக் காத்தருள்வார் என்கிறார்கள்.
அந்த வகையில் பெருமா üன் திருப்பாதமே மூலவராகக் காட்சியüக்கிறது இந்த சேவுகப் பெருமாள் ஆலயத்தில்.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த ஆலயம் இராம நாதபுரம் மாவட்டம், கமுதி அருகில், முத்தாதிபுரம் கிராமத் தில் ஸ்ரீ கள்ளழகரின் சொரூப மாய், ஸ்ரீ அரங்கநாதரின் அம்ச மாய் அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக் கிறது!
மிகப் பழமை வாய்ந்த இந்த சேவுகப் பெருமாள் ஆலயம் ஆலயத்தைச் சார்ந்த பங்காüகளால் பல தலைமுறைகளாக பக்தி சிரத்தையுடன் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. சுண்ணாம்பு சாந்தால் கட்டப்பட்ட இந்த ஆலயத் தில் ஆலய விக்கிரகமும் சுதையால் ஆனதுதான். ஐந்து வகையறா பூசாரிகளால் பூசை செய்யப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருட மகா சிவராத்திரியின் போதும் விரதமிருந்து, வாய்க் கட்டு பூசை செய்யப்படும். அந்த பூஜையும் நடு ராத்திரியில்தான் நடைபெறும். மூலவருக்கு வாயைக் கட்டி பூஜை செய்துவிட்டு, கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கி அருள்வார் பூசாரி. மகா சிவராத்திரியின் போது ஊரின் நடுவில் அமைந் திருக்கும் ஸ்ரீ பாம்பலம்மன் ஆலயத்தில் இருந்துதான் பூசைப்பெட்டி புறப்பாடு நடைபெற்று சேவுகப் பெருமாள் ஆலயம் வந்தடையும்.
இங்கு நடைபெறும் சிவராத்திரி விழாவின் சிறப் பைக் கேள்விப்பட்டு, தூர தேசத்தைச் சேர்ந்த இரண்டு தம்பதிகள் இந்த ஆலயத்துக்கு வந்து கண்ணீர் மல்க குழந்தைவரம் வேண்டி நின்றார்கள். அடுத்த ஆண்டே உன் குழந்தை மடியில் தவழும் என்று அருள்வாக்கைத் தந்தார் பூசாரி. அவர் வாக்குத் தந்தது மாதிரியே குழந்தைப் பேறும் பெற்றனர் அந்தத் தம்பதியினர். அது முதற்கொண்டு அவர் களும், அவர்கள் சந்ததியினரும் ஒவ்வொரு வருட சிவராத்திரி யின் போதும் தவறாமல் ஆலயத்துக்கு வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர்.
இப்படிப் பலரின் வேண்டுதல்களை நிறைவேற்றிய திருக்கோவில் இந்த சேவுகப் பெருமாள் ஆலயம்.
நுற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயம் அடிக்கடி பழுது பட்டு வந்த நிலையில் சேவுகப் பெருமாளுக்காக ஒரு பாங்கான ஆலயம் கட்ட முனைந்தார்கள். முன்னோர்கüன் ஆசி யோடும், இளையோர்கüன் துணை யோடும் கட்டி முடிக்கப்பட்ட சேவுகப் பெருமாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷே கம் கடந்த மாதம் 08-03-2025 சனிக்கிழமை மற்றும் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை கüல் மிகச்சிறப்பாக நடந்தேறியது.
ஸ்ரீ சேவுகப் பெருமாள் மற்றும் சக்தி சொரூபமாய் அன்னை மீனாட்சி யின் வடிவாய் அமைந்திருக்கும் ஸ்ரீ பாம்பலம்மன் மற்றும் ஸ்ரீ பதினெட் டாம்படி கருப்பர், ஸ்ரீ கோட்டைக் கருப்பர், ஸ்ரீ நொண்டிச் சோணை, உடனான பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி சேவுகப் பெருமாள் கோயிலில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், திரு உத்தரகோசமங்கை ஆலயம், மற்றும் கொடுமலூர் குமரக் கடவுள் ஆலய அர்ச்சகருமான சிவஸ்ரீ ச. நவநீதகிருஷ்ணன் சிவாச்சார்யார் அவர்கள் தலைமை யிலான 11 பேர்கொண்ட அர்ச்சகர்கள் குழுவினர் யாகசாலையில் அமைக்கப் பெற்றிருந்த 94 கலசங்கüல் புனித நீர் நிரப்பி வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களோடு மேளதாளம் முழங்க கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். அவர் களோடு காப்பு கட்டி விரதமிருந்த ஆலயத் தின் பங்காüகளும் உடன் வந்தனர். பின்னர் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் பட்டாச்சார்யார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீரை ஊற்றிக் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
அதன்பின் பக்தர்கள் மீது புனித நீர் தெüக்கப்பட்டது. அப்போது, "கோவிந்தா, கோவிந்தா' என தெய்வீக முழக்கமிட்டு இறைவனை வழிபட்டனர் பக்தர்கள். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சேவுகப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆலயப் பங்காüகள் மற்றும் குடிமக்கள், கிராமப் பொதுமக்கள் ஆகியோர் திரளாகப் பங்கு பெற்றனர்!