Advertisment

அற்புதங்கள் அருளும் ஸ்ரீ முத்தப்பன் மடப்புரா ஆலயம்!

/idhalgal/om/sri-muthappan-madapura-temple-which-blessed-miracles

ஸ்ரீ முத்தப்பன் மடப்புரா சன்னதி...

இந்த ஆலயம் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில்... அக்கரை பகுதியில்... வி.ஜி.பி.தங்கக் கடற்கரைக்கு எதிரில் இருக்கிறது.

தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் முத்தப் பனை வழிபடுவதற்காக வருகிறார்கள்.

வாழ்க்கையில் தங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளை அவர்கள் முத்தப்ப னிடம் முறையிடுகிறார்கள். பக்தர்களின் குறைகளை நீக்கி, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்கிறார் முத்தப்பன்.

முத்தப்பனைப் பற்றிய வரலாறு மிகவும் சுவாரசியமானது. அதைத் தெரிந்து கொள்ளும்போது, உங்களுக்கு அவரின் மீது வியப்பும் மதிப்பும் உண்டாகும்.

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மட்டன்னூர் என்ற ஊருக்கு அருகில்... எருவெஸ்ஸி என்ற இடத்தை பிராமண குலத்தைச் சேர்ந்த... பாரம்பரிய பெருமை கொண்ட ஒருவர் ஆண்டிருக்கி றார்.

அவரின் மனைவியின் பெயர் பாடிக் குட்டி அந்தர்ஜனம். இருவரும் 50 வயது களைத் தாண்டிவிட்டார்கள். எனினும், அவர்களுக்கு குழந்தை இல்லை.

இருவரும் சிவ பக்தர்கள். தங்களுக்கு குழந்தை பாக்யம் வேண்டும் என்று அவர்கள் தினமும் பகவான் சிவனிடம் வேண்டிக் கொண்டே இருந்தார்கள்.

சிவன் அவர்களின் கனவில் தோன்றி, "உங்களின் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும்'' என்று கூறியிருக்கிறார்.

அருகிலிருந்த வாவாழிப்புழை என்ற ஆற்றில் ஒருநாள் அந்த பெண் குளித்துக் கொண்டிருக்க, ஆற்றின் நடுவிலிருந்த திருநெற்றிக்கல் என்ற பாறையில் ஒரு ஆண் குழந்தை அழுதவாறு படுத்துக் கிடந்திருக்கிறது.

அதற்கு அருகில் பைரவரான ஒரு நாய்...

அந்த அதிசய குழந்தையுடன் வீட்டிற்கு வந்த இல்லத்தரசி அதைத் தன

ஸ்ரீ முத்தப்பன் மடப்புரா சன்னதி...

இந்த ஆலயம் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில்... அக்கரை பகுதியில்... வி.ஜி.பி.தங்கக் கடற்கரைக்கு எதிரில் இருக்கிறது.

தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் முத்தப் பனை வழிபடுவதற்காக வருகிறார்கள்.

வாழ்க்கையில் தங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளை அவர்கள் முத்தப்ப னிடம் முறையிடுகிறார்கள். பக்தர்களின் குறைகளை நீக்கி, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்கிறார் முத்தப்பன்.

முத்தப்பனைப் பற்றிய வரலாறு மிகவும் சுவாரசியமானது. அதைத் தெரிந்து கொள்ளும்போது, உங்களுக்கு அவரின் மீது வியப்பும் மதிப்பும் உண்டாகும்.

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மட்டன்னூர் என்ற ஊருக்கு அருகில்... எருவெஸ்ஸி என்ற இடத்தை பிராமண குலத்தைச் சேர்ந்த... பாரம்பரிய பெருமை கொண்ட ஒருவர் ஆண்டிருக்கி றார்.

அவரின் மனைவியின் பெயர் பாடிக் குட்டி அந்தர்ஜனம். இருவரும் 50 வயது களைத் தாண்டிவிட்டார்கள். எனினும், அவர்களுக்கு குழந்தை இல்லை.

இருவரும் சிவ பக்தர்கள். தங்களுக்கு குழந்தை பாக்யம் வேண்டும் என்று அவர்கள் தினமும் பகவான் சிவனிடம் வேண்டிக் கொண்டே இருந்தார்கள்.

சிவன் அவர்களின் கனவில் தோன்றி, "உங்களின் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும்'' என்று கூறியிருக்கிறார்.

அருகிலிருந்த வாவாழிப்புழை என்ற ஆற்றில் ஒருநாள் அந்த பெண் குளித்துக் கொண்டிருக்க, ஆற்றின் நடுவிலிருந்த திருநெற்றிக்கல் என்ற பாறையில் ஒரு ஆண் குழந்தை அழுதவாறு படுத்துக் கிடந்திருக்கிறது.

அதற்கு அருகில் பைரவரான ஒரு நாய்...

அந்த அதிசய குழந்தையுடன் வீட்டிற்கு வந்த இல்லத்தரசி அதைத் தன் கணவரின் கைகளில் கொடுக்க, "எங்கிருந்து கிடைத்தது இந்த முத்து?'' என்று அவர் கேட்டிருக்கிறார்.

அந்த தெய்வத் தன்மை கொண்ட குழந் தைக்கு "முத்தப்பன்' என்ற பெயர் இப்படித் தான் வந்தது.

குழந்தை தங்களுக்குக் கிடைத்த சந்தோஷத் தில் அன்னதானம், கோதானம், வஸ்திர தானம் என்று பல தர்மச் செயல்களை அந்த தம்பதிகள் செய்திருக்கின்றனர்.

தரமான ஒரு பசுவின் பாலை தினமும் குழந்தைக்குப் புகட்டி அவர்கள் வளர்த்தார் கள்.

Advertisment

ss

குழந்தை வளர்ந்து, 12 வயதை அடைந்து விட்டான்.

அந்த ஊரில் அப்போது மக்களிடையே ஜாதி பிரச்சினை பெரிய அளவில் இருந்தது.

முத்தப்பன் எப்போதும் தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே இருந்தான்.

தென்னங் கள்ளைப் பருகி னான். மாமிசத்தை உண்டான். மீன் கறியைச் சுவைத்து சாப்பிட்டான்.

அம்பு, வில் ஆகியவற்றுடன், நாயையும் அழைத்துக்கொண்டு வேட்டைக்குச் சென்றான்.

படிப்பில் முதல் மாணவனாக இருந்தான்.

பல வேதங்களையும் கற்றான்.

துவாபர யுகம் முடிவடைந்து, கலியுகம் ஆரம்பித்திருந்தது.

பிராமண குடும்பத்தில் புலால் உண்ணும் சிறுவனா? பலரும் அதை வியப்புடன் பார்த்தனர்.

ஒருநாள் அறைக்குள் நெருப்பு பறக்கும் கண்களுடன் இருக்கும் தங்களின் மகனை அந்த தந்தையும் தாயும் பார்த்தனர்.

அவர் கடவுளின் அவதாரம் என்பதை அவர் கள் புரிந்து கொண்டனர். அவர் சிவனின்...பெருமாளின் அவதாரம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அவரின் கால்களில் விழுந்து அவர்கள் வணங்கினார்கள்.

அட்டூழியங்களுக்கு எதிராக தான் அவதரித் திருப்பதாக அவர் கூறினார்.

"ஒரே நிலையில் மனித உயிர்கள் இந்த உலகில் படைக் கப்பட்டிருக்க, ஜாதிகளை வைத்து அவர்கள் காலப் போக்கில் பிரித்து வைக்கப் பட்டு விட்டனர். அதற்கு எதிராக வந்திருப்பவனே நான்'' என்றார் அவர்.

அவரின் கண்களிலிருந்து பறந்த நெருப்புப் பொறிகளால் தாவரங்கள் கருகின. அதைப் பார்த்த அவரின் அன்னை, கண்களைக் கட்டிக் கொள்ளும் படி கூறினார். அதற்கு அவர் சம்மதித்தார்.

"எனக்கு கடமைகள் நிறைய இருக்கின்றன. அன்னையே... நான் புறப்படுகிறேன். நீங்கள் எப்போது அழைத் தாலும், நான் வருவேன்'' என்று கூறிவிட்டு, அவர் அங்கிருந்து கிளம்பினார்.

பறவைகளும் நாயும் அவருடன் சேர்ந்து பயணித்தன. போகும் வழியில் குன்னத்தூர் பாடி என்ற ஊரை முத்தப்பன் அடைந்தார்.

நீண்ட தூரம் நடந்து வந்திருந்த அவர் அங்கிருந்த தென்னை மரத்திலிருந்த கள்ளைப் பருகினார்.

இது தொடர்ந்து நடந்தது.

அந்த தென்னந்தோப் பிற்கு உரிமையாளர் சாந்தன் என்பவன். அவன் முத்தப்ப னைக் கடுமையான வார்த்தை களால் திட்டினான்.

முத்தப்பன் அவனை கோபமாக பார்க்க, அடுத்த நொடியிலேயே அவன் சிலையாக ஆகிவிட்டான்.

மறுநாள் அவனைத் தேடி அவனுடைய மனைவி கல்லாய் குட்டி என்பவள் வந்தாள்.

மரத்தின்மீது வெண்ணிற முடியுடன் ஈஸ்வரனின் தோற்றத்தில் இருந்த முத்தப் பனைப் பார்த்தாள்.

அவள் "முத்தப்பா... என்

கணவனை எனக்குத் தா''

என்று கூறி அழுதாள். சிலை யாக இருந்த அவளின் கணவனை மீண்டும் மனித உருவத்திற்குக் கொண்டு வந்தார் முத்தப்பன்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவர்கள் முத்தப்பனை தங்களின் வீட்டிற்கு அன்புடன் அழைத்துச் சென்றார்கள்.

அவருக்கு கள், மீன், கருவாடு, தேங்காய், இறைச்சி ஆகியவற்றைக் கொடுத்து உபசரித் தார்கள்.

தொடர்ந்து முத்தப்பனுக்காக அவர்கள் ஒரு கோவிலைக் கட்டினார்கள்.

முத்தப்பனுக்காக உருவாக்கப்பட்ட முதல் கோவில் அதுதான்.

அங்கிருந்து முத்தப்பன் புரளி மலை என்ற இடத்திற்குச் சென்றார்.

அங்கு முத்தப்பனுக்கு கள்ளில் நாகத்தின் விஷத்தைக் கலந்து கொடுத்தார்கள்.

அதைப் பருகிய முத்தப்பனுக்கு எதுவுமே நேரவில்லை.

அவருக்கு அதைத் தந்தவர்கள் மண்ணில் புரண்டு அழுதார்கள். அவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள்.

புரளிமலையில் இருந்தபோது, தூரத்தை நோக்கி ஒரு அம்பை எய்தார் முத்தப்பன். அந்த அம்பு பரஸினிக் கடவு என்ற இடத்தில் போய் விழுந்தது.

அந்த இடத்தில் முத்தப்ப னுக்கு ஒரு கோவில் உண்டாக் கப்பட்டது.

அந்த ஆலயத்தைக் கட்டிய வர் குன்னும்மல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர்.

அந்த பிரம்மாண்ட கோவில் இப்போது புகழ் பெற்ற கோவிலாக ஆகிவிட்டது.

அந்த ஆலயத்தின் நுழை வாயிலின் இரு பக்கங்களிலும் நாய்களின் சிலைகள் இருக் கின்றன.

வண்ணான் குலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வேட மணிந்து ஆடுவார்கள்.

திருவப்பன், வெள்ளாட்டம் என்ற இரு வேடங்களில் அங்கு தினமும் ஆட்டம் நடைபெறும்.

திருவப்பன் விஷ்ணுவையும், வெள்ளாட் டம் சிவனையும் குறிக்கிறது. அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நடனங்களை ஆடுபவர் களை வணங்கி, தங்களின் மனதிலுள்ள பிரச்சினைகளை வெளியிடுவார்கள்.

அவர்களின் கோரிக்கைகளை நிச்சயம் முத்தப்பன் நிறைவேற்றுவார் என்ற ஆழமான நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும்.

அப்போது அவர்கள் முத்தப்பனுக்கு கள், இறைச்சி, தேங்காய், மீன், கருவாடு, பச்சைப் பயறு ஆகியவற்றைப் படை யல்களாக வைப்பார்கள்.

மலையாள தனு, மகரம் மாதங்களில் அங்கு திருவிழா நடைபெறும்.

அந்த கோவில் கண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

சென்னையில் உள்ள "ஸ்ரீ முத்தப்பன் மடப்புரா' என்ற இந்த கோவில் 1994-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

தொழிலதிபர் புருஷோத் தமன் கல்லாட்டின் மகன் களான பிரேம் கல்லாட், பிரசாந்த் கல்லாட், ப்ரீனந்த் கல்லாட் ஆகியோர் இதை நிர்வாகம் செய்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் பொறுப் பாளராக எம்.புருஷோத்தமன் இருக்கிறார். தினமும் முத்தப் பனுக்கு அர்ச்சனை செய்ப வரும், அன்றாட காரியங் களைப் பார்த்துக்கொள் பவரும் இவர்தான். ஆன்மிக பணிக்காக வருமானம் தந்து கொண்டிருந்த தன் வர்த்தக நிறுவனங் களை உதறி விட்டு வந்த முத்தப்பனின் பக்தர் இவர்.

இந்த கோவில் தினமும் காலை 7.00 மணியிலிருந்து பகல் 1.00 மணிவரையும், மாலை 4.30 மணியிலிருந்து இரவு 9.00 மணிவரையும் திறந்திருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் திறந் திருக்கும். அன்று மதியம் இங்கு அன்னதானம் வழங்கப்படும்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர், ஜூன் மாதங்களில் இந்த "முத்தப்பன் மடப்புரா சன்னிதான'த்தில் விசேஷ திருவிழா நடைபெறும்.

அப்போது இங்கு "வெள்ளாட்டம்' நடக்கும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பகவான் முத்தப்பனின் அருளைப் பெறுவதற்காக வருவார்கள்.

மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் முத்தப்பன் அப்போது தீர்த்து வைப்பார்.

குழந்தை பாக்கியம் இல்லாத பலர் இங்கு வந்து முத்தப்பனைத் தொழுது, குழந்தை பெற்றிருக்கின்றனர். குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சினைகளைச் சந்தித்தவர்கள் அவற்றிலிருந்து மீண்டிருக்கின்றனர்.

இப்படிப்பட்ட பல அற்புதங்களைச் செய்த வர் முத்தப்பன்.

நீங்களும் முத்தப்பனின் பேரருளைப் பெறுவதற்கு இந்த "ஸ்ரீ முத்தப்பன் மடப்புரா சன்னதி'க்கு வந்து பயன் பெறலாமே?

Advertisment
om010525
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe