பாகம்-2

ஆர். மகாலட்சுமி M.A.M.phil (Astrology)

Ph: 9444961845

ss

Advertisment

மாற்றம் ஒன்றே மாறாதது!

உலகில் ஒரு வழக்குச்சொல் உறுதியாக உண்டு. அது "மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதுதான். ஆம்; அது உண்மைதான். உலகத்தில் அனைத்தும் மாறிக்கொண்டேதான் இருக்கும். ஓரறிவு ஜீவன்முதல் ஆறறிவு மனிதன்வரை மாற்றங் கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. மாறுதல் உண்டாகும் விஷயங்கள் எத்தனையோ உள்ளன.

Advertisment

அவற்றுள் ஒன்று இடமாறுதல். இது ஒருவர் வசிக்குமிடம், வேலை செய்யுமிடம், தொழில் செய்யுமிடம், கல்வி கற்குமிடம், மருத்துவ சேவை பெறுமிடம், ஆன்மிக ஆற்றல் பெறுமிடம், அரசு சேவை, அரசியல் செய்யுமிடம் என ஒரு மனிதரின் வாழ்வோட்டம் சம்பந்தப்பட்ட இடங்களும் மாறிக்கொண்டேதான் இருக்கும்.

இந்த இடமாறுதலைக் கூறுவது ஜோதிடத்தின் 12-ஆமிடமாகும்.

ஜாதகத்தில் 12-ஆமிட அதிபதி, 12-ஆமிட அதிபதி சாரம், 12-ஆமிட அதிபதி இணைவு மற்றும் பரிவர்த்தனையானது எந்த பாவாதிபதியுடன் உள்ளதோ அதன் சம்பந்த மாற்றம், இடமாறுதல் அதன் தசா புக்தி அந்தர காலங்களில் நடக்கும்.

12-ஆமிடமும் லக்ன சம்பந்தமும்

எப்போதும் லக்னமானது 12-ஆமிட- 12-ஆமதிபதி சம்பந்தம் பெறுவது அவ்வளவு சிலாக்கியமானதல்ல. ஏனெனில் லக்னம் என்பது ஜாதகரைக் குறிப்பது. ஒரு ஜாதகர் அவசியமானால் இடமாற்றம் செய்வது தவிர்க்கமுடியாதது. சிலசமயம் இடமாற்றமானது வாழ்க்கையில் ஏற்றத்தைக் குறிக்கும் வகையிலும் அமையும். ஆனால் எப்பொழுது பார்த்தாலும் இடமாறுதல் செய்வது ஏற்புடையதல்ல.

அந்த மனிதர் சோர்ந்துவிடுவார். இத்தகைய வர்கள் பெரும்பாலும் தங்கள் பிறந்த இடத்தில் வாழமாட்டார்கள். இவர்கள் அரசியல் தொடர்பு கொண்டிருந்தால், இருக்கும் அத்தனை கட்சிகளிலும் இடம் மாறி விடுவார்கள். அடிக்கடி வெகுதூரப் பயணம் மேற்கொள்வர். முக்கிய விஷயத் திற்காக இவர்களைத் தேடும்போது, இவர்கள் இடம் மாறிக்கொண்டே இருப்பதால் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை இழந்து விடுவார்கள். அனேக மாக இவர்களில் பலரது தலை வழுக்கைவிழுந்து காணப்படும். லக்னம், 12-ஆமிட சம்பந்தமான மாறுதல் முழுக்க முழுக்க ஜாதகரைச் சார்ந்தே அமையும்.

12-ஆமிடம், இரண்டாம் வீட்டு சம்பந்தம்

12-ஆமதிபதியும் 2-ஆமதிபதியும் சம்பந்தப்படும்போது விளையும் இடமாற்றம்- பள்ளிக்கூடம் மாறுதல், பற்கள் பெயர்ந்துபோதல், அசையும் சொத்து இடமாற்றம், வீடு மாற்றம், நகை மாற்றம், கண் லென்ஸ் மாற்றம், மாட்டுக் கொட்டகை மாற்றம், வியாபார இடமாற்றம், ஜோதிடர்கள், வழக்கறிஞர்கள், குறிசொல்பவர்கள் என இவர்கள் செய்யும் தொழில் சார்ந்த இடமாற்றம், டியூஷன் சென்டர் இடமாற்றம், பணம் கொடுக்கல்- வாங்கல் செய்வோர் இடமாற்றம், பத்திர விற்பனையாளர்கள் இடமாற்றம், மருத்துவமனை, சிறையில் இருப்போர் இடமாற்றம் என இவ்வித மாற்றங்கள் நிகழும்.

12-ஆமிடம், 3-ஆமிடம் சம்பந்தம்

காதணிக் கடை வைத்திருப்போர், செருப்புக் கடை முதலாளி, பொழுது போக்கு ஸ்தாபனம், ஆரோக்கிய மேம்பாட்டுக் கூடங்கள், பணியாட்களை வேலைக்கு அமைத்துக் கொடுப்போர், வாகனங் களை வாடகைக்கு விடுவோர், விளையாட்டுப் பயிற்சி மையம், மதம் சம்பந்தமான பணி நிலையம், செய்தி பத்திரிகை, கைபேசிக் கடை, தொலைக்காட்சி நிலையம், தொலைக்காட்சி நிகழ்ச்சி நிலையம், அச்சகம், நூல்நிலையம், வாடகைக்கு வீடுபிடித்துத் தருவோர், கல்வி பயிற்சி நிலையம், மன வளர்ச்சி நிலையம், காது, தொண்டை மருத்துவ மனை, சித்த பிரம்மையை சரியாக்கும் இடம் என மேற்கண்ட தொழில்கொண்டவர்கள் 12-ஆமதிபதி, 3-ஆமதிபதி தொடர்புகொள்ளும்

புக்தி, அந்தர காலங்களில் கண்டிப்பாக இடமாற்றம் செய்வார்கள்.

12-ஆமிடம், 4-ஆமதிபதி சம்பந்தம்

12, 4-ஆமதிபதி சம்பந்தம் உண்டாக்கும் இடமாற்றம் என்பது- கல்வி நிலையம், வீடு, கடை, பட்டு, வாகனம், எண்ணெய்க் கடை, துணிக்கடை, கிணறு, குளிர்பானக் கடை, பால்- தயிர்- மோர் கடை, மருந்துக்கடை, திருமண மண்டபம், விவசாய நிலம், தோட்டம், மாடித் தோட்டம், பண்ணைகள், மீன் குட்டைகள், பசு- எருமை- ஆடு- குதிரைகள் இருக்கும் கொட்டகைகள், வாகனம் நிறுத்துமிடம், மூலி-கைக்கடை, பள்ளி, கல்லூரி இடங்கள், விளையாட்டு மைதானம், மனை, வீடு விற்பனை செய்யுமிடம், ஜபம்- மந்திரம் சொல்லுமிடம், நினைவுச்சின்னமுள்ள இடம் என இவைசார்ந்த இடங்கள் 12, 4-ஆமிட சம்பந்தம் பெறும்போது இட மாறுதல்களை சந்திக்கும்.

12, 5-ஆமிட சம்பந்தம்

குழந்தைகள் அறை, மாணவர்களின் பள்ளி, கல்லூரி, ஆடைகள் விற்கும் கடைகள், ஆடைகள் அடுக்கும் அலமாரி, காதலர்கள் சந்திக்குமிடம், மருத்துவம் பார்க்கு மிடம், சங்கீதம் கற்குமிடம், மழலையர் பள்ளி, பொழுதுபோக்கு மிடம், விளையாடு மிடம், தொலைக்காட்சி படப்பிடிப்பு நடத்துமிடம், திரைப்படம் தயாரிக்குமிடம், திரையரங்கு, இசை- நடனம் கற்கும் மற்றும் கற்பிக்கும் இடங்கள், அமைச்சர்களின் வீடு, கலைநுணுக்கப் பொருட்கள் செய்யுமிடம், பங்கு பத்திரம் விற்குமிடம், மந்திரங்கள் கற்கும்- கற்பிக்குமிடம், உணவுசார்ந்த இடம், ஹோட்டல், பாட்டனாரின் வீடு போன்றவை 12-ஆமதிபதி, 5-ஆமதிபதியின் தசா, புக்தி, அந்தர காலங்களில் இடமாற்றங் களைச் சந்திக்கும்.

12, 6-ஆமிட சம்பந்தம்

இந்த இணைவு இருப்பின், தாய்மாமன் வீடு, எதிரிகள் உள்ள இடம், கடன் கொடுக்குமிடம்- கடன் வாங்குமிடம், பிச்சை எடுக்குமிடம், சிறைச்சாலை இடமாற்றம், மருத்துவமனை மாற்றம், வேலையாட்கள் இடமாற்றம், தொழிலாளர்கள் இடமாற்றம், மருந்துக்கடை, பஞ்சாயத்து செய்யுமிடம் மாற்றம், வழக்குகள், வழக்கறிஞர்களின் அலுவலங்கள், நீதிமன்றங்கள் இடமாற்றம், வாடகை வீடு மாற்றம், தன் கைப்பொருள் திருடர்மூலம் இடமாற்றம், வட்டி வியாபாரம் மாற்றம், இலவச உணவுக்கூட மாற்றம் என இடமாற்றங்களைத் தரும்.

12, 7-ஆமிட சம்பந்தம்

12, 7-ஆமதிபதிகள் சம்பந்தமானது- திருமணம் மூலம் வீடு மாற்றம், திருமண மண்டபம் இடமாற்றம், தெரு மாற்றம், வியாபார பங்குதாரர்களின் இடமாற்றம், வியாபார ஸ்தலம் மாற்றம், வழக்கு எண் மாற்றம், அழகு மலர்க்கடை மாற்றம், வாசனை திரவியக் கடை மாற்றம், குளிர்பானக் கடை மாற்றம். சுவையான இனிப்புப் பலகாரக்கடை இடமாற்றம், வெளிநாடு சம்பந்த மாற்றம், சில கணவன்- மனைவி இடமாற்றம், பால் விற்பனை, பால் அட்டை வாங்குமிடம் மாற்றம், நெய்க்கடை மாற்றம், ரகசியத் தொடர்புகள் இடமாற்றம், சிறுநீரக மாற்றம், சொத்து இடமாற்றம் போன்றவை நிகழும். சிலருக்கு இவ்வுலகிலிருந்து மேலுலகத்திற்கு இடமாற்றமும் உண்டு.

12, 8-ஆமிட சம்பந்தம்

உடலுறுப்புகள் இடமாற்றம், சிறை இடமாற்றம் (வீட்டிலி-ருந்து சிறை அல்லது சிறையி-லிருந்து வீடு), தாலி- மாற்றம், வழக்குகள் இடமாற்றம், வெளிநாடு மாற்றம், புதையல் இடமாற்றம், பண மாற்றம், ஆயுதக்கிடங்கு மாற்றம், நெருப்புத் தொழில் மாற்றம், அடகுக்கடை, சுடுகாடு இடமாற்றம், மரம் இடமாற்றம், கடன் மாற்றம், இன்ஷூரன்ஸ் இடமாற்றம், அறுவை சிகிச்சை மருத்துவமனை இடமாற்றம், கசாப்புக்கடை மாற்றம், ஏற்றுமதி- இறக்குமதி அலுவலகங்கள் மாற்றம், வங்கி மாற்றம் என 12-ஆமதிபதி, 8-ஆமதிபதி சம்பந்தமானது இடமாற்றங் களைத் தரும்.

12, 9-ஆமிட சம்பந்தம்

மேற்கண்ட சம்பந்த காலத்தில் சிலரது குலகுரு இடமாற்றம் செய்வார். மேலும் ஆசிரியர், உயர்கல்வி, கல்லூரி, தந்தையின் பெயரிலுள்ள, சொத்து, யானை கட்டுமிடம், குதிரை லாயம், பசுமடம், சில கோவில்கள், திருமண அமைப்பிடம், புத்தக அலமாரி, சட்டரீதியான இடங்கள், புத்தக வெளியீட்டு அலுவலகம், சில பல்கலைக்கழகங்கள், சில கிணறுகள், ஏரிகள், பணப்பரிவர்த்தனை இடம், தியானம் கற்பிக்குமிடம், ஆராய்ச்சி நிலையங்கள், தெய்வ வழிபாட்டுக்கூடம், வைதீக செய்முறை இடங்கள், பயண அமைப்பு அலுவலகம், வெளிநாட்டு வர்த்தக அமைப்பு, கப்பல் சார்ந்த இடம், விமான நிலையம், போக்குவரத்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள், யாகம் செய்யுமிடம், ஜீவகாருண்ய நிலையம், உபதேச மன்றம் என இவ்வாறான இடங்கள் இடப்பெயர்ச்சி பெறும். குறிப்பாக கோவில், கடவுள்சிலை போன்றவை இடமாற்றம் பெறுவது நடக்கும். சிலர் பூஜையறையை இடம் மாற்றுவர். (கோவிலி-ல் சுவாமியின் இடமாற்றம் என்பது ஆலய கும்பாபிஷேகத்தின்போது நடக்கும்.)

12, 10-ஆமிட சம்பந்தம்

12-ஆமதிபதி, 10-ஆமதிபதி சம்பந்தம் உண்டாக்கும் இடமாற்றங்கள்:

தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வியாபார "மால்'கள் மற்றும் கடைகள், அரசு வேலை, விவசாயப் பணிகள், மருத்துவமனை, டியூஷன் சென்டர்கள், நீதிமன்றங்கள், தகனம் செய்யுமிடம், மண்டபங்கள், அர்ச்சனை செய்யுமிடம், சந்நியாசி மடங்கள், தாயார் வசிக்குமிடம், குதிரைப் பயிற்சிக்கான இடம், சேவை புரியுமிடம், மருந்துக்கடைகள், சில அணைக்கட்டுப் பகுதிகள் போன்ற அனைத்து வேலைசெய்யும் இடங்களும் இந்த 12, 10-ஆமதிபதிகளின் தசை, புக்தி, அந்தர காலங்களில் மாற்றங்கள் நடைபெறும். 10-ஆமிடம் என்பது கர்ம ஸ்தானம். எனவே அது சம்பந்தமான இடப்பெயர்ச்சியும் மாறுதலும் உண்டு.

12, 11-ஆமிட சம்பந்தம்

மேற்கண்ட அதிபதிகளின் சம்பந்தமானது நிறைய அரசியல் இடமாற்றங்களை ஏற்படுத்தும். மூத்த சகோதரரின் வீடு, லாபங்களின் அஸ்திவார இடங்கள், வருமானம் குவிக்கும் இடங்கள், சித்தப்பாவின் வீடு, பூர்வீக சொத்து, ஆபரணக் கடை, அமைச்சர் பதவி, மைத்துனர் மாற்றம் (இது ரகசிய மனைவி வருவதால் ஏற்படும்), சமையலறை, காதணி, பதவி உயர்வால் இடமாற்றம், வழக்குகள், மாநகர இடம், பஞ்சாயத்து நிலம், சில நிறுவனங்கள், சொசைட்டி, ஆடம்பரப் பொழுதுபோக்கு இடங்கள், நண்பர்களை சந்திக்குமிடம் என இவை சார்ந்தவை மாற்றம் பெறும். அரசு இடத்தை தன் பெயருக்கு பட்டாபோட்டு மாற்றிக்கொள்வதும், மூட்டு வலி-யால் மூட்டு இடம்பெயர்தலும் நடக்கும்.

12-ஆமதிபதி சுய சாரம் மற்றும் ஆட்சியாக அமர்ந்திருந்தால் படுக்கையறை மாற்றம், கட்டில் மாற்றுவது, வெளிநாடு மாற்றம், பாதங்கள், சிறைவாசம், முன்னோர்களின் சொத்து, சில உடலுறுப்புகள் இடமாற்றம், தம்பதிகளின் மாற்றம், முதலீடு மாற்றம், குடும்பத்தில் மாற்றம், இரண்டாவது தொழில் இடமாற்றம், ரசாயன ஆய்வு இடமாற்றம், சிலர் பிறரிடம் ஏமாந்து இடமாற்றம், குற்றம்சாட்டப்பட்டு இடமாற்றம், அதீத செலவுகளால் வீடு மாற்றம், மருத்துவமனைக்குச் செல்வதால் மாற்றம் என 12-ஆமதிபதி, சாரநாதன், 12-ஆமதிபதியின் காரக கிரகம் ஆகியவற்றை அனுசரித்து இடமாற்றங்கள் ஏற்படும்.

நம் கண்ணெதிரே தினமும் இடமாறுதல் பெற்று அசைந்து கொண்டிருப்பவர்கள் சூரியனும் சந்திரனும்தான். எனவே நல்ல இடமாறுதல் விரும்புபவர்கள் சூரியனையும் சந்திரனையும், பிரதோஷ கால சிவனையும், பௌர்ணமி நாளில் அம்பாளையும் வணங்கவும். எல்லா இடமாறுதலும் இனிய மாற்றமாக அமையும்.

-----------------------------

12 பாவாதிபதிகள் தரும் லாபங்கள்!

ஒரு ஜாதகத்தில் லாபஸ்தானம் என்னும் 11-ஆமிடமும், லாபாதிபதி என்னும் 11-ஆம் அதிபதியும் நன்றாக அமைதல்வேண்டும். அவ்வாறு அமைந்தால் வாழ்க்கையானது வசதியாக- நிறைவாக அமையும்.

11-ஆமிடம் என்பது லக்னத்திற்கு லாபஸ்தானம். இது லக்னாதிபதிக்கு- அதாவது ஜாதகருக்கு நன்மைசெய்யும் இடமாகும். ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளன. இதில் லக்னாதிபதி லாப ஸ்தானம் என்னும் பதினொன்றாம் இடத்தில் இருப்பது மிக நன்மையாகும். பழம்நழுவி நேராக வாய்க்குள் விழுந்த கதையாக, ஜாதகர் விரும்பிய செயல் மிக எளிதாக நிறைவேறும். "இவனுக்குன்னு ஒரு ராசி இருக்குப்பா' என்று எல்லாரும் வியக்குமளவிற்கு வாழ்வின் போக்கு அருமையாக அமையும்.

இதுபோல் மற்ற பாவகங்களின் அதிபதிகளும் தங்கள் வீட்டிற்கு பதினொன் றில் அமைந்தால் அதுவும் ஒரு நல்ல அமைப்புதான்.

இரண்டாம் அதிபதி

இரண்டாமிடத்தின் லாப ஸ்தானம் என்பது பன்னிரண்டாம் வீடு. இரண்டாமிடம் என்பது தன ஸ்தானம். 12-ஆமிடமோ விரய ஸ்தானம்.

அப்படியானால் பணம் கொடுக்கும் அதிபதி விரயத்தில் போய் நிற்கிறாரே என்று தோன்றும். ஒருவகையில் அது சரிதான். எனினும் தனாதிபதியின் லாப ஸ்தானத்தில் அவர் நின்றதால் பணம் வந்துகொண்டே இருக்கும்; செலவு செய்துகொண்டே இருக்கும் நிலை ஏற்படும். இறைக்க இறைக்க தண்ணீர் ஊறும் என்ற கதையாக, இவர்கள் செலவழிக்க செலவழிக்க பணம் வந்துகொண்டே இருக்கும். எனினும் சேமிப்பு என்னும் ஒன்று இருக்குமா என்பது சந்தேகமே.

மூன்றாம் அதிபதி

மூன்றாம் அதிபதியின் லாபஸ்தானம் லக்னம்தான். 3-ஆமிடம் என்பது தைரிய, வீர ஸ்தானம். எனவே ஊரே கொள்ளை போனாலும் இவர்கள் ஏதாவது அடித்துப்பிடித்து முன்னேறி விடுவார்கள். ஆட்டைத் தூக்கி குட்டியில்போட்டு, குட்டியைத் தூக்கி ஆட்டில்போட்டு என ஜெகஜ்ஜால வேலைகளையெல்லாம் செய்து நினைத்ததை நிறைவேற்றிவிடுவார்கள். இவர்கள்மீது புகார் கொடுத்தாலும், இவர்கள் செய்யும் சாதுர்ய வேலைகளில், "அட, நான் கனவுதான் கண்டேன்; நிஜமல்ல' என்று, புகார் கொடுத்தவர்கள் தெறித்து ஓடிவிடுவர். இந்த கரைகண்ட சாமர்த்தியம் இவர்களை வாழ்வின் வெற்றிப் படிகளில் ஏறவைத்துவிடும்.

நான்காம் அதிபதி

நான்காம் அதிபதியின் லாப ஸ்தானம் இரண்டாமிடம். நான்காம் இடம் வீடு, மனை, வாகனம், தாய், சுகம் ஆகியவற்றைக் குறிப்பது. இந்த இடத்தின் அதிபதி தனது லாப ஸ்தானமான இரண்டாமிடத்தில் அமர்ந்தால், ஜாதகர்களின் லாபம், பணவரவெல்லாம் பேச்சுத் திறமையால் அமையும். இவர்கள் ரியல் எஸ்டேட், வாகன டீலர்கள், மனை விற்பனை, திரவ சம்பந்தமான வியாபாரம் என எந்தத் தொழிலை அடிப்படையாகக் கொண்டாலும், பேசிப்பேசியே எதிரில் இருப்பவர்களைக் கவிழ்த்து விடுவார்கள். இவர்கள் நிர்ணயித்த விலைக்கு, வாங்குபவர்களைத் தன் பேச்சினால் சம்மதிக்கவைத்து விடுவார்கள். ஆக, இவர்களது லாப வரவென்பது இவர்களது வாய் வார்த்தைகள்மூலமே இருக்கும். இன்னும் சொல்லப்போனால், தன் தாயாரிடம் அன்பாகப் பேசியே பணத்தை, சொத்தை வாங்கிவிடுவார்கள்.

ஐந்தாம் அதிபதி

ஐந்தாம் அதிபதியின் லாப ஸ்தானமென்பது மூன்றாம் இடமாகும். ஐந்தாமிடம் என்பது புத்திர ஸ்தானம். இவரது லாபாதிபதியின் மூன்றாமிடம் என்பது தைரிய ஸ்தானம். இதனால் ஜாதகர்கள் தங்கள் யோசனைகள் சரியோ தவறோ- கொஞ்சம்கூட பதட்டமில்லாமல், பயமில்லாமல் அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். இவர்களது மகா தைரியம், இவர்களது மிகச்சாதாரண யோசனைகளைக்கூட அங்கீகரிக்கச் செய்துவிடும் சிலர் "உதார்' பேர்வழிகளாக இருப்பார்கள். பொழுதுபோக்கு, விளையாட்டு, கலைத்துறை, பங்குவர்த்தகம், காதல், குறிசொல்வது, கதைசொல்வது என இவர்களது அடிப்படைத் தொழிலி-ல் தங்குதடையில்லாமல் பேசி செயலாற்றி, நிறைய லாபம் பார்த்துவிடுவார்கள். மற்றவர்கள் இவர்களது செப்பிடு வித்தையைப் பார்த்து வியந்து, விழிவிரிய மூச்சடைத்து நிற்பர். இதுவே இவர்களது வெற்றியாகும்.

ஆறாம் அதிபதி

ஆறாம் அதிபதியின் லாபவீடு நான்காம் இடமாகும். ஆறாமிடம் என்பது நோய் ஸ்தானம்; நான்காமிடம் என்பது சுக ஸ்தானம். எனவே நோய்க்குரிய மருந்துகளை அடிப்படையாகக்கொண்டு லாபம் கிடைக்கச் செய்வர். ஆறாமிடம் வாடகை வீட்டினைக் குறிக்கும்; நான்காமிடம் வீட்டினைக் குறிக்கும். இதன்மூலம் பல வீடுகளை வாடகைக்குவிட்டுப் பணம் எண்ணுவார்கள். ஆறாமிடம் சேவை ஸ்தானம். நான்காமிடம் என்னும் தாய்க்கு சேவைசெய்து நல்லபெயரும், லாபமும் பெற்றுவிடுவார்கள். ஆறாமிடம் உழைப்பு ஸ்தானம். அதிகமாக உழைத்து அசையா சொத்துகளை வாங்கிச் சேர்ப்பார்கள். ஆறாமூடம் என்னும் உழைப்பு மற்றும் சேவைக்குரிய அதிபதி நான்காமிடம் என்னும் தனது லாப ஸ்தானத்தில் அமரும்போது, உழைப்பின்மூலம் வீடு, வாகனம், நிலம், நீர்வசதி, கல்விப்பயிற்சி, வயல், தோட்டம் போன்றவற்றையும், அவை சார்ந்த சுகத்தையும் தருவார்.

ஏழாம் அதிபதி

ஏழாமிடத்தின் லாபஸ்தானம் ஐந்தாமிடம். ஏழாமிடத்தின் அதிபதி அவருடைய லாபஸ்தானத்தில் அமரும்போது, ஜாதகர் கலைத்துறையில் பிரகாசிப்பார். காதல் விஷயங்களில் கொடிகட்டிப் பறப்பார். காதல் திருமணமே செய்துகொள்வார். அதுவும் ஒன்றோடு நிறுத்திக்கொண்டால் நலமாகும். யூக வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிப்பார். ஏழாமதிபதி அனைவருடனும் தொடர்புகொள்ளும் நிலையைக் குறிப்பவர். அவரது லாப வீடான ஐந்தாமதிபதி கலை, புத்தி, கற்பனை, புது முயற்சிகள் போன்றவற்றைக் குறிப்பார். இதனால் இவர்கள் தொழில் சம்பந்தம் கொண்டோருடன் மிக சுமுகமாகப் பழகி தங்கள் நட்பு எல்லையை விரிவடையச் செய்வதனால் தான், வெகுஜன சம்பந்தம் பெருகி இவர்கள் பொதுத் தொடர்புத் துறையில் நல்ல வளர்ச்சி காண்பர். சிலசமயம் இது மிகவும் வேகமாகி, பல நபர்களைக் காதலும், சிலரைத் திருமணமும் செய்துகொள்வதுதான் சற்று பிரச்சினையாகும்.

எட்டாம் அதிபதி

எட்டாம் அதிபதியின் லாபஸ்தானம் ஆறாமிடம். ஜோதிட சாஸ்திரப்படி எட்டு மற்றும் ஆறாமிடங்கள் மறைவு, இருட்டு ஸ்தானங்களாகும். எனவே ஒரு மறைவு, துர்பாக்கிய அதிபதி இன்னொரு இருட்டான வீட்டில் மறையும்போது அதன் செயலாற்றல் மறைந்து முடங்கிவிடும். எனவே எட்டாமிடத்தின் காரகச் செயல்களான விபத்து, நஷ்டம் போன்றவை மறைந்து, மருந்துபோட்டு குணமடைந்து விடும் நிலைக்கு வந்துவிடுவர். ஒரு திருடனும் வழக்கறிஞரும் மிகவும் நட்பாகிவிட்டால் என்ன பயன்பெற இயலுமோ, அவ்வித பலன்கள் வந்தடையும். அல்லது இவ்வித அமைப்பு டையோர் செய்யும் சில திருட்டுத்தனங்கள் வெளியே தெரியாமல், அவர்களுக்கு மிகப்பெரிய சமூக சேவகர்கள் என்னும் பெயரும் கிடைத்துவிடும் நிலையும் ஏற்படும். இது மிகப்பெரிய லாபம்தானே!

ஒன்பதாம் அதிபதி

ஒன்பதாமிடத்தின் லாபஸ்தானம் ஏழாமிடம். 9-ஆமிடம் என்பது தர்ம ஸ்தானம், அதிர்ஷ்ட ஸ்தானம். 7-ஆமிடம் என்பது திருமணம், வியாபாரம் ஆகியவற்றைக் குறிக்கும். இதனால் இவர்களது திருமணம் இவர்களுக்கு பேரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும். மேலும் இவ்வமைப்புள்ள ஜாதகர்கள் தங்கள் தொழில், வியாபாரத்தில் விலையைக் குறைத்து விற்பனை செய்வர். இதன்மூலம் இவர்களது விற்பனை அதிகரித்து நிறைய லாபம் காண்பார்கள். பிரம்மாண்ட கடைகளில் நெரிசல் ஏற்படுமளவுக்கு வியாபாரமாகிறது. அதற்கு அவர்களின் விலைக் குறைப்பும் ஒரு காரணம். ஆக, இவர்கள் ஒருவிதத்தில் தர்ம சிந்தனைகொண்டு செயல்படுவதால் வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கிறதென்று கூறலாம். இவர்களது தொழில், வியாபாரம்மூலம் நிறைய தர்ம ஸ்தாபனங்களுக்கும் உதவுவர். இதுவே ஒரு தார்மீக லாபம்தானே!

பத்தாம் அதிபதி

பத்தாமிடத்தின் லாபஸ்தானம் எட்டாமிடம். பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். எட்டாமிடமோ ஒரு இருட்டு, மறைவு ஸ்தானம். இதுபோன்ற ஒரு மறைவு ஸ்தானத்தில் தொழிலதிபதி அமர்ந்துவிட்டால் எப்படி இருக்கும்? இதில் இருவித லாபம்வர வாய்ப்புண்டு. இவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவர்களது வேலையில் லஞ்சம் வந்துகொண்டே இருக்கும். இன்னொன்று, இவர்களது தொழிலே சட்டப்புறம்பாக நடக்கும் தொழிலாக அமைந்து, அதில் நல்ல லாபம் வரக்கூடும். இதில் இந்த இரு ஸ்தானாதிபதிகளின் சாரநாதர்கள் முக்கியமானவர்களாகி முடிவெடுப்பர்.

பதினொன்றாம் அதிபதி

இவரே லாபாதிபதி. இவரே இவர் வீட்டில் இருந்தால் மிகவும் நன்மை. லாபாதிபதியின் லாபஸ்தானம் ஒன்பதாம் வீடு. எனவே இவர்களது லாபம் இவர்களது தந்தையின்மூலமும், பரம்பரை சொத்துகள்மூலமும், நல்ல உயர்கல்வி மேன்மைமூலமும், வெளிநாடுகள்மூலமும், இவர்களது எண்ணப்படி- திட்டப்படி- விரும்பியபடி அருமையாக அமையும். இவர்களது லாபங்கள் தர்ம நீதிப்படியும் சட்டப்படியும் அமையுமென்பது ஒரு "பிளஸ் பாயின்ட்'தான்.

பன்னிரண்டாம் அதிபதி

பன்னிரண்டாமிடத்தின் லாபஸ்தானம் பத்தாமிடம். இவ்வமைப்புள்ள ஜாதகர்கள் எவ்வளவு தூரம் அலைகிறார்களோ அவ்வளவு லாபம் கிடைக்கும். வெளிநாடு இவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கச் செய்யும். தொழில் முதலீடுகள் நல்ல லாபம் தரும். இவ்வமைப்பு ஜாதகரின் தொழி-லில் வெளிநாட்டு சம்பந்தம் எவ்வகையிலேனும் இருப்பின், அதுவே நல்ல லாபத்தை ஈட்டித்தரும். சிலசமயம் இவர்களது சில செலவுகள் பன்மடங்கு லாபத்தைக் கூட்டிவரும். சில தொழில்கள் அடுத்த கட்டத்தைநோக்கி முன்னேறும்போது, பார்ட்டி கொடுப்பது போன்ற சிலபல செலவுகள் செய்வர். இந்த செலவுகள் இவர்களுக்கு விரயமல்ல; அது இவர்களுக்கு பன்மடங்கு லாபத்தைக் கொடுக்கும். அதனால் தொழிலதிபர்கள் பரிசுகள் கொடுப்பதை ஒரு வழக்கமாகவே வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவும் லாபமாகத் திரும்ப வருமல்லவா?

பொதுவாக, மனிதர்களுக்கு தாங்கள் எண்ணியதைவிட அதிகமாக வருவதுதான் மிகவும் பிடிக்கும். அது பணவிஷயம் மட்டுமல்ல; எல்லா விஷயங்களிலும் மனித மனம் கூடுதலாக என்ன கிடைக்குமென்றுதான் எதிர்பார்க்கும். இந்த அதிகப்படியான நன்மைகள் எளிதாகக் கிடைக்கச் செய்யுமிடமே 11-ஆமிடம். எனவேதான் இது லாப ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. லக்னம் மட்டுமல்லாமல், மற்ற 12 வீடுகளுக்கும் லாபம் கிடைப்பதென்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தானே!

------------------------------------------------------

12 ராசியினருக்கும் அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கும் பரிகாரங்கள்

வாயுவேகம், மனோவேகம் என்பர். அதாவது காற்று ஓரிடத்தில் நிலையாக இராமல் சுற்றிச் சுழன்று வீசுமோ, அவ்வாறே மனிதன் எண்ணங்களும் வேகமாக அலைபாய்ந்து கொண்டே இருக்கும். ஒன்றுதொட்டு ஒன்று என எண்ணங்களின் மீள்நீட்சி சென்றுகொண்டே இருக்கும்.

எண்ணங்கள் என்பது என்ன? ஒருவரின் ஆசைகள், லட்சியங்கள், திட்டங்கள், எதிர்கால வாழ்க்கை மேம்பாட்டுச் சிந்தனைகள், சிலசமயம் நல்ல எண்ணம், சிலசமயம் கெட்ட எண்ணம், சில சமயம் சமூகத்துக்கு ஒவ்வாத எண்ணம், அபிப்ராயம், சிலசமயம் சீரிய யோசனைகள் என ஒரு மனிதன் ஒவ்வொரு நொடியும் யோசித்துக் கொண்டே இருக்கிறான்.

இது வயதுக்கேற்ற யோசனை, எண்ணங்களாகவும் அமையும்.

ஜோதிடத்தில் ஒருவரின் எண்ணங்களைப் பற்றிக்கூறும் இடம் 5-ஆமிடமாகும். 5-ஆமிடம், அதன் அதிபதி, 5-ஆமிடத்தில் இருக்கும். கிரகம், பார்க்கும் கிரகம் என இதனைப் பொருத்து சிந்தனைகள் கொடிகட்டிப் பறக்கும்.

சரி, இத்தனை யோசனைகள், சிந்தனைகள், லட்சியங்கள், விருப்பங்கள், தாபங்கள் அனைத்தும் நிறைவேறுமா? எண்ணியது எண்ணியாங்கே ப-தமாகுமா? இதனை நிர்ணயித்துக் கூறுமிடம் 5-ஆமிடத்துக்கு 7-ஆமிடமான 11-ஆமிடம். ஆக ஒரு மனிதன் அனைத் துக்கும் ஆசைப்படலாம். ஆனால் அது நிறைவேறுமா, காலதாமதமாகுமா? ஆசைக்கு எதிரான செயல்கள் நடக்குமா?

ஆசையே நிறைவேறாதா என இத்தனை விஷயங்களையும் 11-ஆமிடம் தெளிவாகக் கூறும். அதுவும் நமது எண்ணங்கள் தர்ம வழியில் நிறைவேறுமா? அதர்ம வழியில் நிறைவேறுமா என்பதையும் 11-ஆமிடம் அறுதியிட்டுக் கூறிவிடும்.

11-ஆமிட அதிபதியும் ஆசைகள் நிறைவேறும் விதமும்

11-ஆமிட அதிபதி உச்சமானால், நமது லட்சியங்கள் பூத்தொடுப் பதுபோல் எளிதாக வினாவாக நிறைவேறும்.

11-ஆமிட அதிபதி ஆட்சியானால் நமது ஆசைகள், அளவிடா முறையில் அழகாக நிறைவேறும்.

11-ஆம் அதிபதி சுப வர்க்கோத்தமம் பெற்றால் சுலபமாக எண்ணம் நிறைவேறும்.

11-ஆம் அதிபதி நீசம்பெற்றால் நினைவுகள் நிறைவேறுவது கடினம்.

11-ஆம் அதிபதி பகை, நீசம் பெற்று, 6, 8, 12-ல் இருப்பின் எந்த முயற்சியிலும் லாபம் இல்லை.

லக்னாதிபதியும், 11-ஆம் அதிபதியும் பகை கிரகங்களாக அமையும் போது பகைவர்களுடன் முட்டி மோதி, யோசனைகளை நிறைவேற்றுவார்கள்.

11-ஆம் அதிபதி நீச வர்க்கோத்தமம் பெற்றால் சிந்திக்காமல் இருப்பது உத்தமம். என்ன யோசனை என்றாலும் எதுவும் நிறைவேறாது. நாளடைவில், "இவன் ஒன்னு சொன்னாலே விளங்கமாட்டேங்குது' என ஒதுக்கித் தள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்.

11-ஆமிடம் லாபத்தைக் குறிக்கும். பெரும்பாலான மனிதர்களின் சிந்தனை லாபமடைவது என்பதை நோக்கித்தான் பயணப்படும். எனவே இங்கே சிந்தனை ப-ப்பதùன்பது ஒருவரின் லாபக்கணக்கையும் குறிக்கும்.

இனி 12 ராசிகளும், அவர்களின் எண்ணமும், லட்சிய ப-தமும், லாபப் பெருக்கமும் எப்படி இருக்கும் என்று காண்போம்.

மேஷம்

இவர்கள் ராசியின் எண்ணத்தை நிறைவேற்றும் ராசி கும்பம்; அதிபதி சனி. சனி எப்போதும் மந்த கிரகம்தான். ஆனாலும் அவர் ஒரு ஸ்திர கிரகம். எனவே சனி ஓரையில் வாங்கும் பொருட்களை அவர்களின் வம்சாவளிகளும் அனுபவிப்பர் என்பர். சனி மந்தன் ஆதலால், இவர்களின் நோக்கங்கள் சற்று மெதுவாகத்தான் நிறைவேறும். நிதானமாகத்தான் லாப வரவை அனுபவிப்பார்கள். அதனால் லட்சியங்கள் சற்றே மெத்தனமாக நிறைவேறுவதால், லாபமுன்னேற்றமும் கொஞ்சம் தாமதமாகவே அமையும். எனினும் தீர்க்கமாக இருக்கும். முயல், ஆமை கதைபோல், நிதானமாக சென்றாலும் எண்ணம் நிறைவேறிவிடும். அதனால்தான் அதிகம் அலட்டிக்கொள்ளாமல், நிறைகுடமாக திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெற்று விடுவார்கள். அரசு தொடர்பாக உச்சமான பதவிகளே இவர்களின் லட்சியமாக இருக்கும்.

11-ஆம் அதிபதி 7-ஆமிடத்தில் உச்சமாவார். எனவே இவர்களின் எண்ணங்கள், லட்சியங்களை நிறைவேற்ற ஒரு தொண்டர் படையே காத்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் தொடர்பால் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். சில சமயம் அதர்ம வழியிலும் லட்சியம் நிறைவேறும்..

இவர்களின் 11-ஆம் அதிபதி நீசம் பெற்றால், அந்தோ பரிதாபம். ஏனெனில் ராசியிலேயே நீசம்பெறுவார். வாழ்க்கைத் தோல்விகளுக்கும், எண்ணங்களின் சறுக்கலுக்கும் இவர்களே காரணமாகிவிடுவார்கள். என்ன ஆசைப்பட்டாலும், நிறைவேறாமல் போய்விடும். அதிர்ஷ்டம், லாபம் என்பது இவர்கள் இருக்கும் ஏரியாவுக்குள்கூட வராது. நாளடைவில் தன்னைத்தானே நொந்துகொண்டு, சுய கழிவிரக்கம் கொள்வார்கள்.

இவ்வாறு 11-ஆம் அதிபதி சனி நீசமான அன்பர்கள், ஓடிப்போய் ஆஞ்சனேயரின் பாதங்களை இறுகப்பற்றுங்கள். இன்னுமொரு பலமான பரிகாரம்- கோவில்களையும், குளங்களையும், அருகிலுள்ள ஏரிகளையும் முடிந்த அளவு சுத்தப்படுத்துங்கள். நீர் நிலைகளின் அசுத்தம் குறையும்போது, உங்களின் துரதிர்ஷ்டமும் குறைய ஆரம்பிக்கும். ஐயப்பனை வணங்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு எண்ணங்கள், லட்சியங்கள் உருவாகும் இடம் கன்னி ராசி. இதன் அதிபதி புதன். புதன் எப்போதும் சிந்தனைக்குரிய கிரகம்தான். அவரே 5-ஆம் அதிபதியாக வரும்போது, யோசனைக் குக் குறைவே இருக்காது. குடும்பம், செல்வம், வாக்கு, புத்திசா-யான வியாபாரம் இவை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

அத்தனை சிந்தனையும் சிறகடித்து நிறைவேறும் 11-ஆமிடம் மீனம்.

அதன் அதிபதி குரு. புதன் ஒரு சிந்தனை கிரகம். அவை நிறைவேறும் இடம் ஒழுக்கத்துக்குரிய குரு வீடு. எனவே கூடுமானவரை ரிஷப ராசியினர் தங்கள் ஆசைகளை ஒரு நேர்க்கோட்டில், சட்டத்துக்குட்பட்டு, ஒழுக்கமாக நிறைவேற்றுவர்.

ரிஷப ராசியின் 11-ஆம் அதிபதி குரு உச்சமானால் லட்சியங்களை நன்கு திட்டம்தீட்டி நிறைவேற்றுவார்கள்.

இதில் இன்னொரு விஷயம்- குரு ரிஷப ராசியினரின் எண்ணங்களை நிறைவேற்றும் அதிபதி மட்டுமல்ல; 8-ஆமிட அதிபதியும் ஆவார். இதனால் இவர்களின் லட்சியங்களை நிறைவேற்றும்போது, சட்டத்தின் ஓட்டை உடைசலைக் கண்டுபிடித்து, அதன் வழியாக எல்லாம் நினைத்ததை நிறைவேற்றுவார்கள். கேட்டால் "சட்டப்படிதான் நடக்கிறோம்' என்று நெஞ்சை நிமிர்த்தி கொஞ்சமும் அஞ்சாமல் சொல்வார்கள். குருவே 8-ஆம் அதிபதியாகி, அவரே 11-ன் அதிபதியும் ஆகும்போது, தப்புத்தண்டாக்களை "ஆல்டர்' செய்து அதனை நியாயப்படுத்தியும் விடுவார்கள். தங்கள் லட்சியம் நிறைவேற இளைய சகோதரர்கள், வேலையாட்கள் போன்றவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

11-ஆம் அதிபதி 11-ல் ஆட்சியாக இருப்பினும் எண்ணம் நிறைவேற ஒரு தடையுமில்லை.

இதே குரு 8-ல் ஆட்சி பெற்றால் கதை சற்று கந்தல்தான். ஒன்று, ஆசைகள் நிறைவேற பெரிய பெரிய தடைகள், எதிர்ப்புகள் வரும். அல்லது லட்சியங்களை முறையற்ற வழியில் நிறைவேற்றிக் கொள்வார்கள். அதில் நிறைய சட்டத்திற்கு விரோமான விஷயங்கள் இருக்கும். அதனைப் பூசி மெழுகிவிடுவார்கள்.

11-ஆம் அதிபதி குரு நீசமானால், என்ன சொல்ல? 11-ஆமிடம் லாப ஸ்தானம்; 9-ஆமிடம் அதிர்ஷ்டத்துக்குரிய இடம். இவ்வாறு ஒரு லாபாதிபதி ஒரு அதிர்ஷ்ட இடத்தில் நீசமாகி மறைந்தால் லட்சியம் நிறைவேறாததால் அதிர்ஷ்டம் இல்லையா? அதிர்ஷ்டம் இல்லாததால் எண்ணம் நிறைவேறவில்லையா என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

இந்த நிலையில் ரிஷபத்தாருக்கு எண்ண அதிபதி- 5-ஆம் அதிபதி புதன் 11-ல் நீசம். இந்நிலை இருந்தால் சொல்ல என்ன இருக்கிறது? உருப்படாத யோசனைகள்தான் வரும் என்று சொல்லலாமா அல்லது விளங்காத விஷயத்தைத்தான் யோசிப்பார் என்று சொல்லலாமா? ஏதோ ஒன்று.

இவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் அதிபதி குரு நீசமானால், சிவனின் பாதக்கமலம் பணியுங்கள். சிவனின் எந்த மந்திரம் சொல்ல முடியுமோ, அதனை தினந்தோறும் பராயாணம் செய்யுங்கள். "ஓம் நமசிவாய' என்று முடிந்த மட்டும் சொல்லுங்கள். இயன்றபோதெல்லாம் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வாருங்கள். உங்களுடைய நல்ல எண்ணங்கள் எண்ணியது எண்ணியாங்கே நடக்கும். வசதி குறைந்த அந்தணர்களுக்கு, ஏழ்மை நிலையிலுள்ள சிறுவர்களுக்கு, கர்ப்பச்சிதைவடைந்த பெண்களுக்கு, கல்வி தடைப்பட்டவர்களுக்கு உணவு, ஆடை, மருந்துகள், புத்தகம் வாங்கிக்கொடுங்கள். இருளான கோவில்களில் எத்தனை விளக்கு ஏற்றுகிறீர்களோ, அத்தனை அளவு எண்ணம் ஈடேறும்.

மிதுனம்

மிதுன ராசியின் சிந்தனை ராசி துலாம். அதிபதி சுக்கிரன். கேட்கவே வேண்டாம். யோசனைகள் மிக அழகாகத்தான் தோன்றும். எல்லாரையும்விட ஒருபடி அதிக யோசனைகள் வரும். வெளிநாடு செல்ல, நிறைய முதலீடு செய்ய, நிறைய செலவு செய்ய என லட்சியம் வரும். இவர்களின் அத்தனை அவாக்களையும், டாம்பீகமான ஐடியாக்களையும் நிறைவேற்றும் இடம் மேஷம். அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் 11-ல் ஆட்சியாக இருந்தால் நினைத்தது நிறைவேறும். அவரின் இன்னொரு வீடான 6-ல் ஆட்சி பெற்றாலும் எண்ணம் நிறைவேற, கொஞ்சம் சண்டை, கொஞ்சம் கடன், கொஞ்சம் வம்பு வழக்கு என எல்லாம் கலந்து கட்டி, எதையாவது செய்து நினைத்ததை முடித்து விடுவார்கள். செவ்வாய் உச்சமானால் என்ன நல்ல பலன்? மிதுனத்தார் நினைத்த தற்கு மேல் பலமடங்கு நடக்குமல்லவா என்றால், அல்ல! அவர் மிதுனத்தில் 8-ஆமிடத்தில் அல்லவா உச்சமாவார். ஒரு அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்தால் அழகு. அதே அரசன் பதுங்குகுழியில் போய் உட்கார்ந்தால் என்ன சொல்வது?

அதே கதைதான். இவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அதிபதி 8-ல் மறைவது. உச்சமாவது ஒன்று, இவர்களின் உயரிய சிந்தனைகள் நடக்க வாய்ப்பே இல்லாமல் போகலாம். ஆனாலும் கிரகம் செவ்வாய் ஆதலால் ஏதேனும் மறைவு, சட்டப்புறம்பான வழிகள்மூலம் எண்ணங்களை நிறைவேறச் செய்துவிடுவார். செவ்வாய் உச்சமானால், எண்ணங்கள் நேர்வழியில் நிறைவேற வாய்ப்புக்குறைவு.

இதோ 11-ஆம் அதிபதி செவ்வாய் 2-ஆமிடத்தில் நீசமடைவார். எனவே இவர்கள் என்ன யோசித்தாலும் இவர்களின் வார்த்தைகளே நிறைவேறவிடாமல் செய்துவிடும். தங்கள் அழகான லட்சியங்களைப் பேசிப்பேசியே கெடுத்துவிடுவார்கள். இவர்கள் குடும்பத்தார் நாளடைவில், "நீ பேசாமல் இரு அதுபோதும். பேசினாலே நடக்கிறது நடக்காமல் பேகிறது' என கரித்துக்கொட்ட ஆரம்பித்துவிடுவாôகள். இதனை நீசச்செவ்வாய் சரியாகச் செய்வார்.

இவர்களின் எண்ணங்கள், லட்சியங்கள் ஓரளவாவது நிறைவேறுவதற்கு, மலைமேல் இருக்கும் முருகனை வழிபடவேண்டும்.

மிதுனத்தாரின் செவ்வாய் நீசமானால், வாய்பேச முடியாத குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு, தங்களால் முடிந்த உணவுப்பொருட்கள், சமையல் பொருட்கள் வாங்கிக்கொடுங்கள். இளம் வயதுப் பையனுக்கு, சிவப்பு நிற உடை வாங்கிக்கொடுங்கள். மிதுனத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றும் செவ்வாய் நீசமானாலும்கூட, இந்தப் பரிகாரங்கள் ஓரளவுக்காவது லட்சியங்கள் நிறைவேற துணை செய்யும்.

மிதுனத்தாருக்கு செவ்வாய் நீசமடைந்தால், வேலை விஷயமாக எப்போதும் எண்ணங்கள் தடைப்படும். இவ்விதம் உள்ளவர்கள், திருச்சி அருகே உள்ள திருத்தலையூர் அல்லது பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தி ஆகிய ஊர்களிலுள்ள கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வணங்குங்கள்.

திருத்தலையூர்: ஸ்ரீகுங்குமவல்- சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வர பெருமமுôன்.

கல்பாத்தி: லட்சுமி நாராயண பெருமாள்.

கடகம்

கடக ராசியின் சிந்தனாதிபதி செவ்வாய். ராசி விருச்சிகம். இவர்களின் யோசனைகள் எல்லாம் மூடுமந்திரமாகவே இருக்கும். படுரகசியமாக சிந்திப்பார்கள். இவர்களின் எண்ணங்களை யாராலும் புரிந்துகொள்ளவோ, தெரிந்துகொள்ளவோ முடியாது. எல்லா லட்சியங்களும் இவர்களின் தொழில் மேன்மை, கௌரவம் சார்ந்தே இருக்கும்... "எவனை வச்சு எப்படி செய்யலாம்' என்றே புத்தி ஓட்டம் இருக்கும்.

இந்த அரிய சிந்தனைகளை நிறைவேற்றும் இடம் ரிஷபம். அதிபதி சுக்கிரன். இதேவீட்டில் இவர்களின் ராசியாதிபதி சந்திரன் உச்சமடைவார். இவர்களுக்கு ஆயிரம் மட்டமான யோசனைகள் இருந்தாலும், அதனை மிக அழகாக நிறைவேற்றிவிடுவார்கள். 11-ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருப்பின், இவ்விதம் இவர்களின் லட்சியங்கள்- அது நல்லதாக இருக்கட்டும், வேறுவிதமாக இருக்கட்டும்- அலுங்காமல், குலுங்காமல் இருந்த இடத்தில் இருந்தே அம்சமாக நிறைவேற்றிவிடுவார்கள்.

இதே 11-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் உச்சமடைந்தால், ஆஹா! சூப்பர். அதிர்ஷ்டத்துடன் எண்ணங்கள் நிறைவேறும். "நினைத்தாலே இனிக்கும்' என்பதுபோல நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

இவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் தகுதியுள்ள சுக்கிரன் நீசமடைந்தால், முத-லில் இவர்களுக்கு அதிக சிந்தனையே வராது. லட்சியம் எல்லாம் ஒன்றும் கிடையாது. "குறிக்கோளா? அப்படின்னா என்ன?' என்பது மாதிரி இருப்பார்கள். இது ஒருவகையில் நல்லதுதான். லட்சியம் இருந்தால்தானே நிறைவேறுகிறதா என்று மனம் அலைபாயும். ஒரு யோசனையும் இல்லையென்றால் பழுதே இல்லை பாருங்கள். அசந்து மறந்து ஒன்றிரண்டு ஆசைப்பட்டாலும், அதுவும் நிறைவேறாது... நாளடைவில் விரக்தியில், ஒரு சந்நியாசி மாதிரி ஆகிவிடுவார்கள்.

இவர்கள் ஆசையெல்லாம் தொழில், வீடு மற்றும் கௌரவம் சார்ந்ததாகவே அமையும். எனவே கடக ராசியில் சுக்கிரன் நீசமானவர்கள் பழமையான மகாலட்சுமி கோவில்களில் வழிபாடு நடத்துங்கள். பசு மாட்டிற்கு மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுங்கள்.

சுக்கிரன் நீசமாகி, எண்ணம் நிறைவேறத் தடையுள்ள கடக ராசியினர்,

சிறு குழந்தைகளுக்கு இலவச ட்யூஷன் எடுங்கள். இன்றும்கூட அரசு சம்பந்தமான படிவங்களை நிரப்புவதற்குத் தெரியாமல் நிறைய மக்கள் தவிக்கிறார்கள். ஓய்வு நேரத்தில், இப்படிப்பட்ட மக்களுக்கு தகவல் தொடர்பில் உதவுங்கள்.

உங்கள் எண்ணம் பலி-தமாகும் அதிபதி கடக ராசியின் 3-ஆமிடத்தில் நீசமடைவார். 3-ஆமிடம் என்பது தகவல் தொடர்பைக் குறிப்பது. எனவே தகவல் தொடர்பில் மற்றவர்களுக்கு உதவும்போது எண்ணம், லட்சியம் எல்லாம் நாளடைவில் கொஞ்சமாவது ஈடேறும். உங்கள் இளைய சகோதரி வயதுடையவர்களுக்கும், வாழ்க்கைத்துணையைப் பிரிந்த பெண்களுக்கும் இயன்ற உதவியை (உதவி மட்டும்) செய்யவும்.

சுக்கிரன் வழிபட்ட ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று வணங்கவும்.

அங்குள்ள ரங்கநாச்சியாரை வணங்க, நீச சுக்கிர தோஷம் விலகும்.

சிம்மம்

சிம்ம ராசியின் சிந்தனாதிபதி குரு. ராசி தனுசு. தர்ம சிந்தனைகளையும் சற்றே கோக்குமாக்காக சிந்திப்பவர்கள் இந்த ராசியினர். யோசனைக்குரிய குரு 8-ஆம் அதிபதியாகவும் வருவதால் ஏற்படும் விளைவு இது.

இவர்களின் லட்சியங்களை நிறைவேற்றும் இடம் மிதுனம்.

அதிபதி புதன். புதன் எப்போதும் வேக சிந்தனைக்குரியவர். எனவே ஒன்று யோசித்தால், உடனே உடனே அது நிறைவேறவேண்டும் என பரபரப்பவர்கள். எள் என்று நினைத்தவுடனே அது எண்ணெய்யாக வேண்டும் என்ற அதிவேக லட்சிய நிறைவேறும் குணம் உடையவர்கள். இதனால்தானோ என்னவோ சிம்ம ராசியி னரை எப்போதும் அவசரக்காரர்கள் என்று அடையாளப்படுத்தி விடுவார்கள். தங்கள் எண்ணம் நிறைவேற தங்கள் குடும்பத்தாரையும், பணத்தையும், சிலசமயம் மிரட்டும் பேச்சுகளையும் பயன்படுத்துவர். சிம்ம ராசியினரின் லட்சியம், எண்ணத்தை நிறைவேற்றும் அதிபதி புதன். அவர் ஆட்சியானாலும் உச்சமானாலும் குறிக்கோள் நிறைவேறும்போது, நல்ல பணம் சம்பாதித்துவிடுவார்கள்.

இதே புதன் 8-ஆம் வீட்டில் நீசமடைவார். இவர்கள் என்ன யோசித்தாலும், அதற்கு எதிர்மறையாக நடந்துவிடும். சிலசமயம் இவர்களின் யோசனைகள் சிறைச்சாலைக்கும் அனுப்பிவிடும். எனவே புதன் நீசமான சிம்ம ராசியினர் ஆயிரம் யோசனை செய்யுங்கள். ஆனால் தயவுசெய்து அது நிறைவேற எந்த நடவடிக்கை யும் எடுத்துவிடாதீர்கள். சிலசமயம் தீராத அவமானத் தையும் கொடுத்துவிடும்.

இவ்வாறு புதன் நீசமான சிம்மத்தார் சயனப் பெருமாளை வணங்கவும். கல்வி தடைப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி தொடர உதவவும். ஆசிரியப் பெருமக்களுக்கு மரியாதை செய்யவும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றவும். திருவெண்காடு மற்றும் மதுரை மீனாட்சி அம்மனை வணங்கவும்.

சிம்மத்தாருக்கு புதன் நீசமானால் காசு பண வரவும் திண்டாட்டமாகிவிடும். அதனால் திருப்பதி வேங்கடாசலபதியையும், குபரே-லிங்கத்தையும் வழிபடவேண்டும்.

கன்னி

கன்னி ராசியினரின் சிந்தனாதிபதி சனி. ராசி மகரம். சனி என்றாலே சற்று ஸ்லோதான். எனவே இவர்கள் யோசனை செய்வதற்கே அதிக நாள் எடுத்துக் கொள்வர். சிந்திப்பதற்கே அதிகம் தயங்குவர். லட்சிய வேட்கை என்றெல்லாம் இருக்காது. "லட்சியமா? இருக்கு இருக்கு... யோசனை செய்கிறேன்' என்பர். பிரச்சினை வந்துவிடுமோ என தங்களுக்குள்ளேயே அஞ்சுவர். மற்றவர்களோ "இவன் என்னைக்கு யோசிச்சு என்னைக்கு செயல்படுத்துவது?' என நொந்து போய்விடுவர்.

இவ்வளவு மெதுவாக யோசிப்பார்களே தவிர, இதனை நிறைவேற்றும் அதிபதியோ "ஃபாஸ்ட் ஃபாஸ்ட்' சந்திரன். எனவே ஒன்று முடிக்கவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால், இவர்கள் பேச்சை இவர்களே கேட்கமாட்டார்கள். அவ்வளவு விரைவாக செய்துமுடித்து விடுவார்கள். என்ன ஒன்று... யோசிக்கத்தான் வருடக் கணக்காகும்.

இதே சந்திரன் கன்னி ராசிக்கு உச்சமானால், இவர்கள் எண்ணியது பல மடங்கு விருத்தியுடன் நிறைவேறும். எல்லாரும் பொறமைப்படும் அளவுக்கு, அதிர்ஷ்டத்துடன் எண்ணியது ஈடேறும். சந்திரன் கன்னி ராசிக்கு ஆட்சியாக இருந்தாலும், லட்சியம் நிறைவாக நிறைவேறும். பெரும்பாலும் இவர்கள் யோசனைகளை நிறைவேற்ற பெண்களே பெரும் உதவி செய்வர்.

இதே சந்திரன் நீசமானால், சீரான சிந்தனைகள் இராது. அல்லது இவர்கள் நினைத்தது இவர்களின் தவறான யோசனையால் நிறைவேறாமல் போய்விடும். அல்லது இவர்களின் இளைய சகோதரம் லட்சியத்தைத் தடை செய்வார். சிலசமயம் "கம்யூனிகேஷன் கேப்' எனும் தகவல் தொடர்பில் தவறு ஏற்பட்டும் யோசனைகள் நிராகரிக்கப்பட்டு, நிறைவேறாது.

கன்னி ராசியினரின் சிந்தனைகள் பெரும்பாலும் வேலையைப் பற்றிதான் இருக்கும். வேலையைப் பற்றிய கற்பனைகள் தடைப்படும்போது, வாழ்வில் ஒருவித பற்றின்மை வந்துவிடும். சிலர் நோய்களைப்பற்றி சதா சிந்தனை செய்வர்.

எனவே கன்னி ராசியினருக்கு சந்திரன் நீசமாகி இருந்தால், கண்டிப்பாக அம்பாளை வணங்க வேண்டும். தண்ணீர் சம்பந்தமான உதவிகள் செய்யவேண்டும். கன்னி ராசியினர் யாரெல்லாம் லட்சியம் தடைப்பட்டு இலக்கில்லாமல் நிற்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் கண்டிப்பாக நீர் சார்ந்த குழாய்கள், ஏரிகள், வாய்க்கால், ஆறு போன்றவற்றில் ஏதேனும் சீரமைக்க பெரும் முயற்சி எடுங்கள். குறைந்தபட்சம் உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள குழாயை சரி செய்யலாம். அல்லது அருகிலுள்ள ஓடையில் குப்பைகளை அகற்ற லாம். இதுபோன்று பரிகாரம் செய்யும்போது, உங்கள் வேலை பற்றிய எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும். அதற்கும் மேலாக சீரான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

எந்தவொரு ஜாதகத்திலும் சந்திரன் கெடக்கூடாது. பரிகாரம் செய்யாவிட்டால் நாளடைவில் "அந்தாளு கொஞ்சம் லூசு' என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர்.

திங்களூர், சோட்டாணிக்கரை பகவதி போன்ற கோவில்களுக்குச் சென்று வணங்கவும்.

துலாம்

துலா ராசியின் சிந்தனை, யோசனைக்குரியவர் சனி. ராசி கும்பம். இவர்களின் யோசனை அனேகமாக வீடு, வாசல், சொத்து சுகம் மற்றும் கல்வி என இதுபற்றியதாக அமையும். இவர்களின் யோசனை உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். வெளியே தெரியாது.

இந்த யோசனைகளை நிறைவேற்றுபவர் சூரியன். ராசி சிம்மம். இதிலொரு வேடிக்கை உள்ளது. துலா ராசியினருக்கு சிந்தனாதிபதிக்கும் நிறைவேற்றும் அதிபதிக்கும் ஒருவருக்கொருவர் ஆகாது. ஸ்டண்ட்தான். என்னத்தைச் சொல்ல? இவர்கள் ஒன்று நினைத்தால் அது நிறைவேறும்தான்.

ஆனால் நினைத்த வழியில் அல்லாது வேறுவிதமாக நிறைவேறும். அமைதியாக நினைத்து, ஆர்ப்பாட்டமாக நிறைவேற்றுவர். சிலசமயம் நினைப்பிற்கும், நிறைவேறுவதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்துவிடும். குழம்பிப் போய்விடுவர்.

லட்சியத்தை நிறைவேற்றும் சூரியன் ஆட்சியாக இருந்தால், வெகு கம்பீரமாக நினைத்தெல்லாம் நிறைவேறும்.

சூரியன் உச்சமாக இருந்தால், இவர்களின் லட்சியம் நிறைவேற வாழ்க்கைத் துணை பெரும் உதவி செய்வார். இதன்மூலம் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் கணவர் இருக்கிறார் என்றோ, ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின் அவரது மனைவி இருக்கிறார் என்றோ பேட்டி கொடுத்து மகிழ்வர்.

இதே சூரியன் நீசமாகிவிட்டால் லட்சியம் நிறைவேறத் தடை செய்பவரே இவர்களாகத்தான் இருப்பார்கள். வேறுயாரும் அதற்குக் காரணம் கிடையாது. இவ்வாறு சூரியன் நீசமாகும்போது, துலா ராசியினருக்கு நல்ல வீடோ, மனையோ, வாகனமோ அடைய நினைத்த எண்ணம் நிறைவேறாது. வீடு வாங்கவேண்டுமென நினைத்து, அதனை ஒரு லட்சியமாகவே சிலர் கொண்டிருப்பர். ஆனால் அது நிறைவேறாமல் தட்டிக்கொண்டே போகும். சிலருக்கு கல்விப்பயிற்சி சம்பந்த லட்சியங்களும், பரம்பரைச் சொத்துகள் சம்பந்தமான எண்ணங்களும், அதை நிறைவேற்றும் வழிகளும் சிந்தனையில் இருந்துகொண்டே இருக்கும்.

துலா ராசியின் லட்சியத்தை நிறைவேற்றும் சூரியன் நீசமானால், இவர்கள் கண்டிப்பாக ஞாயிற்றுக்கிழமைதோறும் விரதமிருந்து சூரியனையும், சிவனையும் வணங்கவேண்டும். முடிந்தமட்டும் கோவில்களில் விளக்கேற்றுங்கள். மின்சார உபகாரம் செய்யவும். கோதுமை தானம் நன்று. முக்கியமாக சிவன் கோவிலில் உழவாரப்பணி, விளக்கேற்றுவது என எவ்வளவு தூரம் பிரார்த்தனை செய்கிறார் களோ, அவ்வளவு நல்லது நடக்கும். லட்சியங்களும் நன்கு பலி-தமாகும்.

துலா ராசியினரில் சூரியன் நீசமாகவுள்ள ஜாதகர்கள், தஞ்சாவூர் அருகேயுள்ள சூரியனார்கோவில், திருக்கண்டியூர் வீரட்டானம் போன்ற தல தரிசனம் செய்து, அங்குள்ள சிவனை வழிபடுதல் நன்று.

தந்தை மற்றும் தந்தை வயதுடைய பெரியவர்களை நன்கு கவனிக்கவும். சூரியன் நீசம் என்பது, ஒளி மறைவுக்கு ஒப்பானது. எனவே, பார்வைக் குறைபாடுள்ளவர்கள், பார்வையற்றவர்கள், கண் ஆபரேஷன் செய்யப்போகும் மனிதர்கள், கண் மருத்துவமனை என உங்கள் உதவிகள் கண் பார்வை சம்பந்தமானதாக இருக்கட்டும். உங்கள் உதவியால் அவர்கள் பார்வையில் ஒளிபெறும்போது, உங்கள் வாழ்க்கை வெளிச்சமாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் எண்ண அதிபதி குரு. ராசி மீனம். குரு தர்ம சிந்தனையுடைய கிரகம். அச்சிறப்புள்ள கிரகமே விருச்சிகத்துக்கு லட்சிய அதிபதியாக வந்திருப்பது வரமே.

சரி; இவர்களின் இந்த தர்மமிகு சிந்தனையை நிறைவேற்றுபவர் கன்னி புதன். விருச்சிகத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றும் புதன், கன்னி ராசியில் ஆட்சியும், உச்சமும் பெறுவார். ஆஹா! இவ்விதம் அமைந்துவிட்டால், நீங்கள் என்ன எண்ணினாலும் உடனே நிறைவேறும். சந்தேகமில்லை.

அனேகமாக விருச்சிக ராசியினருக்கு, அவர்கள் பேச்சை எல்லாரும் கேட்க வேண்டும்- அவர்கள் சொல்லுக்கு மதிப்பு வேண்டும்- நல்ல வீடு அமையவேண்டும்- நல்லகாசுபணப் புழக்கம் வேண்டும்- நிறைய அசையும் சொத்து வேண்டும்- குடும்பத்திலுள்ள எல்லாரும் இவரை அண்டிப் பிழைக்க வேண்டும் என இவ்வாறெல் லாம் லட்சியங்கள் சிறகடிக்கும்.

புதன் உச்சமாகும்போது இவையனைத்தும் செவ்வனே ப-லித மாகும்.

இதே புதன் நீசமானால் அந்தோ பரிதாபம். எண்ணத்தை நிறைவேற்றும் கிரகம் எண்ணங்கள் உண்டாகுமிடத்தில் போய் நீசமாகிவிடும். என்ன சொல்ல? இதில் விஷயம் என்னவென்றால், இவர்கள் உருப்படாத விஷயங்களை எண்ணுவார்கள். அதுவும் பலி-க் காது. இதுபோன்று புதன் நீசமான விருச்சிகத்தாரை நாளடைவில் சுற்றியுள்ளவர்கள், "இவன் மண்டையில் தினுசு தினுசாக விளங்காத யோசனை வருது பாரு!' என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

மிதுனத்தில் புதன் ஆட்சியாகி அமர்ந்தாலும் அதுவும் ஒன்றும் விசேஷமில்லை.

புதன் நீசமான விருச்சிகத்தார் புதன்கிழமை, நவகிரகங்களில் புதன் பகவானை வணங்கவேண்டும். படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கிக்கொடுங்கள். ஆன்மிகப் புத்தகங்களை விநியோகம் செய்யலாம். நிறைய மரங்கள், செடிகள் வளர உதவுங்கள். பச்சைநிற இலை துளிர் விடும்போது புதன் சம்பந்தமான கோளாறுகள் விலகும்.

புதன் நீசம்பெற்ற விருச்சிகத்தார் திருவெண்காடு, மதுரை போன்ற தலங்களுக்குச் சென்று சேவிக்கவும்.

தனுசு

தனுசு ராசியின் சிந்தனாதிபதி செவ்வாய்; ராசி மேஷம். இவர்களுக்கு எதிலும் எப்போதும் முதன்மையாக இருக்கவேண்டுமென்ற ஆவலும் லட்சியமும் இருக்கும். ஒருமுறையாவது வெளிநாடு செல்லவேண்டுமென்ற கனவும் இருக்கும். எல்லாரும் இவர்களுக்கு பயந்து பணிந்து நடக்கவேண்டுமென்ற அவா இருக்கும். எல்லாவற்றையும்விட, எப்போதும் நன்றாக செலவழித்து, நல்ல பெயர் வாங்க விரும்புவர்.

இத்தனை எண்ணங்களையும் நிறைவேற்றுபவர் சுக்கிரன்; ராசி துலாம். சுக்கிரன் 11-ல் துலாத்தில் ஆட்சியாக இருந்தால், தனுசு ராசியினர் விரும்புவது, எதிர்பார்ப்பது, அடைய நினைப்பது என எல்லா அவாக்களும் அடுத்தடுத்து தொடுத்தாற்போல் நிறைவேறும். அதுவும் அழகாக, ஆடம்பரமாக நிறைவேறும்.

இதே சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சியாக இருப்பின், சிலபல தடைகள், சண்டைகள், சில சமயங்களில் கடன், காயங்களோடு லட்சியம் ஈடேறும். இதே சுக்கிரன் உச்சமானால் அத்தனை சுபநிகழ்வுகளுக்கும் இவர்களே முழு காரணமாவார்கள். இவர்களது பெருமுயற்சியே எண்ணங்களை முழுமையாக ஈடேறச் செய்யும். வீடு வாங்கினாலும், மிக அழகான பெரிய மாளிகையையே வாங்குவார்கள். வாகனம் வாங்கினாலும் இருப்பதிலேயே உயர்ந்த வாகனம் வாங்குவார்கள். சுக்கிரன் உச்சமானால், உலகின் உச்சமான பொருளை அடையும் இலக்கை அடைந்துவிடுவார்கள்.

ஜாதகத்தில் சுக்கிரன் நீசமானால் இவர்களின் லட்சியம் நிறைவேற எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும். மேலும் கௌரவமும் குறையும். முக்கியமாக தொழில் அல்லது வேலை சம்பந்தமான எண்ணங்கள், முயற்சிகள், முதலீடுகள் என அனைத்தும் பயனற்று, பலனற்றுப் போய்விடும். எனவே தனுசு ராசியினர் சுக்கிரன் நீசமாகி இருந்தால் சொந்தத் தொழில் தொடங்குவது உசிதமல்ல. ஒருவேளை 10-ல் புதன் உச்சமாகி, சுக்கிரன் நீசபங்கம் அடைந்திருப்பின், அப்போது சொந்தத் தொழில் தொடங்கத் தடையில்லை.

தனுசு ராசியினருக்கு சுக்கிரன் நீசமானால் பெருமாளுடன் கூடிய மகாலட்சுமியை வணங்கவேண்டும்.

எந்த வேலை செய்தாலும் அல்லது சொந்தத் தொழில் செய்தாலும் அதில் சற்றே சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுங்கள்.

தனுசு ராசியினர் சுக்கிரன் நீசமாகியிருந்தால், தயவுசெய்து பறவைகளை கூண்டில் வைத்து வளர்க்காதீர்கள். பறவைகள், கால்நடைகளை தானம் செய்வது நல்ல பரிகாரம். உங்களால் முடிந்தளவு ஜீவராசிகளை தானம் செய்யுங்கள். அதைவிடுத்து, அவற்றை கூண்டில் வைத்து வளர்த்தால், இன்னும் இன்னும் கஷ்டங்கள் அதிகரிக்கும். லட்சியங்கள் நிறைவேறத் தடை ஏற்படும். (எந்த ராசியினருக்கும் சுக்கிரன் நீசமாகி இருப்பின் இந்தப் பரிகாரம் ஏற்றது). மேலும் வெள்ளி, மொச்சை, பழங்கள் தானமும் நன்று.

இதுவரை ஜீவராசிகளைக் கொடுமைபடுத்தியிருந்தால் தக்கோலம், திருவூறல் சென்று வணங்கவும். பெருமாள், தன் மடியில் மகாலட்சுமியை கொண்டிருக்கும் லட்சுமி நாராயணரை வணங்கவும். உங்களிடம் வேலை பார்க்கும் பெண்களின் பார்வைக் கோளாறுக்கு கண்ணாடி வாங்கிக்கொடுத்து உதவவும்.

மகரம்

மகர ராசியினரின் எண்ணத்துக்கு அதிபதி சுக்கிரன்; ராசி ரிஷபம். இவர்கள் எப்போதும் ஒழுக்கம், நேர்மை, ஆன்மிகம், பூர்வீகக் குலப்பெருமை, ஆரோக்கியம், கௌரவம், தொழில் என இதனைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு அதன் தொடர்பான லட்சியங்களை- எண்ணங்களைக் கொண்டிருப்பர்.

இவர்களின் இத்தனை யோசனைகளையும் நிறைவேற்றுபவர் விருச்சிகச் செவ்வாய்.

மகர ராசியினரின் அதிபதி சனி அமைதியான மந்த காரகர். எண்ணங்களுக் குரியவர் சுக்கிரன் அழகான பதவிசானவர். ஆனால் நிறைவேற்றும் அதிபதியோ அடாவடியான செவ்வாய். என்னே ஒரு காம்பினேஷன்! மகர ராசி சனி ஸ்லோதான். ஆனாலும், இவர்கள் ஒன்றை நினைத்து விட்டால் முடிக்காமல் விடமாட்டார்கள். அத்துணை வேகம். சில சமயங்களில் தர்மவழியிலும், சிலசமயம் அதர்ம, அடிதடி வழிகளிலும் எண்ணங்களை நிறைவேற்றுவர்.

மகர ராசியினருக்கு செவ்வாய் உச்சம் பெற்றிருந்தால், ராசியிலேயே உச்சம் பெறுவதால் அத்துணை வெற்றிக்கும் ஜாதகரே காரணமாவார். அவர்களுடைய ஒருமித்த முயற்சியும் உழைப்பும் லட்சியம் ஈடேறக் காரணமாக இருக்கும். சிலருக்கு தாயார் மற்றும் குடும்பத்தினர் உதவுவர்.

செவ்வாய் மேஷம் அல்லது விருச்சிகத்தில் ஆட்சியாக இருந்தாலும் எண்ணம் ஈடேறும். மேஷத்தில் ஆட்சியாக இருந்தால் சற்றே வெளிப்படையான அடாவடி வழியிலும், விருச்சிகத்தில் இருந்தால் ஆழ்ந்த- ரகசியமான அடாவடி வழியிலும் எண்ணங்கள் ப-தமாகும்.

மகர ராசியினருக்கு செவ்வாய் நீசம்பெற்றால், இவர்களின் லட்சியத்துக்கு வாழ்க்கைத்துணையே முட்டுக்கட்டை போட்டுத் தடைசெய்வார். சிலருக்கு தொழில் பங்குதாரர்களே எண்ணங்கள் விளங்காமல் செய்துவிடுவர். செவ்வாய் நீசமானால், வெளிநாட்டுப் பயணம், பங்குதாரருடன் வியாபாரம் பற்றிய எண்ணங்களை விட்டுவிடுவது நலம்.

மகர ராசியினருக்கு செவ்வாய் நீசமாகி லட்சியத்தடை ஏற்பட்டால் கடல், ஏரி போன்ற நீர்நிலை அருகிலுள்ள முருகரை வணங்கவும். கந்தசஷ்டிக் கவசம் தினம் கூறவும். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நன்று. நவகிரகங்களில், செவ்வாயை வணங்கவும். சிவப்புநிற ஆடை தானம் நன்று. விளையாட்டுத்துறை இளைஞர்களுக்கு உதவவும்.

செம்பு, துவரை, குங்கும தானம் நன்று. முருகரை எவ்வளவு வழிபடுகிறீர்களோ, அவ்வளவு உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.

கும்பம்

கும்ப ராசியினரின் யோசனை, எண்ணத்துக்குரியவர் புதன்; ராசி மிதுனம். இவர்கள் அநேகமாக தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றியே சிந்திப்பர். மேலும் மரணபயம் அவ்வப்போது இவர்களைப் பாடாய்ப்படுத்தும். பிள்ளைகள் தங்களை நன்கு கவனித்துக் கொள்வார்களா என ஒரு பதட்ட யோசனை இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் எண்ணத்துக்குரிய புதன் எட்டாமிடத்துக்கும் அதிபதியாவதால், எப்போது ஒரு பாதுகாப்பின்மை யோசனையே இவர்களைச் சுற்றியிருக்கும்.

இவர்களின் இந்த எதிர்மறையான சிந்தனைகளை நிறைவேற்றுபவர் குரு; ராசி தனுசு. குரு நல்ல சுபத்தன்மையில் இருந்தால், இவர்களின் குடும்பத்தினர் இவர்களை ஒரு குழந்தையைப்போல் கவனித்து, இவர்கள் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவர். மேலும் இவர்களின் வாக்கு வண்மையால், லட்சியம் நிறைவேறப் பெறுவர்.

இவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் குரு 6-ஆமிடத்தில் உச்சமாவார். அது ஒரு மறைவு ஸ்தானம். இதனால் குரு உச்சமான பலன் இவர்களுக்கு முழுமையாகக் கிடைக்காது. சிலசமயம் இவர்களின் எண்ணங்கள் எதிர்மாறாக நிறைவேறிவிடும். அல்லது ஆசைகள் நிறைவேறு வதற்கிடையே அடிதடி ஏற்பட்டுவிடும். அல்லது லட்சியம் நிறைவேறும்;

ஆனால் லட்சங்கள் கரைந்துவிடும். ஆக, எண்ணியதை ஈடேற்றும் அதிபதி குரு உச்சமாகியும் பெரிய பயனில்லை.

இதே குரு நீசமானால், அவர் ராசிக்கு 12-ல் விரயத்தில் நீசமடைவார்.

இதுவும் பயனில்லை. ஒன்று, நூறு ரூபாய்க்கு குறிவைக்க, லட்ச ரூபாய் லாஸ் ஆகிவிடும். அல்லது என்ன நினைத்தாலும், ஒன்றும் நடக்காமல் போய்விடும். இவர்களுக்கு புதையல் கிடைக்கவேண்டுமென்ற பேரவா எப்போதும் இருக்கும். ஆனால் குரு மேற்கண்ட நிலைகளில் இருந்தால் எல்லாம் கனவாகவே போய்விடும்.

குரு 6, 8, 12 தவிர மற்ற இடங்களில் இருப்பின் ஓரளவு ஆசைகள் நிறைவேறும்.

குரு நீசமான கும்ப ராசியினர் கோவில் மற்றும் அந்தணர், பசுமடம் போன்ற வகையில் நன்கு செலவழிக்கவேண்டும். இவ்வாறு செலவழிக்கும்போது ஓரளவு எண்ணங்கள் ஈடேறும். வயதான அந்தணர்களுக்கு ஆடை, உணவு வாங்கிக்கொடுங்கள். எத்துணை அன்னதானம் செய்கிறீர்களோ அத்துணையளவு உங்கள் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும்.

மீனம்

மீன ராசியினரின் எண்ணங்கள், யோசனைகளுக்குரிய இடம் கடகம்; அதிபதி சந்திரன். இதனால் இவர்களின் யோசனை, கற்பனையெல்லாம் வேகவேகமாக இருக்கும். அதேசமயம் இவர்களின் லட்சியங்களும் தினத் துக்கு ஒன்றாக மாறிக்கொண்டே இருக்கும். சற்றே தாய்மை சிந்தனையுடையவர்கள். இவர்களின் அநேக லட்சியங்கள் குழந்தைகள் சார்ந்ததாகவே அமையும். மற்றும் புத்தி முதலீட்டு லட்சியங்கள் அதிகமிருக்கும். இவர்களின் மாறிக்கொண்டே இருக்கும் ஆசைகளை நிறைவேற்றுபவர் மகரச்சனி. எண்ணங்கள் அதிவிரைவாகவும், நிறைவேற அதிக காலமும் ஆவதால்தான், இவர்கள் நிறைய லட்சியங்களை மாறிமாறி யோசிப்பார்கள் போலும். சனி ஆட்சியாக மகரத்தி-ருந்தால், காலந்தாழ்த்தியாவது எண்ணம் நிறைவாக நிரந்தரமாக நிறைவேறும். இதே சனி கும்பத்தில் ஆட்சியானால் ஒன்று லட்சியம் நிறைவேற நிறைய செலவாகும் அல்லது அலைந்து திரிந்து ஆசைகளை நிறைவேற்றமுடியும். வெகுசிலருக்கு விரயத்தில் சனி அமர்ந்தால், லட்சியங்கள் நிறைவேற முடியாமல் பூஜ்ஜியமாகப் போய்விடும்.

மீனத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றும் சனி பகவான் எட்டாமிடத்தில் உச்சமாவார். எட்டாமிடம் ஒரு மறைவு ஸ்தானம். அங்கு ஒரு கிரகம் உச்சமாவது அவ்வளவு நல்லதல்ல. எனவே சனி உச்சமானால், லட்சியம் நிறைவேற நிறைய தடைகள் ஏற்படும். அல்லது எண்ணம் ஈடேற நிறைய இருபது ரூபாய் செலவழிக்க வேண்டிவரும். அல்லது சட்டப்புறம்பான வழிகளில் எண்ணங்கள் நிறைவேறும். இதனால் இவர்களின் வெற்றியை அதிகமாகப் பறைசாற்ற முடியாது. இவர்களின் எதிரிகள், இவர்கள் லட்சியம் நிறைவேறும் வழிமுறைகளை எள்ளி நகையாடுவர்.

இதே சனி நீசமானால், இவர்களின் லட்சிய வீழ்ச்சிக்கு இவர்கள் பேச்சே காரணமாகிவிடும். பேசிப்பேசியே குறிக்கோளைக் குதறி எடுத்துவிடுவார்கள். வெகுசில சமயம் இவர்கள் குடும்பமும் லட்சியம் நிறைவேறத் தடைக்கட்டி நிற்கும்.

மீன ராசியினருக்கு இவ்வாறு சனி நீசமாகி, எண்ணங்கள் நிறைவேறத் தடையேற்பட்டால், சனீஸ்வர பகவானையும் ஆஞ்சனேயரையும் வணங்கவும். முக்கியமாக மலைமேலுள்ள ஆஞ்சனேயர் அல்லது மிக உயரமான ஆஞ்சனேயரை வணங்குவது சிறப்பு.

முடிந்த அளவு இரும்புப் பொருட்கள் தானம் வழங்கவும். ஆரம்பப் பள்ளிகள், உணவு சம்பந்தமான அன்னதானக் கூடங்கள், இளைஞர் களின் உடற்பயிற்சித் தளங்கள் இவற்றிற்கு இரும்பு சம்பந்தமான பொருளை தானம் செய்யவும். சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு விளக்கேற்ற, எண்ணங்கள் தடையின்றி நிறைவேறும்.

-------------------------------------------------

கிரகங்கள், கர்ப்பப்பையில் ஏற்படுத்தும் தாக்கங்கள்

ஒரு காலத்தில் நாட்டில் குழந்தைப் பிறப்பு அதிகமாகிவிட்ட தென்று, அதனைக் கட்டுப்படுத்த சிவப்பு முக்கோணம் என்று குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்தை ஆரம்பித்து ஜனத்தொகையைக் கட்டுப் படுத்தினார்கள். இப்போது, குழந்தை பிறப்பதற்கு அரும்பாடுபட வேண்டியுள்ளது. தெருவுக்குத் தெரு, குழந்தைப் பிறப்பு சிகிச்சை மையம் ஆரம்பித்து விட்டார்கள். இது சம்பந்தமாக மருத்துவரிடம் சென்றால், ஆணுக்கும் மருந்து கொடுத்து பெண்ணுக் கும் கர்ப்பப்பை சம்பந்தமாக பரிசோதனை செய்கிறார்கள்.

ஜோதிடம் 5-ஆமிடத்தை பெண்களின் கர்ப்ப ஸ்தானம் என்கிறது. 5-ஆமிடமே பூர்வபுண்ணிய ஸ்தானமுமாகும். இதி-ருந்து குழந்தைப் பிறப் பென்பது, போனஜென்ம பாவ- புண்ணியத்தின் தொடர்ச்சி அல்லது அதன் சம்பந்தம் கொண்டது என அறியமுடியும்.

மகப்பேறு எனும்போது, தம்பதிகளில் ஆண் எத்தனை மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அதைப்பற்றி யாரும் பெரிதாக யோசிப்பதில்லை. பெண்ணை மட்டுமே முக்கிய காரணியாகப் பார்க்கும் சமுகம் இது. இதை யாரும் மாற்ற முடியாது. எனவே பெண் பிள்ளைகள் ஓரளவு வயது வந்தவுடன், அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து, திருமணத்துக்குரிய 7-ஆமிடம், குழந்தைக் குரிய 5-ஆமிடம் என சற்று அக்கறையாக கவனித்தால் அதற்குரிய பரிகாரங்களை- அது கிரகப் பரிகாரம் அல்லது உணவுப் பரிகாரம் என சீரமைத்துக்கொள்ளலாம்.

5-ஆமிடத்தில் சூரியன்

சூரியன் ஒரு வெப்ப கிரகம். கர்ப்பத்துக்குரிய வீட்டில் சூரியன் இருக்கும்போது, குழந்தைப் பிறப்பில் சிறிது சிக்கல் ஏற்படும். சூரியனின் அதிக வெப்பத்தால், கர்ப்பப்பை நீர்த்தன்மை குறைந்து சுருங்கிவிடும் நிலை ஏற்படும். எனவே 5-ல் சூரியன் இருக்கும் பெண்கள் வாரத்துக்கு ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் நன்று. சூரியனுக்குரிய தாமிரப்பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளவும். சூரியனுக்குரிய கோதுமை, பண்டங்கள் தானம் நல்லது. சூரியனுக்குரிய சிவப்பு, மஞ்சள் நிறம் பயன்படுத்தலாம். மயில், தேர் வடிவ நகைகள் பயன்படுத்தலாம். சிவன் கோவிலுக்கு சந்தனம் வாங்கிக்கொடுக்கவும். நவகிரகங்களில் சூரியனுக்கு ஞாயிறுதோறும் விளக்கேற்றுவது சிறப்பு. சூரியனின் தசாக்காலமான 6-ன் எண்ணிக்கையிலும் ஏற்றலாம். ஆதித்ய ஹ்ருதயப் பாராயணமும் சிவ வழிபாடு நல்லது. சூரியனை வணங்கும்போது, அவரின் மனைவிகளான சாயா மற்றும் உஷா தேவியை வணங்குவதும் நல்லது.

தனுசு லக்னம் அல்லது தனுசு ராசியாகி, 5-ல் சூரியன் உச்சமாகியிருந்தால் மிக விசேஷம். தகப்பனைவிட சிறந்த அறிவு, கம்பீரம் உடைய மகன் பிறப் பான். ஆயினும் அதிக "ஈகோ' உடையவனாகவும் இருப்பான்.

5-ல் சூரியனை உடைய மற்ற ராசிக்காரர்களுக்கு குறைவான குழந்தைகளே பிறப்பர்.

5-ல் சூரியனோடு ராகு அல்லது கேது சேர, சர்ப்ப தோஷத்தினால் குழந்தைப்பிறப்பு பாதிக்கும். சிவன் கோவில் உண்டிய-ல் தாமிரத்தினாலான சிறு நாகம் வாங்கி காணிக்கை செலுத்தவும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாக வழிபாடும் நன்மை தரும். எப்போதும் சூரியன், பாம்பு கிரகங்களோடு சேர்ந்து 5-ஆமிடத்தில் அமரும்போது, அங்கு வயதான பெரியவரின் சாபம் மற்றும் தோஷம் இருப்பதாகப் பொருள். எனவே யாருக்கெல்லாம் 5-ல் சூரியன், பாம்பு கிரக சம்பந்தம் பெறுகிறாரோ, அவர்கள் ராமேஸ்வரம் போன்ற திருத்தலங்களில் தோஷப் பரிகாரம் செய்வது மிக நல்லது. மேலும் ஏதேனும் வயதான பெரியவர் மற்றும் வீட்டிலுள்ள தாத்தக்களுக்கு கோதுமை இனிப்பும், புத்தாடையும் வாங்கிக்கொடுக்கவும்.

திருமணம் முடிந்தவுடன் கோவிலுக்குச் சென்று தோஷப் பரிகாரம் செய்யலாம். மற்ற பரிகாரங்களை அவ்வப்போது கடைப்பிடித்தால் சிறந்த பலன்கள் சீக்கிரமாகவே கிடைக்கும்.

5-ல் செவ்வாய், சூரியன் சேர்க்கை இருப்பின், குழந்தைகள் எதிரிகள் கையில் அகப்பட்டுக்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. இவ்வகை அமைப்புள்ள வர்கள், மலைமீதுள்ள முருகரை வணங்குதல் நன்மை தரும். (கால புருஷ தத்துவத் தில் சூரியன் 5-ஆம் அதிபதி. செவ்வாய் 8-ஆம் அதிபதி. எனவே குழந்தை காணாமல் போக வாய்ப்புள்ளது. சூரிய, செவ்வாய் தசாபுக்திக்காலங்களில் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும்.)

5-ல் சந்திரன்

சந்திரன் ஒரு நீர் கிரகம். 5-ல் சந்திரன் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பபையில் நீர்க்கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வமைப்புடைய பெண்கள் உணவில் இஞ்சி, தேன் சேர்த்துவர நீர்க்கட்டிகள் குறையும். சந்திரன் ரத்தத்தையும் குறிப்பார். எனவே சில பெண்களுக்கு மாதவிடாய்க் கட்டிகள் தோன்றும். ஒன்று, அதிக ரத்தப்போக்கினால் மாதவிடாய்க் காலங்களில் சிரமப்படுவர். அல்லது சரியாக இராமல் ரத்தக்கட்டிகள் தோன்றிவிடும். மேலும் இவர்களுக்கு சிறுநீர் தொந்தரவும் தோன்றி, வயிற்றுவ- அதிகரிக்கும். இதில் ஒன்று அல்லது எல்லாமே இருப்பதால் குழந்தைப்பேறு தாமதம் என மருத்துவர் கூறுவார்.

சந்திரன் ஒரு வேக கிரகம். 5-ல் சந்திரன் உள்ள பெண்கள் வேகநடை எனும் உடற்பயிற்சி செய்யும்போது உடல்நிலை சீராகும். கருப்பை நன்றாகும்.

5-ல் சந்திரன் உள்ள பெண்களுக்கு நிறைய பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு. முத்து நகைகள் பயன்படுத்தலாம். அம்பாளுக்கு வெள்ளைப்பட்டு சாற்றி வெள்ளை மலர்களால் வணங்கலாம். அம்மன் கோவிலுக்கு சாம்பிராணி வாங்கிக்கொடுக்கலாம். திங்கட்கிழமைதோறும் அம்பாள் அபிஷேகத்துக்கு பால் மற்றும் திரவப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கவும். திருப்பதி சென்று வருதல் நல்லது. தானங்களில் இனிப்பும் திரவமும் சேர்ந்திருக்கவேண்டும். ஈயப்பாத்திர தானம் நல்லது. பச்சரிசி, நெல் போன்ற தானமும் நல்லது.

5-ல் சந்திரன் உள்ளவர்களின் குழந்தைகள் தாய்மீது அதிக பாசமாக இருப்பார்களாம்.

5-ல் சந்திரன் உள்ள பெண்கள், முருங்கை மரம் வளர்ப்பதும், முருங்கைக்கீரை சாப்பிடுவதும் மிக நல்லது. ல-தா ஸகஸ்ரநாமம் கூற, அம்பாள் அருளால் அருமையான குழந்தை பிறக்கும்.

சந்திரன்- மார்பு, வயிற்றுக்கோளாறு, சிறுநீரக சம்பந்தம், தைராய்டு சம்பந்தம் போன்றவற்றைக் குறிப்பார். எனவே 5-ல் சந்திரன் இருக்கும். பெண்கள் இந்த நோய் சம்பந்தமாகவும் சோதனை செய்துகொள்ள வேண்டும்.

சந்திரன் மனம் சம்பந்தம் உடையவர். எனவே 5-ல் சந்திரன் உள்ள பெண்கள், குழந்தைப் பிறப்பு, கர்ப்பப்பை சம்பந்தமாக அதிகம் குழம்பிக்கொள்வார்கள்.

சந்திரன், ராகுவுடன் சேர்க்கையாகி இருந்து, அது 5-ஆம் வீடாகவும் இருந்தால் சற்று சிரமம்தான். சந்திரன் ரத்த, நீர்க்காரகன்; ராகு பெரும் போக்குக்காரகன். இந்த இரு கிரகங்களும் சேரும்போது ஒன்று கர்ப்பப்பையில் பெரிய நீர்க்கட்டி தோன்றும் அல்லது மாதவிடாய் பெரும் போக்காக அமைந்து மிகச்சிரமம் கொடுக்கும்.

இவ்வித அமைப்புள்ள பெண்களுக்கு வயதுக்கு வந்ததி-ருந்தே திங்கட்கிழமைதோறும் அம்மனை வணங்குவது, நாகத்திற்கு பன்னீர், மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்வது என தொடர்ந்தால் கருப்பைக் கோளாறுகள் மட்டுப்படும்.

5-ல் சந்திரன், ராகு இருந்து, 5-ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்து, 5-ஆம் வீட்டை சுபர் பார்த்தால் நல்ல குழந்தைகளே பிறக்கும்.

அவ்வாறு சுபத்தன்மை இல்லாவிடில் குழந்தை பிறக்க நல்ல மருத்துவ உதவி பெறுவதுடன், குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நிலை குறித்து நன்கு சோதித்துக்கொள்ளுதல் அவசியம்.

5-ல் சந்திரன், ராகு இருந்து இவர்களை குரு பார்த்தால் குழந்தைப்பிறப்பு பற்றிய பயமே வேண்டாம். புதுவித சிந்தனைகள் கொண்ட குழந்தை பிறக்கும்.

5-ல் செவ்வாய்

செவ்வாய் ஒரு நெருப்பு கிரகமாகும்; பித்த கிரகமாகும். செவ்வாய் ரத்த சிவப்பணுக்களையும், ஆயுதங்களையும் குறிப்பிடும் கிரகம்.

இவ்வித செவ்வாய் 5-ல் இருக்கும்போது, அதிக பித்தம் அல்லது அதிக உஷ்ணம் மூலம் கர்ப்பப்பைக் கோளாறு ஏற்பட ஏதுவாகும். இதனால் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படக்கூடும். மேலும் இவர்களின் பிரசவம் அநேகமாக சிசேரியனாக அமையும். இயற்கையான முறையில் பிரசவித்தாலும், பிரசவ வ- மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

5-ல் செவ்வாய் உள்ளவர்களுக்கு, மாதவிலக்கு சமயம் அதீத வயிற்றுவ- வரக்கூடும்.

இவர்கள் உணவில் துவர்ப்புச்சுவையுடைய பொருட்களைச் சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.

செவ்வாய் பூமிகாரகர். எனவே 5-ல் செவ்வாய் உள்ள பெண்கள் உணவுகளை மண்பாண்டத்தில் சமைப்பது விசேஷமாக அமையும். மேலும் பித்தம் தணிக்கும், உஷ்ணம் குறைக்கும் உணவுகளாக கவனித்து சாப்பிடுவது நலம்.

5-ல் செவ்வாய் இருப்பின், கண்டிப்பாக செவ்வாய்க்கிழமை முருகன், துர்க்கையை வணங்குதல் நல்லது. துர்க்கையை குங்குமம் கொண்டு அர்ச்சிப்பது நல்லது. செவ்வாய்க்கிழமை விரதமிருப்பது மிக மேன்மை தரும்.

பெண்களுக்கு மட்டுமல்ல; 5-ல் அல்லது 9-ல் செவ்வாயுள்ள ஆண்களுக்கு குழந்தைப்பேறு தாமதமானால், நீங்களும் செவ்வாய்க்கிழமை விரதமிருந்து, முருகரை வணங்குங்கள். செவ்வாய் வீரிய சக்திக்குக் காரகர். அதனால் ஆண்களின் விந்து எண்ணிக்கை அதிகரித்து, குழந்தைப்பேறு சீக்கிரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

5-ல் செவ்வாயுள்ள பெண்கள் கந்தசஷ்டிக்கவசம் கூறுவது, நரசிம்மர் வழிபாடு, துர்க்கை வழிபாடு போன்றவை கர்ப்பப்பையைக் காத்து, குழந்தைப்பேற்றை எளிதாக, விரைவாகக் கிடைக்கச் செய்யும்.

5-ல் செவ்வாய் இருந்து, அவர் ராகு சம்பந்தம் அல்லது சனி சம்பந்தம் பெறுவது சற்று சிக்கல்தான். இவ்விதம் இருப்பின், கர்ப்பப்பையில் ரத்தக்கட்டிகள் இறுகி, பெருகிவிடும்.

சிலருக்கு வருடத்துக்கு இருமுறைதான் மாதவிலக்கு என்றாகிவிடும். இந்த இரு நிலையுமே மிகத் தவறு. இது கர்ப்பப்பையின் சிக்கலை உணர்த்துகிறது.

இவ்வாறு இருக்கும் பெண்கள் நாக சுப்பிரமணியரை வணங்கவேண்டும். மேலும் சிறிய செம்பிலான நாக விக்ரகத்தை முருகர் கோவில் உண்டிய-ல் காணிக்கை செலுத்தவும்.

செவ்வாய், சனி 5-ல் இருப்பின் சனிக்கிழமைதோறும் துர்க்கையை சிவப்பு குங்குமம், எலுமிச்சை கொண்டு வணங்கவும்.

5-ல் செவ்வாய் சுபத்தன்மை பெற்றிருந்தால், தன்னம்பிக்கை, நேர்மையான தைரியம், தவறுகளைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் என நல்ல வீரமான குழந்தைகள் பிறப்பர்.

5-ல் செவ்வாய், அசுபத்தன்மையுடன் இருந்தால், வீண் வம்பு வழக்கு, சண்டை, அடிதடி என இன்னபிற வேண்டாத தைரியுமடைய குழந்தைகள் பிறக்கக்கூடும்.

5-ல் புதன்

ஜோதிடம் புதனை ஒரு அ-கிரகம் என்றே குறிப்பிடுகிறது. மேலும் புதன் சுபரோடு சேர்ந்தால் சுபராகவும், அசுபரோடு சேர்ந்தால் அசுபராகவும் மாறி விடுவார். எனவே பெண்களுக்கு, கர்ப்ப ஸ்தானம் எனும் 5-ஆமிடத்தில் தனித்த புதன் இருப்பது அவ்வளவு சிலாக்யமில்லை. புதன் ஏதேனும் ஒரு சுபரோடு இருப்பதே நன்று.

புதன், "ஹைப்போதலமஸ்' எனும் சுரப்பியின் காரகர். இந்த சுரப்பி, மத்திய நரம்பு மண்டலத்தை இயக்கும். பெண்களுக்கு 5-ல் புதன் இருந்தால், மாதவிடாயின்போது அடிவயிற்றில் நரம்பு பிடித்திருப்பதுபோல் வ-யை உணர்வார்கள். வெள்ளைப் படுதலலாலும் கஷ்டம் இருக்கும்.

இவர்கள் பச்சைப்பயிறு போன்ற தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் பச்சைநிற உணவுகளை அதிகமாக சாப்பிடுதல் நன்று. குதிரை வடிவ அணிகலன்களை அணிந்துகொள்ளலாம்.

5-ல் புதன் இருந்து குழந்தை பிறக்க தாமதமானால், மதுரை மீனாட்சி அம்மனுக்கு பச்சைப்பட்டு சாற்றவும்.

5-ல் புதன் இருக்கும் பெண்கள் அடிக்கடி வாயுக்கோளாறு, நரம்பு வாதம் போன்ற நோய்களுக்கு ஆளாவார்கள். மேலும் ரத்த சோகையும் ஏற்படக்கூடும்.

எனவே 5-ல் புதன் உள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் ஆரம்பத்தி-ருந்தே, ரத்த விருத்திக்கான உணவுகளைச் சேர்த்துக்கொள்ளவும். இல்லாவிடில் மிகுந்த இடுப்பு வ-யும். திடீர் தளர்ச்சியும் உண்டாகும்.

விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் செய்வது சாலச்சிறந்தது. நாலாயிர திவ்யப் பிரபந்தமும் கூறலாம். முடிந்தால் ஏகாதசி விரதமிருக்கவும்.

உங்கள் வீட்டருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு புதன்கிழமை தோறும் சென்று, துளசிமாலை அணிவித்து வணங்கவும்.

திருமணமாகி பல ஆண்டுகள் சென்றபின் குழந்தைக்காகப் பரிகாரம் செய்வதைவிட, பெண்கள் வயதுக்கு வந்தவுடனேயே அவர்களின் 5-ஆமிடத்தில் புதன் இருப்பின் அப்போதிருந்தே பெருமாளை வணங்குதல் நல்லது.

புதனுடன், வேறு பாவரும் சேர்ந்து சுபர் பார்வை இருப்பின், பிறக்கும் குழந்தைகளின் சிந்தனைத் திறனே வேறு ரேஞ்ச்தான். இவர்களின் யோசிக்கும் திறன், பிறரை மிரளவைக்கும்.

5-ல் குரு

ஜோதிடம், குருவை குழந்தைகளைக் குறிப்பவராகக் கூறுகிறது. 5-ஆமிடம் குழந்தைகளை உருவாக்கும் ஸ்தானம். எனவே ஜோதிட விதிப்படி, ஒரு காரக கிரகம், அதனது காரக வீட்டில் இருப்பது காரகோ பாவநாஸ்தி எனும் கூற்றுப்படி, குழந்தைகள் பிறப்பு குறைவாக இருக்கும். ஆயினும் மற்ற கிரகங்களைப்போல், முற்றிலும் அந்த ஸ்தானப்பலனை அழிக்காமல், குறைவாகக் கொடுப்பார். ஏனெனில் அவர் குருவல்லவா!

குரு கொழுப்பைக் குறிப்பார். அதனால் 5-ல் குரு இருக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பையில் மிகுதியாக சதை ஏற்படும் வாய்ப்புண்டு. சிலருக்கு குழந்தை உண்டாகும் இடத்தில் சதைத் திறட்சி ஏற்பட்டு, அதனால் கரு உருவாவது தடைப்படலாம்.

எனவே 5-ல் குரு இருக்கும் பெண்கள் யோகாமூலம் தங்களது உடல் எடையை சமமாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். இங்கு யோகா மூலம் எடை குறையுங்கள் என்று குறிப்பிடக்காரணம், அதில்தான் குழந்தைப் பிறப் பிற்கென்றே சிறப்பான ஆசனங்கள் உள்ளன. எனவே ஆரம்பத்தி-ருந்தே யோகா கற்பது அவசியம்.

குரு மஞ்சள் வண்ணம் கொண்டவர். எனவே மஞ்சள் வண்ண ஆடைகள் அணிவது நல்லது. மஞ்சள் வண்ண காய்கறி, பழங்கள் நல்லது. யானை வடிவ அணிகலன் நன்று. அல்லது அன்னப்பறவை நகைகள் பயன்படுத்தவும்.

முடிந்தபோதெல்லாம் இந்த பெண் குழந்தைகளை அரசமரம் சுற்றுவதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளச்செய்யவும். புஷ்பராக கம்மல் அணிவிக்கவும். அடிக்கடி கொண்டைக்கடலை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

5-ல் குரு உள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிமேதாவி களாக, சமயத்தில் உங்களுக்கே புத்தி சொல்லும் தகப்பன்சாமிகளாக இருப்பர்.

இவர்கள் ஒருமுறையாவது திருச்செந்தூர் சென்று வரவேண்டும். அது குரு தலம். மேலும் வியாழக்கிழமைதோறும் சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கவும். கண்டிப்பாக ஏதேனும் ஒரு சித்தரை- சீரடி சாய்பாபா, ராகவேந்திரர், காஞ்சி மகாபெரியவர் என யாராவது ஒருவரின் பாதத்தைப் பற்றிக்கொள்ளவும்.

5-ல் சுக்கிரன்

சுக்கிரன் ஒரு பெண் கிரகம். எனவே 5-ல் சுக்கிரன் உள்ள பெண்களுக்கு பெண் குழந்தைகள் -அதுவும் அழகாக, லட்சணமாகவுள்ள பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம்.

சுக்கிரன் நீர் கிரகம் என்பதால், 5-ல் சுக்கிரன் உள்ள பெண்கள் சற்று நீர் கோர்த்து இருப்பர். (5-ல் குரு- கொழுப்பினால் குண்டாக இருப்பர்; 5-ல் சுக்கிரன்- நீர் சேர்க்கையால் குண்டாக இருப்பர்). மேலும் 5-ல் உள்ள சுக்கிரன் சிறுநீர் தொந்தரவையும் தருவார். சுக்கிரன், ரகசிய நோய்களுக்குக் காரகர். எனவே எப்போதும் அதிக சுத்தமாக இருத்தல் அவசியம். இல்லாவிடில் "யூரினெரி இன்பெக்ஃஷன்' ஏற்படக்கூடும்.

5-ல் சுக்கிரன் உள்ள பெண்கள் எப்போதும் மகாலட்சுமித் தாயாரை வணங்குதல் நலம். வெள்ளைநிற மலர்கள் கொண்டு அர்ச்சிக்க வும். கூடவே பெருமாளையும் வணங்குவது தாயாருக்கு மிகுந்த சந்துஷ்டி யைக் கொடுக்கும்.

சுக்கிரன் உடல் பாகத்தில் கர்ப்பப்பையைக் குறிப்பார். எனவே 5-ல் சுக்கிரன் இருந்தால் கரு நிச்சயம். ஆனால் 5-ல் சுக்கிரன் நீசமாக இருந்துவிட்டால் அந்த அமைப்புள்ள பெண் பிள்ளைகளுக்கு ஆரம்பத்தி-ருந்தே பரிகாரங்களைத் தொடங்கிவிடவும். இது ரிஷப லக்ன, ரிஷப ராசிப் பெண்களுக்கு அமைய வாய்ப்புள்ளது. ரிஷபத்துக்கு 5-ல் (கன்னியில்) சுக்கிரன் நீசமடைவார். அவர் நீசபங்கமாகிவிட்டால் தடைகளுக்குப் பிறகு குழந்தைப்பேறு ஏற்படும்.

5-ல் சுக்கிரன் உள்ளவர்கள் மகாலட்சுமித் தாயாருக்கு சந்தனநிறப் பட்டு அல்லது வெண்பட்டு வாங்கி சமர்ப்பிக்கவும். கண்டிப்பாக கருடனை வணங்கவும். தந்தமுள்ள யானை வடிவ நகைகளை அணியலாம்.

வெண்பட்டு பயன்படுத்தலாம். வைரம் அணியலாம். அத்திமரம் வளர்க்க ஆவன செய்யலாம். வெள்ளிக்கிழமை இனிப்புகள் தானம் செய்யலாம். பெண் தெய்வ அர்ச்சனைக்கு வெண்தாமரை வாங்கிக்கொடுக்கவும். வசதியுள்ளவர்கள் வெண்தாமரை மாலைகளை சாத்வீக பெண் தெய்வங்களுக்கு அணிவிக்கவும். அவ்வப்போது உணவில் மொச்சையை சேர்த்துக் கொள்ளவும்.

5-ல் சுக்கிரன் உள்ளவர்கள் மட்டுமல்லாது, மற்ற எல்லாரும் அவ்வப்போது மொச்சையை உணவில் சேர்த்துக்கொள்ளவும். மொச்சை என்பது சுக்கிரனின் தானியமாகும். இது குடும்ப உறுப்பினர் களுக்கு வளம் சேர்க்கும். சுக்கிரன் பழங்களைக் குறிப்பார். எனவே பழங்களை அப்படியே சாப்பிடப் பழகுங்கள்.

5-ல் சுக்கிரனோடு பாவர்கள் இருந்தால், அவர்களைப் பொருத்து கர்ப்பப்பை கஷ்டங்கள் வரக்கூடும். அதற்கேற்றாற்போல், பரிகாரம் செய்துகொள்ளுதல் அவசியம்.

5-ஆமிடம் கலைகளுக்குரியது. சுக்கிரனும் ஒரு கலைநயமிக்க கிரகம். எனவே குழந்தைகள் கண்டிப்பாக ஏதோ ஒரு கலையில் முதன்மை பெற்றவர்களாகத் திகழ்வர்.

5-ல் சுக்கிரனோடு பாவரும் இருந்து பிறக்கும் குழந்தைகளை மிக கவனமாக வளர்த்தல் அவசியம்.

5-ல் சனி

சனி என்றாலே எல்லாருக்கும் ஒரு பயம்தான். எனினும் ஜோதிட விதிப்படி, சனி பார்க்கும் இடங்களைத்தான் பஸ்பமாக்குவார். இருக்கும் இடத்தை வளமாக்குவார். இதனால் 5-ல் சனி உள்ள பெண்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும். என்ன ஒன்று... சற்று தாமதமாகப் பிறக்கும். ஆனால் குழந்தை பிறந்துவிடும். சனிக்கு சுருக்கும் தன்மையுண்டு. எனவே கர்ப்பைப்பை சுருங்கிவிடும் நிலைமையை 5-ல் உள்ள சனி பெண்களுக்குக் கொடுத்துவிடுவார். மேலும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளையும் உண்டாக்குவார். வீட்டுவிலக்கில், கறுப்புநிற தீட்டுக்கட்டிகளை உண்டாக்கிவிடுவார். இவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுதல் அவசியம். சனி எப்போதும் கழிவுப்பொருளுக்கான உறுப்புகளை சுட்டிக்காட்டுவார். இதனால் கர்ப்ப ஸ்தானத்தில் அமரும் சனி கர்ப்பப்பையில் வேண்டாத கழிவுகளை உண்டாக்கிவிடுவார். முற்காலத்தில் பெண்களுக்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து கொடுப்பார்கள். இது கர்ப்பப்பையை சுத்தம் செய்துவிடும். இக்காலத்தில் 5-ல் சனி உள்ள பெண்கள் ஆங்கில அல்லது சித்த மருத்துவம் என ஏதோ ஒன்றைப் பின்பற்றி, கர்ப்பப்பையில் கழிவு சேராமல் பார்த்துக்கொள்ளவும். சமைய-ல் கறுப்பு நிற உணவுப் பொருளை சேர்த்துக்கொள்ளவும். சனி பகவானின் இன்னொரு காரகம் நல்லெண்ணெய். இதனை 5-ல் சனி உள்ள பெண்கள் மட்டுமல்ல; மற்ற எல்லா பெண்களும் சேர்த்துக்கொள்ளலாம். பெண்கள் வயதுக்கு வந்தவுடன், சனியின் நிறமான கறுப்பு உளுந்து, நல்லெண்ணெய் போன்றவற்றை கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ளவும். இவ்வகை உணவுகள் கர்ப்பப்பையை சுத்தமாக்கி, குழந்தை உற்பத்தியை இலகுவாக்கும். வேறுசிலருக்கு 5-ல் சனி இருப்பின் வீட்டுவிலக்கு மிகவும் தாமதமாகும். இதுவும் கெடுதல். இதற்கு சனியின் இன்னொரு தானியமான எள்ளை, வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டியுடன் சேர்த்து உண்ணவேண்டும். மருத்துவ கவனிப்பும் அவசியம். எள் சாப்பிட்டால் மாதவிலக்கு அதிகமாகிவிடும். அதனால் எள் சாப்பிடும்போது யோசித்து சாப்பிட வேண்டும்.

சனி ஒரு வறண்ட தன்மையுடைய கிரகம். எனவே 5-ல் உள்ள சனி கர்ப்பப்பையை வறட்சியாக்கும் வாய்ப்பும் ஏற்படும். இதற்கு வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. 5-ல் சனி உள்ள பெண்கள், அவ்வப்போது சனீஸ்வர பகவான் சந்நிதி குருக்களிடம் நல்லெண்ணெய், எள் மிட்டாய் (எள்ளாகக் கொடுத்தால் வாங்கமாட்டார்கள். எள் மிட்டாய், எள்ளுருண்டையாகக் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள்), கருப்புப்பட்டு, குப்பைக்கூடை, இரும்புப்பெட்டி, இரும்புப்பாத்திரம், கேழ்வரகு, தோல் பை, கம்பளிப் போர்வை போன்றவற்றில், அந்த அர்ச்சகரிடமே எது தேவையென்று கேட்டு வாங்கிக்கொடுக்கவும். அங்கு வேலை செய்பவர்களுக்கு செருப்பு, ஆடைகளை வாங்கிக் கொடுக்கலாம். 5-ல் சனி இருக்கும் பெண்களுக்கு, திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பிக்கும் போதே இந்த பரிகாரத்தையும் ஆரம்பித்துவிடுங்கள். அதுபோல, திருமண விஷயங்கள், பேச்சுக்கள் ஆரம்பிக்கும் வேளையில் சனிக்கிழமை விரதம், ஒரு பொழுது விரதம் ஆரம்பித்துவிடுங்கள். சனீஸ்வரர் தர்மநியாயவாதி. முழு நம்பிக்கையோடு சனீஸ்வரரை வேண்டினால், சீக்கிரத் திருமணம், உடனடி குழந்தை பாக்கியம் கிட்டும். (5-ல் அமரும் சனி தனது 3-ஆம் பார்வையால் ஜாதகரின் 7-ஆம் வீட்டை அவதானிப்பார். அதனால் திருமணமும் தாமதமாகும். எனவே 5-ல் சனியுள்ள பெண்கள், சீக்கிரமாகவே சனீஸ்வர பகவானை வணங்குவது நல்லது). இத்தகைய பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சற்று மாநிறமாக, சற்று சோம்பலுடன் இருப்பர். சனி சம்பந்தம் கொண்ட கிரகங்கள்மூலம் சற்று மேன்மையான, புத்திசா-யான குழந்தைகளும் பிறக்கக்கூடும். சனி நிறைய பெண் குழந்தைகளைக் கொடுப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

5-ல் ராகு

இது சற்று யோசிக்க வேண்டிய அமைப்புதான். அவர் அமர்ந்த 5-ஆம் வீட்டு அதிபதி, உடனிருக்கும் கிரகத்தின் பலன் எல்லாவற்றையும் ராகுவே ஆகர்ஷித்துக் கொள்வார். இந்த ராகுவை குரு பார்த்தால் குழந்தை பிறக்கும் வாய்ப்புண்டு. ராகுவுக்கு பெருக்கும் தன்மையுண்டு. கர்ப்ப ஸ்தானத்தில் அமர்ந்த ராகு, வீட்டுவிலக்கின் உதிரப் போக்கைப் பெருக்குவார் அல்லது அடிவயிற்றைப் பெருக்க வைத்துவிடுவார். மேலும் 5-ல் அமர்ந்த ராகு, அலர்ஜி எனும் ஒவ்வாமையை உண்டாக்கிவிடுவார். ஏனோ வயிறு எப்போதும் கனமாக, உப்புசமாக இருப்பது போன்றே இருக்கும். அடிக்கடி "ஃபுட் பாய்சன்' என்ற நிலை வேறு உண்டாகும். சிலசமயம் நோயை இன்னதென்று கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் ராகு- கேதுக்கள் நிழல் கிரகங்கள். இருட்டைக் குறிப்பவர்கள். அதனால் நோயைக் கண்டுபிடிக்க விடமாட்டார்கள். 5-ல் ராகு இருக்கும் பெண்கள் ஆரம்ப நாட்களி-ருந்தே- அதாவது வயதுக்கு வந்தவுடனேயே, புற்றுள்ள மகாமாரி அம்மன்களை வணங்க ஆரம்பிக்கவும். அவளுடைய பாதங்களை இறுகப்பிடித்துக் கொள்ளவும். சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அரச மரத்தைச் சுற்றி வரவும். சிறு நாக விக்ரக காணிக்கை நல்லது. உணவில் உளுந்தை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும். உலர்ந்த பழங்கள், உலர்ந்த கொட்டைகள், பாதாம் சேர்த்துக்கொள்ளவும். 5-ல் ராகு இருக்கும் பெண்கள் கண்டிப்பாக துர்க்கையைத் தொடர்ந்து வணங்குதல் வேண்டும். அவளை வழிபட வேண்டும் என்று மனதார நினைத்தால், எவ்வாறு வணங்கவேண்டும் என அந்தத் தாயே வழிகாட்டுவாள். நீங்கள் இவ்வளவு முனைப்புடன் இருந்தால்தான், ஒரு குறையுமில்லாமல் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

5-ல் கேது

கேது என்பது ஒரு பாவகிரகம். ஒரு சர்ப்ப கிரகம் 5-ல் இருக்கலாமா எனில் கேது இருக்கலாம். கேதுவின் வடிவம் ஒரு ஆணின் விந்து வடிவமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் கேதுவுக்கு பிரிக்கும்- பிளவுபடுத்தும் தன்மையுண்டு. கேதுவின் இக்குணம், கர்ப்ப ஸ்தானத்திற்கு ஏற்றதுதான். இதனால் 5-ல் கேது இருப்பினும் குழந்தை பாக்கியம் உண்டு. கேது பித்தம் மற்றும் மர்ம உறுப்புகளைக் குறிப்பார். 5-ஆமிடமான கர்ப்ப ஸ்தானத்தில் அமரும் கேது வயிற்றுவ-யைக் கொடுப்பார். அது கர்ப்பம் சம்பந்தமாக இருக்கும். மருத்துவரிடம் சென்றால் அவரும், "எல்லாம் நார்மல்; அப்புறம் ஏன் வயிற்றில் கர்ப்பம் உண்டாகாமல் இருக்கிறது' என குழம்புவார். 5-ல் உள்ள கேது புரியாத புதிர் போன்ற வில்லங்கத்தை கர்ப்பப்பையில் உண்டாக்குவார். எனினும் 5-ஆம் அதிபதியின் பலத்தைப் பொருத்து, சில மருத்துவ ஆலோசனைகளுக்குப் பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது வேர்கள், மூ-கைகள், விழுதுகள் போன்ற பொருட்களுக்குக் காரகர். எனவே 5-ல் கேது உள்ள பெண்கள், கர்ப்பப்பையின் புரியாத புதிருக்கு விடைகண்டு கரு உருவாக கூடியமட்டும் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தைக் கடைப்பிடிக்கவும். விநாயகரை நன்கு வழிபடவும். ஆஞ்சனேயருக்கு ஏதேனும் வேண்டிக்கொள்ளவும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கவும். உணவில் கொள்ளு சேர்த்துக்கொள்ளவும். உடற்பயிற்சி அல்லது யோகா கற்கவும். யானைமுடி மோதிரம் அணியவும். 5-ல் உள்ள கேது வாங்கிய சாரநாதர், 5-ஆம் அதிபதி, 5-ஆமிடத்தைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றைப் பொருத்து குழந்தைப்பேறு உண்டாகும். இவ்வமைப்பில் பிறக்கும் குழந்தைகள் நல்ல ஞானத்தோடு இருப்பர். 5-ல் ராகு- கேதுக்கள் இருந்தால், அது கண்டிப்பாக முன்னோர் சாபத்தைக் குறிக்கும். எனவே ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்குச் சென்று பரிகாரம் செய்தல் அவசியம். பெண்களின் கர்ப்பப்பை என்பது குழந்தைப் பிறப்பிற்குரியதுதான். ஆயினும் அதில் அமர்ந்த கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், அவர்களின் முழு உடல் ஆரோக்கியத்தையும் தகர்த்துவிடும். இதனால் மனத்தடுமாற்றமும், மனக்குழப்பமும் உண்டாகும். இதனால்தான் பெண்களுக்கு வீட்டுவிலக்கு நாட்களில் மிகுந்த எரிச்சல் உணர்வும், மன வெறுமையும் ஏற்படுவதாக மன உளவியலாளர்கள் கூறுகின்றனர். மேலும் "மெனோபாஸ்' எனும் காலத்திலும் பெண்கள் படும் துன்பம் அதிகம். எனவே 5-ல் உள்ள கிரகங்களைக் கண்டறிந்து, அவர்களின் சுபாவப்படி பரிகாரம், உணவுமுறையை மேற்கொண்டால் பெண்களுக்கு பெரிய நிம்மதி கிடைக்கும். 5-ஆமிட கிரகப் பரிகாரங்கள் குழந்தைப் பேற்றை விரைவாக்குவதோடு, கர்ப்பப்பையின் நிலைமையையும் சீராக்கும்.

-----------------------------------------------------

வெற்றி தரும் வண்ணங்கள்!

ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனி உருவம், குணம், உலோகம், தானியங்கள், மலர், சுவை, ரத்தினம், நிறம், தேவதை என தனித்துவமான செய்திகள் ஜோதிடத்தில் காணக்கிடைக்கின்றன. கிரகங்களும் வண்ணங்களும்

மேற்கூறிய கிரகங்களின் தனித்துவத்தில் வண்ணம் என்ற நிறம் பற்றி ஆராய்வோம்.

எந்த கிரகத்துக்கு எவ்வண்ணம்?

சூரியன்- சிவப்பு, மஞ்சள், மெருன்.

சந்திரன்- வெள்ளை.

செவ்வாய்- சிவப்பு, ரோஸ், மெஜந்தா.

புதன்- பச்சை.

குரு- மஞ்சள், பிஸ்கட் கலர்.

சுக்கிரன்- வெள்ளை.

சனி- கறுப்பு, ஸ்கைப்ளு, டல்கிரே.

ராகு- கறுப்பு.

கேது- சிவப்பு.

இதுவல்லாது எல்லா கிரகங்களும் தனித்தன்மையான தொழில் வகைகளைக் கொண்டிருக்கும். அந்தத் தொழில் செய்பவர்கள், அந்த கிரகத்திற்குரிய நிற உடைகளைப் பயன்படுத்தும்போது அவர்கள் வாழ்வு செழிப்பாகத்தான் இருக்கும்; ஐயமில்லை.

கிரகங்கள் அனைவரும் ஒருவரோடொருவர் நட்பு பாராட்டி, கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்களா என்றால் இல்லவேயில்லை. ஒவ்வொரு கிரகத்துக்கும் வேறொரு கிரகம் பகையாக இருக்கும். ஒரு ஜாதகர் ஒரு கிரக தத்துவத் தொழிலைச் செய்துகொண்டு அதற்குப் பகை கிரக நிறப்பொருட்களை- ஆடைகள் அணிந்தால் என்னவாகும்? தொழிலி-ல் வெற்றி கிட்டாது.

கிரகங்களில் யாருக்கு யார் பகை? சூரியன் ஷ் சுக்கிரன், சனி, ராகு, கேது. சந்திரன் ஷ் புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது. (சில நூல்களில் சந்திரனுக்கு பகை கிரகங்களே கிடையாது என கூறப் பட்டுள்ளது).

செவ்வாய் ஷ் புதன், சனி, ராகு.

புதன் ஷ் சந்திரன், செவ்வாய், குரு, கேது.

குரு ஷ் புதன், சுக்கிரன்.

சுக்கிரன் ஷ் சூரியன், சந்திரன், குரு.

சனி ஷ் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது.

ராகு ஷ் சூரியன், சந்திரன், செவ்வாய்.

கேது ஷ் சூரியன், சந்திரன், சனி.

பொதுவாக எந்த கிரகத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்தினால் வாழ்வு உயரும் என குறிப்பிடுவர். இப்போது எந்த கிரக காரகத்துக் குரிய தொழில் செய்வோர், எந்த நிறத்தைப் பயன்படுத்தக்கூடாது என பட்டியலி-டுவோம்.

சூரியன்

சூரியனின் நிறம் சிவப்பு. சூரியனின் முக்கியமான தொழில் அரசு, அரசு சார்ந்த பணிகள், முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர் கள், அரசு நிர்வாகப் பொறுப்பில் உள்ளோர், தங்கம், மாணிக்க நகைக் கடைக்காரர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் போன்ற சூரிய கிரக தத்துவத் தொழில் செய்வோர் ரத்தச்சிவப்பு நிறம் சார்ந்த பொருட்களை- உடைகளைப் பயன்படுத்த ஏற்றது. அல்லது மெருன் கலர் பயன்படுத்தலாம். சூரியனின் பகை கிரகங்கள் சுக்கிரன், சனி, ராகு, கேது. சுக்கிரன் வெண்மை நிறத்தையும், சனி கறுப்பு நிறத்தையும் குறிப்பர். மேற்கண்டவை சூரிய சம்பந்த வேலை செய்வோர், பயன்படுத்தக் கூடாத நிறங்கள். சூரிய சார்புடைய தொழில்புரிவோர் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தக் கூடாது. சுக்கிரன் வீட்டில் சூரியன் நீசமாவார். எனவே வெள்ளை நிறம் பயன்படுத்தினால் தொழிலில் பின்னடைவும், கௌரவக் குறைச் சலும், ஒரு தேக்க நிலையும் ஏற்பட்டுவிடும். பெண்களால் அவமானமும் வரக்கூடும். மேலும் அழகான வெள்ளை நிற மாளிகையை ஆசையாகக்கட்ட, அதுவே வீழ்ச்சிக்குக் காணமாகிவிடும். எனவே பெரிய அரசுப் பதவிகளில் இருப்போர் கூடியமட்டும் வெள்ளை நிறத்தைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது. கறுப்பு, கிரே, ஊதா நிறங்கள் சனியின் வண்ணங்கள் ஆகும். சூரியனுக்கும், சனிக்கும் பெரும் பகை. சனிக்கு, சூரியனைக் கண்டால் ஆகவே ஆகாது. இதன் மூலம் சூரியனை வெறுக்கும் சனி கிரக நிறங் களை, சூரியன் சார்புடைய தொழில் செய்வோர் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் அரசியலில் முன்னேற்றம் இராது. காலப்போக்கில் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. சனிக்கு முதன்மையான பகை கிரகம் என்றால் அது சூரியன்தான். எனவே அரசு அதிகாரிகள், அரசு சார்பு தொழில் புரிவோர், கறுப்பு, ஊதா, கிரே கலர்களைத் தவிர்த்திடுங்கள். சில நூல்கள் சூரியனுக்குப் பகையாக ராகு- கேதுவைக் குறிப்பிட்டுள்ளன. ஆனால் “உத்தர காலாம்தம்’ சூரியனுக்குப் பகை என சனியையும் சுக்கிரனையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளது. எனினும் சூரியன், பாம்பு கிரகங்களான ராகு- கேது சம்பந்தம் பெறும்போது, கிரகண நிலையை அடைவார். எனவே கறுப்பு நிறத்தை சூரிய கிரக தத்துவத் தொழில் புரிவோர் தவிர்ப்பது நலம். சூரிய சார்புடைய தொழில்களில் உள்ளோர், சிவப்பு, மெஜந்தா, அரக்கு, ஆரஞ்சு என சிவப்பு நிறத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணங்களைப் பயன்படுத்த வாழ்வின் போக்கு எளிதாகும்.

சந்திரன்

“உத்தரகாலாம்ருதம்’ சந்திரனுக்கு எந்த கிரகமும் பகையில்லை என குறிப்பிட்டுள்ளது. எனினும் வேறுசில மூல நூல்களில் புதன், சுக்கிரன், சனி, ராகு- கேது என உள்ளது. பொதுவாக சந்திரனுக்கு எந்த கிரகமும் பகையில்லை என்றே கூறுவர். எனினும் சந்திரனுக்கு, ராகு- கேது சம்பந்தம் ஏற்படும்போது கிரகண நிலை ஏற்பட்டு பாதிப்பு ஏற்படலாம். சந்திரனின் காரக நீர்த் தொடர்புத் தொழில்கள் கொண்டோர் கறுப்பு நிறத்தைத் தவிர்த்துவிடுங்கள்.

உணவு விடுதிகள், உணவு பரிமாறுவோரும் கறுப்பு நிறம் பயன்படுத்தக்கூடாது.

சந்திரன், உணவு சம்பந்தமான விவசாயத்தைக் குறிப்பதால் விவசாயிகளும் கறுப்பு நிறம் பயன்படுத்தாதீர்கள்.

மேலும் சந்திரனின் காரகத்தொழிலான வைர வியாபாரம், முத்து விற்பனை, மீன் விற்பனை, அரிசி, தயிர் வியாபாரம், பூ வியாபாரம், வெளிநாடு சம்பந்தத் தொழில் போன்ற சம்பந்தபட்டோர் கறுப்பு நிறத்தைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். கறுப்பு நிறத்தைப் பயன்படுத்தினால், யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழும் நிலை ஏற்படலாம். கறுப்பு தவிர்த்து பிற வண்ணங்களைப் பயன்படுத்தலாம். முக்கியமாக வெள்ளை நிறம் பயன்படுத்த தடையில்லா வாழ்வு பெறலாம்.

செவ்வாய்

செவ்வாய்க்கு புதன், சனி, ராகு போன்ற கிரகங்கள் பகை. ஆனால் சில நூல்கள் சனி சமம் எனவும் கூறுகிறது. எனவே செவ்வாய்க்கு புதன் மட்டுமே கடும்பகை எனக் கொள்ளலாம்.

செவ்வாயின் காரகத் தொழில்களில் முக்கியமானது காவல், இராணுவம், தீயணைப்புத் துறைதான். எனவே செவ்வாயின் நிறமான சிவப்பு அல்லது அரக்கு நிறம், மெஜந்தா போன்றவை ஏற்புடையவை. அதுவல்லாது இத்தொழில் புரிவோர். அதன் எதிரி கிரக நிறமான பச்சை நிறத்தை (செவ்வாய்க்கு பகை புதன்; புதனின் நிறம் பச்சை) பயன்படுத்தினால் நிறைய தடைகள் ஏற்படும்.

அளப்பரிய குழப்பங்கள் உண்டாகும். ஒருவித தெளிவில்லாத நிலை ஏற்பட்டு, பணியில் தொய்வுண்டாகும்.

செவ்வாயின் அடுத்த முக்கிய தொழில் விவசாயம். செவ்வாய் பூமிகாரகன். எனவே பூமி சம்பந்தத் தொழில் புரிவோர் கண்டிப்பாக பச்சை வண்ணத்தை பகிஷ்கரிக்க வேண்டும், இந்த வண்ணத்தைப் பயன்படுத்த, பயன்படுத்த விவசாயம் செய்யவே முடியாத நிலை உண்டாகி விடும். (தற்போதைய காலகட்டத்தில் விவசாயிகள் அணிந்துள்ள துண்டின் நிறத்தை கவனியுங்கள். உள்ளங்கை நெல்லிக்கனிபோல், இவ்வுண்மை புரிபடும்). பூமி சம்பந்தமான ரியல் எஸ்டேட் தொழில்புரிபவர்களும் பச்சை வண்ணத்தைப் பக்குவமக விலக்குங்கள்.

செவ்வாய், பானை உள்ளிட்ட சமையல் கலைக்கும் உரியவர்.

எனவே சமையல் கலைஞர்களும் பச்சை வண்ணத்தை ஒதுக்கி விடுங்கள்.

இரும்பு, பொறியியல், மின்சாரத்துறையினரும் பச்சை நிறம் தவிர, மற்ற வண்ணங்களைப் பயன்படுத்தவும்.

பொதுவாக செவ்வாய் காரகத் தொழில்களுக்கு சிவப்பு, பிங்க், ரோஸ், மெஜந்தா போன்ற சிவப்பு நிறத்தை அடிப்படையாகக் கொண்ட நிறங்களே ஏற்றவை. வாழ்வு செழிப்பாக செவ்வனே நடக்கும்.

புதன்

புதன் கிரகத்தின் வண்ணம் பச்சை. புதனின் எதிரி கிரகங்களாக சந்திரன், செவ்வாய், குரு, கேது குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆயினும் “உத்தரகாலாம்ருதம்’ புதனின் எதிரி கிரகமாக சந்திரனை மட்டுமே கூறியுள்ளது. எனினும் புதனும் செவ்வாயும் பகை கிரகங்கள்தான்.

குரு, கேது சமம் என கூறப்பட்டுள்ளதால் அதனை விட்டுவிடலாம்.

புதனின் வண்ணம் பச்சை. அவரின் எதிரி கிரக சந்திரனின் நிறம் வெண்மை.

புதனின் முக்கியத்தொழில் கல்விதான். எனவே கல்வி சம்பந்தமான வேலை செய்வோர், தொழில்புரிவோர் வெள்ளை நிறத்தை விலக்குவது உத்தமம். இப்போது எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வரலாம். கல்விக்குரிய சரஸ்வதி தேவியே வெள்ளைநிற வஸ்திரம் அணியும்போது நாம் ஏன் அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்? சரஸ்வதி எனும் சாரதாம்பிகை அம்பாளுக்கு எல்லா நிறமும் உகந்தது. நாம் மானுடர்கள். “எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்று அலைந்து கொண்டிருக்கும் நிலை.

அதன் ஒரு பகுதியாக, புதனுக்குரிய பச்சை நிறத்தைப் பயன்படுத்தி, எதிரி கிரகமான வெள்ளை நிறத்தைத் தவிர்த்தால் ஏதேனும் நல்லது நடக்கும். குழந்தைகள் படிப்பில் முதன்மை பெறுவார்கள் என்ற நம்பிக்கைதான். நம்பிக்கைதானே வாழ்க்கை.

புதனின் அறிவு சார்ந்த தொழில்களைப் பின்பற்றுவோர் உங்கள் தொழிலில் ஏற்ற கிரகங்கள் இருப்பின் பரீட்சார்த்தமாக சில நாளுக்கு வெள்ளை நிறத் தைத் தவிர்த்துதான் பாருங்களேன்.

புதன் பத்திரிகை போன்ற எழுத்துப் பணிகளைக் குறிப்பார். எனவே பத்திரிகை நடத்துவோர், தனியார் நூலகங்கள் நடத்துவோர், பள்ளிப் பயன்பாட்டு பொருட்கள் விற்பனை செய்வோர், கணக்கு சார்ந்த ஆடிட்டிங் போன்ற தொழில் செய்வோர், தனியார் நர்ஸரி நடத்துவோர் உங்கள் தொழில் செய்யும் இடத்தில் வெள்ளை நிறத் தைப் பயன்படுத்துவதை கூடியமட்டும் குறையுங்கள். தொழில் சார்ந்த பச்சை நிறத்தின் பயன்பாட்டை அதிகரியுங்கள். வாழ்க்கை பலம் அதிகரிக்கும்.

குரு

குரு கிரகத்துக்குரிய நிறம் மஞ்சள். குருவின் எதிரி கிரகங்களாக புதனும் சுக்கிரனும் கூறப்பட்டுள்ளன.

புதன் பச்சை நிறத்தையும், சுக்கிரன் வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளனர்.

இதன்மூலம் குரு சார்புடைய தொழில் புரிபவர்கள் பச்சை, வெள்ளை நிறத்தைத் தவிர்ப்பது நல்லது என தெரிகிறது.

இதிலும் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. குருவின் மீன ராசியில் புதன் நீசமடைவார். சுக்கிரன் உச்சமடைவார். எனவே வெள்ளை நிறத்தைவிட பச்சை நிறத்தை அறவே ஒதுக்குவது குரு சார்ந்த தொழில்புரிவோருக்கு சாலச் சிறந்தது என தெளிவாகிறது.

குரு என்றாலே தெய்வீகப் பணிகள்தான் முதலி-ல் நினைவுக்கு வரும். எனவே கோவில் சார்ந்த பணி செய்வோர் கூடியமட்டும் பச்சைநிற ஆடைகளைத் தவிர்த்திடுங்கள்.

இதுபோல, குருவின் காரகத் தொழில்களான நீதித்துறை, வங்கிப்பணி, நிர்வாகம், ஜோதிடம், பூஜைப்பொருட்கள் விற்பனை, பூஜையறை அமைப்போர், சேமிப்பு வகை தொழில் உடையோர் போன்றோர் பச்சை நிறத்தைத் தவிர்த்துவிட்டு, மஞ்சள்நிறப் பயன்பாட்டை அதிகரியுங்கள். மஞ்சள் நிறத்தை அடிப்படையாகக் கொண்ட பிஸ்கெட் நிறம், ப்ரவுன் நிறம் உபயோகிக்கலாம்.

குருவுக்கு சுக்கிரனும் பகை கிரகமாகக் கூறப்பட்டுள்ளது. குருவை தேவகுரு என்றும், சுக்கிரனை அசுரகுரு என்றும் அழைப்பர். இருவரும் பகையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. குரு ஆன்மிகப் பாதையை உடையவர். சுக்கிரன் இல்வாழ்க்கை இன்பங்களை சுட்டிக்காட்டுபவர்.

எனவே ஆன்மிகம், நீதித்துறை, பக்தி, ஞானவழி செல்லுபவர்கள் வெள்ளை நிறத்தைத் தவிர்த்து, மஞ்சள் நிறத் தைப் பயன்படுத்தினால் உள்ளார்ந்த ஞானபலம் கூடும். ஆன்மிக அறிவு செழிக்கும். வாழ்க்கைத் தடை நீங்கும்.

நீண்டநாள் குழந்தை வரம் வேண்டிக் காத்திருக்கும் தம்பதிகள் கூடியமட்டும் பச்சை நிறத்தைத் தவிர்த்துவிடுங்கள். குருவுக்கு புதன் பகை மட்டுமல்ல; அவர் வீட்டில் (மீனத்தில்) நீசமும் அடைவார். எனவே குருவுக்கு பகை கிரக பச்சை நிறத்தை ஒதுக்கி, குருவின் நிறமான மஞ்சள் வண்ணத்தை அதிகமாகப் பயன்படுத்துங்கள். இதன்மூலம் குழந்தை உருவாகும் நிலை விரைவாகும். தடை தகர்க்கப்படும்.

சுக்கிரன்

சுக்கிரனுக்குரிய வண்ணம் வெண்மை. சுக்கிரனின் பகை கிரகங்களாக சூரியன், சந்திரன், குரு குறிப்பிடப்பட்டுள்ளன. “உத்தரகாலாரும்தம்’ சுக்கிரனின் பகை கிரகங்களாக சூரியனையும் சந்திரனையும் மட்டுமே சுட்டிக் காட்டுகிறது.

சுக்கிரனின் வீடான துலாத்தில் சூரியன் நீசமடைவார். இதனால் சுக்கிரனும் சூரியனும் கடும் பகைவர்கள் எனக் கொள்ளலாம். சுக்கிரனின் நிறம் வெண்மை; சூரியனின் நிறம் சிவப்பு.

சுக்கிரனின் இன்னொரு பகை கிரகமாக சந்திரனைக் குறிப்பிட்டுள் ளனர். சுக்கிரன் இளம்பெண்களைக் குறிப்பார். சந்திரன் வயது முதிர்ந்த பெண்களைக் குறிப்பார். ஆயினும் சுக்கிரனின் வீட்டில் சந்திரன் உச்சமடைவது கவனிக்கத்தக்கது. சந்திரன், சுக்கிரன் இருவருக்குமே வெண்மை நிறம்தான். இதன்மூலம் சுக்கிரனுக்கு பகை கிரகம் சந்திரன் என்பதையும், அதன் வெண்மை நிறத்தைத் தவிர்ப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சுக்கிரனின் தொழில் எனும்போது, முதலில் கலைத்தொழில்தான் நினைவுக்கு வருகிறது. எனவே கலைத்தொழிலில் பிரகாசிக்க முயல்பவர்கள் பகை கிரகமான சூரியனின் சிவப்பு நிறத்தைத் தவிர்த்திடுங்கள். சுக்கிரனின் மற்ற தொழில்களான வைர வியாபாரம், அழகு- ஆடம்பர பொருள் விற்பனை, துணிக்கடைக்காரர்கள், வாகன விற்பனை, அழகான கட்டடம் கட்டுவோர், சுற்றுலா விடுதிகள் நடத்துவோர், இனிப்பு விற்பனை, ஒப்பனை செய்வோர், திருமண அமைப்பு நடத்துவோர், வெள்ளி விற்பனை செய்வோர் போன்றவர்கள் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தக்கூடாது.

மேற்கண்ட வியாபாரிகள் (சுக்கிரன் முக்கியமாக வியாபாரத் தையே குறிப்பார்) சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தினால், அரசுத் தொந்தரவு களும், கீழ்மைத்தனமும், நீசத்தனமான காரியங்கள் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுதலும் ஏற்படக்கூடும்.. சிவப்பு நிறத்தை நீக்குவதால் வாழ்வுத் தடை நீங்கும்.

அதிலும், மிக முக்கியமான வியாபார விஷயங்கள் ஆரம்பிக்கும்போது சுக்கிரனுக்கு பெரு விருப்பமான வெண்பட்டு பயன்படுத்துங்கள். ஆரம்பிக்கும் எவ்விஷயமும் நல்லவிதமாகப் பூர்த்தியாகும்.

சனி

சனியின் நிறங்களாக கருப்பு, ஊதா, கிரே எனப்படும் சாம்பல் வண்ணம் கூறப்பட்டுள்ளன.

சனியின் பகை கிரகங்களாக சூரியன், சந்திரன், செவ்வாய், கேது குறிப்பிடப்பட்டுள்ளன. “உத்தரகாலாரும்தம்’ நூ-ல் சனிக்குப் பகையென்று சூரியன், சந்திரன், செவ்வாய் கூறப்பட்டுள்ளன.

சனியும், சூரியனும் கொடும்பகைவர்கள் என்பது அறிந்ததுதான். சனி, சந்திரன் சேர்க்கை என்பது புனர்பூ யோகம் எனும் வேண்டாத நிகழ்வுகளை நடத்திவிடும். சனியின் இன்னொரு பகை கிரகம் செவ்வாய். சனி வீட்டில் செவ்வாய் உச்சமடைவார். செவ்வாய் வீட்டில் சனி நீசமடைவார். இவ்வாறு நிகழும்போது எவ்வாறு சனிக்கு செவ்வாயைப் பிடிக்கும்? கடும் பகைதான்.

சூரியனின் நிறம் சிவப்பு. சந்திரனின் வண்ணம் வெள்ளை. செவ்வாயின் நிறம் அடர்ந்த சிவப்பு நிறம். இதன்மூலம் சனியை வேண்டுவோர் அசந்து மறந்து சிவப்பு, வெள்ளை அல்லது இந்த இரு கிரகங்களின் கலவையான ஆரஞ்சு வண்ணங்களைத் தவிர்த்தல் நல்லது.

ஏழரைச்சனி, அஷ்டமச்சனி என கோட்சாரகால சனிப்ரீதி செய்யும் போதும், மற்ற சனி தொழில்களான இரும்பு, எண்ணெய் வியாபாரிகளும், மாசு நீக்கும் தொழில் செய்பவர்களும், சிறிய தொழில்- வியாபாரிகளும் கண்டிப்பாக சிவப்பு நிறத்தைத் தவிர்த்தி டுங்கள்.

தோல் பை, தோல் செருப்புக் கடைக்காரர்களும், தொழிற்சாலை களில் கடினமான வேலை செய்பவர்களும், பழைய பொருட்கள் விற்பனை, சுரங்கத் தொழில் செய்பவர்களும் சிவப்பு நிறத்தைத் தவிர்த்துவிடுங்கள்.

பழைய பேப்பர் கடை வைத்திருந்தாலும் சரி; மாபெரும் சுரங்கம் வைத்து அதன் அதிபராக இருந்தாலும் சரி- நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்துகொண்டே இருந்தால் அங்கு சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களைத் தவிர்த்துவிட்டு, ஊதா அல்லது கிரே கலர் பயன்படுத்திப் பாருங்களேன். முதலாளிகளிடம் ஏற்படும் ஒரு எதிரி மனப்பான்மை குறைந்து உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளிகள் நட்புடன் வேலை செய்ய ஆரம்பிப்பார்கள்.

ராகு- கேதுக்கள்

இந்த இரு பாம்பு கிரகங்களுக்கும் பொதுவான பகை கிரகங்கள் சூரியனும் சந்திரனும். ஏனெனில் இவ்விரு கிரக சம்பந்தம் ஏற்படும்போது கிரகண நிலை ஏற்பட்டுவிடும்.

ராகுவுக்கு செவ்வாயும், கேதுவுக்கு சனியும் பகைவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ராகுவின் நிறம் கருப்பு. கேதுவின் வண்ணம் பழுப்பு அல்லது பல வண்ணம்.

பொதுவாக ராகு- கேதுக்களின் செயல்பாடுகள் சற்றே மறைமுகமாக நடக்கும். இவர்கள் எந்த கட்டுப்பாட்டுக்கும் அடங்காத வர்கள். அதனால் தான் எல்லா கிரகங்களும் ஒரு பக்கமாக சென்றால் இவ்விரு கிரகங்களும் எதிராகச் சுற்றுவர். எனவே ராகு- கேதுவைப் பொருத்தவரை இந்த வண்ணம் நல்லது- இந்த நிறம் கெட்டது என்ற பாகுபாடே வேண்டாம். “போங்கடா நீங்களும் உங்கள் வண்ணங்களும்’ என்று அவர்கள் நினைத்த படி தாறுமாறாக சுற்றி, ஜாதகர்களையும் சுற்றலில் விடுவர். அவர்களுக்குப் பிடித்த வண்ணம்- பிடிக்காத வண்ணம் என எதனைப் பயன்படுத்தினாலும், அதையெல்லாம் ராகு- கேதுக்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

அதெல்லாம் மற்ற கிரங்களுக்குதான். பாம்பு கிரங்களுக்கு அல்ல.

வாழ்க்கை ஒழுங்காக, தடையில்லாமல் செல்ல எதனைப் பயன்படுத்த வேண்டும்- எதனைத் தவிர்க்க வேண்டும் என்ற சூட்சுமம் மனிதர்களுக்கு கண்டிப்பாகத் தெரியவேண்டும். வாழ்க்கை மேன்மையடைய, முதலில் ஒருவருக்கு “நோ’ சொல்லத் தெரியவேண்டும் என்பர். வாழ்க்கை முன்னேற்றக் குறிப்புகளின் முதல் பாடம் இதுவாகத்தான் இருக்கும். இதனைப் படிக்கும்போது எளிதாகத் தோன்றலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் “நோ’, “இல்லை’, “மாட்டேன்’, “முடியாது’ என்று கூறுவது மிகமிகக் கடினம்.

சிலவற்றைத் தவிர்த்தால் வாழ்க்கை வண்டி சிக்கலில்லாமல் ஓடும்.

அதுபோல் சில வண்ணங்களைத் தவிர்த்தால், வாழ்க்கை எளிதாக அமையும். வண்ணங்களே வாழ்க்கைத் தடையாக விட்டுவிடாதீர்கள்.

---------------------------------------------

நன்மையில் தீமை- தீமையில் நன்மை விளைவதேன்?

ஜோதிடம் என்பது மகா சமுத்திரம் போன்றது.

இந்தக் கலை முழுவதுமே மனிதனின் எதிர்காலம், தற்கால நிகழ்வுகள், அவனது பாதுகாப்புகள் என மனித முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு அமைந்துள்ளது.

ஜாதகப்பலனறிய முனையும்போது, ஒரு பாவம், அதன் அதிபதி, அதன் காரகர் ஆகியோரின் நிலையை நன்கு ஆராய்ந்து பின் நிர்ணயம் செய்ய வேண்டும்.

பாவம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஒன்றாம் பாவம் அல்லது லக்ன பாவம், இரண்டாம் பாவம் என 12 பாவங்கள் ராசிக் கட்டத்தில் உள்ளன. இவற்றின் அதிபதிகள், பாவாதிபதிகள்.

சரி; பாவத்தின் காரகர் என்பது யார்? இது தனி. பாவாதிபதி வேறு; பாவ காரகர் வேறு.

உத்தரகாலம்ருதம் "பாவத்தின் காரகர்' என்று தெளிவாக உரைக்கிறது.

பாவத்தின் காரகர்

லக்ன பாவம்- சூரியன்.

2-ஆம் பாவம்- குரு.

3-ஆம் பாவம்- செவ்வாய்.

4-ஆம் பாவம்- சந்திரன்.

5-ஆம் பாவம்- குரு.

6-ஆம் பாவம்- செவ்வாய்.

7-ஆம் பாவம்- சுக்கிரன்.

8-ஆம் பாவம்- சனி.

9-ஆம் பாவம்- சூரியன்.

10-ஆம் பாவம்- சனி, குரு.

11-ஆம் பாவம்- குரு.

12-ஆம் பாவம்- சனி.

இவையல்லாது,

தனகாரகர், புத்திரகாரகர்- குரு.

சகோதர காரகர், பூமிகாரகர்- செவ்வாய்.

மாதுர் காரகர் (தாய்)- சந்திரன்.

வீடு, மனை, வாகனம், களத்திரம், போகம், இன்ப காரகர்- சுக்கிரன்.

ஆயுள்காரகர்- சனி.

பிதுர்காரகர்- சூரியன்.

ஞானகாரகர்- கேது.

வித்தை, அம்மான் காரகர்- புதன்.

இவ்வாறு உத்தரகாலம்ருதம் கூறுகிறது.

பாவம், பாவாதிபதி நன்றாக இருந்தால் அந்த நிகழ்வு நன்றாக அமையும். இதில் பாவக காரகரின் பங்கென்ன?

திருமணமென்றால் சுக்கிரனின் நிலையும், குழந்தைகள் என்றால் குருவின் நிலையும் என காரகர் நிலை கணக்கில் கொள்வதுண்டுதான். பிறப்பு ஜாதகத்தைப் பொருத்தவரை இவ்வாறு பலன் கூறுவது நடைமுறை வழக்கம்.

எனில், பிறப்பு ஜாதகமும், காரக அதிபதியும், கோட்சார நிலையில் எந்தப் புள்ளியில் இணைந்து எவ்வாறு பலன் தருவர்?

அதற்கும் ஒரு விதி கூறப்பட்டுள்ளது. ஒரு பாவாதிபதி, ஜனன காலத்தில் எந்த நட்சத்திரம், எத்தனையாவது பாதத்தில் இருந்தாரோ, அந்த நட்சத்திரம், அந்த பாதத்தில் அந்த பாவ காரகர், கோட்சாரத்தில் செல்லும்போது அந்த பாவப்பலன் நடைபெறும்.

நல்ல பாவாதிபதியும், அதன் காரகமும் கடக்கும்போது நல்ல பலன்களின் மேன்மையும் பயனுள்ள பலன்களும், கெட்ட பாவாதிபதி, அதன் காரகர் கோட்சார பாதத்தில் சந்திக்கும்போது பயனில்லா பலன்களும் நடக்கும்.

கோட்சாரத்தில் பாவக கிரகம் வக்ரம், அஸ்தமனம் அடைந் திருந்தால் பாவப்பலன் மாறுபாடாக நடக்கும்.

கோட்சாரத்தில் பாவக கிரகம் உச்சமானால், மிக நல்ல பலன் கிடைக்கும்.

கோட்சாரத்தில் பாவக கிரகம், உச்சமாகி வக்ரமானால் மிகக்கெடுதலான பலன் ஏற்படும்.v 1-ஆம் வீடு- லக்ன பாவம்

லக்ன பாவத்தின் காரகர் சூரியன். உங்கள் பிறந்த ஜாதகத்தில் லக்னாதி பதி எந்த நட்சத்திரம், எத்தனையாவது பாதத்தில் உள்ளார் என பார்த்துக்கொள்ளுங்கள். கோட்சாரத்தில் சூரியன் அதே நட்சத்திரம், அதே பாதத்தில் கடக்கும்போது அனைத்து விஷயத்திலும் ஒரு உற்சாகம், மேன்மை, சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, பலம், பிறரிடம் மரியாதை ஏற்படுத்தும்விதமாக சம்பவங்கள், விவேகமான செயல்கள் என- ஒரு மனிதனை மேன்மையாக, தனிப்பட்ட விதமாக வெளிப்படுத்தும்படி செயல்கள் நடக்கும். இந்த காலத்தில் எல்லாராலும் பாராட்டுப் பெறுவார்கள். புத்திசா- ஜாதகர்கள் இந்த காலகட்டப் புகழையும், மேன்மையையும் நன்றா கக் கையாண்டு, எதிர்கால வாழ்வை வளமாக்கிக் கொள்வார்கள்.

2-ஆம் வீடு

2-ஆமிடத்தின் காரகர் குரு. 2-ஆமிடம் வாக்கு, தன ஸ்தானம்.

பிறந்த ஜாதகத்தில் இரண்டாமிட அதிபதி என்ன நட்சத்திரம், என்ன சாரம் வாங்கி அமர்ந்துள்ளார் என பார்த்துக்கொள்ளவேண்டும்.

அதே நட்சத்திர சாரத்தில் குரு சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போது, வாக்கு வண்மையால் அசையும் சொத்துகளின் வரவு அதிகமாகும். வருமானவழியை ஸ்திரப்படுத்திக்கொள்வார்கள். மேலும் வாழ்வுக் கடமைகளை சரிவர நிறைவேற்ற ஒரு உத்வேகம், ஒரு முன்னேற்றம், ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு கைவரப்பெறும். ஒரு மனிதனுக்கு வாக்கு ஒழுக்கமானால் வாழ்வும் ஒழுங்காகும்தானே?

3-ஆம் வீடு

3-ஆமிட பாவக காரகர் செவ்வாய். 3-ஆமிடம் என்றாலே சகோதரம், வீரம், புகழ், பிறரிடம் தொடர்பு கொள்ளல் என பொதுவாகக் குறிக்கும். பிறந்த ஜாதகத்தில் 3-ஆமிட அதிபதி என்ன நட்சத்திரம், என்ன சாரம் வாங்கி அமர்ந்துள்ளார் என கவனிக்கவும். அதே நட்சத்திர சாரத்தில் செவ்வாய் சென்று கொண்டிருக்கும்போது, சகோதரர்மூலம் பெரும் உதவிகள் கிடைக்கும். சகோதரர் மட்டுமல்ல; பக்கத்து வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர், தெரிந்தவர்- தெரியாதவர் என எல்லாரும் உதவுவார்கள். அதாவது பழகும் ஆட்களின் தொடர்பெல்லைகள் மிக விரிவடையும். ஒரு திறமையான வியாபாரி, இத்தன்மையான விரிவடைந்த தொடர்பெல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தனது தொழிலை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வார். சின்னச்சின்ன பயணங்களும் அதிகரிக்கும்.

4-ஆம் வீடு

4-ஆம் வீட்டின் காரகர் சந்திரன். 4-ஆம் வீடு என்பது, வீடு, மனை, வாகனம் எனும் அசையா சொத்துகளைக் குறிக்கும். பிறந்த ஜாதகத்தில் 4-ஆம் வீட்டு அதிபதி எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளார் என அறியவும். அதே நட்சத்திர சாரத்தில் சந்திரன் செல்லும்போது, வீடு, வாகனம் சம்பந்தமான நிகழ்வுகள் நடக்கும். சந்திரன் அதிவேக கிரகம். எப்படியும் மாதத்தில் ஒரு நாளாவது பிறந்த ஜாதக 4-ஆம் வீட்டு பாதசாரத்தில் சஞ்சரித்துதான் ஆகவேண்டும். அதனால்தானோ என்னவோ, வீட்டிலும் சரி; வாகனத்திலும் சரி- அவ்வப்போது மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது போலும்.

5-ஆம் வீடு

5-ஆம் வீட்டு பாவக காரகர் குரு. 5-ஆம் வீடு என்பது முக்கியமாக குழந்தைகள் பற்றிக் கூறுவது. மேலும் புத்திசா-த்தனத்தைப் புரியும்படி உரைக்கும் வீடு. உங்கள் பிறந்த ஜாதகத்தில் 5-ஆம் வீட்டு அதிபதி யின் நட்சத்திரம் மற்றும் அதன் சாரத்தை அவதானிக்கவும். அதே நட்சத்திர சாரத்தில் குரு பயணிக்கும்போது குழந்தைகளால் நன்மை கிடைக்கும். சிலர் நீண்டநாளாக குழந்தை வரம் வேண்டியிருந்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும் நிலை உருவாகும். சிலருக்கு எதிர்பாராத வருமானம்- அதாவது புத்திக் கொள்முதல் வருமானம் தேடிவரும். புதுப்புது ஐடியாக்கள் தோன்றி, சுற்றியுள்ளவர்களை அதிரச் செய்வார்கள்.

6-ஆம் வீடு

6-ஆம் வீட்டின் காரக கிரகம் செவ்வாய். 6-ஆம் வீடு என்பது ருண, ரோக ஸ்தானம். உங்கள் பிறந்த ஜாதகத்தில் 6-ஆம் வீட்டு அதிபதியின் நட்சத்திரம் மற்றும் அதன் சாரத்தைக் கண்டறியவும். அதே நட்சத்திர சாரத்தில் செவ்வாய் சென்றுகொண்டிருந்தால், அந்த பாவகச் செயலை விருத்தி செய்வார். இதன்மூலம் நோய் பாதிப்பு, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி என தாக்கும். "ஏதோ கொஞ்சம் வ-க்கிறது. ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் சோதனை செய்து வருவோம்' என செல்வார்கள். அங்கோ, "இந்த நிமிஷம் ஒரு ஆபரேஷன் பண்ணினாத்தான் ஆச்சு' என திடீர் அறுவை சிகிச்சை நடக்கும். இதற்கெல்லாம் காரணம், தசா புக்திகளும், மேற்கண்ட அமைப்பும் ஒன்றுகூடுவதால்தான்.

7-ஆம் வீடு

7-ஆம் வீட்டின் காரக கிரகம் சுக்கிரன். 7-ஆம் வீடு என்பது முக்கியமாக திருமணத்தைக் குறிப்பது. உங்கள் பிறப்பு ஜாதகத்தின் 7-ஆம் வீட்டு அதிபதி எந்த நட்சத்திரம், எந்த சாரம் வாங்கி இருக்கிறார் என கவனிக்கவும். அதே நட்சத்திர சாரத்தில் சுக்கிரன் வரும்போது திருமணம் நிச்சயம் நடக்கும். 7-ஆம் வீடு என்பது கூட்டாளிகள் ஸ்தானம், வியாபார ஸ்தானம். எனவே 7-ஆம் வீட்டு காரக கிரகம் சுக்கிரன் அதே தன்மையுடைய அதிபதி இருக்கும் சாரத்தில் செல்லும்போது, நிறைய ஜாதகர்கள் புது வியாபாரம் தொடங்குவதும், தொழிலை விரிவுபடுத்துவதும் நடக்கும். இந்த நேரத்தில் பெண்கள்நலன் சம்பந்தமான தொழில் அல்லது பெண்களாக சேர்ந்து கூட்டாகத் தொடங்கும் தொழில் பரிமளிக்கும்.

8-ஆம் வீடு

8-ஆம் வீட்டின் காரகர் சனி. பிறப்பு ஜாதகத்தில் 8-ஆம் அதிபதி எந்த நட்சத்திரம், எந்த பாதத்தில் இருக்கிறார் என பார்க்கவும். அதே நட்சத்திர பாதத்தில் கோட்சார சனி சஞ்சரிக்கும்போது, எந்த விஷயமும் முழுமை பெறாமல் நடக்கும். அதுபோல எந்த சேதிகள் தேடிவந்தாலும், அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. மறைவு ஸ்தானாதிபதியின் சாரத்தில், மறைவு ஸ்தான காரக அதிபதி சஞ்சரிக்கும்போது நடக்கும் நிகழ்வுகளின் பலனை நிராகரித்துவிடுகிறார்.

9-ஆம் வீடு

9-ஆம் வீட்டின் காரகர் சூரியன். பிறந்த ஜாதகத்தில் 9-ஆம் அதிபதியின் நட்சத்திரம், அவரின் சாரத்தைக் கண்டுபிடிக்கவும். அதே நட்சத்திர சாரத்தில் சூரியன் சென்றுகொண்டிருந்தால், நிச்சயம் அதிர்ஷ்ட நிகழ்வுகள் நடக்கும். அது தந்தை அல்லது அரசுப் பதவிகள், அரசியல் மேன்மைகள் என ஏதோ ஒரு விதத்தில் வாழ்வில் ஒரு மேன்மையான உயர்வு உண்டாகும்.

10-ஆம் வீடு

10-ஆம் வீட்டின் காரகர் சனி, குரு என இரு கிரகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. எப்போதும் சனி ஒரு தொழில்காரகர்தான். கூடவே குருவையும் குறிப்பிட்டுள்ளனர். பிறந்த ஜாதகத்தில் 10-ஆம் அதிபதியின் நட்சத்திரம் மற்றும் அதன் சாரம் பற்றி அறியவும். கோட்சாரத்தில் அதே சாரத்தில் சனி அல்லது குரு சஞ்சரிக்கும்போது தொழில் மேன்மை, மாற்றங் கள் கண்டிப்பாக உண்டாகும்.

பொதுவாக, கோட்சாரம் பற்றி ஒரு கருத்துண்டு. குரு இருக்கும் ராசியை கோட்சார சனி கடக்கும்போது வேலை கிடைக்கும் என்பர். பிறப்பு ஜாதகத் தில் சனி இருக்கும் ராசியை குரு கடக்கும்போது வேலை மாறும் என்பர்.

11-ஆம் வீடு

11-ஆம் வீட்டின் காரக அதிபதி குரு. பிறந்த ஜாதகத்தில், 11-ஆம் வீட்டின் அதிபதி வாங்கிய நட்சத்திரம், அதன் சாரம் கவனிக்க வேண்டும்.

அதே சாரத்தில் குரு கோட்சாரத்தில் பயணப்படும்போது அளப்பரிய லாபமும், லாபமான பயணங்களும், நிறைய நண்பர்களின் அறிமுகமும், ஆசைகள் நிறைவேறுதலும் நடக்கும். ஒரு அரசியல்வாதி இக்கால கட்டத்தில் ஏற்படும் பலன்களைத் தன்னுடைய எதிர்காலப் பயனாக்கிக் கொள்வார். இதன்மூலம் தன்னுடைய எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடுவார்.

12-ஆம் வீடு

12-ஆம் வீட்டின் காரகர் சனி. ஜாதகத்தில் 12-ஆம் அதிபதி அமைந்த நட்சத்திரம், நின்ற சாரம் இவற்றைக் கண்டுபிடியுங்கள். அதே நட்சத்திர சாரத்தில் அதன் காரகர் சனி பயணிக்கும்போது ஜாதகரின் நிலை சற்றே கேள்விக்குறியாகும். எல்லா நிகழ்வுகளும் மந்த நிலையடைந்து விடும். சுறுசுறுப்பு இராது.

மேற்கண்ட காரக தத்துவப்படி, சூரியன் லக்னம், 9-ஆமிட காரகராகக் கூறப்பட்டுள்ளார்.

குரு, 2-ஆமிடம், 5-ஆமிடம், 10-ஆமிடம், 11-ஆமிட காரகராகக் குறிக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய், 3-ஆமிடம், 6-ஆமிட காரகராகச் சொல்லப்பட்டுள்ளார்.

சந்திரன் 4-ஆமிட காரகராக குறிக்கப்பட்டுள்ளார்.

சுக்கிரன் 7-ஆமிட காரகராக சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.

சனி, 8-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிட காரகராகக் காட்டப் பட்டுள்ளார்.

புதன் கல்விகாரகர். கேது ஞானக்காரகர்.

இதன்படி ஒரு பிறந்த ஜாதகத்தின் இருப்பில், அதன் காரக கிரகம் கடக்கும்போது நல்ல பாவத்துக்கு நற்பலனையும், கெட்ட பாவகத்துக்கு மாறுபாடான பலனையும் கொடுக்கிறார்.

சில இடங்களில், சில சமயங்களில் கீழ்க்காணும் பேச்சுக்களைக் கேட்பதுண்டு.

"ஜோசியர் அப்படி நடக்கும்- இப்படி நடக்கும்- ஓஹோன்னு இருக்கும் என்றார். ஒன்னுத்தையும் காணோம்' என்பர்.

சிலரோ, "ஜோசியர் உனக்கு நேரம் சரியில்லை என்றார். ஆனால் நல்லாத்தான் நடக்குது. இந்த ஜோசியரும், வானிலைக்காரர்களும் சொன்னால் எதிர்ப்பதமாக நடக்கிறது' என்பர்.

ஆயினும் சில கிரக நகர்வுகள், தான் செல்லும் பாதையின் பொருட்டு சில நிகழ்வுகளை மாறுதலாக, தன்னிச்சையாகச் செய்துவிடுகிறார்கள்.

இதனால்தான் கெட்ட நேரங்களில் நல்லதும், நல்ல நேரங்களில் சில பின்னடைவுகளும் நடக்கின்றன.

இது இறைவனின் விருப்பப்படி, கிரகங்களின் நகர்வுகள் கொடுக்கும் வினையாற்றல் அல்லவா?

------------------------------------------------------

யாரெல்லாம் லஞ்சத்தில் திளைப்பார்கள்?

ஒரு காலத்தில் பெண்ணுக்கு வரன் பார்க்கும்போது, பையன் நல்லவனா, ஒழுக்கமானவனா, கை சுத்தம் உண்டா, வாக்கு நாணயம் உண்டா, சரியான நடத்தை உள்ளவனா, உள்ளதைக் கொண்டு நன்றாக வாழும் பண்புடையவனா என இவ்வாறெல்லாம் விசாரித்து பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தனர்.

நடப்பு காலத்தில் ட்ரெண்ட் மாறிவிட்டது. பையனுக்கு மேல்வருமானம் வருமா, இரண்டாவது பிஸினஸ் இருக்கிறதா, எட்டுத் திக்கும் சிதறடிக்கும் சாமர்த்தியம் உள்ளதா, பார்த்து வா என்றால் கொண்டே வரக்கூடிய திறமை இருக்கிறதா என இவ்வாறான கேள்விகள் கேட்டுதான் பையனைத் தேர்ந்தெடுக்கி றார்கள்.

நல்ல அமைதியான, குணமுள்ள பையன்களை பெண்கள் "பழம்' என முத்திரை குத்தி "நோ' சொல்-விடுகிறார்கள்.

இதன்மூலம் லஞ்சம் வாங்காத பையன்களை வாழவே தகுதியில்லாத ஜீவன்கள் என்ற -ஸ்டில் சேர்த்துவிட்டார்கள். நேர்மையானவர்களை, எதற்கும் உதவாதவர்கள் என்று சொல்லும் நிலை பரவலாகக் காணப்படுகிறது.

நேர்மறை சிந்தனை வாழ்வியலுக்கு மதிப்பில்லாமல், எதிர்மறை சிந்தனை வாழ்வுமுறை கொண்டாடப் படுவதற்குக் காரணம் யார்? என்ன?

இதற்கெல்லாம் காரணம் சாட்சாத் ராகு பகவான்தான். இவர் சம்பந்தமான நிகழ்வுகள் அனைத்துமே எதிர்மறையாகத்தான் நடக்கும்.

ராகுவின் தன்மை

ராகு ஒரு நிழல் கிரகம். இருட்டு கிரகம். எதிர்மறை சிந்தனைகளை உருவாக்குபவர். கபட கிரகம். சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்யத் தூண்டும் கிரகம். மாயை கிரகம். வஞ்சக- சூதுடைய கிரகம். லஞ்சம் வாங்கத் தூண்டும் கிரகம்.

"கரப்ஷன்' என்பதன் அர்த்தம் லஞ்சம். மற்ற அர்த்தங்கள் கையூட்டு, கைக்கூ-, நேர்மையற்ற தன்மை, கெடுக்கும்- களங்கப்படுத்தும் தன்மை, இழிவான நிலை, கலப்புள்ள தன்மை, கலப்படமான செயல்கள், அசுத்தப்படுத்துவது என லஞ்சத்திற்கு இத்தனைப் பொருள்கள் உள்ளன.

எல்லாராலும் லஞ்சம் வாங்க முடியுமா? முடியாது. அதற்கென ஜாதக அமைப்பு வேண்டும்.

லஞ்சம் வாங்கும் தன்மையுடையோர் தனாதிபதியான 2-ஆம் அதிபதி, எவ்வகையிலேனும் ராகுவுடன் சம்பந்தம் பெறவேண்டும்.

லாபாதிபதி எனும் 11-ஆம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெறுதல்.

5-ஆம் அதிபதி ராகுவுடன் சேரும்போது மானாவாரி யோசனைகள் உண்டாகும். மற்றவர்கள், "இப்படியெல்லாம்கூட லஞ்சம் கேட்பார்களா? இவ்வழியிலெல்லாம் லஞ்சம் வாங்க முடியுமா!' என வெலவெலத்துப் போகவைத்துவிடுவார்.

மேற்கண்ட ஏதாவது ஒரு அமைப்புடன் லக்னாதிபதி சம்பந்தமும் வேண்டும்.

12-ல் சனி, ராகு இருந்து, 12-ஆம் அதிபதி 11-ல் இருந்து, 11-ஆம் அதிபதி 9-ல் நீசமாகி இருக்கும் ஜாதகர்களும் லஞ்ச லாவண்யத்தில் திளைப்பார்களாம்.

யார்மூலம் லஞ்சம் பெறுவர்?

லஞ்சப் பணம் என்பதே மறைமுக வருமானம்தான். எனவே நேரிடையாக வாங்க இயலாது. ராகு சம்பந்த பாவாதிபதிகள்மூலம் லஞ்சம் வசூ-க்கப் படும்.

ராகு- லக்னாதிபதி சம்பந்தம் உள்ளோர் யாரையும் நம்பாமல், அவர்களே நேரிடையாக யாருக்கும் தெரியாமல் லஞ்சம் வசூ-த்து விடுவர்.

ராகு- 2-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் பிற நாட்டில் பணத்தைப் பதுக்கச் சொல்-விடுவர். நகைகள், பணப்பத்திரங்கள், விலைமதிப்புள்ள ரத்தினக் கற்கள் என லஞ்சம் பெறுவர். குடும்பத்தினர் லஞ்சப்பணத்தை வசூ-ப்பர்.

ராகு- 3-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் லஞ்சம் வாங்க தனது இளைய சகோதரர் அல்லது வேலையாட்களைப் பயன்படுத்துவர். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை லஞ்சமாகப் பெறுவர்.

ராகு- 4-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் லஞ்சத்தை வீடுகள், தோட்டம், பண்ணை, கட்டடம், சுரங்கம், பள்ளி, கல்லூரி, வாகனம், நிலம் என வசூ-த்துவிடுவர்.

ராகு- 5-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோரின் லஞ்சப்பணம் "காதல்' விஷயத்திற்குப் போகும். சிலர் கலை, சினிமா நோக்கில் லஞ்சம் பெறுவர். சிலருக்கு இவர்களது மகனே லஞ்சம் வசூ-க்க உதவுவார்.

ராகு- 6-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் லஞ்சம் வசூ-ப்பதில் இவர்களது தாய்மாமனின் பங்கு அதிகமிருக்கும். சிலர் லஞ்சப் பணத்தை மருத்துவமனையாக மாற்றித் தரச் சொல்வர்.

ராகு- 7-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோரின் கையூட்டுப் பணத்திற்கு கல்யாணமான வாழ்க்கைத்துணை பெரும்பங்கு எடுத்துக்கொள்வார். சிலர் களங்கமான பணத்தை கல்யாண மண்டபமாகக் கொடுக்கச் சொல்வர். வேறு நாடுகளில் பணத்தைப் பதுக்கச் சொல்வர். கொடுக்கல்- வாங்க-ல் கூட்டாளிகளையும் சேர்த்துக்கொள்வர். சிலர் சில வர்த்தக ஸ்தாபனங்களை லஞ்சமாக வாங்கிக்கொள்வர்.

ராகு- 8-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோருக்கு கையூட்டு சம்பந்தமாக கைகலப்பே ஏற்படும். லஞ்சம் சம்பந்தமாக கொலைகூட நடக்கும். இதற்குமேல் சொல்ல என்ன இருக்கிறது?

ராகு- 9-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோருக்கு கைக்கூ- வாங்க தந்தையே உதவி செய்வார். சிலர் விமானம், கப்பல் போன்றவற்றில் லஞ்சப் பணத்தை முதலீடு செய்வர். அல்லது அதனை வாங்குவர். சிலர் பல்கலைக்கழகங்களை வாங்குவர். சிலர் லஞ்சப் பணத்தை செய்திப் பரிமாற்ற இனங்களில் பங்கு கேட்டு வாங்குவர். அல்லது ஒரு டி.வி. சேனலையே லஞ்சமாகப் பெற்றுவிடுவர்.

ராகு- 10-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் பற்றிச் சொல்லவே வேண்டாம். வேலைக்குச் சேர்ந்ததே லஞ்சம் வாங்கத்தான் என்று உறுதியாக நம்புவார்கள். இவர்கள் வேலை செய்கிறார்களோ இல்லையோ, லஞ்சம் வாங்குவதை மட்டும் கர்மசிரத்தையாக- ஒழுங்காகச் செய்துவிடுவார்கள். இவர்களைப் பார்த்தால் லஞ்சம் வாங்கவே பிறந்தவர்கள் மாதிரி இருக்கும்.

ராகு- 11-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோருக்கு லஞ்சப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். பணம் எண்ணும் மிஷின் மூலமாகக்கூட எண்ணமுடியாத அளவில் லஞ்சப் பணத்தின் வருகை அளவிட முடியாத அளவில் இருக்கும்.

ராகு- 12-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் லஞ்சப் பணத்தை விநோதமாக செலவழிப்பர். ரகசியமாக செலவழிப்பர். செய்யக்கூடாத காரியங்களுக்கு செலவிடுவர். அதனால் லஞ்சப் பணம் வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது. கையில் ஒன்றும் நிற்காது.

கிரகங்களின் தன்மையும் லஞ்சமும்

பணவரவு அமைப்புகளுடன் ராகு சம்பந்தம் ஏற்படும்போது லஞ்சப் பணம் கிடைக்கிறது. இவ்வகை அமைப்புள்ள ராகு சம்பந்தம் ஏற்படும் கிரகம்- அதாவது உடனிருக்கும் கிரகம், ராகு இருந்த ராசிநாதர், சாரம் வாங்கிய சார நாதர் இவர்களின் வழியே லஞ்சப்பண இயல்புகள் அமையும்.

ராகு- சூரியன் வீட்டில் அல்லது சூரியன் சாரத்தில்

ராகு லஞ்சம் வாங்கத்தூண்டும் கிரகம். சூரியன் அரசு கிரகம். புரிந்திருக்குமே.

அரசு சம்பந்தமான லஞ்சம் வாங்குவர். இவர்கள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், தமிழ்நாட்டை இலங்கை அல்லது பாகிஸ்தானுக்கு விற்று விடுவார்கள். அதில் நல்ல லஞ்சம் சம்பாதித்துவிடுவர். அவ்வளவு ஹைலெவ-ல் லஞ்சம் வசூ-ப்பர். இவர்களின் லஞ்சம் கோட்டையில் கொடிகட்டிப் பறக்கும். இவர்களின் லஞ்ச கொடுக்கல்- வாங்கல் மிகப்பெரிய அந்தஸ்தான வழிகளி-யே அமையும். சில்லரைத்தனமான லஞ்சம் பிடிக்கவே பிடிக்காது. வாங்கினால் கோடிகளில்தான். இவ்வமைப்புள்ளவர்கள் அரசின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தால் ஒவ்வொரு விஷயத்திற்கும் லஞ்சம் எதிர்பார்ப்பார்கள். லஞ்ச விஷயத்தில் மிகக் கண்டிப்புடன் இருப்பர். அவர்கள் நாட்டு மலை, மண், நதி, நீர், அணை என அனைத்து அதிமுக்கியமான விஷயங்களையும் பக்கத்து மாநிலம் அல்லது பக்கத்து நாட்டிற்கு விற்றுவிடுவர். அதற்கேற்றாற்போல் லஞ்சம் வசூலித்துவிடுவர். சில நேரங்களில் லஞ்ச விஷயமாக இடர் ஏற்படின் பிறர் உயிரை எடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

ராகு- சந்திரன் வீட்டில் அல்லது சந்திரன் சாரத்தில்

புத்தி சாதுர்யத்தால் லஞ்சம் வாங்குவர். இவர்கள் பெரிய அதிகாரி அல்லது அமைச்சராக எல்லாம் இருக்கத் தேவையில்லை. எந்த இடத்தில் இருக்கிறார்கோ, அதற்குத்தக்க லஞ்சம் வாங்கிவிடுவர். லஞ்சம் கொடுக்கல்- வாங்கல் மிக அமைதியாக நடக்கும். ஆர்ப்பாட்டம் இராது. இவர்கள் சற்று முயற்சித்தால், கடலைக்கூட லஞ்சமாக வாங்கிவிடலாம். இவர்களுடைய லஞ்சப் பட்டிய-ல் மீன் சார்ந்த நல்ல உணவுகள், பழங்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். சந்திரன் ஒரு விரைவுக் கிரகம். அதனால் லஞ்சத் தொகை கூடவோ, குறைவோ- அது உடனடியாகக் கைக்கு வரவேண்டுமென விரும்புவர். நேர்மையற்ற சிந்தனைகள் நிறைந்திருக்கும். பெண்கள் வேலைபார்க்கும் நிலையிருந்து, அவரின் ஜாதகம் லஞ்சம் வாங்கும் அமைப்பி-ருந்தால் அவர்களும் எந்தவித மனத்தயக்கமின்றி லஞ்சம் வாங்குவர். லஞ்சத்தொகை குறைவாக இருப்பின், அதனை வெளிக்காட்ட மாட்டார்கள். மனசுக்குள் ரோஷம் பொங்கும். இவர்களில் சிலர் கடல் கடந்தும் லஞ்சப்பணத்தை நிலமாக, வீடாக, மனை அல்லது ஓட்டலாக வாங்கிவிடுவர். சந்திரனின் காரகமான அரிசி, மீன், பூக்கள், பால், மது, உணவுப்பொருள் என இவற்றையும் கிடைத்த மட்டும் லாபமென லஞ்சமாகப் பெற்றுவிடுவர். முத்துக்கள், வெள்ளி, வைரம் போன்றவற்றையும் தகுதிக்கேற்ப கேட்டு வாங்கிவிடுவர். லஞ்ச விஷயத்தில் முட்டுக்கட்டை, தொல்லை ஏற்படின் உடனடியாக எந்த எதிர்ப்பையும் காட்டமாட்டார்கள். தகுந்த சந்தர்ப்பம் வரும்போது வஞ்சம் வைத்துப் பழிதீர்ப்பர்.

ராகு- செவ்வாய் வீட்டில் அல்லது செவ்வாய் சாரத்தில் v செவ்வாய் என்றாலே சீருடைப்பணிகள்தான். எனவே பாதுகாப்புப் பணியில் உள்ளோர், நெருப்பு சம்பந்த தொழி-ல் உள்ளோர் லஞ்சம் வாங்க முற்படுவர். செவ்வாய் என்றாலே அடிதடிதான். இவர்களுக்கு யாராவது லஞ்சம் கொடுக்க மறுத்தால் அடி பின்னி எடுத்துவிடுவர். கேட்ட தொகை கேட்ட நேரத்தில் வந்துவிட வேண்டும். கொஞ்சம் அதிகமாக முயற்சித்தால், மலை, பாறை, சுரங்கம் இவற்றையெல்லாம் லஞ்சமாகப் பெற்றுவிடுவர். ஆயுதங்களை லஞ்சமாகப் பெற பெரு விருப்பமுடையவர்கள். அசைவ உணவுகள், மது போன்றவை லஞ்சப் பட்டிய-ல் கொசுறாக இடம் பிடித்திருக்கும். மேலும் இவர்கள் கல் உடைக்கும் இடங்கள், செங்கல் சூளைகள் போன்றவற்றையும் லஞ்சமாக சுட்டிக்காட்டுவர். செவ்வாய்- ராகு எனும்போது அது விபத்தைக் குறிக்கும். எனவே விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நபர்களின் சொந்தங்களிடமும், கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி லஞ்சம் கேட்பர். இதில் வார்டுபாய் முதல் டாக்டர் வரை இந்த மனோபாவம் இருக்கும். (லஞ்ச அமைப்புள்ள ஜாதகர்களுக்கு மட்டும்). இவர்களுக்கு லஞ்சப் பணம் கொடுக்காவிடில் அல்லது தடை செய்தால் ரத்தம் வர அடித்துவிடுவர். லஞ்சப் பணத்தில் அவ்வளவு கறார் பேர்வழிகள் இவர்கள்.

ராகு, புதன் வீட்டில் அல்லது புதன் சாரத்தில்

எப்போதும் ராகு, புதன் சம்பந்தம் குறுக்கு புத்தியைக் கொடுக்கும். மிகவும் யோசித்து, யாரும் எதிர்பாராத லஞ்சத்தைக் கேட்பார்கள். எதிரிலுள்ளவர் மயங்கி சாய்ந்துவிடுவார். பொதுவாக இவர்கள், தங்கள் பொருட்டு லஞ்சம் கேட்காமல், வேறு யாருடைய பெயரிலாவது லஞ்சம் கேட்பர். அல்லது லஞ்சம் வாங்கும் தகுதியிருப்பினும், வேறு யார் மூலமாவது லஞ்சம் வாங்க முற்படுவர். புதன் கணக்குக்கு காரகர். எனவே, வியாபாரத்தில் நிறைய வரி வரும். அதைக் குறைத்துக்காட்ட லஞ்சம் கேட்பர். வருமான வரிக்கணக்கை அட்ஜஸ்ட் செய்ய லஞ்சம் கேட்பர். மிகச்சில பத்திரிகை, செய்தித்துறை அன்பர்கள், பிரபலங்களைப் பற்றிய செய்தியைப் பளிச்சிடச் செய்யவும் அல்லது எதிர்மறை செய்திகளைப் பரப்பவும் லஞ்சம் வாங்குவர். சிலர் தரகுத் தொழில் செய்து அதில் லஞ்சம் பெறுவர். ஆசிரியப் பணியில் உள்ள சிலரும் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சிக்காக லஞ்சம் பெறுவர். சில ஜோதிடர்களும் பலனை மாற்றிக் கூற லஞ்சம் பெறுவர். லஞ்சப் பணம் முன்னே பின்னே இருப்பினும் கண்டுகொள்ள மாட்டார்கள். லஞ்சம் வாங்க இடையூறு செய்யும் நபர்களை, அவர்களின் இமேஜை, வாழ்வியலை எப்படியாவது நாசம் செய்துவிடுவர்.

ராகு- குரு வீட்டில் அல்லது குரு சாரத்தில் v பொதுவாக குரு பாதுகாக்கும் கிரகம். இதில் வேடிக்கை என்னவெனில், ராகுவைப் பார்க்கும் குரு சற்றே தரம் தாழ்ந்துவிடுவார். குருவின் பார்வையைப் பெறும் ராகு, சற்றே தரம் உயர்வார். தசா, புக்திக்காலங்களில் இந்த வேறுபாட்டை உணரலாம். லஞ்சம் வாங்கும் அமைப்பில் இவர்களின் சம்பந்தம் ஏற்படும்போது தெய்வப்பணியில் இருப்போர், வழக்கறிஞர்கள், வங்கியில் பணிபுரிவோர், நிதித்துறையில் இருப்போர், சில சந்நியாசிகள், உயிர் பாதுகாப்புப்பணியில் உள்ளவர்கள், புண்ணிய ஸ்தலங்களில் பணிபுரிவோர், ஜோதிடம் கற்றுக்கொடுப்பவர்கள், உயர்கல்வி சம்பந்தப்பட்டவர்கள், பெரிய மரங்கள் சம்பந்தமான வேலை பார்ப்பவர்கள் போன்றவர்கள் லஞ்சம் வாங்குவர். குரு குழந்தையைக் குறிப்பார். இவ்வமைப்புள்ளோர் என்ன குழந்தை பிறந்திருக்கிறதென்று சொல்லவும் லஞ்சம் கேட்பர். அவ்வளவு ஏன்? கோவில் அர்ச்சகர்களில் சிலர் காசு கொடுத்தால்தான் பிரசாதம்; இல்லையென் றால் விபூதி, குங்குமம் தரமாட்டார்கள். இதுவும் ஒரு லஞ்சம்தானே. இவர்கள் குரு சம்பந்தம் இருப்பதால், லஞ்சம் வராவிட்டாலும் சண்டையெல்லாம் போடமாட்டார்கள். ஆனால் சாபமிடுவார்கள்.

ராகு- சுக்கிரன் வீட்டில் அல்லது சுக்கிரன் சாரத்தில்

சுக்கிரன் என்றாலே அனைத்து வசதிகளும் நிறைந்த பெருவாழ்வுதான் நினைவுக்கு வரும் நன்றாக வாழ்பவர்களைப் பார்த்து, "அவனுக்கென்ன... சுக்கிர தசைதான்' என்பர். இதனால் சுக்கிரனும் ராகுவும் சம்பந்தம் பெறும்போது, குறுக்குவழியில் செல்வநிலை ஏற்படும். சுக்கிரன் கலையுலகைக் குறிப்பதால், அதன் மூலம் வரும் பணத்தை லஞ்சப்பணம் என்று கூறாமல் கறுப்புப்பணம் என்று அழைப்பர். கலையுலகில் கறுப்புப்பண நடமாட்டம் அதிகம்தானே. இவ்விணைவில் ராகு சற்று அதிகமாக உழைத்து, அந்த கறுப்புப் பணத்தையும் நேர்மையற்ற வழிகளில் வரச்செய்வார்.

அவசியப் பொருட்களைவிட ஆடம்பரப் பொருட்கள் மூலம் கறுப்புப் பண நடமாட்டம் அதிகரிக்கும். சுக்கிரன் வைரத்தைக் குறிப்பவர். எனவே வைரக்கடத்தல் அல்லது அதற்கு உதவி செய்தல் மூலமாக லஞ்சம் அதிகரிக்கும். சுக்கிரன், மதுவைக் குறிப்பார். மது விற்பனை சம்பந்தமான லஞ்சம், கறுப்புப்பண விவகாரம் பற்றி சொல்லவே வேண்டாம். நிதி நிறுவனத்துறையில் லஞ்சம் மற்றும் கறுப்புப் பண நடமாட்டத்துக்கு குறைவிருக்காது. சுக்கிர சம்பந்தமான லஞ்சம், அழகு, கவர்ச்சி என்ற போர்வையிலும் நடக்கும். சிலசமயம் இவையே லஞ்சமாகப் பெறப்படும் அல்லது கொடுக்கப்படும். சுக்கிரன் வியாபார கிரகம் என்பதால், வியாபாரம் சம்பந்தமான லஞ்சம் எங்கும், எதிலும் பரவியிருக்கும். சுக்கிரன், ராகு சம்பந்த வகையில் வைரம், ஓட்டல், மது, நிதி ஆதாரங்கள், வாசனைத் திரவியம், அழகுப் பொருட்கள், ஆடைகள், திருமண மண்டபங்கள், வாகனம், வீடு மற்றும் இனிப்புகள் லஞ்சமாகப் பெறப்படும். சுக்கிரனும் ராகுவும் சம்பந்தம் பெற்று லஞ்சம் வாங்கும் நிலையில், அதில் அழகும், ஒழுக்கமின்மையும் நிறைந்திருக்கும்.

லஞ்சம் வாங்கும்போது, இடையூறு ஏற்பட்டால், அவர்களாக அதை எதிர்க்கமாட்டார்கள். வேறு சந்தர்ப்பத்தில், வேறு ஆட்களை வைத்து மானபங்கப்படுத்திப் பழிவாங்குவர்.

ராகு, சனி வீட்டில் அல்லது சனி சாரத்தில்

சனி என்றாலே தடை, தாமதம், அடிமை வேலை என இவ்வாறுதான் தோன்றும். இதில் ராகு, சனியின் வழியே லஞ்சம் வாங்கும் அமைப்பில் இருந்தால், அவர்களுக்கு லஞ்சம்கூட கேட்டவுடன் கிடைக்காது. "இதோ தர்றேன்' என இழுத்தடித்து கொடுப்பர். அதுவும் பேசிய தொகையைக் கொடுக்கமாட்டார்கள். மிகவும் குறைத்துத்தான் கொடுப்பார்கள். இவ்வமைப் பில் உள்ளோர் வாங்கும் லஞ்சம் பெரும்பாலும் கூ-த்தொழிலாளர்கள் போன்ற அடிமட்ட மக்களிடமிருந்தே கிடைக்கும். எனவேதான் லஞ்சத்தின் அளவும் குறைவாக அமையும். இதே சனி உச்சமாகி இருந்து, அதில் ராகு லஞ்ச அமைப்பு பெற்றால் அந்த ரேஞ்சே தனி. இவர்கள் சாதாரண ஆட்களிடம் லஞ்சம் வாங்கமாட்டார்கள். பெரிய நிலக்கரிச் சரங்கம், கனிம வளம், கிரானைட் தொழில், எண்ணெய் நிறுவனங் கள், இரும்புத்தொழிற்சாலைகள், மர விற்பனை நிலையங்கள் மற்றும் மிகப்பெரிய தொழிற்சாலைகள், அதன் சார்புடைய மாசு சம்பந்தப்பட்டவை என லஞ்சத்தொகை, வகைதொகையில்லாமல் பெருமளவில் கிடைக்கும். சனி லஞ்சத்தை ஒன்று கூ-யாட்களிடம் இருந்து பெற்றுத் தருவார் அல்லது முதலாளிகளிடமிருந்து பெற்றுத் தருவார்.

இவர்கள் லஞ்சம் பெறுவதற்கு அல்லது இடையூறு செய்பவர்களை வம்பு செய்து, அன்டர்கிரவுண்ட் வேலை ஏதாவது செய்து, அவர்களை தங்கள் பாதையி-ருந்து விலக்கிவிடுவர். பின் இஷ்டம்போல லஞ்சம் வாங்குவர்.

லஞ்ச கிரகங்கள் தரும் பின்விளைவுகள்

லஞ்ச ராகு- சூரிய சம்பந்தம்

இதன் பின்விளைவு அரச தண்டனையாக இருக்கும். சூரியன் ராஜ கிரகம். ராகு ஒரு வ-ய கிரகம். எனவே தண்டனையும் பெரிதாகத்தான் இருக்கும். சம்பந்தப்பட்ட ஜாதகர்களை தமிழ்நாட்டின் பெரிய சிறைச்சாலையான புழல் சிறை அல்லது இந்தியாவின் பெரிய சிறைச்சாலையான திஹார் சிறையில் கொண்டு போய்ச் சேர்ப்பர். மேலும் இவர்களுக்கு கடைசி காலத்தில் இதயக் கோளாறு, ரத்தம் கெட்டுப்போதல், முதுகுத்தண்டு பிரச்சினை, மயக்கம் மற்றும் உஷ்ண சம்பந்தமான நோய்கள் வந்து பாடாய்ப்படுத்தும்.

லஞ்ச ராகு- சந்திர சம்பந்தம்

சந்திரன், ராகு சம்பந்த லஞ்சம் அதன் பின்விளைவாக, மனப் பதட்டம், மனபேத-ப்பு, மஞ்சள் காமாலை, சிறுநீரகக்கல், புற்றுநோய், வயிற்றுக்கோளாறுகள், தொண்டை, மூச்சுக்குழல் நோய்களைத்தரும். இவ்விணைவு முக்கியமாக அவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ மனம், புத்தி மாறாட்டம் போன்றவற்றையே தரும்.

லஞ்ச ராகு- செவ்வாய் சம்பந்தம்

இதுபோன்ற ஜாதக அமைப்பில் லஞ்சம் வாங்கிய குடும்பத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும். அதிலும் இளம்வயதினர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும். தலையில் காயம், மூளையில் அழுத்தம், நாய் கடிப்பது, செய்வினை பற்றிய பயம், தீவிபத்து, தீக்காயம், ஆசனவாய் நோய்கள், எலும்பு முறிவு போன்றவற்றில் சிலவற்றை அவரும் அவர் குடும்பத்தினரும் எதிர்கொள்ள நேரிடும். மேலும் அவர் வீட்டுப் பெண்களின் மாங்கல்யத்துக்கு பங்கம் நேரும் வாய்ப்பும் உண்டு.

லஞ்ச ராகு- புதன் சம்பந்தம்

இவ்விணைவு ஒரு விதத்தில் புத்தி தடுமாற்றத்தைத் தரும். அல்லது அவர் குடும்பத்தில் புத்தி வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க நேரிடலாம். மேலும் நரம்புத்தளர்ச்சி, வாயுத்தொல்லை, தோல் நோய்கள், ஈஸ்னோ பீ-யா, தொண்டையில் சீழ்பிடித்தல், காது கோளாமை, அசட்டுத்தனமான குழந்தைகள் பிறத்தல் போன்ற பின்விளைவுகள் ஏற்படும். இந்த குடும்பக் குழந்தைகளுக்கு படிப்பே வராது.

லஞ்ச ராகு- குரு சம்பந்தம்

"மகா குண்டு' உடம்பைக் கொடுத்துவிடும். அதிக கொழுப்பால் பெரும் தொந்தரவு ஏற்படும். குரு ஒரு பாதுகாக்கும் கிரகம் என்பதால், அவர் சம்பந்தமான ஒரு அநியாயம் நடக்கும்போது அதன் பின்விளைவாக, குரு அந்த ஜாதகரைத் தனியாக, ஒரு பாதுகாப்புமின்றி ஒதுக்கி வைத்துவிடுவார். யாருமே இவரை கவனிக்காத நிலைமை உண்டாகிவிடும். தனிமைக் கொடுமையை தண்டனையாகத் தருவார். மேலும் மனக்குழப்பமும், பாதவ-யும், அடிவயிற்றி வ-யும், எலும்புருக்கி நோய், வாதநோய் போன்றவையும் பாடாய்ப்படுத்தும். இந்த வகை ஜாதகர்கள் சிறை, மருத்துவமனை, வீட்டிலேயே தனிமை என ஏதோ ஒரு விதத்தில் எல்லாரும் வெறுக்கும் அளவுக்கு நிலைமை இருக்கும்.

லஞ்ச ராகு- சுக்கிரன் சம்பந்தம்

ராகு லஞ்சத்தை சுக்கிரன் வழியே கொடுக்கும்போது, அந்த குடும்பத்து இளம்பெண்களின் வாழ்வு நெறிபிறழ்ந்துவிடும். மணவாழ்க்கையைக் கெடுப்பார். பெண்களால் தீராத அவமானமும் துன்பமும் வந்துசேரும். சிறுநீர் சம்பந்தமான கோளாறுகள், குடல்வால் நோய், பா-யல் நோய் முத-யவை தாக்கும். இவர்களின் தோற்றம் மிக மோசமானதாக மாறிவிடும். வெகு சிலசமயம், பிறர் அருவருக்கத்தக்க தோற்றத்தை- உடல் அமைப்பை உண்டாக்கிவிடுவார்.

லஞ்ச ராகு- சனி சம்பந்தம்

ராகு தனது லஞ்சத்தை சனி மூலம் தரும்போது, நிச்சயம் தீவிர நோய்களைத் தந்துவிடுவார். அல்லது மரணத்துக் கொப்பான கண்டங்களைக் கொடுத்துவிடுவார். வாதநோய் நிச்சயம். வயதைவிட அதிக முதுமை தோற்றத்தை உண்டாக்கிவிடுவார். சிலருக்கு கை, கால விளங்காமல் போய்விடும். எலும்பு முறிவு கால் வ-, நரம்புத்தளர்ச்சி, கணுக்கால் வீக்கம், சிரங்கில் நீர் வடிதல் போன்றவற்றைக் கொடுப்பார். சிலரின் கால்கள் பிறர் பார்க்க அஞ்சும் அளவிற்கு அருவருப்பாக மாறிவிடும். சிலர் குறுகி சிறுத்துவிடுவர். சிலருக்கு நடக்கவே முடியாத நிலைமையும் வரும்.

எந்த ஜோதிடக் கட்டுரை எழுதினாலும், அதற்கொரு பரிகாரம் அவசியம் இணைந்துவிடும். பாதகம் என்ற ஒன்று இருப்பின், பரிகாரம் என்ற ஒன்று இருந்துதானே ஆகவேண்டும்?

ஆனால் இந்த கட்டுரைக்குப் பரிகாரம் அவசியமில்லை. கிரகக் கோளாறுகள் மற்றும் தெரியாமல் செய்த பாவத்திற்குப் பரிகாரம் உள்ளது. ஆனால் தான்தோன்றிதனமாக, இஷ்டம்போல, அதிகாரத்தனமாக, அடுத்தவரை சமயத்தில் பிழிந்து மிரட்டிக்கொடுமைப்படுத்தி பிளாக்மெயில் செய்து லஞ்சம் வாங்குவதற்குப் பரிகாரம் ஏது?

இது தெரிந்தே செய்யும் குற்றம். சில இடங்களில் பெண்களை மானபங்கப்படுத்தி லஞ்சப்பணத்தில் வாழ்கிறார்களே! அவர்களுக்கு எந்தப் பிறவியிலும் பரிகாரம் கிடையாது. ஏழேழு பிறவிக்கும் ரத்தக்கண்ணீர் வடிப்பர்.

--------------------------------------------------------------------------

ஜோதிடமும் உணவும்

"பசி வந்திட பத்தும் பறந்துபோகும்' என்பர். ஒருவருக்கு பசி எனும் அடிவயிற்றுத் தீயை அணைக்கும் அமிர்தம் உணவாகும். இவ்வுலக மாந்தருக்கு எந்தப் பொருளை எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி உண்டாகாது. ஆனால் உணவு பரிமாறும்போது வயிறு நிரம்பிவிட்டால், போதும் என்று திருப்தியடைந்து எழுந்துவிடுவர். இதன்மூலம் உணவு ஒன்றுக்கு மட்டுமே மனிதனைத் திருப்திசெய்யும் ஆற்றலுண்டு என புரிந்துகொள்ளலாம்.

ஜோதிடத்தில் உணவு பற்றிய செய்திகளை இரண்டாம் வீடு உறுதிப்பட உரைக்கும். அதேநேரத்தில் அந்த இரண்டாம் வீடு ஒரு மனிதரின் மாரக வீடாகவும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகம் அழியுமோ என்னவோ- ஆனால் அவன் அழிந்துவிடுவான் என்பதில் சந்தேகமில்லை. ஜாதகரைக் குறிக்க லக்னத்தைக் குறித்தவர்கள், அவரது உணவு விஷயம்பற்றி அறிய லக்னத் திற்கு இரண்டாம் வீட்டையே குறிப்பிட்டதி-ருந்து அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.

நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைக் குறிக்கும். பொதுவாக கார்ப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு சுவைகள் உண்டு. இரண்டாமிடத்தில் நவகிரங்கள் நின்றால் என்ன பலன் என்பதைக் காண்போம்.

சூரியன்

சூரியன் எனும் கிரகம் குறிக்கும் சுவை காரம். இந்த சுவை பசியைத் தூண்டும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்தத்தைத் தூய்மைசெய்யும். மேலும் காரமுள்ள உணவு வாதத்தை நீக்கும். இதனால்தான் இரண்டாமிட சூரியன் உள்ளவர்களின் வாக்கு சுள்ளென்று இருக்கும்போலும்.

சந்திரன்

சந்திரன் குறிக்கும் சுவை உப்பு. "உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பர். உப்பு அதிகமாகிவிட்டாலும் உதவாது. சரியான உப்பின் சேர்க்கையே ஒரு உணவை ருசியாக்கும். சமைத்தவரின் திறமையைப் பறைசாற்றும். சில இனிப்புப் பண்டங்களில்கூட சற்று உப்பு சேர்த்தால் அதன் சுவை கூடும். தெய்வீகப் பிரசாதங்கள் தயாரிக்கும்போதும் சிறிது உப்பு சேர்ப்பது நலம். மறந்துபோய் உப்பில்லாமல் உணவு தயாரிக்க நேரும்போது, வீட்டில் ஏதோ இடையூறு ஏற்படும் என்று சொல்வர். அந்த உணவுத் தயாரிப்பில் சந்திரனின் ஆதிக்கம் இல்லாத நிலை ஏற்படுவதால், அதை ஏதோ தடைப்படும் அறிகுறியாகவே எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை யாக இருக்கவேண்டும். எனவே உணவுத் தயாரிப்பில் சந்திரனின் காரகமான உப்பும் தண்ணீரும் மிக முக்கியம்தான்.

செவ்வாய்

இரண்டாமிடத்திலுள்ள செவ்வாய் கசப்புச் சுவையைக் குறிப்பவர். இது பலருக்கும் பிடிக்காத சுவையாகும். இரண்டாமிடத்தில் செவ்வாய் உள்ளவர்கள் பிறர் விரும்பாத அபூர்வ உணவை உண்பார்கள். மேலும் நிறைய மருந்துகள் கசப்பாகத்தான் இருக்கும். இரண்டாமிடச் செவ்வாய் உள்ளவர்கள் பாகற்காய் உணவுகளை விரும்பி உண்பர். இவர்கள் உணவை சூடாக சாப்பிட அடம்பிடிப்பர். சிலருக்கு தினமும் அசைவ உணவு கண்டிப்பாக வேண்டும்.

புதன்

அனைத்து வகையான சுவைகளையும் குறிக்கும் கிரகம் புதன். எனவே இரண்டாமிடத்தில் புதன் உள்ளவர்கள் எந்த உணவையும் நிராகரிக்காமல், எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்.

குரு

இரண்டாமிடத்திலுள்ள குரு இனிப்புச் சுவையைக் குறிக்கிறார். இந்தச் சுவை அனைவருக்கும் பிடித்தமானது மட்டுமல்ல; அது உடலுக்கு நல்ல வ-மை தருகிறது. மேலும், மனிதனை இளமையாகக் காட்டும் வ-மை இனிப்புச் சுவைக்கு உண்டு. குரு என்பவர் தெய்வீகத் தன்மை கொண்டவர். எனவே இரண்டில் குரு உள்ளவர்கள் பெரும்பாலும் சைவ உணவு, தெய்வப் பிரசாதம் போன்ற சாத்வீக உணவுகளை எளிமையாக உண்பர்.

சுக்கிரன்

இரண்டாமிடத்தில் சுக்கிரன் உள்ளவர்கள் புளிப்பு மற்றும் இனிப்புச் சுவைகளை விரும்புவர். சுக்கிரனுக்கு புளிப்புச் சுவைதான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சுவை எச்சிலைப் பெருக்கும் தன்மை யுடையது. பசியைத் தூண்டும்; நல்ல ஜீரணத்திற்கும் உதவும். இரண்டில் சுக்கிரன் இருப்பவர்கள் விதவிதமான, நல்ல சுவையான, போஷாக் கான உணவை உண்பார்கள். இவர்களுக்கு பால் அருந்துவதில் அதிக விருப்பமுண்டு என்பர்.

சுக்கிரன் மகாலட்சுமியைக் குறிக்கும். எனவே குழந்தைகள் பால்குடிக்க மறுத்தால், அருகிலுள்ள கோவி-ல் மகாலட்சுமித் தாயாருக்கு இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுள்ள உணவைப் படைத்து வணங்கவேண்டும். குழந்தைகள் பால்குடிக்க ஆரம்பித்துவிடுவர்.

சனி

சனி பகவான் துவர்ப்புச் சுவையைக் குறிப்பார். மேலும் இரண்டாமிட சனி ஜாதகருக்கு குளிர்ச்சியான உணவுகளைக் கொடுப்பார். இரண்டாமிடத்தில் சனி நீசமாகியிருந்தால் (இது மீன லக்னம், ராசிக்கு அமையும்) அந்த ஜாதகர் பழைய உணவு, மிச்சமான உணவு மற்றும் ஆகாத வீட்டு உணவு என பிறர் ஒதுக்கும் உணவையே உண்பார். எனினும் இரண்டாமிட சனி துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளைக் கொடுப்பார். இவ்வமைப்புள்ள ஜாதகர்கள் பிறர்வீட்டில் சாப்பிடுவதை அதிகம் விரும்புவர். அப்படி சாப்பிட்டுவிட்டு அவர்களைப் பற்றி குறையும் கூறுவார்கள்.

ராகு- கேது

ராகு- கேதுக்களுக்கு எந்த சுவையும் ஜோதிடத்தில் குறிப்பிட வில்லை. எனினும் இரண்டாமிடத்தில் ராகு- கேது உள்ளவர்கள், வீட்டின் பொருளாதாரத்தைப் பொருத்து அதற்கேற்ற உணவுண்பர் என கூறப் பட்டுள்ளது. எனினும் சிலர் அதிக மதுப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். இரண்டிலுள்ள கேது போதைப் பழக்கத்துக்கு ஆட்படுத்திவிடுகிறார். சிலர் மாமிச உணவை அதிகம் விரும்புவார்கள்.

மேலும் சில தகவல்கள்

லக்னாதிபதி குருவாக இருப்பின், ஜாதகருக்கு தயிர்சாதம் மிகவும் பிடிக்கும். மற்ற உணவுகளை சூடாக உண்ண விரும்புவார்.

லக்னாதிபதி புதனாக இருப்பின், புளிப்பு உணவை விரும்புவார். குளிர்ச்சியான உணவும் பிடிக்கும்.

லக்னாதிபதி சுக்கிரனாக இருந்தால், இனிப்பு உணவில் அதிக நாட்டமிருக்கும்.

லக்னாதிபதி சனியாக இருப்பின், கீரை வகைகள், காட்டில் கிடைக்கும் உணவுகளை விரும்புவர்.

மேற்கண்ட கட்டுரை உணவுச் சுவையைக் குறித்து மட்டுமல்ல; இரண்டாம் இடமென்பது உணவு மற்றும் செல்வம் சேர்க்கும் இடமுமாகும். ஒருவேளை உங்களுக்கு உணவகம் ஆரம்பிக்கும் எண்ணம் இருப்பின், சில நுணுக்கங்களை மேற்கண்ட தகவல்கள்மூலம் உணரலாம். இரண்டாம் அதிபதி, பத்தாம் அதிபதிக்கு சுபர் சேர்க்கை, சம்பந்தம் இருக்கவேண்டும். சூரியன், இரண்டு, பத்தாமிட அதிபதிகள் சம்பந்தம் இருப்பின், நீங்கள் சுடச்சுட காரவகைப் பண்டங்களைத் தயாரித்து விற்பது ஏற்புடையது.

சந்திரன், இரண்டு, பத்தாமிட அதிபதிகள் இணைவு- குளிர்ச்சி யான ஐஸ்கிரீம், மோர், பானகம் போன்ற வகைகளை விற்பனை செய்யலாம்.

புதன், இரண்டு, பத்தாம் அதிபதிகள் சேர, கலவைசாதம் விற்பனை செய்யலாம். குறிப்பாக புளியோதரை நிபுணராகிவிடலாம்.

குரு, இரண்டு, பத்தாம் அதிபதிகள் இணைந்தால் கோவில்களில் பிரசாதக் கடை மற்றும் இனிப்புப் பலகாரக் கடை வைக்கலாம்.

சுக்கிரன், இரண்டாம் அதிபதி, பத்தாம் அதிபதி சேர்க்கை- நிச்சயமாக இனிப்பு தயாரிக்கும் கடைகள் வைத்துவிடுவார்கள். சூடான பால், பால் பொருட்கள் விற்பனை நன்கு விளங்கும். பொதுவாக சுக்கிரன் உணவுக்காரகர்தான். எனவே உணவுக்கடை நன்றாக நடக்கும். அந்தக் கடையில் பாதாம்பால். மிளகுப்பால், மசாலா பால் என விற்பனை செய்தால் அவர்களது கடை பிரசித்தமடையும்.

செவ்வாய், இரண்டு, பத்தாம் அதிபதி சம்பந்தம்பெற்றால் மருந்து சார்ந்த உணவுக்கடை வைக்கலாம். சிறுதானிய உணவு, முடக்கத்தான்கீரை தோசை, கேழ்வரகு அடை, அறுகம்புல்சாறு என ஆரோக்கியம் சார்ந்த உணவுக்கடை நல்ல லாபம் தரும். சிலருக்கு அசைவ உணவுக்கடை நன்றாக அமையும்.

சனி, இரண்டாம் அதிபதி, பத்தாம் அதிபதி தொடர்பிருந்தால், பழங்காலத்தில் வீடுகளில் செய்யப்பட்ட புட்டு, இடியாப்பம், அடை, சிறுதானிய உணவு, கைக்குத்தல் அரிசி போன்ற கடை சரியாக இருக்கும். உண்மையாகச் சொன்னால் பழையசாதம், மோர்மிளகாய், கேழ்வரகுக் கூழ், வெங்காயம் விற்பனை சிறப்பாக இருக்கும். சனி பழமையைக் குறிப்பவர். எனவே, முதல்நாள் தயாரித்து மறுநாள் விற்கும் உணவுக்கடையே இவர்களுக்கு ஏற்புடையது.

ராகு- கேது என்னும் சர்ப்ப கிரகங்கள் இரண்டு, பத்தாமிட சேர்க்கை பெற, சந்தேகமே வேண்டாம்- நிச்சயமாக மாமிச உணவுக் கடைதான்! அதிலும் குறிப்பாக சிலர் மதுக்கடை அருகில்தான் வியாபாரம் செய்வார்கள். அல்லது மதுக்கடை "பாரில்' முட்டை, ஆம்லெட் தயாரித்துக் கொடுப்பார்கள். அசைவம் செய்து பரிமாறுவார்கள்.

ஆக, ஜாதகத்தில் இரண்டாமிடம், என்ன சுவையை விரும்பி உண்பார்கள் என உரைக்கும் அதேநேரம், அதையே தொழிலாகக் கொண்டால், எந்த சுவையுள்ள உணவுகளைத் தயாரித்தால் முத-டத்தைப் பிடிக்கலாம் என்றும் அறிந்துகொள்ளலாம். செய்வதைத் திருந்தச் செய்வதோடு தெளிவுபெறவும் செய்யலாமே!

உணவுப் பழக்கம்

உணவை கிழக்குமுகமாக அமர்ந்து உண்ணவேண்டும். தெற்குமுகமாக உண்டால் அதனை அரக்கர்கள் சாப்பிட்டுவிடுவர் என்பது விதி. உண்ணும் போது பேசினால் ஆயுள்குறையும் என்கிறது சாஸ்திரம். ஈர உடையோடும், கையை ஊன்றிக்கொண்டும் உண்ண லாகாது. தரையில் அமர்ந்து உண்பது சிறப்பு.

தங்கத்தட்டில் உணவருந்த சுக்கில விருத்தி ஏற்படும். அழகும் உற்சாகமும் உண்டாகும். அதுபோல வெள்ளி, வெண்கலத் தட்டுகளும் சிறப்புடையவை.

வாழை இலையில் உணவுண்ணவாத, பித்த நோய்கள் வராது.

தாமரை இலையில் உணவருந்தினால் லட்சுமி கடாட்சம் அகன்று விடும். இரவில் தயிர், மாவு, எள் போன்றவற்றை உண்ணக்கூடாது; லட்சுமி விலகிவிடுவாள்.

பரணி, கார்த்திகை ஆகிய நட்சத்திர நாட்கள் அடுப்பு வாங்க, வீட்டில் சமையல் ஆரம்பிக்க சிறந்தவை. சந்தி காலத்தில்- அதாவது மாலை ஆறு மணியளவில் உணவுண்ணக்கூடாது. தென்கிழக்கு திசையில் அடுப்பு வைப்பது சிறந்தது. கிழக்குநோக்கி நின்று சமைப்பது மிக நன்று.

ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் என்பது சமையலறையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. எனவே உணவு சம்பந்தமான சில அடிப்படை விஷயங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். உப்பு சிந்தினால் வீட்டிற்கு ஆகாது; கடுகு சிந்தினால் வீட்டில் சண்டைவரும் என்பர். இதன் உட்பொருள்- சம்பந்தப்பட்டவர்களின் கவனக்குறைவும் அலட்சியமும், தெருவில் போகும் இம்சையைத் தேடிப்பிடித்து அழைத்து வந்துவிடும் என்பதுதான். கவனமாக இருங்கள் என்பதை வேறு சொற்களில் கூறியிருக்கி றார்கள். மேலும் வீட்டில் உப்பு, மஞ்சள் ஆகியவை எப்போதும் நிறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். வீட்டின் நிலையும் நிறைவாக அமையும்.

-------------------------------------------------------------------------------

தசாபுக்திக் கெடுதல்கள் நீக்கும் மிக எளிய பரிகாரங்கள்

உங்களில் பெரும்பாலோர் உங்கள் ஜாதகங்களைப் பரிசீலித் திருப்பீர்கள். சில சமயங்களில் ஜோதிடர், "உங்களுக்கு நல்ல தசை ஆரம்பித்துவிட்டது; இனி யோக நேரம்தான்' என்பார். சில சமயங்களில், "கவனமாக இருங்கள்; மோசமான தசை ஆரம்பித்துள்ளது' என்பார். கூடவே அதற்குரிய பரிகாரங்களையும் கூறுவார்.

சில பரிகாரங்களை குறிப்பிட்ட கோவிலுக்குச் சென்று செய்யவேண்டு வரும். சில பரிகாரங்களுக்கு குறிப்பிட்ட மனிதர்களிடம் சென்று யாகம், பூஜை செய்யவேண்டி நேரும். சிலசமயம் தானதர்மங்கள் செய்யும்படி அமையும்.

ஆனால் இவற்றையெல்லாம் எல்லாராலும் எல்லா சமயங்களில் செய்ய இயலாது. எனவேதான் சில எளிய பரிகாரங்களைக் கூறி வழிகாட்டவேண்டிய நிலை உருவானது.

இனி, எல்லா தசாபுக்திகளுக்கும் ஏற்ற மிக எளிய பரிகாரங்களைக் காணலாம்.

சூரிய தசை

சூரிய தசையின் கால அளவு ஆறு ஆண்டுகள். இந்த தசை ஆரம்பித்தவுடன், தினமும் சூரிய வழிபாடு, ஆதித்ய ஹ்ருதயம் பாராயாணம் சிறப்பு. ஞாயிற்றுக்கிழமைகளில் பரிகாரம் செய்யவேண்டும்.

சூரிய தசை- சூரிய புக்தி: ஞாயிற்றுக்கிழமையன்று முடிந்த அளவு கோதுமை அல்லது கோதுமை மாவை, காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் வயதானவருக்குக் கொடுக்கவும். கால அளவு மூன்று மாதம்- 18 நாள் இருக்கும்.

சூரிய தசை- சந்திர புக்தி: ஆறு மாதம் காலம் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் வயதான பெண்ணுக்கு அரிசிதானம் கொடுக்கவும்.

சூரிய தசை- செவ்வாய் புக்தி: காலம் நான்கு மாதம், ஆறு நாள். ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் சிறிய பையனுக்கு மயி-றகு வாங்கிக்கொடுங்கள்.

சூரிய தசை- ராகு புக்தி: காலம் பத்து மாதம், 24 நாள். ஞாயிற்றுக்கிழமை ராகு நேரத்தில் (மாலை 4.30-6.00) பிற மதத்தினருக்கு மெழுகுவர்த்தி கொடுங்கள்.

சூரிய தசை- குரு புக்தி: காலம் ஒன்பது மாதம், 18 நாள். ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 முதல் 12.00 மணிக்குள் பசுவுக்கு ஏதாவது கொடுங்கள்.

சூரிய தசை- சனி புக்தி: காலம் 11 மாதம், 12 நாள். ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் உங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கு கொஞ்சம் மிளகு கொடுங்கள்.

சூரிய தசை- புதன் புக்தி: கால அளவு பத்து மாதம், ஆறு நாள். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் சிறு குழந்தைகளுக்கு பச்சைப் பயறு சுண்டல் செய்துகொடுங்கள்.

சூரிய தசை, கேது புக்தி: காலம் நான்கு மாதம், ஆறுநாள். உங்களுக்கு முடிந்த நேரத்தில் அல்லது மாலைப்பொழுதில் ஆட்டிற்கு தீவனம் கொடுக்கவும்.

சூரிய தசை- சுக்கிர புக்தி: கால அளவு ஒரு வருடம். ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் இளம் பெண்ணுக்கு கொஞ்சம் சந்தனம் கொடுக்கவும்.

தானப் பொருட்களின் அளவு உங்கள் மனதையும், "மணிபர்ஸை'யும் பொருத்தது.

சந்திர தசை

சந்திர தசை பத்து வருடங்கள் ஓடும். திங்கட்கிழமைதோறும் அம்பாள் வழிபாடும், பாலாபிஷேகமும். அரிசி தானமும் நன்று. ல-தா சஹஸ்ரநாமப் பராயாணம் மிகச்சிறப்பு.

சந்திர தசை- சந்திர புக்தி: கால அளவு பத்து மாதம். திங்கட்கிழமை காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் வயதான பெண்ணுக்கு பச்சரிசி தானம் நல்லது.

சந்திர தசை- செவ்வாய் புக்தி: கால அளவு ஏழு மாதம். திங்கட்கிழமை காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் தோட்ட வேலை செய்பவருக்கு ஒரு ஈயப் பாத்திரம் வாங்கிக்கொடுக்கவும்.

சந்திர தசை- ராகு புக்தி: கால அளவு ஒரு வருடம், ஆறு மாதம். திங்கட்கிழமை காலை 7.30 முதல் 9.00 மணிக்குள் ஆட்டுக்கு தீவனம் கொடுக்கவும். அல்லது மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு உணவு கொடுங்கள்.

சந்திர தசை- குரு புக்தி: கால அளவு ஒரு வருடம், நான்கு மாதம். திங்கட்கிழமை காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் அருகிலுள்ள அந்தணர் குடும்பத்துக்கு ஒரு தேங்காய் வாங்கிக்கொடுக்கவும்.

சந்திர தசை- சனி புக்தி: கால அளவு ஒரு வருடம், ஏழு மாதம். திங்கட்கிழமை காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் வேலைசெய்யும் பெண்ணுக்கு சாதம் கொடுக்கவும்.

சந்திர தசை- புதன் புக்தி: கால அளவு ஒரு வருடம், ஐந்து மாதம். திங்கட்கிழமை பகல் 12.00 முதல் 1.00 மணிக்கு ஏதேனும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு முடிந்த தீவனம் கொடுங்கள்.

சந்திர தசை- கேது புக்தி: கால அளவு ஏழு மாதம். திங்கட்கிழமை எந்த நேரமானாலும், வயதான எளியவருக்கு பசியறிந்து உணவளிக்கவும்.

சந்திர தசை- சுக்கிர புக்தி: கால அளவு ஒரு வருடம், எட்டு மாதம். திங்கட்கிழமை காலை 11.00 முதல் 12.00 மணிக்குள் யாருக்காவது சாம்பிராணி அல்லது ஒரு பாக்கெட் கம்ப்யூட்டர் சாம்பிராணி கொடுங்கள்.

சந்திர தசை- சூரிய புக்தி: கால அளவு ஆறு மாதங்கள். திங்கட்கிழமை காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் யாருக்காவது முருங்கைக்காய் அல்லது கொஞ்சம் நெய் வாங்கிக்கொடுங்கள். அல்லது தீபமேற்ற நல்லெண்ணெய் வாங்கிக் கொடுக்கலாம்.

செவ்வாய் தசை

செவ்வாய் தசையின் ஆண்டுகள் ஏழு வருடம். செவ்வாய்க்கிழமை தோறும் கந்த சஷ்டிக் கவசம், மஹிஷாசுரமர்த்தினி சுலோகம் கூறுவது மிக நன்று. முடிந்தவர்கள் செவ்வாயன்று ஒருபொழுது விரதமிருக்கவும். பரிகாரங்களை செவ்வாய்க்கிழமைதோறும் கடைப்பிடிக்கவும்.

செவ்வாய் தசை- செவ்வாய் புக்தி: கால அளவு நான்கு மாதம், 27 நாட்கள். காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் சிறிது துவரம்பருப்பு கொடுங்கள்- யாருக்கேனும்.

செவ்வாய் தசை- ராகு புக்தி: கால அளவு ஒரு வருடம், 18 நாட்கள். செவ்வாய்க்கிழமை மாலை 3.00 முதல் 4.30 மணிக்குள் அந்தணருக்கு உணவு சம்பந்த தானம் செய்யவும்.

செவ்வாய் தசை- குரு புக்தி: கால அளவு 11 மாதம், ஆறு நாட்கள். பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் சிறிது சந்தனம் கொடுப்பது நல்லது.

செவ்வாய் தசை- சனி புக்தி: கால அளவு ஒரு வருடம், ஒரு மாதம், ஒன்பது நாட்கள். காலை 11.00 முதல் 12.00 மணிக்குள் வேலை செய்யும் இளைஞர்களுக்கு ஏதேனும் உடைகள் கொடுக்கவும்.

செவ்வாய் தசை- புதன் புக்தி: கால அளவு 11 மாதம், 27 நாட்கள். காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் கல்வி தடைப்பட்ட, கல்வியில் தடுமாறும் மாணவர்களுக்கு புத்தகம் கொடுக்கவும்.

செவ்வாய் தசை- கேது புக்தி: கால அளவு நான்கு மாதம், 27 நாட்கள். செவ்வாய்க்கிழமையின் எந்த நேரத்திலும், உடல்நலம் குன்றியவர்களுக்கு உதவிசெய்யவும்.

செவ்வாய் தசை- சுக்கிர புக்தி: கால அளவு ஒரு வருடம், இரண்டு மாதம். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் ஒரு சுமங்க-க் குக் குங்குமம் கொடுக்கவும்.

செவ்வாய் தசை- சூரிய புக்தி: கால அளவு நான்கு மாதம், ஆறு நாட்கள். காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் கத்திரிக்காய் வாங்கிக்கொடுக்கவும்.

செவ்வாய் தசை- சந்திர புக்தி: கால அளவு ஏழு மாதம். காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் அல்லது முடிந்தபோதெல்லாம் மோர் தானம் செய்யவும்.

ராகு தசை

ராகு தசையின் ஆண்டுகள் 18 வருடம். ராகு என்பது பாம்பு சம்பந்தமுடையது. எனவே ராகு தசை ஆரம்பித்தவுடன் ஜாதகர்கள் கி-பிடித்துப் போய்விடுகிறார்கள். ராகு தசை நடக்கும்போது பெரும்பான்மையான ஜாதகர்களுக்கு, பொதுவெளியி-ருந்து விலக்கி வைக்கப்பட்டதுபோல் வாழ்க்கையின் போக்கு மாறிவிடுகிறது. ராகு பகவான் தான் அமர்ந்த இடம், வாங்கிய சாரம் ஆகியவற்றின் வழியே ஜாதகர்களை வதைத்து விடுகிறார்.

ராகு தசை நடக்கும்போது, இன்ன நாளில்தான் பரிகாரம் செய்யுங்கள் என்று கூறமுடியாது. உங்களுக்கு என்றைக்கு எந்த நேரத்தில் முடிகிறதோ- முடிந்தமட்டும் பரிகாரம் செய்யுங்கள்.

ராகு தசை- ராகு புக்தி: கால அளவு இரண்டு வருடம், எட்டு மாதம், 12 நாட்கள். பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு- குறிப்பாக இஸ்லாமிய அன்பர்களுக்கு கறுப்பு உளுந்து வாங்கிக்கொடுங்கள்.

ராகு தசை- குரு புக்தி: கால அளவு இரண்டு வருடம், நான்கு மாதம், 24 நாட்கள். பகல் 1.30 முதல் 3.00 மணிக்குள் மஞ்சள், சமையலுக்கான மஞ்சள் பொடி, பூசு மஞ்சள்பொடி, பூஜை மஞ்சள் பொடி என முடிந்ததை வாங்கிக் கொடுக்கவும்.

ராகு தசை- சனி புக்தி: கால அளவு இரண்டு வருடம், பத்து மாதம், ஆறு நாட்கள். காலை 9.00 முதல் 10.30 மணிக்குள் நெல்-க் காய் அல்லது கடுகு அல்லது எவர்சில்வர் பாத்திரம் தானம் கொடுக்கவும்.

ராகு தசை- புதன் புக்தி: கால அளவு இரண்டு வருடம், ஆறு மாதம், 18 நாட்கள். பகல் 12.00 முதல் 1.30 மணிக்குள் குருவி, கோழி போன்ற பறவை யினங்களுக்கு கேழ்வரகு, அரிசிநொய் போன்றவற்றைத் தூவிவிடுங்கள்.

ராகு தசை- கேது புக்தி: கால அளவு ஒரு வருடம், 18 நாட்கள். முடிந்த போதெல்லாம் சாலையோர நாய்களுக்கு உணவு கொடுக்கவும்.

ராகு தசை- சுக்கிர புக்தி: கால அளவு மூன்று வருடங்கள். காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் எலுமிச்ச பழ சாதம் அல்லது எலுமிச்சை பானகம், சர்பத் கொடுக்கவும். சிறிய பெண் குழந்தை களுக்கு நன்கு இனிப்பான தின்பண்டம் கொடுங்கள்.

ராகு தசை- சூரிய புக்தி: கால அளவு பத்து மாதம், 24 நாட்கள். மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் பிற இன, மத நபர்களுக்கு மின்சார பல்ப் அல்லது ஒரு டஜன் தீப்பெட்டி வாங்கிக்கொடுக்கவும்.

ராகு தசை- சந்திர புக்தி: கால அளவு ஒரு வருடம், ஆறு மாதம். காலை 7.30 முதல் 9.00 மணிக்குள் அல்லது முடிந்த நேரத்தில் பால் பாக்கெட் வாங்கிக்கொடுக்கவும்.

ராகு தசை- செவ்வாய் புக்தி: கால அளவு ஒரு வருடம், 18 நாட்கள். மாலை 3.00 முதல் 4.30 மணிக்குள் ஏதாவது இரும்புப் பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரம் வாங்கிக்கொடுக்கவும். அதில் உளுந்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு சிறிது போட்டுக்கொடுக்கவும்.

குரு தசை

குரு தசையின் காலம் 16 வருடம். ஜாதகத்தில் குரு நீசமாக இல்லாவிடில், குரு தசை ஓரளவு நல்ல பலன்களைத் தரும். பொதுவாக குரு தசை பாதுகாப்பாகவே அமையும். இஷ்டதெய்வ, குலதெய்வ வழிபாடு, சிவ வழிபாடு மேன்மை தரும். சித்தர்களை வணங்குவது நன்று. உங்களுக்குத் தெரிந்த மந்திரப் பராயாணம் நன்று. வியாழக்கிழமைகளில் பரிகாரம் செய்யவும்.

குரு தசை- குரு புக்தி: கால அளவு இரண்டு வருடம், 9 மாதம், 18 நாட்கள். காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் பசுக்களுக்கு தீவனம், கோசாலைகளுக்கு சேவை மற்றும் காணிக்கை தருவது நல்லது.

குரு தசை- சனி புக்தி: கால அளவு இரண்டு வருடம், ஆறு மாதம், 12 நாட்கள். பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் பசுவுக்கு மஞ்சள் வாழைப்பழம், யாருக்காவது பலாப்பழம் மற்றும் பசுத்தொழுவப் பழுதுச்செலவு போன்றவை ஏற்புடையது.

குரு தசை- புதன் புக்தி: கால அளவு இரண்டு வருடம், மூன்று மாதம், ஆறு நாட்கள். காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் படிக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் பழம் வாங்கிக்கொடுக்கவும். அல்லது பள்ளியில் ஆசிரியப் பணி புரிபவர்களுக்கு மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் ஏதேனும் கொடுக்கவும்.

குரு தசை- கேது புக்தி: கால அளவு 11 மாதம், ஆறு நாட்கள். வியாழக்கிழமையின் எந்த நேரத்திலும், வயதான ஆசிரியர்கள், வைத்தியர்கள், பிள்ளையார் கோவில் அர்ச்சகர்கள் என யாருக்கேனும் ஆடை தானம் செய்யுங்கள். அருகில் சித்தர் கோவில் இருப்பின், அங்கு அன்னதானம் செய்வது சிறப்பு.

குரு தசை- சுக்கிர புக்தி: கால அளவு இரண்டு வருடம், எட்டு மாதம். காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் விசேஷ தானமாகும்.

குரு தசை- சூரிய புக்தி: கால அளவு ஒன்பது மாதம், 18 நாட்கள். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் மஞ்சள் அல்லது சோளம் தானம் செய்யவும்..

குரு தசை- சந்திர புக்தி: கால அளவு ஒரு வருடம், நான்கு மாதம். காலை 11.00 முதல் 12.00 மணிக்குள் வயதானவர்களுக்கு மருந்து தானம் நல்லது.

குரு தசை- செவ்வாய் புக்தி: கால அளவு 11 மாதம், ஆறு நாட்கள். காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் காளை அல்லது பசுமாட்டுக்கு தீவனம் தரவும். அல்லது பால் கொண்டுவருபவருக்கு ஏதேனும் தொகை கொடுக்கவும்.

குரு தசை- ராகு புக்தி: கால அளவு இரண்டு வருடம், நான்கு மாதம், 24 நாட்கள். பகல் 1.30 முதல் 3.00 மணிக்குள் பிற மத, இன வழிபாட்டுத் தல குருமார்களுக்கு உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வாங்கிக்கொடுங்கள். அல்லது ஆடுகளுக்கு தீவனம் கொடுக்கவும்.

சனி தசை

சனி தசைக்காலம் 19 வருடங்கள். சனி உங்கள் ஜாதகத்தில் யோகாதிபதியாக இருந்தால் மிக நல்ல பலன்தரும். நல்ல உத்தியோக- தொழில் சிறப்பும் கிடைக்கும். நான்காவது சனி தசையாக நடந்தால், சற்று கவனமாக இருத்தல் அவசியம். சனி தசையின் காலத்தில் சனீஸ்வர வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு, பைரவர் மற்றும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும். சனி தசையில் சந்திர புக்தியின்போது கவனம் தேவை.

சனி தசை- சனி புக்தி: கால அளவு மூன்று வருடம், மூன்று நாட்கள். சனிக்கிழமை காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் இரும்புப் பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரம் தானம் செய்யவும். அந்தப் பாத்திரத்தில் கொஞ்சம் எள் மிட்டாய், எள் பர்பி வைத்துக்கொடுங்கள். சனிக்கிழமை செய்யவேண்டும்.

சனி தசை- புதன் புக்தி: இதன் காலம் இரண்டு வருடம், எட்டு மாதம், ஒன்பது நாட்கள். சனிக்கிழமை காலை 11.00 முதல் 12.00 மணிக்குள், உங்கள் வீட்டில் வேலைசெய்யும் நபர்களின் குழந்தைக்கு நவதானியம் அல்லது நவதானியக் கஞ்சி பாக்கெட் கொடுக்கவும்.

சனி தசை- கேது புக்தி: காலம் ஒரு வருடம், ஒரு மாதம், ஒன்பது நாட்கள். சனிக்கிழமை எந்த நேரத்திலும், செடிவிதைகள் அல்லது கிழங்குகளை யாருக்காவது கொடுக்கவும்.

சனி தசை- சுக்கிர புக்தி: கால அளவு மூன்று வருடம், இரண்டு மாதங்கள். சனிக்கிழமை காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் கீழ்நிலை ஊழியர்களுக்கு இனிப்பான தின்பண்டம் கொடுங்கள். அதில் எள் சேர்ந்திருந்தால் சிறப்பு.

சனி தசை- சூரிய புக்தி: கால அளவு 11 மாதம், 12 நாட்கள். சனிக்கிழமை காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் வேலை செய்யும் மனிதர்களுக்கு மெழுகுவர்த்தி, தீப்பெட்டி வாங்கிக்கொடுக்கவும். மற்றும் கேழ்வரகு தானம் நல்லது.

சனி தசை- சந்திர புக்தி: கால அளவு ஒரு வருடம், ஏழு மாதங்கள். இந்த காலகட்டத்தில் ஜாதகர்கள் கவனமாக இருக்கவேண்டும். ஏதேனும் இழப்பை சந்திக்கநேரும். எனவே, பரிகாரங்களைப் பக்குவமாகச் செய்யவும். சனிக்கிழமை பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் தயிர்சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல், நெய் சேர்த்த உணவு, பால் தானம், குடிப்பதற்கு மோர், பசுவுக்கு தீவனம், கோசாலைக்கு உதவி, எருமை மாட்டிற்கு புண்ணாக்கு என எந்த தானம் உங்களால் முடிகிறதோ அதனைக் கண்டிப்பாக செய்துவிடுங்கள். சனிக்கிழமைதோறும் மதிய நேரத்தில் யாராவது ஒருவருக்காவது, ஏதோ ஒன்றைக் கொடுத்துவிடுங்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும். காகத்திற்கு தினமும் சாதம் வைக்கவும்.

சனி தசை- செவ்வாய் புக்தி: கால அளவு ஒரு வருடம், ஒரு மாதம், ஒன்பது நாட்கள். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் சனிக்கிழமைகளில் ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் கொஞ்சம் துவரம் பருப்பைப் போட்டு, தோட்டவேலை செய்பவருக்குக் கொடுக்கவும். வய-ல் வேலை செய்பவர்களுக்கு கொஞ்சம் நல்லெண்ணெயும், எருமை மாட்டிற்கு புண்ணாக்கும் கொடுக்கவும்.

சனி தசை- ராகு புக்தி: கால அளவு இரண்டு வருடம், பத்து மாதம், ஆறு நாட்கள். சனிக்கிழமை காலை 9.00 முதல் 10.30 மணிக்குள் எருமை மாட்டிற்கு கண்டிப்பாக ஏதாவது கொடுத்தே ஆகவேண்டும். உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள மாடு வளர்ப்பவர் அல்லது மாட்டுத் தொழுவத்தில் உள்ளவர்களிடம். பேசி, முன்னரே பணமோ, தீவனமோ கொடுத்து, சனிக்கிழமை தோறும் எருமைக்குக் கொடுக்கும்படி ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். வேறு வழியில்லை; சனி, ராகு சம்பந்த காலத்தில் எருமைப் பரிகாரம் மட்டுமே உள்ளது. சிவனையும், பைரவரையும் வழிபடவேண்டும்.

சனி தசை- குரு புக்தி: கால அளவு இரண்டு வருடம், ஆறு மாதம், 12 நாட்கள். சனிக்கிழமை காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் பள்ளிக்கூடம், சத்துணவுக் கூடத்தில் ஆயா வேலை பார்ப்பவருக்கு மஞ்சள் புடவை கொடுக்கவும்.

சனி தசைப் பரிகாரங்கள் சனிக்கிழமைகளில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

புதன் தசை

இதன் கால அளவு 17 ஆண்டுகள். உங்கள் ஜாதகத்தில் புதன் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும், அந்த தசைக்காலம் நல்ல அறிவு, புத்திசா-த்தனம், நினைவாற்றல், சுறுசுறுப்பு, கல்வியில் சிறப்பு, வேலைவாய்ப்பு என அனைத்தையும் அள்ளித்தரும். புதன் தசை நடக்கும்போது பெருமாளை, நாராயணரை வணங்கவும். விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ நாராயணீயம் பாராயணம் சாலச் சிறந்தது.

கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை புதன் கிழமைகளில் செய்யவும்.

புதன் தசை- புதன் புக்தி: கால அளவு இரண்டு வருடம், நான்கு மாதம், 27 நாட்கள். காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் புத்தக தானம் நல்லது. அது பள்ளிப் புத்தகமகவோ அல்லது பக்திப் புத்தகமகவோ அல்லது வார, மாத இதழ்களாகவோ இருக்கலாம். உங்கள் வீட்டுக்கருகில் வயதானவர் கள் இருப்பின் அவர்களுக்கு வார, மாத இதழ்களைத் தொடர்ந்து வாங்கித்தரலாம்.

புதன் தசை- கேது புக்தி: கால அளவு 11 மாதம், 27 நாட்கள். புதன் கிழமை எந்த நேரத்திலும் தானியங்களை ஊறவைத்து ஐந்தறிவு ஜீவன்களுக்குக் கொடுக்கலாம்.

புதன் தசை- சுக்கிர புக்தி: கால அளவு இரண்டு வருடம், பத்து மாதங்கள். நண்பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் பாசிப்பருப்பு பாயசம் செய்து, அருகிலுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

புதன் தசை- சூரிய புக்தி: கால அளவு பத்து மாதம், ஆறு நாட்கள். பகல் 11.00 முதல் 12.00 மணிக்குள் யாருக்காவது துளசி இலைகள் அல்லது ஒரு பாக்கெட் கற்பூரம் வாங்கிக் கொடுக்கலாம்.

புதன் தசை- சந்திர புக்தி: கால அளவு ஒரு வருடம், ஐந்து மாதங்கள். காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் வயதான பெண்ணுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் கொடுக்கவும்.

புதன் தசை- செவ்வாய் புக்தி: கால அளவு 11 மாதம், 27 நாட்கள். காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் பித்தளைப் பொருள் அல்லது கல்வி தடைப்பட்ட குழந்தைகளுக்கு புத்தகம், எழுதுபொருள் வாங்கிக் கொடுக்கவும்.

புதன் தசை- ராகு புக்தி: கால அளவு இரண்டு வருடம், ஆறு மாதம், 18 நாட்கள். பகல் 12.00 முதல் 1.30 மணிக்குள் கரும்பச்சை நிற ஆடை, உணவுப் பொருள் என, கறுப்பும் பச்சையும் சேர்ந்த பொருள் தானம் செய்வது நன்று. புத்திசா-த்தனமான ஏமாற்றுதல்களைத் தவிர்க்கலாம்.

புதன் தசை- குரு புக்தி: கால அளவு இரண்டு வருடம், மூன்று மாதம், ஆறு நாட்கள். காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் பசுவுக்கு பச்சைநிறப் பழம், காய்கறிகள், கீரைகள் கொடுக்கவும். அருகிலுள்ள அந்தணருக்கு பச்சை வாழைப்பழம் போன்ற கனிகள் கொடுக்கவும்.

புதன் தசை- சனி புக்தி: கால அளவு இரண்டு வருடம், எட்டு மாதம், ஒன்பது நாட்கள். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் பச்சைப் பயறு சுண்டல் செய்து ஒரு சிறிய எவர்சில்வர் கிண்ணத்துடன் கொடுங்கள்.

அல்லது பச்சைக் காய்கறி கொடுக்கலாம். கருந்துளசிச் செடியை வளர்க்கவும்.

கேது தசை

கேது தசை ஏழு ஆண்டுகள் நீடிக்கும். இது பெரும்பாலும் ஒரு பற்றற்ற நிலையை ஜாதகருக்குக் கொடுக்கும். எதன்மூலம் மனம் வெறுத்துப்போகும் என்பதை கேதுவின் சாரநாதர் நிர்ணயம் செய்வார். கேது தசையின் காலத்தில் விநாயகர் வழிபாடும், சித்தர்கள் வழிபாடும் சிறப்பு.

கேது கிறிஸ்துவர்களைக் குறிப்பதால், கிறிஸ்துவ மக்களுக்கு உதவுவது நன்று. கேதுவின் பரிகாரங்களை எந்த நாளிலும், எந்த நேரத்திலும் செய்யலாம்.

கேது தசை- கேது புக்தி: கால அளவு நான்கு மாதம், 27 நாட்கள். ஆஞ்சனேயர் வழிபாட்டுக்கு செந்தூரம் வாங்கிக்கொடுக்கவும். முடிந்தபோது கொள்ளு சுண்டல் விநியோகம் நல்லது.

கேது தசை- சுக்கிர புக்தி: கால அளவு ஒரு வருடம், இரண்டு மாதங்கள், முடிந்தபோது அத்திப்பழம், மொச்சை வாங்கிக் கொடுக்கவும்.

கேது தசை- சூரிய புக்தி: கால அளவு நான்கு மாதம், ஆறு நாட்கள். விநாயகர் கோவிலுக்கு மின்சாரக் கட்டணம் கட்டலாம். அல்லது மின்சார விளக்கு வாங்கிக்கொடுக்கலாம்.

கேது தசை- சந்திர புக்தி: கால அளவு ஏழு மாதங்கள். சந்நியாசி அல்லது பிச்சைக்காரர்களுக்கு தண்ணீர் அல்லது குளிர்பானம் வாங்கிக்கொடுக்கள்.

கேது தசை- செவ்வாய் புக்தி: கால அளவு நான்கு மாதம், 27 நாட்கள். கோழி, சேவல் போன்றவற்றுக்கு தீவனம் தூவவும்.

கேது தசை- ராகு புக்தி: கால அளவு ஒரு வருடம், 18 நாட்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் இனம், மதம் அல்லாத மக்களுக்கு உணவு, குடை, விசிறி, மாத்திரை போன்றவை வாங்கிக்கொடுக்கலாம். முடிந்தால் நாய், சேவல் போன்ற ஐந்தறிவு ஜீவன்களை தானம் கொடுப்பது மிகமிக நல்லது. இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

கேது தசை- குரு புக்தி: கால அளவு 11 மாதம், ஆறு நாட்கள். ஆன்மிக மடங்கள், தபோவனம், சித்தர் சமாதிகள், சித்தர் மடம், அதிஷ்டானங்கள் போன்றவை சார்ந்த இடங்களில் உழவாரப் பணி எனும் தூய்மைப்படுத்தும் பணியைச் செய்யுங்கள். அல்லது சித்தர்களை வணங்கி அமைதியாக அமரவும்.

கேது தசை- சனி புக்தி: கால அளவு ஒரு வருடம், ஒரு மாதம், ஒன்பது நாட்கள். கோவில்களில் வெள்ளை, காவி அடிப்பது, மடங்களைச் சுத்தம் செய்வது கோசாலைகளில் உதவி செய்வது போன்ற செயல்கள் மிக ஏற்புடையவை.

கேது தசை- புதன் புக்தி: கால அளவு 11 மாதம், 27 நாட்கள். குழந்தைகளுக்கு இலவச ட்யூஷன் எடுப்பது, பக்திப் புத்தக விநியோகம், பிறமொழி உதவி போன்றவை நன்று.

சுக்கிர தசை

சுக்கிர தசை இருபது ஆண்டுகள் கொண்டது. பொதுவாக சுக்கிர தசை என்றால், "அட, நல்ல யோகம்தான்' எனக் கூறுவதுண்டு. எனினும் சிறு வயதில் வரும் சுக்கிர தசை, கொட்டிக் கவிழ்க்கும் என்பர். சிறுவயதில் சுக்கிர தசை வரும் குழந்தைகளை வெகு கவனமாக கவனித்தல் அவசியம். அவர்கள் பாதைமாறும், நெறிபிறழும் சூழ்நிலை ஏற்படும். மேலும் ஜாதகத்தில் சுக்கிரன் அமையும் நிலையைப் பொருத்து, பலன்கள் வேறுபாடு அடையும். சுக்கிர தசைப் பரிகாரங்களை வெள்ளிக்கிழமைகளில் பின்பற்றவேண்டும். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமித் தாயார் வழிபாடு அவசியம். மகாலட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீசூக்தம் பாராயாணம் நன்று.

சுக்கிர தசை- சுக்கிர புக்தி: கால அளவு மூன்று வருடம், நான்கு மாதங்கள். காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் சர்க்கரை அல்லது மொச்சை தானம் நன்று.

சுக்கிர தசை- சூரிய புக்தி: கால அளவு ஒரு வருடம். பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் இனிப்பான பழங்கள் தானம் நல்லது.

சுக்கிர தசை- சந்திர புக்தி: கால அளவு ஒரு வருடம், எட்டு மாதங்கள். காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் வயதான பெண்களுக்கு இனிப்பான பழச்சாறு கொடுங்கள்.

சுக்கிர தசை- செவ்வாய் புக்தி: கால அளவு ஒரு வருடம், இரண்டு மாதங்கள். காலை 11.00 முதல் 12.00 மணிக்குள் செடிகள் தானம் நன்று. இதனை இளம்வயது மற்றும் சிறுமி, சிறுவர்களுக்குக் கொடுங்கள்.

சுக்கிர தசை- ராகு புக்தி: கால அளவு மூன்று வருடங்கள். காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் பிறமதப் பெண்களுக்கு அலங்காரப் பொருட்கள் கொடுங்கள். மேலும் உணவு சமைக்க அஞ்சறைப்பெட்டிப் பொருட்களான கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, மசாலா பொருட்களையும் கொடுக்கலாம்.

சுக்கிர தசை- குரு புக்தி: கால அளவு இரண்டு வருடம், எட்டு மாதங்கள். காலை 10.00 முதல் 11.00 மணிக்குள் படிக்கும் குழந்தைகளுக்கு மொச்சை அல்லது வெள்ளைக் கொண்டைக்கடலை சுண்டல் செய்து கொடுக்கவும். பசுவுக்கு சர்க்கரை கலந்து தீவனம் கொடுக்கவும்.

சுக்கிர தசை- சனி புக்தி: கால அளவு மூன்று வருடம், இரண்டு மாதங்கள். காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் வேலை செய்யும் பெண்ணுக்கு பப்பாளிப்பழம் வாங்கித்தரவும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உணவு அல்லது உணவு வாங்கப் பணம் கொடுத்து உதவுங்கள்.

சுக்கிர தசை- புதன் புக்தி: கால அளவு இரண்டு வருடம், பத்து மாதங்கள். காலை 7.00 முதல் 8.00 மணிக்குள் சிறு பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பான, சத்துள்ள, பராம்பரிய உணவு கொடுங்கள்.

சுக்கிர தசை- கேது புக்தி: கால அளவு ஒரு வருடம், இரண்டு மாதங்கள். வெள்ளிக்கிழமை விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடவும்.

மேற்கண்ட பரிகாரங்கள் அனைத்தும், தினசரி வாழ்வியலோடு சேர்த்து செய்யக்கூடியவையாகும். இதற்கென தனியாகப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை. வீட்டி-ருக்கும் பொருட்களையும், வீட்டில் செய்யும் பதார்த்தங்களையும் கொண்டே பரிகாரம் செய்துவிடலாம். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதும். மலையளவு தேவையில்லை; மனதளவு போதும்.

--------------------------------------------------------------

பெண்களுக்கு ருது ஜாதகம் அவசியமா?

ஜோதிட நூல்களில் லட்சக்கணக்கான செய்திகள் காணக் கிடைக்கும். ஜோதிடச் செய்திகள், ஜோதிடப் பொழிப்புரை, ஜோதிட விளக்கம், ஜோதிட விதிகள், ஜோதிட விதிவிலக்குகள், ஜோதிடக் கணக்குகள் என ஒரு மனிதன் பிறந்தத-ருந்து இறக்கும்வரை- ஏன், இறந்தபின் எங்கு செல்வான் எனவும் ஜோதிட விளக்கம் நிறைந் திருக்கும்.

அதிலும், பெண்கள் சம்பந்தமான விஷயங்களை மாங்குமாங்கென்று எழுதியிருப்பார்கள். சில ஜோதிடக் குறிப்பு களைப் படிக்கும்போது சற்றே எரிச்சல் ஏற்படுவதுமுண்டு.

ருது ஜாதக விளக்கம்

ருது காலத்தில் லக்னம் அல்லது 7-ல் செவ்வாய் நின்றால் பக்குவ காலத்திய ருதுவாம்.

லக்னம் அல்லது 7-ல் குரு நின்றால் விவாக கால ருதுவாம்.

லக்னம் அல்லது 7-ல் சுக்கிரன் நின்றால் சம்போக கால ருதுவாம்.

மேலும் ருதுவான நட்சத்திரப்பலன், கிழமைப்பலன், ருது வாரப் பலன் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ருதுவான லக்னத்தைக் கொண்டு எந்த இடத்தில், எந்த காலங்களில், எவ்வாறு ருது ஏற்படும் எனவும் கூறியுள்ளனர்.

ஆயினும், தற்காலத்தில் இந்த ருது ஜாதகம் தேவையா என சிந்திக்க வேண்டும். ஜாதகப் பலனை கால தேச வர்த்தமானம் அறிந்து கூறுதல் அவசியம் எனச் சொல்லியுள்ளனர்.

இந்த ருது ஜாதகம் பழங்காலத்திற்கு சரிப்பட்டு வந்திருக்கும்.

அக்காலத்தில் குழந்தை பிறந்த நேரத்தை சரியாகக் குறித்துவைக்க வசதி கிடையாது. மேலும் ஒவ்வொரு வீட்டிலும் 10, 15 குழந்தைகள் இருக்கும். குறைந்தபட்சமாகவே ஏழு குழந்தைகள் இருப்பார்கள். இதில் அந்த வீட்டுத் தலைவன், குடும்பத்தைக் காப்பாற்ற உழைக்கவே நேரம் சரியாக இருக்கும். மேலும் அநேக மக்களுக்கு எழுத்தறிவு கிடையாது. "குழந்தை எப்போ பொறந்தது?' என்றால், "விடியல்ல பொறந்தது' என்றோ, "அந்தி சாயுற நேரத்தில பொறந்தது' என்றோ ஒரு குத்துமதிப்பாகத்தான் கூறமுடிந்ததே தவிர, கடிகாரப் புழக்கமில்லாத காரணத்தால், குறிப்பாக இத்தனை மணி, இத்தனை நிமிடம், இத்தனை நொடி எனக் கூற இயலவில்லை.

ருது ஜாதகத்துக்கு இன்னொரு முக்கிய காரணம் அப்போது இருந்திருக்கிறது. வீட்டில் அத்தை, ஆச்சி, ஆத்தாக்கள் என ஒரு பெரிய வயதானவர்கள் கூட்டமே இருப்பார்கள். இவர்கள் வயதுக்குவரும் நிலையில், திரளும் நிலையிலுள்ள பெண்ணுக்கு புத்திமதி கூறுவர். இப்படியிப்படி கண்டால், உடனே வீட்டு வயதான பெண்களிடம் கூறவேண்டுமென கண்டிப்பாகக் கூறிவிடுவர். இதில் இன்னொரு முக்கியமான விஷயம், பெற்ற தாயிடம் கூறக் கூடாதென்பது. அது அந்தப் பெண்ணின் மணவாழ்க்கைக்கு ஆகாதென்று ஒரு விதி வைத்திருந்தார்கள்.

ஆக, எந்த சிறு பெண்ணும், அவளுக்கு ஏற்படும் வித்தியாசமான மாறுதலை, தன் வயது முதிர்ந்த உறவினரிடம் கூறுவாள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். சடங்கு, சம்பிரதாயம் செய்து, "எங்கள் வீட்டில் பெண் திருமணத்திற்குப் இருக்கிறாள்' என்றும் கூறுவதாக அமையும்.

ஆதலால் உடனே அதனைக் குறித்து வைத்துக் கொள்வர். அந்த ஊர் ஜோதிடரிடமும் குறித்துவைக்கச் சொல்வர். இதனால் ருது ஜாதகமென்பது சற்றே தெளிவான கணக்காக அமையும்.

இந்த இடத்தில், இந்த காலத்தில் உள்ளவர்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். "குழந்தை பிறந்தவுடனேயும் இந்தமாதிரி ஜோதிடரிடம் சொல்லியிருக்கலாமே' என நினைக்கத்தோன்றும். ஆனால், அப்போது ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், தாயும் சேயும் உயிருடன் மீண்டுவருவதே பெரிய கஷ்டம். மருத்துவ வசதியிராத காலமது. குழந்தை பிறந்த ஒரு மாதப் பொழுதிற்கு ஜன்னி வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்வதும் மிகக் கஷ்டம். இப்போதைய மருத்துவ முன்னேற்றத்திற்கு, பெண்ணாகப் பிறந்தவர்கள் மிக நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

மேலே சொன்ன காரணம் கொடுக்கும் பதட்டத்தில், குழந்தை பிறந்த நேரத்தை சரியாகக் குறித்துவைப்பது இயலாத ஒன்றாகி விட்டது. எனவேதான், கூடியவரை தெளிவாக, ஒழுங்காகக் கூறப் பட்ட ருது ஜாதகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

இப்போது குழந்தை பிறந்த நேரத்தை மருத்துவர்கள், மிகத்துல்லியமாகக் குறித்துக் கொடுக்கிறார்கள். எனவே பிறப்பு ஜாதகமே தற்போதைய காலகட்டத்தில் போதுமானது.

இன்னொரு முக்கியமான விஷயம்- இந்த கலிகாலத்தில் நிறைய அம்மாக்களுக்கு பெண் பருவமடைந்த விஷயமே தெரிவதில்லை. இளம்பெண்கள் அவர்களாகவே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறார் கள். அவர்களாகவே அம்மாவிடம், "”அம்மா, நான் ஏஜ் அட்டெண்ட் பண்ணிட்டேன்'' என்றோ, மற்ற ஆங்கில வார்த்தைகளிலோ சொன்னால் தான் உண்டு.

ஆகவே, குழந்தை பிறந்த துல்-யமான ஜாதகம் கிடைக்கும்போது, தெளிவற்ற ருது ஜாதகம் தேவையில்லை.