கிருஷ்ண ஜெயந்தி 23-8-2019
மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து என்பது அனைவருக்கும் தெரியும். மத்ஸ்ய கூர்ம வராக நரஹரி வாமன திரிவிக்ரம பரசுராம ராம கிருஷ்ண கல்கி. ஒவ்வொரு அவதாரத்திலும் அசுரர்களை அழித்தார். வரமளித்ததற்கேற்ப வினோத அவதாரங்கள். அதில் கிருஷ்ணாவதாரம் தனித்துவம் வாய்ந்தது. பூபாரம் தீர்க்க எடுத்த புதுமையான அவதாரம். இதில் அசுரவதங்களும் அரச வதங்களும் ஏராளம். பாரத யுத்தமே இறுதி இலக்கு.
பஞ்சபாண்டவர்களில் சகாதேவன் மிகச்சிறந்த ஜோதிடன். துரியோதனனே யுத்தத்திற்கு களபலி கொடுக்க உகந்த நாள் எதுவென்பதை எதிரியான சகாதேவனிடமே கேட்டறிந்தான்.
இதையறிந்த கண்ணன், ""மகாபாரத யுத்தம் நடக்காமலிருக்க வழி உண்டா?'' என்று சகாதேவனிடம் கேட்டான். அதற்கு சகாதேவன், ""இரண்டு காரியங்கள் நடந்தால் அது சாத்தியம். ஒன்று, திரௌபதை தன் அவிழ்த்த கூந்தலை முடியவேண்டும் அல்லது மழிக்க வேண்டும்.
அடுத்து உன்னைக் கட்டிப்போட வேண்டும்'' என்றான். அதைக்கேட்ட கண்ணன், ""திரௌபதை விஷயத்தைவிடு. என்னை எவ்வாறு கட்டிப்போட முடியும்?'' என்று கேட்டான்.
அதற்கு சகாதேவன், ""கண்ணா, என் எதிரில் உட்கார்'' என்றான். கண்ணன் அமர, சகாதேவன் தியானத்தில் ஆழ்ந்து, தனது பக்தியின் ஆழத்தால்- யோகத்தால் கண்ணனைக் கட்டிவிட்டான்.
அப்போது கண்ணன், ""சகாதேவா... நீ வென்றாய்; என்னை அவிழ்த்துவிடு. ஆனால் மகாபாரத யுத்தம் நடந்தே தீரும்'' என்றானாம்.
பக்திக்கு கண்ணன் கட்டுப்பட்டுவிடுவான் என்பதற்கு இதுவொரு சான்று. சூரதாசரின் பிறப்பு
அக்ரூரர் கம்சனின் ராஜசபையில் இருந்தவர். ஆனால் அவருக்கு குரூர மனம் இல்லை. தூய மனம்; கிருஷ்ண பக்தி நிறைந்த மனம். ஆகவே, அவர் அக்ரூரர். அவருக்கு கண்ணனை தரிசிக்க இயலவில்லையே என்கிற தாபம் இருந்தது. ஒருசமயம் கம்சன் அக்ரூரரைக் கூப்பிட்டு, ""கோகுலம் சென்று, "ஒரு யாகம் நடக்கிறது. அதில் கலந்துகொள்ள வேண்டும்' என்று சொல்லி கிருஷ்ண பலராமரை அழைத்துவாரும். வந்தவர்களை மல்லர்களைக் கொண்டும், யானைகளைக் கொண்டும் அழித்துவிடுகிறேன்'' என்றான். கண்ணன் மகிமை தெரியாதா அக்ரூரருக்கு? கண்ணனை தரிசிக்க, உடன் அழைத்துவர சந்தர்ப்பம் கிடைத்ததே என மகிழ்ந்தார். கோகுலம் சென்ற அக்ரூரர் கண்ணனைக் கண்டு நெகிழ்ந்து, விவரம் கூறி கண்ணனையும் பலராமனையும் அழைத்துக்கொண்டு தேரில் மதுரா நோக்கி வந்துகொண்டிருந்தார். மாலை வேளை. எனவே சந்தியா வந்தன அனுஷ்டானம் செய்ய யமுனையில் நீராடினார்- தியானத்துடன். கண்ணன், பலராமன் தேரில் இருந்தனர். யமுனையில் அமிழ்ந்தால் அங்கும் அவர்கள். எழுந்து தேரைப் பார்க்கிறார். அங்கும் அவர்கள்.
பக்தியின் ஆழத்தை இதிலிருந்து உணரலாம். (பின்னர் கண்ணன் கம்சனை அழித்தது வேறு கதை.) ஒருசமயம் அக்ரூரர் சத்யபாமா வீடு சென்றார். அவளோ பரம துக்கத்துடன், ""இந்த கிருஷ்ணன் என்னைக் கண்டுகொள்வதே இல்லை. எப்போதும் ராதா, ருக்மிணி இல்லத்தில்தான் இருக்கிறார். இன்னும் இரண்டு மணி நேரத்தில் கிருஷ்ணன் இங்கு வரவில்லையானால் நான் தற்கொலை செய்துகொள்வேன்'' என்றாள். அந்தக் குரலில் ஆத்திரமும் அகங்காரமும் இருந்தன. அக்ரூரர் பயந்தார். சத்யபாமாவின் குணம் அவருக்குத் தெரியும். என்ன செய்வதென்று யோசித்து, ""நான் கண்ணனிடம் கூறி உடனே வரச் சொல்கிறேன்'' என்று வெளியேறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kannappar.jpg)
சிறிது நேரத்தில் தானே கண்ணன்போல அலங்காரம் செய்துகொண்டு வந்தார். பாமாவுக்கு சந்தோஷம். அவள் சாந்தமானவுடன், "அப்புறம் வருகிறேன்' என்று கிளம்பினார். நேரே கண்ணனிடம் போனார் அதே வேஷத்துடன். (உத்தவர்தான் கண்ணன்போல இருப்பார்- கண்ணன் உடைகளை அணிவார். கண்ணன் உடலைவிடும் நேரம் வந்ததும் உத்தவருக்கு உபதேசம் செய்தான். அதற்கு "உத்தவகீதை' என்றே பெயர். "பகவத் கீதை'யைவிட ஆழ்ந்தது. ஸ்ரீமத் பாகவதம் 11-ஆவது ஸர்க்கம், 6-29 அத்தியாயங்கள்).
கண்ணனிடம் வந்த அக்ரூரர் நடந்த விவரங்களைக்கூறி, கண்ணன் பாராட்டுவான் என்று எதிர்பார்த்தார். ஆனால், ""என் வேடமா, பாமாவிடமா? சரி; நீ குருடாகப் பிறந்து என்னைப் பாடி பின்பு என்னைச்சேர். பாமா ஒரு பணிப்பெண்ணாகப் பிறப்பாள்'' என்றான். ""கிருஷ்ணா, உன் சாபத்தை என்னால் மாற்றமுடியாது. நான் பார்வையற்றவனாக இருந்தாலும், உன்னைப் பாடித்துதிக்க அச்சமயம் உன் தரிசனம் தா. பாடும் ஆற்றலும் தா'' என்றார். கண்ணனும் ""தந்தேன்'' என்றான்.
அவரே வட மதுரையில் வாழ்ந்த சூரதாசர்; பார்வையற்றவர். சூரியனைத் துதித்தால் கண் பார்வை நன்றாகும் என்பர். அவர் பாடும்போது கண்ணன் தரிசனம் கிடைத்ததால் அவர் பெயர் சூரதாசர். தாய்- தந்தையர் பெயர் தெரியவில்லை. எவ்வளவு வருடங்கள் வாழ்ந்தார், எப்போது பிறந் தார், மறைந் தார் என்றும் தெரியவில்லை. வயதானவராக கையில் தம்புரா, சிப்ளாவுடன் பாட, எதிரே பாலகிருஷ்ணன் அமர்ந்து கேட்கும் படங்களே காணக்கிடைக்கின்றன.
அவர் பாடல்கள் இந்தி மொழியில் உள்ளன. அதில் ஒரு பாடலுக்கான பொருளைக் காண்போமா?
"கண்ணன் நாமத்தை ரசித்துக் கூறுபவன் கலியில் புண்ணியம் செய்தவன். அவன் பாதத்தூளியில் பணியுங்கள். அவனே புண்ணியம் செய்தவன்; நிர்மலமானவன்; குலத்தைக் காப்பவன். யாக, யக்ஞங்கள், தீர்த்த ஸ்நானம், பல வந்தனங்கள் கிருஷ்ண நாமத்திற்கு ஈடாகாது. கண்ணன் நாமங்களைப் சொல்லுங்கள்; சும்சாரக் கடலை தாண்டுங்கள்.'
மதுரா கண்ணன் கோவிலில் அமர்ந்து வழிபடுவார். அலங்காரம் சரியாக செய்யவில்லையென்றால் என்ன குறை எனக் கூறுவார். கண்ணனே கைப்பிடித்துச் செல்வான். ஒருசமயம் கையைவிட்டபோது, "கண்ணா, நீ என் கையை விடலாம். என் இதயத்திலிருந்து போகமுடியாதே' என்றாராம்.
இவரது பாடல் மகிமைக்கு ஒரு உதாரணம்...
ராஜஸ்தான் கேத்ரி மகாராஜா, சுவாமி விவேகானந்தர்மீது பற்றுக்கொண்டவர். (அவரது ஊக்கத்தினால்தான் அமெரிக்கா சென்று உலகத் துறவியர் மாநாட்டில் உரையாற்றினார்.) அவரது அரண்மனையில் விவேகானந்தர் தங்கியிருந்த சமயம் ஒரு நாள் நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துறவி, பெண்ணின் நடனம் காண்பதா என்ற எண்ணத்தில் விவேகானந்தர் அரங்குக்கு வரவில்லை. நடனப் பெண் சூரதாசர் பாடல் ஒன்றைப் பாடி ஆடினாள். அதன் பொருள்...
"இரும்பு இருக்கிறது.
அதையே பெரிய அரிவாளாக்கிக் கசாப்புக் கடைக் காரன் ஆடு, மாடு, கோழி வெட்டு கிறான். அதே இரும்பை மற்றொரு வன் கோவிலில் துவஜஸ்தம்பம் செய்திட, பக்தர்கள் தொட்டு வணங்குகிறார்கள். ஆக, இரும்பின்மீது குற்றமா?'
இந்த பதங்களைக் கேட்டதும், விவேகானந் தர் நடனம் பார்க்கவந்து, நடனமாதின் பாதம் பணிந்தார். பாடலின் மகிமை அத்தகையது.
அக்பர் ஒரு சமரசக் கலைஞர்; ரசிகர். தான்சேன் அவரது அவைக்கலைஞன். ஒருமுறை சூரதாசர் பாடலை தான்சேன் பாட, நெகிழ்ந்த அக்பர், ""இந்தக் கவிஞர் உள்ளாரா? நம் அரண்மனைக்கு வருவாரா?'' என கேட்க, ""நான் கூறி அழைத்துவருகிறேன்'' என்றார் தான்சேன்.
பிருந்தாவனத்தில் ஹரிதாசர் இருந்தார். ஆனால், அவர் அக்பரின் அரண்மனைக்கு வர இசையவில்லை. எனவே, அக்பர் அவரது ஆசிரமம் வந்து பாக்களைக் கேட்டார். அதேபோன்று தஞ்சாவூர் மகாராஜா தியாகராஜரிடம், "அரண்மனைக்கு வந்து பாடு; தனம் தருகிறேன்' என்று சொல்ல, அவரோ "நிதி சால ஸுகமா- ராமுடு சந்நிதி ஸேவே சுகமா'- "பணம் அதிக சுகமளிக்குமா- ராமன் சந்நிதி சேவை சுகம் தருமா' என்றுகூறி போக மறுத்துவிட்டார்.
சூரதாசரோ, ""கண்ணன் பாட வைக்கி றான்; நான் பாடுகிறேன். ராஜசபை என்றாலும், பாடினால் எனக்கு கிருஷ்ண தரிசனம் கிட்டுமே... வருகிறேன்'' என்றார். வந்தார்; ஆசைதீரப் பாடினார். அக்பர், தான்சேன் யாவரும் ரசித்தனர்.
அந்தப்புரத்திலிருந்த ராணி, நங்கையர்கள், "நாங்களும் அவர் பாடல்களைக் கேட்டு ரசிக்க விரும்புகிறோம்' என்றனர். அவர் தான் பார்வையற்றவராயிற்றே...
எனவே "கோஷா' தேவையில்லை என்று, அவர் பாட இவர்களும் ரசித் தனர்.
கொஞ்சம் நேரம் கழித்து, கண்ணன், ராதா, ருக்மிணி, சத்ய பாமாவைப் பாட, இவருக்கு அவர்கள் தரிசனம் தந்தனர். அங்கிருந்த ராணி யின் பணிப்பெண் ணைப் பார்த்து, "என்ன சத்யபாமா... நீ இங்குதான் இருக் கிறாயா?' என்று தன் பூர்வஜென்ம வாசனை தரிசனத் தால் கூற, "பார்வை யற்றவரென்று இவர் சொன்னது பொய்யோ' என்ற ராணி, பெண்கள் வெலவெலத்து முக்காடு போட்டனர்.
சத்யபாமாவா நமது பணிப்பெண் என்று அஞ்சினர்.
ஆனால் என்ன நடந்தது? கண்ணன் ராதா, ருக்மிணியுடன் தரிசனம்தர, அந்த ஜோதியில் சூரதாச அக்ரூரரும், பணிப்பெண் சத்யபாமாவும் கரைந்தனர். அது பாடல் மகிமையா? கண்ணன்மீதுள்ள ஆழ்ந்த பக்தி தரமா?
கண்ணன் பகவத் கீதை யில் "நமே பக்த: ப்ரணச்யதி'- "என் பக்தன் ஒருபொழுதும் துன்பத்தில் அவதிப்படமாட் டான்' என்றார்.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில் அவனை நினைத்து ஆனந்த வெள்ளத்தில் அமிழ் வோமே!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/kannappar-t.jpg)