னித வாழ்க்கையை நெறிப்படுத்த வழிபாடு மிகவும் அவசியம். அதிலும் பித்ருக்கள் வழிபாடு மிக மிக அவசியமான ஒன்றாகும். நம் கண்ணிற்கு புலப்படும் மற்றும் புலப்படாத அனைத்து நற்சக்திகளும் வழிபாட்டிற்கு உகந்தவை தானே? அவ்வாறிருக்க பித்ருக்கள் வழிபாட்டை ஏன் பிரதானப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். பித்ருக் கள் தொடர்பான பல்வேறு கருத்து களை இந்த கட்டுரை யில் பார்க்கலாம்.

உடலை இயக்குவது உயிர்.

உயிரை இயக்குவது ஆன்மா.

ஆன்மாவின் பலமே உயிரை இயக்கும். உயிரின் பலமே உடலை இயக்கும். ஆக, ஒரு ஆன்மா இயங்க உடலும், உயிரும் தேவை. உயிர் பிரிந்தவுடன் உடல் அழிக்கப்படுகிறது .ஆனால், ஆன்மா தன் அடுத்தகட்ட பயணத்திற்குத் தயாராகிறது.

Advertisment

ஒரு ஜாதகத்தில்

ஐந்தாம் பாவகம் என்பது ஆன்மா.

ஜென்ம லக்னம் என்பது உயிர்.

Advertisment

ஜென்ம ராசி என்பது உடல்.

சுருக்கமாக ஐந்தாமிடம் இல்லையெனில் லக்னம், ராசிக்கு வேலையில்லை. ஒரு ஆன்மாவிற்கு உயிர் கொடுக்க தந்தையே மூல காரணம்.

லக்னத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக் குறிக்குமிடமாகும். ஒரு ஆன்மாவிற்கு உயிர் கொடுத்த தந்தையும் உடல் கொடுத்த தாயும் கடவுளுக்கு சமமானவர்கள்.

ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடம் என்பது தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்கும்.

ஐந்தாமிடம் என்பது ஒருவரின் தெய்வ அனுக்கிரகத்தைப் பற்றிக் கூறும் இடம் என்பதாலும், பாட்டனாரைக் குறிக்குமிடமாக ஐந்தாமிடம் வருவதாலும் தந்தை வழி முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவராவார்.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக் குறிக்கு மிடமாகவும் அமைகிறது. ஐந்தாமிடம் என்பது ஒருவரின் ஆன்மாவைக் குறிக்கும். ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின் விளைவே மனிதப் பிறவி. மனிதன் தன் வாழ்நாளில் அனைத்து சுபப் பலன்களையும் அனுபவிக்க ஜாதகத்தில் ஐந்தாமிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம் (பிராப்தம்), ஒன்பதாமிடம் எனும் பாக்கிய ஸ்தானம் (கொடுப்பினை), லக்னம் (விதி) நன்றாக இருக்க வேண்டும்.

ஆகமுன், ஜென்ம வினை களால் நமக்கு வரும் பிரச்சினைகளிலிருந்தும், இடையூறுகளிலிருந்தும் ஒருவர் விடுபட பித்ருக்கள் வழிபாடு மிக முக்கியம். அதாவது தன் குலத்தில் தோன்றிய வாரிசுகளைக் காப்பாற்றும் சக்தி படைத்தவர்கள் வாழ்ந்து மறைந்த முன்னோர் கள் என்றால் அது மிகைப்படுத்த லாகாது.

தந்தை வழி மரபணுவைப் பெற்று இயங்கும் ஒரு மனிதன் தனது முன்னோர்களின் ஆன்மா நற்கதியடைந்து பிறவா நிலையை அடையவோ மறு பிறப் பெடுக்கவோ உரிய வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஆன்மசாந்திக்கு உதவும் தனது வாரிசுகளை இறந்த முன்னோர்கள் வாழ்த்தும்போது ஜனனகால ஜாதகத்திலுள்ள ஐந்து மற்றும் ஒன்பதாமிடக் குற்றம்நீங்கி ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானம் வலிமை பெறும்.

இத்தகைய முன்னோர்கள் வழி பாடானது ஜாதி, மத, மொழி, இன வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானது. ஆனால், அவசர கதியான உலகில் பொருள்பற்று மிகுதியானதாலும் பொருளா தாரமே வாழ்வாதாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் பலர் ஆன்மாவை வலிமைப் படுத்தும் பித்ருக்கள் பூஜையை மறந்து வாழ்கிறார் கள்.

பூமியில் பிறக்கும் எந்தவொரு ஜாதகருக் கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே, ஒன்பது கிரகங்களாக மாறி, ஐôதகக் கட்டங்களில் அமர்கின்றன. அவரவர் வினைகளே கிரகங்களாக மாறி இல்லங்களில் அமர்ந்து வினைகளுக்கேற்ப தசைகளை அமைத்து, கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் ஒருவரை வாழ வைக்கின்றன .

நம் பூர்வஜென்ம புண்ணிய பாக்கியமே ஏழரைச்சனியாக, அட்டமச்சனியாக, அர்த்தாஷ்டமச்சனியாக, ஒன்பது கிரகங்களின் யோகதசையாக, அவயோக தசையாக, யோகங்களாக, அவயோகங்களாக மாறிவருகிறது. ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படக்கூடிய உயர்வு தாழ்விற்கு இரண்டே காரணங்களை முன்வைக்கலாம்.

aa

1. பித்ருக்களால் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்.

வம்சாவளியாக இறந்த முன்னோர்களுக்குரிய திதிகளை முறையாகக் கடைப்பிடித்துப் பித்ருக்களின் நல்லாசிகளைப் பெற்று, ஜனன ஜாதகத்தில் ஒன்று, ஐந்து மற்றும் ஒன்பதாமிடத்திற்கு வலிமை சேர்த்தவர்கள்.

2. பித்ருக்களால் சபிக்கப்பட்டவர்கள்.

ஜனன ஜாதகத்தில் ஒன்று, ஐந்து மற்றும் ஒன்பதாமிடத்திற்கு அசுப வலிமை சேர்த்தவர்கள்.

ஒருவருக்கு பித்ருக்கள் சாபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

திதி மற்றும் முன்னோர் வழிபாட்டை மனதால் ஒன்றாமல் கடமைக்காகச் செய்வது... அல்லது முன்னோர் வழிபாடே செய்யாமல் இருப்பது.

என் பாட்டன் எதுவும் சேர்த்து வைக்க வில்லை என இறந்தவர்களை பழித்துப் பேசுவது...

வாழும் காலத்தில் வயதான பெற்றோருக் குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் அவர்களை உதாசீனம் செய்வது...

ஒருவர் தன் உயிரைத் தானே முடித்துக் கொள்ளும் வகையில் அவரது ஆன்மாவைத் துன்புறுத்துவது...

இறந்தவர்களின் உடலை முறையாக அடக்கம் செய்யாத குற்றம்...

இறந்தவரின் உடலுக்குரிய மரியாதையைச் செய்யத்தவறுவது...

இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு அவரின் தீய குணங்களை விமர்சிப்பது...

இறந்தவர்களின் உடலை

அடக்கம் செய்யும் முன்பு பங்காளிகள் சண்டையிடுவது...

இறந்த ரத்த பந்த உறவுகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் இருப்பது அல்லது இறுதிச் சடங்கிற்கு உதவாமல் இருப்பது அல்லது உரிய காரியங்களை செய்யத் தவறுவது... ( மொட்டையடித்தல் போன்றவை) போன்ற பல்வேறு காரணங்கள் பித்ருக்களின் சாபத்தைப் பெற்றுத்தரும். இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொரு வரும் ஐந்து விதத்தில் கடன் (கடமை) பட்டுள்ளனர். இந்த ஐந்து கடமைகளை உணர்ந்து பொறுப்பு டன் செயல்படும்போது மட்டுமே ஐந்தாமிடம் மற்றும் ஒன்பதமிடம் வலிமையாகும்.

1. பிரபஞ்சம்

நாம் சுவாசிப்பதற்கு காற்று, பார்ப்பதற்கு வெளிச்சம், பருகுவதற்கு நீர் என நமது எல்லாத் தேவைகளையும் பிரபஞ்சம் நமக்கு வழங்குகிறது.நமது உடலின் ஒவ்வொரு அங்கமும் அசைவும் பிரபஞ்சத்தால் கட்டுப்படுத்தப்படுவதால் பிரபஞ்ச சக்திகளான சூரிய, சந்திர ஒளி, காற்று, புனித நீர்நிலைகளுக்கு கடன்பட்டுள்ளோம். இந்த கடனைத் திரும்ப செலுத்தி இயற்கை சக்திகளை வழிபட்டு நன்றி கூற வேண்டும்.தற்போதைய காலகட்டத்தில் பிரபஞ்ச சக்திகளை வழிபடாமல் தவறான அழிவிற்குப் பயன்படுத்து கிறார்கள்.

2. ரிஷிகள்

பல்வேறு ஞானிகள், தவசிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் நம் நாட்டில் வாழ்ந்து மறைந் திருக்கிறார்கள். இதன்மூலம் நமக்குக் கிடைத்த ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களைப் படித்து, கேட்டு ஞானிகள் மற்றும் ரிஷிகள் மற்றும் தெய்வப்பிறவிகளின் மானசீக நல்லாசிகளைப் பெறவேண்டும். ஆனால் கலியுகத்தில் வேத சாஸ்திரங் களைப் படிப்பவர்களை இகழ்ந்து பாவத்தைச் சேர்க்கிறார்கள்.

3. பித்ருக்கள்

நாம் ஒரு குறிப்பிட்ட குடும்ப முன்னோர்களின் மரபணுவால் பிறப்பெடுத்த காரணத்தினால் பித்ருக்களுக்குக் கடன்பட்டுள்ளோம். அவர்களுக்குரிய சடங்கு, வழிபாட்டு முறைகள்மூலம் முன்னோர்களைத் திருப்தியடையச் செய்ய வேண்டும். பித்ருக்கள் வழிபாடானது பித்ரு லோகத்தில் முன்னோர்கள் இன்பமாக வாழ்வதற்கு உதவுகிறது. வழிபாடு செய்யாத பட்சத்தில் முன்னோர் கள் சாபத்தினால் குடும்ப விருத்தி தடைப்படுகிறது.

4. உறவுகள்

சென்ற பிறவி பந்தங்களான பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும், சக மனிதர்களுக்கும் கடன் பட்டுள்ளோம். தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து இவர்களின் அன்பைப் பெற வேண்டிய கடமை, கடன் அனைத்து மனிதர்களுக்கும் உள்ளது. ஏதாவது ஒரு வடிவில் இவர்களின் சேவையைப் பெற்றதற்கு நன்றி பாராட்ட வேண்டும்.அதை விடுத்து அவர்களை இகழ்வதும், வெறுப் பதும் அதிகமாகி வருகிறது.

5. உயிரினங்கள்

சக உயிரினங்களுக்கு கடன்பட்டுள்ளோம். சக உயிர்களை வதைக் கக் கூடாது. விலங்குகள் மற்றும் பறவைகளை வீட்டில் கூண்டில் அடைக்கக் கூடாது. உயிர்களின் சேவையை மட்டும் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்திவிட்டு, அதனைத் துன்புறுத்துவது அதிகமாகி வருகிறது.

பறவைகளின் இறக்கையை வெட்டிப் பறக்க முடியாமல் செய்வது, கறவை நின்ற பசுவை இறைச்சி யாக்குவது, வீட்டு வளர்ப்பு நாய்க்கு அறுவை செய்து பாலுணர்வைக் கட்டுப்படுத்துவது போன்ற தார்மீகமற்ற செயல்களைச் செய்யாமல் அன்பு பாராட்டவேண்டும் .

மேலே கூறிய இந்த ஐந்து கடமைகளை (கடன்) மறந்து, சுய நலத்துடன் இறை நம்பிக்கையைத் துறந்து, பொருள் பற்றுடன் வாழ ஆரம்பித்த காரணத்தால் இயற்கை "கொரோனா ரூபத்தில் மக்களைத் துன்புறுத்தி வருகிறது. மக்கள் அடிப்படைத் தேவையை நிறைவு செய்ய கடுமையான போராட்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகி விட்டது. உலக இயக்கமே ஸ்தம்பித்துள்ளது.

அதனால்தான் வழிபாட்டு ஸ்தலங்கள் மூடப்பட்டிருக்கின்றன. நெருங்கிய ரத்த பந்த உறவு களுக்குரிய கர்ம காரியங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. பித்ருக்களின் சாந்தி வழிபாட்டைச் செய்ய முடியவில்லை போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை அனுபவிக்கும் சூழல் உருவாகி விட்டது. உலகின் பல்வேறு இடங்களில் இயற்கையை சாந்திப் படுத்தும் பல்வேறு யாகங்கள் செய்தும் நோய்த் தாக்கம் குறைந்த பாடில்லை. மக்களுக்கு ஆயுள் பயம் அதிகரித்துவிட்டது. இதிலிருந்தே உலகில் பாவ காரியங்கள் மிகைப்படுத்தலாக உள்ளதை நம்மால் அறியமுடியும்.

இதற்குத் தீர்வுதான் என்ன என்று யோசித்தால், பாவச் சுமைகளைக் குறைத்து புண்ணிய பலன்களைப் அதிகரிக்கும் மஹாளயபட்ச, அமாவாசை வழிபாடு நமது சாஸ்திரங்களில் கூறப் பட்டுள்ளது. . மனித உயிர்களுக்கு மாபெரும் புண்ணியம் பெற்றுத் தரும் மஹாளய பட்ச, அமாவாசை வழிபாடு சார்வரி வருடம், ஆவணி மாதம் 17- ஆம் (2-9-2020 ) அன்று தொடங்கி புரட்டாசி 1-ஆம் நாள் (17-09-2020) மஹாளய அமாவாசையன்று நிறைவடைகிறது. இந்த 16 நாட்களும் முன்னோர்களுக்குரிய பித்ருக்கள் பூஜை செய்வதுடன், பிரபஞ்ச சக்திகளை வணங்கி, உற்றார் உறவினர்களுடன் நட்பு பாராட்டி, துறவிகள், தவசிகள், ஞானிகளை வழிபட்டு, சக உயிர்களுக்கு இயன்ற தான, தர்மம் செய்து பாக்கிய பலன்களைப் அதிகரிக்கச் செய்ய வேண்டும். முன்னோர்களின் ஆத்மா சாந்தி யடையவும், சாந்தியடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களைச் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.

சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை யன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படுமென்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்கள் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் புரட்டாசி மாத அமாவாசை யும் மகாளய பட்சமும் சிறப்பு வாய்ந்தாகக் கருதப்படுகின்றன. சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும் புரட்டாசி மாத மகாளய பட்சத்தில் 15 நாட்கள் தொடர்ச்சியாக பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், பூலோக வாசம் செய்ய இயலும். மறைந்த முன்னோர்களும், ரத்த சம்பந்த உறவுகளும் நண்பர்களும் அந்தந்த உறவினரை, குடும்பத்தினரைக் காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் வருவார்கள். இவ்வாறு வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு. அந்த நேரத்தில் அவர்களை வணங்கினால் மனமகிழ்ச்சி யோடு ஆசிர்வாதம் செய்வார்கள்.

மகாளய பட்சத்தில், ஒருவர் மறைந்த தம் தாய், தந்தையர், தாத்தா, பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தையின்றி இறந்துபோன உறவினர் களுக்கும், முன்னோர்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் சேர்த்து தர்ப்பணம் செய்யலாம். அதன் பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம். மற்ற மாதங்களிலும் அமாவாசையன்று தர்ப்பணம் செய்யவது நல்லது. .

ஆனாலும் மகாளயபட்ச காலத்தில் பிரதமை திதி துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்யவது மிகவும் சிறந் தது. ஒட்டுமொத்த முன்னோர்களையும் அப்போது நினைவில் நிறுத்தவேண்டும்.

இப்பொழுது வாசகர்கள், முன்னோர் வழிபாட்டை முறைப்படி செய்ய நாங்கள் தயாராக இருந்தாலும் "கொரோனா' பாதிப்பால் அரசின் சட்ட திட்டங்களால் திதி, தர்ப்பணங்கள் கொடுக்க முடியாது.

நீர்நிலைகள், வழிபாட்டு ஸ்தலங் களுக்கு செல்ல முடியாது போன்ற மனக் குழப்பம் இருக்கும்.

முறைப்படியான சிரார்த் தங்களை இயன்றவர்கள், வாய்ப்பு கிடைப்பவர்கள் 16 நாட்களும் செய்வது மிகவும் சிறப்பாகும்.

புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி முன்னோர் களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து வரலாம்.

பல்வேறு காலச் சூழலால் புரோகிதர் களை வைத்து சிரார்த்தம் செய்ய இயலாத நிலை இருந்தால் முன்னோர்களை ஆத்மார்த்தமாக மனதில் பிராத்தனை செய்து, நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கு அன்னமோ ஒரு படி பொரியோ அர்ப் பணித்தால் கூட அதை முன்னோர்கள் மனமகிழ்வோடு ஏற்றுக் கொள் வார்கள்.

மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுபவர்கள் இரு கைகளாலும் நதி நீரை எடுத்து வார்ப்பது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனைப் பார்த்தபடி மூன்று முறை நீர்விடுதல் வேண்டும்.

வீட்டில் ஒரு குவளையில் நீரை நிரப்பி அதில் புண்ணிய நதிகளை ஆவாஹனம் செய்து அந்த நீரைக் கொண்டும் அர்க்கியம் செய்யலாம்.

பொதுவாக வலது சுட்டு விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்கள் தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது. உரிய மந்திரங்கள் தெரியாதவர்கள் சுட்டு விரலுக்கும் கட்டை விரலுக்கு மத்தியில் எள்ளும் நீரும் விட்டும் முன்னோர்களுக்கு சமர்ப்பிக்கலாம்.

அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித் தால் பிதுர்களின் நல்லாசி கிடைக்கும்.

அந்தணர்களுக்கு ஆடை தானம், ஏழைகளுக்கு அன்னதானம், பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதும் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத்தரும்.

மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

எதுவுமே செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை விமர்சனம் செய்யாமல் அவர்களின் ஆன்ம சாந்திக்கு மானசீக வழிபாடு செய்தாலே பெரும் புண்ணியம் கிட்டும்.

மகாளயபட்ச விதிமுறைகள்

மகாளயபட்ச காலத்தில் எண்ணெய்க் குளியல் செய்யக் கூடாது. முகச்சவரம் செய்யக்கூடாது.

தாம்பத்தியம் கூடாது. புலனடக்கம் மிக மிக அவசியம். மகாளய பட்சத்து தினங் களில் கண்டிப்பாக வெளியே சாப்பிடக் கூடாது.

பூண்டு, வெங்காயம் சேர்க்காத வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவேண்டும்.

தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், அமாவாசை தினமே மிகச் சிறந்தது. சூரியன், சந்திரன் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்கள் தங்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பலவித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.

மாதம் தோறும் அமாவாசையன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனைப் பெறலாம்.

நன்மை தரக்கூடிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய பித்ரு காரியங்களை யாரை உத்தேசித்து செய்கிறோமோ அவர்கள் பித்ரு உலகில் இருக்கலாம். அல்லது தேவ உலகில் இருக்கலாம்.

ஏன் மனித உலகில் நமக்குப் பக்கத்தி லேயேகூட இருக்கலாம். அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ உயர்ந்ததாகவோ இருக்கலாம்.

நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் சிரார்த்தம் அவர் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்குக் கிடைக்கும்.

தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரின் நிலை உயர உதவும்.

மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இக உலகத் துன்பம் தீர உதவும். அன்று ஒட்டுமொத்த முன்னோர்களையும் நினைவு கூர வேண்டும். நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னை நம்பி வாழும் தனது குடும்பத்தினரின் நன்மையைக் கருதி கட்டாயம் பித்ரு கர்மாக்களை செய்வது நல்லது.

மகாளயபட்சம் மற்றும் புரட்டாசி அமாவாசை தினத்தில் அனைவரும் முன்னோர்களை வணங்கி ஆசிர்வாதம் பெறுவோமாக.