சூரிய பகவான் அனைத்து உயிர்களுக் கெல்லாம் ஆதியாய் இருந்து, இருளகற்றி ஒளி கொடுத்து அருள்கிறார். சூரியன் (ஞாயிறு), சந்திரன் (திங்கள்), அங்காரகன் (செவ்வாய்), புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி, ராகு- கேது ஆகிய ஒன்பது கோள்களில் முதன்மையானவர் சூரியனே. சூரிய பகவானுக்கு தென்னிந்தியாவில் தனிக்கோவில் அமைந்துள்ள ஒரே இடம் கஞ்சனூர் அருகேயுள்ள சூரியனார்கோவில்.
தினசரி பக்தர்கள் வெள்ளமென வந்து செல்கி றார்கள். அதிலும் அவருக்கேற்ற ஞாயிற்றுக் கிழமையன்று பெருமளவில் வந்து வழி பட்டுச் செல்கிறார்கள். காரணம் "கைமேல் பலன்' என்கிறார்கள் இங்கு வழிபட்டுவரும் கல்லூர் பெரியசாமி குடும்பத்தினர்.
இமயமலைச் சாரலில் முற்காலத்தில் காலவர் என்ற முனிவர்- முக்காலமும் உணர்ந்த ஞானி வாழ்ந்துவந்தார். இவரிடம் தங்கள் வருங்காலப் பலன்கள் பற்றி மக்கள் கேட்டுச் செல்வது வழக்கம். ஒருநாள் காலவமுனிவரி டம் இளந்துறவி ஒருவர் வந்து தனது வருங்காலம் பற்றித் தெரிவிக்கும்படி வேண்டினார். காலவமுனிவர், ""சொல்வதற்கு ஒன்றுமே இல்லையே'' என்றார். அப்போது அந்த இளந்துறவி பெரிதாகச் சிரித்து, ""எல்லாம் அறிந்த தாங்கள் மற்றவர்களின் வருங்காலம் பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் வருங் காலம் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொண்டீர்களா?'' என கேட்டு மேலும் நகைத் தார். உடனே காலவமுனிவர் இளந்துறவியைப் பார்த்து, ""இவ்வளவு துணிவாக என்னைப் பார்த்து யாரும் இப்படி கேள்வி கேட்டதில் லையே! தாங்கள் யார்... உண்மையைச் சொல்லுங் கள்'' என்றார். ""நான் காலதேவன்'' என்று கூறிவிட்டு அந்தத் துறவி மறைந்துபோனார்.
காலவமுனிவர் தம் வருங்காலம் பற்றி ஞான உணர்வால் கண்டறிந்தார். தம்முடைய முன் வினைப் பயனால் கூடியவிரைவில் தமக்குத் தொழு நோய் வரும் என்பதை அறிந்து வாட்டமுற்றார்.
அதைக்கண்ட சகமுனிவர்கள் விவரம் கேட்டனர். காலவமுனிவர் தம் நிலையை எடுத்துச்சொன்னார். அதற்கு முனிவர்கள், ""காலவரே, முக்காலமும் உணர்ந்த நீங்களே வருந்தலாமா? அதனைத் தீர்க்க வழிதேடுங்கள். மேலும் முன்வினைகளுக்கான பலன்களை அளிப்பவர்கள் நவகிரகங்கள். அவர்களை நோக்கித் தவம்செய்து முன்வினைப் பயனிலிருந்து விடுதலைபெற முயற்சி செய்யுங்கள்'' என்று ஆலோசனை வழங்கினார்கள்.
இதையடுத்து காலவமுனிவர் இமயமலைச் சாரலைவிட்டு விந்திய மலைப்பகுதிக்கு வந்து தங்கி, நல்லநாள் பார்த்து நவகிரகங்களை நோக்கித் தவமிருக்கத் துவங்கினார். நான்குபுறமும் தீ வளர்த்து கடும் வெப்பத்துக்கிடைய
சூரிய பகவான் அனைத்து உயிர்களுக் கெல்லாம் ஆதியாய் இருந்து, இருளகற்றி ஒளி கொடுத்து அருள்கிறார். சூரியன் (ஞாயிறு), சந்திரன் (திங்கள்), அங்காரகன் (செவ்வாய்), புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி, ராகு- கேது ஆகிய ஒன்பது கோள்களில் முதன்மையானவர் சூரியனே. சூரிய பகவானுக்கு தென்னிந்தியாவில் தனிக்கோவில் அமைந்துள்ள ஒரே இடம் கஞ்சனூர் அருகேயுள்ள சூரியனார்கோவில்.
தினசரி பக்தர்கள் வெள்ளமென வந்து செல்கி றார்கள். அதிலும் அவருக்கேற்ற ஞாயிற்றுக் கிழமையன்று பெருமளவில் வந்து வழி பட்டுச் செல்கிறார்கள். காரணம் "கைமேல் பலன்' என்கிறார்கள் இங்கு வழிபட்டுவரும் கல்லூர் பெரியசாமி குடும்பத்தினர்.
இமயமலைச் சாரலில் முற்காலத்தில் காலவர் என்ற முனிவர்- முக்காலமும் உணர்ந்த ஞானி வாழ்ந்துவந்தார். இவரிடம் தங்கள் வருங்காலப் பலன்கள் பற்றி மக்கள் கேட்டுச் செல்வது வழக்கம். ஒருநாள் காலவமுனிவரி டம் இளந்துறவி ஒருவர் வந்து தனது வருங்காலம் பற்றித் தெரிவிக்கும்படி வேண்டினார். காலவமுனிவர், ""சொல்வதற்கு ஒன்றுமே இல்லையே'' என்றார். அப்போது அந்த இளந்துறவி பெரிதாகச் சிரித்து, ""எல்லாம் அறிந்த தாங்கள் மற்றவர்களின் வருங்காலம் பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் வருங் காலம் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொண்டீர்களா?'' என கேட்டு மேலும் நகைத் தார். உடனே காலவமுனிவர் இளந்துறவியைப் பார்த்து, ""இவ்வளவு துணிவாக என்னைப் பார்த்து யாரும் இப்படி கேள்வி கேட்டதில் லையே! தாங்கள் யார்... உண்மையைச் சொல்லுங் கள்'' என்றார். ""நான் காலதேவன்'' என்று கூறிவிட்டு அந்தத் துறவி மறைந்துபோனார்.
காலவமுனிவர் தம் வருங்காலம் பற்றி ஞான உணர்வால் கண்டறிந்தார். தம்முடைய முன் வினைப் பயனால் கூடியவிரைவில் தமக்குத் தொழு நோய் வரும் என்பதை அறிந்து வாட்டமுற்றார்.
அதைக்கண்ட சகமுனிவர்கள் விவரம் கேட்டனர். காலவமுனிவர் தம் நிலையை எடுத்துச்சொன்னார். அதற்கு முனிவர்கள், ""காலவரே, முக்காலமும் உணர்ந்த நீங்களே வருந்தலாமா? அதனைத் தீர்க்க வழிதேடுங்கள். மேலும் முன்வினைகளுக்கான பலன்களை அளிப்பவர்கள் நவகிரகங்கள். அவர்களை நோக்கித் தவம்செய்து முன்வினைப் பயனிலிருந்து விடுதலைபெற முயற்சி செய்யுங்கள்'' என்று ஆலோசனை வழங்கினார்கள்.
இதையடுத்து காலவமுனிவர் இமயமலைச் சாரலைவிட்டு விந்திய மலைப்பகுதிக்கு வந்து தங்கி, நல்லநாள் பார்த்து நவகிரகங்களை நோக்கித் தவமிருக்கத் துவங்கினார். நான்குபுறமும் தீ வளர்த்து கடும் வெப்பத்துக்கிடையே தவம் செய்தார். தவம் முதிரமுதிர அக்னிச்சுவாலை களின் வெப்பம் நவகிரகங்களைத் தாக்கியது. உடனே நவகிரக நாயகர்கள் காலவமுனிவர்முன் தோன்றி, ""முனிவரே, உமது தவம் எங்களைக் கவர்ந்தது. சொல்- உமக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டனர். முனிவர் அவர்களை வணங்கி, ""நவமண்டலாதிபதிகளே, வினைப் பயன் ஊட்டும் தேவர்களே! எமக்குத் தொழு நோய் பற்றும் நிலையுள்ளது. அது என்னை அணுகாதபடி வரமருளவேண்டும்'' என்றார். நவநாயகர்கள் முனிவருக்கு வரத்தைத் தந்து ஆசிவழங்கிச் சென்றனர்.
இந்தச் செய்தி படைப்புக் கடவுளான பிரம்ம தேவனுக்குத் தெரிந்தது. அவர் கோபம்கொண்டு நவகிரகங்களை வரவழைத்து, ""எமது கட்டளைப் படி நடக்கவேண்டிய உங்களுக்கு தனித்தியங்கும் அளவுக்கு சுதந்திரம் இல்லை. சிவபெருமானின் ஆணைப்படி காலதேவனின் துணைகொண்டு அனைத்து ஜீவராசிகளுக்கும் அவரவர் வினைப் பயன்களையூட்டுவதற்காகவே உங்களைப் படைத்தோம். ஆனால் நீங்கள் அதைமீறி நடந்துள்ளீர்கள். காலவமுனிவருக்கு தொழுநோய் வராமல் தடுக்கும் அளவுக்கு வரமளித்தது மிகப்பெரிய தவறு. எனவே நீங்கள் ஒன்பதுபேரும் பூலோகத்தில் பிறந்து, காலவமுனிவர் தொழுநோயால் துன்பப்படவேண்டிய கால அளவுவரை அந்த நோயால் துன்பப்படவேண்டும்'' என்று சாபம் கொடுத்தார்.
இதைக்கேட்டுக் கலங்கிய நவகிரகங்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு, ""காலவமுனிவரின் தவத்தின் அனல் எங்களைத் தாக்கியதால் தாங்காமல் சென்று வரமளித்தோம். அதைப் பொறுத்தருள வேண்டும்'' என்று வணங்கி மன்றாடி நின்றனர். கோபம் தணிந்த பிரம்மா, ""உங்கள் தவறை உணர்ந்து விட்டீர்கள். ஆயினும் சாபத்திலிருந்து விமோசனம் பெறவேண்டு மானால் பூலோகம் சென்று புண்ணிய பூமியான காவேரி யாற்றின் வடகரையிலுள்ள அர்க்க வனத்தில் (வெள்ளெருக் கங்காடு) தங்கித் தவம் செய்யுங்கள். கார்த்திகை மாதத்தின் முதல் ஞாயிறுமுதல் 12 ஞாயிற்றுக்கிழமைவரை எழுபத்தெட்டு நாட்கள் தவம்செய்து, திங்கட்கிழமைதோறும் சூரிய உதயத்திற்குமுன்பு காவேரியில் நீராடி பிராணநாதரையும் மங்கலநாயகியையும் வழிபடவேண்டும். அதன்பிறகு அர்க்க இலையில் (வெள்ளெருக்கு) ஒரு பிடியளவு தயிர்சாதம் வைத்து அதை மட்டுமே சாப்பிடவேண்டும். இதை சிறிதளவும் மாறா மல் செய்துவந்தால் உங்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கும்'' என்றார்.
பிரம்மாவின் அறிவுரைப்படியே நவகிரக நாயகர்கள் காவேரி யின் வடகரையிலுள்ள அர்க்க வனத்தினைத் தேடிவந்தனர்.
அங்கு அகத்திய முனிவர் செல்வதைக் கண்டு அவரை வணங்கி, ""அர்க்க வனத்தைக் காட்டி உதவிடுங்கள்'' என்று வேண்டினார்கள். ""நானும் அர்க்க வனத்திலுள்ள பிராணநாதரை வழிபடவே செல்கிறேன். எம்மைப் பின்தொடருங்கள்'' என்றார் அகத்தியர். அதன்படியே அந்த வனத்தை அடைந் தனர். வனத்திலுள்ள பிராண நாதரையும் மங்கல நாயகியையும் வழிபடுவதற்காக அகத்திய முனிவர் தமது குறுங்கையை காவேரியை நோக்கி நீட்டினார். அவரது கை நீண்டு சென்று காவேரியாற்றில் நீர் எடுத்துவந்து அபிஷேகம் செய்ததும், கை பழையபடி சுருங்கிப்போனது.
இதைக்கண்ட நவநாயகர்கள் அகத்தியரின் தவவலிமையைப் பற்றி வியப்பும் பூரிப்பும் அடைந்தனர்.
அந்த நேரத்தில் காலவரைப் பிடிக்க வேண்டிய தொழுநோய் நவகிரகங்களைப் பிடித்தது. அங்கமெல்லாம் இறுகியது. தோல் சுருங்கி அழுகியது. அந்த வேதனை போக அகத்தியரிடம் தாங்கள் தவம்செய்ய வேண்டிய முறைகள் பற்றி அறிவுறுத்துமாறு நாயகர்கள் வேண்டினார் கள். அவர்களின் துயரத் தைக் கண்ட அகத்தியர், ""நவகிரகங்களே, இவ்வனத் தின் வடகிழக்குப் பகுதியில் விநாயகரை உருவாக்கி அவரை வணங்கி தவம் முழுமையடையப் பிரார்த்தனை செய்து, கார்த்திகைத் திங்கள்முதல் பிரம்மாவின் உத்தரவுப்படி தவத்தைத் தொடருங்கள். இவ்வனத்திலுள்ள ஒன்பது தீர்த்தங்களில் தினசரி ஒன்றாக நீராடி இறைவனையும் இறைவியையும் வழிபட்டுவாருங்கள்'' என்று வழிமுறைகளைச் சொல்ல, அப்போது நவநாயகர்கள், ""பிரம்மா எருக்க இலையில் தயிர்சாதத்தை உண்ணச் சொன்னதன் காரணமென்ன?'' என்று கேட்க, அதற்கு அகத்தியர், ""அது தேவ ரகசியம். இருந்தும் சொல்கிறேன். எருக்க இலையில் தொழுநோயை குணமாக்கும் மருத்துவ சக்தி உள்ளது. அதில் தயிர்சாதம் வைத்து சாப்பிட்டால் விரைவில் உங்கள் நோய் தீரும். அதனை விளக்கமாகக் கூறாமல் பிரம்மா சுருக்கமாகக் கூறியுள்ளார். இதில் தவத்துடன் மருத்துவ உபாயமும் உள்ளது'' என்று கூறிவிட்டு விடைபெற்றுப் புறப்பட்டார்.
அதன்படியே நவகிரக நாயகர்கள் 78 நாட்கள் கடுமையான முறையில் பிரம்மா உத்தரவுப்படியும், அகத்தியர் வழி காட்டுதல்படியும் இறைவன்- இறைவியை வழிபட்டுவந்தனர். 78-ஆம் நாள் காவேரியில் நீராடி எழுந்தபோது தங்கள் உடலிலிருந்த தொழுநோய் பாதியளவு மறைந்து குணமாகியிருந்ததைக் கண்டு சந்தோஷமடைந்தனர். அன்று பிராணநாதரை யும் மங்கலநாயகியையும் மனமுருக வேண்டி நின்றனர். அப்போது இறைவனும் இறைவியும் நவகிரகங்களுக்குக் காட்சிகொடுத்து, ""நவகிரக நாயகர்களே, உங்கள் தவத்தைக் கண்டு மகிழ்ந்தோம். உங்கள்மீதுள்ள தொழுநோய் இன்றோடு முற்றிலும் நீங்கும். நீங்கள் தங்கித் தவம்செய்த அர்க்கவனத்தின் வடகிழக்கில் உங்களுக்கென தனி ஆலயங்கள் உண்டாகும். அது உங்களின் தலமாக விளங்கும். அங்கேவந்து உங்களை வழிபடும் மக்களுக்கு சுதந்திரமாக வரமளிக்கும் அனுமதியை வழங்குகிறோம்'' என்றுகூறி மறைந்தார்கள். நவகிரகங்கள் மகிழ்ந்தனர்.
அதேநேரத்தில் காலவ முனிவர் அவர்கள்முன்பு வந்து கால்களில் வீழ்ந்து வணங்கி, ""எமக்கு வரவேண்டிய நோயைத் தாங்கள் தாங்கிக் கொண்டீர்கள். தங்களைத் துன்பத்துக்கு ஆளாக்கிய அடியேனை மன்னிக்க வேண்டும்'' என்று கதறியழு தார். நவநாயகர்கள் முனிவரை சமாதானம் செய்து, ""நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?'' என்று கேட்க, விந்திய மலையில் எமக்கு நீங்கள் வரமளித்துச் சென்றபிறகு நான் மீண்டும் இமயமலைக்குச் சென்றேன். அங்கே வந்த அகத்திய முனிவர் தங்களை அர்க்க வனத்தில் கண்டதையும், தொழுநோயால் தாங்கள் துன்பப்பட்டதையும் கூறினார். அதைக் கேட்டு நம்மால் அவர்களுக்கு இவ்வளவு துன்பம் ஏற்பட்டுள்ளதே என மனம்வருந்தி உங்களைக் காண இங்கு வந்தோம்'' என்றார் முனிவர்.
நவகிரகங்கள் அங்கு முதலில் உருவாக்கிய விநாயகரை வழிபட்டு, நோயிலிருந்து விடுபட உதவியதால் அந்த விநாயகருக்கு "கோள்வினை தீர்த்த விநாயகர்' என்று பெயர் சூட்டி னார்கள். முனிவரிடம் தங்களுக்கென அங்கு தனிக்கோவிலை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டனர். முனிவரும் அவ்வாறே செய்வதாகக்கூறி வணங்கினார். நவகிரகங்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள விடை பெற்றுப் புறப்பட்டனர். நவகிரகங்களின் வேண்டுகோள்படியே அங்கே நவநாயகர்கள் சிலைகளை அமைத்துக் கோவிலை உருவாக்கி னார். தினசரி வழிபாடு செய்துவந்தார். இப்படி காலவமுனிவரால் உருவாக்கப்பட்டதே சூரியனார்கோவில்.
பிராணநாதேஸ்வரர் கோவில் அமைந் துள்ள பகுதி திருமங்கலக்குடி என்றும், வடகிழக்குப்பகுதி சூரியனார்கோவில் என்றும் இரண்டு கோவில்களாக அமைந்துள்ளன. ஆலயத்தின் மையப்பகுதியில் சூரிய பகவான் காட்சியளிக்கிறார். இவருக்கு எதிரே குரு பகவான் உள்ளார். கர்ப்ப கிரகத்தை ஒட்டி மற்ற கிரகங்களுக்கு தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. தேஜசண்டேசுவரருக்கு தனிக்கோவில் உள்ளது. இவ்வாலய இறைவனை வழிபட்டு சித்திராஸ்த பாண்டிய மன்னன், புவரேசு மன்னன் என பலரும் பயன் பெற்றுள்ளனர்.
தேவர்களின் தலைவனான இந்திரன் குரு பகவானை வழிபட்டுப் பயன் பெற்றுள்ளார்.
சூரியனைச் சுற்றி மற்ற கிரகங்கள் எப்படி அமைந்துள்ளதோ, அப்படியே இவ்வாலயம் அமைந்துள்ளது. பிற கோவில்களிலுள்ள நவகிரக வழிபாட்டு முறைக்கும் இவ்வாலய வழிபாட்டு முறைக்கும் வேறுபாடு உள்ளது. இங்கு விநாயகரை வழிபட்டபிறகு சூரிய பகவானையும், அவர் எதிரேயுள்ள குரு பகவானையும், அடுத்து சனி பகவானையும், அதையடுத்து அங்காரகன், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்ற வரிசைப்படி வழிபாடுகள் செய்து, இறுதியில் தேஜசண்டிகேசுவரரை வணங்கவேண்டும். இவ்வாலய இறைவன் சூரிய பகவான் உஷாதேவி, சாயாதேவி சமேதராக மூலவராக இருந்து அருளாட்சி செய்கிறார்.
மனிதவாழ்வில் இன்பம்- துன்பம், உள்ளம், உடல் சார்ந்த விஷயங்கள் சூரியனிடமிருந்து கதிர்வீச்சுகளாக வெளிப்படுகின்றன. இது வான்வெளியில் பரவி குரு, சனி, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய கோள்களின்மீது மோதி பிறகு பூமியைத் தாக்குகின்றன.
அக்கதிர் வீச்சுகள் மனித உடலில் ஊடுருவி அதன் உறுப்புகளிலும், உள்ளத்திலும், அதனைக் கட்டுப்படுத்தும் மூளை நரம்புகளிலும் பலவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரையும் பாதிக்கின்றன. அதனால் மனிதனின் இன்ப- துன்பங்களை நவகிரகங்கள் நிர்ணயம் செய்கின்றன.
மனம் தொடர்பான இன்ப- துன்பங் களை சந்திரன், புதன், கேது ஆகியவை தீர்மானிக்கின்றன. உடல், உள்ளம் இரண்டிலுமே குரு, சனி கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவேதான் அப்படிப்பட்ட நவநாயகர்கள் தங்களை வந்து வழிபடும் மனிதர்களுக்கு தீயபலன்களைத் தணித்து சாந்தமளிக்கிறார்கள். இவர்கள் சிவபக்தர்களுக்கு எப்போதும் நல்லவற் றையே செய்பவர்களாக உள்ளனர். இதனை திருஞானசம்பந்தர் தமது கோளறு பதிகத்தில் பாடியுள்ளார்.
எனவே, நவகிரக தோஷ நிவர்த்திக்காகவும், வேண்டிய வரத்தைப் பெறவேண்டியும் இவ்வாலயத்திற்கு வந்து வழிபடுவது மனிதர்களின் தலையாயக் கடமை என்கிறார்கள் சிவபக்தர்கள். இவ்வாலயம் திருவாடுதுறை ஆதினம் பராமரிப்பில் சிறப்பாக உள்ளது. 24-ஆவது குரு மகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மிகச் சிறப்பாக ஆலயப் பராமரிப்புப் பணிகளைச் செய்துவருவதாக ஆலய ஊழியர்கள், அர்ச்சகர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள்.
தென்னிந்தியாவிலேயே சிவசூரியப் பெருமானுக்காக அமைந்துள்ள சூரியனார் கோவில் இறைவனையும் நவகிரகங்களையும் வழிபடுவோம்; பயன் பெறுவோம்.
அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கில் உள்ளது. காலை 8.00 மணிமுதல் 10.30 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும். ஞாயிறு மட்டும் காலை 5.30 மணிமுதல் 1.30 மணிவரையும்; மாலை 3.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரையும் நடை திறக்கப்படுகிறது.
தொடர்புக்கு: தொலைபேசி: 0435-2472349.