புவியுலக வாழ்வியலில் உயிரினம் படைக்கப்படும் கூறுகளை நமது சித்தர்கள் 16 கட்டமைப்புகளுக்குள் கொண்டுவந்து, அவற்றைக் குறிப்பிடுவதற்கு தமிழ் எழுத்து கள் 16-ஐயும், அவற்றோடு சேர்த்து சில ரகசிய எண்களையும் தந்துள்ளனர். இவை யிரண்டையும் 16 கட்டங்களுக்குள் அடைத்து சில தந்திர வித்தைகளையும் செய்துள்ளனர்.
இப்பிரபஞ்சம் முழுவதுமே ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புகளில்தான் தமது உருவாக்கத்தை உள்வாங்கி, மறைத் தலையும் செய்து கொண்டிருக்கின்றன என்பதைத் தங்களது தொடர்ச்சியான ஆழ்ந்த மதிநுட்ப ஆய்வுகளின்மூலம் உறுதிசெய்தனர்.
மர்மமான ஓரு ரகசிய கட்டமைப்பு!
இப்புவியுலகி லுள்ள அனைத்து உயிரினங்களிலும் சிவமானது ஐந்து பூதங்களின் வடிவில்- அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, சுத்தவெளி என ஒரேமாதிரியாக உள்ளது. ஆனால், அவற்றுக்குள் செயல் படும் சக்தி நிலைகள் மட்டும் ஒவ்வொரு படைப்பிலும் வெவ் வேறாக இருக்கின்றன என்ற மகா உண்மை புலப்பட்டது. உதாரணமாக, ஊர்வன வகையில் பாம்பு, பறப்பன வகையில் மயில், பாலூட்டி- மிருக இன வகையில் சிங்கம், பகுத்தறிவு மிக்க மனித இனம் போன்றவற்றில் சிவம் ஒரேமாதிரியாகவும், இவற்றை செயல்புரியவைக்கும் சக்தி நிலைகள் மிகப்பெரிய அளவில் மாறுபட்டும் காணப் படுகின்றன. இவ்வகை சக்தி நிலைகளை சித்தர்கள் பலவகைக் கூறுகளுக்குள் (ள்ற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங்) வடிவமைத்து, அதன் இயக்கங்களை ஒரு எழுத்து இலக்க வடிவில் மர்மமான ஒரு ரகசிய கட்டமைப்பில் வைத்தனர்.
எட்டுவகை மகா வித்தைகள்!
ஒரு உயிரினத்தின் நிலைத்த இயக்கத்தன்மையை தமிழ் எழுத்துகளின் ஒலி ஓசைகளைக் கொண்டு நிலைமாற்றம், இயக்கமாற்றம் செய்துவிடலாம் என்னும் பேருண்மையை தொடர்ச்சியான பரிசோதனைகளுக்குப்பின் உறுதிசெய்த னர். இவையனைத்தையும் முறைப்படுத்தி 323 வகையான வித்தைகளை இப்புவியுலகில் செய்யலாம் என அறுதியிட் டுக் கூறினர். இவற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையென எடுத்துக்கொள்ளப்படுபவை எட்டுவகையான வித்தை களாகும். இவற்றைத்தான் "அஷ்டமா சித்துக்கள்'’ என பின்னா ளில் அழைத்தனர். இந்த எட்டுவகை வித்தைகளையும் சித்தர்கள் "மகா வித்தைகள்' என்றழைத்தனர். அதற்குக் காரணம் ஒருவன் இந்த எட்டுவகை வித்தைகளுக்கான சூத்திரங்களை மற்றவர்கள்மீது பயன்படுத்துவதன்மூலம் அவர்களின் பிறப்பு விதியையே மாற்றியமைத்திட முடியும். அந்த அளவிற்கு இவை வலிமையானவை.
மேற்கண்ட சூத்திரங்களின்படி உருவாக்கப்படும் பிரயோகங்கள், அவ்விடத்திலுள்ள இயற்கை விதிகளையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவை. இவ்வாறு உருவாக்கிய சூத்திரங்களில் 16 கட்டமைவுகள் இருக்கும். அவற்றில் எட்டுக் கட்டமைவுகள் சிவ தத்துவங்கள்;’ மற்ற எட்டுக் கட்டமைவுகள் ‘சக்தி தத்துவங்கள்’ ஆகும்.
இவற்றில் எட்டு சிவ கட்டமைவுகள் நிலையானவை.
எட்டு சக்திக் கட்டமைவுகள் மாற்றியமைக்கக் கூடியவை. இவ்வாறு, எட்டு சக்திக் கட்டமைவுகளை மாற்றி, மாற்றி யமைத்து ஒருவித செயற்கை மாற்றங்களை உருவாக்கும் முறையை "தாந்த்ரீக யோகம்' என்றனர்.
பாதுகாக்கும் வாழ்வியல் கவசம்!
இந்த முறைகளில் யாரேனும் மருதநாயகத்தின் ஆற்றலைச் சிதைத்துவிடக் கூடாது. மேலும் வாலைப் பருவத்திலிருந்து குருநாதர்களின் நேரடிப் பயிற்சிகளின்மூலம் கிடைக்கப்பெற்ற மகா ஆற்றல்களின் முழுவடிவமாகத் திகழும் பேராண்மையும் ஆளுமையும் கொண்ட மருதநாயகனின் இயல்புகள் பாதுகாக்கப்பட வேண்டிவையாகும். இவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு வாலைகுருநாதன் கோவிலுக்கு அழைத்துவரப்பட்ட இளவலுக்கு, அவனது குருநாதன் ஒரு மிக அரிய வாழ்வியல் கவசத்தைப் பூட்டுவார். அது என்னவெனில், பொன்னால் செய்யப்பட்ட, மார்பிலே படுமாறு உட்புறம் 16 கட்ட மைவுக் கீறல்களுடன் தயாரிக் கப்பட்ட ஒரு மார்புக் கவச மாகும். அந்தக் கட்டமைவுக் கீறல்களுக்கு நடுவே 16 தமிழ் எழுத்துகளும், அவற் றுக்கு இணையாக 16 எண் களும், அவற்றைச் சுற்றி சில குறியீடுகளும் பொறிக்கப் பட்டிருக்கும். இது, மருதத் தலை வனின் பேராற்றல் குறையா வண்ணம் பாதுகாக்கும். பிறரால் ஏவப்படும் மந்திர தந்திரங்கள் அவனை அணு வளவும் வந்தடையாது. v மரணமிலா சிரஞ்சீவி வாழ்வு!
அதேசமயம், மேற்கண்ட முறைகளைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் எதிரி களைச் சமாளித்து வெல்ல முடியும் என்ற ரகசிய போதனை களும் குருநாதரால் உபதேசிக்கப்படும். குரு நாதரால் அணிவிக்கப்பட்ட பொற்கவசத்தில் பொறிக்கப் பட்ட 16 கட்டங்களையுடைய அக்ஷரத்திற்குப் "புவனை அக்ஷரம்' என்று பெயர்.
இதைத்தான் முன்னொரு காலத்தில் சிவபெருமான் மார்க்கண்டேயருக்கு, "என்றும் பதினாறோடு நிலைபெற்று வாழ்வாயாக' என்ற வரத் தைக் கொடுத்ததாகப் புராணங் களில் கூறியுள்ளனர்.
இதில் 16 என்பது மார்க் கண்டேயரின் வயதைக் குறிப்பிடவில்லை; 16 செல்வங்களைக் குறிப்பிட வில்லை என்பது ஆன்மிகத் தில் ஆழ்ந்து தெளிவடைந்தி ருந்த சித்த குருமார்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. 16 என்பது, மார்க்கண்டே யரது படைப்பில் உருவாகியிருந்த 16 கட்டமைவுகளை எவராலும், எந்தச் சக்தியாலும் மாற்றியமைக்க முடியாது’ என்பதே சிவபெருமான் அளித்த வரம்.
ஆகவே, இப்புவி உள்ளவரையிலும் மார்க்கண்டேயரது படைப்பின் நிலைப்பாடு மாறாது. ஆதலினால், அவருக்கு மரண மென்பது என்றும் நேராது. எனவே, இப்புவியாற்றல் உள்ளவரை அவரது ஆன்ம ஆற்றலும் நிலைத்திருக்கும் என்பதாகும். இதனையே ஆன்றோர் ‘மரணமிலா சிரஞ்சீவி வாழ்வு’ எனக் கூறுகின்றனர். அப்படி யென்றால், இப்புவி உள்ளவரை அவருடைய உடம்பு இருக்க வேண்டுமல்லவா? எனில், இப்போது அவர் எங்கே வசிக்கிறார் என அன்பர்கள் கேட்பார்கள். மேற்கண்ட வாழ்வு எப்படி சாத்தியமென்றால், ‘மார்க்கண்டேயர் பலநூறு ஆண்டுகள் உடலோடு வாழ்ந்துவிட்டு, பின் நிர்விகற்ப சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார்’ என்பதே சித்தர்களின் பதிலாக இருக்கிறது.
காட்சியளிக்கலாம்; மறைந்துவிடலாம்!
அது என்ன நிர்விகற்ப சமாதிநிலை என்றால், உடலோடு கூடிய இப்புவியுலக வாழ்வு ஒருநாள் சலித்துவிட்டால்- அதாவது அவர் விரும்பாவிட்டால், அவரது உடலை என்றும் அழியா கற்ப உடம்பாக சித்தர்கள் கூறிய முறையில் மாற்றிவிட்டு, அதனோடு ஓரிடத்தில் என்றும் அழியா சமாதிநிலையில் வைத்துவிட்டு, அவரது 16 அழியா கட்டமைவுடைய ஆன்ம ஆற்றலை இப்பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கச் செய்துவிடுவதாகும். அதன்பிறகு, அவர் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், இப்புவியிருக்கும் காலம்வரையிலும், மனிதக் கண்களுக்குப் புலப்படும் மனிதவடிவமாகத் தோன்றும் ஆற்றலைப் பெறுவார். இதற்குத்தான் நிர்விகற்ப சமாதி நிலையென்று பெயர்.
அவர் எப்போது வேண்டுமானா லும் ஐம்பூதங்களாக ஒன்றுசேர்ந்து பக்தர்களுக்குக் காட்சியளித்துவிட்டு, பிறகு ஐம்பூதங்களையும் பிரித்து பிரபஞ்சத்தில் மறைந்துவிடலாம். ஆனால், அவரது 16 புவனக் கட்டமைவுகளும் மாறாது நிலைத்திருக்கும். இத்தனை உயரிய கட்டமைவு முறைகளை மருதநாயகத்திற்கு குருமார்கள் உருவாக்கித் தருவார்கள். மதுரை மாநகரில் பாண்டிக் கோவிலிலுள்ள பாண்டிய மன்னனின் நிர்விகற்ப சமாதிநிலையை, இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு எனச் சொல்லலாம். இவ்வாறு, குருநாதர்களால் உருவாக்கித் தரப்படும் 16 கட்டமைவுக்கு "புவனை அக்ஷரம்'’ என பெயரிட்டனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைவு கீழ்வருமாறு:
இதன் முதல்படி: துருவ வாய்ப்பாடு:
இந்தப் பதினாறு அட்சரங்களும் 323 வகையான எந்திரங்களில் அவற்றிற்குரிய எண்களைக் கொண்டு அமைக்கப்படும். உதாரணமாக, வசியச்சக்கரம் அல்லது மருத நாயகத்திற்காக அவனது கவசத்திற்குள்ளே பொறிக்கப்படும் அக்ஷரத்தைப் பார்ப்போம்.
மிக முக்கிய ரகசியங்கள் வெளிப்படப் போவது இனிதான்!
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்