சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை, முண்மணி என்று பல பெயர்களாலும் அழைக் கப்படும் ருத்ராட்சமே சிவனின் அருளைப் பெற்றுத்தரவல்லது. சிவனடியார்கள் தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவச் சின்னமே ருத்திராட்சம். சிவன் பல்லாயிர மாண்டுகள் தியானம் செய்தார். தியானத்தினின்று கண் விழித்ததும் சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் ருத்திராட்சமாக ஈன்றெடுத்தாள். ருத்திராட்சம் சுய ஆற்றலை மேம்படுத்தி உள்ளொளியைப் பிரகாசமாக்கும்.

siva

ருத்ராட்சம் அணிவதால் உண்டாகும் பொதுவான பலன்கள்

= தீய சக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

Advertisment

= ஆன்மிக சக்தியை வளர்க்கும்.

= லட்சுமி கடாட்சம் கிட்டும்.

= புத்திர பாக்கியம் உண்டாகும்.

Advertisment

= உடல் பிணிகளைப் போக்கக்கூடியது.

= 108 ருத்திராட்சம் கொண்ட மாலையை அணிந்தால், "அசுவமேத யாகம்' செய்த புண்ணியம் உண்டாகும்.

= பாவங்களிலிருந்து விடுதலை கிட்டும்.

= எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும்.

= பெரியம்மை, வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களை குணப் படுத்த வல்லது.

= மருத்துவ விதி முறைகளுக்கேற்ப கையாளப்பட்டால், இது மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்த புண்களையும்கூட குணப்படுத்தும்.

= இதை அணி வோருக்கு மன அமைதியை யும், உறுதியையும் அளிக்கும்.

முப்பத்தெட்டு வகையான ருத்திராட் சத்தில், பன்னிரண்டு வகை மிக முக்கியம். ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம். இந்தக் கோடுகளுக்குத்தான் முகங்கள் என்று பெயர். ருத்ராட்சத் தின் முகத்தைப் பொருத்தே ஒரு முகம், இருமுகம் என்று வரிசைப்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு முகத்திற்கும் வெவ்வேறு பலன்கள் உள்ளன.

ஏகமுக ருத்ராட்சம் (ஒரு முகம்)

இது மிகவும் அரிதான ஒன்று. பல வருடங்களுக்கு ஒருமுறையே தோன்றும். சூரியனுக்குரியது. பித்ரு தோஷங்களை விலக்கி எல்லா நலன்களையும் நல்ல வாழ்வையும் தரக்கூடியது. ஒரு முக ருத்ராட்சம் நோய்களை சரியாகக் கண்டறிவதற்கும், அறுவை சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் உதவும்.

துவிமுக ருத்ராட்சம் (இரண்டு முகம்)

இது அர்த்தநாரீஸ்வரரின் ரூபம். நவகிரகங்களில் சந்திரனுக்குரியது. இதை அணிவதால் குடும்ப உறவுகளில் நல்ல சுமுகமான போக்கு நிலைக்கும். நம் உடலில் இருக்கும் நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சந்திரபலம் குறைத்தவர்களும், மனோரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களும் இருமுக ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களைப் பெறலாம்.

திரிமுக ருத்ராட்சம் (மூன்று முகம்)

இது அக்னியின் அம்சத்தைப் பெற்றது. நவகோள் களில், செவ்வாய்க் குரியது. மனதில் தைரியத்தையும், துணிவையும் தருவதோடு, உடலியக்கத்தில் துடிப்பான செயல்திறனையும் உண்டாக்கும். விளையாட்டுத்துறை, இராணுவத்துறை, தொழிற்சாலை போன்றவற்றில் உள்ளவர்கள் அணிந்தால் நல்ல பலன்களைத் தரும். தாழ்வு மனப்பான்மை, மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும்.

சதுர்முக ருத்ராட்சம் (நான்கு முகம்)

இது பிரம்மாவின் அம்சத்தைக் கொண்டது. புதனுக்குரியது. இதையணிவதால் சுவாசக் கோளாறுகள் கட்டுப்படும். திக்குவாய் உள்ளவர்களுக்குப் பேச்சுத்திறன் மேம்படும். கணிப்பொறி, மின்னியல் ஆய்வுகள், நிர்வாகப் பொறுப்பு போன்ற வற்றில் உள்ளவர்கள் இதை அணிவ தால் நல்ல பலன்களைப் பெறலாம்.

மாணவர்கள், விஞ்ஞானிகள், எழுத் தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயனை அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்த்த மதிநுட்பம், சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

பஞ்சமுக ருத்ராட்சம் (ஐந்து முகம்)

எளிதில் கிடைக்கும் இதுவே சிவனின் அம்சமாகக் கருதப்படுகிறது. ஐந்துமுக ருத்ராட்சமென்பது காலாக்னியின் வடிவம். எல்லா வகையான வலிமை யையும் வழங்கும். இது குரு பகவானுக் குரியது. கல்வியறிவையும், மனதில் சமநிலையையும் ஏற்படுத்தி, ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களை நீக்கும். இது நம்மைச்சுற்றி ஒரு கவசம் போன்று காப்பாற்றும். இந்த ருத்திராட்ச மாலையை ஜெபம் செய்வதற்குப் பயன்படுத்தலாம். இந்த மாலையை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது.

சண்முக ருத்ராட்சம் (ஆறு முகம்)

இது முருகப்பெருமானின் அம்சம் கொண்டது. சுக்கிரனுக்குரியது. மனதின் வசீகர சக்தியை மேம்படுத்தும். சுயதொழில் செய்வோர் ஜனவசிய சக்தியைப் பெற்று நல்ல பலன்களைப் பெறலாம். இதை யணிந்து ஜெபம் செய்வோருக்கு அறிவு மேம்படுத்தப்பட்டு, திடமான மனம் உண்டாகும்.

சப்தமுக ருத்ராட்சம் (ஏழு முகம்)

இது மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. சனீஸ்வர பகவானுக்குரியது. வறுமை நீங்கவும், ஏழரைச்சனி மற்றும் சனிகிரக தோஷம் போன்றவற்றிலிருந்து விடுபடவும் உதவும். இந்த ருத்ராட்சத்தை உடலில் அணிவதைவிட பூஜையறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது. நோய், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவை விலகும்.

அஷ்டமுக ருத்ராட்சம் (எட்டு முகம்)

இது விநாயகப் பெருமானின் அம்சத்தைக் கொண்டது. ராகுவின் அலைவீச்சைக் கட்டுப்படுத்தக்கூடிய காந்தமண்டல சுழற்சியையுடையது. ருத்ராட்சங்களிலேயே மிகவும் கவனமாகச் சோதனை செய்தபின்பு, பூஜையறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது. பெரும்பாலும் உடலில் அணிவதைத் தவிர்க்கவேண்டும். இந்த ருத்ராட்சம் நூதனமான அனுபவங்களைத் தரக்கூடியது.

siva

நவமுக ருத்ராட்சம் (ஒன்பது முகம்)

அன்னை பராசக்தியின் வடிவமாகப் போற்றப்படும் ருத்ராட்சம் இதுவேயாகும். இது கேதுவுக்குரியது. கேதுவின் கெடு பலன்களான அடிபடுதல், கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள் போன்ற சங்கடங் களைத் தீர்க்கும். இதனை அணிவதால் பொறுமையும், நிதானமும் நிலைநிற்பதோடு மனதில் பயம் விலகிவிடும். இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்குக் கொண்டுசெல்லும்.

தசமுக ருத்ராட்சம் (பத்து முகம்)

இது மகாவிஷ்ணுவின் அம்சம். தசாவதாரங்களையும் குறிப்பதுபோல பத்து முகங்களைக்கொண்டது. சிவன்- விஷ்ணுவின் திருவருளை ஒருங்கே பெற்றுத்தருவதாக நம்பப்படுகிறது. இது மரணபயத்தைப் போக்கும்.

ஏகதச ருத்ராட்சம் (பதினோரு முகம்)

இது ருத்ரனின் அவதாரமான ஆஞ்சனேயரின் அம்சம் கொண்டது. மனதின் ஆற்றலைப் பன்மடங்காக்கக்கூடியது. பிரம்மச்சரியத்தில் நிலைபெற விரும்புவோர் இதனை அணிந்து நற்பயன் பெறலாம்.

துவாதச ருத்ராட்சம் (பன்னிரு முகம்)

இது சூரிய பகவானின் திருவருளைப் பெற்றுத்தரக்கூடியது. அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள், பணியில் உயர்வுபெற விரும்புபவர்கள், இந்த பன்னிரு முக ருத்ராட்சத்தை அணியலாம் ருத்ராட்சம் அணிபவர்கள் மது அருந்துதல், புகைப் பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை விட்டுவிடவேண்டும். ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்புநிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். ஒரு சிவனடியாரிடமிருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

ருத்ராட்சத்தை வாங்கும்போது, அதன் சரியான அளவினைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். நெல்லிக் கனி அளவுள்ள மணி உத்தமமானது. இலந்தைக்கனி அளவுள்ளது மத்திமம். கடலை அளவுடையது அதமம். மிகச்சிறிய ருத்ராட்சங்களை அணியக்கூடாது. ஒரு நல்லநாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி, ஒருவார காலம் பசுநெய் அல்லது நல்லெண்ணெயில் ஊறவைக்கவேண்டும். பின்னர் நீரால் சுத்தப்படுத்தி, ஈரம் காய்ந்த பின்னர் திருநீறில் ஒருநாள் முழுவதும் வைத்திருக்கவேண்டும். அதன்பின் சுத்தமான நீரில் கழுவியபின்பு காய்ச்சாத பசும்பால், தேன், கற்கண்டுப்பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒன்றா கக் கலந்து அபிஷேகம் செய்யவேண்டும். பிறகு சுத்தமாகத் துடைத்துவிட்டு ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அதிகாலையில், சிவன் கோவிலில் பூஜைசெய்து அணியவேண்டும். ருத்ராட்சத்தை தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரத்தை நிச்சயமாகச் சொல்லவேண்டும். மாலைகளில் 27, 54, 108 என்ற கணக்கில் ருத்திராட்சத்தைக் கோர்த்து அணிவதே முறையானது. சர்வ மந்திரங்களும் வசியமாகக்கூடிய சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்ட ருத்ராட்சத்தை அணிந்து பயன்பெறலாம்.