சிறப்புவாய்ந்த அட்சய திரிதியை புண்ணிய தினத்தில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், படி அக்ரஹாரம் என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்த தேவபண்டிதர் பி.வி. வெங்கட சுப்ரமணிய சாஸ்திரிகள், ஸ்ரீ சீதா கல்யாண நிகழ்ச்சியைத் தனது வீட்டு வாசல்முன் பந்தல்போட்டு சுமார் 79 ஆண்டுகளுக்குமுன் தொடங்கினார். அது கிராம மக்களின் ஒத்துழைப்புடனும் ராம பக்தர்களின் பெரு முயற்சியாலும் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிகழ்வில் ஏக தின லட்சார்ச்சனை, வேத பாராயணம் நடக்கும். வெளியூரி-ருந்து பிரபல பாகவதர்கள் வருகைதந்து சிறப்பிப்பர். திவ்யநாம பஜனை, அன்னதானம் போன்றவையும் மிகவும் சிறப்பானதாகும். இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பள்ளி ஆசிரியர் சுப்ரமணியம் என்கிற சுப்பண்ணா, சில ஆண்டுகளுக்குமுன்பு அதே திரிதியைத் திருதியில் ராமரின் திருவடியை அடைந்தார்.

ramar

ராமரைவிட ராமம் பெரியது என்பார்கள். இறைவனின் நாமங்களில் இறைவன் ஒளிந்திருக்கிறான். மயிலாடு துறை- கூத்தனூர் அருகிலுள்ள பேரளம் சிவாலய மூலஸ்தானத்தில், உலகத்திற்கான நாமாத்ய குருவான கார்ஷணாகினி மகரிஷி ஓங்கார வடிவில் உலகிலுள்ள அனைத்து நாமங்களையும் தரிசித்தார்.

அதாவது ஒ-க்கும் ஒளியுண்டு; ஒளிக்கும் ஒ-யுண்டு என்பதை நிரூபித்த மூலமுதல் மெய்ஞ்ஞானத்தலம் பேரளம். சுயம்புநாதர், பவாநியம்பாள் அருளும் இவ்வாலயத்தில் முறத்தில் நெல் வைத்து பெயர் சூட்டுவது விசேஷமானது. எந்த வயதிலும் தன் பெயரை எழுதி அருள்பெறலாம். குழந்தை களுக்கான பெயர்கள். கடைகள், நூல் களின் பெயர்களை இத்தலத்தில் சூட்டுவது மிகவும் புனிதமானது.

எந்த வயதிலும் பேரளம் கோவி-ல் தம் பெயரை எழுதி அஷ்டேத்தர சஹஸ்ர அர்ச்சனைசெய்து வழிபட்டு அட்சர சக்திகளைப் புனரமைத்துக் கொள்ளலாம். இதற்கு "அட்சர மா-கா ரட்சை' என்று பெயர். இங்கு இதைக் குறிப்பிடக் காரணம், இறைநாமத்தைப் பற்றி அறியவே- எப்பொழுதும் இறை சிந்தனையுடன் வாழ்வின் கடமைகளைச் செய்யவேண்டும் என்பதற்காகவே.

வட மதுராவில் ஒருவரையொருவர் சந்திக் கும்போது, "ராதா' என ஆண்- பெண் வித்தியாசமின்றி வணங்குவர். நமது அண்ணல் காந்திகூட ராம நாமம் சொல்-ப் பழகியதாலேயே மரணகாலத் திலும் அது வெளிப்பெற்றது.

இந்தப் பழக்கம் முந்தைய காலங்களில் இருந்ததுபோல மீண்டும் புனரமைக்கப்பெற வேண்டும். தொலை- அலைபேசியில் பேசும்போதுகூட "ஓம், ராம் ராம், சிவசிவ' என விரும்பிய நாமத்தைச் சொல்லலாம்.

தினசரி சொல்ல முடியாதவர்கள் வாரம் ஒருமுறை விஷ்ணு சஹஸ்ர நாமம் அல்லது விரும்பிய தெய்வத்தின் ஆயிரம் நாமங்களை ஓதி கூட்டுப் பிரார்த்தனை செய்யலாம்.

"விதை ஒன்று விதைக்க சுரை ஒன்று முளைக்குமா' என்பார்கள். ஒரு ஆல விதை யைப் பறவை எங்கிருந்தோ கொண்டுவந்த போட, அது ஒரு பெரிய ஆலமரமாகி நிழல் தந்து தனது சந்ததியையும் தழைக்க ச்செய்வதுபோல, பெரியவர் தொடங்கிய சீதாகல்யாண அறச்செயல், இரண்டு தலைமுறைகளைக் கடந்துவிட்டது.

இது ஒரு குடும்பநிகழ்ச்சியாகத் தொடங் கப் பெற்றாலும், நாளடைவில் வளர்ச்சி பெற்று தற்போது அறக்கட்டளையாக விளங்குகிறது. (இந்தக் கட்டுரையாளர் அந்த அறக்கட்டளையின் தலைவர்.) காஞ்சி மாமுனிவர் ஒரு கருத்தினைத் தெரிவிப்பார். அதாவது "நாம் ஒரு புதிய தர்மத்தைச் செய்வதைவிட, ஏற்கெனவே செய்துவருவதை விடாமல் தொடர வேண்டும்' என்பதே. அந்தவகையில் ஒரு கூட்டுமுயற்சியாக இந்த நிகழ்ச்சியைச் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினத் தில் மழை பொழிவதை இன்றளவும் கண்கூடாக் காணலாம்.

இதில் முக்கிய மானது யாதெ னில், எல்லா செயல் களுக்கும் "உலக நன்மைக்காக' என சங்கல்பம் (விருப்பம்) செய்யப் பெறுகிறது. சுயநலக் கலப்பின்றி, பொதுநலம் என்றால் எல்லா விதிமுறைகளும் தளர்த்தப் பெறுகின்றன.

சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிறன்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமப் பாராயண நிகழ்ச்சி விரும்பிய அன்பர்களின் வீட்டில் நடத்தப்பெறுகிறது.

அன்பார்களின் வாழ்வில் பல அற்புதங் கள் நடைபெற்றுவருவதை அனுபவத்தில் உணரலாம். ஒரு செய-ல் பலன் உடனடி யாகக் கிட்டுவதில்லை. ஆனால், நாமத்தின் மகிமையே இந்த வளர்ச்சியைத் தந்துள்ளது.

எல்லாராலும் உடனடியாக ஞானமார்க்கத்தில் ஈடுபடமுடியாது. காயம் என்கிற இந்த உடலால் செய்யப்பெறும் சேவைகள் யாவும் இறைவனைச் சென்றடைந்து, பிறகு பெரியவர்கள் விதைத்த விதை யானது மரமாய், கனியாய் மாறி உரிய பலன் களை சந்ததியினர் அனுபவித்துவருகிறார் கள். விதைத்தவருக்கே அந்தப் பலன் உடன் கிட்டுவதில்லை. ஆனால் அவருடைய தியாகம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

நாமத்தின் மகிமையை மக்கள் உணரவேண்டும். இறை நாமத்தின் மகிமை யாதெனில் அது இந்தப் பரவெளியை சுத்திகரிக்க வல்லதாகும். (நல்ஹஸ்ரீங் டன்ழ்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்). தவறான எண்ணங்கள், கடுஞ்சொற்கள், அவச்சொற்கள், நாவினால் சுட்டுவடு போன்ற மாசுகள் பரவெளியில் உள்ளன. அவற்றை ஓரளவு சுத்திரிகரிக்கச் செய்வது நாமசங்கீர்த்தனம், வீட்டில் நெய்தீபம், ஊதுவத்தி, சாம்பிராணி போன்றவற்றை உபயோகித்தலாகும். ஆண்- பெண் திருமணத்தடை போன்ற வாழ்வின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கவல்லதே ஸ்ரீ ராதா கல்யாணம், ஸ்ரீசீதா கல்யாணம் போன்ற தெய்வத் திருமண நிகழ்ச்சிகள். இவற்றை நிகழ்த்துவதன்மூலம் அதன் பலனில் ஒருபங்கு உலக சமுதாயத்தைச் சென்றடை யும். எனவே, ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவேண்டும்.

அவரவர் முறையில் இறைவழிபாடு செய்தல், தியானம், கூட்டுப் பிரார்த்தனை போன்றவற்றால் இறைவனின் கருணையைப் பெற இயலும். சென்ற ஆண்டைப்போல சென்னைக்கு ஒரு ஆபத்துவர இருப்பதை ஜோதிடர்கள், தனியார் தொலைக்காட்சி மூலம் தெரிவித்தார்கள். சென்னைக்கு ஈசான்ய மூலையில் (வடகிழக்கு) உள்ள ஒரு சித்தராலும், தெற்கிலுள்ள பெரிய மகானா லும் காப்பாற்றப்பெற்றது என்பதை யாரும் அறியவாய்ப்பில்லை.

எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு, இயன்ற அளவில் இறை நாமங்கள் ஓதியும், வழிபட்டும், அன்னதானம் செய்தும் வந்தால், அந்த புண்ணிய சக்தியின் திரட்சியால் "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது' என்பதுபோல ஓரளவு தப்பிக்க வாய்ப்புண்டு.

கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப் பட்ட சீதாகல்யாணம் நிகழ்ச்சி இவ்வாண்டு 14-5-2021 அன்று, படி அக்ரஹாரம் கிராமத்தில் நடைபெறவுள்ளது. இயன்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

குறிப்பு: திருவண்ணாமலை- செங்கம் (காஞ்சி) மார்க்கத்தில் படி அக்ரஹாரம் கிராமம் உள்ளது. நேரடி டவுன் பஸ் ப7, ப22 உள்ளது. பாச்ச-ல் இறங்கவேண்டும். நந்திமங்கலம் மற்றும் பாச்சல் ஆகிய இரு மார்க்கத்திலும் ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.