"தசநாடி தசவாயு சத்த தாது

சார்ந்தமரக் கப்பலது தத்தி விழுமே

இசைவான கப்பலிலினை ஏக வெள்ளத்தில்

எந்நாளும் ஓட்டத்துணிந் தாடாய் பாம்பே.'

Advertisment

(பாம்பாட்டிச் சித்தர்)

தேரையர்: ஒரு பெண் கருத்தரித்த பின், அவள் கர்ப்பத்தில் சிசு வளர்கிறது. ஆணின் ஒரு துளி விந்தும், பெண்ணின் ஒரு சிறிய கருமுட்டையும் மட்டுமே இணைந்து அந்த குழந்தைக்கு வளர்ச்சியும், சரீர அங்கங்களும் உருவாகிறதா அல்லது வேறேதாவது சக்திகள் குழந்தை வளரத் துணைபுரிகின்றனவா?

அகத்தியர்: மகனே தேரையனே, உடலைக் கூறிட்டு ஆய்வுசெய்வதில் வல்லவனாகி வருகிறாய். எப்போதும் உயிரினங்களின் உடலைப்பற்றியே சிந்தித்து, செயல்பட்டுவருகிறாய்.

Advertisment

உன் அறிவாற்றல்- சிந்தித்து செயல் படும் சித்த சக்தி நிலையை உன் கேள்வி கள்மூலம் அறிந்துகொண்டேன். உன் பகுத் தறிவும், மருத்துவ விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளும், உலக மக்களை நிச்சயம் காப்பாற்றும். என் பூரண நல்லாசிகள் உனக்கும், உன் மருத்துவத்திற்கும் என்றும் உண்டு.

இந்த பூமியில் பிறந்து வாழும் உயிரினங்களில் புழு, பூச்சி, பாம்பு, தேள், ஓணான், பறவையினங்கள் மற்றும் நீரில் வாழும் உயிரினங்கள் போன்று இன்னும் சில உயிரினங்கள் முட்டையிட்டு, அதன் மூலம் குஞ்சுகள் உருவாகி தங்கள் இனத்தை விருத்தி செய்கின்றன.

இந்த முட்டைகளின் மேலிருக் கும் ஓடுதான் கர்ப்பப்பை. அதனுள்ளே இருக்கும் வெள்ளைக்கரு, கர்ப்பப்பை யிலுள்ள நீராகும். மஞ்சள்கருவே சிசுவா கும். வெள்ளைக்கரு நீராகவும், அந்த சிசு வளரத் தேவையான உணவினையும் தந்து வளரச் செய்கிறது. இதனால்தான் முட்டை பொரிந்து குஞ்சு வெளிவரும்போது அதில் நீர் இருப்பதில்லை.

அந்த சிசு வளரத் தேவையான வெப்ப (தீ) சக்தியை, தாய்ப்பறவைதான் உடலால் அடைகாத்தல்மூலம் தருகிறது. இதில் முட்டையின் ஓடு மண்சக்தி, வெள்ளைக்கரு நீரின் சக்தி, அடைகாத்தல் வெப்பசக்தி ஆகும். இங்கும் சிந்தித்துப் பாருங்கள். வெளிப்புறத்திலுள்ள ஐம்பூத சக்திகளின் தாக்கமில்லாமலேயே கரு வளர்ந்து, முட்டையிலிலிருந்து குஞ்சுகளே உடைத்துக்கொண்டு வெளியில் வருகின்றன.

மனிதன், விலங்கு, மிருகம் போன்ற உயிரினங்களில் பெண்ணினம், தங்கள் உடலிலினுள்ளேயே முட்டையை உரு வாக்கி, அந்த முட்டைக்குள் ஒரு சிசுவை உருவாக்கி வளர்த்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கின்றன. உண்மை யில் இந்த பூமியில் பிறக்கும் அனைத்து உயிரினங்களும் முட்டையில்தான் உருவாகிப் பிறக்கின்றன.

மந்திர, தந்திர, பிரார்த்தனைச் செயல் களால் ஒரு உயிரினத்தையோ, தாவரத் தையோ பிறப்பிக்க முடியாது. "இவன் புத்திரதோஷம், பித்ரு சாபம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவன்; இவனுக்கு புத்திரபாக்கியம் கிடைக்காது' என பிறர் கூறினாலும், கர்ப்பகாலம், கர்ப்பம் தரித்து குழந்தை உருவாகும் உண்மைகளைப் புரிந்து செயல்பட்டால், தோஷங்களைத் தடுத்து தனக்கு ஒரு வாரிசையும், தன் வம்சவிருத்தியையும் உண்டாக்கிக் கொள்வான். இயற்கையின் செயலை மாற்றியமைக்க எந்த சக்தி யாலும் முடியாது.

தேரையனே, உன் கேள்விக்கு பதில் கூறுகிறேன். கருவில் வளரும் குழந்தைக்கு சரீரவளர்ச்சியும், உடலுறுப்புகளும் எந்த சக்தி யால் உருவாகின்றன என்பதைக் கூறுகிறேன்.

"ஐம்பூதமும் பத்தாக்கி

யவை பாதிநன் நான்காக்கி

நைந்துதன் பாதிவிட்டு

நாலோடு நாலும் கூட்ட

வந்தன தூல பூதமகாபூத

மிவற்றி னின்று

தந்தன தூலதேக தனுவுண்ட

புவன போகம்.'

தேரைய சித்தரே, மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகளும் தாயின் மூச்சுக்காற்றுமூலம் செயல்பட்டு, கர்ப்பத் திலுள்ள சிசுவின் உடலையும், உடலுறுப்பு களையும், உருவாக்கி, அந்த உறுப்புகளால் உடல் இயங்கவும், அந்த இயக்கத்தால் நன்மை- தீமைகளைத் தானே உருவாக்கிக்கொள்ளவும், தனது முற்பிறவிக் கர்மவினைகளை அனுபவிக்க வும், கர்மவினைகளால் உண்டான பாவ- சாபங்களை நிவர்த்திசெய்து கொள்ளவும் என- ஒரு சீவனின் உடல், உயிர், ஆன்மா மூன்றின் செயல்நிலைக்குக் காரணகர்த்தா வாக உள்ளன.

ஐம்பூத சக்திகள் ஒவ்வொன்றும் இருவிதப் பிரிவாகப் பிரிந்து உடலில் செயல் படும். இதில் ஒருபாகம் தனித்து செயல்படும். இதனைத் தனித்த (வியஷ்டி) நிலை- அதாவது தனியாக உள்ள ஒரு மரம் போன்ற நிலை என்று கூறலாம்.

மற்றொரு பகுதியான இரண்டாவது பாகம், ஒன்றுடன் ஒன்றுசேர்ந்து ஒரு கூட்டமாக (சமஷ்டி) செயல்படுவது. இதனை மரங்கள் நிறைந்த ஒரு தோப்பெனக் கூறலாம்.

ஐந்துவிதமான பூதசக்திகளும் தனித்தும், கூட்டாகவும் என இருவித நிலையில் சீவனின் உடல், உயிர், ஆன்மாவை உருவாக்கிச் செயல் பட்டு, சீவன்களை இயக்கி வாழச்செய்கின்றன.

ss

முதலிலில் மண் (உடல்) சக்தியைப் பற்றிக் கூறுகிறேன். மண் சக்தியை இரண்டு பாகமாகச் செய்தால், அதன் தனித்த பாகம் (சமஷ்டி) உடலில் மலத்தை வெளியேற்றும் வேலையை மட்டும் செய்யும். ஆசனவாய் (குதம்) என்ற உறுப்பை உருவாக்கியது.

மண்ணின் மற்றொரு பகுதியான கூட்டு பாகம் (வியஷ்டி) நான்கு பிரிவாகப் பிரிந்து, நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய சக்திகளுடன் இணைந்து உடலில் மற்ற உறுப்புகளை உருவாக்குகிறது.

மண்ணின் கூட்டு பாகமான நான்கில் முதல் பாகமானது ஆகாய சக்தியுடன் சேர்ந்து, பேசுவதற்கு வாய், கேட்பதற்குக் காது, சுவாசிக்க மூக்கு ஆகியவற்றை உருவாக்கு கிறது.

இரண்டாவது பாகமான மண் சக்தியானது காற்று சக்தியுடன் இணைந்து, கொடுக்கல்- வாங்கல், சாப்பிடுதல், உழைத்தல் என்னும் செயல்களைச் செய்யும் கைகளை உருவாக்குகிறது.

மூன்றாவது பாகமான மண் சக்தியானது, தீயுடன் சேர்ந்து நடக்க, நிற்க, ஓட, உட்கார, உடம்பைத் தாங்கி நிற்கும் கால்கள், பாதங்களை உண்டாக்குகிறது.

மண்ணின் நான்காவது பாகமானது நீருடன் இணைந்து, சீவன்களின் சுக்கிலம், சுரோணிதம் மற்றும் சிறுநீரை வெளியேற்றும் ஆண், பெண் மர்ம உறுப்புகளை உருவாக்கு கிறது.

மண்ணில் விளைந்த தாவரங்கள் உருவாக்கிய உணவினை உண்டு, அதன் சக்தியால் கை, கால்கள், மற்ற உடலுறுப்புகள் நீண்டு, இந்த சரீரம் பாலகன், சிறுவன், இளைஞன் என வளர்ச்சியையும்; பின்வயதில் நரை, திரை என முதிர்ச்சியையும் அடைந்து, சரீரம் நசிந்து, மரணமடைந்து அழிகிறது.

மண்ணில் விளைந்தவற்றை உண்டு வளர்ந்து உருவான இந்த உடல், மரணமடைந்த வுடன் மண்ணுடன் சேர்ந்து மண்ணுக்கு உணவாகிறது. சிலர் இறந்தபின் உடலைத் தீயிட்டு எரித்துவிடுவார்கள். அதனால், உடல் தீயில் அழிந்தது எனக்கூறுவார்கள். தீயினால் சரீரத்தை அழிக்கமுடியாது. சரீரம் எரிந்தபின் அது சாம்பல் நிலையை அடைந்துவிடும். இந்த சாம்பல் மண்ணின் அம்சமாகும். இதனால்தான் சரீரத்தை ஐம்பூதங்களில் மண்ணின் அம்சம் என்று கூறுகிறார்கள்.

சுந்தரானந்தர்: ஆசானே, தமிழ்ச் சபையை முடிக்கும் முன்பு, நீண்டநாட்களாக எனது மனதிலுள்ள ஒரு சந்தேகத்தைத் தெளிவுபடுத்திவிடுங்கள்.

அகத்தியர்: சுந்தரா, எதைப் பற்றிய சந்தேகம்? அதுவும் நீண்டநாட்களாக கேட்காமல் இருக்கக் காரணம் என்னவோ?

சுந்தரானந்தர்: தமிழ்மொழியை உருவாக்கி, அதற்கு எழுத்துகளைத் தந்து, இலக்கண முறையை வகுத்துத் தந்தவர் நீங்கள்தான். அதேபோன்று தமிழ் மொழியின் உச்சரிப்பு முறையை உருவாக்கித் தந்தவரும் நீங்கள்தான். உச்சரிப்பையும், தமிழ்பேசும் ஒலிலி முறையையும் எப்படி உருவாக்கினீர்கள் என்பதைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ்மொழியின் ஓசை நயத்தை உருவாக்கிய மூல ரகசியத்தைக் கூறுங்கள்.

அகத்தியர்: சுந்தரா, இந்த பூமியில் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களும் தன் உணர்வுகளை, எண்ணங்களை ஒவ்வொரு விதமான உச்சரிப்புடன் பேசியும், எழுதியும் வருகின்றனர். சில பகுதிகளில் வாழும் மக்களின் பேச்சிற்கு எழுத்து வடிவம் கிடையாது. ஆனால் என் தாய் மொழியாம் தமிழ்மொழிக்கு மட்டுமே உயிர் ரூபமான எழுத்து, உடல் ரூபமான எழுத்து, உயிரும் உடலும் (மெய்) இணைந்த உயிர்மெய் எழுத்து, உச்சரிப்பு, ஆன்மாவின் ஒலிலிலி, ஓசை நயம், இதற்கு இலக்கண வரைமுறை என அனைத்தையும் தமிழ் மக்களுக்கு உருவாக்கித் தந்தேன்.

தமிழ்மொழியின் ஓசைமுறை இந்த உலகில் வாழும் உயிரினங்களின் பேச்சு சப்தத்தால் உருவானது. காகம் என்ற பறவை யின் ஒலிமூலம் "கா' என்ற எழுத்தையும், அந்த காகத்தின் சப்தத்தால் உண்டாக்கும் ஓசையை யும், கிளி என்ற பறவையின் சப்தத்தின்மூலம் "கீ' என்ற எழுத்தையும், அதன் ஒலிலியையும் உச்சரிப்பாக்கினேன்.

இதுபோன்று மிருகம், பறவையென அனைத்து உயிரினங்களின் ஓசையைக் கொண்டே தமிழ் எழுத்துகளையும், மொழி உச்சரிப்பையும் உருவாக்கினேன். பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களின் சப்தத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரே மொழி தமிழ்மொழி. தமிழ் மொழியின் ஓசை, ஒலிலி நயத்தை ஆராய்ந்து பார். விலங்கு, பறவை, பாம்பு, பல்லி என அனைத்து உயிரினங்களின் பேச்சொலிலியின் தன்மை இருக்கும்.

தமிழ் மொழியின் ஓசை உயிரினங்களின் ஆன்மாவின் ஓசை. பறவைகளும், மிருகங் களும் எனக்கு குருவாக இருந்து இதனை போதித்தன.

சுந்தரானந்தர்: ஆசானே, விளக்கமறிந்தேன். தமிழ் மொழியின் சிறப்பையறிந்தேன். சந்தேகம் தெளிந்தேன்.

சித்தர் ஞானம்

நம் பிறப்பு நமது பெற்றோர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொருவரின் மரணமும் அவரவராலேயே நிர்ணயிக்கப் படுகிறது.

இந்த பூமியில் நீண்டநாள் வாழவிரும்பும் ஒவ்வொருவரும், தன் நடைமுறை வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டிய வழிமுறைகளை சித்தர்கள் மறைக்காமல் கூறியுள்ளனர்.

நீண்ட ஆயுளுடன் வாழவிரும்புவர்கள் முதலில் நம்பிக்கை சார்ந்த வாழ்வுமுறையை விட்டு விலகவேண்டும். நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு வாழ்பவர்கள் எதனையும் அடையமுடியாது; சாதிக்கமுடியாது. "நம்பிக்கைதான் வாழ்க்கை' என்று கூறுபவர்களைவிட்டு விலகி வாழவேண்டும். "நம்பு' என்று கூறுபவரை முதலில் நம்பக்கூடாது.

நம்பிக்கையில் வாழ்பவர்கள் விதிவசப் பட்ட மாந்தர்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் உண்டாகும் சிரமங்களுக்கு விதியே காரண மென்று கூறிக்கொள்வார்கள். இவர்களுக்கு சுயஅறிவு வேலை செய்யாது. விதியைக் காரணம் கூறி வாழ்பவர்கள் எதையாவது ஒன்றை அல்லது ஒரு மனிதனை நம்பிக் கொண்டு வாழ்பவர்கள். இவர் களால் வாழ்வில் உயர்வடைய முடியாது.

அகத்தியர் முதலான பதினெட்டுச் சித்தர்கள் கூறியதை மட்டும் நடைமுறைச் செயல்களில் கடைப்பிடித்து வாழ்ந்தால் மட்டுமே விதியைத் தடுத்து வேண்டுவதை அடைய முடியும்.

ஒரு மனிதன் நீண்ட ஆயுளு டன் வாழவும், அனைத்து செல்வங்களையும் பெற்று உயர்வான வாழ்வை அடைய வும் முதலில் தன் உடல், உயிர், ஆன்மா இம்மூன்றையும் நெறிப்படுத்தி உயர்வானதாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

"நில்லென்ற மறையோர்கள் பாசை யாலே

நீடுலகம் தன்னுள்ளே நாலு வேதம்

வல்லனயாய்ச் சாத்திரங்க ளிருமூன் றாக

வயிறுபிழைக்க புராணங்கள் பதினெட் டாகக்

கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்

இட்டுக்கட்டி னாரவர்கள் பாசை யாலே

தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி

தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத் தானே!'

(வால்மீகி சித்தர்)

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)