"எல்லாமறிந் தவரென்று சொல்லி- இந்த

பூமியிலே முழு ஞானியென்று

உல்லாச மாகவே வயிறு பிழைக்க- அவர்

ஒடித்திரி கின்றாரே ஞானப் பெண்ணே!'

Advertisment

அகத்தியர்: ஞாத்திக அரசன் ஆட்சி நிர்வாகத்தில் நியாய மன்றங்கள் தலைசிறந்த தாக இருக்கும். அனைத்து மக்களுக்கும் சமமான நியாயம் பாகுபாடியின்றி வழங்கப் படும். தீவிர விசாரணைமூலம் குற்றச்செயல் களுக்கு மூலகாரணம் அறிந்து நியாயம் வழங் கப்படும். பாமரன்முதல் பாராளும் மன்னன் வரை அனைவருக்கும் நியாயம் ஒன்றுதான். நாடு முழுவதும் இவன் பார்வை இருக்கும்.

நாட்டு மக்களின் குறைகள், தேவைகள் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் தீர்க்கப் படும். அதனால் மக்கள் அமைதியாக வாழ்வார்கள். குற்றங்கள் இராது. குற்றவாளிகளும் இருக்கமாட்டார்கள். ஒரு நாட்டு அரசனுக்கு மக்களிடையே எதிர்ப்பு தோன்றுவது, அரசன், ஆட்சி நிர்வாகிகள், அதிகாரிகளின் தவறான செயலாலும், அலட்சியமான நிலையாலும் தான் என்ற உண்மை தெரிந்தவனாதலால், அரசு அதிகாரிகளைத்தான் அடக்கி தண்டிப் பான். மக்களுக்கு பாதுகாப்பாளனாக இருப் பான்.

ஒரு நாட்டில் அரசனே திருடனாக இருந் தால், அரசு பிரதிநிதிகளும், நிர்வாகிகளும் திருடர்களாகத்தான் இருப்பார்கள். அரசன் நேர்மையானவனாக இருந்தால், அரசு பிரதி நிதிகளும் நிர்வாகிகளும் நல்லவர்களாக இருப்பார்கள் என்பதே நிதர்சனம்.

Advertisment

ஞாத்திக அரசன் மக்கள் தேவைகளை அவர் கள் கேட்கும் முன்பே செய்துவிடுவான். சொல்வதைச் செய்பவன் மன்னன் அல்ல. மக்களின் குறைகளைத் தானே அறிந்து, சொல் லாமல் செய்வதே அரசனின் கடமையாகும். இவன் எண்ணம், சிந்தனைகள் எப்போதும் தன் நாட்டின் பாலும், மக்களின் நல்வாழ்வு, நலன் பற்றியதாகவுமே இருக்கும். இவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அடுத்தடுத்து வரும் தலைமுறை மக்களுக்கு நன்மை தருவதாக இருக்கும். இந்த பூமி இருக்கும்வரை இவன் செயல்கள் மக்களால் புகழ்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.

சுயஅறிவு, ஞானம், நிர்வாகத்திறமை உள்ளவனாதலால் அரசகுரு, ஆச்சாரியார், ஆலோசகர் என யாரையும் தன் அருகில் வைத்துக்கொள்ள மாட்டான். ஆட்சி, நிர்வாகம் என எதிலும், அமைச்சர்கள், அரசு நிர்வாகிகள், ஆலோசகர்களிடம் எந்த ஆலோ சனையும் கேட்கமாட்டான். அரசன் கூறுவதை மட்டுமே அவர்கள் செய்ய வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பான்.

அகத்தியனால் உருவாக்கப்பட்ட தமிழ்மொழி, இனம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம், ஐம்பெரு வழிபாடு அழியாமல் பாதுகாப்பான். அகத்தியன் வகுத்தளித்த சித்தர்களின் ஞானசித்தாந்தமே நாட்டின் ஆட்சி நிர்வாக முறையாக இருக்கும். அகத் தியனாகிய யான் இந்த ஞாத்திக அரசன் உடனிருந்து காப்பாற்றுவேன். சித்தர்களின் எண்ணமே இவனது ஆன்மாவின் மூலம் செயல்களாக வெளிப்பட்டு நடைபெறும். ஞாத்திக அரசனின் சித்தர்கள் ஆட்சிமுறையைப் புரிந்துகொண்டாயா புலத்தியனே? புலத்தியர்: ஆசானே, தமிழ் மண்ணில், தென்பாண்டி நாட்டில் தமிழ்ச் சித்தர்கள் ஆட்சிமுறை பற்றி அறிந்தோம். இந்த ஞாத்திக அரசனை அடையாளம் கண்டறிவது எப்படி?

அகத்தியர்: இவன் பொன்னை நாடான்; புகழை நாடான்; தன்னை நாடான்; தாய்- தந்தை, தாரத்தை நாடான்; பதவியை நாடான்;

சாதியை நாடான்; சனாதனம் நாடான்; தந்திரம் நாடான்; மதியை அழிக்கும் மந்திரம் நாடான், பதவி, புகழ் வெற்றியை இவன் தேடிச்செல்ல வேண்டியதில்லை. அகத்தியன் என் அருளே இவனைத் தேடி அனைத்தை யும் வரச்செய்யும். இவன் எதையும் அனுபவிக் கப் பிறந்த அரசனாக இருக்கமாட்டான். நன்மைகளை எல்லாரையும் அனுபவிக்கச் செய்யப் பிறந்தவன். இவன் கோடி அரசர் களில் ஒருவனாக இருப்பான். இதுபோன்ற ஞாத்திக, ஞானமுள்ள அரசன் பாண்டி மண்டலத்தில், சித்தர்கள் பூமியில் ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பிறப்பான்.

புலத்தியர்: ஆசானே, ஞான அரசனைப் பற்றியும் அவன் குணம், செயல்களையும் விளக்கமாக அறிந்தோம். இனி சாதி, மதம் என மனிதர்களில் பல பிரிவுகளைக் கூறுகிறார்களே... ஒரு ஆன்மாவின் நிலை இதுபோன்ற சாதி, மதம் என்ற பிறப்பின் நிலையில் வேறுபட்டு அமையுமா? இதில் அகத்தியர் முதலான சித்தர்களின் சித்தாந்தம் கூறும் உண்மைகளைப் பற்றிக் கூறுங்கள்.

அகத்தியர்: ஞானமில்லாத கூட்டத்தா ரால் உருவாக்கப்படும்- இயற்கையில் இல்லாத மதம், சாதி, இனம் பற்றி நாளை தமிழ்ச்சபையில் விளக்கம் கூறுகிறேன்.

அகத்தியர் கூறியது போன்று ஞானமுள்ள அரசன் ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறைதான் தோன்றுவான் என்ற கூற்று உண்மையென தமிழ் மண்ணின் கடந்தகால வரலாறுகள், நிகழ்வுகள் மூலம் நம்மால் அறியமுடிகிறது. அதேபோல் ஆன்ம நேயம் கொணட ஆன்மிக அரசனையும், அடுத்த நாட்டு மக்களைக் கொன்று கொள்ளை யடித்து கோவில் கட்டிய ஆஸ்திக அரசனை யும் சரித்திர நிகழ்வுகள்மூலம் அறியமுடிகிறது.

இந்த மூன்றுநிலை அரசர்களில் ஒருசிலரைப் பற்றி அறிவோம்.

sid

காவேரி நதியின் இருபுறமும் கரை அமைத்து, நீர்வள அறிவினால் கல்லணை என்ற நீர் தடுப்பினைக் கட்டி, நீரைத்தேக்கி, அதனை ஆறுகளை வெட்டி நீரை முறையாக ஓடச்செய்து, சோழநாட்டுப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உண்டாக்கி வைத்து நாட்டை வளம்பெறச் செய்தவன் கரிகால் பெருவளத்தான் என்று மக்களால் அழைக்கப் பட்ட சோழ மன்னன் கரிகாலன் ஆன்மிக அரசனாவான்.

கரிகால்சோழன் உருவாக்கி வைத்த சோழ மண்ணில், பல நூற்றாண்டுகளுக்குப்பின் ஆட்சிசெய்த பிற்காலச் சோழ அரசர்களான விஜயாலயன், பராந்தகன், செங்கட்சோழன், கண்டராதித்தன், சுந்தரசோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்கள் ஆட்சியில் சோழ நாடெங்கும் கோவில்களைக் கட்டினர். இவர்கள் ஆட்சி முதல்தான் தமிழர்களின் சைவ நாகரிகம் அழிந்து வடபுலத்து ஆரிய நாகரிகம் தமிழ் மண்ணில் வேரூன்றத் தொடங்கியது. இவர்கள் கட்டிய கோவில்களால் தமிழ் மக்களுக்கு பெரிதாக எந்த நன்மையும் இல்லை. வடபுலத்து வேதமுறை மக்கள் வளம்பெறத் தொடங்கினார்கள். சித்தர்களின் சித்தாந்தம், தமிழர் வாழ்வியல், வழிபாட்டுமுறைகளை மறையச்செய்த இவர்கள் ஆஸ்திக அரசர்கள்.

அரசர்கள் ஆட்சி முடிந்து மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போது, அனைத்து ஞானமும் பெற்று ஆட்சி செய்தவர் காமராஜர். இவர் ஆட்சிக்காலத்தில் கல்வி நிலையங்கள், புதிய நீர் தடுப்பணைகள், கால்வாய்கள், தொழிற்சாலைகள் என மக்களுக்குத் தேவையான, தேவைப்பட்ட வசதிகள் அனைத்தையும் மக்கள் நலம்பெறச் செய்துதந்தார்.

காமராஜர் ஆட்சி பகுத்தறிவு ஞானம் பெற்ற ஞாத்திக அரசன் ஆட்சி. ஆன்மிக அரசன் கரிகாலன் காலத்திற்குப்பிறகு, ஆயிரம் ஆண்டுகள் சென்ற பின்பு ஆஸ்திக அரசன் ராஜராஜ சோழன் ஆட்சி. அவனது ஆட்சிக்குப்பிறகு ஆயிரம் ஆண்டுகள் சென்ற பிறகு ஞாத்திக அரசர் காமராஜர் ஆட்சி. சித்தர்கள் கூற்று சரியாகவே நடைபெற்று வருவதை நடைமுறையில் காணமுடிகிறது.

வாசி யோகம்

கடந்த இதழ்களில் கூறியதுபோல, ஒருவர் தன் நிழல் உருவத்தை பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து பார்த்துவந்தால், அந்த நிழல் அவருடன் பேசி, வாழ்வில் வெற்றிகளைப்பெற வழிகாட்டும். அஷ்டமா சக்திகளை அடைந்து, சித்தர் நிலை அடைந்து, பிறப்பு- இறப்பு அறுத்து, மரணமில்லாத பெருவாழ்வு அடையலாம் என்று அறிந்தோம்.

ஒருவர் தன் நிழலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தால், அந்த நிழல் ஒரு மனிதனைப்போல் உருவத்துடன் அவருடனேயே உலாவத் தொடங்கும். அந்த உருவம் அவர் படுத்தால் அதுவும் படுக்கும். அவர் எழுந்தால் அதுவும் எழுந்துவிடும். அவர் என்னவெல்லாம் செய்கிறாரோ அனைத்தையும் அதுவும் செய்யும். அவர் வாழ்வில் வரும் நன்மை- தீமைகளை அவை வருவதற்குமுன்பே அவருக்குக்கூறி, நன்மைகளை அடையும் வழிகளையும், தீமைகளைத் தடுத்து அழித்துவிடத்தக்க சரியான யுக்திகளையும் கூறி வாழ்வில் உயர்த்தி வைக்கும்.

ஒருவரின் நிழல் உருவம், அவருடன் நடமாடும் நிலைபெற்ற காலம்முதல் அதன் உதவியால் நிகழ்காலம், எதிர்காலம், கடந்த காலம் என மூன்று காலங்களையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் உண்டாகிவிடும். உள்ளிருக்கும் சித்த சக்தியே இவ்வாறு நிழலாக வெளியில் வந்து, உருவமாகி, உறவாகி, உடனிருந்து காப்பாற்றும். இது சித்தர்கள் வாக்காகும்.

மரணமறிய...

ஆகாயத்தில் மேகங்கள் மறைக் காமல் சூரியன் நன்கு பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது, வீட்டின் தாழ்வார நிழல் அல்லது மரத்தின் நிழல் என ஏதாவது ஒரு நிழலில் நின்றுகொண்டு வாய் நிறைய நீர் நிரப்பி, அந்த நிழலின் முன்பாக துகள்கள் பறப்பதுபோல வாயிலிருக்கும் நீரை ஒரே சமயத்தில் மொத்தமாக உமிழ்ந்துவிட்டு அந்த நீரைப் பார்த்தால், துகள் போன்று பறக்கும் அந்த நீரில் வானவில்போல ஏழு வண்ணங்களும் தோன்றும். அவ்வாறு தோன்றினால் அவருக்கு மரணம் அருகில் இல்லை. நிறம் தோன்றவில்லையேல் அவருக்கு கண்டம், மரண காலம் அருகில் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு துகள் பறக்க நீரை உமிழும் போது, அந்த நீர்த்துளிகள் நிறம் மாறி யிருந்தாலோ அல்லது அதில் ஒரு பெண்ணுரு வம் தோன்றினாலோ அதிகபட்சம் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் மரணம், கண்டம் உண்டாகி அனுபவிக்கச் செய்து விடும் என்பது சித்தர்கள் வாக்கு.

அங்கப் பழுது கூறும் மரண நிலை ஒருவரின் கை, கால், நெற்றி, கன்னம், இடுப்பு போன்ற பகுதிகள் தொடர்ந்து துடித்துக்கொண்டிருந்தால் அவருக்கு மரண காலம் சமீபித்துவிட்டது.

கை மட்டும் துடித்தால் ஒரு வருடத்தில் மரணம்.

கால் மட்டும் துடித்தால் ஆறு மாத காலம்; நெற்றி மட்டும் துடித்தால் மூன்று மாத காலம்; கன்னம் மட்டும் துடித்தால் பத்து நாள் என்று அறிந்துகொள்ள வேண்டும்.

இதுவுமில்லாமல், நன்கு காது கேட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு எந்தவிதமான நிகழ்வுமில்லாமல்- நோய், விபத்து தாக்கம் இல்லாமல் திடீரென்று முழுவதும் கேட்குந்திறன் இல்லாமல்போனால் ஏழு நாளில் மரணம். உடன் பார்க்கும் திறன் இழந்துவிட்டால் ஐந்து நாளில் மரணம். வாய் குழைந்து, பேச்சு நின்றுபோனால் இரண்டு நாளில் மரணம் சம்பவிக்கலாம். வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகளுக்கு இந்தப் பலன் பொருந்தாது. திடீரென்று இந்த சரீர உறுப்புகளில் இதுபோன்று நிகழ்ந்தால் மட்டுமே இந்தப் பலன் உண்டாகும்.

இதுபோன்ற சமயங்களில் மூச்சுக் காற்றின் ஓட்டத்தை கவனிக்க வேண்டும். தொடர்ந்து வலதுமூக்குத் துவாரத்தில் மட்டும் காற்று ஓடிக்கொண்டிருந்தாலும் அல்லது இடதுமூக்குத் துவாரத்தில் மட்டும் சுவாசம் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் இதுபோன்று நிகழ்வுகள் உண்டாகும். இதனை நன்கு அறிந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வலது, இடது மூக்குத் துவாரங்களில் சுவாசம் இயல்பாக நடைபெறும்வண்ணம் கவனமாக செயல் பட்டு தீமைகளைத் தடுத்துக்கொள்ள வேண்டும்.

பாரே புலனேது அனலுமேது

பாங்கான காலேது வெளியுமாகும்

நாரேது பூவேது வாச மேது

நல்ல புட்பந் தானேது பூசையேது

ஊரேது பேரேது சினமுமேது

ஒகோகோ அதிசயந்தா னென்ன சொல்வேன்

ஆறேது குளமேது கோயிலேது

ஆதிவஸ்தை யறிவதனால றியலாமே.

(சித்தர் சித்தாந்தம்)

சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!