பாவ- சாப- தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
16
"அங்கையிற் கண்ணாடிபோல் ஆதிவத்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச்
சங்கையறச் சந்ததமும்தாழப் பணிந்தே
தமனியப்பட மெடுத்தாடாய் பாம்பே.'
(குரு வணக்கம்)
மனிதர்களின் வாழ்வில் செல்வத்தையும், நிம்மதியையும், பாவ- சாப பாதிப்பில்லாத வாழ்க்கையையும் தரும் தெய்வம் அவரவரின் ஆன்மாதான் என்கிறது தமிழ் சைவ சித்தாந்தம். மனிதன் வாழும்போது அவன் ஆன்மா சாந்தியும் நிம்மதியும் அடைந்தால், தடைகள் இல்லாத மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் அடைவான். ஒருவர் இறந்த பின்பு "அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்' என்றுதான் கூறுவார்களே தவிர, "உடல் சாந்தியடையட்டும்' என்று கூறமாட்டார்கள். மனிதனின் உடல் என்பது வெளித்தோற்றம்; ஆனால் அவன் ஆன்மா அவனுள் மறைந் திருக்கும் தெய்வநிலையாகும்.
"உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்v கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.'
(திருமூலர்)
இந்தப் பாடலில் "கோவில்' என்பது வேறு; "ஆலயம்' என்பது வேறு. இப்போது நாம் கூறுவதுபோல இரண் டும் ஒன்றல்ல என்றும்; உண்மையான தெய்வம் எது? ஆன்மாவைச் செயல்பட வைக்கும் சக்திகள் எது என்றும் தெளிவாகக் கூறுகின்றார்.
"கோ' என்றால் அரசன், தலைவன் என்று பொருளாகும். பொதுவாக சிவாலயங்களில் "சிவன்' என்ற தெய்வமே தலைமையான தெய்வம். பெருமாள் கோவிலில் பெருமாள் தான் மூலதெய்வம். ஒரு ஆலயத்தில் தலைமையான தெய்வம் இருக்கும் "கர்ப்பக்கிரகம், சந்நிதி' என்று கூறப்படும் இடத்தையே கோவில் என்று கூறுகிறார். அதாவது சிவாலயங்களில் சிவலிங்கம் இருக்கும் இடமே கோவிலாகும். முருகன் ஆலயங்களில் முருகன் சிலையுள்ள இடமே கோவிலாகும். கொடிமரம், பலிபீடம், நவகிரகங்கள், மடப்பள்ளி, மற்ற பரிவார தேவதைகள், தீர்த்தக்குளம் என அனைத்தும் சேர்ந்து அமைந்திருக்கும் முழுமையான பகுதியே ஆலயம் என்று கூறுகிறார் சித்தர் பெருமான்.
ஒரு மனிதனுக்கு அவன் ஆன்மாவே தலைமையான தெய
பாவ- சாப- தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
16
"அங்கையிற் கண்ணாடிபோல் ஆதிவத்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச்
சங்கையறச் சந்ததமும்தாழப் பணிந்தே
தமனியப்பட மெடுத்தாடாய் பாம்பே.'
(குரு வணக்கம்)
மனிதர்களின் வாழ்வில் செல்வத்தையும், நிம்மதியையும், பாவ- சாப பாதிப்பில்லாத வாழ்க்கையையும் தரும் தெய்வம் அவரவரின் ஆன்மாதான் என்கிறது தமிழ் சைவ சித்தாந்தம். மனிதன் வாழும்போது அவன் ஆன்மா சாந்தியும் நிம்மதியும் அடைந்தால், தடைகள் இல்லாத மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் அடைவான். ஒருவர் இறந்த பின்பு "அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்' என்றுதான் கூறுவார்களே தவிர, "உடல் சாந்தியடையட்டும்' என்று கூறமாட்டார்கள். மனிதனின் உடல் என்பது வெளித்தோற்றம்; ஆனால் அவன் ஆன்மா அவனுள் மறைந் திருக்கும் தெய்வநிலையாகும்.
"உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்v கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.'
(திருமூலர்)
இந்தப் பாடலில் "கோவில்' என்பது வேறு; "ஆலயம்' என்பது வேறு. இப்போது நாம் கூறுவதுபோல இரண் டும் ஒன்றல்ல என்றும்; உண்மையான தெய்வம் எது? ஆன்மாவைச் செயல்பட வைக்கும் சக்திகள் எது என்றும் தெளிவாகக் கூறுகின்றார்.
"கோ' என்றால் அரசன், தலைவன் என்று பொருளாகும். பொதுவாக சிவாலயங்களில் "சிவன்' என்ற தெய்வமே தலைமையான தெய்வம். பெருமாள் கோவிலில் பெருமாள் தான் மூலதெய்வம். ஒரு ஆலயத்தில் தலைமையான தெய்வம் இருக்கும் "கர்ப்பக்கிரகம், சந்நிதி' என்று கூறப்படும் இடத்தையே கோவில் என்று கூறுகிறார். அதாவது சிவாலயங்களில் சிவலிங்கம் இருக்கும் இடமே கோவிலாகும். முருகன் ஆலயங்களில் முருகன் சிலையுள்ள இடமே கோவிலாகும். கொடிமரம், பலிபீடம், நவகிரகங்கள், மடப்பள்ளி, மற்ற பரிவார தேவதைகள், தீர்த்தக்குளம் என அனைத்தும் சேர்ந்து அமைந்திருக்கும் முழுமையான பகுதியே ஆலயம் என்று கூறுகிறார் சித்தர் பெருமான்.
ஒரு மனிதனுக்கு அவன் ஆன்மாவே தலைமையான தெய்வம். அந்த ஆன்மா இருக்கும் அவன் உள்ளம், மனமே அவனுக்கு கோவில் என்றும், மனிதனின் கைகள், கால்கள், கண், மூக்கு, காது, வாய் வயிறு என அனைத்து உறுப்புகளும் இணைந்திருக்கும் அவன் முழுமையான உடம்புதான் ஆலயம் என்றும் அகத்தியர் முதலான சித்தர்களும் சைவ சித்தாந்தமும் கூறுகிறது.
ஆன்மா பிறக்கும்போது உயர்வு, தாழ்வு, பிரிவினை இல்லாமல் அனைத்து உயிர்களிலும் ஒன்றுபோலவே உள்ளது. ஒரு ஆன்மாவிடம் ஆசையைத் தூண்டி, மனதில் எண்ணங்களை செயல்பட வைப்பது மெய், வாய், கண், காது, மூக்கு என்னும் ஐந்து உறுப்புகள்தான். அவரவர் மனதில் உண்டாகும் செயல்களைச் செய்து, வாழ்வில் உயர்வு, தாழ்வு, பாவம், சாபம், புண்ணியம் போன்றவற்றை உருவாக்கி வைப்பவை இந்த ஐந்து புலன்கள்தான். மறைந்து செயல்படுவதால் இவற்றைக் "கள்ளப்புலன்கள்' என்கிறார்கள் சித்தர்கள்.
நாம் கண்களால் ஒரு பொருளைப் பார்த்தவுடன், அதன் உருவம் நம் மனதில் பதிவாகி, அந்தப் பொருள்மீது நமக்கு விருப்பத்தையோ, வெறுப்பையோ உண்டாக்கிவிடுகிறது. மனதில் எண்ணம் தோன்றியவுடன் அது நமது மூளையில் பதிவாகின்றது. நமது மூளை அந்தப் பொருளால் அல்லது நாம் செய்யும் செயலால் நமக்கு உண்டாகும் நன்மை, தீமைகளைப் பகுத்தறிந்து நமது மனதிற்கு உணர்த்திவிடுகிறது.
ஒரு பொருளால், ஒரு செயலால் நமது வாழ்க்கையில் தீமைகள் ஏற்படும் என்பதை மூளை தெரிவித்தும், நமது மனம் என்ற ஆத்மா ஆசைவயப்பட்டு மூளை சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் பணம், பொருள் செலவு செய்து எவ்வழியிலாவது ஆசைப்பட்டதை அடைந்துவிட முயற்சிகள் செய்து, தனக்குத் தீமையான அந்தப் பொருளைப் பிடிவாதமாக அடைந்து, அது நமது வாழ்நாள் முழுவதும் நன்மையையும் சுகத்தையும் தராமல், கஷ்டத்தையும் நஷ்டத்தையும் தந்து நிம்மதியில்லாமல் வாழச் செய்துவிடுகிறது.
நமது வாழ்க்கைக்குத் தீமையானது என்று நம் அறிவு கூறியதை ஏற்றுக்கொண்டு, மன ஆசையை அடக்கி, தீமையானதை அடையும் எண்ணத்தை விலக்கிவிட்டால், நாமே நமது வாழ்வில் உண்டாகும் தீமைகளைத் தடுத்துக்கொள்கிறோம்.
நாம் காதினால் கேட்கும் எந்த வார்த்தைக் கும் பதிலாக நாம் கூறும் கோபமான அல்லது அன்பான வார்த்தைகளாலேதான் வாழ்வில் நன்மை- தீமை, பகை- வருத்தம் உண்டாகின்றன. நம் வாயினால் எதிரிகளை நாமே உருவாக்கிக்கொள்கிறோம்.
குடும்ப உறவுகளிடையே பகையை ஏற்படுத் திக்கொள்கிறோம். உறவும் பகையும் உள்ளே நுழையும் வாசல் நமது வாய்தான். இதனால்தான் "வாய் கோபுரவாசல்' என்று சித்தர்கள் கூறுகிறார்கள். வாசலைப் பூட்டிவிட்டால் யாரும் உள்ளே நுழைய முடியாது. அது போல் தேவையற்ற பேச்சைக் கேட்காமல், பேசாமல் நமது வாயை மூடிக்கொண்டால் பகை வராது; எதிரிகள் தோன்றமாட்டார்கள்.
ஆன்மா என்ற மனதின் உண்மையை அடுத்த தொடர்களில் இன்னும் அறிவோம்.
வாசியோகம்
"உணவே மருந்து; மருந்தே உணவு' என்ற உண்மையை முன்னோர் வரையறுத்துள் ளார்கள்.
நாம் உண்ணும் உணவின்மூலமே நமது நோய்களைத் தீர்த்துக்கொள்ளலாம். நோய்கள் வரும் முன்பே அதனைத் தடுத்துக்கொள்ளலாம்.
நாம் உண்ணும் உணவு, மறுநாள் திப்பி நீங்கி அன்னரசமாகும். மூன்று, நான்காம் நாட்களில் ரத்தமாகும். ஐந்து, ஆறாம் நாட்களில் உடலில் தசை, மாமிசமாகும். ஏழு- எட்டாம் நாட்களில் மஜ்ஜையாகும். இதற்குமேல் ஆண்களுக்கு சுக்கிலமாகவும், பெண்களுக்கு சுரோணிதமாகவும் மாறும்.
உயிரினங்களின் சுவாசக்காற்று "சிவன்' ஆகும். இது உயிரைத் தந்து, உடலை இயக்கும். உண்ணும் உணவு உடலுக்கு சக்தியையும் பொலிவையும் தரும். காற்றும் உணவும் எவருக்கு நன்மை தருவதாக உள்ளதோ, அவர் சிவசக்தி கடாட்சம் பெற்றவர். இந்த சிவசக்தி அருள் உடையவர் மூளை, அறிவு, உழைப்பின்மூலம் மிகச் சுலபமாக பெரும்பதவி, செல்வத்தை அடைவார்.
ஒவ்வொரு மனிதனும் தன்னையறிந்து, தன் உடம்பிற்கு நன்மை தரும் உணவு எது? தீமை தரும் உணவு எது என்பதை அறிந்து உண்ண வேண்டும்.
ருசிக்காக விரும்பி உண்ணும் உணவு தீமையானது என்றால் ஜீரண நிலையில் குடலில் விஷமாக மாறி, ரத்தத்தில் நஞ்சாகக் கலக்கும். இதனை எப்படி அறியலாம்?
உணவு விஷமான நிலையை அவரவரின் விரல் நகங்கள் மூலம் சுலபமாக அறியலாம். விரல் நகங்கள் கருப்பு நிறமாகும். கருப்புநிறக் கோடுகள் தோன்றும். மேலும் நகங்கள் இட்லிபோல் நடுவில் உப்பலாக இருக்கும். ரத்த ஓட்டமின்றி வெள்ளையான நிறத் தில் இருக்கும். நகங்கள் இந்த நிலையில் இருப்பவர்கள், தனக்கு நன்மை தராத விஷமான உணவுகளையே சாப்பிடுகிறோம்;
நமது குடல் கெட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்.
பொதுவாக மருத்துவர்கள் வயிற்றின் அளவில் அரைப்பகுதி உணவு, கால் பகுதி நீர், கால் பகுதி வயிறு காலியாக இருக்கவேண்டுமென்று கூறுவார்கள். ஆனால் சித்தர்கள் கூறுவது- உழைத்து வாழும் உழைப்பாளிகள், தங்கள் மூக்கின் வலப்புறம் சுவாசம் நடைபெறும்போது வயிறு நிறைய சாப்பிடவேண்டும். இடையில் தண்ணீர் குடிக்கக்கூடாது. சாப்பிட்டு முடிந்தபின்தான் சிறிதளவு நீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள்.
இந்த பூமியில் உயிரினங்கள், தாவரங்கள் என அனைத்திற்கும் உணவைப் போலவே நீரும் மிக முக்கியமானது. மனிதன் உடம்பிற்குத் தேவையான நீரை நமது உடம்பே சுரப்பிகள்மூலமும், காற்றிலுள்ள நீர்ச்சத்துமூலமும் அடைந்துகொள்கிறது. மனிதர்களுக்கு சுரக்கும் எச்சில் நீரே ஓரளவு உடம்பின் நீர்த்தேவையை ஈடுகட்டிவிடும். அவரவர் வாயில் ஊறும் எச்சில் மிகமிக சத்து நிறைந்தது. எச்சிலை எப்போதும் வெளியே துப்பக்கூடாது. வாயில் ஊறும் எச்சிலை உள்ளே விழுங்கி நமக்குத் தேவையான நீர்ச்சத்தினை உடம்பில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். மழைநீரை எப்படி பூமி தன்னுள் உறிஞ்சி தக்கவைத்துக்கொள்கிறதோ- ஊற்றாக சுரந்துகொள்கிறதோ அதுபோல.
பஞ்சபூதங்களில், "மண்' என்று குறிப்பிடப்படும் நமது உடம்பு, தனக்குத் தேவை யான நீரை உற்பத்தி செய்துகொள்கிறது. பூமியிலுள்ள நிலத்தடி நீரை நாம் பாதுகாக்காமல் மோட்டார்மூலம் வெளியேற்றும் போது வறண்ட பூமியாக மாறுவதுபோல, நமது எச்சிலை நாம் வெளியே துப்பி விட்டு, நீர்ச்சத்து குறைந்த உடம்பாக மாற்றி விடக்கூடாது. அவரவர் எச்சில் அவரவர் உடம்பினை வளப்படுத்தும் அமிர்த நீராகும்.
பொதுவாக மனிதர்கள் அளவுக்கு அதிகமாக நீர் குடிக்கக்கூடாது. அவ்வாறு குடிக்கும்போது, அந்த நீரை வெளியேற்ற நமது சிறுநீரகம் அதிகமாக வேலை செய்யும். இதனால் சிறுநீரகம் சீக்கிரம் பாதிப்படையும். எச்சிலை விழுங்கும்போது தாகம் தணியும்; பசியும் கட்டுப்படும். சுரப்பிகளை இன்னும் அதிகமாக சுரக்கச் செய்துவிடும்.
இரவில் நாம் தூங்கும்போது சுரப்பிகள் அதிகமாக சுரப்பதை நிறுத்திவிடும். காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் எச்சிலை உள்ளே விழுங்கக்கூடாது. நன்கு பல்துலக்கிவிட்டு, அதன்பின் வாயில் ஊறும் எச்சிலை வெளியே துப்பாமல் உள்ளேயே விழுங்கிவிட வேண்டும். சிலர் காலையில் எழுந்தவுடன் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். இதனை நீர் சிகிச்சை என்றும் கூறிக்கொள்வார்கள். இவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு வர வாய்ப்புண்டு.
மனித உடம்பில் வாத நீர், பித்த நீர், சிலேத்தும நீர் என்று இயற்கையாகவே சுரக்கும். இந்த சுரப்பிகளின் உட்பிரிவுகளே தைராய்டு சுரப்பி, இன்சுலின் சுரப்பி போன்றவை. இந்த சுரப்பிகளின் நோய்த் தாக்கத்திற்கு உள்ளானவர்கள், தங்கள் வாயில் சுரக்கும் எச்சிலை வெளியே துப்பாமல் உள்ளே விழுங்கிக்கொண்டு வந்தாலே படிப்படியாக அந்த சுரப்பிகள் மறுபடியும் சுரக்கத் தொடங்கிவிடும்.
சித்தர்கள் கூறிய சித்த மருத்துவம், நமது உடம்பில் பழுதுபட்டுப்போன உடல் உறுப்புகளைப் பழுது நீக்கி மறுபடியும் செயல்படச் செய்யும். உடல் உறுப்புகள் கெட்டுப்போகாமல் புதுப்பிக்கும்.
எச்சிலின் மகத்துவத்தைப் பற்றி சித்தர்கள் கூறியுள்ளதை அடுத்த தொடரில் இன்னும் அறிவோம்.
"வந்ததுவும் போனதுவும் வாசியாகும்
வானில்தவழும் ரவிமதியும் வாசியாகும்
சிந்தைதெளிந் திருப்பனார் அவனே சித்தன்
செகமெல்லாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்
நந்தியென்ற வாகனமே மனித தேகம்
நான்முகனே கண்மூக்குச் செவி நாக்காகும்
தந்திமுகன் சிவசக்தி திருமூச்சாகும்
தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே.'
(வால்மீகி சித்தர்)
சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.
(மேலும் சித்தம் தெளிவோம்)