பாவ- சாப தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!

சித்தர்தாசன் சுந்தர்ஜி

33

Advertisment

"புத்தகங்களைச்சுமந்து

பொய்களைப் பிதற்றுவீர்

செத்தயிடம் பிறந்தயிடந்

Advertisment

தெங்கென் றறிகிலீர்

அத்தனைய சித்தனை

யறிந்துநோக்க வல்லீரேல்

உத்தமத்து ளாயசோதி

யுணரும் யோகமாகுமே!'

-சிவ வாக்கியார்

அகத்தியர்: தமிழ்ஞானச் சித்தர் களே, முத்தமிழ்ச் சங்கத்தில் நேற்று புலத்தியர் பெருமகன், ஆன்மா பற்றி விளக்கம் கேட்டார். இந்த பூமியில் உயிரினங்களின் ஆன்மாவின் நிலை பற்றி ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், மதகுருமார்கள் என பல தேசத்தில் உள்ளவர்களும் அவரவர் சுயகருத்தைப் பலவிதமாகக் கூறியுள்ளார்கள்.

"உடலுயிரும் பூரணமும்

மூன்று மொன்றே

உலகத்தில் சிறிதுசனம்

வெவ்வே றென்பார்

உடலுயிரும் பூரணமும்

மேதென் றாக்கால்

உத்தமனே பதினாறு

மொருநான் கெட்டாகும்!

(பூரணம்- ஆன்மா)

"ஆன்மா' என்பது உடலில் கைகள், கால்கள், இதயம் போன்று கண்களால் காணக்கூடிய, தொட்டு அறியக்கூடிய ஒரு சரீர உறுப்பல்ல. உடலில் ஒரு அங்கமல்ல. ஆன்மா உடலி−ன் உள்ளு முண்டு; வெளியிலுமுண்டு ஆன்மா உடலி−ன் உள்ளே இயக்கத்தைத் தொடங்கி, உடலி−ன் உறுப்புகளால் வெளியே இயங்கும். ஆன்மா வெளியே இருந்துதான் உடலி−னுள்ளே போகும். உள்ளும் வெளியும் ஒன்றிணையும்போது ஆன்மா இயங்கும். உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றும் ஒரு கூட்டு இயக்கம்; மூன்றும் ஒன்றே. ஆன்மா சீவன்களின் பிறவிநிலை இயக்கமல்ல. முற்பிறவிகளில் நமது சரீரம் தளர்ச்சியாகி, வலுவிழந்து, நமது உயிரை உள்வைத்து, தாங்கமுடியாமல் பழுது பட்டு, அழிந்து, மண்ணில் மறைந்துபோய், இப்பிறவி யில் மறுசுழற்சியாக தந்தையின் விந்து, தாயின் கரு முட்டையுடன் இணைந்து, மறுபடியும் உடலை உருவாக்குகிறது. முற்பிறவியில் நாம் இறந்தபிறகு நமது உடலைவிட்டுப் பிரிந்துசென்ற உயிர்க்காற்று, இப்பிறவியில் மறுபடியும் நம் உடலைத் தேடிவந்து சேர்ந்து, இப்பிறவி இயக்கத்தை உருவாக்குகிறது.

முற்பிறவிகளில் நாம் செய்த நல்வினை- தீவினை, பாவ- சாப- புண்ணியங்களின் பிரதிப−ப்புதான், இப்பிறவி வாழ்வில் நாம் அனுபவிக்கும் நன்மை- தீமை, உயர்வு- தாழ்வு அனுபவங்கள்தான் ஆன்மாவின் செயல்பாடாகும். உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றில், உடல் மட்டும் பிறவிதோறும் புதிதுபுதிதாக உருவாவதுபோல் தோன்றும். ஆனால் உயிர்க்காற்றும், கர்மவினைகளால் உண்டாக்கிக்கொண்ட ஆன்மாவும் பல பிறவிகளின் மாறாத தொடர்ச்சிநிலைதான்.

ஒவ்வொரு பிறவியிலும் முன்வினை கர்மக் கணக்கீட்டுப்படி சில மாற்றங்களுடன் வாழ்வில் அனுபவங்களைத் தந்து அனுபவிக்கச் செய்யும். உடல், உயிர், ஆன்மா ஆகிய இம்மூன்றும் நாம் இந்த பூமியில் பிறவித் தொடர்பை முடித்து, மோட்சம் அடையும்வரை தொடர்ந்துகொண்டே இருக்கும். வம்சவிருத்திமூலம் அடுத்தடுத்த பிறவியை விந்துசுழற்சியால் உருவாக்கிக்கொண்டே இருக்கும். வம்சம் முடிந்து விந்துத் தொடர்ச்சி அறுபட்டு, நமது பிறவித் தொடர்புக்கு வழியில்லாமல் போவதே பூமியில் நமது பிறவிநிலை முடிந்து மோட்சமடையும் நிலையாகும்.

உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றும் ஒவ்வொரு பிறவியிலும் மரணமடைந்தபோது அழிந்ததுபோல் ஒரு மாயையை உண்டாக்குமே தவிர, உண்மையில் இவை அழிவதில்லை.

சித்தர் பெருமக்களே, ஆன்மாவைப் பற்றி தனித்து அறிந்து கொள்ளமுடியாது. ஆன்மா செயல்படும்- உருவாகும் இடமான உடலைப்பற்றியும்; உடலுக்கு ஆதாரமான மண், நீர், தீ ஆகிய மூன்று சக்திகள் பற்றியும்; சரீரத்திற்கு இயக்கம் தந்து உடலை இயங்கச் செய்யும் உயிர்மூச்சுக் காற்று பற்றியும்; உடல், உயிர் இரண்டின் கூட்டுச் சேர்க்கையால் நடைபெறும் நிலையையும், செயலையும், அதனால் மனிதனுக்கு உண்டாகும் எண்ணம், எண்ணத்தால் உண்டாகும் குணம், அந்த குணத்தால் செய்யும் செயல், நமது செயல்களால் நமக்கு நாமே உண்டாக்கிக்கொள்ளும் பாவ- சாப- புண்ணியம், பின் அவற்றைத் தீர்க்க பாவ- சாப- நிவர்த்தி, பரிகாரங்கள், பிறவித் தொடர்பு, பிறவியை பூமியில் முடிக்கும் வழிமுறை என அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். முத−ல் சரீரம் பற்றி அறிவோம்.

இந்த பூமியில் உயிரினங்களின் சரீரம், மண், நீர், தீ என்ற மூன்று சக்திகளால் உருவாக்கப்பட்டு, காற்று சக்தியால் இயக்கப் படுகிறது. காற்றினால் இயங்கும் உடல் ஆகாய சக்தியால் செயல் களைச் செய்கிறது. ஆகாயம் என்பது எதுவுமே இல்லாத வெட்டவெளியாய், அவ்வப் போது மாறக்கூடியதுமாய் உள்ளது. இந்த ஐந்து சக்திகளால் தான் உடலும்; உடல் உறுப்பு களின் இயக்கமும்; அதனால் உண்டாகும் சிந்தனை, செயல், பசி, தாகம், போகம், மோகம் போன்ற செயல்களும் உண்டாகின்றன.

சாளி அம்மையார் மைந்தரே, பூமியில் பல பிரளயம் கண்ட வரே, காகபுசுண்டர் பெருமகனே, நீங்கள் எவ்வாறு இந்த பூமியில் பிறந்தீர்? உங்கள் தாய், தந்தையின் சுரோணிதம், சுக்கிலம் இணைந்த தாலா? அல்லது வேறு சக்தி களாலா?

dd

காகபுசுண்டர்: சித்தர்களில் தலைமையானவரே-

"காணப்பா சாதிகுலம் யெங்கட்கில்லை

கருத்துடனே யென்குலம் சுக்கிலந் தான்

தோணப்பா தோணாமற் சாதி பேதஞ்

சொல்லுவான் சுருக்காக மாண்டு போவான்

வீணப்பா பிரம்மத்தால் ஆதிகாலம்

விந்துவினால் பிறந்ததடா உயிர்களெல்லாம்

நானப்பா அப்படியே யுதித்தேன் முன்னே

நன்றாக யுதித்த யிடம் நாடினே.'

(பிரம்மம்- உயிரினம்)

எனக்கு அறிவு, ஞானம் தந்து, அட்ட மாசக்திகளை அடையச் செய்து, மரணத்தை வென்று, இந்த மண்ணில் பிரளயம் காண வைத்து, என்னை உயிர் பிழைத்திருக்க வழிகாட்டிய தமிழ்மக்களின் ஆசானே!

நானும் இந்த பூமியில் எனது தாய், தந்தையின் தாம்பத்திய உறவுமூலம், தந்தையின் சுக்கிலமும் (விந்து) தாயின் சுரோணிதமும் (கரு முட்டை) இணைந்து, தாயிடம் கருவாகி, கர்ப்பவாசம் செய்து இந்த பூமியில் பிறந்தேன். நான் அவதாரமுமல்ல; வேறு சக்திகளால் பிறப் பிக்கப்பட்டவனுமல்ல.

நான் மட்டுமல்ல; ஆதிகாலந்தொட்டு இயற்கையின் பலிரிணாம வளர்ச்சியால் படிப்படியாக உயிரினம் தோன்றிய நாள்முதல், அனைத்து ஜீவராசிகளும், பிரம்மத்தின் (உயிரினம்) மூலமே பிறப்பு நிலையில் இனப் பெருக்கம் செய்துவருகின்றன.

(இதே கருத்தை பீர்முகமது சித்தர் கூறுவதையும் இங்கு அறிவோம், வாசகர்களே.

"இந்த உலகில் எப்படி உருவானோம்- சிங்கி அது தந்தையின் நட்பிற்கு தாய் ஒப்பியதாலடா- சிங்கா என கூறுகிறார்.)

அகத்தியர்: நல்லது. இந்த பூமியில் உயிரினங்களின் பிறப்பைப் பற்றி இங்குள்ள யாருக்காவது சந்தேகங்கள், கேள்விகள் உண்டா?

போகர்: ஆசானே, ஆணின் விந்தும், பெண்ணின் கருமுட்டையும் இணைவதால் பிறப்பு உண்டாகிறதென்று கூறினீர்கள். இவ்வளவு சக்தி வாய்ந்த விந்து சாதாரண மனித சரீரத்தில் எப்படி உருவாகி ஒரு உடலிலைப் படைப்பிக்கும் ஆற்றலைப் பெறுகின்றது?

அகத்தியர்: இந்த பூமியில் பிறந்துவாழும் மனிதன் முதலான அனைத்து உயிரினங்களும், தன்னைப் போன்றே உயிரினமாகத் தோன்றி வளரும் தாவரங்கள் தரும் காய், கனி, தானியம், கீரைகள், மூலி−கைகளை உண்டும், மண்ணில் உற்பத்தியாகும் நீரைக்குடித்தும் வாழ்கின்றன. இந்த தாவர உயிரினம் தரும் ஜீவரச சத்தால் உண்டாவதுதான் ஆணிடம் விந்துவும், பெண்ணிடம் கருமுட்டையும். எல்லா உயிரினமும் தாவரங்களின் உயிர்ச்சத்தை உண்டு உயிர்வாழ்கின்றன. ஆனால் தாவரங்கள் மட்டும் மண்ணிலுள்ள சத்தினை மட்டும் நேரடியாகப் பெற்று தழைத்து வளர்கின்றன. உண்மையில் பூமித்தாயால் பிறப்பிக்கப்பட்டு, பூமியில் வளர்க்கப்படும் உயிரினம் தாவரங்கள் மட்டுமே. தாவர உயிர்களே உண்மையில் மண்ணின் மைந்தர்கள்.

தாவரங்களை அழிப்பது நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கு ஒப்பாகும். எங்கு வனங்களும், மரம், செடி, கொடி, மூலி−கை, தானியப்பயிர்களும் அழிக்கப்படுகின்றதோ, அந்தப் பகுதி மக்கள் தங்களின் அழிவைத் தாங்களே அமைத்துக் கொள்கிறார்கள். உடல் வளர்த்து உயிர்வளர்க்க வேண்டும்; உடல் வளர்வது உணவாலும், உயிர் வாழ்வது உடலாலும் என்பதே நிதர்சனம்.

உண்ணும் உணவின்மூலம் உடலி−ல் ஆறுவித மான ரசங்கள் சேருகின்றன. அந்த ரசம் ரத்த மாகிறது. அந்த ரத்தம் சதைப்பகுதியாகி, அந்த சதையிலி−ருந்து கொழுப்பாக மாறி, அந்தக் கொழுப்பிலி−ருந்து எலும்பாகி, அதில் மஜ்ஜையாகி, எலும்புகளி−ருந்து மூளையிலும், மூளை யி−ருந்து ஆணிடம் விந்துவாகவும், பெண்ணி டம் கருமுட்டையாகவும் உருவாகிறது.

நாம் உண்ணும் உணவு ஏழுநாளில் உடம்பில் விந்து, கருமுட்டை என்ற நிலையை அடைகிறது. உடம்பில் ஒரு உழக்கு ரத்தம் சேரும்போது ஒரு துளி விந்து உருவாகி றது. ஆண், பெண் ஒருமுறை உடலுறவு கொள்ளும்போது முப்பது துளிகளுக்குமேல் வெளியேறுகிறது. அதனால் ஒரு ஆண் ஒருமுறை பெண்ணிடம் உறவு கொள்ளும் போது ஆணிற்கு ஏழரை உழக்கு இரத்தம் நஷ்டமாகிவிடுகிறது.

இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே உண்டு உயிர்வாழ்கின்றன. ஆனால் மனிதர்கள் தாவரம், இலை, தழை, கிழங்கு, தானியம், மாமிசம், பால் என அனைத்தையும் உண்கிறான். அதனால் மனிதனுக்கு மட்டும் அவன் உண்ணும் உணவினால் ஆறுவிதமான குணம் கொண்ட ரசச் சத்து உருவாகி ரத்தமாகி றது. இந்த ஆறுவிதமான ரசமே மனிதனுக்கு ஆறறிவை உண்டாக்குகிறது.

போகர்: விந்து, கருமுட்டை, அறிவுநிலை உடம்பில் உருவாகும் முறையைக் கூறிய தாங்கள், ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டை யுடன் இணைந்து கருக்கூடி கர்ப்ப நிலையில் உடல்வளர்ச்சி பெற்று தாயிடம் ஒரு சிசுவாக உருவாவது எப்படி? இதனைப் பற்றியும் தெளிவுபடுத்துங்கள்.

அகத்தியர்: போகருக்கு உண்டான சந்தேகத் திற்கு நாளை தமிழ்ச்சங்கம் கூடும்போது விளக்கம் கூறுகிறேன்.

வாசி யோகம்

ஒரு மனிதனின் பிறப்பு தாயின் கர்ப்பத்தில் உருவாகி, பத்துமாதம் வளர்ந்து பிறக்கின்றது. கரு உருவானவுடன் பிள்ளையின் பிறப்புக் காலத்தை நம்மால் அறிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் குழந்தையின் பிறப்புக் காலத்தை நம்மால் தள்ளிப்போட முடியாது. இது இயற்கை நிர்ணயித்த விதிக்கணக்கு.

ஒரு மனிதனின் மரண காலத்தை அவரவரே முன்பே அறிந்துகொள்ளமுடியும் என்று கூறிய சித்தர்கள், அவர்களின் மரணத்தைத் தள்ளிப் போட- ஆயுளை நீட்டித்துக்கொள்ளமுடியும் என தீர்க்கமாகக் கூறியுள்ளனர். ஏன்... அவர் களே அந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்துள் ளார்கள்.

பூமியில் பிறந்த ஒருவரின் மரணம் விதிப்படி காலம், ஆயுள், வயது நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், அவரவரின் மூச்சுக் காற்றின் கணக்கறிந்து, அதைக் கட்டுப்படுத்தி தங்கள் ஆயுளை நீட்டித்துக்கொள்ளலாம். இது ஒரு சூட்சுமமான- சுலபமான வழிமுறை. விக்கிரமாதித்த மகாராஜாவின் கதையை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். விக்கிரமாதித்த னுக்கு உஜ்ஜயினி மகாகாளி தேவி, ஆயிரம் ஆண்டுகள் இந்த பூமியில் வாழ வரம்தந்தாள். இதேசமயத்தில் தேவலோகத்தில் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அதைத் தீர்க்க, தேவலோகத்திற்கு விக்கிரமாதித்தனை அழைத்துச்சென்றான்.

அவன் பிரச்சினையை விக்கிரமாதித்தன் தன் புத்திசாலி−த்தனத்தால் தீர்த்துவைத்தான். இதனால் மனம் மகிழ்ந்த இந்திரன் 32 படிகளும், 32 பதுமைகளும் கொண்ட ஒரு ரத்தின சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக தந்து, இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சிபுரியும்படி வரம்தந்தான்.

இதேசமயத்தில் விக்கிரமாதித்த மன்னனின் தம்பியும், அவனது மதியூக மந்திரியுமான "பட்டி' உஜ்ஜயினி காளிதேவியை வணங்கி இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ வரம்வாங்கினான். இதனையறிந்த மன்னன் தன் மந்திரி பட்டியை நோக்கி, நீ மட்டும் இரண்டாயிரம் ஆண்டுகள் பூமியில் வாழ வரம்வாங்கிவிட்டாயே. நானும் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ வழி கூறு'' என்றான்.

அறிவிலும், மதியூகத்திலும் சிறந்த பட்டி, ""அண்ணா, தேவேந்திரன் கொடுத்த சிம்மாசனத் தில் அமர்ந்து, ஆயிரம் ஆண்டுகள் ஆட்சிபுரிய வரம் கொடுத்துள்ளான். அதன்படி நீங்கள் ஒரு வருடத்தில் ஆறுமாதம் இந்த சிம்மாசனத் தில் அமர்ந்து நாட்டை ஆட்சிபுரியுங்கள். அடுத்த ஆறுமாதம் சிம்மாசனத்தில் அமரா மல் நாட்டைவிட்டுக் காட்டிற்குச் சென்று விடுங்கள். இதைப்போன்று நடைமுறையில் செயல்பட்டால், நாட்டில் ஆயிரம் ஆண்டு களும், காட்டில் ஆயிரம் ஆண்டுகள் என இரண்டாயிரம் ஆண்டுகள் நீங்களும் பூமியில் வாழலாம்'' என்று யோசனை கூறினான்.

விக்கிரமாதித்தனின் ஆயுளை நீட்டிக்க பட்டி சொன்ன சூட்சுமமான வழிமுறையைப் போன்று, ஒரு மனிதன் தன் மூச்சுக் காற்றின் கணக்கறிந்து, அதைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால்- நாள்தோறும் சுவாசக் காற்றை விரயம் செய்யாமல் வாழ்ந்தால்- காற்றின் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டால் நீண்டநாள் வாழலாம்.

நீண்ட ஆயுளுடன் வாழ சித்தர்கள் கூறிய வழிமுறைகளை அடுத்த இதழில் அறிவோம்.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)